Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனங்களுக்கிடையிலான அமைதியை கட்டிவளர்க்கும் வானொலி சேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனங்களுக்கிடையிலான அமைதியை கட்டிவளர்க்கும் வானொலி சேவை

[18 - June - 2007] [Font Size - A - A - A]

கொழும்பிலிருந்து 150 கிலோமீற்றர் தூரத்திலுள்ள தேயிலை வளரும் மலைப்பிரதேசத்தில் அரசாங்கத்தினால் நடத்தப்படும் ஒரு சமூக வானொலி நிலையம் கிராமங்களிலிருந்தும், மக்களின் பங்களிப்புகளுடனும் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையில் அமைதியை வளர்த்தற்கான ஒலிபரப்பைச் செய்துவருகிறது.

"நாடு முழுவதிலுமுள்ள மக்கள் சமாதானம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், இந்த சமூக வானொலி ஆரம்பத்திலிருந்து அதைச் செய்துவருகிறது" எனப் பவிதரன் என்னும் இவ்வானொலியின் ஒலிபரப்பாளர் ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறியுள்ளார்.

`நாங்கள் எத்தகைய இனப்பாகுபாட்டையும் இங்கு வைத்திருக்கவில்லை" என்கிறார் அந்தத் தமிழ் ஒலிபரப்பாளர். அவர் சரளமாகச் சிங்களத்தில் பேசுவதுடன், இரு பாஷைகளிலும் மாறிமாறிப் பேசுகிறார். "என்னுடைய உதவியாளர்கள் அனைவரும் சிங்களவர்கள். ஆனால், நாம் அனைவரும் குழுவினராக இணைந்து செயற்படுகிறோம்".

எவ்.எம். அலைவரிசையில் கே.சி.ஆர். (K.C.R)அரசினது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் 1989 ஆம் ஆண்டு கிழமையில் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 3 மணித்தியாலங்களுக்கு ஒலிபரப்புவதற்கென உருவாக்கப்பட்டது. அது இன்று கிழமை நாட்களில் நாளொன்றுக்கு 12.5 மணித்தியாலங்களுக்கும், வார இறுதி நாட்களில் நாளொன்றுக்கு 8 மணித்தியாலங்களும் ஒலிபரப்புச் செய்கின்றது. இந்த ஒலிபரப்பு தமிழிலும் சிங்களத்திலும் நடைபெறுகிறது. அது 20 கிலோமீற்றர்கள் சுற்றளவிற்குள் 60 கிராமங்களையும், 3 பட்டினங்களையும், 200,000 பேருக்கு உதவும் வகையிலும் ஒலிபரப்புச் செய்கிறது.

கடந்த 25 வருடகாலமாக தமிழ் விடுதலைப் போராளிகளுக்கு (LTTE) கொழும்பு சிங்கள அரசாங்கத்திற்குமிடையில் நடைபெறும் யுத்தத்தினால் சின்னாபின்னமான நாட்டில் சமாதானத்தை விரும்புவோர் இந்த அமைதியான நாட்டிற்கு எப்போது விடிவு ஏற்படும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில் கே.சி.ஆர். ஒரு நம்பிக்கை தரும் ஒளிக்கீறாக அமைகிறது.

நாட்டின் 20.7 மில்லியன் மக்களுள் பெரும்பான்மை இனமான சிங்கள மக்கள் 81.9 வீதமானவர்கள் பிரித்தானிய ஆட்சியாளர்களால் தேயிலைத் தோட்டங்களில் தொழில் செய்வதற்காக இந்திய வம்சாவளி வந்த தமிழர்கள், தீவின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து வேறுபட்டவர்கள்.

கே.சி.ஆர். ஸ்ரூடியோக்கள் தேயிலைத் தோட்டங்களைப் பார்க்கக்கூடிய நிலையில் மலையுச்சியில் அமைக்கப்பட்டுள்ளன. சமூக பிரச்சினைகள் தூர உள்ளன போலத் தோற்றமளிக்கின்றது. அந்த நிலையம் தற்போது, கிராமங்களைச் சேர்ந்த நாலுபேரை உள்ளடக்கிய 8 நிரந்தர உத்தியோகத்தர்களையும், உள்ளூர் வாசிகளான 15 தொண்டர் சேவையாளர்களையும் கொண்டிருக்கிறது. சிங்கள, தமிழ் உத்தியோகத்தர்கள் ஒருவரோடொருவர் சிங்களத்தில் உரையாடுவதுடன், சகோதர முறையிற் பழகுகின்றனர்.

"நாங்கள் இந்த நிலையத்தை ஒரு சமூகத்தவர்க்கு மாத்திரம் உரியதெனக் கட்டுப்படுத்தவில்லை. நாங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகத்தவர்களை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கிறோம்" என்கிறார் கே.சீ.ஆர். ஐக் கட்டுப்படுத்தும் அதிகாரியான சுனில் விஜயசிங்க.

"நாம் சமூகத்தினரை நிலையத்துக்கு வந்து எங்களுக்கு நிகழ்ச்சிகள் பற்றி ஆலோசனை கூறுமாறு ஊக்கமளிக்கிறோம். நாங்கள் அவர்களை ஏனையவர்கள் மனங்களைப் புண்படுத்தாத வகையில் நிகழ்ச்சிகளிற் பங்கேற்குமாறும் அழைக்கிறோம்" என்று தமது ஒலிபரப்பின் திட்டங்களை அவர் விளக்கினார்.

ஐ.பி.எஸ்ஸுடன் பேசும் போது அவர் அரசுக்குச் சொந்தமான வானொலியொன்று சமூக நலனுக்கேற்ப ஒலிபரப்புவது முடியாத காரியம் என்பதை அவர் மறுக்கிறார். "ஆம் உண்மை தான் நான் அரசாங்கத்திடமிருந்து மாதந்தோறும் சம்பளம் வாங்குகின்றேன். ஆனால், நானும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவனே. நான் மக்களது எதிர்பார்ப்புகளை அறிவேன். அவர்களுடைய தேவைகளை நான் அறிவேன். இதற்காக நான் அவர்களது விருப்பைப் பெற்றுள்ளேன்" என்கிறார் அவர்.

"இந்த வானொலி சமூகத்திற்கு மிக உபயோகமானது. அநேகமான மக்கள், விசேடமாக இளவயதினர், இது உள்ளூர் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதனால் இதனை விரும்புகின்றனர்" என்கிறார் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தின் வெளிவாரி இணைப்பாளர் சந்தானம் சத்தியநாதன்.

அவர் மேலும் கூறியதாவது; "வர்த்தக ஒலிபரப்பு அலைவரிசைகள் இப்பாடல்களையோ, சமூக அடிப்படையிலான கலாசார விடயங்களையோ ஒலிபரப்புவதில்லை. அவை இந்திய சினிமாப் பாடல்களையும், நாடகங்களையும் ஒலிபரப்புகின்றன. ஆனால், கொத்மலே சமூக வானொலி இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் தங்களது கருத்துக்களையும், கலாசார விழுமியங்களையும் வெளிப்படுத்த உதவுகின்றது".

"நான் இந்த வானொலியின் ரசிகன். ஆகவே, நான் ஒரு தன்னார்வ சேவையாளனாக இணைந்துள்ளேன்" என்கிறார் ராஸ் முகமட்கமில். இவர் கண்டி பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் பெண்பிள்ளை. கொத்மலே எவ்.எம். சேவை சமூகத்தின் தேவைகளை இனங்கண்டு அவற்றை தெரிவு செய்கிறது. இங்கே பணியாற்றும் சகலரும் சகோதரர்கள் போல நடந்து கொள்கிறோம் மிக அந்நியோன்யமாகவும் பழகுகிறோம்".

கொழும்பிலுள்ள களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு கலைமாணி மாணவராகிய 20 வயதுடைய டில்ஷிக்கா கெஷானி சில்வா கூறுவதாவது;

தான் தனது வெளிவாரிப் படிப்பை மேற்கொள்ளும் போது கே.சி.ஆர். தனக்கு தன்னார்வ தயாரிப்பாளராகவும் வரும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்கி மிகவும் உதவிற்று என்று கூறுகிறார்.

அவர் ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறுவதாவது;

இவ்வானொலி கிராமத்திற்கு கிராமம் சென்று சமூகத்தைப் பற்றிய தகவல்களை கொடுப்பதனால், செவிமடுப்பவர்கள், தங்களது அயலவர்களைப் பற்றி அதிகம் அறிந்து கொள்கின்றார்கள். இந்த வானொலியிற் கடமையாற்றுவது கல்வி சம்பந்தமான அனுபவமாகும். ஆனால், வர்த்தக ஒலிபரப்பில் அவர்கள் பாட்டுக்களையே எப்போதும் ஒலிபரப்புகிறார்கள்.

இதனது வெளிவாரி நிலையம் டீசலில் ஓடும் முச்சக்கரவண்டியில் பொருத்தப்பட்டுள்ளது. இது மலிவானதால் பொதுவாக தெற்காசியாவில் உபயோகத்திலுள்ளது. அதில் ஒலிபரப்பிகளும், ஒலிப்பதிவு முறையும், ஒரு கணினியும், ஒரு பிறின்ரரும், ஒரு மின்னாக்கியும் உள்ளன. ஸ்ரூடியோவுடன் தொடர்புபடுத்தி கிராமங்களிலிருந்து நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்கு ஒரு கையடக்கத் தொலைபேசியும் உபயோகிக்கப்படுகின்றது.

எம்.டி.எவ். என அழைக்கப்படும் நிறுவனத்தினால் நிதியுதவி அளிக்கப்பட்ட இயங்கும் ஒலிபரப்பு மலைப்பிரதேசத்திற்கு வந்தபோது அங்குமிருந்த பரபரப்பு நிலவியது. மக்கள் ஆர்வத்துடன் அதனைச் சூழ்ந்து பாடல்களை அளித்தனர். ஒலிபரப்பினுள் தமிழ், சிங்கள நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டன.

பவித்திரன் கூறுவதாவது; "நாங்கள் சமூகத்துடன் இருப்பதனால் எங்களது பணியில் மகிழ்ச்சி காண்கிறோம்" அவர் அடிக்கடி பாடல்களிலும், நடனங்களிலும், பங்குபற்றுகிறார். "மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். நாங்களும் மகிழ்கிறோம் இதுதான் அதிகம் முக்கியமானது".

நாட்டில் தமிழ் தோட்டத் தொழிலாளர்களே மிகவும் ஒதுக்கப்பட்ட பகுதியினராவர். ஆனால், கடந்த மூன்று தசாப்தங்களில் இவர்களிடையே இலவசக் கல்விமுறை பரவியதனால், அவர்களது கல்வித்தரம் உயர்வடைந்துள்ளது. எல்லா இளம் வயதினரும் கல்வியறிவு கல்வியறிவு பெற்றவர்களாய் திகழும், சிங்களமும் சரளமாகப் பேசுகின்றனர்.

ஒரு தொழிற்சங்க பிரமுகரான கே. ஆறுமுகம் கூறுவதாவது;

"கொத்மலே எவ்.எம். தோட்டத் தொழிலாளர்களது இதயங்களைக் கவர்ந்துள்ளது. கே.சி.ஆர். மக்களை மிக அண்மித்த நிலையில், இந்த வானொலி சேவை எல்லா தோட்ட சமூகத்தவர்களிடையேயும் விஸ்தரிக்கப்பட வேண்டும்".

-ஐ.பி.எஸ்.-

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அருமையான கருத்து, கல்வியறிவு பெற்ற மலையகத் தம்பி மார் சரளமாக சிங்களம் பேசுகினமாம்! அதில் பெருமையும் படிகினமாம்! :rolleyes:

கடந்த 25 வருடகாலமாக தமிழ் விடுதலைப் போராளிகளுக்கு (LTTE) கொழும்பு சிங்கள அரசாங்கத்திற்குமிடையில் நடைபெறும் யுத்தத்தினால் சின்னாபின்னமான நாட்டில் சமாதானத்தை விரும்புவோர் இந்த அமைதியான நாட்டிற்கு எப்போது விடிவு ஏற்படும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில் கே.சி.ஆர். ஒரு நம்பிக்கை தரும் ஒளிக்கீறாக அமைகிறது....

ஆகா கிளம்பீட்டாங்கள் ஆளாளுக்கு நோபல் பரிசு வாங்குவதற்கு....

இனப்பிரச்சனைக்கான நிரந்தரத்தீர்வாக சிறீ லங்காவில் கே.சி.ஆர் போன்ற சுமார் நூறு வானொலி நிலையங்களை உடனடியாக உருவாக்குமாறு நாளை தேசிய பிக்குகள் முண்ணனி கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்யப்போகின்றது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.