Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு-க.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு-க.வி.விக்னேஸ்வரன்

 
1.gif
 18 Views

எமக்கு எதிராக சிங்கள அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையாக நில அபகரிப்பு காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் நடைபெற்று வரும் காணி அபகரிப்பு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள க.வி.விக்னேஸ்வரன்,

“இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல், எமது நிலங்களை அபகரிப்பதற்கு பல்வேறு உபாயங்களை அரசாங்கங்கள் கையாண்டுவருகின்றன. நீர்ப்பாசன அபிவிருத்தி என்ற போர்வையில் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஊடாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்களில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இனப்பரம்பலில் செயற்கையான மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வன்முறைகளின் ஊடாக தமிழ் கிராமங்கள் பலவற்றில் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு அவை முற்றாக சிங்கள மற்றும் முஸ்லிம் கிராமங்களாக இன்று மாற்றப்பட்டுவிட்டன.

30 வருடங்களாக யுத்தம் நடைபெற்றபோது வட மாகாணத்தின் ஏறத்தாழ முழுமையான பகுதியும் கிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மையான பகுதிகளும் எமது இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் அம்பாறை, திருகோணமலையில் நடந்தது போல பெருமளவில் எமது நிலங்களை அரசாங்கங்களினால் அபகரிக்க முடியவில்லை.

ஆனால், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், வடக்கு கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் எந்தவித எதிர்ப்பும் இன்றி எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

ஒருபுறம் நீர்ப்பாசன திட்டங்கள் என்ற போர்வையில் நிலங்கள் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பறிக்கபப்டுகின்றன. மறுபுறம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை இராணுவம் தன் வசம் வைத்துள்ளது. இதில், இராணுவ முகாம்கள் மட்டுமல்ல இராணுவ குடியிருப்புக்களும் உள்ளடங்கும். இவை தவிர, அரசாங்கம் எமது நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கைகளில் அரச இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்திவருகின்றது. வன இலாகா, வன விலங்குகள் திணைக்களம், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், மகாவாலி அதிகாரசபை ஆகியவை ,வற்றுள் உள்ளடங்கும்.

எவ்வளவு வேகமாக நாம் எமது நிலங்களை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை ஒரு உதாரணமாக சொல்கின்றேன். எமது மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரனின் புள்ளி விபரங்களின் படி முல்லைத்தீவின் மொத்த நிலப்பரப்பு 6, 21, 917. இதில், 4, 20, 300 ஏக்கர் அடர்ந்த காடு. ஆகவே, மக்கள் பயன்பாட்டுக்கு ,ருக்கும் நிலப்பரப்பு 201,617 ஏக்கர் ஆகும்.

இதில், ஆகக்குறைந்தது 80,000 ஏக்கர் நிலம் இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களின் கீழ் பறிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரத்தின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்கள் பயன்பாட்டுக்குரிய நிலபபரப்பில் ஏறத்தாழ 40மூ நிலம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. இந்த சிறிய உதாரணம் எம்மை சூழ்ந்துவரும் ஆபத்தை வெளிப்படுத்துகின்றது.

ஆனால், கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான கடந்த 10 வருட காலப்பகுதியில், நில அபகரிப்புக்கு எதிராக நாம் உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மையானது. உள்நாட்டு சட்ட ரீதியாக மேற்கொள்ளக்கூடிய விடயங்களை நாம் முழுமையான அளவில் மேற்கொள்ளவில்லை.

அதேபோல, சர்வதேச சட்டம், சர்வதேச மனித உரிமை கட்டமைப்புக்கள், ஒப்பந்தங்கள், கோட்பாடுகள், போன்வற்றையும் நாம் முழுமையான அளவில் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ,வற்றுக்கு மேலதிகமாக, சர்வதேச ஊடகங்களின் ஊடாக எமக்கு எதிரான நிலஅபகரிப்பை நாம் வெளிப்படுத்த வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள், வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், தூதரகங்கள் போன்றவற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்ட சிறப்பான டழடிடிலiபெ ஆதரவு நாடி செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கவேண்டும்.

ஆனால், இவற்றையெல்லாம், நாம் மேற்கொள்வதற்கு எமக்கு எதிரான நில அபகரிப்புக்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியம். சர்வதேச தராதரங்களுக்கு அமைவான ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு செயற்பாடுகளை நாம் முன்னெடுப்பது எமக்கு எதிரான நில அபகரிப்பு பற்றி சர்வதேச அளவில் நம்பகத்தன்மையானமுறையில் ஒரு விழிப்புணர்வையும் கவனத்தையும் ஏற்படுத்துவதற்கு உதவும்.

மறுபுறத்தில், அரசியல் ரீதியாக சர்வதேச அளவில் நாம் டழடிடிலiபெ ஆதரவு நாடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மட்டுமன்றி உள்ளூரில் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இது பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

ஆகவே, நில அபகரிப்புக்கு எதிரான எமது செயற்பாடுகளை நாம் வெறுமனே ஆர்ப்பாட்டங்ககள், நீதிமன்ற நடவடிக்கைகளுடன் மட்டும் நிறுத்திவிடாமல் மேற்குறிப்பிட்ட அறிவு, தகவல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலான நடவடிக்கைளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

உதாரணமாக, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பு பற்றி சர்வதேச ரீதியான விழிப்புணர்வு இருக்கிறது. இதற்கு காரணம், அவை பற்றிய முறையான ஆவணப்படுத்தல், ஆய்வுகள், பரப்புரைகள், ஊடக வெளியீடுகள் நடைபெற்றிருப்பதுதான்.

எமக்கு எதிராக என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி எமக்கே சரியான புரிதல்கள் இன்றி இருக்கும் ஒரு துரதிஷ்ட்டமான நிலைமையே காணப்படுகின்றது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் நில அபகரிப்பு பற்றி ஆராய்வு செய்த யூத பேராசிரியரான ழுசநn லுகைவயஉhநட என்பவர் அவற்றை நவாழெஉசயவiஉ டயனெ pசயஉவiஉநள என்று குறிப்பிடுகிறார்.

ஏனென்றால், ஜனநாயகம், சட்டம் ஆகியவற்றின் போர்வையில், ஒரு நாட்டில் தனி ஒரு இனத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தும் வகையில் ஒரு அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமானால் அதனை நவாழெஉசயவiஉ சநபiஅந என்று அவர் கூறுகிறார். இஸ்ரேலைபோல ஒரு நவாழெஉசயவiஉ நாடக இருப்பதற்கான அத்தனை பண்புகளும் இலங்கைக்கு இருப்பதாக அவர் கூறுகிறார்.

இதுபோன்ற விடயங்களை மேலும் ஆய்வு செய்து, அல்லது இந்த வாதத்தினை பலப்படுத்தும் நோக்கில் ஆதாரங்களை சேமித்து ஆவணப்படுத்தி எவ்வாறு எமக்கு எதிராக நில ஆக்கிரமிப்புக்கு நீதியை பெறுவதற்கு நம்பகத்தன்மையான ஆதிக்கம் நிறைந்த கருத்து வினைப்பாட்டை நாம் மேற்கொள்ளலாம் என்று சிந்தித்து விஞ்ஞான ரீதியாக நாம் செயற்படவேண்டும்” என்று கூறியுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=40178

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் புலி எதிர்ப்பு வாந்தி எடுப்பதிலேயும்.. சிங்கள எஜமானர்களை தாஜா பண்ணி.. பொக்கட் நிரப்புவதிலும் தான் ஐயா குறியா இருக்கிறம். இதில நீங்கள் என்னடான்னா.. ஆய்வு.. ஆவணம் என்று கொண்டிருப்பது கெட்ட கோபம் வாற செயல்.

வேணுன்னா.. சொல்லுங்கோ.. புலிகளை மீள் விசாரணை செய்யுறம். எங்கள் புண்ணை நாங்களே நோண்டிக்கொண்டிருக்கிறோம்.

சிங்களவன்... மொத்தமா வந்து குந்தினாலும் அவனும் எங்கட பிரஜை தானே.. அனுமதிப்போம். ஆனால்.. தமிழகத்தான்.. தமிழன் முன்னேறக் கூடாது. அது கொள்ளை. 

  • கருத்துக்கள உறவுகள்

இது இவருக்குத் தேவையில்லாத வேலை.

கருணா, பிள்ளையான், வியாழேந்திரன், டக்கிளஸ், அங்கஜன், திலீபன் போல அபிவிருத்தி, வேலைவாய்ப்பு எண்டு மினக்கெடுறதை விட்டுட்டு எதுக்குத் தேவையில்லாமல் சிங்களவன் நிலம் பிடிக்கிறான் எண்டு சொல்லவேணும்?

அவன் வருவான், போவான், மூண்டு மாசம் சோளன் பயிரிடுவான், பிறகு விட்டுட்டுப் போவான், வேணுமெண்டால் அங்கேயே தொடர்ந்தும் இருப்பான். இவருக்கு என்ன நோகுது? நாங்கள் மகிந்தவுக்கும் கோத்தாவுக்கும் ஆதரவு கொடுத்து இந்தமுறை எங்கட பிரதேசத்தை அபிவிருத்தி செய்யலாம் எண்டு பார்த்தால், இவங்கள் விடமாட்டாங்கள் போல கிடக்கு. அவன்ர நிலம், அவன் பிடிப்பான், அபிவிருத்தி செய்வான், அதை நாங்கள் ஏனெண்டு கேட்க ஏலாது.

பேசாமல் வாயை மூடிக்கொண்டு, இருக்கிறதைக் காப்பாற்றப் பாப்பம் (அது எப்படியெண்டு கேட்கக் கூடாது, அப்படித்தான் ஆலோசகர் எங்களுக்குச் சொல்லித் தந்தவர்). அடுத்தது  கண்ணை இறுக்க மூடிக்கொண்டு தலையே போனாலும்கூட, "அபிவிருத்தி - வேலைவாய்ப்பு" எண்டு பேசாமல் இருக்கிறதுக்குப் பெயர் சரணாகதியோ, அடிமைச் சீவியமோ இல்லையாம்...... . வேணுமெண்டால் சமரசம் எண்டும் தப்பிப் பிழைத்தல் எண்டும் சொல்லட்டாம் எண்டும் அவர் சொன்னவர்.

மொக்குத் தேசிக்காய்கள், உவையளுக்கு இருக்கு விளையாட்டு. எங்கட தலைவர் கோத்தா உவைக்கு ஒரு பாடம் படிப்பிப்பார் கண்டியளோ !!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.