Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியது பாரிய மனித உரிமை மீறல்: பல அமைப்புக்கள் கண்டனம்.

Featured Replies

எல்லோரும் சேர்ந்து தனித்தமிழ் தேசத்திற்க்கு தாங்களாகவே ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்

ஜேவிபி இப்படி அறிக்கை விட்டால்தான் திருகோணமலையில் தமது சிங்கள ஊடுருவலை நியாயப்படுத்த முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான் உதவி செய்கிறாங்கள். மிக்க நன்றி.

  • தொடங்கியவர்

U.S. condemns forced removal of Tamils

The Embassy of the United States of America in a press release issued from Colombo Friday condemned the forced removal of Tamils from Colombo. "Such measures violate the Sri Lankan Constitution’s guarantee that every citizen has the right to freedom of movement and choice of residence within Sri Lanka," the U.S. Embassy said. The United States condemns the forced removal of Tamils

Colombo, June 8, 2007: The United States condemns the forced removal of Tamils from Colombo. Such measures violate the Sri Lankan Constitution’s guarantee that every citizen has the right to freedom of movement and choice of residence within Sri Lanka.

The United States understands and supports Sri Lanka’s obligation to defend itself against terrorism. But this action can only widen the ethnic divide at a time when important efforts are underway to reach a national consensus to end Sri Lanka's nearly quarter-century old conflict.

We call upon the Government of Sri Lanka to stop the forcible removal of its citizens from Colombo, to make public the destinations of those already removed, and to ensure their safety and well-being.

-Tamilnet-

Edited by யாழ்வினோ

அமெரிக்க குடிமகன் கோத்தபாய அமெரிக்க அரசுடன் சேர்ந்து கெண்டு மகிந்த அரசுக்கு எதிராக சதி முயற்சியா?

வெள்ளி 08-06-2007 13:36 மணி தமிழீழம் [சிறீதரன்]

சிறீலங்கா உயர்நீதிமன்றம் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை இடைநிறுத்த உத்தரவு

சிறீலங்கா உயர்நீதிமன்றம் கொழும்பு தங்ககங்களில் இருந்து பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை தற்காலிகமாக இடைநிறுத்த சிறீலங்காவின் காவல்துறை மா அதிபர் விக்ரர் பெரேராவிற்கும் அவரது திணைக்களத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ் உயர் நீதிமன்ற இடைநிறுத்தத்தினை மாற்றுக்கொள்ளைகளுக்கான மையத்தின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார்.

நன்றி.

பதிவு.

  • தொடங்கியவர்

அனைத்துலக மனித உரிமை சட்டங்களை மீறிய சிறிலங்கா: நோர்வே கண்டனம்.

கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியிருப்பது அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களை மீறியதாகும் என்று சிறிலங்காவுக்கு நோர்வே அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள நோர்வேத் தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை திடீரென தமிழர்கள் தாங்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கு நோர்வே கண்டனம் தெரிவிக்கிறது.

கொழும்பு சிறிலங்கா காவல்துறையின் நடவடிக்கையானது அப்பட்டமான அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களை மீறியதாகும். சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்புத் தொடர்பில் கவலை கொள்வது நியாயமானதுதான். அதேபோல் அதன் மக்களினது பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய உரிமையும் அதற்கு உண்டு. இத்தகைய ஒதுக்கல் செயற்பாடுகளானது தமிழர்களை மட்டுமல்ல- எந்த ஒரு இனக்குழு மீதும் மேற்கொள்ளப்படுதல் என்பது அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரானது.

கொழும்பிலிருந்து தமிழர்களை பலவந்தாமாக வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். வெளியேற்றப்பட்ட தமிழர்கள் மீண்டும் கொழும்பு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

  • தொடங்கியவர்

தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்.

கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு அமெரிக்காவைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியமும் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை, அனைத்துலக மனித உரிமைச் சட்ட விதிகளை மீறும் செயல் என, ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் வெளியேற்றப்பட்டதை அவர்களுக்கு வழங்கப்பட்ட “ஒட்டுமொத்த தண்டனை” என பல உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு வருகின்றன.

-Pathivu

Edited by யாழ்வினோ

கொழும்பில் தமிழர்கள் எத்தனை பேர் வாழ்கிறார்கள்???

ஐயா தமிழன் இப்ப எங்கே எவ்வளவு பேர் இருக்கான் என்று யாருக்குமே தெரியாது

பல பேர் இருக்காங்களான்னே தெரியாது

  • தொடங்கியவர்

தமிழர்களுக்கு ஆத்திரமூட்டும் செயல்: நியூயோர்க் மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி இருப்பதன் மூலம் அதியுச்ச ஆத்திரமூட்டும் செயலை சிறீலங்கா அரசு புரிந்திருப்பதாக, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நியூயோர்க் மனித உரிமைகள் கண்காணிப்பகம், அரசின் இந்த நடவடிக்கை ஏற்கனவே இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களின் உச்ச கட்டமாக இருப்பதுடன், இனப் பிரச்சினையை மேலும் தீவிரமாக்கும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், தமிழ் மக்களை வெளியேற்றி “ஒட்டுமொத்த தண்டனை” கொடுப்பதற்கு, அரசிற்கு எந்தவித உரிமையும் இல்லை எனவும், நியூயோர்க் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

-Pathivu-

இந்தியா இன்னும் வாய் மூடி மொளனமாய்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.