Jump to content

சுகுணாவை கேட்காதே ரிஷபன்


Recommended Posts

பதியப்பட்டது

சுகுணாவை கேட்காதே

ரிஷபன்

சுகுணாவைப் பார்க்கவே தயங்கினேன். என்ன பதில் சொல்லப் போகிறேன்

"ஹலோ ரவி.." என்றாள்

 "ஹலோ.." என்று முனகினேன்

"என்ன.. உடம்பு சரியில்லையா"

"நத்திங். சும்மா"

அவள் போய் விட்டாள் பக்கத்து இருக்கை முகுந்தன் என்னைப் பார்த்து கண்ணடித்தான்

"என்னடா அமுக்கமா இருந்துகிட்டு அவ
வலையிலே மாட்டிகிட்டியா..."

போச்சு இனி அலுவலகம் முழுக்க இவனே செய்தியைப் பரப்பி விடுவான். நான் பதில் சொல்லத் தயங்குவது அவனுக்கு வேறு யூகங்களைக் கொடுத்திருக்கும்

உண்மையில் என்ன நடந்தது என்று எனக்குத் தானே தெரியும்

சுகுணாவைப் பற்றி எங்கள் மத்தியில் பரவலாய் ஒரு பேச்சு உண்டு. யாராவது மாட்டினால் விடமாட்டாள். சுத்தமாய் 'மொட்டை'யடித்து விடுவாள் என்று. தங்கள் கைப்பணம் முழுவதும் அவளால் தொலைத்தவர்கள் என்று ஒரு பட்டியலே உண்டு .

போன வாரம் எனக்கு ஒரு நெருக்கடி. அவசரமாய்ப் பணம் தேவைப்பட்டது. யாரிடம் கேட்பது என்று அல்லாடி கேட்டவர்கள் கை விரித்ததால் தடுமாறி நின்ற நேரம்

"என்ன ஸார்.. ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க.." என்றாள் அவளாகவே.

எப்படிச் சொல்வது.. தயங்கினேன்

அவள் முகம் சிணுங்கியது

"பரவாயில்லை.. என்னிடம் சொல்ல விருப்பம் இல்லை என்றால் வேண்டாம்" என்றாள். 

என்னையும் மீறி சொல்லி விட்டேன் 

"எங்கப்பாவுக்கு குதிகால் நரம்புல... வலி.. எலும்பு துருத்தி கிட்டு இருக்காம்... ஆபரேசன் செய்யணுமாம்...லோன் போட்டேன்.. ஹெட் ஆபீஸ்லேர்ந்து இன்னும் சாங்ஷன் ஆகி வரலே... நாளைக்கு ஆபரேசன்.. பணத்தைக் கட்டணும் '

"அவ்வளவு தானே. அரை மணி டயம் கொடுங்க "

போய் விட்டாள். இவளால் என்ன செய்ய முடியும், எனக்குப் புரியவில்லை

நான்கு மணி இருக்கும். குமார் சிரித்துக் கொண்டே ஒரு பணக்கட்டை சுகுணாவிடம் கொண்டு வந்து கொடுத்தான். அவள் 'நன்றி சொல்லி வாங்கிக் கொள்வது தெரிந்தது

பாவி இதே குமார் நான் போய்க் கேட்ட போது கூசாமல் 'இல்லை யென்று பொய் சொல்லி விட்டான் சுகுணா கேட்டவுடன் கொடுக்கிறான். இதுதான் உலகம்

பொருமலுடன் அமர்ந்திருந்தேன். பத்து நிமிடம் கழித்து என்னிடம் வந்தாள் 

"இந்தாங்க.. ஹெட் ஆபீஸ்லேர்ந்து பணம் வந்ததும் எனக்குக் கொடுங்க." என்றாள்

வாங்கும்போது கை நடுங்கியது. எனக்கு உதவ வேண்டும் என்று என்ன கட்டாயம்... ஒருவேளை என்னையும் தன் வலையில் சிக்க வைக்க நிளைக்கிறாளா...

திருப்பி கொடுத்து விடலாமா... என்று கூட யோசித்தேன். என் நெருக்கடி அப்படிச் செய்ய விடவில்லை . ஹெட் ஆபீசில் என்ன பிரச்சனையோ.... எதிர் பார்த்தபடி பதில் வரவில்லை . 'பண்ட்ஸ் ' பிராப்ளம். ஸ்டாப் ஆல் அட்வான்சஸ் என்று தகவல் வந்ததால் என் கடன் மனுவும் நிறுத்தப்பட்டது

சுகுணாவிற்கு என்ன பதில் சொல்வது.... எப்படித் திருப்பி தரப் போகிறேன்....

அவளைப் பார்க்கவே தயங்கினேன். குமார் என்னிடம் வந்தான்

'என்னடா.. ஏதோ கேள்விப்பட்டேன் நிஜமா'

"அதெல்லாம் ஒண்ணுமில்லே"

"எவ்வளவு ரூபா... சும்மா சொல்லு"

"இல்லைடா."

"பொய் சொல்லாதே... சொல்லு.. எவ்வளவு"

"ஐயாயிரம் ".  

'அய்யோ.. அவ்வளவா"

'ஆமா.. ஆனா நான் கொடுக்கலே.... அவங்க கொடுத்தாங்க. ஏன்டா பாவி... நான் கேட்டப்போ 'இல்லை'ன்னு பொய் சொன்னே. அவங்க கேட்ட உடனே கொடுத்துட்டு வரீங்களா இப்ப எனக்கு அட்வைஸ் பண்ண"

எரிச்சலாய் இரைந்தேன்.

குமார் முகத்தில் சுருக்கங்கள்

"இந்த பணம் உனக்காகவா"

"ஆமா.. ஏன் அதிர்ச்சியா இருக்கா". 

"யெஸ்.” தலையாட்டினான்

"தன்னோட செயினை என்கிட்டே கொடுத்து அடகு வச்சு பணம் வாங்கிட்டு வரச் சொன்னாங்க. அதான்.. நான் கொண்டு வந்து கொடுத்தேன்"

"என்னது.." என்றேன் திகைப்புடன் 

குமார் ஒரு வித தடுமாற்றத்துடன் போய்விட்டான். எனக்கு இருப்பு கொள்ளவில்லை.

சுகுணாவின் இருக்கையருகில் போனேன். 

"என்னங்க.. உங்க செயினை அடமானம் வச்சு " புலம்பலாய்க் கேட்டேன்

"ஒரே ஆபீஸ்ல... இத்தனை வருஷமா வேலை பார்க்கிறோம். நீங்க நல்லவர் வேற பழக்கம் கிடையாதுன்னு தெரியும்.. நிஜமாவே ஒரு பிரச்சனைக்குத் தான் தேவைன்னு கேட்கறீங்க.... உதவறதுல என்ன தப்புன்னு தோணிச்சு.. செஞ்சேன்.." என்றாள் மென்மையாக 

இதே பெண்ணைப் பற்றி நாங்கள் வம்பு
பேசி களித்திருக்கிறோம். அவளுக்கு வயிற்று வலி என்று ஹாஸ்பிடலில் இருந்தபோது அபார்ஷன் என்று
நகைத்தோம். வீட்டில் போய்ப் பார்க்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை 

"நன்றி..சிஸ்டர்” என்றேன் கண்ணில் நீருடன்

 "சிஸ்டருக்கு நன்றியா" என்றாள் அப்போதும் மாறாமல்  சிநேக சிரிப்புடன்

தினபூமி கதைபூமி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிஸ்ட்டருக்கு எல்லாம் நன்றி சொல்லக்கூடாது......நல்ல குட்டிக்கதை .....நல்ல கதைகளை தேடி எடுத்து இணைக்கிண்றீர்கள்....நன்றி அபராஜிதன்.....!  👍

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.