கேப்டன் விஜயகாந்த்தின் குரு பூஜையில் பங்கு பற்றி மலரஞ்சலி செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
29 Dec, 2025 | 02:49 PM
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரான கேப்டன் விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு குரு பூஜையை முன்னிட்டு, அவரது நினைவிடத்திற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்து மலரஞ்சலி செலுத்தினார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினை ஏற்படுத்தி, தமிழகத்தின் நிகரற்ற அரசியல் சக்தியாக திகழ்ந்து மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜை சென்னையில் உள்ள அவருடைய நினைவிடத்தில் நடைபெற்றது.
இந்த குரு பூஜையில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கட்சியின் மாநில நிர்வாகிகளும், தொண்டர்களும் அமைதி பேரணியாக வருகை தந்து அவருக்கு குருபூஜை செய்தனர்.
இந்த தருணத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களான ஜி கே வாசன், எல் . முருகன் உள்ளிட்ட பலரும் பங்கு பற்றி கேப்டன் விஜயகாந்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ. வ. வேலு மற்றும் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா உள்ளிட்ட ஏராளமான திமுகவினரும் இந்நிகழ்வில் பங்கு பற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
https://www.virakesari.lk/article/234667
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.