Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா | பிறம்டனின் ‘தமிழ் மேயர்’ பற்றிக் பிரவுண் மீண்டும் சர்ச்சைக்குள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

கனடா | பிறம்டனின் ‘தமிழ் மேயர்’ பற்றிக் பிரவுண் மீண்டும் சர்ச்சைக்குள்?

City-of-Brampton-Mayor-Brown.jpg

 

-ஒரு புலன் விசாரணை

 

மாயமான்

 

ஒன்ராறியோவின் நான்காவது அதி பெரிய நகரமான பிரம்டனில் பதவியில் இருக்கும் ‘எங்கட பற்றிக்’ தமிழ் மேயர், பற்றிக் பிரவுண் மீண்டும் ஒரு தடவை – in hot water. பாவம் இத்தனை மேதாவி ஆலோசகர்கள் புடை சூழவிருந்தும் மனுசனுக்கும் சுடு தண்ணிக்கும் அத்தனை ஈர்ப்பு.

 

இது முள்ளிவாய்க்கால் வாரமென்ற படியால் இப்பிரச்சினைக்கு இன்னுமொரு சிங்களவரை அவசரப்பட்டுத் தொடுத்துவிட வேண்டாம், at least for the time being.

 

இந்த முறை பிரச்சினைக்கு ஒரு பெண்-மணி காரணம். கண்கள் விரிகிறது தெரிகிறது. கொஞ்சம் பொறுங்கள். இது ஒரு கட்டுக்கதையல்ல என்பது உண்மை. நகரத்தின் பிரபல பத்திரிகையான TorStar இல் செய்தி வந்துவிட்டது. ஆனாலும் சமூக வலைத் தளங்களில் ‘எங்கட பற்றிக்கின்’ நண்பர்கள் அல்லாதவர்கள் புனைந்தெடுத்த பெயர்களில் ரவுண்டுகள் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனவே இது இப்போதைக்கு கம்பளத்துக்குக் கீழே தள்ளப்படப்போகும் விடயமல்ல. ரவுண்டு விடுகிறவர்களுக்கு ‘எங்கட பற்றிக்’ கோடு பிரச்சினைகள் எதுவுமில்லை. அது வேறு சங்கதி… இன்னொரு நாளில்…

 

கதை இது தான். (கோப்பி எடுக்கிறவர், ஒண்டுக்குப் போறவர் போயிட்டு வரலாம்)

 

nikki_kaur.pngகுர்டீப் காவுர் – நிக்கி என்றும் அழகாக அழைக்கலாம் – பிரம்டன் நகராட்சி அலுவலகத்தில் ‘கார்ப்பொறேட் புறொஜெக்ட்ஸ்’ திணைக்களத்தின் பணிப்பாளர். ‘புறொஜெக்ட்ஸ்’ என்றவுடன் அதனோடு வரும் தலையிடிகள், சந்தோசங்கள் பல. அப்படியான பதவி கிடைப்பதற்கு ஒருவர் தவம் தான் செய்திருக்க வேண்டும் (அல்லது அழகாக / கவர்ச்சியாகப் பிறந்திருக்க வேண்டும்). இப்படியான நிக்கிக்கு ஒருநாள் திடீரென வேலை போய்விட்டது. காரணம்?

 

பொதுப்பணத்தைத் தவறாகக் கையாள்தல், பணிகளுக்கு ஆட் சேர்ப்பதில் உரிய நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமை, ஊழல், இனவாதம், துன்புறுத்தல் என்னும் இன்னோரன்ன குற்றச்சாட்டுகளை நகராட்சி அலுவலகத்தின் மூத்த நிர்வாகி(கள்) மீது நிக்கி சுமத்தியிருந்தார். இக்காரணத்துக்காக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

 

‘அதற்கும் ‘எங்கட பற்றிக்’கிக்கும் என்ன சம்பந்தம், கெதியா விசயத்துக்கு வா’ – என்பது இப்போது உங்கள் பிரச்சினை.

 

நிக்கியை வீட்டுக்கு அனுப்பி மூன்றாம் நாள் ‘எங்கட பற்றிக்’ அவரது வீட்டுக்கு விஜயம் செய்து விட்டார். எப்படி அவர் அதைச் செய்திருக்க மூடியும்? நகராட்சியின் நகர பிதா, அலுவலகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவரது வீட்டுக்கு எப்படிப் போக முடியும்? நியாயமான கேள்வி தான். அதுவும் இத்தனை ஆலோசகர்கள் புடை சூழ இருந்தும் ‘எங்கட பற்றிக்’ எப்படி இத் தவறைச் செய்யலாம் என்பதுவே மகாஜனங்களின் கேள்வி.

 

நிக்கியைச் சீற வைத்த பிரச்சினை தான் என்ன? என்பதை TorStar சாதுவாகக் கிண்டி எடுத்திருக்கிறது. அதன் பிரகாரம் ‘எங்கட பற்றிக்’ நிர்வாகத்தில் பிரம்டன் நகராட்சிக்கும் கச முசாக்களுக்கும் எப்போதும் நெருக்கம் அதிகமாகவே இருந்துவந்திருக்கிறது என்பது மட்டும் தெளிவு.. இதில் உங்களுக்கு அதிக ஆர்வம் இல்லையென்பதால் மிகவும் சுருக்கமாக:

 

2019 இன் ஆரம்பத்தில் ‘எங்கட பற்றிக்’ நகராட்சியின் மூன்று உயர் பதவிகளுக்கு தனக்குத் தெரிந்தவர்களை பணியிலமர்த்தி இருந்தார். இவர்கள் மூவரும் ஏற்கெனவே நயாகரா நகராட்சியில் பிரச்சினைக்குட்பட்டு இருந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இம் மூவரில் ஒருவர் தான் பிரம்டன் நகராட்சியின் முதன்மை நிர்வாகி டேவிட் பறிக் என TorStar கூறுகிறது. இவரைப் பணிக்கெடுத்த முறை தவறானது என ஏற்கெனவே ஒன்ராறியோ ஒம்பட்ஸ்மான் கூறிவிட்டார். இக் கறைபடிந்தவர்களென TorStar கண்டுபிடித்த மூவரையும் ‘எங்கட பற்றிக்’ மிகவும் சாதுர்யமாக, நயாகராவிலிருந்து QEW வழியாகக் கொண்டுவந்து பணியிலமர்த்தியதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. நிக்கி குற்றஞ் சாட்டிய மூத்த நிர்வாகிகள் இவர்கள்தான். நிக்கியை யார் பணிநீக்கம் செய்திருப்பார் என்பது இப்போது புரிகிறது. நிக்கியின் target யாரென்பதும் இப்போது புரிந்திருக்கும்.

 

நிக்கியின் இக் குற்றச்சாட்டு இப்போது ‘எஙகட பற்றிக்கின்’ தலைக்கு மேல் போய்விட்டது. நகராட்சி கவுன்சில் நிக்கியின் குற்றச்சாட்டை பீல் பிரதேச பொலிஸ் மற்றும் மாகாண ஒம்பட்ஸ்மன் ஆகியோருக்கு அனுப்பிவிட்டது. அத்தோடு ஒரு மூன்றாம் தரப்பு விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறது.

 

பிரம்டன் நகராட்சி ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ புரையோடிக் கிடக்கிறது என ஒரு கவுன்சிலர் சொல்லுமளவுக்கு பிரச்சினை முற்றிப்போயிருக்கிறது. கோவிட் பெருந்தொற்று பிரம்டன் மக்களை வேகமாகக் காவுகொண்டுவரும் வேளையில் இது நகராட்சியின் அலுவல்களை முடக்கிப் போட்டிருக்கிறது என எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

 

இந் நிலையில் ‘எங்கட பற்றிக்கின்’ நிக்கி வீட்டுத் திக் விஜயம் நகரத்தின் பேசுபொருளாகவும், நம்மாட்கள் விடுகளில் ‘தொலைக்காட்சி நாடகமாகவும்’ மாறியிருக்கிறது.

 

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு பணியாளரின் முறைப்பாடு விசாரணையில் இருக்கும்போது நகர பிதாவான His Worship Patrick Brown எப்படி அப் பணியாளரின் வீட்டுக்குப் போகலாம் என்பது சட்டம் சம்பந்தப்பட்ட கேள்வி. அங்கு போய் அவர் என்ன கதைத்தார் என்பது ‘நாஞ்சில் பி.டி. சாமியின் மர்ம நாவலில்’ வரக்கூடிய கேள்வி. இதைத் துலக்க Torstar கேட்ட கேள்விக்கு ‘எங்கட பற்றிக்’ அனுப்பிய குறுஞ்செய்திப் பதில் “I don’t feel comfortable sharing any private conversations with Mrs. Kaur other than to say I take her complaints … seriously.”.

 

இதைப் பார்த்தவுடன் ‘எங்கட பற்றிக்’ பிரதமர் ஜஸ்டின் ட்றூடோவின் பிடி பிடிக்கிறார் என நினைக்கக் கூடும். இதைவிட ஆனானப்பட்ட பிரச்சினைகளில் மாட்டுப்பட்ட போதெல்லாம் ட்றூடோ இப்படியான வசனங்களையே பாவித்துத் தப்பியிருந்தார். எனவே ‘எங்கட பற்றிக்கும்’ இதிலிருந்து தப்பிப் பிழைக்க வாய்ப்புண்டு.

 

இதற்கிடையே, நிக்கியை மீண்டும் பணிக்கெடுத்து வேறு திணைக்களத்தில் அமர்த்துவதற்கு கவுன்சில் தீர்மானித்துள்ளதாகவும், நிக்கிக்கும் இன்னுமொரு பெண்மணிக்குமிடையே பிரச்சினை தொடங்கி….

 

“பற்றைக்குள் இருந்து இரண்டு உருவங்கள் பார்த்துக்கொண்டிருந்தன” எனக் கல்கி ஸ்டைலில் முடிக்க விருப்பமில்லை. புலன் விசாரணை தொடரும்…

https://www.marumoli.com/கனடா-பிறம்டனின்-தமிழ்-மே/?fbclid=IwAR35HvYDv_LGHKnLe-kz3hAsiQL7TEpHIzl5IkRwaGK80UrePbJItWIUx0Q

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.