Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை

மு க ஸ்டாலின்

பட மூலாதாரம், GETTY IMAGES

தி.மு.க தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன், அண்ணா நகர் எம்.எல்.ஏ மோகன் மகன் கார்த்திக் உள்பட தி.மு.க தலைமைக்கு வேண்டியவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. என்ன காரணம்?

சென்னை நீலாங்கரையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் வீடு இருக்கிறது. இன்று காலை செந்தாமரையின் வீட்டுக்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கணக்கு விவரங்களை சோதனை செய்து வருகின்றனர். அதேபோல், சபரீசனின் நட்பு வளையத்தில் இருக்கும் கார்த்திக், `ஜீ ஸ்கொயர்' பாலா ஆகியோரும் வருமான வரித்துறையின் வளையத்தில் சிக்கியுள்ளனர். 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று நாள்களே உள்ள நிலையில், வருமான வரித்துறையின் தொடர் நடவடிக்கைகள் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில், திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க செயலாளர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் வீடு ஆகியவற்றில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக, தி.மு.க தலைமையின் கணக்கு விவரங்களைக் கவனித்து வருபவராக அறியப்படும் எ.வ.வேலுவை குறிவைத்து நடந்த இந்தச் சோதனை, திமுகவினர் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியது. தொடர்ந்து, தி.மு.க தலைவரின் மருமகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சபரீசன் குறிவைக்கப்பட என்ன காரணம்?

`` சட்டமன்றத் தேர்தலுக்கு 3 நாள்களே இருப்பதால், கட்சி நிர்வாகிகளின் செலவுக்கான தொகையை அனுப்பும் வேலைகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான பணம் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த 2 நாள்களாக இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று பிற்பகல் அறிவாலயத்தில் பணம் அனுப்புவது தொடர்பாக சற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. மற்ற மாவட்டங்களில் செலவுக்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டாலும், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இந்தத் தொகை அனுப்பப்பட்டு வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் வருமான வரித்துறை உள்ளே வந்திருக்கலாம் என நினைக்கிறோம்" என்கிறார் தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர். 

இந்திய வருமான வரித் துறை

பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், `` தி.மு.கவுக்குள் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும் அனைத்து நடவடிக்கைகளும் சபரீசன் மூலமாகத்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். கணிப்பொறியியல் தொடர்பான வர்த்தகத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக், பாலா ஆகியோரும் சபரீசனின் நட்பு வளையத்தில் உள்ளனர். இவர்கள் அனைவரும் தொழில்ரீதியாகவும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

ஸ்டாலின் குடும்பத்தின் பதற்றம்

தி.மு.கவுக்கு தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வரும் ஐபேக் நிறுவனத்துக்குத் தேவையான வசதிகளையும் சபரீசன் செய்து கொடுக்கிறார். வேட்பாளர் தேர்வு, அவர்களது செலவுகள் போன்றவற்றிலும் சபரீசனின் தலையீடு இருந்ததாகக் கூறப்பட்டது. எ.வ.வேலுவை வருமான வரித்துறை குறிவைத்ததுமே அடுத்ததாக தி.மு.க தலைவருக்கு வேண்டியவர்களின் வீட்டுக்கு வருவார்கள் என நினைத்தோம். அதன்படியே நடந்துவிட்டது. இன்று காலை நீலாங்கரை வீட்டில் ரெய்டு தொடங்கியதும் முக்கிய நிர்வாகிகளைத் தொடர்பு கொண்ட ஸ்டாலின் குடும்பத்தினர், `உடனே செந்தாமரை வீட்டுக்குச் செல்லுங்கள்' எனப் பதற்றத்தோடு கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்களும் தங்களது ஆதரவாளர்களைக் கூட்டிக் கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்தனர்" என்கிறார்.

`அரசியல் உள்நோக்கத்துடன் ஐ.டி ரெய்டு நடத்தப்படுகிறது' என சி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்பட தி.மு.கவின் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலரும், சோதனையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அதேநேரம், தேர்தலுக்கு சில நாள்களே இருப்பதால், `தி.மு.க தரப்பில் எந்த உதவியும் களத்துக்குச் சென்றுவிடக் கூடாது' என்ற முனைப்பில் பணப் பரிமாற்றத்தை முடக்கும் வேலைகள் நடப்பதாகவும் திமுகவினர் குமுறுகின்றனர்.

சபரீசனுக்கு என்ன சம்பந்தம்?!

இந்தியத் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், PTI

``ரெய்டு நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என தி.மு.கவின் தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டானிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் உள்பட தன்னாட்சி அமைப்புகளை எல்லாம் தி.மு.கவுக்கு எதிராகப் பயன்படுத்தி வருகின்றனர். ரெய்டு தொடர்பான புகார்கள் எதுவும் வருமான வரித்துறைக்குச் செல்லவில்லை. இதுதொடர்பாக ஏற்கெனவே பட்டியலை கையில் வைத்துக் கொண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்தத் தேர்தலில் தி.மு.கவை எந்த இடத்திலும் நகரவிடக் கூடாது. அ.தி.மு.கவினர் பண விநியோகத்தை நடத்தி முடிப்பதற்கு பல வகைகளில் உதவியாக இருப்பது என்ற நோக்கில் அதிகாரிகள் செயல்படுகின்றனர். வாக்குக்குப் பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்கிறதோ இல்லையோ, தி.மு.க தொடர்ந்து தடுத்து வருகிறது. இதன் காரணமாக, தி.மு.கவின் அஸ்திவாரத்தில் கைவைக்க நினைக்கின்றனர்" என்கிறார். 

தொடர்ந்து பேசுகையில், `` இன்று மதுரையில் பிரதமர் பிரசாரம் செய்ய உள்ளார். வருமான வரித்துறை மூலம் ரெய்டு நடத்தி பிரதமரை குளிர்விக்கும் வேலைகளைச் சிலர் செய்து வருகின்றனர். சொல்லப்போனால், அரசியலுக்கும் சபரீசனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சி நிர்வாகத்திலும் அவர் தலையிடுவதில்லை. அவர் ஒரு நேர்மையான தொழிலதிபராக இருக்கிறார். 

அவருடைய பிறந்தநாளுக்குக்கூட யாரும் சென்று சால்வை அணிவித்தது கிடையாது. கலைஞரின் மனசாட்சியாக எப்படி முரசொலி மாறன் இருந்தாரோ, அதேபோல் தி.மு.க தலைவருக்கு சபரீசன் இருக்கிறார். மற்றபடி, இந்த சோதனைகள் எல்லாம் அரசியல் உள்நோக்கம் கொண்டவை" என்கிறார் கொதிப்புடன்.

``அமைச்சர் எம்.சி.சம்பத் உள்பட ஆளும்கட்சிக்கு வேண்டிய பலரது இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி உள்பட ஏராளமானோர் இந்தச் சோதனையில் சிக்கினர். தி.மு.கவை மட்டுமே குறிவைத்து சோதனை நடப்பதாகச் சொல்வது அர்த்தமற்றது" என்கின்றனர் பா.ஜ.க தரப்பில்.

`இந்த ரெய்டில் உள்நோக்கம் இருப்பதாகச் சொல்கிறார்களே?' என ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அலுவலர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். `` இது நார்மலான ரெய்டுதான். தேர்தல் நேரத்தில் அவ்வப்போது யாராவது போன் செய்து, பணம் இருக்கும் தகவலைச் சொல்வார்கள். இதுதொடர்பாக தகவல் சொல்பவர், உண்மையைத்தான் சொல்கிறாரோ என்பதை ஆராய்வதற்காக சோதனை மேற்கொள்வது வழக்கம்.

அங்கு ஒருவேளை பணம் இருந்தால் அதனைப் பறிமுதல் செய்து கணக்கு கேட்பார்கள். இதற்காக பெரிய அளவில் இருந்து உத்தரவு எதுவும் வராது. இதனை சீரியஸாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் அழுத்தம் இருக்கவும் வாய்ப்பில்லை. என்னைப் பொறுத்தவரையில், இதுபோன்ற சோதனைகளை ஆராய்ந்து மேற்கொள்வது நல்லது" என்கிறார்.

 

https://www.bbc.com/tamil/india-56612206

 

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன் மற்றும் கரூர் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோரின் வீடுகள் உட்பட சில இடங்களின் இன்று வருமான வரிசோதனை நடந்தது. திடீரென வருமானவரிச் சோதனை நடத்துவதற்கான காரணம் என்ன?

திரும்பிய பக்கமெல்லாம் தி.மு.க உறுப்பினர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடந்துகொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வருமானவரித்துறை மூலம் நடத்தப்படும் இந்தச் சோதனைகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம் நடத்தும் நடவடிக்கைதான் இந்த வருமானவரி சோதனைகள் என்று மற்றொருபுறம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

தமிழகத்தில், குறிப்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளில் - நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனைகளின் நோக்கம் என்ன என்பதை தெரிந்துகொள்ள விபரமறிந்த சிலரிடம் விசாரித்தோம். `` குறிப்பிட்ட ஐந்து தொகுதிகளில் தேர்தலை நிறுத்தி வைக்கும் ஐடியாவில்தான் இந்த வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, வாரிசு பிரமுகரின் தொகுதியைக் குறிவைத்து மத்திய அரசு சில சித்து விளையாட்டுகளை நடத்த ஆரம்பித்திருக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வாரிசு பிரமுகர் வெற்றி பெற வேண்டுமென, ‘ஆலயம்’ தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதால், அதற்காக தொகுதி முழுவதும் ஸ்வீட் பாக்ஸ் மணம் கமகமக்கிறது. இதை மோப்பம் பிடித்துத்தான் இந்த ரெய்டு காட்சிகள் அரங்கேறுகின்றன” என்றவர்கள், ``தி.மு.க-வுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் `நீங்கள் வெற்றி பெற்றாலும் உங்களின் கடிவாளம் எங்கள் கையில் தான்’ என்பதை உணர்த்துவதற்காக மத்திய அரசு செய்யும் வேலைதான் இவை” என்றும் கூறுகின்றனர்.

நீலாங்கரை சபரீசன் வீடு
 
நீலாங்கரை சபரீசன் வீடு
 

``வருமானவரித் துறை சோதனையின் மூலம் ஏதாவது கிடைத்ததா?” என்று வருமானவரித்துறை வட்டாரங்களில் விசாரித்தோம். ``சோதனையில் பணமாக ஏதுவும் கிடைக்கவில்லை. ஆனால், சில டாக்குமெண்டுகள் கிடைத்துள்ளன” என்றனர். இந்த டாக்குமெண்டுகளை வைத்து தி.மு.க வேட்பாளர்கள் சிலருக்கு செக் வைக்க முடியுமா? என்று டெல்லி ஆலோசித்து வருகிறதாம்".

தேர்தலுக்கு இன்னும் நான்கு தினங்களே மீதமிருக்கும் நிலையில், இந்த ரெய்டு காட்சிகள் தமிழக அரசியலை தகிக்க வைத்திருக்கின்றன.

திமுக நிர்வாகிகள் வீடுகளில் ஐடி ரெய்டு; 5 தொகுதிகளைக் குறிவைக்கும் டெல்லி - பின்னணி என்ன? Reason behind the recent ID raids in sabareesan DMK party cadres houses - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

சுடாலின் முதல்வர் பதவி கனவில்தானாக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

சுடாலின் முதல்வர் பதவி கனவில்தானாக்கும் .

முன்னமே சொல்லி இருந்தேன். எடப்பாடி வர சந்தர்ப்பம் உள்ளது என்று.

பெரிய, முன்னமே தயாராகி இருந்த ஏ வா வேலுவை ரெய்டு பண்ணி, அவர்கள் பணத்தை கொடுக்க தயாராக வைத்திருந்த சின்ன பார்ட்டிகளுக்கு பய பீதியை கொடுத்தாச்சு.

பின்னால் இருந்து இயங்கிக் கொண்டிருந்த, ஸ்டாலின் மருமகனை இன்று வளைத்து விட்டார்கள். இன்னுமொரு வேலையும் செய்கிறார்கள், பணத்தை வைத்து, தயாராக இருக்கும் கோஸ்ட்டிகளுக்கு, அறிவித்தல் கொடுத்து உள்ளனர். நாம் பிடித்தால், உள்ளே போகவேணும். நீங்களாகவே தகவல் சொன்னால், அந்த பணத்தில், இதனை வீதம், அரசே உங்களுக்கு தரும்.

பறிக்குள் கை போடும் இந்த வேலையால், திமுக கதி கலங்கிப் போய் இருக்கிறது.

மறுபுறம், சென்னையில் உள்ள எனது உறவினருக்கு, 2,000 ரூபா, இரண்டு வாரங்களுக்கு முன்னரே அதிமுக கொடுத்தாகி விட்டது. திமுக கொடுக்க வில்லை. இனி வருமோ தெரிய வில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

முன்னமே சொல்லி இருந்தேன். எடப்பாடி வர சந்தர்ப்பம் உள்ளது என்று.

பெரிய, முன்னமே தயாராகி இருந்த ஏ வா வேலுவை ரெய்டு பண்ணி, அவர்கள் பணத்தை கொடுக்க தயாராக வைத்திருந்த சின்ன பார்ட்டிகளுக்கு பய பீதியை கொடுத்தாச்சு.

பின்னால் இருந்து இயங்கிக் கொண்டிருந்த, ஸ்டாலின் மருமகனை இன்று வளைத்து விட்டார்கள். இன்னுமொரு வேலையும் செய்கிறார்கள், பணத்தை வைத்து, தயாராக இருக்கும் கோஸ்ட்டிகளுக்கு, அறிவித்தல் கொடுத்து உள்ளனர். நாம் பிடித்தால், உள்ளே போகவேணும். நீங்களாகவே தகவல் சொன்னால், அந்த பணத்தில், இதனை வீதம், அரசே உங்களுக்கு தரும்.

பறிக்குள் கை போடும் இந்த வேலையால், திமுக கதி கலங்கிப் போய் இருக்கிறது.

மறுபுறம், சென்னையில் உள்ள எனது உறவினருக்கு, 2,000 ரூபா, இரண்டு வாரங்களுக்கு முன்னரே அதிமுக கொடுத்தாகி விட்டது. திமுக கொடுக்க வில்லை. இனி வருமோ தெரிய வில்லையாம்.

அந்த செந்தாமரை அம்மா வின் பெயரில் சும்மா தேடினேன் லண்டனில் நிறைய சொத்துக்கள் உள்ளனவே  சில கொம்பனிகள் மைக்ரோ முழுமையான கணக்கு விபரங்கள் கொடுக்க தேவையில்லை என்கிறார்கள் உண்மையா ?

முழுமையாய் எழுதலாம் நம்மால் இந்த கோலத்தில் நிக்கிறார் .

தேமுதிக தாக்குதலை சமாளிக்க வடிவேலு புது ப்ளான்! - Vadivelu`s New plan

லொக் டவுனும்  குளிருமாம் சொல்லவே தேவையில்லை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.