Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சுக்களை மீளத் தொடங்க உதவ தயாராக இருக்கிறோம்: நோர்வே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுக்களை மீளத் தொடங்க உதவ தயாராக இருக்கிறோம்: நோர்வே

[ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007, 19:48 ஈழம்] [சி.கனகரத்தினம்]

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்கு உதவ நாம் தயாராக இருக்கிறோம் என்று நோர்வே அறிவித்துள்ளது.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு நோர்வேயின் இலங்கை அமைதி முயற்சிகளுக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜோன் ஹன்சன் பெயளர் கூறியதாவது:

சிறிலங்கா அரசாங்கம் விரும்பினால் அனுசரணையாளர் பணியை மீளவும் தொடங்க நாம் தயாராக இருக்கிறோம். அனுசரணையாளர் பணியில் நாம் ஈடுபட்டு வருகிறோம். தொடர்புடைய இருதரப்பினரும் விரும்பினால் நாம் அதனைச் செய்ய தயாராக உள்ளோம்.

எமது பாதுகாப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட்டால் நாம் அங்கு செல்லத் தயாராக உள்ளோம். அப்பொழுதுதான் நாங்கள் கிளிநொச்சிக்கு செல்ல முடியும் என்றார் ஜோன் ஹன்சன் பௌயர்.

புதினம்

நோர்வே, முதலில் பேச்சு தேவையா? இல்லையா? என இலங்கை அரசுடன் பேசி ஒரு முடிவுக்கு வருவது நல்லது. :):rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Mon Jul 2 7:16:27 EEST 2007

சமாதானப் பேச்சுக்கான அனுசரணைப் பணியை மீண்டும் தொடங்குவதற்கு நோர்வே தயார் இரு தரப்புகளும் கேட்டுக்கொண்டதும் தமது பணி ஆரம்பமாகும் என்கிறார் போவர்

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை காண்பதற்கான தனது அனுசரணைப் பணியை மீண்டும் தொடங்குவதற்கு தாம் தயாராக உள்ளதாக நோர்வே அறிவித்துள்ளது.

""எமது அனுசரணைப் பணியை செய்ய வேண்டும் என்பதில் நாம் அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் உள்ளோம்.

""சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புகளும் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் எமது பணியை மேற்கொள்ளுமாறு கேட்டவுடனேயே நாம் அப்பணியில் ஈடுபடுவதற்குத் தயாராகவே உள்ளோம்'' என்று நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் போவர் நேற்றுத் தெரிவித்தார்.

அனுசரணையாளர் என்ற வகையில் விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவுமாறு இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் கேட்டிருப்பதாக நேற்றுச் செய்திகள் வெளியாகி இருந்தன.

அந்தப் பின்னணியில் விசேட தூதுவர் போவர் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு ஒஸ்லோவில் வைத்து தமது நிலைப்பாட்டை அறிவித்தார்.

இலங்கையில் யுத்தமும் வன்செயல்களும் அதிகரித்தமையால் குழம்பிப்போயிருக்கும் சமாதானப் பேச்சுக்களை மீளத் தொடங்குவது குறித்த விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை அறிவதற்கு கிளிநொச்சிக்கு செல்முடியாத சூழ்நிலை தோன்றியிருந்தது.

"எங்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டால் நாம் அங்கு சென்று விடு தலைப் புலிகளுடன் பேசுவதற்கு எப்போதும் தயாராகவே இருந்தோம்.

"நாங்கள் கிளிநொச்சிக்குப் பாதுகாப்பாக போய் வரலாம் என்ற உத்தரவாதம் கிடைத்தவுடனேயே நாம் அங்கு செல்ல தயாராக இருக்கிறோம்.' என்று விசேட சமாதானத் தூதுவர் ஹன்சர் போவர் கூறினார்.

விசேட சமாதானத் தூதுவர் போவரும், நோர்வேயின் சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்மும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடந்த (ஜூன்) மாதம் 15ஆம் திகதி ஜெனிவாவில் சந்தித்துப் பேசியிருந்தனர்.

அப்போது அந்தப் பேச்சுக்கள் நன்றாக அமைந்தது என்று தெரிவித்த போவர் அது குறித்து விவரித்துக் கூற மறுத்திருந்தார்.

இதேவேளை

நோர்வேயை அதன் அனுசரணைப் பணி களை மீண்டும் ஆரம்பிக்குமாறு இலங்கை அரசாங்கம் கேட்டிருப்பதாக இலங்கையிலும் இந்தியாவிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (அ)

உதயன்

பேச்சுவார்த்தையை தொடங்கினால் இராணுவத்தினரின் மனநிலை பாதிக்கும்: ஜே.வி.பி

சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கினால் சிறிலங்கா இராணுவத்தினரின் மனநிலை பாதிக்கப்படும் என்று ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது:

பேச்சுக்களை மீளத் தொடங்கக் கோரும் மேற்குலகின் சதியில் சிறிலங்கா அரசாங்கம் விழுந்து விடக்கூடாது.

கிளிநொச்சிக்கு இணைத்தலைமை நாடுகள், தமது பிரதிநிதியாக நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயரை அனுப்புவதற்கு முயற்சித்து வருகின்றன. அந்த முயற்சிக்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதி கொடுக்கக்கூடாது.

தற்போதைய நிலையில் புலிகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளனர். அவர்களை மீண்டும் பலமுடையவர்களாக்கவே அனைத்துலகம் சதிமுயற்சி செய்கிறது. நோர்வே ஊடாகவே இந்த சதி மேற்கொள்ளப்படுகிறது. கவலைக்கிடமான இந்த சதியில் அரசாங்கம் சிக்கியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் அழைத்தால் மட்டுமே நோர்வேத் தரப்பினர் சமாதான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். இதுதான் முறை. எனவே நோர்வேயை அழைப்பதன் மூலமாக இந்த சதி முயற்சிக்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது.

அனைத்துலகத்தின் தேவைகளுக்காகவே நோர்வே, சிறிலங்கா விடயத்தில் தலையிட்டு வருகிறது. அத்துடன் ஹன்சன் பௌயரை கிளிநொச்சிக்கு அனுப்பினால் புலிகளுக்கு நோர்வே நிதி உதவியையும் ஆயுதப்பயிற்சியையும் வழங்கும். கிழக்கில் வெற்றியீட்டும் படையினரை இது அவமதிக்கும் செயலாகும்.

எனவே நோர்வேயை அழைத்து புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்துகிறோம் என்றார் விமல் வீரவன்ச.

-Puthinam-

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.