Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1,100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஶ்ரீ கார்கோடபுரீஸ்வரர் ஆலயக் கும்பாபிஷேகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் இங்கே 18 விதமான சிவ கணத்தாரும் இங்குவந்து ஈசனிடம் வேண்டிய வண்ணமே இருப்பதால், அவர்களின் வேண்டுதல்களை செவிமடுக்கும் விதமாக, இங்குள்ள நந்திதேவர் தலையை வலப்புறமாகச் சாய்த்தே அமர்ந்துள்ளார்.

 

பாரத நாடு ஆன்மிக பூமி. அதற்கு எடுத்துக்காட்டு ஊர்தோறும் எழுந்தருளும் ஆலயங்கள். நம் முன்னோர்கள் ஊர்தோறும் கோயில்கள் அமைத்து ஆன்மிகம், கலை, கல்வி ஆகியவற்றைப் போற்றி வளர்த்தனர். ஆனால் அவை எல்லாம் பிற்காலத்தில் பராமரிப்பு இன்றிச் சிதிலமடைந்தன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்து புதுப்பிக்க வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் ஓர் ஆலயம் 1,100 ஆண்டுகளாகக் கும்பாபிஷேகம் காணாமலும் புனரமைக்கப்படாமலும் இருந்தது.

கார்கோடபுரீஸ்வரர் ஆலயம்
கார்கோடபுரீஸ்வரர் ஆலயம்

நளமகராஜன், ஆதிசேஷன், பரீட்சித்து, குண்டுச் சித்தர் போன்றோரின் முன்வினைத் துயரங்களைத் தீர்த்து சகல நலங்களும் அருளிய ஈசன் காக்கமொழி கார்கோடகபுரீஸ்வரர். இந்த ஆலயத்துக்குச் சென்று கார்கோடகபுரீஸ்வரரை வணங்கினால், ஏழேழ் பிறவிகளிலும் அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்கிறது தலபுராணம். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலயம் பாழ்பட்டுக் கிடக்கிறது என்று அறிந்து அதை சக்தி விகடனில் இதழில் 'ஆலயம் தேடுவோம் பகுதியில் எழுதினோம். வாசகர்களின் பங்களிப்பாலும், நல்ல உள்ளங்களின் ஒத்துழைப்பாலும் தற்போது ஆலயம் புனரமைக்கப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

நலமே அருளும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ கற்பகாம்பாள், பைரவ மூர்த்தி, ஸ்ரீநடராஜர், கார்கோடகன் எனும் நாகன், நவகிரகங்கள் ஆகிய தெய்வச் சந்நிதிகள் உள்ளன. சந்திர புஷ்கரணி தீர்த்தம்; வில்வம் தல விருட்சம். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வெள்ளி நாக மோதிரத்தை உண்டியலில் செலுத்தினால் ராகு - கேது தோஷம் நீங்கும்; வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால், சந்தான வரம் கிட்டும்; நாகர் சிலைகளுக்கு மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால், கல்யாண வரம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

ஸ்ரீ கற்பகாம்பாள்
 
ஸ்ரீ கற்பகாம்பாள்

எப்போதும் இங்கே 18 விதமான சிவ கணத்தாரும் இங்குவந்து ஈசனிடம் வேண்டிய வண்ணமே இருப்பதால், அவர்களின் வேண்டுதல்களை செவிமடுக்கும் விதமாக, இங்குள்ள நந்திதேவர் தலையை வலப்புறமாகச் சாய்த்தே அமர்ந்துள்ளார். இந்த ஆலயத்தில் நித்ய பிரதோஷம் நடைபெற்று வருவதால் இதில் கலந்துகொண்டு வழிபடுபவரின் பிரார்த்தனைகளும் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மேலும் ஆதிசேஷனும் கார்கோடகனும் தொழுத தலம் என்பதால் இங்கு வந்தாலே நாக தோஷம் நீங்கும். ராகு - கேது இருவருக்கானப் பரிகாரத் தலமாகவும், சனியின் பாதிப்பிலிருந்து விடுபட நளனுக்கு அருள் செய்த தலம் என்பதால், சனி தோஷ நிவர்த்தித் தலமாகவும் இது திகழ்கிறது.

 

அதுமட்டுமில்லை கார்கோடகன் நளனைத் தீண்டி தண்டனைப் பெற்றதால், இந்த ஊரில் இன்றுவரை எந்த நாகமும் எந்த ஜீவராசியையும் தீண்டுவதில்லை என்று ஆச்சர்யம் தெரிவிக்கிறார்கள் ஊர் மக்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நாக தோஷ பாதிப்பு கொண்டவர்கள், உறவுகள் - சொத்துக்கள் இழந்தவர்கள் இங்கு வந்து கார்கோடகனுக்கு வெண்பட்டு வஸ்திரம் சாத்தி, மருக்கொழுந்து மொட்டு அல்லது தாழம்பூ சூட்டி வழிபட்டால், எல்லா சிக்கலும் தீர்ந்து நலம் பெறுவார்கள் என்கிறது தலவரலாறு.

நல்லது நடந்தது! - 1,100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஶ்ரீ கார்கோடபுரீஸ்வரர் ஆலயக் கும்பாபிஷேகம்!
 

பெருமைகள் பல கொண்ட இந்த ஆலயத்துக்கு 1100 ஆண்டுகளுக்கு பிறகு வரும் தை 22-ம் நாள் அதாவது 4.2.2021 அன்று மகாகும்பாபிஷேக பெருவிழா நடைபெற உள்ளது. இந்த சிறப்பு வைபவத்தில் கலந்து கொண்டு ஈசன் அருளால் தங்களின் பிறவி பயன் அடைய ஓர் அறிய வாய்ப்பை ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நல்ல சந்தர்ப்பத்தில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு திருவருள் பெற வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம் என ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எப்படிச் செல்வது?

காரைக்காலிலிருந்து 5 கி.மீ தொலைவில் (நிரவி - ஊழியபத்து சாலையில்) உள்ளது. நிரவி, ஊழியபத்து, விழிதியூரில் இருந்து வாகன வசதிகள் உள்ளன.
நல்லது நடந்தது! - 1,100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஶ்ரீ கார்கோடபுரீஸ்வரர் ஆலயக் கும்பாபிஷேகம்! | Kumbabishekam after 1100 years at Kaarkodagapureeshwarar Temple (vikatan.com)

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா... இது, பிழம்பு இணைத்த முதலாவது பக்திப் பதிவு என்பதனை...

வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். 👍🏼 🙏🏽

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

ஆஹா... இது, பிழம்பு இணைத்த முதலாவது பக்திப் பதிவு என்பதனை...

வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். 👍🏼🙏🏽

இல்லையே.... நல்லூர் நெற்கதிர் அறுவடை விழா செய்தியையும் இதைப் போல பல கோயில்களின் திருவிழாக்கள், குடமுழுக்கு போன்ற விடயங்களையும் தொடர்ந்து இணைத்து வருகின்றேனே.. 


இந்த செய்தியில் சொல்லப்பட்ட நாக தோசம், முன்வினைத் துயரங்கள், ஆதிசேஷன் போன்ற விடயங்களில் எனக்கு மருந்தளவுக்கும் நம்பிக்கை இல்லை என்பதுடன் அவை வெறும் புருடாக்கள் என்பதை அறிவேன். 

ஆனால் அதே நேரத்தில் பழைய தொன்மைமிக்க கோயில்கள் என்பது வெறுமனே கட்டிடங்கள் அல்ல அவை அன்று வாழ்ந்த மக்களின் அன்றைய நம்பிக்கைகளின் பால்பட்டு, வாழ்வியலுடன் உருவாக்கப்பட்டவை என்று நான் அறிவேன். இப்படியான தொன்மைகளில் தான் எம் வேர்கள் ஊன்றி நிற்கின்றன. அவற்றை பேணி பாதுகாக்க வேண்டியது தலைமுறைகளின் கடமை. 1000 வருடங்களுக்கு முற்பட்ட ஒன்று மற்றவர்களின் கவனத்தை மீண்டும் பெறுவது என்பது எம் தொன்மையை மீண்டும் வெளிக்காட்டுவது போன்ற மகத்தான விடயம் என்பதால் இவற்றை தொடர்ந்து இணைத்து வருகின்றேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா......🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.