Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே நாடு ஒரே சட்டம்-one country one law-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாடு ஒரே சட்டம்-one country one law-பா.உதயன்

One language, two nations; Two languages, one Nation
-Dr. Colvin R. De Silva

என் வீட்டுக் காணியிலே 
இராணுவ முகாம் கட்டியிருக்கு 
எம் நினைவை கட்டித்தொழ 
எமக்கு இங்கு சட்டம் இல்லை

எந்த ஒரு இனமாகிலும் தம் உறவுகளின் பிரிவுகள் சார்ந்து நினைவு கொள்ளும் உரிமையை யாரும் தடுக்க முடியாது. இது ஓர் அடிப்படை மனித உரிமை சார்ந்ததாகும். ஒரு மனிதன் இறப்பில் இருந்து பிறப்பு வரை சம உரிமையுடனே பிறக்கிறான் என ஆங்கில அரசியல் தத்துவஞானி ஜான் லோக் (John Locke) கூறினார்.சாதி சமயம் கடந்த பாகு பாடு இல்லாத சமத்துவ நீதி கொண்ட மனித நேயங்களோடு கூடிய மானிடத்தின் எதிர்பார்ப்பு இவைகள் தான்.

ஒரு அரசின் அடிப்படை சட்டங்களில் தன் மக்கள் அனைவருக்கும் சமத்துவமான பாதுகாப்பும் அதே போல் எல்லா மக்களும் தமது கடமைகளையும் உரிமைகளையும் தத்தமது தேவைகளுக்கு ஏற்ப எந்தத் தடங்கலும் இல்லாமல் வாழ வழி செய்து கொடுப்பதேயாகும். ஒரு பெரும் பான்மை இனத்துக்கு உரிய உரிமைகள் யாவும் அந்த நாட்டில் வாழும் சிறு பான்மையினருக்கும் கிடைக்க செய்வதே அறமும் தர்மமும் சார்ந்த அரசியல் கோட்பாடாகும்.இதையே சமத்துவம் (equality) என்போம்.

இனவெறி, நிறவெறி என்ற இனப் பாகுபாடோடு(Racial segregation)எத்தனை மனித உயிர்கள் பறிக்கப்பட்டன.இன்று கூட இந்த துயரம் ஒரு கட்டமைக்கப்பட்ட ஒரு வடிவில் சர்வாதிகார ஆட்சியாளர்களால்(authoritarian ruler)அந்தந்த நாடுகளில் வாழும் சிறு பான்மையினர் எதிர் கொள்வதை பார்க்கிறோம்.தென் ஆபிரிக்காவின் கறுப்பு இனத்தலைவன் நெல்சன் மண்டேலாவை பல ஆண்டுகளாக சிறையில் போட்டு அந்த இன மக்களை இன பாகுபாடு என்ற கொள்கை மூலம் வெள்ளை இனத்தவர் ஆட்சி எவ்வளவு கொடுமைக்கு உட்படுத்தியது என்பதை அறிவோம்.இதே நிலைமை இன்று கூட உலகில் ஈழத் தமிழர் உட்பட பல சிறு பான்மை இனங்கள் எதிர் கொள்கிறார்கள்.

சிறையில் இருந்து வெளியில் வந்த நெல்சன் மண்டேலா யாரையும் பழி வாங்க நினைக்கவில்லை.அறவழி சத்தியம் சார்ந்து தன் மக்களை போராட அழைத்தார். இன்று இவர் போல் ஈழத்து தமிழர்களும் அறமும் நீதியும் சார்ந்து எவரையும் பழி வாங்க நினைக்கவில்லை.அதே அறமும் நீதியும் சார்ந்து இனப் படுகொலைக்கு ஒரு நீதியை நிரந்தரமாக வழங்குங்கள் என்றே கேட்கிறார்கள். தொலைந்து போன எம் உறவுகளை தேடித் தாருங்கள் என்று தான் கேட்கிறார்கள். அதே போலவே சிங்கள ஆட்சியாளறிடம் உங்களைப் போன்றே சமத்துவமான உரிமையை இத் தீவில் எமக்கும் பகிர்ந்து தாருங்கள் என்று தான் கேட்க்கிறோம். அமைதியும் சமாதானமுமாக இத் தீவில் அனைவரும் ஐக்கியப்பட்டு ஒற்றுமையோடு வாழுவோம் என்று தான் கேக்கிறோம்.

one day right there in Alabama little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers.I have a dream today! வெள்ளை இன சிறுவனும் கறுப்பு நிற சிறுமியும் இந்த அமெரிக்க மண்ணில் இனவாதம் இல்லாமல் ஒன்றாக அந்த நதி ஓரமாக நடந்து போக வேண்டும் என்று அன்று ஒரு நாள் அந்த கறுப்பு இனப் போராளி மார்ட்டின் லூதர் கண்ட கனவு போலவே சிங்கள சிறுவனும் தமிழ் சிறுமியும் இத் தீவில் கை கோர்த்து நடக்கும் கனவுகளோடு வாழவே விரும்பினோம். ஆனால் வன்முறையும் வெறுப்புமாக இனவாதம் இத் தீவில் இரத்தத்தை ஓட விட்டது.கூட்டை பிய்த்து எறிய பறந்த குருவிகள் போலே தம் மண்ணை விட்டு அகதிகளாக அடையாளம் தொலைந்த மனிதர்களாக புலம் பெயர் வாழ்வாகிப் போனது ஈழத்தமிழன் வாழ்வு.

 இனியாவது மனிதாபத்தோடு எமது அடிப்படை உரிமை சார்ந்து எமது கடைமைகளையும் உரிமைகளையும் செய்ய விடுங்கள்.போரில் இறந்து போனா எம் மக்களை நினைவு கூரும் உரிமையை அடக்கி ஒடுக்கி அந்த மக்களுக்காக கட்டப்பட்ட ஓர் எங்கள் கனவுகளின் நினைவுகளை உடைத்து எறியாதீர். உங்களால் நியமிக்கப்பட்ட எந்த அதிகாரியும் உங்களுக்கு விசுவாசமாகத் தான் இருப்பார் என்பது தெரியும்.

எந்த தனி மனிதர்களையும் பழி வாங்கி இதனால் எமக்கு எந்த நன்மை வரும் என்பதை விட அறமும் சத்தியமும் சார்ந்து அற போராட்ட வழியிலே மாணவர்கள் வட கிழக்கு ஈழத் தமிழர்கள் சேர்ந்து முஸ்லிம் சமுதாயத்தினரோடும் முற்போக்கு சிங்கள மக்களோடும் போராடுவதே இன்று இருக்கும் நிலையில் சரி என தமிழர்கள் உணர்ந்து இருப்பது போல் அண்மைய நிகழ்வுகள் காண்பிக்கின்றன. உள்ளுர் அரசியல் உட்பட பல சர்வதேச ஊடகங்களில் இது பேசப்படுவதை அறிகிறோம். 

மாணவர்களின் அந்த மக்களின் போராட்டம் தமிழ் நாடு உட்பட சர்வதேச மயமாக்கப்பட்டு ஒரு புதிய பாதையை திறக்க வேண்டும். மாறி வரும் உலக ஒழுங்கில் சுய லாப அரசியல் பொருளாதார இராணுவ காய் நகர்தல் போட்டியிலே உலகின் இரவுக் காவலர் யாராக இருக்கப் போகிறார்கள் என்று காலம் பதில் சொல்லவிருக்கும் இவ் வேளையிலே இந்த சந்தர்ப்பத்தை கை நழுவ விடாமல் தமிழர் தலைமையும் தமிழர்களும் இதை சரியான அரசியல் இராஜதந்திரத்தை கையாள்வதன் மூலம் தங்கள் இலக்கை அடிவதற்கான ஒரு பாதை திறந்துதிருப்பது போல் உள்ளது.

அறமும் தர்மமும் சார்ந்து  சத்திய வழியில் போராடிய நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங்,காந்தி போன்று சத்தியாக்கிரக சமாதான சத்திய வழியில் தொலைந்தவர்களையும் இறந்தவர்களையும் நினைவு கூரும் உரிமை கோரி போராடும் தமிழ் மாணவர்களின் போராட்டமும் தமிழர் இனப் பிரச்சினையும் தை பிறந்தால் வழி பிறகும் என்ற நம்பிக்கை கனவுகளோடு வெற்றி பெற வேண்டும்.

அதே போல் ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லும் இலங்கையின் ஜனாதிபதி தனக்கு இரண்டு முகம் என்றும் சொல்கின்றார். இந்த இரு முகங்களையும் கண்டு  தமிழர்கள் பயந்து இருப்பதுபோல்  இன்று சிங்கள மக்களுக்கும் பயப்  பீதி ஏற்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது  `தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்` என்ற பட்டினத்தார் பாடல் நினைவுக்கு வருகிறது.

 - பா.உதயன்✍️

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, uthayakumar said:

நல்லதொரு அரசியல் அலசலுக்கு நன்றிகள் தோழர்..👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு அரசியல் அலசலுக்கு நன்றிகள் தோழர்..👍

புரட்சிகர தமிழ்தேசியனே உங்கள் கருத்துக்கு நன்றி தோழர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.