Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓதியமலை படுகொலை - 36ஆவது நினைவேந்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன்

1984ஆம் ஆண்டு ஒதியமலையில் இலங்கை இராணுவத்தால் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்ட 32 பேரின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு,  அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சனசமூக நிலைய வளாகத்தில் இன்று (02) நடைபெற்றது.

உயிரிழந்தவர்களை நினைத்து, அவர்களது உறவினர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, ஒதியமலை பிள்ளையார் கோவிலில் ஆத்மா சாந்தி பூஜைகளும் நடைபெற்றன. 

இந்த நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் இ.சத்தியசீலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Tamilmirror Online || 36ஆவது நினைவேந்தல்

  • கருத்துக்கள உறவுகள்

செட்டிக்குளம் படுகொலை

Cheddikulam-Massacre-1984.12.02.jpg

செட்டிக்குளம் படுகொலை – 02.12.1984

வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக வவுனியா-மன்னார் வீதியில் வவுனியா நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் செட்டிக்குளம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் விவசாயிகள், வர்த்தகர்கள், கூலித்தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் வாழ்கின்றார்கள்.

1984.12.02 அன்று இராணுவத்தினரால் செட்டிகுளப் பகுதி எங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இராணுவத்தினர் செட்டிக்குளம் கிராமத்தினை காலை 5.30 மணியளவில் சுற்றிவளைக்கத் தொடங்கினார்கள். கிராம மக்களில் கூடுதலானவர்கள் உறக்கத்தில் இருந்தனர். செட்டிகுள கிராமத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் கிராம மக்களில் ஆண்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். இவர்களில் ஐம்பத்திரண்டு பேரைச் செட்டிகுளச் சந்தியில் வைத்து இராணுவ வாகனங்களில் ஏற்றி மதவாச்சிக்குக் கொண்டு சென்றனர்.

இதன்பின் இவர்கள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. ஆனாலும் இவர்கள் மதவாச்சியிலுள்ள ஓர் சிங்களக் கிராமத்தில் வைத்து இராணுவத்தினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனரென்றும் குற்றுயிராக இருந்தவர்கள் மீது டோசரை ஏற்றிக் கொன்றனரென்றும் செட்டக்குள மக்கள் கூறுகின்றனர்.

செட்டிக்குளம் மகா வித்தியாலய ஆசிரியரான தி.யேசுதாசன் சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில்…

“ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து விட்டு வந்த இராணுவத்தினர் சுற்றிவளைத்து ஐம்பத்திரண்டு ஆண்களைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தில் எனது தம்பியும் எனது அக்காவின் கணவரும் உயிரிழந்தனர். அத்துடன் எனது வீட்டில் வேலை செய்த இருவரும் கைது செய்யப்பட்டனர், சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்பின்பு அவ்வூர் மக்கள் வன்னி, மடு, இந்தியா போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.”

02.12.1984 அன்று செட்டிக்குளப் படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் விபரம்:

01. சூசைப்பிள்ளை கிறிஸ்துராசா (வயது 32 – கமம்)
02. இராசையா.
03. இராமசாமி பொன்னுத்துரை (வயது 45 – கமம்)
04. ஊர்கனசாமி (வயது 23 – கமம்)
05. கந்தையா
06. கந்தையா கெங்காரட்ணம்
07. குமார் மோகன்
08. குமார் வரதராசா (வயது 19 – வியாபாரம்)
09. குருகுலசாமி (வயது 23 – கமம்)
10. குலசேகரம்பிள்ளை யூஜின் (வயது 18 – கமம்)
11. பாண்டியன் பெரியரசு
12. பி.அருள்பிரகாசம் (வயது 30 – கமம்)
13. பிலிப்பையா அருள்பிரகாசம் (வயது 38 – கமம்)
14. பரமலிங்கம் பரமநாதன்
15. ஐயம்பிள்ளை பரமநாதன் (வயது 33 – விவசாயம்)
16. துரையப்பா நாதன்
17. முத்துசாமி கோணார் கோபால்
18. முருகேசு சங்கரப்பிள்ளை (வயது 38 – தொழிலாளி)
19. அப்பாப்பிள்ளை வெற்றிவேற்பிள்ளை (கமம்)
20. அல்பின் றொபின்சன் (வயது 26 – கமம்)
21. அல்வின் அந்தோனிஸ்ரி வின்சன (வயது 24 – தச்சுத் தொழில்)
22. அல்வின் அலைக்சாண்டர் (வயது 21 – தச்சுத் தொழில்)
23. அல்வின் அன்ரன்
24. பொன்னுத்துரை கிறிஸ்துராசா
25. பொன்னுத்துரை தனநாயகம்
26. டொண்பொஸ்கோ றொமன்
27. சௌந்தரராசன் புஸ்பராசன் (வயது 27 – மரவேலை)
28. செல்லையா யூட்
29. செல்லையா கேதீஸ்வரன் (வயது 28 – கமம்)
30. செல்லர் மூர்த்தி
31. செல்லர் மகேந்திரன்
32. வேதநாயகம் செபமாலை(வயது 31 – கமம்)
33. வேலுப்பிள்ளை சிவபாலசிங்கம் (வயது 35 – விவசாயம்)
34. சந்தணப்பிள்ளை இருதையராசா (வயது 25 – கமம்)
35. சின்னக்குட்டி கந்தசாமி
36. சிவகணேசன்
37. சங்கரப்பிள்ளை பாலேந்திரன் (வயது 29 – கமம்)
38. வடிவேல் அசோக்குமார்
39. விநாயகமூர்த்தி யோகநாதன் (வயது 24 – கமம்)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

https://thesakkatru.com/cheddikulam-massacre-1984/

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தின் நடவடிக்கை தமிழ், சிங்கள மக்கள் ஒரு நாட்டுக்குள் வாழ முடியாது என்பதை காட்டுகின்றது

D
1-14.jpg
 48 Views
‘தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது என்ற செய்தியை தான் இந்த அரசாங்கம் திரும்ப திரும்ப தமது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகின்றது” என சிவசக்தி ஆனந்தன்  தெரிவித்துள்ளார்.
 

சேமமடு,செட்டிகுளம்,ஒதியமலை படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர்  சிவசக்தி ஆனந்தன்  ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1984ம் ஆண்டு இலங்கை இராணுவம் சேமமடு,செட்டிகுளம்,ஒதியமலை ஆகிய மூன்று கிராமங்களிற்குள் அதிகாலையில் புகுந்து  அப்பாவி தமிழ் பொது மக்களை கைது செய்தது மட்டுமன்றி சுட்டும் ,வெட்டியும் கொலை வெறித் தாக்குதலை நடாத்தியிருந்தனர்.

சேமமடு பகுதியில் 52பேரும்  ஒதியமலை பகுதியில் 32பேரும்   செட்டிகுளம் பகுதியில் 22பேரும்  மொத்தமாக 106 பேர் படுகொலை செய்யப்பட்டனர் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களும் வறிய விவசாய குடும்பங்களை சேர்ந்த குடும்பத் தலைவர்கள் மற்றும் இளைஞர்களுமாவர்.

FB_IMG_1606921165306.jpg

இப்படுகொலை நினைவு நாள் ஆண்டு தோறும் முன்னெடுக்கப்பட்டு உயிர் நீத்த் ஆன்மாக்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் உறவினர்களும், அப்பிரதேச வாசிகளும் ஈடுபட்டே வந்தனர்.

இந்நிலையில் இத் தாக்குதலில் படுகொலை  செய்யப்பட்ட அந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் நாள் இன்றாகும்(02-12-2020) வழமைபோன்று  உயிர் நீத்த உறவுகளின் நினைவாக வருடாந்த நினைவேந்தலை செய்வதற்கான ஏற்பாடுகள் அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.எனினும்,செட்டிகுளம் பகுதியில் பொலிஸார் திடீரென பிரசன்னமாகி நினைவேந்தலுக்கு தடை விதித்ததோடு, உயிர்நீத்த உறவுகளை  நினைவேந்த அனுமதிக்க முடியாது என்று எச்சரித்துச் சென்றிருக்கின்றார்கள்.

FB_IMG_1606921168815.jpg

கடந்தவாரம் உயிர் நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலே நீதி மன்றத்தினுடாக பொலிஸார் தடைத்தரவு பெற்றிருந்தனர். இதே போல் இக் கிராம மக்களும் உறவுகளும் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு தங்களின் சமய காலாச்சார முறைப்படி செய்ய வேண்டிய கடமைகளை கூட செய்யமுடியாத துர்பார்க்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

 
FB_IMG_1606921177101.jpg
இந்த நாட்டிலே உண்மையான சமாதானம் நல்லிணக்கம் வரவேண்டுமாக இருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கமைவாக உயிர்நீத்தவர்களுக்கான கடமைகளை செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து இவற்றை செய்யாத வரை எந்த காலத்திலும் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது என்ற செய்தியை தான் இந்த அரசாங்கம் திரும்ப திரும்ப தமது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகின்றது” என்றார்.

 

https://www.ilakku.org/இலங்கை-அரசாங்கத்தின்-நடவ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.