Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் - ஆவணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் போரின் போது உள்நாட்டில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஆய்தங்களே பற்றியே... நீங்கள் எல்லோரும் இதற்கு முதலில் என்னால் ஏற்கனவே எழுதப்பட்ட விடுதலைப்புலிகளின் கடற்படையான கடற்புலிகளால் உள்நாட்டில் கட்டப்பட்டு போரின் போது பயன்படுத்தப்பட்ட தரைப் கவசவூர்திகள், கடற்கலங்கள் மற்றும் நீர்மூழ்கிகள் பற்றி வாசிக்கவில்லையெனில் அவற்றை வாசித்து விடுங்கள்..

கொழுவிகள்: கவசவூர்திகள், கடற்கலங்கள் மற்றும் நீர்மூழ்கிகள்

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் எல்லாம் மிகச் சொற்பமானவையே. அவர்களால் பயன்படுத்தப்பட்ட ஆய்தங்களைப் பற்றிய தகவல் எனக்கு பெரும்பாலும் கிடக்கவில்லை. அவற்றின் படங்கள் மட்டுமே எனக்கு கிடைத்துள்ளன.. கிடைத்த தகவல் எல்லாம் பல்வேறு இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். ஒருசிலது மொழியாக்கம் செய்யப்பட்டவையாகும். இயன்றளவு முயன்றும் திரட்டியிருக்கிறேன். வாசித்துப் பார்த்து கருத்துக் கூறுங்கள்.

சரி, வாருங்கள் கட்டுரைக்குள் போவோம்……..

 


 


நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலகட்டம் அது. புலிகளிடம் ஏராளமான ஆய்த மானுறுத்தம்(manufacture) தொழிற்சாலைகளும் உலகளாவிய நாடுகளிடம் இருந்து ஆய்தங்களை கொள்வனவு செய்து படித்தறிந்து நிறைந்த அனுபவங்களை பெற்றிருந்த காலம். ஏற்கனவே 80 களின் இறுதியில் புலிகள் பசீலன் ஏன்னும் ஓர் ஆய்தத்தையும் விளைவித்திருந்தனர். எனவே தாயகத்திலையே பெரும்பாலான கருவிகளை விளைவிக்கும் பொருட்டு தொழிற்சாலைகளை உருவாக்கினர். 4ஆம் கட்ட போரில் புலிகளின் பெரும்பாலான கப்பல்கள் ஆய்தங்களை தரையிறக்குவதற்கு முன்னரே கடலில் வைத்து அழிக்கப்பட்டன. இவ்வளவு ஏன் தமிழீழக் கடல் எல்லை மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் நடமாடக்கூடிய உலகளாவிய கடற்பரப்பில் வைத்தே ஐநா விதிமுறைகளுக்கு எதிராக இந்திய அமெரிக்க வல்லரசுகளின் உதவியுடன் புலிகளின் பல கப்பல்கள் அழிக்கப்பட்டன.

இதனால் தங்களுக்கு ஏற்பட்ட ஆய்த வெடிபொருள் பற்றாக்குறையைப் போக்க புலிகள் உள்நாட்டு ஆய்த மானுறுத்தத்தைப் பெருக்கினர். அதற்காக சிங்களம் தமிழரை அழிக்க வீசிய குண்டை சிங்களத்திற்கே வீச முடிவெடுத்தனர் புலிகள்.

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் என்னும் தொடர் கட்டுரையிலிருந்து…

' வன்னி பிரதேசங்கள் எங்கும் சிறிலங்கா படையினரின் கிபீர், மிக் வானூர்திகள் நாளும் பல தடவைகள் வந்து குண்டுகளை வீசி செல்லும். சுமார் இரண்டு கிபீர் வானூர்திகள் ஒரு தடவை தாக்குதல் நடத்த வந்தால் சுமார் 250 கிலோ நிறையுடைய 8 குண்டுகளை எடுத்துவந்து வீசும், அல்லது பெரும் அழிவை ஒரே இடத்தில் ஏற்படுத்த வேண்டுமாயின் 500 கிலோ நிறையுடைய 4 குண்டுகளை எடுத்துவந்து வீசும் .இவ்வாறு வீசும்போது ஒவ்வொரு தடவையும் குறைந்தது ஒரு குண்டாவது வெடிக்காமல் போகும் சாத்தியம் இருந்தது . அதன் பயன்பாட்டுக் காலம் முடிவடைந்தோ அல்லது அதன் முனை சரியாக விழுந்து மோதாமை போன்ற சில காரணங்களால் குண்டுகள் வெடிக்காமல் போவதுண்டு.

இவ்வாறு குண்டுகள் வீசும்போது வீசிய குண்டுகளையும் வீசிய இடங்களையும் கணக்கு வைக்கும் விடுதலைப்புலிகளின் வெடிமருந்து பிரிவினர் வெடிக்காத குண்டுகள் அறிந்து வீசப்பட்ட இடங்களுக்கு சென்று அவற்றை எடுத்துவந்து அவற்றில் இருக்கும் வெடிமருந்துகளையும் உலோகங்களையும் பிரித்தெடுத்து பட்டறைகளுக்கு அனுப்புவார்கள். சுமார் 500 கிலோ குண்டு வெடிக்காத பட்சத்தில் அதிலிருந்து பல இலக்கம் பெறுமதி வாய்ந்த வெடிமருந்தையும் உலோகங்களையும் எடுக்க முடியும்.இந்த மருந்துகள் உடனடியாக பட்டறைகளுக்கு எடுத்துசெல்லபட்டு எறிஅகணைகளாகவும் கைக்குண்டுகலாகவும் பல்வேறு வெடிபொருட்களாகவும் உருவாக்கப்படும். எனவே இவ்வாறு சிறிலங்கா வான்படை வீசுகின்ற குண்டுகளை கண்டெடுத்து அவற்றின் மருந்துகளை பிரித்தெடுத்து அவற்றை தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கும் படைபிரிவோன்று இதற்கென இயங்கிகொண்டு இருந்தது. இவ்வாறு வெடிக்காத குண்டுகள் முலம் அதிகளவில் அணியமாக்கப்பட்டது கைகுண்டுகள்தான். '

கைக்குண்டுகளோடு புலிகள் மேலும் பல வகைவகையான விதம்விதமான ஆய்தங்களையும் விளைவித்திருந்தனர். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கப்போகிறோம்.


 

  • மின்சார வெடியுடை 🔥(Electric Suicide vest)🔥

    • 20 ஆம் நுற்றாண்டில் தமிழரின் புதுப்புனைவு(invention)

இந்த உலகிலே முதன்முதலில் மின்சாரத்தில் இயங்கும் வெடியுடையினை புதுப்புனைந்தவர்கள் விடுதலைப் புலிகளே.. அவர்கள் இதனை தங்கள் விடுதலைப் போராட்டத்திற்காத்தான் மானுறுத்தியிருந்தார்கள்(manufacture). அவர்களிடம் இருந்துதான் உலகம் இதனைக் கற்றுகொண்டது. ஆனால் உலகின் ஏனைய இயக்கங்கள் இதனை அழிவிக்குப் பயன்படுத்தின! இது புலிகளின் தவறல்ல.

அவற்றினை புதுப்புனைந்ததோடு மட்டுமல்லாமல் அதில் பல்வேறு வகைகளை விளைவித்து(produce) தங்களின் ஆட்சிக்காலத்தில் முடிசூடா மன்னர்களாய்த் திகழ்ந்தவர்களும் விடுதலைப் புலிகளே என்பது மறுக்க முடியாத உண்மை.

தாங்கள் விளைவித்த இந்த ஆய்ததிற்கு அவர்கள் சூட்டிய பெயர் 'Charger - சாச்சர்' என்பதாகும். இதைக் கொண்ட உடையின் பெயர் 'வெடியுடை ' என்பதாகும். இவற்றை 'ரங்கன் ஜக்கட்' என்றும் அழைப்பர் (ஏன் என்பதற்கான விளக்கம் 'ரங்கன் தடைவெடி' பகுதியில் உண்டு). மேலும், இதை 'கிளைமோர்' என்றும் வடிவத்தின் அடிப்படையில் விளிப்பதுண்டு. இதைப் புதுப் புனைந்தவர் கேணல் குயிலன் எ ராஜு ஆவார்.

சரி, இனி இவ்வெடியுடையின் பல்வேறு வடிவங்களைக் காண்போம்:

முதலில், புலிகளின் வெடியுடையினை உடலில் எங்கெலாம் அணியலாம்?

  • பெண்கள்:

  1. மார்பகம்

  2. இடை

  3. மரும பகுதி

  • ஆண்கள்:

  1. நெஞ்சு

  2. இடை

இவற்றில் இரு வகையுண்டு..

  1. இலக்கினை அழிப்பதற்காக காவிச்செல்லும் சார்ச்சர் கொண்ட வெடியுடை.

  2. அடுத்து தங்களை அழிப்பதற்காகக் கொண்டு செல்லும் ஒருவகை கிளைமோர் வடிவிலான சாச்சர். இது சதுர வடிவில் இருக்கும்.

ஆதாரம்: 'என் மகள் ஒரு பயங்கரவாதி(My daughter is a terrorist)'

main-qimg-ae0752215d3a17cb711e976bf5c08658.png

'தங்களை அழிப்பதற்காகக் கொண்டு செல்லும் ஒருவகை கிளைமோர் வடிவிலான சாச்சர்'

கரும்புலிகள்/அதிரடிப்படைஞர் எதிரியின் படைத்தாவளத்தை தாக்க செல்லும்போது இதை 2 விதமாய் இயக்கி வெடிக்க வைப்பர்.

  • மாந்தனால் இயக்கப்பட்டு குறிப்பிட்ட நொடிகளில்(இடத்திற்கு ஏற்றாற்போல் நேரம் வேறுபடும்) வெடிக்குமாறு செய்யப்பட்டவை.

    • அவை இயக்கப்பட்டதும் (இழுத்துவிடப்பட்டதும்), நேரக்கணிப்பி குறித்த நொடிகளுக்கு பின்னோக்கி ஓடும்; அப்போது அதன் எண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். '00' வந்ததும் ஒரு நீல நிற ஒளி ஒன்று இந்த சாச்சர் இழுக்கப்பட்ட இடத்தில் ஒளிரும். மறுகணமே வெடித்துவிடும்.

main-qimg-53e4e9a94c93ee5ffd72633dfe3393d0.jpg

'கருவேங்கை உடலில் நீல நிற ஒளியோடு '00' என்று தெரிவதை நோக்குக | படம்: எல்லாளன் திரைபப்டத்திலிருந்து'

main-qimg-cb37e485277e5937aae9de6567acdd8f.png

'கரும்புலியின் நெஞ்சில் நேரக் கணிப்பியை காணவும்'

  • ஓடி வெடிக்கும் சமநேரத்தில் அதை உடனடியாக வெடிக்க வைப்பதற்காக(இது ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் எதிரி வந்தால் என்ன செய்ய?) மற்றொரு கட்டுப்படுத்தியும் இருக்கும். அது கையால் இயக்குவது. அண்ணளவாக ஒரு சாண் உயரத்தில் உருளை வடிவினதாக இருக்கும். அது சாச்சரோடு கம்பி மூலமாக இணைக்கப்பட்டிருக்கும். அதன் மேற்பக்கத்தில் ஒரு ஆளி(switch) போன்ற 'அழுத்தி' இருக்கும். அது 'சொட்டுக்கோல்' போன்ற வடிவத்தில் இருக்கும். அதை பெருவிரலால்தான் அழுத்துவார்கள் - நான்கு விரலாள் அந்த உருளையை பற்றியபடி பெருவிரலால் அழுத்தியை அழுத்துவார்கள். அழுத்தினால் நேரம் முடியும் முன்னே சாச்சர் வெடித்துவிடும். இவர்களும் காற்றோடு கலந்துவிடுவர்!

main-qimg-ca7fc66029216bc2225eee10bfc92cd4.jpg

'இதுதான் நான் மேற்கூறிய அழுத்தி'

main-qimg-02aae51e44e7cefdbd443d6593cdf306.png

பல்வேறு வகையான வெடியுடைகள்:

main-qimg-35096a8cc539f92e5d134b905a163af3.png

main-qimg-681a01f45e6a234a6715ebe97b3ecb91.png

main-qimg-e62bedeb3e3a810858acfd526a3164ff.png

இந்தப் பெண் கை பிடித்திருக்கும் பகிதியில் தான் இவ்வெடியுடைக்கான விசைவில் உள்ளது. அதை பிடித்து இழுத்தால் டமார்!🌟

main-qimg-b83bf0908768fc8f6b41ea49b338bd52.png

கரும்புலிகளின் பல்வேறு வகையான வெடியுடைகள்:

main-qimg-173b9dcf5b59842f597afe3cac0f6dd0.png

'படிமப்புரவு: Where global solutions are shaped for you'

main-qimg-a4fce22fbd316f5037959ac2907d3d20.png

main-qimg-ebf65c749b4f27a5a557c48a83b09438.png

main-qimg-fc745ebc7283aace98cf59639a493522.png

main-qimg-81607c52059ef37555289fe2197c3a94.png

main-qimg-e93595134878ef4e7a34cb2becffab50.png

 

charger (2).jpg

 

Charger.jpg

  • மேற்கண்ட படிமத்திற்கான விளக்கம்: இதிலந்த கறுப்பு, சிவப்பு நிறங்களில்(ஒவ்வொரு வெடியுடையிலும் இரு பக்கவோரங்களிலும் இருப்பவை) தெரியும் 'இழுவி' இனைப் பிடித்து இழுத்தால் போதும். எதிரியின் பக்கத்தினை நோக்கி கட்டப்பட்டிருக்கும் வெடிமருந்து கொண்ட பொதி வெடித்து விடும். எதிரியின் பக்கத்திற்கு எதிர்ப் பக்கத்தில்(புறப்பக்கம்) வருபவர்களுகு சிறியளவு பாதிப்பே ஏற்படும். 

 

 

main-qimg-3b26179291ab869559cbdb27be88de43.png

'படிமப்புரவு: indi samarajiiva - http://flickr.com'

இந்த வெடியுடையானது ஒருவரின் இடையினைச் சுற்றிக் கட்டும் வகையில் விளைவிக்கப்பட்டிருந்தது. அதாவது 360 பாகையிலும் சிதறல்களை தெறிக்கவிடக் கூடியது. இது போன்ற வெடியுடைகள் அரிதானகவே பயன்படுத்தப்படுபவை :-

main-qimg-c5fab3078df53b7a3af4dc04d1373632.png

main-qimg-1385bfe36df3150ef23f44ff0694e531.png

'இந்த நீல நிற பெட்டிதான் வெடிமருந்து கொண்ட பொதி.'

Vavuniya_police1.jpg

 

பெண்களுக்கான 'pantie வெடியுடை:-

main-qimg-5fbe177483ce99eed097a760873d8308.png

main-qimg-e9579fc8fce6c41ec9dead755304bfdf.png

main-qimg-8af767d163f789a9a9313e8c31ff491c.png

main-qimg-92ca5e570267c8e4b92aeb2e0d8f48ca.png

main-qimg-60895aed6e487b797114894315ce2149.png

தலைச்சீராவில் பொருத்தப்பட்டுள்ள விசைவில்:

main-qimg-27e94227111169f495d1aeea9da9e29f.png

main-qimg-0fab21f39424f6015e0b2f28e7f96abf.png

main-qimg-e7558aa0b70224584b692ed28ce15568.png

 


  • மாற்றியமைக்கபட்ட தாக்குதல் துமுக்கிகள் (modified assault rifles)

1) மாற்றியமைக்கபட்ட T-56 தாக்குதல் துமுக்கி:

main-qimg-c2b7c359d67c724a243365a363ea33bc.jpg

2)மாற்றியமைக்கபட்ட பெயர் தெரியாத தாக்குதல் துமுக்கி:

இதைப் பார்ப்பதற்கு Sterling L2A3 போன்று உள்ளது

main-qimg-ffdc668bc4b039a811a5223ee8cbb19d.png

main-qimg-09f84f32f2ffde44481d8b53bc747c5a.png

 

 


  • செம்மைப்படுத்தப்பட்ட துமுக்கி (Improvised Rifle)

1) செண்பகம் குறிசூட்டு துமுக்கி (Senpakam sniper rifle)

அன்றைய காலக்கட்டங்களில்(2006s) விடுதலை புலிகளிடம் குறிசூட்டு துமுக்கிகள் (sniper rifles) பெருமளவில் இருக்கவில்லை . இதனால் அந்த தேவையை ஈடுசெய்ய AK-47 துப்பாக்கிகளுக்கு தொலை நோக்கிகளை பொருத்தி புதிய முறையிலான குறிசூட்டு துமுக்கிகள் உருவாக்கப்பட்டன. ஆதாவது குறுகிய துரத்தில் நின்றுகொண்டு எதிரியை குறிபார்த்து சுடும் வகையிலும் இலகுவாக கொண்டுசெல்ல கூடிய வகையிலும் AK-47 துமுக்கிகள் விடுதலை புலிகளால் வடிவமைக்கபட்டன.

இந்த AK-47 இற்கு விடுதலை புலிகள் செண்பகம் என பெயரிட்டிருந்தனர். இதற்கான சன்னங்களாக கூட சாதாரண AK-47 இல் பயன்படுத்தப்படும் சன்னங்கள் இல்லாமல் கவசதுளைப்பி (Armour piercing) சன்னங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் பிடங்கு(butt) கூட விடுதலைப்புலிகளால் உள்நாட்டில்தான் விளைவிக்கப்பட்டது - திராகுனோவு குறிசூட்டு துமுக்கியின் தோற்றத்தில்.

செண்பகம் குறிசூட்டு துமுக்கி:

main-qimg-291118e10ab7c4c46ab1e93361cea8cb.png

செண்பகத்தின் அண்மையாக்கப்பட்ட(zoom in) நடுப்பகுதி:

main-qimg-4663a9b4d6bc744b9c181a59512ac410.png

main-qimg-17fd92b82f04ed21b52999e044edfdc3.png

'கிளிநொச்சி தருமபுரப் பகுதியில் முன்னேறிவரும் சிறீலங்காப் படைகளை நோக்கி செண்பகம் குறிசூட்டு துமுக்கியால் குறிவைக்கும் செண்பகம் குறிசூட்டுப் பிரிவு புலிவீரன் ஒருவன்'

 


  • உள்நாட்டு பொருண்ம எதிர்ப்பு குறிசூட்டுத் துமுக்கி (Indigenous Anti material sniper rifle)

1)

இது வகை 85 சுடுகலனின் சுடுகுழலை தன் சுடுகுழலாக இது கொண்டுள்ளது. ஆகவே இது 12.7மிமீ சன்னங்களை கணையமாகக் கொண்டிருந்திருக்கிறது. அதாவது கவசத்துளைப்பி சன்னங்களைக் கொண்டிருந்திருக்கிறது.

main-qimg-b6e7ee2f97507ad8169030efdb5e932a.png

 

2)

இதுவும் ஒரு விதமான 12.7 மிமீ சுடுகலனின் சுடுகுழலையே தன் சுடுகுழலாக இது கொண்டுள்ளது. ஆகவே இது 12.7மிமீ கவசத்துளைப்பி சன்னங்களை கணையமாகக் கொண்டிருந்திருக்கிறது. 

Tamil Tigers' indigenously produced Anti-Material Rifle | தமிழீழ விடுதலைப்புலிகளால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட பொருண்ம எதிர்ப்புச் சுடுகலன்

 


  • உள்நாட்டில் உண்டாக்கப்பட்ட பின்னுதைப்பற்ற சுடுகலன்(RL) - 1 (ஆதாரம்)


  • இனந்தெரியா உள்நாட்டு விளைவிப்பு சுடுகலன் (Unidentified indegenously produced gun)

1)

இதன் சுடுகுழல் மிகவும் நீட்டாக உள்ளது. அதன் மேல் தொலைநோக்கி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பிடங்கில் ஒரு மிதிவண்டி பெடல் உள்ளது. இதன் செயற்பாடு விளக்கமாக சிங்களப் படையினர் கூறுவது, அந்த மிதிவண்டி பெடலை காலால் அமுகினால் சுடும் என்று. இது நம்பும் படியாக இல்லையென்பதாலும் சரியான படிமம் கிடைக்காதபடியாலும் என்னால் சரியான விளக்கத்தை அடையமுடியவில்லை.

LTTE a.k.a. Tamil Tigers' unidentified tripod mounted indigenously produced long range rifle fitted with scope

 


  • துமுக்கி எறிகுண்டு (rifle grenade)

1) அருள்-89 துமுக்கி எறிகுண்டு (AruL -89 rifle grenade)

வெடிமருந்து : TNT

வெடிமருந்து நிறை: 100g

உருவாக்கப்பட்ட ஆண்டு: 1987 விருத்து 1

  • நெடுக்கம் : 100 மீ

அருள் என்ற பெயர் சூட்டப்பெற்ற ஆண்டு: 1988

மேம்படுத்தப்பட்ட ஆண்டு: 1989 விருத்து 2

  • தாக்கமான சூட்டு நெடுக்கம்: 150 மீ

  • பெரும சூட்டு நெடுக்கம்: 300 மீ

உண்டாக்கியவர்: கப்டன் அருள் மாஸ்டர்

இது T-56, T-81 ஆகிய துமுக்கிகளில் பயன்படுத்தத்தக்கது. இக்குண்டானது 1989 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட பின்னர் ஏற்கனவே இருந்த அருள் என்ற பெயருடன் '89' (மேம்படுத்தப்பட்ட ஆண்டு) என்ற எண்ணும் சேர்க்கப்பட்டு 'அருள் 89' என்று பெயர் சூட்டப்பட்டது.

  • அருள்-89 விதம்-I

main-qimg-67acc8ffe52f98e83dee12581182584a.png

  • அருள்-89 விதம்-II

main-qimg-7b1fbada31184f6168265ee978b2e020.png

  • அருள்-89 விதம்-III

main-qimg-48d1576d727eed5f8e206138aea48176.png

main-qimg-73ef43485225dccbbbd03a66734677ae.png

  • அருள்-89 விதம்-IV

main-qimg-e92d965290c8d8fe85235ec064cfdfbe.jpg

 

 


  • கைக்குண்டு (hand grenade)

1) குணா கைக்குண்டு (Kuna hand grenade)

இது 1990 களின் இடைப்பகுதியில் பெருமளவில் புலிகளால் பயன்படுத்தப்படது. இது பயன்படுத்தப்பட்ட மீன் டின், பால் டின்னில் செய்யப்பட்டது ஆகும்.

main-qimg-e9d85129215c34e385540a507d7d16e7.png

2) தமிழன் கைக்குண்டு (thamizan hand grenade)

புதுப்புனைந்தவர்: சார்ளஸ் அன்ரனி (மாவீரர்)

வெடிமருந்து: TNT

வெடிமருந்து நிறை: 50–100g

நிறம்: பச்சை & நீலம்

இது தமிழரைக் கொன்று குவித்த சிங்களத்தை அழிக்க அதே தமிழினத்தின் பெயரால் சூட்டப்பெற்றது ஆகும். மற்றைய கைக்குண்டுகளைப்போல இழுவூசி(clip) பயன்படுத்தப்படவில்லை ஏனெனில் யுத்தகளத்தில் சிலசமயம் தானாகவே ஊசிகள் இழுபட்டு குண்டு தவறுதலாக வெடிக்கும் ஆபத்து இருந்தது அதனை தவிர்க்கவே இவ்வாறு விளைவிக்கப்பட்டது. தமிழன் கைக்குண்டில் முன்பகுதியில் இருக்கும் மூடி போன்ற அமைப்பை கைகளால் அழுத்தமாக அடித்துவிட்டு (குத்திவிட்டு) எறிந்தால் போதும் ; வெடித்து சிதறும்.

main-qimg-aa671c8d1554b9a570b82a428a3959fb.jpg

main-qimg-8dd39de66c000fd3db4b41e4148f2ebf.png

main-qimg-1ad4a9966fef5e45db7cd69c1649a394.jpg

 


  • Can Charge - கான் சார்ச்

  • தமிழில் கலன் வெடிகுண்டு எனலாம்.

main-qimg-0fbfe330d119e0dbad78ebbbc0eed3fd.png

இது விடுதலைப் புலிகளின் உள்நாட்டு மானுறுத்தம்(manufacture) ஆகும். இதற்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயர் 'Can Charge' என்பதாகும். இதை விடுதலைப் புலிகளின் அதிரடிப் படைஞர்கள் மட்டுமே பயன்படுத்துவர். இது குளிர்பான கலனின் தோற்றத்தில் இருக்கும். இதை எப்படி இயக்குவது என்று கீழே படங்களில் காட்டியிருக்கிறேன்.

main-qimg-34d563627971ea0612b3caf8a883e131.jpg

'கொச்சரையர்(கப்டன்) கருவேந்தன் வேடமேற்று நடித்த போராளியொருவர் Hanger-இன் உள்ளே 'கான் சார்ச்'-ஐ இயக்குகிறார் | படம்: எல்லாளன் திரைப்படத்திலிருந்து'

இதன் மூடியைத் திறந்து விட்டு அந்த சிவப்பு நிற 'விசை' அழுத்தினால் மஞ்சள் நிற ஒளி எரிவதோடு 'நீக்' என்றொரு ஒலி வரும். அதன் பொருள் வெடிகுண்டு எழிவு(on) ஆகிவிட்டதென்று! பின்னர் இதை தூக்கி எறிந்தால் 10 நொடிகளுக்குள் வெடித்து விடும். (ஈரத்தீ, எல்லாளன் போன்ற படங்களில் கரும்புலிகள் இவற்றைப் பயன்படுதுவதை காணலாம்)

 


  • உள்நாட்டு முச்சுடுகலன் (indigenous triple gun)

 இது ஒரு விதமான மூன்று T-56 வகை துமுக்கிகளை(rifle) ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வடிவம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சப்பானியர்களின் T-96 25mm முச்சுடுகலன் போன்று உள்ளது. இவை ஒரே நேரத்தில் மூன்று சுடுகுழல்கள் வழியாக சன்னங்களை துப்பும்.

1)

முன்பக்கம்:

main-qimg-0420f5ecbc0b66203db8da7da6dafa52.png

பின்பக்கம்:

main-qimg-629e6c86557055b291a8dcd1a325543a.jpg

T-81.jpg

'இந்த ஆண் கையை பிடித்து அழுத்தும் இடத்தில்தான் இதற்கான விசைவில் உள்ளது. அவ்வாறு அழுத்தினால் இது சன்னத்தை வெளியேற்றும் (சுடும்)'

2. 

main-qimg-77ef65d98ac2a73151e731afdb936243.png

சமர்க்களத்தில் சன்னக்கூடு (mag) பொருத்தப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட போது…

main-qimg-d900947514e0df75569c48d658badea8.png

 


  • உள்நாட்டு 12.4/14.7 மி.மீ சுடுகலன் (indigenous 12.4/14.7 mm gun)

இந்த சுடுகலங்களை விடுதலைப்புலிகளின் ஆயுத ஆராச்சி & உருவாக்குதல் பிரிவால் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சுடுகலானாகும்.. இது (அறியப்படா) மிமீ கலீபர் சன்னங்களை எறியங்களாக(projectile) கொண்டது. இதற்கான காவுவண்டிகளையும் புலிகள் உள்நாட்டிலேயே அணியமாக்கியுள்ளனர்..

இவை மூன்றையும் சீராக பயன்படுத்த முடியவில்லை, தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்களை இடர்களை தொடர்ந்து விளைவித்து வந்தது. அதனால் இவை பின்னர் பயன்பட்டில் இருந்து நீக்கப்பட்டது.

  1. புலிக்குட்டி சுடுகலன் விதம்-I (Pulikkutti gun Mk-I)

இதுதான் முதலில் மானுறுத்தப்பட்டது(manufacture).. இது கொடுத்த சிக்கல் என்னவெனில் அதிக சூடாகி இயங்குபொறி தடைப்பட்டது. எனவே இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டு இதைக் கொஞ்சம் மேம்படுத்தி அடுத்த சுடுகலன் உருவாக்கப்பட்டது.

main-qimg-b7304d65ad54495b00b9538ba2eff229.png

பக்கவாட்டுத் தோற்றம்:

main-qimg-e06aa14cabc4f19698ab7d6853fce801.png

main-qimg-9f7c6f3dbc22ec825048c4e5faf0038a.jpg

main-qimg-d1374ddefe16d09cc5566cb799818c72.png

'இதுதான் இதற்கான சன்னக்கூட்டினை வைக்கும் பெட்டி'

2) புலிக்குட்டி சுடுகலன் விதம்-II (Pulikkutti gun Mk - II)

இதுதான் இரண்டாவதாக் மானுறுத்தப்பட்டது.. இதற்குச் சிக்கல் வந்தது சன்னங்களை தாணிக்கும்(load) உருவத்தில். எனவே இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டு இதைக் கொஞ்சம் மேம்படுத்தி மூன்றாவது முறையாக ஒரு சுடுகலன் உருவாக்கப்பட்டது.

main-qimg-f922616ac12107e79817e4f93b2c6e72.png

main-qimg-8d0c2bd971b2d8795378edda6525cda1.png

3) புலிக்குட்டி சுடுகலன் விதம்- III (Pulikkutti gun Mk-III)

இதுதான் மூன்றாவதாக மானுறுத்தப்பட்டது. இது மேற்கண்ட இரண்டு சிக்கல்களையும் சரி செய்து வெற்றி கண்டாலும் குறிசூட்டைத் தருவதில் வழுவானது. மேலும் இறுதிப் போரும் மிகவும் நெருங்கிவிட்டதால் இதன் மானுறுத்திகளும் மேம்படுத்தல்களும் நிறுத்தி வைக்கப்பட்டது... அத்துடன் போரும் முடிந்து த.வி.பு உம் ஆயுத மௌனிப்பினைச் செய்தனர்.

main-qimg-760eae38b3c191896b27f68664b776ea.png

 


இது என்னவென்று தெரியவில்லை. ஆனால் பார்ப்பதற்கு மனித வலிமை(power) மூலம் இயங்கும் ஒரு ஏவரி போல உள்ளது.

main-qimg-5ad9bb75122f6dddf3ede0044d7d6d9e.png

 


சரி, கடைசியாக உங்கள் எல்லோருக்கும் ஒரு துணுக்குச்செய்தி ஒன்றினைக் கூறிச்செல்ல விரும்புகிறேன். புலிகள் தங்களின் ஆய்தங்களுக்கு அவற்றிற்குரிய பெயர்களை பயன்படுத்துவதை விட தாங்களாகவே ஒரு குறியீட்டுப் பெயரினைச் சூட்டிப் பயன்படுத்துவது வழக்கம்.. இது அந்த ஆய்தங்களைக் குறிக்கும் சங்கீத சொல்லாக இருந்தது. அவ்வாறு புலிகளால் எந்தெந்த ஆய்தங்களுக்கு என்னென்ன பெயர்கள் வழங்கப்பட்டன என்பதைப் பற்றி இங்கு கூறி கட்டுரையினை முடித்துக்கொள்கிறேன்..

(இவை பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவையே)

  1. வில்லுகள் - படைக்கலங்கள்(Munition)

  2. தம்பிமுத்து - தரை-வான் ஏவுகணை-14 (SAM-14)

  3. அஞ்சிஞ்சி - 120mm கணையெக்கி (mortar)

  4. சாரை - ZPU-1

  5. பூமா - 14.5mm ZPU-2

  6. ஆலை - 14.5mm ZPU-4

  7. அப்பாச்சி - ???

  8. டொங்கான் - கைகுண்டு செலுத்தி (GL)

  9. மொங்கான் - பல்குழல் உந்துகணை செலுத்தி (MBRL)

  10. பப்பாகிலோ - என்னவென்று தெரியவில்லை

  11. கிபிர் - தரைக்கரும்புலியின் ஊர்தி

  12. ஆட்டுக்குட்டி - தகரி(Tank) (ஜெயசிக்குறு சண்டை நிகழ்படக் காட்சியொன்றில் கண்டுள்ளேன் )

  13. 97 - M16

  14. ஒலிகன் - Oerlikon 20mm Cannon

  15. வாழைப்பொத்திகள் - RPG உந்துகணை

  16. XR2 - RPG 29

  17. நாயகன் - M141 BDM

  18. 17 - FGM 172 Javelin & FGM 172B


 

சிறப்பு நன்றி: முன்னாள் விடுதலைப் போராட்ட வீரன்

உசாத்துணை

படிமப்புரவு

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிக்குட்டி 12.4/14.7 மிமீ சுடுகலன் விதம் - I

 

dKQ.png

 

 

foa.png

 

f.png

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப் புலிகளின் உள்நாட்டு & வெளிநாட்டுத் தயாரிப்பு வெடிபொருட்கள்

 

 

LTTE indigenous explosives.jpg

 

LTTE home made weapons.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேங்கையின் கையில் கையெறிகுண்டுகள்

பெப் 11, 1987

 

உள்நாட்டு விளைவிப்பு!

 

FCvO0udWUAI7DXw.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி நன்னி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
On 22/4/2023 at 23:15, ஈழப்பிரியன் said:

இணைப்புகளுக்கு நன்றி நன்னி.

மகிழ்ச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.