Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனம் சுமக்கு(மே)வலிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

*.மனம் சுமக்கு’மே ‘ வலிகள். *
    (மே பதினெட்டு -  கவிதை)
*******************************************

*இருளும் -ஒளியும்
  இரவும் -பகலும் என்பதுபோல்,
  இழப்பும் -ஏற்பும் கொண்டோம்
  இதனால்  எம் வாழ்வில்
  என்பதுண்டு!      –  இதில் சில
  எண்களும் உண்டு!

“அவ் வெண் பதினெட்டு!”

*பதினெண்கீழ் கணக்கு” -
  பதினெட்டு நூல்களின் தொகுப்பு!
  தமிழுக்கு இதனால் சிறப்பு!

  *பதினெட்டு ‘மே’ என்பதிலோ
   எண்ணற்ற கணக்கு!.... - இங்குண்டு
   தமிழரின் இறப்பு!
   தமிழுக்கும் இழப்பு!....

  *வைகாசி,
   புத்தம் ஞானம் பெற்ற மாதம் !  - இருந்தும்
   சுத்தம், மொத்தமாக மதம் இழந்த மாதம் - நித்தம் 
   யுத்தம் செய்த மாதம்! …
  
 *நாமோ,..
  சுற்றம் தொலைத்த மாதம்!
  முற்றும் இழந்த மாதம்!

*ஒன்றா?... இரண்டா?.... - இல்லை
 ஓராயிரமா?...  அங்கு நாம் தொலைத்தோம்.?
 ஓர் ஆயுதம் மட்டுமா  கண்டு மலைத்தோம்?

 *பதினென்கீழ்’  வடித்த எமக்கு,
 இக்கணக்கை
 எதின்கீழ் போட்டு இருக்கு?....

*அதில், 
 அரசு தரும் 
 அநியாயக் கணக்கொன்றும் இருக்கு!..
 அறியாத கணக்கோ  -பல
 ஆயிரமாய்க் கிடக்கு!...

*மறந்து போய் விடுவதற்கும்
 துறந்து போய் விடுவதற்கும்
 இதுவொன்றும் 
 கனவோ, கற்பனையோ அல்ல!
 மன வலிகள்!.....
 மனிதப் பலிகள்!.....

*பதினெட்டுக்கென்று, 
 ஒரு தனித்தன்மை
 இருப்பதுபோல் தெரிகிறது… - நாமும் 
 இதில் அகப்பட்டதுபோலவும் 
 இருக்கிறது!.........

பாரதப் போர் - நாட்கள் 18
இராமாயணப் போர் – மாதங்கள் 18
தேவர் - அசுரர் போர் -ஆண்டுகள் 18
போர்க் கருவிகள் -வகைகள் 18
பகவத் கீதை – அத்தியாயங்கள் 18
கோவில் படிகள் – 18

சரணங்கள் விளிக்கும் முறைகள் -18 
  …..இறுதியில் -எம்மவர்…..
மரணங்கள் நிழ்ந்த நாளும்  மே -18!

நினைத்தால்,
வருமே துயரம் மனம் தொட்டு!
வாழ்வில் மறக்காது  இந்த 
‘மே’ பதினெட்டு!

இந்த நாளிலேதானே,  
உறவுகளின் உயிர்கள் போச்சு!
உற்றாரின் நிம்மதி போச்சு!
ஊர் உலகம் கெட்டுப் போச்சு!
கார்மேகம் சூழ்ந்து போச்சு!

இன்றுடன் வருடங்களோ  
பன்னிரண்டு  ஆச்சு!
இன்னுமா இருக்கிது 
நீதிக்கு மூச்சு?
நேர்மைக்குப் பேச்சு?

*கவச வாகனங்களின் அணிவகுப்புகளும் -முகக்
 கவச மூடிகளின் அணிதல்களும் 
 தெருவில் 
 எப்போது இல்லாமல் போகிறதோ
 அப்போதுதான் முழுச் சுதந்திரம்!

சும்மா
சொல்லி விட்டுப் போக முடியாது!
கொள்ளிவாய்ப் பிசாசுகளின் அசுரம்!
முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்த  அவலம்!

தள்ளிவிட்டுப் போகமுடியாது
நந்திக் கடலின் துயரம்.
நம் சோகங்களின் உயரம்!

“இனியுமா எம்மிடம் பிரிவுவாதம்?
 தணியுமா இனிமேலும் சகோதர கோபம்?
 கனியுமா எமது ஒற்றுமை தாகம்?
 இணையுமா கைகள்   இந்த ‘மே’ மாதம்? ‘

சிவபாலன் . New York  May 17, 2021

(படங்கள்: நன்றி இணையம்)

https://www.facebook.com/permalink.php?story_fbid=1355057001535221&id=100010928012688

 

 

குடும்ப நண்பரும் அயலவருமான கவிஞர் சிவா எழுதியது.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னியுங்கள்

முக்கோடி மூத்தகுடி
முத்மிழன் வாழ்ந்தகுடி
முள்ளிவாய்க்கால் பரப்பிலே
குண்டுதுளைத்துக் கிடந்தானே

வெற்றுவயல் எங்கிலுமே
சதைசதையாய்ப் பிண்டங்கள்

பச்சப்பிள்ளை கதறலையும்
கழுகுச்சத்தம் மறைத்ததுவே

பட்டுப்பிஞ்சு உடலங்களை
நாய் நரியும் கவ்வியதே

பெற்றவளும் மற்றவரும்
உடல்சிதைந்து கிடந்தனரே

சீறிய இரத்தங்களை
பூமித்தாயே ஊறிஞ்சினாளே

சிதறிய உடலங்களை
மண்மகளே எடுத்தாளே

வெண்ணிற மேகங்களை
பிணவாடை நிரப்பியதே

தமிழனின் இதயங்களை
உயிர்வலி அழுத்தியதே

நீதிகேட்க யார்வந்தார்
நியாயம்சொல்ல எவர்போனார்

லட்சமுயிர் அழிந்ததனை
வேடிக்கைதான் பார்த்தனரே

ஞாபகங்கள் கொல்கிறதே
நஞ்சுக்கொடி சுழல்கிறதே

செத்தவரை வழிபடவும்
துரோகிக்குப் பிடிக்கலையே

மன்னியுங்கள் ஆத்மாக்களே
நாதியற்றுக் கிடக்கின்றோம்….

ரூபன் சிவா
பிரான்ஸ்
மே 18

 

https://www.eelapparavaikal.com/mullivaikkal-kavithikal-33/

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்றோர் உறுதியேற்போம்!
முள்ளிவாய்க்கால்!


அல்லி வாய்க்கால் பரப்பெங்கும்
அழகாய்ப் பூத்து மணக்குமிடம்,
துள்ளி வாய்க்கால் நீரலையைச்
சுற்றி மீன்கள் பாயுமிடம்,
“முள்ளி வாய்க்கால்” என்னுமிடம்
முடிவில் தமிழர் இனத்துக்கே
“கொள்ளி வாய்க்கால்” ஆனதென்று
கூறிக் கூறி அழுவதென்னே!

வேரில் நீராம் விருந்தளித்து
விளையும் பசுமை தந்தவிடம்,
நீரில் குதித்து விளையாடி
நித்தம் பொழுதைக் கழித்தவிடம்,
ஊரின் மக்கள் துடிதுடித்து
உயிரைத் தொலைத்த அவ்விடத்தைப்
பாரில் வாழும் தமிழரின்று
பாடிப் பாடி அழுவதென்னே!

இரண்டு கரையை நிறைத்தபடி
எழிலை வாரி இறைத்தபடி
புரண்டு ஓடும் நீர்ப்பரப்பில்
பொழிலைக் கூட்டும் சீர்ப்பரப்பில்
மிரண்டு போகும் படியாக
மேன்மைத் தமிழர் செங்குருதி
திரண்டு ஓடும் நிலைகண்டு
தேம்பித் தேம்பி அழுவதென்னே!

கணமெங் கெங்கும் பேரெழிலைக்
காட்டி நடக்கும் அவ்விடத்தில்,
மனமெங் கெங்கும் இன்பத்தை
மலியச் செய்யும் அவ்விடத்தில்,
பிணமெங் கெங்கும் புரளுவதைப்
பிள்ளை நாமும் கண்டதினால்
இனமெங் கெங்கும் ஒப்பாரி
எடுத்து எடுத்து அழுவதென்னே!

செக்கச் சிவந்த பூக்கூட்டம்
சீறிப் பாயும் நீர்ப்பரப்பில்
திக்கி ழந்து மிதப்பதுபோல்
செம்மைத் தமிழர் மிதந்துவந்த
துக்கம் தாங்க முடியாமல்
தொல்லை ஒழிந்து விடியாமல்
விக்கி விக்கி இனஇதயம்
வெடிக்க வெடிக்க அழுவதென்னே!

போய்ச்சொல் இதுவெம் நிலமென்று
பொங்குந் துணிவில் தமிழ்மக்கள்
வாய்ச்சொல் திறந்து கேட்டதினால்
வன்மம் கொண்டுச் “சிங்கநரி”
மேய்ச்சல் நிலமாய் நம்மினத்தை
மேய்ந்த வலியைத் தாங்காமல்
கூச்சல் வானைக் கிழித்தெறியக்
கோலத் தமிழர் அழுவதென்னே!

கொன்றார்! பகைவர் அவராட்சிக்
கோலால் தமிழர் இனக்கறியைத்
தின்றார்! நம்மைத் திசையெல்லாம்
தேடித் தேடி வேட்டையாட
நின்றார் கூடி அதனாலே
நினைத்த தெல்லாம் அவரடைய
வென்றார்! நாமோ கூடாமல்
விழிநீர் கொட்டி ஆவதென்னே!

நன்றாய் உலகின் பேரறிவை
நாமும் அடைவோம்! அறிவாலே
ஒன்றாய் இணைவோம்! பொருள்செய்வோம்!
உள்ளங் கையில் கருவியேந்தி
வென்றே தீர்வோம்! எனவடியும்
விழிநீர்த் துளிமேல் ஆணைசெய்தே
இன்றோர் உறுதி நாமேற்போம்
இனிமேல் தமிழர் சிரிப்பதற்கே!

ஏறன் சிவா
விடை(வைகாசி)04, 2052

இலக்கியத்துறை
வள்ளுவப்_பண்பாட்டு_நடுவம்!

 

https://www.eelapparavaikal.com/mullivaikkal-kavithikal-31/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.