Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓகஸ்ட் பருவமழை தொடங்கு முன்னர் குடாநாட்டில் பெரும் சண்டை மூளலாம் "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியாளரிடம் யாழ். தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Jun 16 8:39:45 EEST 2007

ஓகஸ்ட் பருவமழை தொடங்கு முன்னர் குடாநாட்டில் பெரும் சண்டை மூளலாம் "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியாளரிடம் யாழ். தளபதி

ஓகஸ்ட் பருவ மழைக்காலத்துக்கு முன் னர் யாழ்ப்பாணத்தில் பெரும் சண்டை மூளலாம்.

இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு விஜ யம் செய்த "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியா ளரிடம் தெரிவித்திருக்கிறார் யாழ். படை களின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி.

யாழ். குடாநாட்டின் களநிலைமையை நேரில் பார்வையிட்டு நீண்ட செய்திக் கட் டுரை ஒன்றை வரைந்துள்ளார் "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியாளர் சோமினி செங்குப்தா.

யாழ்ப்பாண நிலைவரம் பற்றி அதில் அவர் பின்வருமாறு எழுதுகிறார்.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் இரவுகள் நிசப்தத்தை இழந்துவிட்டன; கரும் நீரே ரிக்கூடாக ஆட்லெறித் தாக்குதல் சத்தங்கள் ஒலித்த வண்ணமுள்ளன. இந்த குடாநாட் டின் தரைப் பாதை கடந்த ஓகஸ்ட் முதல் மூடப்பட்டுவிட்டது. இப்பகுதி பெரும் பாலும் செயலிழந்துவிட்டது.

எனினும் உணவுப் பண்டங்களும், எரி பொருள்களும் ஒருவாறு வந்தடைகின் றன. அதேவேளை, அவற்றை களஞ்சியப் படுத்தி வைக்க, கடைக்காரர்கள் தயங்கு கிறார்கள். எந்தநேரத்திலும் கடைகளைப் பூட்டி விட்டு ஓடவேண்டிய நிலை ஏற்படலா மென்ற அச்சம் அவர்கள் மத்தியில் நிலவு கிறது.

இரவு மணி 7 சூரியன் ஏற்கனவே அஸ்த மித்துவிட்டான். யாழ்ப்பாண வீதிகளில் கட்டாக்காலி நாய்களின் நடமாட்டம். நகர மக்கள் வீடுகளுக்குள் முடங்கிவிட் டார்கள். எட்டு மணிக்கு ஊரடங்குச் சட் டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர், இத்தகைய ஒருநிலைப்பாடு.

ஒழுங்கைகளின் முனைகளில் இரா ணுவ வீரர்களின் பிரசன்னம்.

""எந்நேரத்திலும் எதுவும் சம்பவிக்க லாம்'', ""மக்கள் எதற்கும் அஞ்சியவர்களாக இருக்கிறார்கள்'' என இரவீந்திரன் இராம நாதன் என்பவர் அச்சம் தெரிவித்தார். இவர் ஒரு தையல்காரர்.

அரச கப்பல்களை எதிர்பார்த்து

15,000 மக்கள்

ஏறத்தாழ 15,000 மக்கள் அரச கப்பல் களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந் தார்கள். தலைநகரான கொழும்பிலுள்ள தம் உறவினர்களிடம் சென்றுவிட வேண்டு மென்ற துடிப்பு. அங்கேயாவது நிம்மதிப் பெருமூச்சு விடலாமென்ற நம்பிக்கை.

இதுதான் இன்றைய யாழ்ப்பாணம். இலங்கையின் இன ரீதியான சிவில் யுத் தம் தோற்றுவித்துள்ள நிலைப்பாடு. புதிய புயலைத் தடுப்பதற்கான நடவடிக்கை.

மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, இப் பகுதி இராணுவத் தளபதியாக இருக்கி றார். ஓகஸ்ட் பருவமழைக் காலத்துக்கு முன் னர், யாழ்ப்பாணத்தில் பெரும் சண்டை மூண்டு விடலாமென தாம் எதிர்பார்ப் பதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய யுத்தச் சுவடு, இலங்கை யில் ஏனைய இடங்களில் பதியவில்லை. ஏனெனில் யாழ்ப்பாணத்துக்கு ஏற்பட்டுள்ள பெருந்துன்பம், ஏனைய எந்த ஓர் இடத் திற்கும் நேரவில்லை. இது தாயகத்தின் இரு தயம். இதனை அடைவதற்காகவே புலிகள் போராடுகின்றார்கள்.

இதன்பொருட்டு, ஏறத்தாழ 25 ஆண்டு களாக இராணுவத்தினரும், தீவிரவாதிகளும் சண்டையிட்டு வருகிறார்கள்.

2002ஆம் ஆண்டு, போர்நிறுத்த உடன் படிக்கை கைச்சாத்தானது. இதனால் சிறிது காலம் இரத்தம் சிந்துவது தவிர்க்கப்பட் டிருந்தது. எனினும் அந்த ஒப்பந்தம் செய லிழந்துவிட்டது. கவிழ்ந்துவிட்டது.

சண்டை பரவி வருகிறது

கடந்த ஓராண்டு காலமாக நாட்டின் பல பகுதிகளில் சண்டைபரவி வருகிறது. சிங் களப் பெரும்பான்மை இனத்தவரின் ஆதிக் கத்துக்குட்பட்ட இலங்கை இராணுவத் துக்கும், பிரிவினைவாத சக்தியான தமி ழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே சண்டை மூண்டு வருகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் தகவலின் படி, 2005ஆம் வருட டிசம்பர் முதல், 4,800 இற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இவர்களில் சிவிலியன்களும் போராளி களும் அடங்குவர்.

இந்த எண்ணிக்கை முற்றும் முழுதாக ஏற்றுக்கொள்ளத்தக்க தொன்றல்ல. ஏனெ னில் நீண்டகால, குரூர போரில், ஒரு குறிப் பிட்ட காலப் பகுதிக்குரிய இழப்பு எண் ணிக்கையே இதுவாகும்.

யுத்தம் நீடிக்காலம், சமாதானப் பேச்சு கள் பலிதமாகலாம் என்பதற்கில்லை. அதற்கான அறிகுறி கிடையாது.

இலங்கையின் பாதுகாப்புச் செயல ராக இருப்பவர் கோத்தபாய ராஜபக்ஷ. இவர் செல்வாக்குப் படைத்தவர்.

தீவிரவாதத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அழிக்குமாறும், அவரது அமைப்பை ஒரேயடியாக நிர்மூலமாக்கி விடுமாறும் இராணுவத்துக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது என இவர் தெரி வித்துள்ளார்.

""அந்த தலைமைத்துவம் அழித்தொழிக் கப்படவேண்டும். அதுவே எமது முக்கிய நோக்கம். இந்தப் பணியை நிறைவேற்ற இரண்டு மூன்று ஆண்டுகள் செல்லலாம்'' என, மே மாதம் தாம் அளித்துள்ள பேட்டி யொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

வெளியுலக அழுத்தங்களால் காத்திரமான மாற்றங்கள் இல்லை

இவ்விரு, பிரிவினரின் நடவடிக்கை களில் வெளியுலக அழுத்தங்களால் கூட, காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்த முடிய வில்லை.

அமெரிக்கா உட்பட இன்னும் அநேக நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் வருடத்தின் டிசம்பரில் நேர்ந்த சுனாமிப் பேரலை அனர்த்தங் களையொட்டி, பிரிட்டனும், அமெரிக்கா வும் உதவிக் கரங்கள் நீட்டின. தற்போது அவ்வுதவிகளும் இடைநிறுத்தம் செய்யப்பட் டுள்ளன.

யுத்தத்தைப் பொறுத்தமட்டில், யாழ்ப் பாணம் அதற்குப் புதியதொன்றல்ல. கடந்தகால யுத்தச் சுவடுகளை அதன் கோவில் களும், தேவாலயங்களும் கொண்டுள் ளன. ஓடுவதிலும் மரணிப்பதிலும் மக்களுக் குப் பரிச்சயமுண்டு.

எனினும் இன்று போர்க் கருவிகள் என்று மில்லாதவாறு அசுத்தமடைந்துள்ளன. குறிவைப்புக் கொலைகளும் சிவிலியன் கள் செறிந்த பகுதிகளில் இடம்பெறும் நிலக் கண்ணிவெடித் தாக்குதல்களும் சர்வ சாதாரண நிகழ்வுகளாகி விட்டன.

விடுதலைப் புலிகள் கிரமமாக தற் கொலைக் குண்டுதாரிகளை நியமிக்கிறார் கள். பாதுகாப்புப் படைகள் தொடர்பாக விமர்ச்சிக்கும் பத்திரிகையாளர்கள், இரா ஜதந்திரிகள் நிவாரண ஊழியர்கள் கடும் சோதனைக்குள்ளாக நேரிடும்.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் பத்திரி கையொன்றின், இளம் நிருபர் ஒருவர் ஏப்ரல் மாதம், ஒரு ஞாயிறு காலை சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் துவிச்சக்கரவண் டியில் தமது வேலைத்தலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, துப்பாக்கி வேட்டுக்குப் பலியாகியுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் பதற்றமும் பரபரப்பும்

மே மாதத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவின. பெயர்ப்பட்டியலொன்று பிரச்சினையைத் தோற்றுவித்தது.

அதில் அடங்கியிருந்தோர் அனைவரும் தீவிரவாதிகளின் அனுதாபிகள்; ஆதரவாளர்கள்; எனவே விசாரணைக்குட்படுத்தப்படவேண

கொழும்பில் மிக பயங்கர தாக்குதலுக்கு புலிகள் திட்டம்- உளவுப் பிரிவு எச்சரிக்கை

கொழும்பு: கொழும்பில் மாபெரும் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.

கிழக்கு மாவட்டத்தில் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பை தாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசுக்குச் சொந்தமான டெய்லி நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 1,000 கிலோ வெடிமருந்துகளுடன் கொழும்பை நிலைகுலைய வைக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாகவும், ரத்தக் களறி ஏற்படுத்த திட்மிட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்காக கொழும்பில் ஊடுருவி வரும் புலிகள் விடுதிகளிலும் புற நகர்ப் பகுதிகளில் பிற இடங்களிலும் தங்கியுள்ளதாகவும், கொரில்லா தாக்குதலுக்கு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. வட மேற்குப் பகுதியில் 1,000 கிலோ சி-4 ரக வெடிபொருட்களுடன் லாரி பிடிபட்டதால் புலிகளின் தாக்குதல் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த லாரி பிடிபடாமல் போயிருந்தால் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாபெரும் அழிவு ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

இந்த லாரியின் டிரைவரும் கிளீனரும் கடந்த 2 மாதங்களாக கொழும்பில் ஒரு பட்ஜெட் லாட்ஜில் தான் தங்கியிருந்துள்ளனர். இதனால் தான் லாட்ஜுகளில் தங்கியிருந்த தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், அதை உலக சமுதாயமும் அரசியல்வாதிகளும் பிரச்சனையாக்கிவிட்டன.

பொது மக்களை புலிகள் இது போன்ற தாக்குதலுக்கு பயன்படுத்துவதால் விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்கள் சோதனைக்குள்ளாவது இயற்கை தான் என அந்த பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தக் கட்டுரையின் உண்மையான நோக்கம் வெளியாகியுள்ளது. புலிகள் பெயரைச் சொல்லி, தமிழர்களை கொழும்பை விட்டு வெளியேற்றும் அரசின் திட்டத்துக்கு தோல்வி கிடைத்ததால் நொந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு மருந்தாக இந்தக் கட்டுரையை அரசு வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

http://thatstamil.oneindia.in/

இலங்கையின் பாதுகாப்புச் செயல ராக இருப்பவர் கோத்தபாய ராஜபக்ஷ. இவர் செல்வாக்குப் படைத்தவர்.

தீவிரவாதத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அழிக்குமாறும், அவரது அமைப்பை ஒரேயடியாக நிர்மூலமாக்கி விடுமாறும் இராணுவத்துக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது என இவர் தெரி வித்துள்ளார்.

""அந்த தலைமைத்துவம் அழித்தொழிக் கப்படவேண்டும். அதுவே எமது முக்கிய நோக்கம். இந்தப் பணியை நிறைவேற்ற இரண்டு மூன்று ஆண்டுகள் செல்லலாம்'' என, மே மாதம் தாம் அளித்துள்ள பேட்டி யொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

வெளியுலக அழுத்தங்களால் காத்திரமான மாற்றங்கள் இல்லை

இவ்விரு, பிரிவினரின் நடவடிக்கை களில் வெளியுலக அழுத்தங்களால் கூட, காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்த முடிய வில்லை.

புலிகள் சொல்லுவதில்லை செய்வார்கள் அதன் பின்னர் சொல்லுவார்கள் யுலை நெருங்க நெருங்க சிங்கள படைகளுக்கு பீதியை கிழப்பும் 85 யுலையில் செய்தற்கான பதிலை அநேக யுலைகளில் திரும்பி வாங்கி கொண்டுதான் இருகின்ரனர் அநேகமாக ஒவ்வொரு ஆண்டும் ஆனால் இந்த யூலை இறுதிப்போரின் ஆரம்ப நாளாக இருக்கும் என நான் எதிர்பார்கின்றேன்

நான் அப்படி நினைக்கவில்லை ஈழவன்

சிங்கள கொமாண்டர் சொல்லுற நாளிலை சண்டை தொடக்கிற பழக்கத்தை புலிகள் எப்பவும் கொண்டு இருக்க இல்லை....! இராணுவம் தொடங்கினா அதுக்கு பேர் முன்னேற்றம்....! முள்ளிக்குழத்திலையும், இலுப்பை குழத்திலையும் அடிபோட்டு கலைச்சால் அதுக்கு பேர்தான் சண்டை, இராணுவம் முன்னேற விரும்புது எண்டு தெரியுது, ஆனால் எப்ப, எங்க வச்சு திருப்பி தாக்குவார்கள் என்பது புலிகளின் கைகளில்...!

எப்போது சாரதி இருக்கையில் புலிகள்தான் இருக்கீனம்...!

நீங்கள் சொல்வது சரி. இந்த அரச உளவுத்துறைகள் தங்கள் கற்பனைகளை காற்றில் பறக்க விட்டு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள கொமாண்டர் சொல்லுற நாளிலை சண்டை தொடக்கிற பழக்கத்தை புலிகள் எப்பவும் கொண்டு இருக்க இல்லை....! இராணுவம் தொடங்கினா அதுக்கு பேர் முன்னேற்றம்....! முள்ளிக்குழத்திலையும், இலுப்பை குழத்திலையும் அடிபோட்டு கலைச்சால் அதுக்கு பேர்தான் சண்டை, இராணுவம் முன்னேற விரும்புது எண்டு தெரியுது, ஆனால் எப்ப, எங்க வச்சு திருப்பி தாக்குவார்கள் என்பது புலிகளின் கைகளில்...!

எப்போது சாரதி இருக்கையில் புலிகள்தான் இருக்கீனம்...!

இங்கபார்டா.. புலிகளின் புலனாய்வு துறை உறுப்பினர் சொல்லுறார்,எல்லாரும் காதை மூடி கேட்டுக்குங்க, கேக்கிறவன் கேனையன் எண்டால்...................... :angry: :angry:

இங்கபார்டா.. புலிகளின் புலனாய்வு துறை உறுப்பினர் சொல்லுறார்,எல்லாரும் காதை மூடி கேட்டுக்குங்க, கேக்கிறவன் கேனையன் எண்டால்...................... :angry: :angry:

அப்ப நீங்க மட்டும் கேட்க்கவேண்டாம்...! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.