Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் பலப்பரீட்சை

Featured Replies

மகிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் நாளை பலப்பரீட்சை.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை பலப்பரீட்சை நடைபெற உள்ளது.

அரசாங்கம் அமைத்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழலுக்கு மகிந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு தாவிய 17 பேருக்கான அமைச்சகங்களை அமைக்க 65,756,100 ரூபாவுக்கான கூடுதல் நிதி நிலை அறிக்கையை மகிந்த அரசாங்கம் நாளை தாக்கல் செய்ய உள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை இந்த கூடுதல் நிதி நிலை அறிக்கைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

"அண்மைய வரலாற்றில் தாக்கல் செய்யப்பட்ட பெருந்தொகையான கூடுதல் நிதிநிலை அறிக்கை இதுதான். இத்தகைய கூடுதல் நிதி நிலை அறிக்கைகளால் ஆண்டு நிதிநிலை அறிக்கை என்பது நகைப்புக்கிடமாகி விட்டது. நாட்டின் பொருளாதாரம் நாசமாகிக் கிடக்கிறது" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

"நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலையில் அரசாங்கத்தின் தொகையை வீணடிக்க நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று ஜே.வி.பி. கட்சியின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஆனால் எதிர்க்கட்சிகளை விட அரசாங்கத்துக்கு 16 வாக்குகள் அதிகம் இருப்பதால் பிரச்சினை ஏதும் இல்லை என்று அரசாங்க கொறாடாவான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தரப்பில் 104 பேரும் அரசாங்கத்தரப்பில் 120 பேரும் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் முன்னாள் அமைச்சர்களான சிறீபதி சூரியராச்சி மற்றும் மங்கள சமரவீர ஆகியோரது நிலைப்பாடு இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தற்போது லண்டனில் உள்ள மங்கள சமரவீர அனேகமாக நாளை கொழும்பு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தை ஆதரிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

இவற்றைச் சுட்டிக்காட்டும் கொழும்பு அரசியல் நோக்கர்கள், மகிந்த அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் கூடுதல் நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றுவதற்கான உரிய வாக்குகள் கிடைக்குமா? என்ற சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்

-Puthinam-

மகிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் நாளை பலப்பரீட்சை...

எப்பிடியும் குதிரை ஓடியாவது பரீட்சையை மகிந்து பாஸ் பண்ணிவிடுவான்...

"நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலையில் அரசாங்கத்தின் தொகையை வீணடிக்க நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று ஜே.வி.பி. கட்சியின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்...

அதென்ன தொகை? பிணங்களின் எண்ணிக்கையா?

இன்னைக்காக்கும் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Tue Jun 19 8:24:25 EEST 2007

நாடாளுமன்றில் முக்கிய வாக்கெடுப்பு அரசு - எதிரணி பலப்பரீட்சை இன்று

அமைச்சுகளுக்கான 65 கோடி ரூபா குறைநிரப்பு நிதிப் பிரேரணை இன்று எதிர்க்கட்சி உட்பட பிரதான கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட முக் கிய கட்சிகள் அரசுக்கு சவால் விடும் வகை யில் பிரேரணைக்கு எதிராக வாக்களிக் கப்போவதாக அறிவித்துள்ள நிலையில் இன்றைய வாக்கெடுப்பு அரசு எதிரணி பலப்பரீட்சைக்களமாக மாறியிருக்கின்றது.

நாடாளுமன்றில் இன்று அரசால் சமர்ப் பிக்கப்படவுள்ள 65 கோடி ரூபா குறை நிரப்புப் பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஜே. வி. பி., தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு மற்றும் மேலக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் எதிர்த்து வாக்களிக்கத் தீர்மானித்துள்ளன.

தமிழ் மக்களுக்கு சிறிதும் பயனளிக்காத அவர்களைக் கொன்று குவிப்பதற் காக ஒதுக்கப்படும் நிதி தொடர்பான குறை நிரப்புப் பிரேரணைக்கு ஆதரவாக வாக் களிப்பது தமிழர்களை தமிழர்களே கொல் வதாக அமைந்துவிடும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அபிவிருத்திப் பணிகளுக்கு சிறிதும் உதவாத அமைச்சுகளை மாத்திரம் பலப் படுத்த உதவுகின்ற இப்பிரேரணையை நாம் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று மேலக மக்கள் முன்னணியின் தலை வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில்

அமைச்சர்களுக்கு மக்களின் பணத்தை அநியாயமாக ஒதுக்கிக் கொடுக்கும் இந் தக் குறைநிரப்புப் பிரேரணையை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். என்றார்.

பொருள்களின் விலை அதிகரித்து மக் கள் வாழவே முடியாமல் துன்பப்படும் இந்த நிலையில் 65 கோடி ரூபாவை அமைச்சர்களுக்கு வழங்க அரசு எடுத்தி ருக்கும் தீர்மானத்தை எம்மால் ஒருபோதும் ஏற்க முடியாது.

ஆகவே, இந்தப் பிரேரணைக்கு எதிரா கவே நாம் வாக்களிப்போம். என்றார் திஸ்ஸ அத்தநாயக்க.

இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்ட மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கை யில் கூறியதாவது:

தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகிய நாம் அடிப்படையில் வரவு செலவுத்திட் டத்தை முற்றாக நிராகரித்துள்ளோம். அந்த வரவு செலவுத்திட்டத்துடன் தொடர்பு பட்ட 65 கோடி ரூபா குறைநிரப்புப் பிரே ரணையை நாம் ஆதரிக்க மாட்டோம்.

இந்தப் பணம் அமைச்சுக்களைப் பலப் படுத்த, அமைச்சுக்களின் தேவைகளை நிறைவேற்ற ஒதுக்கப்படவுள்ளது.

எந்த நிதி ஒதுக்கீடும் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் சாதகமாக அமையாது. அவர் களை மேலும் மேலும் துன்பத்தில் ஆழ்த்த வும் கொன்று குவிக்கவுமே உதவும்.

இந்த மாதிரியான பிரேரணைகளுக்கு நாம் ஆதரவு வழங்குவது தமிழரைத் தமி ழன் கொன்று குவிப்பதற்குச் சமனானது. ஆகவே இந்தப் பிரேரணைக்கு எதிரா கவே வாக்களிப்போம்.

இதேவேளை

கொழும்பில் உள்ள லொஜ்களில் உள்ள தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக் வெலவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது. அவ்வாறு பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவாக நாம் வாக்களிப்போம். என் றார்.

இதேவேளை

ஜே.விபியின் நாடாளுமன்ற உறுப் பினர் விமல் வீரவன்ஸ இது குறித்து தெரி வித்திருப்பதாவது

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் என்று நாம் அரசுக் குக் கூறிவந்தோம். இன்றும் அதைத்தான் சொல்கின்றோம்.

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிக ரிக்கப்பட்டால் மக்களின் பணம் அமைச் சர்களின் தேவைகளுக்காகச் செலவிடப் பட வேண்டிவரும். மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் போய்விடும் என்று நாம் அரசுக்குச் சுட்டிக்காட்டியிருக்கி றோம்.

நாம் கூறிவந்தது உண்மையாகிவிட் டது. புதிதாகப் 17 பேரை ஐ.தே.கட்சியி லிருந்து எடுத்து அமைச்சர்களாக்கியதன் காரணமாக 65 கோடி ரூபா, மக்கள் பணத்தை அந்த அமைச்சுகளுக்கு ஒதுக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, மக்களின் பணத்தை அமைச் சர்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் குறை நிரப்புப் பிரேரணைக்கு எதிராகவே வாக் களிக்ப்போம். என்றார்.

உதயன்

ஹீ ஹீ.

இன்னைக்கு மஹிந்தக்கு ஆப்பா?

  • தொடங்கியவர்

இன்று மதியம் பாராளுமன்றம் ஆரம்பித்த சமயம் மங்கள சமரவீர, சிறிபதி சூரியாராட்சி ஆகிய இருவரும் எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து அமர்ந்தனர்.

Samaraweera, Sripathi sit with opposition in SL Parliament.

Mangala Samaraweera, former Sri Lankan Foreign Minister sacked by SL President Mahinda Rajapaksa in February and Sripathi Sorriyaarachi, one of the other ministers sacked by Mr. Rajapaksa, sat with the opposition in the Sri Lankan Parliament after stating that they were not satisfied with certain policies of their Sri Lanka Freedom Party (SLFP), the main constituent party of the UPFA government.

When SL Parliement resumed its seating, Tuesday noon, both the MPs walked towards the opposition row.

The Sri Lankan Parliament is scheduled to debate a motion of non-confidence against Keheliya Rambukwelle, the Sri Lankan minister of foreign employment promotion and welfare, for his recent explanation to the SL parliament that Tamils were expelled from Colombo lodges according to their own wishes and that the SL government was only assisting the civilians to flee from Colombo.

Meanwhile, the ruling alliance was also expected to push for a motion of non-confence against a UNP opposition parliamentarian Luxman Seneviratne who had questioned whether the Government had a hand in the abduction and killings of ICRC workers.

-Tamilnet-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியாராட்சி எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வு.

பதவி நீக்கப்பட்ட முன்னாள் ஆளும் கட்சி அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூரியாராட்சி ஆகியோர் இன்று எதிர்கட்சி வரிசையில் அமந்துள்ளனர்.

இன்று பாராளுமன்றில் வருகை தந்த இவ்விருவரும் எதிர்க்கட்சி முன்வரிசையில் அமர்ந்துள்ளனர். மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

-Pathivu-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

20 வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த "தேர்ச்சியடைந்தார்"

[செவ்வாய்க்கிழமை, 19 யூன் 2007, 20:12 ஈழம்] [செ.விசுவநாதன்]

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த கூடுதல் நிதிநிலை அறிக்கை நிறைவேறியது.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில் 20 வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த அரசாங்கத்தின் கூடுதல் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

அரசாங்கத்துக்கு ஆதரவாக சுதந்திரக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய, மலையக மக்கள் முன்னணி ஆகியவை வாக்களித்தன.

இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட சிறீபதி சூரியராச்சி மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தும் வாக்கெடுப்பில் அவர்கள் இருவரும் பங்கேற்கவில்லை.

அரசாங்கத்துக்கு எதிராக 87 வாக்குகள் பதிவாகி இருந்தன.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு தாவியோருக்கான 6 புதிய அமைச்சரவை உருவாக்கத்துக்காக 650 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டுக்கு அனுமதி கோரி கூடுதல் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக உடனடியாக நாட்டுக்கு திரும்புமாறு அரசாங்கம் பணிப்புரை விடுத்ததினால் , அதிகாலையில் பலர் நாடு திரும்பி வாக்களிப்பில் கலந்து மகிந்தாவை வெற்றி பெறச் செய்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய வாக்களிப்பில் எதிர்க்கட்சித்தலவர் ரணிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 20 பாராளுமன்ற உருப்பினர்கள் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் இல்லாததினால் வாக்களிக்கவில்லை.

நேற்றைய வாக்களிப்பில் எதிர்க்கட்சித்தலவர் ரணிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 20 பாராளுமன்ற உருப்பினர்கள் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் இல்லாததினால் வாக்களிக்கவில்லை.

எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைகள்

அரசின் குறைநிரப்புப் பிரேரணை நேற்று 20 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் 20 எம்.பிக்கள் நாடாளுமன்றம் வராததால்!

ஏழு புதிய அமைச்சுகளுக்கான குறை நிரப்பு நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் இருபது மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. எதிர்க்கட்சி உட்பட பிரதான கட்சிகள் ஒன்று திரண்டு இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக் களித்த போதிலும், ஆளும் தரப்பிலும் எதிர்த் தரப்பிலுமாக சுமார் இருபது வரையான எம்.பிக்கள் நேற்று சபையில் பிரசன்ன மாகாத காரணத்தால் அரசு இந்தப் பலப் பரீட் சைக்களத்தில் ஒருவாறு தப்பிப் பிழைத்திருக் கிறது. எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது உறுப்பினர் களும் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் காணப்படவில்லை.

பிரேரணைக்கு ஆதரவாக 107 வாக்கு களும் எதிராக 87 வாக்குகளும் கிடைத்தன.

எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் ஜே.வி.பி. தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு ஆகிய பிரதான கட்சிகள் பிரேர ணைக்கு எதிராக வாக்களிக்கும் என்று அறி விக்கப்பட்டிருந்ததால் இந்தப் பிரேரணை அரசுக்கு ஒரு பலப்பரீட்சையாகி அதில் ஆளும் தரப்பு கவிழ்ந்து போய்விட வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டது.

ஆயினும் இருபது மேலதிக வாக்குகளால் அரசு தப்பிவிட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி, மேலக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர். ஆளுங்கட்சியுடன் சேர்ந்து ஹெல உறுமய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன பிரரேணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

-Uthayan-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.