Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொண்டு நிறுவனமான 'தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால்'(TRO) அணியப்பட்ட ஆடைகள் - ஆவணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

எல்லா(hello)...

வணக்கம் நண்பர்களே!

இன்று நாம் பார்க்கப்போவது அரசு சார்பற்ற அமைப்பான அ அரசு சாரா தொண்டு நிறுவனமான TRO என்ற தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சீருடைகள்(Uniforms), கஞ்சுகங்கள்(Vest) போன்றவற்றைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.

இந்நிறுவனமானது 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறுதிவரை தொண்டாற்றி வந்த ஒரே நிறுவனம் இதுவாகும்.

இம்முறை வழக்கமாக நானெழுதும் பந்தி எல்லாம் இல்லை. இதில் வெறும் படிமங்கள் மட்டுமே இருக்கும் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 


  • தமிழர் புனர்வாழ்வுக்கழக கட்டடம்:-

main-qimg-608246d6e46b49adb71bfc953d607ac0.png


 

(படிம விளக்கம்: கீழ்க்கண்ட படிமங்கள் யாவும் சிறீலங்கா சிங்கள அரசு தமிழர் மீது இனப்படுகொலை நடத்திய 2008 - 2009 ஆண்டு காலத்தில் எடுக்கப்பட்டவை ஆகும்.)

 


  • T-shirt:-

இவை மூன்று நிறங்களில் அணியப்பட்டமைக்கான சான்றுகள் இதுவரையிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றின் முன்புறத்தில் அடி நெஞ்சில் இருந்து அடி வயிறு வரையிலும், அரக்கு நிறத்தில் 'TRO' எழுதப்பட்டு, அதன் கீழ் நிறுவன இலச்சினை பொறிக்கப்பட்டு, அதன் கீழ் சிறிய எழுத்துக்களில் இந்நிறுவனத்தின் பெயர் ஆங்கிலம் மற்றும் தமிழில், முறையே, எழுதப்பட்டுள்ளது. இவற்றின் பின்புறத்தில் மேல்முதுகில் இருந்து கீழ்முதுகு வரை, முன்னால் இருப்பது போன்றே இங்கும் பொறிக்கப்பட்டிருந்தது.

1) வான்நீல நிறம்

main-qimg-390117f7cffbd21b8246485d9b31ac72.jpg

2) வெளுறிய மண் நிறம்

main-qimg-4ec88d562d74b8f45f3d6dc3a960480f.jpg

2) & 3) வெளுறிய மண்ணிறம் & வெளுறிய இளநீல நிறம்

main-qimg-dafa64c56ad9c27937853ec56a9af478.jpg

 


  • 'Emergency Rescue Team' இனது கஞ்சுகம்:-

இது கறுப்பு நிறத்தில் அணியப்பட்டது. இதன் முன்புறத்தின் இடது மார்புப் பகுதியில் 'TRO' என எழுதப்பட்டு அதன் கீழ் அந்நிறுவனத்தின் இலச்சினை அச்சிடப்பட்டிருந்தது. சள்ளையின் முன்பக்கத்தில் இரு பக்குகள்(Pockets) இருந்தன. முதுகுப் புறத்தின் மேற்பகுதியில் 'EMERGENCY RESCUE TEAM' என மூன்று சொல்லாக பிரித்து எழுதப்பட்டு, அதன் கீழ் 'RESCUE TEAM' என இரண்டாக எழுதப்பட்டு, அதன் கீழ் இந்நிறுவனத்தின் சின்னம் அச்ச்சிடப்பட்டு, அதன் கீழ் 'தமிழர் புனர்வாழ்வுக் கழகம்' என எழுதப்பட்டிருந்தது. இவை அனைத்தும் பால்பச்சை நிறத்தில் இருந்தன.

main-qimg-c30391f897786e0cdfa3ae9e2f1c73a9.jpg

'பின்பக்கம்'

main-qimg-f8b1c89aca1b15109799c51c66fc8d3f.jpg

'முன்பக்கம்'

 


  • உயர் கட்புலன் பாதுகாப்பு கஞ்சுகம் - High Visibility Safety Vest

இது பால்பச்சை நிறத்தில் அணியப்பட்டது. இதன் முன்புறத்தின் வலது மார்பில் செஞ்சிலுவை சின்னமும், இடது மார்பில் கறுப்பு நிறத்தில் TRO இன் இலச்சினைமும் பொறிக்கப்பட்டிருந்தது.. இடது மார்பிற்குக் கீழே, சள்ளைக்கு மேலே, விலா எலும்பு பகுதியில் 'TRO' என கறுப்பு நிற ஆங்கிலப் பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. இதன் முதுகுப் புறத்தின் நடுவில் ஒரு பெரிய அரக்கு நிற வட்டத்தினுள் இந்நிறுவனத்தின் இலச்சினை அரக்கு நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் 'TRO' எனவும், அதன் கீழ் 'தமிழர் புனர்வாழ்வுக் கழகம்' எனவும் முறையே அரக்கு நிறத்திலும் எழுதப்பட்டிருந்தது. இவ்விரண்டு வாசகங்களும் சாம்பல் நிறப் பட்டைகளால் பிரிக்கப்பட்டிருந்தன. அவை முன்புறத்தில் இருந்த 'TRO' என்ற சொல்லையும் பிரித்திருந்தன.

main-qimg-578f0f25f4f1348f6428e3c726eeba3f.jpg

'முன்பக்கம்'

main-qimg-fd8324d102b18f7375ee335cc7397cbe.jpg

'பின்பக்கம்'

 


  • சாதாரண கஞ்சுகம் - Normal Vest

இது ஒரே ஒரு நிறத்தில் மட்டுமே இருந்தது. இதன் முன்புறத்தில், வலது மார்பில் இந்நிறுவனத்தின் இலச்சினையும் இடது மார்பில் 'TRO' எனவும் மஞ்சள்  நிறத்தில், எழுதப்பட்டிருந்தது. பின்புறத்தில் மேல்முதுகில் இருந்து கீழ்முதுகு வரை, மஞ்சள்  நிறத்தில், 'TRO' எழுதப்பட்டு, அதன் கீழ் நிறுவன இலச்சினை பொறிக்கப்பட்டு, அதன் கீழ் சிறிய எழுத்துக்களில் இந்நிறுவனத்தின் பெயர் ஆங்கிலம் மற்றும் தமிழில், முறையே, எழுதப்பட்டுள்ளது. முன்புறத்தின் இரு பக்கத்திலும் ஒரு சராசரி தமிழீழத் தமிழனின் உயரத்தின் அடிப்படையில் நடு நெஞ்சில் இருந்து, மேலும் கீழுமாக, இவ்விரு பக்குகளாக மொத்தம் நான்கு பக்குகள் இடம்பெற்றுள்ளன. அவற்றிற்கு மூடி உண்டு.

1) #043927 நிறம்

main-qimg-3c2c67ddb4ddf2e4766ec79c60ce8e66.jpg

main-qimg-f12232c11f067a5fc03be744cc1468c5.jpg

 


  • மேலணி வகையிலான கஞ்சுகம் - Apron type vest

இஇது சாம்பல் நிறத்தில் மட்டுமே இருந்தது. இதனை தலையால் போட்டு (இணைக்கப்பட்ட இருதுணி போன்று) பளுவில் நாடா மூலம் கட்டலாம். இதன் வலது மார்பில் சிறு நீள்வட்டமிடப்பட்டு அதனுள் இந்நிறுவனத்தில் இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. அதற்கு வெளியே, சுற்றிவர, மற்றொரு பெரிய நீள்வட்டமிடப்பட்டு, இவ்விரு நீள்வட்டங்களுக்கும் இடையில் இந்நிறுவனத்தின் பெயர் தமிழில் எழுதப்பட்டிருந்தது. முதுகுப்புறத்தில் நடுவில் இதே போன்று, ஆனால் பெரியதாக, பொறிக்கப்பட்டிருந்தது. இவ்விலச்சினைகள் அரக்கு மற்றும் ஒருவகையான நீல நிறத்தில் காணப்பட்டன. 

main-qimg-17ac640b45e98d3e1f3d0c567989afed.jpg

main-qimg-f12232c11f067a5fc03be744cc1468c5.jpg

 


  • தொப்பிகள் - Caps

இவை கடுநீல நிறத்தில் இருந்தன. ஆனால் அவற்றின் முன்பத்தில் பெரிய வட்டமிடப்பட்டு அதனுள் இந்நிறுவனத்தின் குறியீடு பொறிக்கப்பட்டிருந்தது. அவ்வட்டத்தில் இந்நிறுவனத்தின் பெயரானது மேற்பக்கத்தில் ஆங்கிலத்திலும், கீழ்ப்பக்கத்தில் தமிழிலும் எழுதப்பட்டிருந்ததது. இப்பொறிப்புகள் மஞ்சள்மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்பட்டன.

 

main-qimg-f12232c11f067a5fc03be744cc1468c5.jpg

 


  • மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவு:-

இவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் ஒரு பிரிவாகும்.

இவர்களின் சீருடை மண்ணிறத்திலான 'T- சட்டை' ஒன்று மட்டுமே. அதுவும் சில நேரங்களில் மட்டுமே சிலரால் அணியப்பட்டதுண்டு. மேலாடையாக இதையும் கீழாடையாக சாதாரண முழுகாற்சட்டை ஏதேனும் ஒன்றை அணிந்திருப்பர். இத் '' கழுத்துப்பட்டை உண்டு. இதற்கு இடது நெஞ்சின் மேல் ஒரு பக்கு உண்டு. இந்த 'T- சட்டை' இன் முதுகுப்புறத்தில் சொல்-கீழ்- சொல்லாக "" என எழுதப்பட்டிருக்கும். இதன் வலது கைப் புயத்தில் நோர்வேயின் கொடியும், இடது கையில் இவ்வமைப்பின் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் பக்கின் மேல் செஞ்சிலுவைச் சங்க சின்னம் போன்று பச்சை நிற இலச்சினை உள்ளது. அது தெளிவாக இல்லாததால் அஃது என்னவென்று கண்டறிய இயலவில்லை.

இவர்கள் முற்றாக காப்புடைகள் அணியாமல் சில காப்புடைகள் மட்டுமே அணிந்திருந்தனர். அதாவது, கடுநீல நிறத்தில் ஒரு வகையான வெடித்தகை கஞ்சுகம் (blast proof vest) மற்றும் வெள்ளை நிற தலைச்சீரா ஆகியன மட்டுமே. அவற்றை கீழே காண்க. இவ்வெடித்தகை கஞ்சுகத்தின் நடு நெஞ்சில் 'HDU' என அக்காப்புடைகள் மீதினில் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருந்தது.

manitha weeya kannivediyakarrum pirivu.png

 

former defense line of the SL military strewn in Mankulam, jan 27, 2006 mm.jpg

.

அவ்வளவுதான் .... நிறைவடைந்தது!


 

உசாத்துணை:

  • TRO படிமங்கள் (ஆகஸ்டு 11 2008 - சனவரி 6, 2009)

படிமப்புரவு:

  • அருச்சுனா, Flickr
  • எரிமலை இதழ்
  • ap archieves

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to தொண்டு நிறுவனமான 'தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால்'(TRO) அணியப்பட்ட உடைகள் - ஆவணம்
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

பெண்கள் பிரிவினர்

 

guy7.jpg

 

bu7.jpg

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to தொண்டு நிறுவனமான 'தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால்'(TRO) அணியப்பட்ட ஆடைகள் - ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறந்ததொரு செயற்பாட்டை செய்கிறீர்கள். நன்றி. இவற்றை நீங்களும் சேமித்து வைப்பீர்களென்றே நினைக்கின்றேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, nochchi said:

மிகவும் சிறந்ததொரு செயற்பாட்டை செய்கிறீர்கள். நன்றி. இவற்றை நீங்களும் சேமித்து வைப்பீர்களென்றே நினைக்கின்றேன். 

மிக நன்றி ஐயனே,
ஓமோம், ஒவ்வொன்றிலும் ஒரு படி எடுத்து வைத்திருக்கிறேன். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.