Jump to content

ஏடிஎம் மிஷின் உருவாக காரணமாக இருந்த ......Automated Teller Machine


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
ஏடிஎம் மிஷின் உருவாக காரணமாக இருந்த
 
 
 
 
186327117_3943435655692679_4637840089021
186498449_3943435749026003_9005017395527
 
 
ஒவ்வொரு இயந்திரம் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. இப்போது நாம் சுலபமாக சென்று பணம் எடுத்து வரும் (ATM) உருவான கதை கூட சுவாரஸ்யமானது தான்.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன்(John Shepherd Barron) என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். பொறுமையுடன் காத்திருந்த அவர் கவுன்டரை நெருங்கியபோது, நேரம் முடிந்து விட்டது’ என்று கூறி காசாளர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.
கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சொக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் என நினைத்து சொக்லேட் தானியங்கி இயந்திரத்தைத் தேடிச் சென்றார். இருந்த காசுக்கு கிடைத்த சொக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.
அப்போது அவர் கண் முன்னால் பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சொக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. பணம் போட்டால் சொக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு ஒரு தானியங்கி இயந்திரம் இருந்தால் எப்படி இருக்கும் என்று
சிந்தித்தார் அவர் சிந்தனையில் உருவானது தான் ஏடிஎம் தானியங்கி இயந்திரம்.
இவர் உருவாக்கிய முதல் ஏடிஎம் இயந்திரம் 1969ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள Barclays வங்கியில் வைக்கப்பட்டது.
விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் இயந்திரமா? என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.
உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாக குறைத்தார். இன்று ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான் இன்று உலகளவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன. ஏடிஎம் மிஷின் உருவாக காரணமாக இருந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் 84வது வயதில் கடந்த 2010 மே 15 ம் தேதியன்று காலமானார்.
Automated Teller Machine (ATM)

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.