Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

70 வருடங்களாக அரசமைப்பின் 370 வது பிரிவு ஜம்முகாஸ்மீர் மக்களிற்கான நன்மைகள் அனைத்தையும் பறித்தது-இரண்டு வருடங்களில்பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

70 வருடங்களாக அரசமைப்பின் 370 வது பிரிவு ஜம்முகாஸ்மீர் மக்களிற்கான நன்மைகள் அனைத்தையும் பறித்தது-இரண்டு வருடங்களில்பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஐஏஎன்எஸ்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஜம்முகாஸ்மீரின் இரு முன்னாள் முதல்வர்கள் தமது நிலைப்பாடுகளில் கடும் வித்தியாசத்தை வெளிப்படுத்தினர்.

அரசமைப்பின் ஜம்முக காஸ்மீருககு விசேட அந்தஸ்த்தை 370வது பிரிவு மீண்டும்சாத்தியமில்லை என ஒமர் அப்துல்லா வெளிப்படையாக தெரிவித்த அதேவேளை மெஹ்மூபா முவ்டி ஜம்முகாஸ்மீர் தனது விசேட அந்தஸ்தினை மீண்டும் பெறும்வரை தான் தேர்தலில் போட்டியிடமாட்டேன் எனகுறிப்பிட்டார்.
மீண்டும் அரசமைப்பின் 370வது பிரிவை நடைமுறைப்படுத்துங்கள் என மோடி அரசாங்கத்திடம் கேட்பது முட்டாள்தனம் என தெரிவித்த ஒமார் அரசமைப்பின் 370 பிரிவு குறித்த அதன் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கு பாஜகவிற்கு 70 ஆண்டுகள்பிடித்தது என குறிப்பிட்டார்.

 

jammu-kashmir-300x169.jpg
எங்கள் போராட்டம் தற்போதுதான் ஆரம்பமாகியுள்ளது, இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் சிறப்பு அந்தஸ்த்தை மீள பெறுவோம் என மக்களை ஏமாற்ற நாங்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்த அவர் விசேட அந்தஸ்த்தை – 370 மீண்டும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம், அரசாங்கம் அதனை மீள நிலைநாட்டும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இந்த சந்தி;ப்பின் பி;ன்னர் கருத்து வெளியிட்ட மெஹ்பூபா நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன்,ஏனென்றால் நான் தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் 370 என்பது எனக்கு வெறுமனே அரசியல் சுலோகம் என மாத்திரம் நினைப்பார்கள் நான் அதனை வைத்து அரசியல் செய்கின்றேன் என நினைப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மீண்டும் 370 நடைமுறைப்படுத்தப்படும் வரை நான் தனிப்பட்ட ரீதியில் தேர்தலில் போட்டியிடமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 370 வது 35 ஏ என்பன ஜம்முகாஸ்மீர் மக்களின் தொழில்பாதுகாப்பையும் அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பதையும் உறுதி படுத்தும் நோக்கத்தை கொண்டது என அவர் தெரிவித்தார்.
ஆகவே இது எங்களிற்கு முக்கியமானது,இதன் காரணமாகவே இந்தியாவி;ன் வளமி;க்க மாநிலமாக ஜம்முகாஸ்மீர் காணப்பட்டது என அவர் தெரிவித்தார்.
இந்த தலைவர்கள் ஆகஸ்ட் ஐந்தாம் திகதி 2019 இல் மத்திய அரசாங்கம் எடுத்த முடிவை ஜம்முகாஸ்மீரில் எவரும் எதிர்க்கவில்லை என்பதை இந்த தலைவர்கள் மறந்துவிட்டனர்.ஒரு ஆர்ப்பாட்டம் கூட எங்கும் இடம்பெறவில்லை,மக்கள் எதிர்வினை ஆற்றவில்லை,அவர்கள் தங்கள் நாளாந்த வாழ்க்கை குறித்து மும்முரமாகயிருந்தனர்.
ஜம்முகாஸ்மீர் அபிவிருத்தி பாதையில்
பல வருடங்களாக முடக்கல் நிலையில் காணப்பட்ட திட்டங்கள் பல மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஜம்முகாஸ்மீர் பாரிய மாற்றத்தை சந்தித்துள்ளது.
பிரதமரின் அபிவிருத்தி பொதியின் கீழ் பல அபிவிருத்தி திட்டங்கள் – திட்டங்களை துரிதப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவை தனிப்பட்ட பயன்தாரர்களை இலக்குவைத்தும் – தடைகளை அகற்றுவதன் மூலம் நீண்டகால திட்டங்பகளை மீள ஆரம்பிப்பதன் மூலமும்,வெளிப்படையான பயனுள்ள நிர்வாகத்தை முன்னெடுக்கவும்- ஜம்முகாஸ்மீர் யூனியன் பிரதேசமாக செயற்பட ஆரம்பித்த பின்னர் இவை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

kashmir-300x205.jpg
ஜம்முகாஸ்மீரின் தகவல்தொழில்நுட்ப துறையை அபிவிருத்தி செய்வதற்கு பல திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.இதில் வெளிமுதலீட்டாளர்களுக்கு மானியம் வழங்கும் திட்டமும் காணப்படுகின்றது.


அரசாங்கத்தின் கொள்கை திட்ட ஆவணம் இரண்டு தொழில்நுட்ப பூங்காக்கள் குறி;த்து தெரிவித்துள்ளது.ஸ்ரீநகரிலும் ஜம்முவிலும் ஐந்து இலட்சம் சதுர அடியில் இவை அமையவுள்ளன.
ரியல் எஸ்டேட் தொடர்பாக உருவாக்கப்பட்ட கொள்கையையும் ஜம்முகாஸ்மீரினால் வெளியிடப்பட்டுள்ளது.அரசாங்கத்தி;னால் உருவாக்கப்படும் நில வங்கிகள் வெளி;ப்படையான ஏலம் விடப்படும் நடைமுறை மூலம் தனியாருக்கு வழங்கப்படும் என அந்த ஜம்முகாஸ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


அபிவிருத்தி என்பது பெருந்தெருக்கள் மற்றும் கட்டிடங்களுடன் மட்டுப்படுத்தப்படவில்லை.முன்னைய அரசாங்கங்களினால் புறக்கணிக்கப்பட்ட அனைத்து துறைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதுடன் ஜம்முகாஸ்மீர் ஏனைய மாநிலங்களின் அளவிற்கு உயர்வதற்காக இந்த திட்டங்களிற்கு புத்துயுர் அளிக்கப்பட்டுள்ளது.


2015 முதல் 2020 வரை பிரதமரின் 80000 கோடி நிதிஉதவியில் 37 வீதம் மாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.


2015 இல் பிரதமர் நரேந்திரமோடி ஜம்முகாஸ்மீரின் அபிவிருத்திக்காக80000 கோடி உதவிதொகையை அறிவித்தார்.அவ்வேளை மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர் முன்னாள் முதல்வர் முப்தி முகமட் சயீட்.
அவரது மக்கள் ஜனநாயக கட்சி பாரதியஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை அமைத்திருந்தது.


தான் அறிவித்துள்ள 800000கோடி மாநில மக்களின் வாழ்க்கையை மாற்ற உதவும் என பிரதமர் தனது மனப்பூர்வமான எதிர்பார்ப்பை வெளியிட்டிருந்தார்.
ஜம்முகாஸ்மீரை நவீனமயமானதாக வளமானதாக முன்னேற்றகரமானதாக மாற்றுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.


புதுடில்லியின் திறைசேரி உங்களுடையது, எங்கள் திறைசேரி மாத்;திரமல்ல எங்;கள் இதயமும் உங்களிற்காக துடிக்கின்றது என நரேந்திரமோடி தெரிவித்திருந்தார்.
ஆனால் ஆட்சியிலிருந்த நான்குவருடங்களில் அந்தநிதியின் 37 வீதத்தினை மாத்திரம் மாநில அரசாங்கம் செலவிட்டது.

Jammu-and-Kashmir-Panchayat-elections-QT
மத்திய அரசாங்கம் அந்த நிதி உதவியை அறிவித்தவேளை அதனை ஐந்து வருடங்களிற்குள் செலவிடவேண்டும் அந்த நிதி உதவியை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை 2020க்கு பூர்த்தி செய்யவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.


உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி 2019 மார்ச் 31 வரை 30049 கோடியே செலவிடப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.


65 திட்டங்களில் 18 திட்டங்களே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2020 நாடாளுமன்ற தேர்தலில் மாகாணமக்கள் அபிவிருத்தி திட்டங்களின் வேகம் குறித்து தங்கள் ஏமாற்றத்தை வெளியிட்டிருந்தனர்.


அரசமைப்பின் 370வது பிரிவு ஜம்முகாஸ்மீருக்கான நன்மைகளை பறித்துள்ளது.
இந்திய அரசமைப்பின் தற்காலிக ஏற்பாடான அரசமைப்பின் 370 பிரிவு நடைமுறையிலிருந்தவேளை ஜம்முகாஸ்மீர் அரசியல்வாதிகள் ஏழு தசாப்தங்களாக ஆட்சியிலிருந்தனர்.
70 வருடங்களாக மத்திய அரசாங்கம் மாநிலத்தின் சாதாரண பிரஜைகளிற்கு நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்தில் நிதியை வழங்கிக்கொண்டிருந்தது.


எனினும்மாநில தலைவர்கள் மக்களிற்கு சுயாட்சி போன்ற கோசங்களை தொடர்ந்தும் திணித்துக்கொண்டிருந்ததுடன் மக்களின் அன்றாட பிரச்சினைகளிற்கு தீர்வை காண தவறிவிட்டனர்.
விசேட அந்தஸ்த்து என்பதுமத்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் நாடாளுமன்றத்தினால் உருவாக்கப்பட்ட முற்போக்கு திட்டங்களினால் மாநில மக்களிற்கு கிடைக்கவேண்டிய நன்மைகளை பறித்தது.
சமூகத்தின் பலவீனமான நிலையில் உள்ள மக்களிற்கான ஒதுக்கீடுகள் கூட ஜம்முகாஸ்மீர் மக்களிற்கு கிடைக்கவில்லை.


ஜம்முகாஸ்மீரை சேர்ந்த நபர்ஒருவர்வெளிமாநிலத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்தால் அவர் தனது சொத்துரிமையை தக்கவைத்துக்கொள்ள முடியும் ஆனால் ஜம்முகாஸ்மீரை சேர்ந்த பெண் ஒருவர் வெளிமாநிலஒருவர் வெளிமாநிலத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்தால் தனது சொத்துரிமையை இழந்துவிடுவார் என்ற பாலின பக்கச்சார்பும் காணப்பட்டது.

https://thinakkural.lk/article/125671

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.