Jump to content

தொற்று நோயில் இருந்து பொருளாதாரங்கள் மீட்சிபெற சீன ஜனாதிபதி கூறும் யோசனைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொற்று நோயில் இருந்து பொருளாதாரங்கள் மீட்சிபெற சீன ஜனாதிபதி கூறும் யோசனைகள்

 

china-president.jpgபெய்ஜிங், ( சின்ஹுவா) அதிகரித்துவரும் ஒருதலைப்பட்சவாதமும் ( Unilateralism) வர்த்தக தற்காப்புக்கொள்கையும் ( Protectionism) உலக கைத்தொழில் மற்றும் விநியோக சங்கிலித்தொடரை ( (Global industrial and supply chains)சீர்குலைக்கின்றன என்பதால் கொவிட் –19 தொற்றுநோயில் இருந்து உலக பொருளாதாரங்கள் மீட்சிபெறவேணடுமானால், அந்த இரு அணுகுமுறைகளும் இல்லாமல் போகவேண்டும்.

இவ்வாறு அண்மையில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஜி — 20 நாடுகளின் இணையவழி உச்சிமகாநாட்டுக்கு பெய்ஜிங்கில் இருந்து ஆற்றிய உரையில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கூறினார்.

உலக பொருளாதாரங்களை மீட்டெடுக்கும் இலக்கை நோக்கி முன்னெடுக்கப்படவேண்டிய நான்கு செயன்முறைகளை அவர் முன்வைத்தார் ;

(1) கொவிட் – 19 க்கு எதிராக உலக தடுப்புச்சுவரை நிர்மாணித்தல்

” நாம் முதலில் எமது நாட்டில் நோயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டவரவேண்டும். பிறகு அதன் அடிப்படையில் உதவி தேவைப்படுகின்ற நாடுகளுடன் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தவேண்டும். ஜி — 20 அமைப்பின் பல நாடுகள் தடுப்புமருந்து ஆராய்ச்சியிலும் மேம்படுத்தலிலும் தயாரிப்பிலும் முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றன. வளங்களைத் திரட்டி ஒன்றுகூட்டுவதிலும் தடுப்பு மருந்து நியாயமான வழியில் பயனுறுதியுடைய முறையில் விநியோகிக்கப்படுவதிலும் உலக சுகாதார நிறுவனத்துக்கு ஆதரவளிக்க எமது செயற்பாடுகளை துரிதப்படுத்தப்வேண்டும்.

கொவிட் — 19 தடுப்பு மருந்துகள் தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு சீனா சுறுசுறுப்பான ஆதரவை வழங்குகிறது. அத்துடன் அதில் பங்கேற்கவும் செய்கிறது.

1-3-4.jpg“கொவக்ஸ் திட்டத்தில் இணைந்திருக்கும் நாம் தடுப்பு மருந்து ஆராய்ச்சி, தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஏனைய நாடுகளுடன் ஒத்துழைப்பதற்கும் தயாராயிருக்கிறோம். (கொவக்ஸ் திட்டம்( COVAX facility) என்பது உயர்ந்த வருமானமுடைய 64 நாடுகள் இணைந்து கொவிட் –19 தடுப்பு மருந்தை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிப்பதற்கு முன்னெடுத்திருக்கும் ஒரு உலகளாவிய ஒரு செயன்முறையாகும்). ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு ஆதரவு அளித்து உதவுவதில் எமது கடப்பாட்டை நாம் மதித்துச் செயற்படுவோம்.உலகம் பூராவும் உள்ள மக்களுக்கு கட்டுப்படியாகக்முறையில் எளிதாக தடுப்பு மருந்து கிடைக்கச்செய்வதற்காக நாம் பாடுபடுவோம்”.

(2) விநியோக சங்கிலியை பேணுதல்

வைரஸை கட்டுப்படுத்துகின்ற அதேவளை, உலகளாவிய கைத்தொழில் மற்றும் விநியோக சங்கிலிகள் பாதுகாப்பாவும் சிக்கல்கள் இல்லாமலும் செயற்படுவதை நாம் உறுதிசெய்துகொள்ளவேண்டும். வரிகளையும் தடைகளையும் குறைத்து முக்கியமான மருத்துவ விநியோக வர்த்தகத்தை தாராளமயமாக்குவதற்கான வழிவகைகளை நாம் ஆராயவேண்டும். கொள்கைகளையும் தராதரங்கள் மற்றும் நியமங்களையும் மேலும் ஒருங்கிசைவானவையாக்கி அதிகாரிகளினதும் பணியாளர்களினதும் சீரான இயக்கத்துக்கு வசதியாக “துரித செல்வழிகளை” (Fast tracks) நாம் ஏற்படுத்தவேண்டியது அவசியமாகும். அதிகாரிகளினதும் பணியாளர்களினதும் இயக்கத்தை வசதிப்படுத்தவதற்கு நிறுவனமயப்பட்ட ஒத்துழைப்பையும் உலகளாவிய ஒத்துழைப்பு வலையமைப்பையும் கட்டியெழுப்பும் செயன்முறைகளில் ஜி – 20 நாடுகளுக்கு நாம் ஒத்துழைப்போம்.

(3) எண்ணிம பொருளாதாரத்தை பயன்படுத்தல்

கொவிட் — 19 புதிய தொழில்நுட்பங்களின் விரைவான வளர்ச்சியையும் புதிய வர்த்தக வடிவங்கள், 5ஜி போன்ற புதிய தளங்கள், செயற்கை விவேகம் (Artificial intelligenceமற்றும் நேர்த்தியான நகரங்களையும் (Smart cities) தீவிரப்படுத்தியிருப்பதுடன் இணையவழி பொருள்கொள்வனவு, இணையவழிக் கல்வி (Online education), தொலைபசி மூல மருத்துவம் (Tele medicine) போன்ற நேரடித் தொடர்பில்லாத பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தியிருக்கிறது.

மாற்றத்துக்கு எங்களை பழக்கப்படுத்திக்கொண்டு நாம் நெருக்கடிகளை வாய்ப்புக்களாக மாற்றவேண்டும். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் எண்களைப் பயன்படுத்தி தகவல்களையும் தரவுகளையும் புலப்படுத்துகின்ற தொழில்நுட்ப (எண்ணிம தொழில் நுட்பம் – Digital transformation) மாறுதல் ஆகியவற்றின் ஊடாக கட்டமைப்புச் சீர்திருத்தங்களை ஆழமாக்கவும் வளர்ச்சி ஊக்கிகளை வளர்த்துக்கொள்ளவும் வேண்டும்.எண்ணிம பொருளாதார அபிவிருத்தியைச் (Digital economy) சாத்தியமாக்கக்கூடியதும் தரவுப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் எண்ணிம உட்கட்டமைபபுக்களை பலப்படுத்தவும் சகல நாடுகளையும் சேர்ந்த உயர்தொழில் நுட்ப கம்பனிகளின் செயற்களத்தை சமப்படுத்தவும் எம்மால் முடியும்.

அதேவேளை, எண்ணிம பொருளாதாரத்தினால் தொழில்வாய்ப்புக்கு, எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்கள் குழுக்களுக்கு, தோற்றுவிக்கப்பட்டிருக்கும் சவால்களை கையாளவேண்டிய தேவை இருக்கிறது. எண்ணிம பிளவை (Digital divide ) நிரவவும் வேண்டும்.

(4)கடன் மீளச்செலுத்துதல் இடைநிறுத்தம்

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிக்கவேண்டும்;  அந்த நாடுகள் தொற்றுநோயின் விளைவான இடர்பாடுகளில் இருந்து விடுபடுவதற்கு நாம் உதவவேண்டும். சீனாவுக்கு பல சிக்கல்கள் இருக்கின்ற போதிலும், அது கடன் மீளச்செலுத்தல் இடைநிறுத்த திட்டத்தை (Debt Service Suspension Initiative — DSSI) முழுமையாக நடைமுறைப்படுத்ததுகிறது; மற்றைய நாடுகள் சீனாவுக்கு திருப்பிச்செலுத்தவேண்டிய கடனில் 130 கோடி டொலர்களை மீளப்பெறுவதை ஒத்திவைத்திருக்கிறது. கடன் மீளச்செலுத்துதல் இடைநிறுத்த திட்டத்தை நீடிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை சீனா ஆதரிக்கிறது.அத்துடன் அதன் முழுமையான நடைமுறைப்படுத்தலுக்காக மற்றைய தரப்புகளுடன் தொடர்ந்து ஒத்துழைத்துச் செயற்படும்.

அதேவேளை, குறிப்பிட்ட சிக்கல்களை எதிர்நோக்குகின்ற நாடுகளிடமிருந்து கடனை மீளப்பெறுவதை இடைநிறுத்தல் மட்டத்தை அதிகரிக்கப்போகும் சீனா தன்னார்வ அடிப்படையிலும் சந்தை கோட்பாடுகளுக்கு இணங்கவும் புதிய நிதிஆதரவை இந்த நாடுகளுக்கு வழங்குமாறு நிதிநிறுவனங்களை ஊக்குவிக்கும்.

தொற்றுநோயின் இருளில் இருந்து பெண்கள் வெளியே வந்து தங்களது விசேட தேவைகளைக் கவனிக்கவும் பெய்ஜிங் பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான தளத்தை (Beijing Declaration & Platform for Action) நடைமுறைப்படுத்த நாம் அவர்களுக்கு உதவவேண்டும்.கொவிட்டுக்கு பின்னரான யுகத்தில் பெண்களின் மேம்பாட்டுக்கு பங்களிப்புச் செய்வதற்காக 2025 ஆம் ஆண்டில் ‘பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல்’ (Meeting on Gender Equality & Women’s Empowerment) தொடர்பான இன்னொரு உலகத்தலைவர்கள் மகாநாட்டைக் கூட்டவேண்டும் என்று சீனா யோசனை முன்வைத்திருக்கிறது.

உணவுப் பாதுகாப்பு சவாலை (Food security) பாரதூரமானதாக எடுக்கவேண்டியதும் அடுத்த வருடம் ஐக்கிய நாடுகள் நடத்தவிருக்கும் உணவு முறைமைகள் உச்சி மகாநாட்டுக்கு (Food Systems Summit) ஆதரவளிப்பதும் முக்கியமானதாகும். இது விடயத்தில், நாளடைவில் உணவு இழப்பு மற்றும் விரயம் தொடர்பில் சரவதேச மகாநாட்டை (International conference on food loss and waste) நடத்தவேண்டும் என்று சீனா யோசனை முன்வைப்பதுடன் ஜி — 20 நாடுகளும் பொருத்தமான சர்வதேச நிறுவனங்களும் இதில் தீவிர பங்கேற்கவேண்டும் என்று அழைக்கிறது.

பல்தரப்பு ஒழுங்குமுறையை ஆதரித்தல்

கொவிட்டின் பாரதூரமான சவால்கள் உலக ஆட்சிமுறையின் (Global governance) குறைபாடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறது.கொவிட்டுக்கு பின்ரான சர்வதேச ஒழுங்குமுறையிலும்) International order) உலக ஆட்சிமுறையிலும் ஜி – 20 க்கான எதிர்கால வகிபாகம் ஆகியவை குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பான அக்கறை கொண்டிருக்கிறது. எனது அபிப்பிராயத்தில் get கலந்தாலோசனைகள், கூட்டுப் பங்களிப்பு மற்றும் பொதவான பயன்கள் கோட்பாடு எமது முன்னோக்கிய பயணத்தை வழிநடத்தவேண்டும்.பல்தரப்பு ஒழுங்கு முறையை நாம் உறுதியாக கடைப்பிடித்து (Openness) திறந்தபோக்கு, சகலதரப்புகளையும் அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையையும் பின்பற்றவேண்டும். அத்துடன் பரஸ்பரம் பயன்தருகின்ற ஒத்துழைப்பை மேம்படுத்தி காலத்தின் போக்கிற்கு ஈடுகொடுத்து செயற்டவேண்டும்.இந்த செய்முறைகளில் ஜி – 20 பெரியதொரு பங்கையாற்ற கடமைப்ட்டிருக்கிறது.

ஐ.நா.வை மையப்படுத்திய சர்வதேச ஒழுங்கு

சர்வதேச விவகாரங்களை ஒத்துழைப்பின் ஊடாக கையாளுவதற்கான மைய நிறுவனமே ஐக்கிய நாடுகள். அதன் அதிகாரத்துக்கும் மதிப்புக்கும் உறுதியான ஆதரவை சகல நாடுகளும் வழங்கவேண்டும்.ஐ.நா.வின் சாசனத்தின் நோக்கங்களையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, சர்வதேச சடடத்தை ஆதாரமாக்கொண்ட சர்வதேச ஒழுங்கை உறுதியாகக் கடைப்பிடிக்கவேண்டும். உலகளாவிய கருத்தொருமிப்பை பெருமளவுக்கு பயனுறுதியுடைய முறையில் கட்டியெழுப்புவதிலும் உலகளாவிய வளங்களை ஒன்றுதிட்டுவதிலும் உலகளாவிய செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதிலும் ஐ.நா.வுக்கு நாம் ஆதரவளிப்போம்.உலக அமைதி, சமாதானத்தை யும் அபிவிருத்தியையும் மேம்படுத்துவதில் ஐ.நா.வின் மிகப்பெரிய வகிபாகத்துக்கு நாம் ஆதரவளிக்கவேண்டும்.

அனைத்தையும் உள்ளடக்கிய உலகமயமாக்கம்

இரண்டாவதாக, பொருளாதார உலகமயமாக்கலுக்கான ஆட்சிமுறைக் கட்டமைப்பை நாம் மேம்படுத்தவேண்டியது அவசியமாகும்.சட்ட முறைப்படியான– ஔிவுமறைவற்றதும் பாரபட்சமற்றதுதுமான பல்தரப்பு வாணிப முறைமையை (திறந்ததாகவும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருக்கவேண்டும்) நாம் உறுதியாகப் பேணிப்பாதுகாக்கவேண்டும். சுதந்திர வர்த்தகத்தை நாம் மேம்படுத்தி, இருதலைப்பட்சவாதத்தையும் வர்த்தக தற்காப்புக் கொள்கையையும் எதிர்த்து, நியாயமான போட்டியை உறுதியாக ஆதரித்து நாம் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்தி உரிமைகளை மேம்படுத்தவேண்டும்.

சர்வதேச நிதிமுறைமையின் சீர்திருத்தங்களை நாம் தொடரவேண்டும். பொருளாதார உலகமயமாக்கலுக்கு ஏற்படுகின்ற சவால்களை நேருக்குநேர் முகங்கொடுத்து கையாளவேண்டும்; உலகமயமாக்கலை பெருமளவுக்கு திறந்ததாகவும் அனைத்தையும் உள்ளடக்குவதாகவும் சமநிலையானதும் சகலருக்கும் பயன்தரத்தக்கதாகவும் ஆக்கவண்டும்.

சி ஜின்பிங் தனது உரையை சீனக்கவிதையொன்றை மேற்கோள் காட்டி நிறைவு செய்தார்; “மாண்டுபோன கப்பலொன்றைக் கடந்து ஆயிரம்கப்பல்கள் பயணம் செய்யும். ஒரு மரம் பட்டுப்போனால, பத்தாயிரம் மரங்கள் தளிர்க்கும்”.

“கொவிட் – 19 முடிவுக்கு வரும்போது எமத உலகம் தொற்றுநோயில் இருந்து விடுபட்டு மேலும் பலம்பொருந்தியதாக ளெிக்கிளம்பும் என்று நான் நம்பகிறேன். அந்த உணர்வின் அடிப்படையில்,எமது மக்களுக்கு சிறப்பான ஒரு வாழ்வைக் கொடுப்பதற்கும் மனித குலத்துக்கு பொதுவான எதிர்காலமொன்றுடனான சமுதாயமொ்றை கட்டியெழுபப்பவும் கரம் கோர்ப்போம் என்று சீன ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

https://thinakkural.lk/article/93539

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
    • ஹன்ரர் பைடனுக்கு சீனியர் பைடன் மன்னிப்புக் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் சிறை போகாமல் பாதுகாக்க பைடன் குடும்பத்திற்கு ஏனைய வழிகள் இருக்கின்றன. செனட்டர் மெனண்டெசுக்கு என்ன நடக்குமெனச் சொல்லக் கடினமாக இருக்கிறது. வன்முறைக் குற்றங்கள் அல்லாமல், ஊழல் மோசடிக் குற்றங்களால் தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்களுக்கு இரு கட்சிகளின் ஜனாதிபதிகளும் முன்னர் மன்னிப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால், மெனெண்டஸ் தன் குற்றங்களுக்கு மன வருத்தம் கூட தெரிவிக்காமல் சமாளிக்கும் ஆளாக இருப்பது, மன்னிப்புப் பெற உதவாது.
    • முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேர்தலில் தோற்ற பின்னர் பெருமளவு சமையல்காரர்கள் தனக்கு தேவை என வேண்டுகோள் விடுத்தவேளை அவர் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றாரோ என நினைத்தேன் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  நாட்டின் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் சொகுசு வீடுகள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் என்பன அதிகளவில் காணப்படுகின்றன. நாம் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அதனை தான் தேசிய மக்கள் சக்தி செய்யவுள்ளது. அரசியல் என்பது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு கீழ்படிய வேண்டும். அதற்கு மாறாக சட்டத்தை மீறி செயற்பட கூடாது. அப்படி ஒரு நாட்டை தான் தேசிய மக்கள் சக்தி உருவாக்கவுள்ளது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198120
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.