Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறைந்துவரும் ஊளைச் சத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்துவரும் ஊளைச் சத்தம்

fox  
 

டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன்

உவமைக்காகவும் கதைகளிலும் அடிக்கடி பேசப்படும் நரிகளைத் தமிழகத்தில் நேரில் காண்பது அரிதாகிவிட்டது. தற்போது தமிழகத்தின் தென்பகுதியில் சில இடங்களிலும் தர்மபுரியை ஒட்டிய வறண்ட பகுதிகளிலும் அரிதாக நரி கண்ணில் படுகிறது.

நாய்ப் பேரினத்தைச் சேர்ந்தவை நரிகள். வட இந்தியாவில் கன்ஹா, பரத்பூர் ஆகிய சரணாலயங்களில் காணப்படும் நரிகளைவிடத் தமிழக நரி சற்றே சிறிதாகக் காணப்படுகின்றன. பள்ளத்தாக்குகள், ஆறுகள், ஏரிகள் போன்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து இவை வாழ்கின்றன. கிராமத்தின் வெளிப் பகுதிகள், வேளாண் பகுதிகள், மலைக் குன்றுகளை ஒட்டிய பகுதிகள், திறந்தவெளிக் காடுகள் போன்ற பகுதிகளில் நரி வாழ்கிறது.

 
 
 

கிராமத்தை ஒட்டிய பகுதிகளிலும் வேளாண்மை புரியும் காட்டுப் பகுதிகளிலும் பூமிக்கு அடியில் வளை தோண்டிவாழ்கிறது. தமிழில் வட்டார வழக்கில் பலவகையில் அழைக்கப்பட்டாலும் நரி, கணநரி, குறுநரி ஆகிய பெயர்கள் பதிவாகியுள்ளன.

நரியின் பண்புகள்

30 ஆண்டுகளுக்குமுன் மாலை மங்கத் தொடங்கிய வேளையில், உணவு தேட வருவ தற்கு முன்னும், கதிரவன் எழுவதற்கு முன்னும், கிழக்கு வெளுக்கத் தொடங்கும் வேளையிலும், ஓய்வெடுக்கத் தங்குமிடம் தேடித் திரும்பும் வேளையிலும் நரிகள் ஊளையிட்டதைக் கேட்க முடிந்தது. தலையை உயரே தூக்கி ஊளையிட்டபடி, ஆங்காங்கே மாறிமாறி நின்று ஊளையிடுவதை அந்தக் காலத்தில் கேட்கவும் பார்க்கவும்கூட முடிந்தது.

நரி வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டது. மாலைப் பொழுதில் உணவுக்காக வெளிவந்து அதிகாலைப் பொழுதில் தங்குமிடத்திற்குத் திரும்பிச் சென்று ஓய்வெடுக்கும்.குளிர்காலத்திலும் மேகமூட்டமான காலங்களிலும் மனிதர்கள் நடமாடாத பகுதிகளில் வேட்டையாட வரும். வெப்பமான காலங்களில் நீர் அருந்தவும், நீரில் அமரவும், குளிக்கவும் பகற்பொழுதில் வெளியே வரும் இயல்புடையது.

குட்டிகளும் எல்லையும்

பெண் நரி சற்று குறைந்த உயரம், எடையுடன் காணப்படும். ஆண்டில் எப்பொழுது வேண்டுமானாலும் குட்டிகள் ஈனும். பெண் நரி வளையில் 2-4 குட்டிகளை ஈனுகிறது. குட்டிகள் ஓராண்டுக்குள் வளர்ந்து பெரியவையாகிவிடுகின்றன. 12 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. நீண்ட தூர ஓட்டத்திற்கு ஏற்றவாறு நரிகளின் கால்கள் நீண்டு அமைந்துள்ளன. மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் ஓடும்திறனைப் பெற்றிருப்பது, நரி வேட்டையாடுவதற்குப் பெரிதும் உதவுகிறது.

சில பாலூட்டிகளைப் போல தன் வாழிட எல்லையைச் சிறுநீர், மலம் கொண்டு வரை யறுக்கும். அத்துடன் நிலப்பரப்பைச் சுற்றி அடையாளங்களைக் குறிப்பதன் மூலமும் தன் இணையை மற்ற இணைகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளும். குட்டிகள் வளர்ந்து தங்கள் வாழிடத்தை நிறுவும்வரை பெற்றோருடனே வாழ்கின்றன.

16192369172006.JPG

உணவு

கிராமப் பகுதிகளில் வாழும் நரிகள் பெரும்பாலும் எலிகள், சில வேளைகளில் முயல்கள், வயல்வெளி நண்டுகள், பறவை கள், பூச்சிகள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்கின்றன. சில நேரம் காய்கறி களைக்கூட விட்டு வைப்பதில்லை.

மேய்ச்சலில் உள்ள ஆட்டு மந்தைகள், கிடை/பட்டியில் உள்ள ஆடுகள், செம்மறி ஆடுகள், குட்டிகள், வளர்ப்புக் கோழிகள், புறாக்கள் போன்றவற்றையும் இரவு நேரத்தில் கவ்வியெடுத்துச் சென்று கொன்று தின்னக்கூடியது. சிறிய, அடிபட்ட பாலூட்டிகளையும் கொன்று தின்னும்.

சங்க இலக்கியத்தில் நரி

சங்க இலக்கியங்களில் நரியின் வாழிடம், வேட்டையாடும் முறை பற்றி வியப்படைய வைக்கும் குறிப்புகள் உள்ளன. ‘நாயும் நரியும்’ என்கிற வழக்கு உரையாடலில் இருந்துள்ளது. சங்க இலக்கியத்தில் கணநரி (Jackal) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அகநானூற்றிலும் புறநானூற்றிலும் கணநரி எனக் கூறப்பட்டுள்ளது. இவை கூட்டமாக வேட்டையாடுவது இந்தப் பெயருக்குக் காரணமாக இருக்கலாம்.

நரி பற்றிய மற்றொரு செய்தியும் சங்க நூல்களில் கூறப்பட்டுள்ளது. இறந்த விலங்குகளின் தசையோ எலும்போ கிடந்தால்கூட உண்டு வாழும் என்றும், இதனால் தோட்டி என்றும் அழைக்கப்படுகிறது. காடுகளில் கழிந்த ஊன் தசைகளையும், வேட்டையாடும் புலி முதலிய விலங்குகள் உண்டதுபோக எஞ்சியதையும் இந்நரிகள் உண்ணும். எனவே, இவற்றுக்கு எப்போதும் உணவுப் பஞ்சம் கிடையாது. ‘நரியிற் கூன் நல்யாண்டும் தீயாண்டும் இல்’ என்கிறது பழமொழி நானூறு (102). நரிக்கு உணவு நிறையக் கிடைக்கிற நல்ல காலமும், உணவு கிடைக்காத பஞ்ச காலமும் கிடையாது என்பதைக் கண்டுணர்ந்து கூறப்பட்டுள்ளது.

பாறுக் கழுகும் நரியும்

காடுகளில் வாழும் நரிகள் புலி, சிறுத்தை ஆகியவை வேட்டையாடித் தின்றது போக எஞ்சிய இரையைப் பெரும்பாலும் இரையாகக் கொள்ளும். இத்தருணங்களில் பிற உயிரினங்களுடனும் குறிப்பாக பாறுக் கழுகுகளுடன் (பிணந்தின்னிக் கழுகு) போட்டியிடுதலும், மோதலும் ஏற்படுவதுண்டு. அத்தருணங்களில் தனக்குரிய இரையை லாகவமாக எடுத்துக்கொள்ளும். எருவைக் கழுகுகளுடன் சேர்ந்து நரிகள் உண்ணும் என்பதை அகநானூறு 275ஆம் பாடலிலும், நற்றினை 352ஆம் பாடலில் சிவந்த தலையுடைய எருவைக் கழுகுடன் (Red-headed Vulture) சண்டையிட்டு இரையை நரி தின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

நரி ஊளையிடுவதைப் பற்றி மணி மேகலையில் “நீண்முக நரியின் தீவிளிக் கூவும்” என்கிற பாடல் தெரிவிக்கிறது. மலையாளத்தில் கணநரியை ஊளன் என்கின்றனர்.

அழியும் நரிகள்

தமிழகத்தில் தற்போது அழிந்துவரும் பாலூட்டிகளில் நரியும் ஒன்று. வேளாண் காடுகளில் பழங்கள், கரும்புகள், மக்காச் சோளம் போன்றவற்றைச் சேதம் செய்வதால், கோழி, ஆடு போன்றவற்றின் குடலினுள் வெடிக்கும் மருந்தை நரிகள் நடமாடும் பகுதிகளில் வைத்துவிடுகிறார்கள். இந்த வாய் வேட்டுவை நரி கவ்வும்பொழுது வெடித்து இறந்துவிடும். பூச்சிக்கொல்லிகளால் சிற்றுயிர்கள், பூச்சிகள், ஊர்வன போன்றவை பெருமளவு அழிந்ததால், நரிகள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் வாழிட அழிப்பு, காடுகள் சுருக்கப்பட்டதால் தமிழகத்தில் நரிகள் பெருமளவு அழிந்துவிட்டன.

https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/662894-fox-5.html

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து நரிகள் தங்கள் தாய் மொழியான ஊளையிடுதலை  மறந்து பலதசப்தம்கள் ஆகிவிட்டன . காரணம் ஊளையிட்டால் அழிக்கப்படுவீர் என்று நரியுடன்  சேர்ந்து வாழ்ந்த ....எட்டப்ப நரிகள் சொல்லியதால் அனைத்து நரிகளும் தங்கள் தாய் மொழியை மறந்தன கடைசியில் பிரிட்டிஷ் அரசு மிருகபறவை கணக்கெடுப்பில் தாய் மொழி குழப்பத்தால் நரிகளை நாய்கள் இனத்துடன் சேர்த்து விட்டார்கள் நாய்கள் இனத்தில் குறிப்பிட்ட வகையான நாய்கள் மட்டுமே வளர்க்கலாம் எனும் சட்டம் காரணமாக கடைசியாக சேர்ந்த நரியினம் முற்று முழுதாக அழிக்கப்பட்டது .(இங்குள்ள நரிக்கு ஊளையிட தெரியாது அது மட்டும் உண்மை மிகுதியெல்லாம் கற்பனையே )😁

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

இங்கிலாந்து நரிகள் தங்கள் தாய் மொழியான ஊளையிடுதலை  மறந்து பலதசப்தம்கள் ஆகிவிட்டன . காரணம் ஊளையிட்டால் அழிக்கப்படுவீர் என்று நரியுடன்  சேர்ந்து வாழ்ந்த ....எட்டப்ப நரிகள் சொல்லியதால் அனைத்து நரிகளும் தங்கள் தாய் மொழியை மறந்தன கடைசியில் பிரிட்டிஷ் அரசு மிருகபறவை கணக்கெடுப்பில் தாய் மொழி குழப்பத்தால் நரிகளை நாய்கள் இனத்துடன் சேர்த்து விட்டார்கள் நாய்கள் இனத்தில் குறிப்பிட்ட வகையான நாய்கள் மட்டுமே வளர்க்கலாம் எனும் சட்டம் காரணமாக கடைசியாக சேர்ந்த நரியினம் முற்று முழுதாக அழிக்கப்பட்டது .(இங்குள்ள நரிக்கு ஊளையிட தெரியாது அது மட்டும் உண்மை மிகுதியெல்லாம் கற்பனையே )😁

பெருமாள், ஆண்டு தோறும், பிரபுக்கள் நரி வேட்டை என்று, குதிரைகள், நாய்களுடன் ஆடம்பரமாக போய், கொன்று துளைத்துக் கொண்டு இருந்தார்கள், நரிகளை. No wonder fox hunting is still prevalent – the ban is designed to fail  British wildlife

15 வருசத்துக்கு முன்னர், விலங்குகள் நல அமைப்புகள் கடும் எதிர்ப்பில், நிறுத்தி விட்டார்கள் இந்த ஆதிகால சம்பிரதாயத்தினை.

இப்போது, நரி பெருகி ஊருக்குள் வந்து விட்டது. கென்ட் பகுதியில், வீட்டினுள் புகுந்து, நித்தா கொண்டிருந்த 3 மாதத் குழந்தை ஒன்றை கடித்து விட, நல்ல காலமாக தாய் ஓடி வர, நரி ஓடி விட்டது. (இது குறித்து ஒரு பதிவு முன்னம் போட்டிருக்கிறேன் என்று நினைவு)

லண்டன் ஹரோ பகுதியில் உணவுக்கழிவுகளை போட ஒரு சிறிய பின் கொடுத்து உள்ளார்கள். தினமும், ஒவொரு வீட்டிலும், வரிசையாக, அதனை தட்டி விழுத்தி, தின்று, அடுத்தநாள் காலை கூட்டி அள்ளுற வேலை வைக்கிறது.

இது பெரிய தொந்தரவாக போக, நம்ம, தமிழ் கவுன்சிலர், சுரேஷ் கிருஷ்ணா (லண்டன் பாபா - ரஜனி ரசிகர், ) போனை போட்டு, கதைக்க, அந்தாள், சத்தம் போடாமல், பச்சை பின்னுக்குள் போட்டு விடுங்கோ. என்னத்தை செய்யிறது எண்டுறார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

விலங்குகள் நல அமைப்புகள் கடும் எதிர்ப்பில், நிறுத்தி விட்டார்கள்

இவை எண்ணத்துக்கு இருக்கினம் என்று இன்னமும் எனக்கு விளக்கமில்லை ....😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.