Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 46 வது கூட்டத்தொடர் தமிழ் மக்களிற்கு சாதகமாக அமையுமா? – கிருபாகரன்

Featured Replies

ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 46 வது கூட்டத்தொடர் தமிழ் மக்களிற்கு சாதகமாக அமையுமா? – கிருபாகரன்

  • ச.வி.கிருபாகரன், பிரான்ஸ்

Kirubaharan-2.jpgநியூயோர்க்சில்உள்ள ஐ.நா. பொதுச்சபையில், கடந்த 13ம்திகதி, ஐ.நா. மனித உரிமை சபையின் 2021ம் ஆண்டு முதல் மூன்று வருடங்களிற்கு அங்கத்துவத்திற்கான பதினைந்து வெற்றிடங்களிற்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மனிதஉரிமைகளை மோசமாக மீறும் நாடுகள் சிலவும் வெற்றிபெற்றுள்ளன.

இவ்விடயத்திற்கு விபரமாக செல்லும் முன், ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பத்தி ஏழு நாடுகளிற்கான அங்கத்துவம் எப்படியாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்அடிப்படையில் –

ஆசிய – பசுபிற்கு (13) பதின்மூன்றுநாடுகளும், ஆபிரிக்காவிற்கு (13) பதின்மூன்று நாடுகளும், லத்தின் அல்லதுதென்அமெரிக்க கரிபியவிற்கு (8) எட்டு நாடுகளும், மேற்கு ஐரோப்பியமற்வற்றிற்கு (7) ஏழுநாடுகளாகவும், கிழக்குஐரோப்பவிற்கு (6) ஆறுநாடுகள் என்றஅடிப்படையில் அங்கத்துவம் பிரிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தற்பொழுது, அதாவது 2020ம்ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஐ.நா. மனித உரிமை சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

geneva-front.4.pngஇதில் – ஆசியாபாசுபிக் நாடுகளாவன (13) : ஆப்கானிஸ்தான் (2020) கட்டார் (2020) நேபலாம் (2020) பாகிஸ்தான் (2020) பாரேன் (2021) பாங்களாதேஸ் (2021) பிஜீ (2021) இந்தியா (2021) பிலிப்பைன்ஸ் (2021) இந்தோனேசியா (2022) ஜப்பான் (2022) மாசல்தீவுகள் (2022) கொரியகுடியரசு – தென்கொரிய (2022).

ஆபிரிக்கா நாடுகளாவன (13) : அங்கோலா (2020) கொங்கோ ஜனநாய குடியரசு (2020) நைஜீரியா (2020) செனகல் (2020) புக்கினோபாசோ (2021) கமரோன் (2021) ஏரித்தீரியா (2021) சோமலீயா (2021) ரோகோ (2021) லிபியா (2022) மொறிற்ரானியா (2022) நாபிபீயா (2022) சுடான் (2022).

மேற்கு ஐரோப்பிய மற்றையநாடுகளாவன (7) : ஆவுஸ்திரேலியா (2020) ஸ்பெயின் (2020) ஆவுஸ்தீரியா (2021 டென்மார்க் (2021) இத்தாலி (2021) ஜெர்மனி (2022) நெதர்லாந்து (2022)

கிழக்கு ஐரோப்பிய நாடுகளாவன (6) : சுலோவாக் (2020) யூக்கிறேன் 2020) புல்கேரியா (2021) செக் குடியரசு (2021) ஆர்மேனியா (2022) போலாந்து (2022).

பதினைந்து புதிய அங்கத்தவர்கள்

இதன் அடிப்படையில், ஆசிய நாடுகளில் நான்கு நாடுகளும், ஆபிரிக்கா நாடுகளில் நான்கு நாடுகளும், லத்தின் அல்லது தென் அமெரிக்ககரிபியா நாடுகளில் மூன்று நாடுகளும், மேற்கு ஐரோப்பிய மற்றைய நாடுகளில் இரு நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருநாடுகளும் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் தமது அங்கத்துவத்தை இழக்கின்றனர்.

ஆனால் ஐ.நா. மனிதஉரிமை சபையில்அங்கத்துவம் வகிக்கும்ஒரு நாடு விரும்பினால், மீண்டும் ஒரு மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக இரண்டாவது தடவை மட்டுமே அங்கத்துவம்வகிக்க முடியும். இதற்கு அவர்கள் ஐ.நா. பொதுச் சபையின் தேர்தலில் பங்கு கொண்டு வெற்றி கொள்ளவேண்டும்.

தற்பொழுது கடந்த 13ம்திகதி, ஐ.நா. பொதுச் சபையினால், ஐ.நா.மனித உரிமை சபையில் 2021ம் ஆண்டுமுதல் மூன்றுவருடங்களிற்கு அங்கத்துவத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து அங்கத்தவர்கள் யார்யாரென பார்வையிடுவோம்.

ஆசியா – பசுபிக் நாடுகள் என்ற அடிப்படையில் : பாகிஸ்தான், நேபலாம், சீனா, யூபிக்ஸ்தான்ஆகிய நாடுகளில்; பாகிஸ்தான், நேபலாம்ஆகிய இருநாடுகளும் தமது இரண்டாவது தடவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஆபிரிக்காநாடுகள் என்றஅடிப்படையில் : செனகல், கொட்துவார் – ஐவிரிகோஸற்; கபோன், மலாவி ஆகியநாடுகளில்; செனகல்தனது இரண்டாவதுதடவைக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

லத்தின் அல்லது தென்அமெரிக்ககரிபியா நாடுகள்என்ற அடிப்படையில் : மெக்சிக்கோ, பொலீவியா, கியூபா ஆகியநாடுகளில்; மெக்சிக்கோமீண்டும் தனதுஇரண்டாவது தடவைக்குதேர்தெடுக்கப்பட்டுள்ளது.

UNHRC-in-Geneva.pngமேற்கு ஐரோப்பிய மற்றைய நாடுகள் என்றஅடிப்படையில் : பிரான்சும், பிரித்தானியாவும் தேர்தல் இன்றி தெரிவாகியுள்ளன.

கிழக்கு ஐரோப்பிய என்றஅடிப்படையில் : உக்கிறேன், ரஷ்யா ஆகிய நாடுகளில்; உக்கிறேன் மீண்டும் தனது இரண்டாவது தடவைக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத் தடவை தெரிவாகியுள்ள பதினைந்துநாடுகளில், பலநாடுகள் மனித உரிமையை கடுமையாக மீறும் நாடுகளென, பல சர்வதேசமனித உரிமை அமைப்புக்களினால் கண்டனம்தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதுஉண்மை. ஆனால் இப்படியான நாடுகள் மனித உரிமைசபைக்கு தெரிவாகியிருப்பது இதுமுதற் தடவையாகஅல்ல. இங்குதான் ஐ.நா. பொதுசபை ஒர்அரசியல் கலப்புகொண்டது என்பது நிருபணமாகிறது.

இரு வருட கால அவகாசம் முடிவடைகிறது

நிற்க, அடுத்து நாங்கள் ஆராய வேண்டியவிடயமாவது, 2021ம்ஆண்டு மார்ச் மாதம், அதாவதுஅடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.நா.மனிதஉரிமை சபையின் 46வது கூட்டதொடருடன், இலங்கை அரசிற்கு மனிதஉரிமை சபையினால் கொடுக்கப்பட்ட இருவருட காலஅவகாசம் முடிவடையவுள்ளது.

இந்நிலையில், இலங்கை விடயத்தில் மனித உரிமை சபையின் அங்கத்துவ நாடுகள் எவ்வாறாக நிலைமை யைகையாழுவார்கள் என்பதேஇப்பொழுது பலரிடம் ஏழும் கேள்வி.

இங்குநாம் கவனத்தில்கொள்ள வேண்டியமுக்கிய விடயங்கள் என்னவெனில், முதலாவதாக இலங்கை தமது இணை அனுசரனையில்விலகியுள்ளதுடன், இலங்கையில், கடந்த ஜனதிபதித் தேர்தல், பாரளுமன்றத் தேர்தல்களுடன், அங்கு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்கான வழிவகைகளை கையாழப்படுவதை சர்வதேச சமூதாயம் கவனத்தில் கொள்கிறது. அத்துடன் சீனா, கியூபா, ஈரான், பாகிஸ்தான் போன்ற உலகில் மிகமோசமான மனித உரிமை மீறல்களைக் கொண்ட நாடுகளுடன் இலங்கை வெளிப்படையாக கைகோர்த்து நிற்கிறது.

இலங்கையின் இந்த நிலைபாட்டை, சர்வதேச சமூதாயம் எப்படிக் கண்கொண்டு பார்க்கும் என்பதுடன், எப்படியான நிலைபாட்டைகொள்ளும் என்பதை நாம் ஆராய வேண்டும். காரணம், 2015ம் ஆண்டு வரை மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் நிலவியநிலைமைகளிற்கு பலமடங்கு மேலாக, தற்போதைய கோத்தபாயவின்ஒரு வருடகால ஆட்சி, ஜனநாய வழிமுறைகளிற்கு படிப்படியாக சாவுமணித்து அடித்துவருவதை சர்வதேச சமூதாயம் என்றும் கவனத்தில் கொள்கிறது. அத்துடன், வடக்கு – கிழக்கு வாழ் மக்களின் அரசியல் பொருளாதார சமூக வாழ்க்கையின் பின்னடைவுகளையும் சர்வதேச சமூதாயம் கவனத்தில் கொள்ளதவறவில்லை.

இவ்நிலையில், எதிர்வரும்மனித உரிமைசபை கூட்டத்தொடரில், ஓர்கடுமையான தீர்மானம் இலங்கை மீதுமுன் வைப்பதுதவிர்க்க முடியாதஒன்றாகவுள்ளது. இதில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என்பதுஒரு பக்கம் இருக்க, இவ்தீர்மானத்திற்கு அங்கத்துவ நாடுகளின் ஆதரவு எப்படியாக இருக்கும் என்பதில், ஐ.நா. நிலைமைகளை ஆழமாக சரியாகபுரியாத பலர்பீதி கொள்வதில் எந்த தவறுமில்லை.

geneva-hall.jpgசிலர் – சீனா, ரஷ்யா, கியூபா பாகிஸ்தான் என்பன மனித உரிமை சபையில் அங்கத்துவ நாடுகளாக உள்ளதை எண்ணி கலக்கம்கொள்கிறார்கள். இவர்கள் புரியாத உண்மை என்னவெனில், இவ்நாடுகள் மனிதஉரிமை சபையில்அங்கம் வகிக்கும் வேளையிலேயே, இலங்கை மீது அடுத்துஅடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதைநாம் மறக்ககூடாது.

இதேவேளை இவ்தீர்மானங்களை அமெரிக்கவே முன்னொழித்து வெற்றிகண்டுள்ளது என்பது யாதார்த்தம். ஆனால் அமெரிக்கா தற்பொழுது மனித உரிமை சபையில்அங்கம் வகிக்கவில்லை என்பது சிலரது விவாதமாகவுள்ளது. என்னைப் பொறுத்த வரையில் இவர்கள் ஐ.நா.வின் உள்வீட்டு விடயங்கள் புரியாதவர்களென்றே கூறுவேன்.

இலங்கை விடயத்தில் அமெரிக்கா அக்கறை

காரணம், அமெரிக்கா மனிதஉரிமை சபையில்அங்கத்துவம் வகித்தார்களோ இல்லையோ, அவர்கள் நிச்சயம் இலங்கை விவகாரங்களில், விசேடமாக மனித உரிமை விடயங்களில் நல்ல கரிசனையாகவுள்ளனர். இதற்கு பல பல ஊதாரணங்கள் இருந்த போதிலும், சுருக்கமாககூறவதனால், இலங்கைக்கு இரு வருட அவகாசம் கொடுக்கும் வேளையில், அமெரிக்காவின் பின்ணனியிலேயே யாவும் நகர்த்தபட்டது என்பதைஎத்தனை பேர் அறிவார்கள்?

அடுத்து அமெரிக்காவின் மனிதஉரிமை சபையின்பிரசன்னம் என்பது – குடியரசு கட்சியை சார்ந்தவர் ஜனதிபதியாகத் திகழும் வேளையில் மனித உரிமை சபையிலிருந்து விலகுவதும், ஜனதிபதி கட்சியின் ஜனதிபதி காலத்தில் மனித உரிமை சபையில் வெளிப்படையாக அங்கத்துவம் பெறுவதுமே அமெரிக்கவின் போக்கவுள்ளது. இவ் அடிப்படையில், அடுத்த நவம்பர்மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனதிபதித் தேர்தலில், ஜனநாயக கட்சியை சார்ந்தவர் வெற்றி பெற்றால், அமெரிக்கா நிச்சயம் மனிதஉரிமை சபையில் தமது செயற்பாடுகளை வெளிப்படையாக நகர்த்தும்.

எதிர்காலத்தில் இலங்கை மீது ஐ.நா. மனித உரிமை சபையில் சமர்பிக்கபடும் தீர்மானத்திற்கு, குறைந்தது இருப்பத்து ஐந்து முதல்இருபத்து ஏழுநாடுகளின் வாக்குகளால் (25-27) நிச்சயம் வெற்றிபெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இது பற்றி ஆய்வுசெய்ய விரும்பியவர்கள்யாவரும் – முன்னைய தீர்மானங்கள் மீதான வாக்களிப்புக்கள், தற்போதையநற்பத்தி ஏழு நாடுகளின் அங்கத்துவம், இலங்கையின் தற்போதையநிலைபாடு போன்றபல விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.

அடுத்து, இலங்கையை ஐ.நா. மனித உரிமை சபையின் தீர்மானம் மூலம் பாதுகாப்புச் சபைக்கு அனுப்பினாலும், அங்கு சீனா, இலங்கை  விடயத்தில் அக்கறை கொள்ளுமென விவாதம் செய்பவர்கள், சுடானுடன் மிகநட்பாக பாரீய வர்த்தாகத்தில், விசேடமாக எண்ணெய் வியாபாரத்தில்ஈடுபட்ட சீனா, சுடான் ஜனதிபதி ஓமார் எல் பாசீரை பாதுகாப்புசபை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிபார்சு செய்த வேளையில், சீனா என்ன செய்துள்ளது என்பதை படித்து அறிந்துகொள்ள வேண்டும்.

எம்மை பொறுத்தவரையில், எமது பாரிய அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் ஜெனிவா மனிதஉரிமை சபையில் இலங்கை மீது கொண்டுவரப்படும் தீர்மானம், எந்த தடையுமின்றிநிறைவேறும்.

ஆகையால், இலங்கை மீதான எதிர்கால தீர்மானம் ஐ.நா. மனித உரிமை சபையில் வெற்றிபெறுவதற்கு – புலம் பெயர்வாழ் தமிழர், செயற்பாட்டாளர்கள் சகல அமைப்புக்களின் பங்குடன், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்களதும், அவ்விடத்தில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள், காணமல் போனராது பெற்றோர் உறவினர்களினது பங்களிப்பு மிக மிக முக்கியம்.

https://thinakkural.lk/article/81592

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.