Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜாவின் ரவுசு பக்கம்.. ரசிக்கலாம் வாங்க..!

Featured Replies

இந்த உலகத்துலேயே பாவப் பட்ட ஜீவன்கள் யாருன்னா அது இந்திய பஸ் பயணிகள்தான்..!

பாருங்களேன்.. நாம பஸ் ஏற நின்னா, ஒன்னும் வராது..ஆனா எதிர் திசையிலே 100 பஸ் போகும். அதுவும் அரைவாசி காலியா..!

இன்னொரு அநியாயமும் இருக்கு.. வீட்டிலே பழய சாதத்தை தின்னு, வெட்டியா கொட்டாவி வுட்டுட்டு உக்காந்து இருக்கறப்போ பாருங்க.. எல்லா வண்டியும் காலியா போகும்..என்னைக்காவது அவசரமா, அவசியமா நாம பிரயாணம் கெளம்புனோமுன்னா..அன்னிக்கு உலகச் சனத்தொகையே ஒன்னா கெளம்பும்..நம்மளோட..!! தொண்டு கிழம் கூட தொங்கிக்கிட்டு வரும்..பொம்பளப்புள்ளைங்க கூட புட் போர்டு அடிக்கும்..!

இது இப்புடியா..? ஒரு வழியா உள்ளே சொர்க்க வாசல்லே புகுந்துட்டோம்ன்னு வைங்க.. எல்லா சீட்டும் காலியா இருக்கும்..ஆனா இட ஒதுக்கீடு நடந்து முடிஞ்சிருக்கும்..பை..குடை..கை

Edited by ராஜா

வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் ரவுசை இங்கேயும் இனிமேல் தொடரலாம்

  • தொடங்கியவர்

நன்றிங்கோ...!

உங்களை எங்கோ கண்டிருக்கினம்..

எங்கேண்டு சொல்லேலலை..

நன்றிங்கோ...!

உங்களை எங்கோ கண்டிருக்கினம்..

எங்கேண்டு சொல்லேலலை..

ஹீ ஹீ உங்க அன்புத் தம்பிதான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மெகா சீரியல்ல போங்கோண்ணா! உங்க ரவுசு ரக்கை கட்டிப் பறக்கட்டும். :lol::lol:

ரவுசு தொடரட்டும் அண்ணா

மெகா சீரியல்ல போங்கோண்ணா! உங்க ரவுசு ரக்கை கட்டிப் பறக்கட்டும். :lol::D

தாத்தா உங்க ரவுசு ஓவரா போகுட்ட்து, 65 வயசில இருந்து வாறவங்க போறவங்க எல்லாம் அண்ணாவா? :angry:

  • தொடங்கியவர்

இருக்கட்டும்.. பஸ்சு ஒரு வழியா கெளம்பிருச்சுன்னு வைங்க.. அப்புறம்தான் இருக்கு விசயமே...!!

ஆனா அவ்வளவு சீக்கிரம் பஸ் கிளம்பாது.. தனியார் பஸ்ஸா இருந்தா அடுத்து கெளம்பற பஸ்காரன் வந்து கேவலமா திட்டற வரைக்கும் ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கும்..! அரசாங்க பஸ்ன்னா கேக்கவே வேணாம்..எப்போ கெளம்பும்ன்னு அதுக்கே தெரியாது. அதிலே இன்னொரு அநியாயம் நடக்கும் பாருங்க..

நாம அடிச்சு புடிச்சு ஏறுறதையும், இடம் புடிக்க அல்லாடுறதையும் ஒரு சிப்பந்தி அரைக்கண்ணால் பார்த்து ரசிச்சுட்டு இருப்பாரு. ஒரு வழியா ஏறி குடுத்து வச்சவங்க சீட் புடிச்சு செட்டில் ஆயிடுவாங்க. மத்தவங்க நின்னுக்கிட்டும், தொங்கிக்கிட்டும் இருப்பாங்க. அப்ப இந்த சிப்பந்தி வந்து சொல்லுவாரு.." இந்த பஸ் பணிமனைக்குப் போகுது.. அதோ அந்த பஸ்லே போயி ஏறிக்குங்க" அப்படின்னு ஒரு ஒன்னுக்கும் உதவாத லங்கடா வண்டியைக் காட்டுவாரு.

அப்புறம் என்ன.. நின்னவன், தொங்குனவன் எல்லாம் ஓடிப்போயி அந்த பஸ்லே ஜம்முன்னு ஒக்காந்துக்குவாங்க..இந்த பஸ்லே உக்காந்து இருந்தவங்க அங்கே போயி இடம் கிடைக்காம ஸ்டாண்டிங் போட்டுக்கிட்டு உக்காந்திருக்கவங்களை " கருவாட்டுக் கடையை நாய் பார்க்கற மாதிரி" பரிதாபமா பாத்துட்டிருப்பாங்க..!!!

ஒரு வழியா பஸ் கிளம்பிடும்.. இதிலே பஸ் வாசப்படி இருக்கு பாருங்க.. அதுக்கிட்டே ஜன்னல் ஓர சீட் புடிச்சு உக்காந்து இருக்கறவங்க மாதிரி பரோபகாரி யாரையும் பார்க்க முடியாது..

தொங்குற பயலுக சாமானுக்கெல்லாம் குப்பத் தொட்டி அவருதான்.. புஸ்தகம், டிப்பன் டப்பா, பம்ப் செட் மோட்டாரு, பொண்டாட்டி தைக்க குடுத்துவிட்ட செருப்பு, தாத்தாவோட யூரின் டெஸ்டுக்கு போற சாம்பிள், ஒத்தைக் கொலுசோட புள்ள, எல்லாத்தையும் அவர்கிட்டெ ஒப்படைச்சுட்டு நிம்மதியா வருவானுங்க.. பாவம்.. இவர் நிம்மதி போயிடும்.. முதல்ல கவனிச்சுருக்க மாட்டாரு.. அப்புறம் தான் பாப்பா கால்லே ஒத்தை கொலுசு இல்லாதது தெரியும்.." அய்யய்யோ.. இது என்னடா ரோதனை..? எவனோ லவட்டிக்கிட்டு பூட்டான்.. பஸ்-ஸ்டாண்டு போனப்புறம் நம்மள வாயிலேயே மிதிக்கப்போறான் புள்ளயக் கொடுத்தவன்." ங்குற நெனப்புலேயே பாதி உசுரு போயிரும்..!! இந்த புள்ளய வாங்கிக்கிட்டு அவரு படுற மனக்கிலேசம், கல்யாணம் ஆகாம புள்ளய வாங்குனவள் கூட பட மாட்டா..!!!

அவருக்குப் பக்கத்திலே-- ரெண்டுபேர் சீட்டு ஒரத்திலே-- நடைபாதையை ஒட்டி ஒரு ஆள் உக்காந்திருப்பான் பாருங்க..

அவன் பாடு இன்னும் மோசம்.. பாதி நேரம் அவன் தோள் மேலே ஏறி குந்திக்கிட்டுதான் நடத்துனர் டிக்கிட்டு போடுவாரு..! அது மட்டும் இல்லே.. போறவன், வர்றவன் எல்லாம் எறங்குற், ஏறுற அவசரத்திலே அவன் தலையைப் பதம் பார்த்துட்டுத் தான் போவானுங்க..வருவானுங்க..! அதிலும் வழுக்கைத் தலையா வேறே இருந்துட்டா.. கேக்கவே வேணாம்..!! க்ரைம் ரேட் கூடிக்கிட்டே போகும்..!

இது இப்படின்னா.. மத்த சீட்டுலே தூங்கி (கோட்டுவாய்) வழியற பயலுக ரவுசு படுமோசம்.. அதிலும் சில பயலுக... 'வாழ்க்கையிலே இனிமே தூங்க வாய்ப்பே கிடைக்காதது மாதிரி' தூங்குவானுக. இன்னும் சிலபேரு உண்மையிலேயே தூஙகுறானா.. இல்லே தோள்ல சாய்ஞ்சுக்கிட்டு செல் போனை நோட்டம் உடுறானான்னே கண்டுபிடிக்க முடியாது..!!

தூங்கறவன் கதை இப்படின்னா.. அவனுக்கு பக்கத்துலே உக்காந்துருக்குறவன் இன்னும் வில்லங்கமான பார்ட்டியா இருப்பான்.. தூங்கறவனை சொல்லி சொல்லி பாப்பான்.. தூங்காதேன்னு.. அவண்தான் கேட்க மாட்டானே..!! அவன் தூக்கம் அவனை உடாது..!! முழிச்சுட்டு இருக்கறவன் என்ன பண்ணுவான் தெரியும்மா..? எங்கேயாவது பஸ் லேசா ஸ்லோ ஆனா போதும்.. டக்குன்னு முன்னே நகந்துக்குவான்..! தூங்கறவன் அவன் தோள்பட்டையிலிருந்து நழுவி, சீட்டு சாய்மானத்துலே மோதி, உக்காந்திருக்கறவன் முதுகுக்கும் சாய்மானத்துக்கும் நடுவிலே மாட்டிக்குவான்.. இப்போ முன்னாலே நகந்த முழிச்சுட்டிருக்குற பாவிப்பய.. வேணும்ன்னே பின்னாலே நகர்ந்து விழுந்தவனை மேலும் நசுக்குவான்..

அப்புறம் அந்தப் பய தூங்குவான்ங்கறீங்க...?

உக்காந்து இருக்கறவங்க கதை இப்படின்னா, நின்னுக்கிட்டு வர்றவனுக அக்குரும்பு இருக்குதே.. அது இன்னும் ரகளை.. அடுத்த முறை அதைப் பற்றிப் பார்ப்போமா..? நன்றி..வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

quote name='வானவில்' date='Jun 8 2007, 07:54 AM' post='312222']

தாத்தா உங்க ரவுசு ஓவரா போகுட்ட்து, 65 வயசில இருந்து வாறவங்க போறவங்க எல்லாம் அண்ணாவா? :angry:

  • 1 month later...
  • தொடங்கியவர்

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLL

லி.பி. 2025-ல் தலைப்புச் செய்திகள்... ஒரு கற்பனை...

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLL

2027-ல் காமராசர் ஆட்சி நிச்சயம் அமைப்போம். -

மேற்குத் தஞ்சை முன்னேற்றக் காங்கிரஸ் இணைச் சார்புதவித்

தலைவர் [பொறுப்பு] வாசன் சூளுரை..!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 999 ரூபாயைவிட அதிகரிக்க

தற்போதைக்கு வாய்ப்பில்லை.. - பெட்ரோலிய அமைச்சர் "பங்க்" குமார்.

கல்லூரிக் காளை படத்தில் கைக்குழந்தை வேடத்தில் நடிக்கிறார்

காதல் இளவரசன் கமலஹாசன்.. 700 கோடி ரூபாய் செலவில்

தொட்டில் தயாராகிறது.

அடுத்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் ..

பயிற்சியாளர் சுடேகர் நம்பிக்கை.

"செல்வி. செந்தமிழ் அரசியின் சித்தி".. புதிய தொடர்.. கல்லூரி

மாணவியாக ராதிகா தோன்றும் திகில் தொடர்.. ஸ்டாலின் டி.வி.யில்

தொடங்குகிறது.

பின் லேடன் பாகிஸ்தானில் மறைந்து வாழ்வதாக அமெரிக்க

உளவுத்துறை தகவல்.

இன்னும் 20 ஆண்டுகளில் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும்

வல்லமையை இந்தியா பெற்றுவிடும்.. இஸ்ரோ தலைவர்

மாதவ ரங்கன் பெருமிதம்.

99 % இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்காவிட்டால் கூட்டணியை

விட்டு பா.ம.க. வெளியேறும்.. முதல்வர் விஜய்காந்துக்கு ராமதாஸ்

எச்சரிக்கை.

சூப்பர் ஸ்டார் சிம்பு நடிக்கும் "அஜித்" திரைப்படம் தீபாவளிக்கு

வெளிவருவது உறுதி. ஏ.வி.எம். சுப்பிரமணியன் அறிவிப்பு.

எதிர் வரும் தேர்தலில் வாக்காளர்களுக்கு இலவச சாட்டிலைட் ..!

அ.ஆ.இ.ஈ.உ. ஊ. தி.மு.க. தலைவி குஷ்பு வாக்குறுதி.

நாங்கள் இலவசமாக சினிமா தியேட்டர் தருவோம்.. ஸ்டாலின் அதிரடி.

அண்டார்டிகாவில் உள்ள இராமர் பாறையைக் காப்பாற்ற ரத்தம்

சிந்தத் தயார்.. ட்ராமா கோவிந்தன் சபதம்.

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLL

தமிழ் ஜோக்ஸ்.ஆர்க்குட் நகைச்சுவைத் தனியினம். 30-07-07.

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLL

  • தொடங்கியவர்

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!TAKE IT EASY :lol:

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி

இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும்

இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும்,

அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..!

ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில்

[அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ்

சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க.

அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து

வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல்

விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா,

அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு,

அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க

கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக்

கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..

[ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய்

நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி

கப்படிக்க வைப்பீங்க.!

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

தமிழ் ஜோக்ஸ். ஆர்க்குட் நகைச்சுவைத் தனியினம். 31-07-07.

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL740

ராஜா அண்ணா தமிழனை பற்றி நல்லா தான் தெரிந்து வைத்திருகிறார்.............. :lol:

ராஜா அண்ணா தமிழனை பற்றி நல்லா தான் தெரிந்து வைத்திருகிறார்.............. :o

ரொம்ப தான்

ஏன் அப்படி தான் எலல தமிழனும் இருக்கிறாங்களா? :angry:

ரொம்ப தான்

ஏன் அப்படி தான் எலல தமிழனும் இருக்கிறாங்களா? :angry:

90% அப்படி தான் நிலா அக்கா........... :P

  • தொடங்கியவர்

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

தமிழர்கள் சிலரின் தனி அடையாளங்கள்..தொடர்ச்சி..

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து

ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம்

பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட்

பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ

இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட

மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன்

செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு

சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர்

சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப்

பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க

நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில்,

3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா

வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட

அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர்,

காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர்,

மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல கறிக்குழம்பு வச்சுத்

தின்னுட்டு புள்ளக்குட்டியோட சந்தோஷமா விழுந்து கெடக்க

மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, ஊருல தகராறு

பண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன்

பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே

உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..!

__________________________________________________

தமிழ் ஜோக்ஸ்.ஆர்க்குட் நகைச்சுவைத் தனியினம்.01−08−07.

**************************************************

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு

சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர்

சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப்

பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க

நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!

ஹீஹீ

ரவூசுப்பக்கம் சூப்பராஇருக்கு ராஜா

.

தொடர்ந்து அசத்துங்க

  • தொடங்கியவர்

வேலைக்கான நேர்காணலில்...உண்மையைச் சொல்ல முடிந்தால்....

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..!

உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?

உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.

உங்களுடைய தனித்திறமை என்ன..?

வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.

உங்கள் மிகப்பெரிய பலம்..?

இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..

பலவீனம்..?

ஹி..ஹி.. பெண்கள்..!

இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?

அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..?

நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?

ஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?

நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?

நல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.

_________________

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா அசத்துறிங்க .

  • தொடங்கியவர்

பெண்கள் காதலை மறுக்கும் போது...சொல்வதும், சொல்ல நினைப்பதும்...!

உங்களைப் பார்த்தா என் அண்ணா போல இருக்கு.. சாரி..!

அந்தக் கடன்காரனும் உன்ன மாதிரிதான்.. ஒன்றரைக் கண், முன் வழுக்கை, சூனா தொப்பை..!

நமக்குள்ளே லேசா வயசு வித்தியாசம் இருக்கும் போல இருக்கே.. சாரி..

மூதேவி.. எங்கப்பன் வயசு இருக்கும்போல .. லவ்ஸ் கேக்குதா உனுக்கு.. ?

என்னமோ தெரியல.. உங்களைப் பார்த்தா காதலனா நினைக்கத் தோணல... சாரி..

வடிவேலு காதைக்கடிக்கிற லூசு போல இருக்கே.. உன்க்கு காதல் ஒரு கேடா..? என் சீரிஸும், ஐ பாடும் வச்சிருந்தா மன்மதனாடா நீ..? டுபுக்கு..!

வேண்டாம் ஆனந்த்.. என் வாழ்க்கையில் சிக்கல் ஜாஸ்தி.. சாரி..

ஏற்கனவே ஊருல தாய்மாமனைக் கட்டிகிட்டு புள்ள வேற இருக்கு..இங்கே டீம் லீடர் வசந்த் வேற கமிட் ஆயிருக்கார்.. அதைத் தவிர ஃபிளாட் ஓனர் பையன்கூட வசமா என்கிட்ட சிக்குவான் போல இருக்கு..!

அடடா.. ஏற்கனவே எனக்கு பாய் ஃபிரெண்ட் இருக்காரே.. சாரி..

டொங்கு விழுந்து எங்க தாத்தாவோட கேவலமா இருக்கே.. உனக்கு நான் வேணுமா..? எங்க கிரண்ட்பா தாண்டா என் பாய் ஃபிரெண்ட்..!

வேலை செய்யற இடத்தில் யாரையும் காதலிக்கக் கூடாதுன்னு கொள்கை சுரேஷ்.. சாரி..

மவனே.. நீ யு.எஸ்.ல கிரீன் கார்டு வச்சிருந்தாகூட உன்னை லவ் பண்ற உத்தேசம் இல்லே..

நீங்க சிறந்தவர்தான்.. எனக்குத்தான் கொடுத்து வைக்கல.குரு . சாரி..

என்ன தைரியத்துல இந்த மூஞ்சைத் தூக்கிக்கிட்டு வந்து ப்ரபோஸ் பண்றே.. மனசாட்சியே இல்லியாடா நாயே..?

இல்லே மாதவா.. இப்போ என் கரியர்ல முன்னேறணும்.. அதைத்தவிர என் ஆர்வம் வேற எதிலும் இல்லே... சாரி..

நான் குப்பை அள்ளுறவளா இருந்தாலும் இதைத்தாண்டா சொல்லுவேன்..கிராக்கு..

என் பேமிலில ஒத்துக்க மாட்டாங்க குமார்.. சாரி..

நாயே.. எந்த தைரியத்துலடா உன்னையெல்லாம் என் காதலன்னு அவங்கட்ட அறிமுகப்படுத்த முடியும்..? எங்க வேலைக்காரி பையன் கூட உன்னை விட அழகா இருப்பான்.

நாம பிரெண்டாவே இருந்துடலாமே மகேஷ்.. சாரி..

அப்பத்தாண்டா என் ஆளோட நான் என்னென்ன லூட்டி அடிச்சேன்னு உன்கிட்ட சொல்லி வெறுப்பேத்தலாம்.. அப்போ உன் முகரக்கட்டை போற போக்கை ரசிக்கணும்டா நான்..

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்பத்தான் அனுபவப் பட்டிருக்கிறீங்க, மேலும் அனுபவம் தொடர வாழ்த்துக்கள். :mellow::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.