Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இனவாதிகளின் நண்பன் - அவுஸ்த்திரேலியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவாதிகளின் நண்பன் - அவுஸ்த்திரேலியா

சில தினங்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் ஊடாக எனக்குத் தெரிந்த தமிழ் ஆர்வலர் ஒருவரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. "இதனைப் பகிரவேண்டாம்" என்ற வேண்டுகோளுடன் அவர் ஒரு கடிதத்தினை சேர்த்து அனுப்பியிருந்தார்.

 அதனால்,  எனது நண்பர் பற்றிய விபரங்களையும், அக்கடிதத்தினை இங்கே இணைப்பதனையும் தவிர்த்துவிட்டு, விபரங்களை மட்டும் விபரிக்கிறேன்.

இலங்கையில் இன்றைய இனவாத ஆட்சியில் தமிழர் பட்டுவரும் இன்னல்கள் குறித்தும், அண்மையில் நடந்துமுடிந்த மனிதவுரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்தும் அவுஸ்த்திரேலிய அரசாங்கம் இலங்கைக்குச் சார்பாக அல்லது நடுநிலை என்கிற பெயரில் எதுவுமே செய்யாது தவிர்த்துவருவது தொடர்பான தனது அதிருப்தியைப் பதிவுசெய்ததுடன், இதுதொடர்பாக அவுஸ்த்திரேலிய அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரியிருந்ததாகத் தெரிகிறது.

அந்த நண்பர் அவுஸ்த்திரேலிய அரசின் குடிவரவு, குடியுரிமை, குடிபெயர்ந்தவர் தொடர்பான சேவைகள் மற்றும் பல்லின கலாசார அமைச்சர் ஒருவருக்கே தனது வேண்டுகோளினை முன்வைத்து அனுப்பியிருக்கிறார்.

நண்பரின் கடித விபரங்களை அந்த அமைச்சர் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அனுப்பி, இதுதொடர்பாக என்னவிதமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று வினவியிருப்பதாகத் தெரிகிறது.

குடிவரவு அமைச்சரின் கடிதத்திற்குப் பதில் எழுதிய வெளியுறவுத்துறை  அமைச்சரின் கடிதமே நண்பரால் எனக்கு பகிரப்பட்டது.

கடிதத்தின் சாராம்சம் இதுதான். 

"நீங்கள் குறிப்பிட்ட இலங்கைத் தமிழரின் கோரிக்கை தொடர்பாக நீங்கள் எதனையும் செய்யத் தேவையில்லை. அவ்வாறு செய்யுமிடத்து எமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுருத்தலாய் அது மாறும் என்பதுடன் எமது நட்புநாடான இலங்கைக்கெதிராகச் செயற்படுவதும் ஆகிவிடும். யுத்தம் முடிந்த காலத்திலிருந்து நாம் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்பட்டு வருகிறோம். இலங்கை மேற்கொண்டுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு நாம் பூரண ஆதரவு வழங்கிவரும் நிலையில், தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக நாம் கேள்வியெழுப்புவது அந்த நல்லிணக்க முயற்சிகளைக் குழப்பிவிடும் என்றும் அஞ்சுகிறோம்.....ஆகவே, பேசாமல் இருங்கள்" என்பதுதான் அது.

இந்த நிலைப்பாடு இன்றிருக்கும் லிபரல் நஷனல் கட்சிக்குப் புதியதல்ல. தற்போதைய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பேர்போன இனவாதிகள். குடியேற்றவாசிகளுக்கெதிரான கடுமையான நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பவர்கள். குறிப்பாக 2009 காலப்பகுதியில் தொழிற்கட்சி அரசு தமிழ்ப் படகு அகதிகளைக் கண்டும் காணாது இருந்தபொழுது அதனைத் தடுக்கவேண்டும் என்று கோஷமிட்டவர்கள். தமிழ் அகதிகளைப் பயங்கரவாதிகள் என்று வெளிப்படையாகப் பேசி வந்தவர்கள். 
மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்னர் இலங்கையரசிற்கு ரோந்துப் படகுகள், அகதிப் படகுகளைத் தடுக்கவென்று பெருமளவு பணத்தினை வாரியிறைத்தவர்கள். இன்றைய பிரதமர் ஸ்கொட் மொறிசன் தானே நேரடியாக இலங்கைக்குச் சென்று படகுகளைக் கையளித்து பணமும் கொடுத்து, இலங்கை இனவாதிகளிடம் பரிசும் பெற்று வந்தவர். 
இன்று அவதிப்பட்டு வரும் தமிழ்க் குடும்பம் ஒன்றினை இன்றுவரை தடைமுகாமில் வைத்து ( இரு பிள்ளைகளும் இங்கு பிறந்தபோதும் கூட) அவஸ்த்தைப்படுத்தி வருவதுடன், இன்றுவரை குடியுரிமையினை மறுத்து வருபவர்கள். அவுஸ்த்திரேலிய அரசின் அடாவடித் தனத்தினையடுத்து தற்போது நியுசிலாந்து அரசும் அமெரிக்க அரசும் இக்குடும்பத்தினை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஐ நா வில் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது, தமிழர்கள் அவலங்களைப் பேச விரும்பாது, அகதிகளை மிருகங்களாகப் பார்த்து, இனக்கொலையாளிகளுக்கு பரிசும் ஆயுதமும் கொடுத்துவரும் அவுஸ்த்திரேலிய அரசு இனவாத அரசுதான். இந்த நாட்டு அரசுடன் ஒப்பிடும்பொழுது கனடா நாடும் அதன் பிரதமரும் ஆயிரம் மடங்கு மேலானவர்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

அவுத்திரேலிய அரசு அவுத்திரேலிய பூர்வீக மக்களுடையது அல்ல.

இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட, அந்த நாட்டுக்கு வேண்டாத குற்றவாளிகள், இலங்கை வந்துசேர்ந்து, இலங்கையைக் கைப்பற்றி இன்று ஆட்சிபுரிவதுபோல.  இங்கிலாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட குற்றவாளிகளே அவுத்திரேலியாவந்து, அவுத்திரேலியாவைக் கைப்பற்றி இன்று ஆட்சிபுரிவதாக பூகோள வரலாறும் தெரிவிக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை, இனம் இனத்தைச் சேருகிறது.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் மேற்குறிப்பிட்ட அந்த தமிழ்க் குடும்பம் பற்றிய செய்தியில் ஒரு திருத்தம்.

அவுஸ்த்திரேலிய இனவாதிகளால் அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட அக்குடும்பத்தினை அமெரிக்காவோ நியுசிலாந்தோ ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக எழுதியிருந்தேன். அது சில தினங்களுக்கு முன்னர் அக்குடும்பத்தின் இரண்டாவது மகளுக்கு இரத்தத்தில் கிருமித் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு முகாமிலிருந்து வெளியே வைத்தியசாலையொன்றிற்குக் கொண்டுசெல்லப்பட்ட செய்தி வந்தபோது சில மனிதநேய அமைப்புக்களே இவ்வாறு அமெரிக்க, நியுசிலாந்து அகதி அந்தஸ்த்துக் குறித்து பிரஸ்த்தாபித்திருந்தன. ஆனால், அது தவறான செய்தியென்று இக்களத்தில் எழுதும் எனது நண்பர் ஒருவர் பின்னர் விளக்கியிருந்தார். 

ஆக, இன்றுவரை அக்குடும்பத்தினை அவுஸ்த்திரேலிய மண்ணிலிருந்து நாடுகடத்துவதை தனது தலையாய கடமையாக ஏற்றுச் செயற்பட்டு வருகிறது இந்த வெள்ளையினவாத அரசு என்பதுதான் நிதர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2021 at 13:12, ரஞ்சித் said:

( இரு பிள்ளைகளும் இங்கு பிறந்தபோதும் கூட)

அவர்கள் இங்கே பிறந்திருந்தாலும் குடியுரிமையில்லாதவர்களுக்கு பிறந்தமையால் இந்த சிறுமிகளும் அவுஸ்ரேலிய குடியுரிமையற்றவர்களே. இல்லாவிடில் இதுவே:- 

- இங்கே ஒரு குழந்தையை பெற்றிருப்பது இங்கே வரும்/வாழவிரும்பும் ஒவ்வொரு சுற்றுலா மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்களின் குடியுரிமைக்கான டிக்கெட்டாக மாறும்.
- இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், மக்கள் கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்க விரும்பும் எவரும் கர்ப்பிணிப் பெண்களை ஆபத்தான பயணங்களுக்கு அழைத்து வர தூண்டப்படுவார்கள், 
- அல்லது அவர்கள் தங்கியிருக்க தங்கள் வழக்கை சோதிக்கத் தொடங்கும் போது அவர்கள் வந்தவுடன் கர்ப்பமாக இருக்க முற்படுவார்கள்.

என Peta Credlin(முன்னாள் பிரதமர் Tony Abbottன் அலுவலக தலைமை அதிகாரி) “ The Daily Telegraphல் கூற..

2018ல் முன்னாள் உள்துறை அமைச்சர் Peter Dutton இரண்டு European au pairs( உறவுமுறை ஆயாக்கள்?) நாடு கடத்தப்படுவதை தடுத்தது நினைவில்லையா? சட்டத்தில் இப்படி எத்தனை விதிவிலக்குகளை பொதுமக்கள் அறியாமல் செய்கிறார்கள்  என Lucy Carne - The Courier Mailல் எழுத… 

இப்படியே இந்த குழந்தைகளின் வாழ்க்கையும் இவர்களைப்போன்று தடுப்பு முகாம்களில் வாழும் சிறார்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியே!!!

நான் நினைப்பது உலகில் சிறுபாண்மையினமாக பிறந்தமையாலேயே இந்தளவு கஷ்டங்களுமா என!!!

https://www.dailytelegraph.com.au/news/opinion/peta-credlin-we-all-feel-for-the-murugappans-but-you-cant-run-our-border-policy-on-sentiment/news-story/e5b51eeb87f42d95a27374499df15d05

https://www.abc.net.au/news/2018-09-19/emails-show-role-peter-dutton-played-in-au-pair-visas/10282822

https://www.couriermail.com.au/news/opinion/lucy-carne-time-for-the-government-to-make-an-exception-and-return-the-tamil-family-to-biloela/news-story/a61c165b143ccaf0bd86f43ad2f2a565
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.