Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு நலனுக்காக சமரசம் செய்ய மாட்டோம்’ – அமெரிக்க செயலரிடம் கோட்டபாய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு நலனுக்காக சமரசம் செய்ய மாட்டோம்’ – அமெரிக்க செயலரிடம் கோட்டபாய

 
1-110.jpg
 62 Views

“எந்த சூழ்நிலையிலும் வெளிநாட்டு உறவுக்காக இலங்கையின் சுதந்திரம், இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது” என்று இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்க செயலர் பொம்பெயோவிடம் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். 

இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பே,  இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருடனான பேச்சுக்களின் போது, சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி ட்டிரம் நிர்வாகத்தின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்தச் சந்திப்பின் போது, “எந்த சூழ்நிலையிலும் வெளிநாட்டு உறவுக்காக இலங்கையின் சுதந்திரம், இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது” என்று இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வந்த பத்திரிகை குறிப்பு ஒன்றிலேயே இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சீனா உட்கட்டமைப்பில் உதவவில்லை என்றும்  சீனாவின் கடன் பொறியில் இலங்கை வீழ்ந்துவிடவில்லை என்றும் கோட்டபாய குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு தேவை முதலீடே ஒழிய கடல் அல்ல என்றும் கோட்டபாய தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை தொடர்ந்து வெளிநாடுகளிடம் கடன் பெற விரும்பவில்லை என்றும், தமக்கு தேவை உயர்மட்ட பொருளாதார வளர்ச்சிக்கான வெளிநாட்டு முதலீடே என்றும் கோட்டபாய கூறியுள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை தடுக்கும் வகையிலான அரச அதிகாரிகளின் “சிவப்பு நாடா” முறைகளை இலங்கை அகற்றிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் கோட்டபாய வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல விடயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன என்று தெரிவித்த கோட்டபாய, கலாசார மற்றும் வரலாற்றுக் காரணிகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆகியனவே சில முன்னுரிமைக்குரிய விடயங்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரிவினைவாத யுத்தத்தின் முடிவின் பின்னர் சீனா இலங்கையின் அபிவிருத்திக்கு உதவியது எனபதை சுட்டிக்காட்டியுள்ள கோட்டபாய, இதன் காரணமாக இலங்கை சீனாவின் கடன்பொறியில் சிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த அமெரிக்க இராஜாங்க செயலர் பொம்பெயோ, இலங்கையில் உயர்ந்தபட்ச பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவும் ஒத்துழைத்துச் செயற்படும் என்று   கூறியுள்ளார். இலங்கையில் அமெரிக்க முதலீட்டை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார். ஒழுங்கான திட்டங்களுடன் இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் அமெரிக்கா உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ilakku.org/independence-sovereignty-wont-be-compromised-in-foreign-relations-says-presidentவெளிநாட்டு-ந/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மைக் பொம்பியோ சந்திப்பு இந்தியா+அமரிக்காவோடு மோதத் தயாராகிறது இலங்கை

 

கடன் பொறியா? இராஜதந்திர பொறியா? தடுமாறும் இலங்கை அரசு!

  • இதயச்சந்திரன்

க்டோபர் 6 இல் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் (Quadrilateral Security Diologue ) பாதுகாப்பு கலந்துரையாடல், அமெரிக்க ராஜாங்க செயலர் மைக் பொம்பயோவின் இலங்கை விஜயத்தோடு, ஒரு புதிய இப்டோ (Indo -Pacific Treaty Organization -IPTO) ஆக தோற்றம் பெறுமா? என்பதே நமது சந்தேகம்.

gota-mike.600.pngஅமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்ட குவாட் உரையாடலில், சீனாவின் பொருளாதார- இராணுவ விரிவாக்கம் குறித்து பேசப்பட்டது. சீனாவை எப்படி மடக்குவது? என்பதாக அந்த உரையாடல் வெளி விரிந்துள்ளது.

அக்டோபர் 9 இல், சீன உயர்மட்ட அரசியல் குழுவினர் இலங்கை சனாதிபதி கோட்டாவைச் சந்தித்ததோடு, இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 15 இல் பிரதமர் மகிந்தாவை அலரி மாளிகையில் சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்ளே. இதைத்தான் இராஜதந்திர மூலோபாய ஓட்டம் என்பார்களோ!

அநேகமாக இலங்கைத் தீவினை மையமாகக் கொண்ட வல்லாதிக்க போட்டி நகர்வுகள், இம்மாத ஆரம்பத்திலிருந்தே வேகமாக நகரத் தொடங்கியதை காணலாம்.

சீனாவிற்கெதிராக கட்டமைக்கப்படும் புதிய அணியில், எவ்வாறு இலங்கையை உள்ளிழுப்பது என்கிற சிக்கலில் ‘குவாட்’ அணியினர் தடுமாறும் வேளையில், இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு கொழும்பு சென்றுள்ளார் அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பயோ.

ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்தியேகமான கவலைகள்.

திருக்கோணமலை எண்ணெய்த் தாங்கிகளை மீளப்பெறுதல், கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை வழங்காமல் இழுத்தடித்தல் , இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நீர்த்துப் போகச் செய்தல் போன்ற நகர்வுகளால் இலங்கை மீது இராஜதந்திரக் கடுப்பில் உள்ளது இந்தியா.

அமெரிக்காவின் கவலையோ வேறுவிதமானது.

சோபா என்கிற (Status of Forces Agreement -SOFA ) படைத்துறை உடன்படிக்கை , எம் சி சி ( Millennium Challenge Corporation ) இல் கைச்சாத்திடாமை, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் கொடுத்தமை போன்ற காரணிகளால் இலங்கை மீது கோபத்திலுள்ளது அமேரிக்கா.

Bobio.jpgஇந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே, தென்னாசிய பிராந்திய ஆதிக்கம் குறித்த விவகாரத்தில் இராஜதந்திர போட்டிகள் நிலவினாலும், இலங்கையில் காலூன்றும் சீனாவை எதிர்கொள்ளும் விடயத்தில், ஓரணியில் இணைகின்றன.

2005 -2007 களில் எம் சி சி (MCC ) ஒப்பந்தம் குறித்து ,பாத் பைண்டர் ( Path Finder ) என்கிற மிலிந்த மொரகொடவின் சிந்தனை குழாம் நிறுவனம் ஒரு அறிக்கையை மகிந்தாவிடம் கையளித்தது.

அந்நேரத்தில் தீவிரமடைந்த யுத்தச் சூழலை காரணம் காட்டி, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதைத் தவிர்த்தார் மகிந்த ராஜபக்ச. ஆனாலும் 2009 தமிழின அழிப்புக் காலத்திலும் , எம் சி சிக்காகக் காத்திருந்தது அமெரிக்கா.

2015 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் வரை, ‘அமெரிக்க எம்.சி.சி’ கிடப்பில் போடப்பட்டது.

அந்த ஒப்பந்தம் வழங்கப்போகும் 480 மில்லியன் டொலரிற்காக, அதனைக் கையிலெடுத்தது மைத்திரி-ரணில் கூட்டரசாங்கம். ஆனால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.

இத்தகைய மேற்குலக ஆதரவு கூட்டு ஆட்சியே, சீனக்கடனில் மகிந்தர் உருவாக்கிய அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீன நாட்டு கம்பெனிக்கு வழங்கியது.

ஆனாலும் 2020 வரை எம்.சி.சி ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மைத்திரி- ரணில் அரசின் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக விமர்சித்த ராஜபக்ச கட்சி ஆட்சிபீடமேறியது.

அதுசரி…எம்.சி,சியில் என்ன இருக்கிறது?.

கிராம வீதிகளை புனரமைப்பது . கிராமங்களை மின்சாரமயமாக்குவது. குறுகிய- நடுத்தர வர்த்தகங்களை அபிவிருத்தி செய்யவது . இப்படிப் பல உட்கட்டுமானத் வேலைத்திட்டங்கள் உண்டு..

இதையேதான் 1 ட்ரில்லியன் டொலர்களை ஒதுக்கி, பெல்ட் அன்ட் ரோட் (Belt & Road) என்கிற மெகா திட்டத்தினூடாக, உலகின் பல நாடுகளிலும் உட்கட்டுமான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்கிறது சீனா.

‘அதை நான் செய்கிறேன். சீனா எதற்கு ?’ என்பதுதான் அமெரிக்காவின் கேள்வி.

இதற்கான நில ஒதுக்கீடானது நாட்டின் இறைமையை, நீதி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை பாதிக்கும் என்கிறார்கள் இதனை எதிர்ப்பவர்கள்.

வழக்கமாகவே வெளிநாட்டுக்கு கடனில் இயங்கும் இலங்கை அரசு, கடனை அடைக்க துறைமுகங்களை தாரை வார்ப்பதும், உள்ளூரில் உற்பத்தியை ஊக்குவிக்காமல் வெளிநாட்டு இறக்குமதியை அதிகரிப்பதும், நாட்டின் இறைமையைக் காப்பாற்றுமா?. இல்லையென்பதே அதற்கான பதில்.

அதேவேளை இலங்கை அரசு எதிர் கொள்ளும் இராஜதந்திர நெருக்குவாரங்கள், புதிய வடிவமொன்றினை நோக்கி நகர்வதாகவே பலரும் கணிப்பிடுகின்றார்கள்.

தென் சீன கடல் வளையத்திற்குள் சீனாவை முடக்கும் அமெரிக்காவின் ஒரு பெரும் நகர்வாகவே குவாட் பேச்சுவார்த்தை பார்க்கப்படுகின்றது.

உலக வங்கியின் 2017 ஆண்டு புள்ளி விபரங்கள், மொத்த உள்ளூர் உற்பத்தியில் சீனாவும் அமெரிக்காவும் சமநிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதாரப்போட்டியானது , நாணயப் போரிலிருந்து வர்த்தகப் போராக மாறி, தற்போது தொழில் நுட்பப் போராக (Tech War ) விரிவடைந்துள்ளது.

சீனாவின் வழங்கல் சங்கிலியை (Supply Chain) உடைக்க , தனது நட்பு நாடுகளையே, ‘நீ அந்தப் பக்கமா? இல்லையேல் எங்கள் பக்கமா?’ என்று கேட்டு அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது அமெரிக்கா.

சீனாவிலுள்ள அமெரிக்க கம்பெனிகளின் தொழிற்சாலைகளை வியட்நாம், தாய்லாந்து மற்றும் தென் கொரியா பக்கம் நகர்த்தும் அமெரிக்க இராஜதந்திரம், ஏன் இந்தியாவை நோக்கி அவற்றினை திருப்பவில்லை என்கிற கேள்வியும் எழுகின்றது.

இந்த நுட்பமான அரசியல் நகர்வு, ‘குவாட்’ இன் பாதுகாப்பு குறித்தான அக்கறையை மட்டுமே வெளிப்படுத்துகிறது.

அதாவது இந்தியாவையும் இலங்கையையும் சீனாவிற்கெதிரான பாதுகாப்பு வலைப் பின்னலிற்குள் வைத்திருக்க அமெரிக்கா விரும்புவதுபோல் தெரிகிறது.

china-dragan.600.pngசோவியத் யூனியனை ஓரங்கட்ட சீனாவிற்கான சந்தைக் கதவுகளைத் திறந்து விட்ட அமெரிக்கா, இப்போது அதன் மறு தாக்கங்களை உணர்கிறது.

தற்போது சீனாவை முடக்க அணி சேர்க்கப்படும் நாடுகள், தனக்குப் போட்டியாக உற்பத்தித் துறையில் சரிநிகராக வளர்ந்துவிடக் கூடாதென்பதில், கவனமாக இருக்கும்.

வழங்கல் சங்கிலியை மட்டுமல்ல சீனாவின் வழங்கல் பாதைகளையும் தனது கட்டுக்குள் கொண்டுவர எத்தனிக்கும் அமெரிக்காவின் ‘இரண்டாம் உலக போர் காலத்து தந்திரோபாய நகர்வுகள்’ சாத்தியமாகுமா? என்பதை , அதன் பொருளாதார மீட்சியே தீர்மானிக்கப்போகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை அதன் ‘நடுநிலையான அணிசேராக் கொள்கை’ என்பதற்கு சத்தியசோதனை ஏற்பட்டுள்ளது.

கடன்பொறிக்குள் அகப்பட்டவாறு, நடுவு நிலைமைப் பேண முடியாது என்கிற பூகோள அரசியல் யதார்த்த உண்மையை இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் விரைவில் உணர்வார்கள்.

இன்றைய அழுத்தங்களிலிருந்து தற்காலிகமாக இலங்கை அரசு தப்பலாம்.

ஆனால் அது நீடிக்காது.

 

https://thinakkural.lk/article/84105

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா உறுதியாக இருந்ததால் பொம்பியோவால் அழுத்தம் கொடுக்க முடியவில்லை – விமல்

 
Wimal-Weerawansa-500.png
 19 Views

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசு கோழைத்தனமானது அல்ல. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இந்தியா மீது பிரயோகித்த அழுத்தங்களைக்கூட இலங்கையின் மீது இந்த விஜயத்தின் போது பிரயோகிக்கவில்லை” என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசியல் ரீதியாக அநாதைகளாகியுள்ள சஜித் தரப்பும், ஜே.வி.பியும் பொம்பியோவின் விஜயத்தின்போது பெரிதும் பதற்றமடைந்த போதிலும் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.

நாட்டின் ஆட்சியாளர் முதுகெலும்புடைய தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடியவர் என்றால், உலக வல்லரசு என்றாலும் அழுத்தங்களைப் பிரயோகிக்காது. ரணில் விக்கிரமசிங்க போன்ற கோழைகள் ஆட்சியில் இருந்திருந்தால் பொம்பியோவின் விஜயத்தின்போது பதற்றமடைந்திருக்க வேண்டும்.

ஏனெனில் உலக வல்லாதிக்க நாடுகளின் தாளத்திற்கு இவ்வாறான கோழை ஆட்சியாளர்கள் ஆடக்கூடியவர்கள். எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இந்த அரசு அவ்வாறு கோழைத்தனமானது அல்ல. இந்த அரசு நாட்டின் இறைமை, பௌதிக ஒருமைப்பாடு என்பன குறித்து மிகுந்த கரிசனையுடையது.

மைக் பொம்பியோ இந்தியா மீது பிரயோகித்த அழுத்தங்களைக்கூட இலங்கையின் மீது இந்த விஜயத்தின் போது பிரயோகிக்கவில்லை. இதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தைரியமிக்க ஆட்சியே காரணம்” என்றார்.

https://www.ilakku.org/கோட்டா-உறுதியாக-இருந்ததா/

சீன சார்பு அடையாளம் இலங்கைக்குத் தேவையில்லை – எச்சரிக்கின்றார் ரணில்

 
ranil-500.png
 19 Views

“ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம். எந்தவொரு நாடும் இலங்கை தொடர்பில் சந்தேகக் கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்கவில்லை” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது;

ஜப்பான் மற்றும் இந்தியா இலங்கையில் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களை சீனாவுக்கு வழங்கியமை தொடர்பில் அமெரிக்கா அதிருப்தியடைந்துள்ளதுடன் சந்தேக நோக்குடனுமே உள்ளது. இதனை அரசாங்கம் உணர்ந்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தின் போது சீனாவை விமர்சித்தது போன்று மனித உரிமைகள் தொடர்பில் நினைவூட்டினார். எனவே எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது அந்நாட்டின் தேசிய கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம். சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் எமது இராஜதந்திர தொடர்புகளும் அணுகுமுறைகளும் எந்தவொரு நாடும் இலங்கை குறித்து சந்தேகக் கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்கவில்லை.

ஆனால் ராஜபக்ஷர்களின் ஆட்சியில் சீன சார்பு என்று இலங்கை அநாவசியமாக அடையாளப்பட்டது. இதுவே இன்றைய நெருக்கடிகளுக்கும் காரணமாகியுள்ளது. எனவே அமெரிக்க இராஜாங்கச் செயலரின் விஜயத்தை அரசாங்கம் எளிதாக எடுத்துக்கொள்ளாது இராஜதந்திர ரீதியில் சிறப்பாக அணுகவேண்டும். குறிப்பாக எம்.சி.சி.ஒப்பந்தம் போன்ற விடயங்களில் அமெரிக்காவின் நிலைப்பாடு யார் ஆட்சிக்கு வந்தாலும் அங்கு மாறுபடாது.”

https://www.ilakku.org/சீன-சார்பு-அடையாளம்-இலங்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.