Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்தின் பின்புலம்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்தின் பின்புலம்…

பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற படுகொலைகளின் பின்னர், கொரோனா மரணங்களின் மத்தியில், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் அப்பாவி இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமிய மதத்திற்கும் எதிரான முழக்கங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளமை அச்சம் தரும் சூழல். UCL – London பல்கலைக் கழகத்தில் பிரஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசியல் துறை பேராசியர் பிலிப் மர்லியே, மக்ரோனின் பிரஞ்சு அரசு வேகமாக நாஸிச அரசாக மாறிவருவதாகக் குறிப்பிடுள்ளார்.

கொலைகளின் பின்னர் உரையாற்றிய மக்ரோன், உலகம் முழுவதிலும் இஸ்லாமிய மதம் நெருக்கடியிலுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 21.06.2011 ஆம் ஆண்டு ஐரோப்பாவையே உலுக்கிய கிறீஸ்தவ வெள்ளையின பயங்கரவாதி 77 அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற போது, கிறீஸ்தவம் உலகம் முழுவதிலும் நெருக்கடியிலுள்ளது என்று எந்தத் தலைவரும் குறிப்பிடவில்லை.

பிரஞ்சு ஏகாதிபத்தியமும் முஸ்லீம்ல்களும்

இதே பிரான்ஸ் நாட்டில் 2006 ஆம் ஆண்டு சார்லி ஹெப்டோ என்ற வாராந்தப் பத்திரிகை முகமது நபியை அவமானப்படுத்து ம் வகையில் கேலிச் சித்திரங்களை வெளியிட்ட பின்னர், தொடர்ச்சியாக பல் வேறு ஊடகங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்தன.

spacer.png

ஜீ.ஐ.அ அமைப்பு

இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் இஸ்லாமிய மதத்தின் பெயரிலான பயங்கரவாதம் 1990 களிலேயே அல்ஜீரியாவில் ஆரம்பித்துவிட்டது. 1993 முதல் 2004 ஆம் ஆண்டு வரை தீவிர செயற்பாட்டிலிருந்த ஜீ.ஈ.ஏ என்ற அமைப்பு இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்ற தலையங்கத்தில் பல்வேறு கோரமான படுகொலைகளை அரங்கேற்றிற்று.பிரான்சில் கிளைகளைக் கொண்டிருந்த அந்த அமைப்பு, பிரஞ்ச்சு நாட்டில் பல்வேறு குண்டு வெடிப்புக்களை நடத்திற்று.

2005 ஆம் ஆண்டில் பிரான்சின் புற நகர்ப் பகுதிகள் முழுவதும், இளைஞர்களின் அரசிற்கு எதிரான வன்முறைகள் வெடித்தன. பிரான்ஸின் புறநகர் பகுதிகளிலுள்ள அரச குடியிருப்புக்களின் வாழும் பெரும்பான்மையான இஸ்லாமிய இளைஞர்களே இந்த வன்முறைக்குக் காரணம் என அப்போதைய பிரஞ்சு அரசு குற்றம் சுமத்தியது. 2007 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றியீட்டி ஜனாதிபதியாகத் தெரிவான அப்போதைய உள நாட்டமைச்சர் நிக்கொலா சார்க்கொசி, காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்கள் குறித்து ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது, அந்த இடங்களை சுத்திகரிக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்திச் சுத்தம் செய்யுமாறு குறிப்பிட்ட நிகழ்வானது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்திற்று.

ஐ.ஏஸ் பயங்கரவாத அமைப்பினால் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்டதாகக் கருதப்படும் 2015 ஆண்டு தாக்குதல் 128 அப்பாவிப் பிரஞ்சு பொது மக்களைப் பலிகொண்டது. இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிரான ஊடகங்களின் தாக்குதல்கள் அப்போதே ஊடக தர்மம் தொடர்பான கேள்விகளை முன்வைத்தது.

பிரான்சின் எல்லையிலிருக்கும் மக்ரேபியன் நாடுகளான அல்ஜீரியா, மரோக்கோ, துனிசியா போன்ற நாடுகளிலிருந்து 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் பிரான்சில் பலர் குடியேற ஆரம்பித்துவிட்டனர்.

16 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் முதலாளித்துவம் உருவான காலத்தில், பிரஞ்சு மொழி அராச மொழியாக அறிவிக்கப்பட்டது. ஏனைய சிறிய இனக் குழுக்கள் பிரஞ்சு தேசத்துடன் இணைந்த அக்காலப்பகுதியே பிரஞ்சு தேசம் உருவான காலம். அப்போது தான் பிரன்சு தேசியமும் தோன்றியது. மார்சைல்,துலூஸ் போன்ற பகுதியில் குடியேறியிருந்த மக்ரேபியன் முஸ்லீம்கள் பிரஞ்சு தேசத்துடன் இணைந்துவிட்டனர். அவர்கள் இன்று இஸ்லாமியர்கள் அல்லர். இன்றைய பிரஞ்சு நிறவாதிகளுள் அவர்களில் சிலரும் ஒளிந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.

spacer.png

அல்ஜீரியாவில் பிரஞ்சு இராணுவம்

அல்ஜீரியாவில் பிரஞ்சு அரசு நடத்திய இனச்சுத்திகரிப்பு
1830 ஆம் ஆண்டு அல்ஜீரியாவை ஆக்கிரமித்த பிரஞ்சு அரசு அங்கே ஒரு இராணுவ ஆட்சியை நிறுவியது. பல பிரஞ்சு நிர்வாகிகள் அல்ஜீரியாவில் குடியேறினர். ஆக்கிரமிப்பு நடத்தப்பட்ட கால் நூற்றாண்டில் அலிஜீரியாவின் மூன்றில் ஒரு பகுதி குடிமக்கள் பிரஞ்சு இராணுவத்தால் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பெருமளவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். இளஞர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அல்ஜீரியாவின் தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தின் பலனாக 1962 ஆம் ஆண்டு அல்ஜீரியாவை விட்டு பிரஞ்சு கொடுங்கோல் இராணுவம் வெளியேறியது.

நீண்ட போராட்டத்தின் பின்னர், ஐக்கிய நாடுகள் நிறுவனம் பிரான்ஸ் அல்ஜீரியாவை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரியது. பெருந்திரளான இராணுவம் அல்ஜீரியாவை விட்டு வெளியேற மறுத்தது. பிரஞ்சு அரசின் கட்டளையையும் கடந்து தன்னிச்சையாகச் செயற்பட்ட இராணுவ ஆட்சியாளர்கள், பிரஞ்சு அரசையே கையகப்படுத்த முன்னெடுத்த நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டன.

அல்ஜீரியாவில் பிரஞ்சு இராணுவம் பல்வேறு படுகொலைகளை மேற்கொண்டது. இறுதியாக அந்த நாட்டிலிருந்து பிரஞ்சு இராணுவம் வெளியேறிய போது 100000 வரையிலான பிரஞ்சு இராணுவத்தில் இணைந்திருந்த அல்ஜீரிய முஸ்லீம்கள் பிரான்சிற்கு சென்றடைந்தனர்.

1961ஆம் ஆண்டு அல்ஜீரிய விடுதலைக்கு ஆதரவாக பாரிஸ் தலை நகரில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தை நோக்கி பாரிஸ் போலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பலர் கொல்லப்பட்டனர். இப் படுகொலை தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இறுதியாக பல போராட்டங்களின் பின்னர், 1998 ஆம் ஆண்டு, 37 வருடங்களின் பின்னர் பிரஞ்சு அரசு அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்ட 30 பேர் போலிசாரால் படுகொலை செய்யப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியது.

அல்ஜீரியாவிலிருந்து பிரான்ஸ் வெளியேறிய வேளையில் அங்கு நிரந்தரமாகக் குடியேறிய பிரஞ்சு நாட்டவரின் எண்ணிக்கை 1 மில்லியன். அவர்களுள் அல்ஜீரியாவில் பிறந்து வளர்ந்தவர்களும் அடங்குவர். அவர்கள் பிரான்சிற்கு மீளக் குடியேறியவர்கள் 800000. பிரான்சில் அவர்கள் கறுப்புக் கால்கள் (pied noir)என இன்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அல்ஜீரியாவில் குடியிருந்த காலப்பகுதியில் பிரான்ஸ் மொரோக்கோ நாட்டையு ம் ஆக்கிரமிக்க வேண்டும் என தொடர்ச்சியான பிரச்சாரம் மேற்கொண்டனர். இவர்களின் அழுத்தம் காரணமாகவே மொரோக்கோவை ஆக்கிரமிப்பதாக பிரஞ்சு அரசாங்கம் அறிவித்து 1901 ஆம் ஆண்டு மொரோக்கோவை ஆக்கிரமிக்க பிரஞ்சு அரசின் கொடிய இராணுவம், அல்ஜீரிய எல்லை வழியாக மொரோக்கோவினுள் நுளைந்தது. 6 ஆண்டுகளின் பின்னர் பிரஞ்சு இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் மொரோக்கோ உட்பட்டது.

முஸ்லீம்களுக்கு எதிரான பிரஞ்சு மேலாதிக்கம்

spacer.png

வெளி நாட்டவர்களுக்கு எதிரான தேசிய முன்னணியின் பிரச்சாரம்

பிரஞ்சு தேசத்தின் தொழிற் புரட்சிக்கு பிந்தைய வரலாறு முழுவதும் இஸ்லாமியர்களும் எதிரான வரலாறாகவே காணப்படுகிறது. 5.7 மில்லியன் முஸ்லீம்கள் வாழும் பிரஞ்சு நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு என்பது அரசுகளின் ஒரு வகையான ஆட்சிக் கோட்பாடாகவே இருந்து வந்துள்ளது. பொதுவாக வெளி நாட்டவர்களுக்கு எதிராகவும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராகவும் ஆரம்பிக்கப்பட்ட நிறவாதக் கட்சியான தேசிய முன்னணி(Front National), பிரான்ஸின் ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் இரண்டு தடவை வெற்றிபெற்றுள்ளது. பிரஞ்சு அரசு அந்த நாட்டின் குடியுரிமை பெறும் வெளி நாட்டவர்களை தமது சொந்த அடையாளங்களைத் துறந்து பிரஞ்சு சமூகத்தோடு இரண்டறக் கலந்துவிடுமாறு (assimilation)கோருகிறது. பிரித்தானியா போன்ற நாடுகளில் இருப்பிலுள்ள சமூகத்தோடு இணைத்திருக்கும் (integration) முறமை பின்பற்றப்படுகிறது.

பிரான்சில் வாழுகின்ற இஸ்லாமியர்கள் மீதான வராலாற்றுரீதியான யுத்தம் இஸ்லாமிய சமூகத்தை இரண்டாம் தர குடிமக்களாகவே கருதுகிறது. இதுவே அடிப்படைவாதிகளின் உருவாக்கத்திற்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது. தனது சொந்த நாட்டிலேயே பாதுகாப்பற்றதாக உணரும் சமூகத்தின் ஒரு பகுதியினர் அனைத்து இஸ்லாமியர் அல்லாதவர்களையும் எதிரிகளாகக் கருதுகிறது. இந்த அடிப்படை வாதத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரவர்க்கம் தமது இருப்பை உறுதி செய்துகொள்ள இவர்களை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

மக்ரோன்

spacer.png

பங்களாதேஷில் நடைபெற்ற மக்ரோனிற்கு எதிரான போராட்டம்

இன்றைய பிரஞ்சு அதிபர் மக்ரோன் அரசியல் வாதியல்ல. முதலீட்டு வங்கியில் வேலைபார்த்த மக்ரோன் இவருக்கு முன்னைய அதிபர் பிரன்சுவா ஒல்லோந் ஆல் அரசின் பிரதான நிர்வாகியாகவும் ஆலோசரகவும் 2012 ஆம் ஆண்டில் நியமிக்கப்படுகிறார். அதன் பின்னர் அரசில் பல பதவிகளை வகித்த மக்ரோன், 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “மைய அரசியல்” (centre politics ) இயக்கத்தின் உறுப்பினராகிறார். ஊழலுக்கு எதிராக அரசியலற்ற நிர்வாகமே பிரான்சின் தேவை எனத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மக்ரோன், 2017 ஆம் ஆண்டு அதிபராகத் தெரிவாகிறார். தோல்வியடைந்த மைய அரசியல் என்ற கோட்பாட்டை இன்று அரவிந் கெஜ்ரவால், கமல ஹாசன் போன்றவர்கள் முன்வைக்கின்றனர். அரசியல் வேண்டாம் என ஆட்சியை கைப்பற்ற எண்ணும் இவர்கள் அதிகாரவர்க்கத்தின் நேரடி அடியாட்கள் மட்டுமல்ல சமூகத்தின் எதிரிகள்.ஐரோப்பாவில் மைய அரசியலின் முன்னோடியாகக் கருதப்படும் ரொனி பிளேயர் இன்று பிரித்தானியாவில் அதிகம் வெறுக்கப்படும் அரசியல்வாதிகளில் முதலிடத்திலிருக்கிறார்.

spacer.png

போலிஸ் வன்முறையாக மாறிய தீயணைப்புப் படையின் போராட்டம்

மக்ரோன் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பிரான்ஸ் போராட்ட களமாகவே காணப்படுகிறது. உயர் கல்வியைத் தனியார் மயப்படுத்தலுக்கு எதிரான போராட்டம் பிரான்சில் நடைபெற்ற அண்மைய படுகொலையின் சற்று முன்பதாக நடந்து முடிந்தது. அரச துறைகளில் ஆள் குறைப்பிற்கும் ஊதியக் குறைப்பிற்கும் எதிரான போராட்டம் இல் நடைபெற்ற சில தினங்களுக்கு உள்ளாகவே பிரான்ஸ் முழுவதும் பல்வேறு போராட்டங்களை தொழிற்சங்கங்கள் நடத்தின. இதன் தொகுப்பாக 26 May 2018 அன்று நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட போராட்டத்தின் மீது பிரஞ்சு அரசு தாக்குதல் நடத்தி, பரிஸ் நகரம் முழுவதும் போராட்டக் காரர்களைக் கைது செய்தது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட மஞ்சள் சட்டைப் போராட்டம் மக்ரோன் அரசால் கோரமாக ஒடுக்கப்பட்டு, போராட்ட அமைப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். கொரோனா தொற்று ஆரம்பித்த ஜனவரி . 2020 இறுதியில் நடைபெற்ற தீயணைப்புப் படையின் போராட்டம், பிரஞ்சு போலிசின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு உட்பட்டதால் வன்முறையில் முடிவடைந்தது.
இன்று..

இன்று மக்ரோனின் பாசிசக் கருத்துக்களுக்கு ஆதரவாக ஒரு பகுதி மக்கள் தம்மைத் தகவமைத்துக் கொண்டுள்ளனர். அப்பாவி இஸ்லாமிய மக்கள் மீது மக்ரோன் அரசு நடத்தும் யுத்தம் அருவருப்பானது. மருத்துவ மனைகளில் முஸ்லீம் பெண்கள் ஆண் மருத்துவர்களை நிராகரித்தால் அவர்களுக்கு 15 வருடம் வரையிலான சிறைத் தண்டனையும், 75 ஆயிரம் யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படும் என மக்ரோனின் உள்துறை அமைச்சர் கூறுகிறார். பிரான்சிலிருக்கும் மசூதிகளை அரசு கண்காணிக்கும் எனவும் அவற்றிற்கான நிதி உதவிகளை அரசு கட்டுப்படுத்தும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

La Voix du Nord என்ற செய்தி இதழிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தீவிர இஸ்லாமிற்கு எதிரான போராட்டத்தை தாம் ஆரம்பித்துவிட்டதாகக் கூறுகிறார்.
பிரான்சின் மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் மக்ரோனின் நிறவாதத்தை நோக்கி மடை மாற்றப்பட்டுவிட்டது. இன்று 04/11/2020 பல்கலைக் கழக மாணவர்கள் ஆங்காங்கு போராட்டங்களை நடத்தினாலும், மக்ரோனின் நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப் படுத்த அண்மையில் நடைபெற்ற தாக்குதல்கள் துணை சென்றுள்ளன என்பதே அடிப்படை உண்மை. இன்று வரைக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதம், ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களுக்கே துணை சென்றுள்ளது. இவ்வாறான படுகொலைகளை ஆளும் அரசுகளே ஒழுங்கு செய்கின்றனவா என்ற சந்தேகங்களும் மக்கள் மத்தியில் எழுகின்றன. ஐரோப்பாவை, சமூக நலத் திட்டங்களுக்கு எதிரான நாடாக மாற்றும் ஒழுங்கு விதிகளுக்கு பிரான்ஸ் இன்று மையப் புள்ளியாகச் செயற்படுகிறது. இதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் துணை செல்கிறது.

-சபா நவலன்

 

http://inioru.com/whats-behind-the-islam-fundamentalist-attack-in-france/

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகப்பாரிய சிக்கல்

இந்த அடிப்படை சந்தேகங்களும் மத ரீதியான உக்கிரத்தன்மையும் மேலும் மேலும் பிளவுகளையும் பிரிவினைகளையும் வளர்க்கப்போகின்றன.

அதே நேரம் பிரெஞ்சு மக்களின் அதிலும் காவல்த்துறையின்  சில  பாரபட்சமான பார்வைகளை இங்கே  வாழும் அனைத்து  தரப்பு மக்களும்  முக்கியமாக அடுத்த தலைமுறையினரும்  ஏற்றுக்கொள்கின்றனர்.

அண்மையில் இது  பற்றிய பேச்சு  என் வீட்டில்  வந்தபோது

தானும் தன்னுடன்  வேலை செய்யும் அராபிய (கறுப்பு . வெள்ளை)  நண்பர்களும்

ஒரே தகுதியான வேலைகளை  செய்த போதும்

ஒரே  மாதிரியான உடை நடைகளை கொண்டிருந்தபோதும்

வீதியில்  அவர்களை மட்டும் குறிவைத்து அடிக்கடி சோதனை  என்ற பெயரில் மடக்கப்பட்டு

அதிக நேரம் வீணாக காக்க வைக்கப்பட்ட மிகவும் அவமானப்படுத்தப்படுவதாக  எனது  மகன்  சொன்னான்

தனக்கு இவற்றில்  உடன்பாடில்லாதபோதும்

அவர்களின் செயல்களை இந்த அவமானப்படுத்தலிருந்தும் பார்க்கணும் என்றான்

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.