Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்போன் பிரியர்களுக்கு மாறுபட்ட அனுபவம்: Alt Z life அம்சத்தில் அசத்தும் சாம்சங் Galaxy A51, A71 ஸ்மார்ட்போன்கள் - பிரைவசி பயம் இனி தேவையில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செல்போன் பிரியர்களுக்கு மாறுபட்ட அனுபவம்: Alt Z life அம்சத்தில் அசத்தும் சாம்சங் Galaxy A51, A71 ஸ்மார்ட்போன்கள் - பிரைவசி பயம் இனி தேவையில்லை

 

செல்போன் பிரியர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை தரும் வகையில் சாம்சங் நிறுவனத்தின் Galaxy A51, A71 ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் Alt Z life அம்சத்தின் மூலம் பிரைவசி குறித்த பயம் இனி தேவையே இல்லை என சாம்சங் நிறுவன நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-
 
Samsung Galaxy A51, A71
நீங்கள் அலுவலகத்தில் இருக்கிறீர்கள்... என்று வைத்துக் கொள்வோம். சக நண்பர்கள் உங்களது செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உங்களது மேனேஜர் பற்றி நீங்கள் சித்தரித்துள்ள சில மீம்ஸ்களை பார்த்து சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக உள்ளார்கள். நீங்களும் அந்த மகிழ்ச்சியில் இணைந்து கொண்டு  செல்போனை திரும்பப் பெறவே மறந்துவிட்டீர்கள். 
 
அந்த சமயம் திடீரென அந்த மேனேஜர் உங்கள் அருகில் வந்து விட்டார். அப்போது உங்கள் மனதில் எண்ண ஓட்டம் எப்படி இருக்கும்? செல்போனில் எதைப் பார்த்து சிரிக்கிறீர்கள்? செல்போனை கொடுங்கள் என்று அவர் கேட்டு விடுவாரோ? அப்படி அவர் கேட்டு விட்டால் என்ன செய்வது? என்ற பல்வேறு சிந்தனைகள் நம் மனதில் தோன்றும். 
 
இது போன்ற சமயத்தில் நொடிபொழுதில் நமது செல்போனில் மாற்றங்கள் நிகழாதா? என்று யோசிப்போம். ஆனால் அதனை உண்மையிலேயே செய்து காட்டி, இதுவும் சாத்தியமே... எனும் வகையில் அசத்தலான Galaxy A51, Galaxy A71 ஆகிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
 
Quick switch
Quick switch மற்றும் Content suggestions என்ற புதுவித யுத்திகள் சாம்சங்கின் Galaxy A51 மற்றும் Galaxy A71 என்ற ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் உலகில் நமது பிரைவசியை பயமில்லாமல் பாதுகாக்க உதவும் Alt Z life எனும் மேம்பட்ட அம்சத்தை சாம்சங் நிறுவனம் கையாண்டு இருக்கிறது.
 
Quick switch என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். திடீரென நமது செல்போனை யாராவது கேட்டால் power switch-ஐ 2 தடவை press செய்து விடலாம். உடனடியாக private mode-ல் இருந்து general mode-க்கு செல்போன் மாறிவிடும். உதாரணமாக ஏதேனும் சினிமா பாட்டுகள் குறித்த யூ-டியூப் வீடியோ காட்சி பார்க்கும் போது யாராவது இருந்த செல்போனை கேட்டால், உடனடியாக power switch-ஐ இரண்டு முறை press செய்தால் போதும், தொழில்நுட்பம் சார்ந்த வேறு ஒரு யூ-டியூப் வீடியோ காட்சி திரையில் தோன்றி விடும். 
 
ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் புரட்சி
செல்போனில் நாம் மட்டுமே பார்க்கும் வகையில் ரகசியமாக தகவல்களை வைக்க முடியாதா? என்ற இன்றைய தலைமுறையினரின் ஏக்கத்திற்கு quick switch எனும் option நல்ல ஒரு தீர்வாக அமைந்து இருக்கிறது. வசதி, தடையற்ற மற்றும் விவேகமான தன்மை என நமது தனிப்பட்ட வாழ்க்கையில் முக்கியமான தகவல்கள் அனைத்தும் ரகசியமாக ஒரு லாக்கர் போல பாதுகாக்கப்படுவது தான் இதன் சிறப்பு. அந்தவகையில் Samsung Galaxy A51 மற்றும் Galaxy A71 என்ற ஸ்மார்ட்போன்களில் WhatsApp, Browser உள்பட பல்வேறு App-களை தனித்துவமாக பயன்படுத்த முடியும். எதிர்பாராத நேரங்களில் நமது செல்போன்களை பிறரிடம் கொடுக்க நிச்சயம் தயங்குவோம். அப்படி ஒருவேளைை செல்போன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நாம் ரகசியமாக பாதுகாக்கும் சில தகவல்களை அவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று மிகவும் கவலைப் படுவோம்.
 
ஆனால் இந்தக் கவலையைப் போக்கும் விதத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிலேயே ஒரு புதிய புரட்சியை சாம்சங் நிறுவனம் புகுத்தி இருக்கிறது.மேலும் Knox எனும் மேம்பட்ட அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனில் hardware chip-ல் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரகசிய டேட்டாக்கள், ரகசியமான கோப்புகள், பண பரிவர்த்தனை விவரங்கள், பாஸ்வேர்டுகள், புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவை பாதுகாக்கப்படுகிறது.
 
Content suggestions
அதேபோல Content suggestions என்பது முக்கியமான சிறப்பம்சமாகும். இது ஸ்மார்ட் போனில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் ஸ்கேன் செய்யும். Seen detection மற்றும் face detection என்று ஸ்கேன் செய்யும் முறையும் இரு வகைப்படும். Seen detection என்பது பிரைவசிக்கு உரிய வாய்ப்புகள் இருக்கும் புகைப்படங்களை அதுவே தெரியப்படுத்தும். Face detection-ல் நாம் ஒரு நபரின் புகைப்படத்தை குறிப்பிட்டால் போதும், செல்போனில் அந்த நபரின் அனைத்து புகைப்படங்களும் அடுத்த நொடியே ஸ்கேன் செய்யப்பட்டு தனி folder-க்கு சென்றுவிடும். இதுதவிர Galary-ல் இருந்து தேவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாமே தேர்வு செய்தும் secure folder-க்கு அனுப்ப முடியும். 
 
Quick switch மற்றும் content suggestions எனும் சிறப்பு அம்சங்கள் இணையப் பெற்ற Samsung Galaxy A51, A71 ஸ்மார்ட்போன்கள் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவை என சொல்ல முடியும். இதில் உள்ள Alt Z life எனும் மேம்பட்ட அம்சத்தின் மூலமாக அழுத்தமில்லாத, சுதந்திரமான நடவடிக்கையை வாடிக்கையாளர்கள் பெறுவது நிச்சயம். அந்தவகையில் இனி நமது செல்போன்களில் ரகசியமான தகவல்களை நம்மைத் தவிர யாரும் பார்க்க முடியாது. எனவே நமது செல்போன்களை பிறரிடம் தருகையில் தயக்கமே இனி தேவை இருக்காது.
 
சவாலும் சாத்தியமே...
இன்னும் சொல்லப்போனால் பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் கொண்டிருக்கும் Samsung Galaxy A51, A71 ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான ஒரு தனி உரிமையையும், மன அமைதியையும் வழங்குகிறது என்றால் அது மிகையல்ல. பொழுதுபோக்காக இருந்தாலும் சரி, தொழில் சார்ந்த விஷயங்கள் என்றாலும் சரி சில தகவல்களை ரகசியமாக பாதுகாத்து வைத்திருப்பது என்பதும், அந்த தகவல்களை பிறர் பார்த்திராத வகையில் பாதுகாப்பது என்பதும் மிகவும் சவாலான காரியமாகும். ஆனால் அந்த சவாலான விஷயத்தையும் சாம்சங் நிறுவனம் சாத்தியமாகியிருக்கிறது. 
 
செல்போன் விரும்பிகளுக்கு Samsung Galaxy A51, A71 ஸ்மார்ட் போன்கள் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். தினமும் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு, சொல்லப்போனால் எந்நேரமும் கையில் செல்போன் வைத்திருப்பவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை சாம்சங் ஸ்மார்ட்போன்கள் கொடுப்பது நிச்சயம். தனிப்பட்ட நமது தகவல்களுக்கு பாதுகாப்பு தருவதுடன், ஒரு சுதந்திரப் போக்கை செல்போன் பிரியர்கள் உணர வேண்டுமென்றால் அது Samsung Galaxy A51, A71 ஸ்மார்ட் போன்களால்தான் முடியும் என சாம்சங் நிறுவன நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.