Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” செல்லும் போராட்டம் சொல்லும் செய்தி என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” செல்லும் போராட்டம் சொல்லும் செய்தி என்ன?

 

 
தி. திபாகரன் 

எங்கெல்லாம் அடக்குமுறை அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் போராட்டங்கள் வெடிப்பெடுக்கும் என்பதை மனிதகுல வரலாறு பதிவாக்குகிறது. இன்று தமிழ் மண்ணில் அத்தகையதோர் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டம் வட கிழக்கு சிவில் அமைப்புக்களின் தலைமையில் ”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” என்ற கோஷத்துடன் வெடித்து கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி பொங்கி பிரவாகித்து ஓடத் தொடங்கிவிட்டது.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சிங்களப் பேரினவாத சக்திகளினால் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும் மறுக்கப்படும் போதெல்லாம் தமிழ் தலைவர்களின் அழைப்பிற்கிணங்க எல்லாவகையான ஜனநாயக வழிப் போராட்டங்களிலும் தமிழ் மக்கள் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளனர்.

1956ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனிச்சிங்களச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்துகல்லோயா சிங்கள குடியேற்றத் திட்ட வாசிகளினால் அம்பாறையில் சிறுவர்கள், குழந்தைகள் , முதியவர்கள் , கர்ப்பிணித் தாய்மார்கள், இளைஞர் , யுவதிகளென 156 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்தகையசூழமைவில் 1957ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் என்பது அதை சிங்கள மக்களுக்கு மட்டுமே உரியது தமிழ் மக்களுக்கு உரியது அல்ல என்று கூறித் தமிழரசுக் கட்சி சுதந்திர தினத்தை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி, பூரண கடையடைப்பு , கறுப்புக் கொடி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது .

தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க வடக்கு— கிழக்கு மாகாணங்கள் எங்கும் தமிழ் மக்கள் பூரண ஹர்த்தால்– கடையடைப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

அன்றைய நாள் திருமலை நகரில் நடராஜன் என்ற இளைஞர் மணிக்கூட்டுக் கோபுரத்தில் கறுப்புக்கொடி கட்டுவதற்காக ஏறினார். அப்போது திருமலை மீன் சந்தையில் இருந்து சிங்களப் பேரினவாதி ஒருவனால் திருமலை நடராஜன் குழல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரே சிங்கள அரச எதிர்ப்புப் போராட்டத்தில் களப்பலியான முதலாவது தமிழர் ஆவார்.

 

திருமலை நடராசனை சுட்ட சிங்கள பேரினவாதி சிங்கள அரசினால் கைதுசெய்யப்படவுமில்லை, நீதிமன்றத்தின் முன் யாரும் நிறுத்தப்படவுமில்லை, எந்தொரு நீதி விசாரணையும் இடம் பெறவுமில்லை.

இதன் பின்னர் பண்டா– செல்வா உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு அதுவும் குறுகிய காலத்தில் கிழித்தெறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1958 ஆண்டு அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலை கலவரத்தில் தமிழ் மக்கள் வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்டனர்.

1960ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த பொதுத் தேர்தல் மூலம் ஜூலை மாதம் ஆட்சிக்கு வந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கம் சிங்கள மொழியை வடக்கு- கிழக்கு உட்பட நாடு முழுவதும் நீதிமன்ற நிர்வாக மொழியாக்கும் சட்டமூலத்தை அன்றைய நீதி அமைச்சர் சாம் பி சி பெனான்டோ வாயிலாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியது. இது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

இப்பின்னணியில் தனிச்சிங்களச் சட்டத்தை நாடு முழுவதும் நிர்வாக மொழியாக 1961 ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்துவதென அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக போராடுவதென ஜனவரி 21ம் திகதி தமிழரசுக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.

அதன்படி பெப்ரவரி 20ஆம் திகதி மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 58 நாட்கள் சத்தியாகிரகப் போராட்டம் தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஏப்ரல் 17ஆம் தேதி சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 18ஆம் தேதி தந்தை செல்வநாயகம் உட்பட தமிழ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதிற் பெரும்பாலானோர் பனாகொடை இராணுவ முகாமில் அடைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சத்தியாக்கிரகப் போராட்டம் கைவிடப்பட்டது.

அதேவேளை தமிழரசுக் கட்சி இப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுக்கவில்லை என்பதும் இதேபோன்ற பாரிய அளவிலான போராட்டங்களை அது பின்னாட்களில் முன்னெடுக்கவில்லை என்பதுமான குற்றச்சாட்டுக்களும் இத்துடன் கூடவே பதிவு செய்யப்பட வேண்டியது என்பதும் உண்மை.எப்படியோ தமிழ் மக்களின் வரலாற்றில் இச்சத்தியாக்கிரகப் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதிலும் சந்தேகம் இல்லை.

 

இப்போராட்டத்தின் போது தமிழ் தலைவர்களின் அழைப்பையேற்று சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் என அனைத்து தரப்பினரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். கிழக்கில் குறிப்பாக அம்பாறையில் முஸ்லிம் மக்கள் இந்தப் போராட்டத்தில் பெரும் பங்காற்றினார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

காலத்துக்கு காலம் தமிழ் மக்களை தமிழ்த் தலைவர்கள் போராட்டத்திற்கு அழைத்த போதெல்லாம் மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தவறியதில்லை. 65, 000 ஆண்டுகால தொடர்ச்சி மிக்க தமிழ் மக்களின் பண்பாட்டு வேரில் போர்குணம் உறைந்து கிடக்கின்றது. போர்க் குணமிக்க தமிழ் பேசும் மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக எப்போதுமேபோராட அவர்கள் தவறியது கிடையாது.

ஜி ஜி பொன்னம்பலம் ”தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என கோஷமிட்டு அழைக்க தமிழ் மக்கள் அவர் பின்னே நின்றார்கள். ஆனால் அவர் அமைச்சுப் பதவியை பெற்றுச் செல்ல அவரை அம்போவென்று கைவிட்டார்கள். அதற்குப் பின்னர் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் ”அறப்போர் தொடுப்போம், தூக்கு மேடை பஞ்சு மெத்தை, துவக்கு சூடு பந்து விளையாட்டு.” என்ற கோஷத்துடன் வந்தபோது அவருக்குப் பின்னே தமிழ் மக்கள் அணிவகுத்து நின்றனர்.

ஆனால் 1961ஆம் ஆண்டுக்கு பின்னர் தந்தை செல்வா இந்தகைய பாரிய அறவழிப் போராட்டம் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதும் அவர் மேற்கொண்டு முன்னேற்றகரமான பாதையில் பாரிய அளவில் மக்கள் மயப்பட்ட நேரடி போராட்டங்களை முன்னெடுக்கவும் இல்லை என்பது துயரமான உண்மையாகும்.

1970ல் தரப்படுத்தல் முறை கொண்டு வரப்பட்டது. தமிழ் இளைஞர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு விடுதலை இயக்கங்களும் தமிழ் மண்ணில் தோற்றம் பெற்றன. இந்த விடுதலை இயக்கங்களுக்கு பின்னே இளைஞர்களும் யுவதிகளும் சாரை சாரையாக அணிவகுத்து நின்றனர்.

 

இந்த நிலையில் 1984 ஆண்டு அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி ”இலங்கை இராணுவத்தில் 23000 படையினர் உள்ளனர் என்றும் ஆனால் பயங்கரவாதிகளின் தொகை 25000 மேல் உள்ளது ” எனவும் குறிப்பிட்டமை இங்கே கவனத்திற்குரியது. மேற்படி லலித் அத்துலத் முதலியின் தகவலை கருத்தில் கொள்ளுகின்ற போது அன்றைய நிலையில் தமிழ் மக்கள் தரப்பில் போராட்டத்திற்கான பங்களிப்புடன் கூடிய ஆதரவு பற்றிய எதார்த்த உண்மை தெளிவாக தெரிகின்றது.

மக்கள் போராட்டத்துக்கு தமது பிள்ளைகளை கொடுத்தார்கள், உடமைகளை கொடுத்தார்கள் , நகைகளை கொடுத்தார்கள் , சாப்பாட்டு பசலையும் கொடுத்தார்கள்.போராட்டத்திற்கு காவலாகவும் நின்றார்கள். தமிழ் மக்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் போராட்ட அழைப்பை ஏற்று போராட்டக் களத்தில்நிற்க தவறவுமில்லை, தயங்கவுமில்லை.

தமிழ் மக்கள் எப்போதும் போர்க் குணம் கொண்டவர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 11 ஆண்டுகளாக போராடாமல் தூங்கிக்கொண்டு இருந்தமைதான் பெரும் குற்றச் செயலாகும்.

ஆனால் இப்போது சர்வதேச சூழல் தமிழர்களுக்கு சற்று கனிவானதாக காணப்படும் நிலைமையில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் எழத் தொடங்கின.

இதற்கு முன் குறிப்பாக ஊடகவியலாளர்கள் , அறிஞர்கள் , மதத்தலைவர்கள் சமூக நலன் விரும்பிகள் மட்டத்திலிருந்து பின்வருமாறு கருத்துக்கள் உருவாக அதுவாலாயின. அதாவது தமிழ் மக்களுக்குத் தேவையானது எல்லாவகையிலும் ஐக்கியமே என்றும், ஐக்கியமே பலம், ஒற்றுமையே பலம், தலைவர்கள் ஒன்று திரள்வதுதான் இன்றைய முதல் நிலைத் தேவை, இனவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும், அதுவே அவசியமானது என்னும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் அவையெல்லாம் புறக்குடத்தில் ஊற்றிய தண்ணீராக பயனற்றுப் போயின. தலைவர்கள்எனப்படுவோர் ஒன்று சேர மறுத்தார்கள். ஆனால் ஜனாதிபதித் தேர்தலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் முகம்கொடுத்து இவர்கள் சிதைந்து போனநிலையில் அவர்கள் குறைந்தபட்சக் கூட்டுக்குத் தயாரானார்கள்.

இன்று வரலாறு அவர்களுக்கு பாடத்தைக் கற்றுத் தருகிறது. தன்னிச்சையாக தாம்போன போக்கில் தறிகெட்டுப் போனவர்கள் இன்று ஐக்கியப்பட்டு நிற்கவேண்டிய நிலைக்கு இவர்களை வரலாறு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்பது ஓர் ஆரோக்கியமான முன்னேற்றமாகும். அத்தகைய பின்னணியிற்தான் “”பொத்துவிலிருந்து பொலிகண்டி வரை “” என்ற போராட்டம் தொடங்கியிருக்கிறது.

 

தமிழ் தலைவர்களிடையே காணப்பட்ட போட்டி பொறாமைகளின் மத்தியில், கைவிடப்பட்ட “”எழுக தமிழும்”” நீர்த்துப் போகச் செய்யப்பட்ட “”மக்கள் போராட்டங்களும்”” துயர்மிக்க வரலாறான பின்னணியில் இப்பொழுது மீண்டும் ஒரு பிரம்மாண்டமான மக்கள் போராட்டத்திற்கான சூழல் தோன்றியிருக்கிறது. அதில் ஒரு சிறு கருவே “” பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை “” என்ற போராட்டப் பயணமாகும்.

இலங்கைத் தீவில் தற்போது காணப்படுகின்ற அரசியல் போக்கின் தர்க்கபூர்வ வளர்ச்சி நிலையை அவதானிக்கும் போது ஒன்றன் பின்னான ஒன்றென அதன் தொடர் விளைவுகளின் நிமித்தம் இந்த ஆண்டின் பிற்பகுதியைத் தொடர்ந்து இலங்கைத்தீவின் அரசியலானது நெருப்பாறாகவே இருக்கும் போல் தெரிகிறது. எது எப்படியிருப்பினும் இவை அனைத்தும் இன ஒடுக்குமுறை என்ற எரிமலையிலிருந்தும் தமிழ் மக்களின் உரிமை என்ற அச்சாணியிலிருந்தும் எழும் நெருப்பாறாகவே அமையும்.

 

 

http://samakalam.com/பொத்துவில்-தொடக்கம்-பொல/

 

Edited by கிருபன்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் அதிகார பீடத்துக்கும்  செய்தி தளம் களுக்கும் இடைவெளி இந்த நிமிடம் வரை பி 2 பி காரணமாக ஐநாவுக்கு சமயம் என்று அனுப்பியவர்கள் யார் என்று தெரியாது ?

இந்தியாவில் எதோ ஒரு ஆசிரமத்தில் இருந்தவராம்  தற்போது நல்லூர் முருகன் கனவில் சொல்லி வேலர்  வேலன் சுவாமி என்று பெயர் மாற்றியவரின்  பின் புலம் பற்றி யாருக்கும் தெரியாது?

மொரட்டுவ யுனியில் படித்தவராம் யாழிலும்  மொரட்டுவ சென்றவர்கள் உள்ளனர் யாருக்கும் வேலன் சுவாமியை தெரியுமா ?

சீமான் என்றால் பிச்சு புடுங்குவம் இது யார் வேலன்  சுவாமி ?

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2021 at 08:37, கிருபன் said:

65, 000 ஆண்டுகால தொடர்ச்சி மிக்க தமிழ் மக்களின் பண்பாட்டு வேரில் போர்குணம் உறைந்து கிடக்கின்றது.

65 000 ஆண்டுகள்?

On 7/2/2021 at 08:37, கிருபன் said:

ஜி ஜி பொன்னம்பலம் ”தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என கோஷமிட்டு அழைக்க தமிழ் மக்கள் அவர் பின்னே நின்றார்கள்.

அதற்குப் பின்னர் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் ”அறப்போர் தொடுப்போம், தூக்கு மேடை பஞ்சு மெத்தை, துவக்கு சூடு பந்து விளையாட்டு.” என்ற கோஷத்துடன் வந்தபோது அவருக்குப் பின்னே தமிழ் மக்கள் அணிவகுத்து நின்றனர்.

முன்னைய காலத்து அரசியல் தலைவர்கள் தொடங்கி தமிழ் மக்கள் வாழ்கையோடு நன்றாக விளையாடி தாங்கள் பயனடைந்து வந்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.