Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியத்தை பற்றுதல்: புலம்பெயர் தமிழர்களுடன் ஒரு முறைசாரா உரையாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியத்தை பற்றுதல்: புலம்பெயர் தமிழர்களுடன் ஒரு முறைசாரா உரையாடல்

-தாயகத்திலிருந்து ராஜன் காசி-

01

சிதைவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சிறிலங்கா அரசை தூக்கி நிறுத்தும் முயற்சியில் தற்போது மகிந்தவும் அவரை வழிநடத்தும் சிங்கள ஆளும் வர்க்கமும் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்.

ஒரு ஜனாதிபதிக்காலத்தை தனக்குரியதாக்கிக் கொண்டிருக்கும் மகிந்த அடுத்த ஜனாதிபதிக் காலத்தை தனக்குரியதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற முனைப்பில் செயற்பட்டு வருகின்றார். அதற்கு மகிந்தவிற்கு இருக்கும் ஒரேவழி சிங்கள இனவாத அரசியலை 'அநகாரிக்க தர்மபால" மனோபாவத்திற்கு நகர்த்திச் செல்வதுதான். இதுதான் தற்போது சிங்களத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றது.

சமீப காலமான விடுதலைப் புலிகளின் தந்திரோபாய ரீதியான இராணுவ நகர்வுகளை பெரும் பின்னடைவுகளாகவும் தமது போரியல் வெற்றிகளாகவும் சித்தரித்துக் காட்டுவதையே மகிந்த தனது அரசியல் காய்நகர்த்தல்களுக்கான கருவிகளாகக் கொண்டிருப்பது மிகவும் வெளிப்படையான ஒன்று.

சந்திரிக்கா காலத்தில் தனியான இனவாத கட்மைப்பாக தொழிற்பட்ட ஜே.வி.பியின் இனவாத அரசியலை முன்னெடுக்க முடியாதளவிற்கு மகிந்தவின் இனவாத அரசியல் பலமடைந்திருக்கின்றது. இதன் காரணமாகத்தான் சமீபத்தில் கொழும்பில் இருந்து காரணமின்றி இருப்பதாக கூறி தமிழர்கள் வெளியேற்றப்பட்டதை ஜே.வி.பியால் விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை.

சிறிலங்கா அரசானது பொருளாதார ரீதியாவும், இராணுவ ரீதியாகவும் மிக மோசமான வீழ்ச்சியை நோக்கி சரிந்து சென்று கொண்டிருந்த நிலையில்தான் அதனை தூக்கி நிறுத்தும் பொறுப்பை மகிந்த ஏற்றுக்கொண்டார். ஆனால் இதில் மகிந்தவோ அவரது பின்பலமாகத் தொழிற்பட்டு வரும் சிங்கள ஆளும் வர்க்கமோ வெற்றிபெறப் போவதில்லை.

சிதைவின் விளிம்பில் கிடந்த சிங்கள ஆளும் வர்க்கம் ஆரம்பத்தில் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மேற்கின் வல்லாதிக்க சக்திகளையே முழுமையாக நம்பியிருந்தது.

சிங்கள கொள்கை வகுப்பாளர்கள் நவீன ஏகாதிபத்தியித்தின் ஒரு தொங்கு சதையாக மாறுவதன் மூலம் விடுதலைப் புலிகளை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயங்களை வகுக்க முயன்றனர்.

விடுதலைப் புலிகள் மீதான ஜரோப்பிய யூனியனின் தடையை தம்மை பலப்படுத்திக் கொள்வதற்கு கிடைத்ததொரு அரிய சந்தர்ப்பமாகவே சிங்கள ஆளும் வர்க்கம் கருதியது. அத்துடன் ஜரோப்பிய யூனியனின் தடையை தமது ஈராயிரம் வருட கால ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியென்றே சிங்கள இனவாத கொள்கை வகுப்புப் பிரிவினர் சிலாகித்தனர்.

உண்மையில் சிங்கள ராஜதந்திரத்திற்கும் ஜரோப்பிய யூனியனின் தடைக்கும் ஒரு தொடர்புமில்லை. இது முற்றிலும் மேற்கின் நலன்களிலிருந்து எடுக்கப்பட்ட முடிவாகும். குறிப்பாக இலங்கை அரசியலில் அமெரிக்காவின் தலையீடுகள் அதிகரித்து வரும் நிலைமையுடன் இணைத்துப் புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.

இன்று தமிழர் விடுதலைப் போராட்டம் தெற்காசிய அரசியலில் சூழலில் ஒரு முக்கிய புள்ளியாக மாறியிருக்கிறது, உலகின் பல விடுதலைப் போராட்டங்களிற்கும் வழிகாட்டக் கூடிய நிலையில் இருக்கிறது.

எனவே விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்வதன் மூலம் தெற்காசிய அரசியல் சூழலில் தலையிடுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்ள மேற்கு முயற்சிக்கக் கூடும்.

ஆனால் தற்போது சிறிலங்கா அரசு மனித உரிமைகள் சார்ந்து மேற்கின் தெடர்ச்சியான குற்றச்சாட்டிற்கு ஆளாகி வருகின்றது. இதனால் கலக்கமடைந்த மகிந்த தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கம் அதனை சமப்படுத்தும் நோக்கில்தான் சீனா, பாகிஸ்தான் போன்ற ஆசிய பிராந்திய சக்திகளுடனான தனது தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள முயல்கின்றது. இதன் மூலம் இந்தியாவை தம்பக்கம் இழுத்துக் கொள்ள முடியுமென்ற ராஜதந்திர உள்ளடக்கமொன்றும் இதில் உண்டு.

இப்பொழுது நாம் நமது நிலையில் நின்று யோசிக்க வேண்டியிருக்கின்றது. தமிழ் தேசியம் அதன் உச்ச இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தமிழர் போராட்டத்தை அதன் உச்ச இலக்கு நோக்கி நகர்த்துவதில் பெரும் சவாலாக இருப்பது சர்வதேச சக்திகளின் குறுக்கீடுகளாகும்.

மேற்கின் எதேச்சாதிகார சக்திகள் பயங்கரவாதத்தை எதிர்த்தல் என்ற பேரில் நீதிக்கும் நியாயத்திற்காகவும் போராடும் விடுதலை போராட்டங்கள் மீது குறுக்கிட்டு வருவது நமக்கொன்றும் புதிய தகவலல்ல எனினும் இராணுவ பொருளாதார ரீதியாக மிகவும் பலமான சக்திகளை நமது நலன்களை வெற்றி கொள்ளுதல் என்னும் இலக்கிலிருந்து எதிர் கொள்வதும் இன்றைய புதிய உலக அரசியல் ஒழுங்கில் (நேற றுழசடன ழுசனநச) தவிர்த்துச் செல்லக் கூடிய ஒன்றல்ல. எனவேதான் தற்போது சர்வதேச சக்திகளினது குறுக்கீடுகள் மீது நமது கவனக் குவிப்பைச் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில்தான் இவ்வாறான மேற்கின் தலையீடுகளை வெற்றி கொள்வதில் புலம் பெயர் சமூகத்தின் பாத்திரம் என்ன? என்ற கேள்விக்கு விடை தேட வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதாக நான் கருதுகிறேன்.

02.

ஆரம்பத்தில் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பிராதான பின்தளமாக இந்தியாவே இருந்தது (தமிழ்நாடு). எனினும் பிராந்திய வல்லரசான இந்தியா தனது நலன்களுக்கும் ஈழத் தமிழ் மக்களின் நலன்களுக்கும் இடையில் உள்ள இயல்பான முரண்பாட்டை தனது மேலாதிக்க நலனில் நின்று கையாளத் தலைப்பட்டதன் காரணமாக இந்தியாவும் நமது தேசமும் ஒரு பகை முரண்பாட்டை நோக்கி நகர வேண்டிய சூழல் உருவாகியது.

இறுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவுடன் ஒரு வெளிப்படையான மோதலில் இறங்க வேண்டிய நிலைமை உருவாகியதும் நமது பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு குறித்த கடந்த கால வரலாறாகும்.

இந்த பின்னனியிலேயே 1988 களின் பின்னர் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பின் தளம் ஜரோப்பாவை நோக்கி நகர்ந்தது. 1983 களிற்கு பின்னர் அதிகமான தமிழ் மக்கள் பல அன்னிய தேசங்களிலும் அரசியல் தஞ்சம் கோரி புலம்பெயர நேர்ந்ததும் அவ்வாறு புலம்பெயர்ந்த மக்கள், விடுதலைப் போராட்டத்தின் பிராதான ஆதார சக்திகளாக அடையாளம் காணப்பட்டதுமே நமது போராட்டத்தின் பின்தளம் ஜரோப்பாவை நோக்கி நகர்ந்ததற்கான பிரதான காரணமாகும்.

இந்த பின்தள இடமாற்றத்திற்கு பின்னர் அதுவரைக்கும் போராட்டத்தின் பிரதான ஆதரவுத்தளமாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் அடையாளம் காணப்பட்ட நிலைமை மாறி போராட்டத்ததை நேரடியாக பிரதிதித்துவப்படுத்தும் மக்களில் ஒரு பகுதியினரே பின்;தளமாகவும் தொழிற்படும் நிலைமை உருவாகியது.

தமிழ்நாட்டு (பார்ப்பனர்கள் அல்லாத) தமிழ் மக்களின் ஆதரவுத் தளமானது இந்தியாவை கையாளுதல் என்னும் அரசியலுடன் மட்டும் மட்டுப்பட்டது. குறிப்பாக விடுதலைப் புலிகள் ஒரு பலமான மரபுவழி இராணுவக் கட்டமைப்பாக வளர்ச்சியடைந்திருப்பதற்கு மேற்படி ஜரோப்பிய பின்தளமே முக்கிய காரணமென சிங்கள ஆய்வாளர்கள் மட்டுமல்லாது மேற்கின் ராஜதந்திரிகளும் கருவதாகக் கூறப்படுகிறது (சிவராம்). மேற்படி பின்புலத்தில்தான் ஜரோப்பிய யூனியனின் தடையை சிங்கள ஆளும் வர்க்கம் தமக்குச் சாதகமான ஒன்றாக புரிந்து கொள்ள முயன்றது.

குறிப்பாக சிங்கள ஆளும் வர்க்கம் மேற்படி தடையை விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிப்பதற்கான வாய்ப்பாகவே கருதுகிறது. ஆனால் பிரச்சினையோ தாம் தோற்றுவிடவில்லை என்பதை சிங்கள மக்கள் மத்தியில் காட்டிக் கொள்வதையே தமது இராஜதந்திரமாகக் கருதும் சிங்கள அரசல்ல நமது இலக்கு. தமிழர் தேசிய அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பாதையில் குறுக்கிடும் சர்வதேச சக்திகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். குறிப்பாக சர்வதேச சக்திகளை ஒரு எதிர்ப்பற்ற நிலையில் எவ்வாறு நடுநிலைப்படுத்துவது என்பதாகும்.

இன்று நமது விடுதலை அரசியலில் குறுக்கீடு செய்து வரும் அனைத்து சர்வதேச சக்திகளும் கடந்த காலத்தில் சிங்கள ஆளும் வர்க்கத்தை பல வகைகளிலும் பலப்படுத்திவந்த சக்திகள் என்பதும் இனிவரும் காலத்திலும் அவைகள் சிங்கள ஆளும் வர்க்கம் தோற்றுவிடக்கூடாது என்பதில் அக்கறையுடைய சக்திகளாகத்தான் தொழிற்படப் போகின்றன என்பதிலும் நாம் குழம்ப வேண்டியதில்லை. இதில் இரண்டாவது வாதமொன்றிற்கு இடமிருக்க முடியுமென்றும் நாம் நம்ப வேண்டிதில்லை. இந்த இடத்தில்தான் புலம்பெயர் தமிழ் மக்கள் குறிப்பான பாத்திரத்தை ஆற்ற வேண்டியிருக்கிறது.

உலகின் பல விடுதலைப் போராட்டங்களிலும் புலம்பெயர்ந்த மக்கள் குறிப்பான பாத்திரத்தை ஆற்றியிருக்கின்றனர். சமகால விடுதலைப் போராட்டங்கள் பலவற்றிலும் இதை நாம் அவதானிக்கலாம். அவ்வாறான மக்களின் பங்களிப்புக்களானது பொருள் வகை பங்களிப்பினையும் தாண்டி அரசியல் ரீதியான பங்களிப்பாகவும் உயர்ந்து நிற்பதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

நவீன அரசியலில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்தே அரசியல் காரணங்களுக்காக புலம் பெயர்வது தொடங்கிவிட்டது.

அக்காலப் பகுதியில் புரட்சிகர அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகள் பெண்ணிய செயற்பாடுகள், நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் அரசியல் ரீதியான ஒடுக்குமுறைகளின் காரணமாக பல அன்னிய தேசங்களுக்கும் புலம்பெயர நேர்ந்தது. அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் தாம் சென்ற நாடுகளுக்கு தமது முன்னேறிய சிந்தனைகளை பரப்பியதுடன் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் போராட்டங்களை அரசியல் ரீதியாக பலப்படுத்தும் பணியினை புலம்பெயர்ந்த நிலையிலும் மேற்கொண்டனர்.

அந்த வகையில் நவீன புரட்சிகர சூழலில் ரஷ்ய போல்ஷவிக் மென்ஷவிக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால பெண்ணியர்கள் இவ்வாறான செயற்பாடுகளின் முன்னோடிகளாக குறிப்பிடப்படுகின்றனர்.

சமீபகால விடுதலைப் போராட்டங்கள் சிலவற்றை எடுத்துக் கொள்வோமானால் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தினை இன்று இந்தளவிற்கு சர்வதேச முக்கியத்துவமுடைய போராட்டமாக முன்னநகர்த்தியதில் புலம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் மற்றும் அரபு மக்களின் தொடர்ச்சியான அரசியல் செயற்பாடுகள் குறிப்பிடத் தக்கவையாகும். எத்தனையோ ஏகாதிபத்திய சக்திகளின் எதிர் குறுக்கீடுகளின் மத்தியிலும் பலஸ்தீன பிரச்சனை நசுக்கப்படாமல் தொடர்ந்தும் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருவதில் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

இதேபோன்றே குர்திய போராட்டத் தலைவர் ஓக்கலானை துருக்கிய ஒடுக்குமுறை அரசு வஞ்சகமாக கைது செய்த போது உலகெங்கும் சிதறிக்கிடந்த புலம்பெயர் குர்திய மக்கள் நடாத்திய போராட்டங்கள் குர்திய விவகாரத்தை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தன.

அயர்லாந்து விடுதலைப் போராட்டத்திற்கான பொருளாதார பலத்தை அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் அயர்லாந்தியர்களே தாங்கி வருகின்றனர். நாம் இப்படி பல உதாரணங்களை வரலாற்றில் கானமுடியும்.

இந்த வரலாறுகளை மனதில் வைத்துப் பார்த்தால் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நமது புலம்பெயர்ந்த மக்களது தாயகத்திற்கான பங்களிப்புகளும் எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடிய ஒன்றல்ல.

கடந்த காலங்களில் போராட்டத்திற்கான பொருள்வகைப் பங்களிப்பிற்கு அப்பால் அரசியல் நிலையிலும் பல பங்களிப்புக்களை புலம்பெயர் மக்கள் ஆற்றியிருப்பதும் அது தமிழர் விடுதலைப் போராட்டம் அகநிலையில் பல வகைகளிலும் பலமடையக் காரணமாக இருந்ததும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மையாகும். ஆனால் நாம் கவனங் கொள்ள வேண்டிய புள்ளியோ வேறு.

தமிழர் தேசியத்தை பலப்படுத்தக்கூடிய பின்தளமாக புலம்பெயர் மக்கள் இருக்கும் நிலையிலும், குறிப்பாக இன்று வேறு எந்தவொரு விடுதலைப் போராட்டங்களுக்கும் இல்லாத புலம்பெயர் தளத்தை நாம் கொண்டிருக்கும் போதும், புலம்பெயர் சூழலில் பல பணிகள் ஆற்றப்பட்ட நிலையிலுமே விடுதலைப் புலிகள் மீதான தடைகள் தொடர்ச்சியாக அரங்கிற்கு வந்திருக்கின்றன. அவற்றின் உச்சமாகவே ஜரோப்பிய யூனியனின் தடை அரங்கிற்கு வந்தது. அவ்வாறாயின் நமது செயற்பாடுகளில் எங்கோ ஒரு இடைவெளியிருப்பதை நாம் எவ்வாறு மறுக்க முடியும்.

எனவே அவ்வாறான இடைவெளிகளை இனங்கண்டு கொள்வதும் அதனை நிவர்த்தி செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் ஏன் நாம் சிந்திக்கக் கூடாது.

03.

இன்றைய சூழலில் புலம்பெயர் தளத்தில் இரண்டு வகையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கிறது. ஒன்று, வெகுசனமட்ட செயற்பாடுகள், மற்றையது புத்திஜீவித்துவ செயற்பாடுகள். வெகுசன செயற்பாடுகளில் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க கோரி ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளை அவ்வப்போது மேற்கோள்ளல்.

குறிப்பாக தமிழர் தேசத்தில் சிங்களம் தமிழ் மக்களுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்ளும் போது அவற்றை கண்டித்து இவ்வாறான எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். (எ.கா - சமீபத்தில் சுவிசில் நடைபெற்ற தமிழ் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அரச படைகளின் வன்முறைகளுக்கு எதிரான கவன ஈர்ப்புப் போராட்டம் போன்றவை) இதன் மூலம் நமது போராட்ட நியாயம் சர்வதேச மயப்படுவதுடன் சர்வதேசத்தின் குறிப்பான கவனமும் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் மீது குவியும் அதேவேளை வெறுமனே பார்வையாளராக இருக்கும் புலம்பெயர் மக்கள் பலரும் ஒரு அரசியல் மயப்படுத்தலுக்குள்ளாகுவதுட

  • 1 month later...

6 கிழமைகள் கடந்த பின்னர் கூட இப்படி ஒரு முக்கியமான ஆக்கத்தை இதுவரை பார்த்தது 87 பேர் என்று தொழில்நுட்பம் சொல்லுது.

அந்த 87 இல்...

எத்தனை பேர் வாசிக்க முற்பட்டார்கள்?

எத்தனை பேர் 50 வீதமான ஆக்கத்தையாவது வாசித்தார்கள்?

எத்தனை பேர் இறுதிவரை பொறுமையாக இருந்து வாசித்தார்கள்?

வாசித்தில் எவ்வளவு உள்ளுக்குள்ளை ஏறி உறைச்சு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.