Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்" இந்த இளம் பெண்ணுக்கு உதவுங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Free Rizana, Women’s Education and Research Centre appeals to Saudi King

http://www.dailynews.lk/2007/07/14/news28.asp

  • Replies 278
  • Views 40.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lankan housemaid on death row highlights a surge in Saudi beheadings

www.signonsandiego.com

As Teen Girl Awaits Death, Saudi Surge in Beheadings Could Set Record High

foxnews.com

Lankan maid on death row

timesofindia.com

Saudi Beheadings on the Rise Again

theledger.com

Saudi Beheadings on The Rise Again

wral.com

  • கருத்துக்கள உறவுகள்

றிஸானாவை காப்பாற்றும் முயற்சியில் இழுபறி

[15 - July - 2007]

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

சவுதி-றியாத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 19 வயது றிஸானா ரபீக்கை இத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக அங்கு செல்லவிருந்த இலங்கைக் குழுவினருக்கு சவுதி அரேபியா அரசாங்கம் இதுவரை அனுமதி வழங்காத நிலையில் றிஸானாவுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டுமெனவும் அவரது குடும்பத்தினரைச் சந்திக்க முடியாதெனவும் கொல்லப்பட்ட சவுதி சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். றிஸானாவை மரணதண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற எதிர்ப்புக்குரல் வலுவடைந்திருக்கும் நிலையிலேயே இத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட றிஸானாவைக் காப்பாற்ற அங்கு செல்வதற்காக இலங்கை அரசு கடந்த புதன்கிழமை அனுமதி கோரியிருந்தது. எனினும், அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.

எனவேதான் பிரதியமைச்சர் ஹுஸைன் பைலா மற்றும் றிஸானாவின் பெற்றோர் சவுதி அரேபியா செல்வதில் தாமதம் நிலவுவதாக அறியவருகிறது.

இதுபற்றி பிரதி வெளி விவகார அமைச்சர் ஹுஸைன் பைலா கூறுகையில்;

றிஸானாவுக்கு இஸ்லாமியச் சட்டப்படி மரணதண்டனை நிறைவேற்றப்படுமென உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் பிடிவாதமாக உள்ளனர். அத்துடன் றிஸானா சார்பிலான எவரையும் சந்தித்துப் பேசவும் அப் பெற்றோர் தயாராகவில்லை. உயிரிழந்த குழந்தைக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் அப் பெற்றோர் இதுவரை கோரவில்லை.

நஷ்டஈடு தரட்டுமா என சவூதி அரேபியாவிலுள்ள அப்பெற்றோரிடம் கோரி அவர்களின் ஆத்திரத்தை கிளறுவதைவிட இதனை நிதானமாக கையாளுவதே சிறந்தது.

அங்குள்ள பிரபல சமூக, சமய ஆர்வலர்களுடன கலந்துரையாடி அவர்கள் மூலமாக உயிரிழந்த குழந்தையின் பெற்றோரிடம் மரணதண்டனையை ரத்துச் செய்யுமாறு கோரவுள்ளோம். அந்நாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டால் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களே அதனை ரத்துச் செய்யலாம். அந்நாட்டு மன்னரினால்கூட இதனை ரத்துச் செய்ய முடியாது.

இதேசமயம் றிஸானாவின் மரணதண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை றியாத்திலுள்ள கொழும்புத் தூதரகம் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Saudi Arabia set to behead nursemaid for child's death

Los Angeles, Dailynews

Sri Lankan woman faces beheading

goupstate.com

Sri Lankan housemaid on death row highlights a surge in Saudi beheadings

rutlandherald.com

Teen faces beheading in death of Saudi baby

Atlanta Journal

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lankan maid facing execution in Saudi Arabia

migrant-rights

Sri Lankan housemaid on death row highlights a surge in Saudi beheadings

chroniclejournal.com

Saudi Beheadings on the Rise Again

scottelliott.info

As Teen Girl Awaits Death, Saudi Surge in Beheadings Could Set Record High

freerepublic.com

Help Prevent the Execution of a Juvenile in Saudi Arabia

takeaction.amnestyusa

Commentary: Teenager's beheading tests Saudi's sharia law

upiasiaonline.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேள்விக் குறியுடன் றிஸானா

[15 - July - 2007] [Font Size - A - A - A]

-விலானி பீரிஸ்-

ஜூன் 16 சவூதி அரேபியாவில் தவாதாமி மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவால் 19 வயதுடைய இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நஃபீக்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நஃபீக்கின் வழக்கானது மத்திய கிழக்கில் உள்ள இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் காட்டுமிராண்டித்தனமான நிலைமைகளுக்கும் மற்றும் அவர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் சுரணையற்ற அலட்சியப் போக்குக்கும் இன்னுமொரு உதாரணமாகும்.

நஃபீக்கின் பொறுப்பில் விடப்பட்டிருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொன்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அவர் 2005 மே மாதம் ரியாத்திற்கு வந்தார். நயிஃப் ஜிஸியன் கால்ஃப் அல் ஒடாய்பி என்ற தொழில் வழங்குபவரால் தவாதாமியில் உள்ள அவரது குடும்ப வீட்டுக்கு நஃபீக் அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பின்னர் நஃபீக்குக்குப் பிள்ளையைப் பராமரிப்பதில் அனுபவம் அல்லது பயிற்சி இல்லாதிருந்த போதிலும் அவருக்குக் குழந்தையை பராமரிக்கும் வேலை வழங்கப்பட்டது.

மே 22, 2005 அன்று அவர் தனியே இருந்தாவாறு குழந்தைக்கு போத்தலில் பால் ஊட்டிக் கொண்டிருந்தார். சுமார் பிற்பகல் 12.30 மணிக்கு அந்த ஆண் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பீதியடைந்த நஃபீக் நெஞ்சு, கழுத்து மற்றும் முகத்திலும் தடவி தட்டிக் கொடுத்து குழந்தையை ஒருநிலைப்படுத்த முயற்சித்ததோடு உதவி கேட்டும் குரலெழுப்பினார். குழந்தையின் தாயார் வந்து சேர்ந்தபோது குழந்தை சுயநினைவிழந்து இருந்தது அல்லது இறந்து விட்டது. நடந்தது என்ன என்பதைக் கண்டுபிடிக்காமல் ஒடாய்பி குடும்பம் குழந்தையின் குரல்வளையை நெரித்ததாக குற்றஞ்சாட்டி நஃபீக்கை தாவாதாமி பொலிஸில் ஒப்படைத்தனர்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நடத்தப்படும் வழமையான முறையின்படி சவூதி பொலிஸ் எஜமானின் பக்கம் நின்றதோடு என்ன நடந்தது என்பதை விளக்குவதற்கு நஃபீக்குக்கு மொழி பெயர்ப்பாளர் ஒருவரைக் கூட வழங்கவில்லை. அவர் குரல்வளையை நெரித்துக் கொன்றதற்காக குற்றஞ்சாட்டப்பட்டதோடு ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றிலும் கைச்சாத்திட நெருக்கப்பட்டார். அவர் பொலிஸாரின் வெளிப்படையான வலுக்கட்டாயத்தின் பேரில் நீதிமன்ற விசாரணைகளிலும் இதே ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கினார்.

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இருந்த மொழி பெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் மட்டுமே தனது உண்மையான கதையை விளக்க நஃபீக்கால் முடிந்தது. பெப்ரவரி 3 இல் நடந்த நீதிமன்ற விசாரணையின் போது தனது வாக்குமூலத்தை மறுதலித்த அவர், தான் பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். பொலிஸ் அச்சுறுத்தல் பற்றிய குற்றச்சாட்டை நிராகரித்த தவாதாமி நீதிமன்றம் அவரைக் குற்றவாளி எனக் கண்டு அவரைச் சிரச்சேதம் செய்யத் தீர்ப்பளித்தது.

மேன் முறையீடு செய்ய நஃபீக்குக்கு ஜூலை 16 வரை அவகாசம் இருந்தபோதிலும் அவராலும் அவரது குடும்பத்தாலும் சட்ட நடவடிக்கைகளுக்கு செலவிட பணம் இருக்கவில்லை. ஒரு சவூதி சட்ட நிறுவனம் இந்த வழக்கைப் பொறுப்பேற்க 250,000 ரியால்களை (67,000 அமெரிக்க டொலர்கள்) கோருகின்றது. இது இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களுக்கு வானுயர்ந்த தொகையாகும். நஃபீக்கின் அப்பா இந்த சட்ட நடவடிக்கைக்கான செலவை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்ட போதிலும் இதுவரையும் அது மறுக்கப்பட்டு வந்துள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகையின்படி, "ரியாத்தில் உள்ள சட்ட நிறுவனத்தால் கோரப்பட்ட தொகையை குறைத்துக் கொள்வதற்காக" அங்குள்ள இலங்கைத் தூதரகம் சுறுசுறுப்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதென்பதாகும்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் துணைப் பொது முகாமையாளராக எல்.கே. ருஹுணுகே, நஃபீக்குக்கு எதிரான வழக்கு பலமாக இருந்தால் இந்த வேண்டுகோள் தேவையற்றது என லக்பிம பத்திரிகைக்குத் தெரிவித்தார். பணியகத்துடன் உலக சோசலிஷ வலைத்தளம் தொலைபேசியில் தொடர்புகொண்ட போது, ருஹுணுகே அங்கு இல்லாவிட்டாலும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள மறுத்து, இன்னுமொரு அதிகாரியும் ருஹுணுகேயின் கூற்றை ஆதரித்தார். "சவூதி அரேபியாவில் உள்ள சட்ட நிறுவனம் நஃபீக்கை விடுதலை செய்ய முழுமையாக வாக்குறுதியளிக்காத காரணத்தால் அந்தளவு தொகையை செலவிடுவது பெறுமதியற்றதாக" உள்ளது என அவர் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் இருந்தே இலங்கை அரசாங்கம் நஃபீக்கை அவரது தலைவிதிப்படி கைவிட்டு விட்டது. சவூதி அரேபியாவில் உள்ள தூதரக அதிகாரிகள் இந்த வழக்குப் பற்றி தாம் அறிந்திருந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் தவாதாமியில் உள்ள சவூதி அதிகாரிகளுடன் உரையாடியுள்ளதோடு நீதிமன்ற விசாரணைகளுக்கும் கூட சமுகமளித்துள்ளனர். ஆனால், அவருக்கு உதவி வழங்கவில்லை. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகள் இலங்கை அரசாங்கத்தை விமர்சித்த பின்னர் ஜூலை 9 இல் வெளியான டெயிலி நியூஸ் பத்திரிகை, அரசாங்கத்தால் மேன்முறையீடு செயவதற்கான சட்ட ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது என்று தூதரகத்தின் சாக்குப்போக்கை அறிவித்தது.

இங்கு யதார்த்தம் என்னவெனில், மத்திய கிழக்கிற்கு இலங்கையின் மலிவு உழைப்பை விற்கும் இலாபகரமான வர்த்தகத்தை குழப்பக்கூடிய எதையும் செய்வதற்கு கொழும்பு அரசாங்கம் விரும்புவதில்லை. பத்தாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் அங்கு கீழ்த்தரமாக சுரண்டப்படுவதைத் தடுக்க இலங்கை அரசாங்கம் தவறியுள்ளமைக்கு அது நஃபீக்கைப் பாதுகாக்க மறுக்கின்றமை சாதாரணமான ஒரு குறிப்பிடத்தக்க தெளிவான உதாரணமாகும்.

எண்ணெய் வளம் மிக்க சவூதி அரேபியாவில் 24 மில்லியன் மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டவர்களாவர். அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ஆசியாவில் இருந்து வந்து வீட்டுப் பணியாளர்களாக வேலை செய்பவர்களாவர். சவூதி சட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஒரு சில உரிமைகள் உள்ளன. அவர்கள் எப்போதும் தமது ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்ற பீதியில் வாழ்ந்து கொண்டிருப்பதோடு அடிக்கடி மோசமாகவும் நடத்தப்படுகின்றனர் அல்லது அவர்களுக்கு ஊதியம் மறுக்கப்படுகின்றது. குறிப்பாக இளம் பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்வதோடு கிட்டத்தட்ட அவர்கள் அடிமைகள் போல் நடத்தப்படுகின்றனர்.

நஃபீக்கின் வழக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். கிழக்கில் மூதூர் நகரில் வசித்த இளம் முஸ்லிம் யுவதியான அவரால் தொழில் பெற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அந்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறவும் முடியவில்லை. அவர் சவூதி அபிரேயாவிற்குச் சென்று அங்கு நீதிமன்றத்தில் நிற்கும்போது அவருக்கு 17 வயது மட்டுமே. அவரைப் பணிப்பெண்ணாக அழைத்துச் சென்ற முகவர், அவரது ஆவணங்களை மோசடி செய்து அவரது வயதை ஆறு வருடங்கள் கூட்டி கடவுச்சீட்டைப் பெற்றுள்ளார். சவூதி அரேபியாவிற்குச் சென்றவுடன் 24 மணிநேரமும் அவரது எஜமானின் அழைப்புக்கு தலையசைத்து அவர் சேவையாற்றத் தள்ளப்பட்டார். துப்புரவு செய்தல், சமைத்தல், கழுவுதல் மற்றும் ஆடைகளை மினுக்குதல் உட்பட பிரமாண்டமான அன்றாட வேலைப்பளுவுக்கு மத்தியில் அவர் குழந்தையையும் பராமரிக்கத் தள்ளப்பட்டார்.

அவரது குடும்ப உறுப்பினர் ஃபரினா நசிக் பி.பி.சி.க்குத் தெரிவித்ததாவது; "ரிஸானா நஃபீக் இலங்கையை விட்டுச் சென்று 28 நாட்களின் பின்னர் அவர் அனுப்பியிருந்த கடிதத்தில், தான் பத்துப் பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அவர் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. அவர் தனது வேலை செய்யும் இடத்தை மாற்றிக்கொள்ள விரும்பினார்." அவர் விடியற்காலை மூன்று மணிக்கு எழும்பி பின்னிரவு வரை வேலை செய்ய வேண்டும். அவர் அந்த ஒரு கடிதத்தை மட்டுமே எழுதியிருந்தார்.

நஃபீக்கின் அப்பாவித்தனத்தை ஃபரீனா வலியுறுத்தினார். "எங்களால் இதை நம்பவே முடியாது. எங்களிடம் காசு இல்லாததால் நாங்கள் அவரை வேலைக்கு அனுப்பினோம். அவள் குற்றவாளி அல்ல, அவள் அப்பாவி." மூதூர் வாசியான தஸ்லிம் முகமட் நஷ்பிர் பி.பி.சி.க்கு கருத்துத் தெரிவிக்கையில், "இது தொடர்பாக அரசாங்கம் குருட்டுப் பார்வை பார்ப்பதை நிறுத்த வேண்டும். அவர்கள் இத்தகைய அவதூறுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்."என்றார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் படி இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் சவூதி அரேபியாவில் மூன்று பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 100 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அரைவாசிப்பேர் பெருமளவில் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற வறியநாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களாவர்.

கடந்த பெப்ரவரியில் விக்டர் கொரேயா, ரன்சித் டி சில்வா, சந்தோஷ் குமார், ஷர்மிலா சன்கீத்குமார் ஆகிய நான்கு இலங்கையர்கள் களவு மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

ஏனைய வெளிநாட்டு தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அசிங்கமான முயற்சியாக சவூதி அதிகாரிகள் சிரச்சேதம் செய்யப்பட்டவர்களின் சடலங்களை பொதுமக்கள் பார்வைக்கு விட்டனர்.

சோசலிஷ இணையத்தளம்

தினக்குரல்

Rizana: 'No imminent danger'

20070714173419muttawa-152.jpg

Saudi embassy has filed an appeal in the court against the conviction

There is no imminent danger to the life of teenage Sri Lankan girl in death row in Saudi Arabia, authorities said.

Deputy Foreign Minister Hussein Bahila told BBC Sandeshaya that Sri Lanka government has filed an appeal against the death sentence on Saturday.

"I can assure you that there is no imminent danger to Rizana's life as now it is before the Appeals Court," the minister said.

Rizana Nafeek, a nineteen year old Sri Lankan house maid, was convicted of strangling a four month old infant in Saudi Arabia.

I can assure you that there is no imminent danger to Rizana's life as now it is before the Appeals Court

Deputy minister Bahila

She was then sentenced a death penalty of beheading according to the Saudi Arabian High Court.

Any objection against the conviction was to be filed before Monday, 16 July.

The Sri Lankan girl, then seventeen years old, went to Saudi Arabia on the 1st of May with high hopes of earning a living in order to help her family who were living in poverty.

20070704171715familymaid203.jpg

Rizana went to Saudi Arabia to help her poor family in Muttur

She was still a schoolgirl studying at Sapi Nagar School. Her first thoughts at her tender age were a nice house and a good education for her family.

Sri Lankan ambassador in Saudi Arabia, Adam AJ Sadiq, told bbcsinhala.com that a representative from Kateb Fahad Al-Shammari law firm filed the preliminary objection against the death sentence imposed on Rizana.

He assured that the Riyadh embassy "will continue to pursue all possible avenues to save her life".

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...na_appeal.shtml

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Crackdown on errant foreign job agents

.......Foreign Employment and Promotion Minister Keheliya Rambukwella told the `Sunday Observer' that steps have been taken to investigate whether underage Lankan workers are employed in foreign countries......

......."I have come to understand that this particular girl had first left for employment to a Saudi Arabian home when she was 17," he said. ......

......"Therefore, I pleaded with the Saudi Arabian Government for clemency for the life of Rizana Nasik, saying that she had committed the alleged crime when she was 17 years,". ......

Sunday Observer

--------------------------------------------------------------------------------------------------------------

Saving Rizana Nafeek doubtful!

The government delegation to visit Saudi Arabia to save Rizana Nafeek, the Sri Lankan girl sentenced to death for the murder of a four-month-old baby has postponed their visit.

Minister Hussain Baila, the leader of the delegation, said they had to postpone the visit due to the refusal of visas by Saudi Arabian Embassy in Sri Lanka. He further said he and the other members of the delegation were waiting to fly to Saudi Arabia as soon as they receive visas to visit that country.

The four months old baby girl had died due to sickness. However, at the time of her death she had been under the care of Rizana Nafeek. As she had been threatened by the parents of the child she had admitted that the child had died due to her negligence.

It is alleged that she, who was only 17 years of age, was sent to Saudi Arabia with documents forged by the employment recruiter that gave a false date of birth.

Sri Lankan Embassy in Saudi Arabia has filed a petition against the decision of Saudi Arabian Court and Sri Lankan government says it would take all measures to save the girl from execution.

Lankatruth

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Parents to plea for clemency for Sri Lankan housemaid on Saudi death row

........."We haven't got our visas yet, we hope at least we will be able to get it tomorrow," the girl's father Mohammad Sultan Nafeek, who is in the Sri Lankan capital, Colombo to make the travel arrangements, said Sunday.................

..............."Life is extremely difficult, often there will be fighting near the jungle and for days I won't be able to work," he said....................

..............."We live in poverty, we only live in a mud hut which has no proper toilet or a well to draw water. This is what made Rizana to go to Saudi."...............

.............."I will ask them to pardon my daughter for the sake of Allah, it was not her intention to kill," Sultan Nafeek said....................

The Associated Press

Edited by Shankarlaal

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DEATH ROW MUSLIM GIRL’S FATHER WILL APPEAL TO PARENTS OF DEAD BABY TO SAVE HER FROM BEHEADING

..........இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சவுதி மன்னரை இவ்விடயத்தில் தலயிட்டு இரக்கம் காட்டுமாறு கேட்டு, மன்னருக்கு எழுதிய கடிதத்துடன் முஸ்லீம் மந்திரி ஒருவர் ரிஸானாவின் தந்தையுடன் சவுதி செல்லவுள்ளதாக நபீ(f)க் குடும்பத்திற்கு சார்பானவர்கள் தெரிவித்ததாக செய்தி ஒன்று தெரிவிக்கிறது....

.........Sources close to Nafeek’s family said a Sri lankan Muslim Minister also will be flying with Rizana’s father carrying a special letter from Sri Lanka’s president Mahinda Rajapaksa addressed to the King of Saudi Arabia to intervene in the matter in granting clemency for the girl. ..............

go2lanka

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Saudis prepare to behead teenage maid

rizanasfamilyzg5.jpg

Mohammad Rezina, mother of Rizana Nafeek, with two of her daughters at home in Sri Lanka

Telegraph

  • கருத்துக்கள உறவுகள்

மரணதண்டனை விதிக்கப்பட்ட றிஸானாவின் பெற்றோர் பிரதியமைச்சர் ஹுசைன்பைலா சவூதி அரேபியா பயணம்

[16 - July - 2007]

-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் -

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள றிஸானா ரபீக் மீது கருணைகாட்ட வலியுறுத்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலிருந்து குழுவொன்று புறப்படவிருந்தது.

இக்குழுவில் பிரதியமைச்சர் ஹுஸைன் பைலா, வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் றிஸானாவின் பெற்றோர் மற்றும் சில மௌலவிகள் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

சிறையிலடைக்கப்பட்டுள்ள றிஸானாவை அவரது பெற்றோர் சந்திக்கவும் இதன்போது முயற்சி மேற்கொள்ளப்படவும் உள்ளது.

இதேவேளை, உயிரிழந்த சிறுமியின் தந்தை றிஸானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதில் தமக்கு உடன்பாடு இல்லையெனவும் எனினும், அவரது மனைவியே றிஸானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்று மிகவுறுதியாக உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. இதேசமயம், றிஸானாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக நீதிமன்றத்தில் மேன்முறையீடு மேற்கொள்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளுக்காக றியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் சட்ட நிறுவனமொன்றுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

நீதிமன்றத்தில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்க குறித்த சட்ட நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய முழுச் செலவுத் தொகையையும் ஏற்றுக்கொள்வதற்கு ஹொங்கொங்கில் உள்ள ஆசிய மனித உரிமை ஆணைக்குழு விருப்பம் தெரிவித்துள்ளது.

தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rizana Nafeek’s appeal – lawyers file initial papers – a call for further appeals to the family and King and financial support for legal costs

அப்பீல் மனு கோர்ட்டில் தாக்கல்செய்யப்பட்டுவிட்டது.

Kateb Fahad Al-Shammari, Attorneys at Law சட்ட நிறுவனம் டவடாமி (Dawadimi ) சிறைச்சாலைக்கு சென்று அங்கு அவர்களுக்கு ரிசானாவை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டு ரிசானாவிடம் power of attorney பெறப்பட்டு, கோர்ட்டின் ஒழுங்குகளுக்கு ஏற்ப அப்பீல் மனு கோர்ட்டில் தாக்கல்செய்யப்பட்டுவிட்டது.

இவ் அப்பீலுக்கு தேவைப்படும் மொத்தபணம் SAR 150,000 (US$ 40,000), ஆகும். இத்தொகையின் மூன்றில் ஒரு பங்கான US$ 13,333 ஐ ஜூலை 11ந்திகதி ஆசிய மனித உரிமை அமைப்பினால் அந்த சட்ட நிறுவனத்தினரின் பெயரில் டெபொசிட் பண்ணப்பட்டுள்ளது. இதனுடைய இரண்டாம் பங்கு அப்பீல் பேப்பர்கள் எல்லாம் finalize பண்ணப்பட்டு, அது சம்பந்தமான documents உள்துறை அமைச்சினால் அந்த சட்ட நிறுவனத்தினர் பெற்றுக்கொண்டதன் பின்னர் வழங்கப்பட வேண்டும். மூன்றாம் பங்கு இவ்வழக்கு வெற்றி அளித்தால் அல்லது மரணதண்டனை தீர்ப்பு மாற்றி அமைக்கப்பட்டால் வழங்கப்பட வேண்டும்.

இதுவரையில் மத்திய கிழக்கில் பணிபுரியும் இரண்டு இலங்கையர்கள் ஒருவர் US$ 1,000 அமெரிக்க டொலரும் மற்றையவர் US$ 1,500 அமெரிக்க டொலரும் ஆசிய மனித உரிமை அமைப்பிற்கு நிதிஉதவி வழங்கியுள்ளனர்.

நெதர்லாந்தில் இருக்கும் Nona Foundation Rs. 600,000 ( கிட்டத்தட்ட 5400 அமெரிக்க டொலர்கள்) வழங்குவதாக ஆசிய மனித உரிமை அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

இது சம்பந்தமாக தனிநபர், groups , அல்லது நிறுவனங்கள் பணம் பங்களிப்பு செய்ய விரும்புபவர்கள் கீழ்காணும் வங்கி முகவரிக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Parents of maid on death row awaiting visa

சவுதி அரேபியாவில் தலை துண்டிப்பை எதிர்கொண்டுள்ள இலங்கையை சேர்ந்த வீட்டுபணிப்பெண்ணின் பெற்றோர்,சவுதி விஸா பெறுவதற்க்காக போராடுகிறார்கள்.....

அமைச்சர் பைலாவின் தலைமையில் ரிசானவின் பெற்றோரும் சில அமைச்சு அதிகாரிகளும் திங்கட்கிழமை சவுதிக்கு புறப்பட இருந்தார்கள். இதுவரையில் எவருக்குமே விசா வழங்கப்படவில்லை. சென்ற புதன்கிழமையே விசாவிற்கு விண்னப்பிக்கப்பட்டு விட்டது. விசா கிடைத்ததும் உடனடியாக புறப்பட்டு விடுவோம் என்றார் பைலா.

இப்பயணத்தின் நோக்கம் அங்குள்ள மததலைவர்களையும், உயர் அதிகாரிகளையும், இறந்த குழந்தையின் பெற்றோரையும் சந்தித்து ரிசானாவிற்கு கருணை அளிக்கும் படி கேட்பதற்கு ஆகும் என்றார் பைலா.

AP

இணைப்புகளுக்கு நன்றி சங்கர்லால்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lankan parents to to plea for teen on death row

Pravda

Death sentence on Sri Lankan housemaid: Saudi Embassy has not yet issued visas for the SL delegation

Colombo page

Maid's clemency papers are filed

BBC

ரிஸானாவின் தந்தையார் மொஹமட் நபீ(f)க்

rizanasfatherbr1.jpg

AP - Mohammed Nafeek, father of Rizana Nafeek, a 19-year housemaid from Sri Lanka in Saudi Arabia, looks on at a hotel in Colombo, Sri Lanka, Sunday, July 15, 2007.Rizana is on death row because the baby in her care died while she was bottle-feeding him. If her appeal is turned down, she will taken to a town square to be publicly beheaded. (AP Photo/Eranga Jayawardena)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SAVING THEIR DAUGHTER:

savingbb2.jpg

Mohammed Razeena (left) and Mohammed Nafeek (centre), the parents of Rizana Nafeek, a 19-year old Sri Lankan domestic worker in Saudi Arabia, walk out of their friend’s house in Colombo yesterday. Nafeek was found guilty last month of strangling a four-month-old Saudi boy by choking him to death while bottle-feeding him in 2005. The Sri Lankan embassy has already filed an appeal on Nafeek’s behalf, officials said yesterday, adding a government team is to head for Saudi Arabia yesterday with the parents of the teenage housemaid.

Gulf-times

Nafeek Files Appeal a Day Prior to Deadline

........சவுதி அரேபியாவின் தலை நகர் ரியாட்டில் வசித்துவரும் இலங்கை நாட்டவர்களின் மனைவிமார்கள் குழு ஒன்று இறந்த குழந்தையின் தாயாரிடம் நேரில் சந்தித்து ரிஸாவின் சார்பாக கருணை காட்டுமாறு கேட்க உள்ளார்கள்..........

lanka17au8.jpg

Mohammad Razeena, left, and Mohammad Sultan Nafeek,

parents of Sri Lankan housemaid Rizana Nafeek,

seen in Colombo on Monday. (AP)

அரப் செய்திகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Over 100 Sri Lankan expatriate workers return home empty handed

.................ஜெட்டா தடுப்பும்காமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் வெறுங்கையுடன் சவுதியில் இருந்து நேற்று இலங்கைக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் வேலையின்மை, ஊதியங்கள் கொடுபடாமை, பணிபுரியும் இடங்களில் துன்புறுத்தல்கள் ஆகிய காரணங்களால் திரும்பவேண்டி வந்தது.

அதில் பெரும்பாலானோர் சிறு ஊதியங்களுக்காக வீட்டு பணிப்பெண்களாக கடமை புரிந்தவர்கள்.

அவர்களில் சிலருக்கு தமது சொந்த இடங்களுக்கு செல்லுவதற்கு பணம் இல்லாமல் இருந்து, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் 68 பேருக்கு பணம் கொடுத்து அவர்களது சொந்த ஊர்களுக்கு போக உதவிசெய்தது..................................

Lanka Page

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றிஸானா மீது கருணை காட்ட வேண்டுகோள்

[17 - July - 2007] [Font Size - A - A - A]

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள றிஸானா நபீக் மீது கருணை காட்டப்பட வேண்டுமென வலியுறுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுஸைன் பைலா தலைமையிலான குழுவினர் அங்கு பயணமாகவுள்ளனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுஸைன் பைலா மற்றும் இலங்கைக்கான சவுதித் தூதுவர் மொஹமட் அல் அலி ஆகியோருக்கிடையே நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இலங்கைக் குழுவினரின் விஜயம் உறுதி செய்யப்பட்டது.

சவுதி செல்லும் இலங்கைக் குழுவில் றிஸானாவின் பெற்றோர், மௌலவிகள் இருவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

இக்குழுவினர் சவுதி சென்று அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள றிஸானா, உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் அங்குள்ள செல்வாக்குமிக்க மதகுருமாரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதேவேளை, ஹுஸைன் பைலா இலங்கைக்கான சவுதித் தூதுவரை சந்தித்ததையடுத்தே அங்கு செல்வதில் இழுபறி நீக்கப்பட்டதாக அறியவருகிறது.

இதே சமயம், றிஸானாவை மரணதண்டனையிலிருந்து விடுவித்து கருணை காட்டுமாறு கோரி ஆயிரக்கணக்கான மனுக்கள் சவுதி அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், இலங்கையின் உயர்மட்ட அரசியல்வாதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடாமலிருப்பது குறித்து கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.

தினக்குரல்

This might not work, but at least this is something we can do to save this poor Sri Lankan girl. She is one of us. Let’s do what we can to save her from death.

- Rizana Nafeek

17 years old Muslim girl from Sri Lanka.

Sent to Saudi Arabia as a nanny.

She was assigned 10 children to look after.

Had to get up 3AM to work until late at night.

She has been accused of strangling a four month old infant in Saudi Arabia.

She was then sentenced a death penalty of beheading according to the Saudi Arabian High Court.

No one knows whether she committed the crime or not

http://www.petitiononline.com/rizana1/petition.html

How you can save her? Please Sign the Petition Below

http://www.petitiononline.com/rizana1/petition-sign.html?

  • கருத்துக்கள உறவுகள்

றிஸானாவுக்கு கருணைகாட்ட ஆவன செய்யுமாறு மக்கா, மதீனா ஹரம் ஷரீபுகளின் இமாம்களுக்கு கடிதம்

[18 - July - 2007]

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள றிஸானா நபீக்குக்கு கருணைகாட்டி மன்னிப்பு வழங்க ஆவன செய்யுமாறு கோரி காத்தான்குடி நகரசபையின் பிரதி நகரபிதா மர்சூக் அஹமட் லெவ்வை மக்கா, மதீனா ஹரம் ஷரீபுகளின் இமாம்களுக்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

றிஸானா நபீக் வேண்டுமென்று குழந்தையை கொலை செய்திருக்கமாட்டார். இவர் 16 வயதை கொண்ட சிறுமியாவார். மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் இப்பிரதேசத்தில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையால் அகதியாக்கப்பட்டவர். இவரும் இவருடைய குடும்பமும் இவரது சொந்தப் பிரதேசத்தை விட்டும் சில காலம் கந்தளாயிலும் அகதிகளாக வறுமையில் வாழ்ந்து வந்த நிலையிலேயே இவர் சவூதி அரேபியாவுக்கு சென்றார்.

மரணித்த அக்குழந்தையின் குடும்பம் றிஸானாவை மன்னித்தால் மரண தண்டனையிலிருந்து விடுதலை பெறலாம். ஆகவே, சவூதி அரேபியாவின் புனிதமான மக்கா, மதீனா ஹரம் ஹரீபுகளின் இமாம்கள் என்ற வகையில், அழுத்தத்தை மனிதாபிமான ரீதியில் கொடுத்து இந்த ஏழையை காப்பாற்ற உதவுங்கள்.

தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யுவதியின் விடுதலைக்காக பிரார்த்திப்போம்

[18 - July - 2007]

* அமைச்சர் அமீர் அலி

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள யுவதியின் விடுதலைக்காக கருணை உள்ளம் கொண்ட அனைவரும் இறைவனை பிரார்த்திக்க வேண்டுமென்று அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று மரண தண்டனை தீர்பளிக்கப்பட்ட மூதூரைச் சேர்ந்த றிசானாவின் நிலைமை குறித்து அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ;

சிறுவயதில் ஒரு குடும்பத்தின் பாரத்தை தன் தோள்களில் சுமந்தபடி கடல் கடந்து வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற றிசானாவுக்கு நேர்ந்த கதி துர்ப்பாக்கியம் நிறைந்ததாகும்.

இத் தண்டனையிலிருந்து றிசானாவைக் காப்பாற்றுவதற்காக பல்வேறு மட்டங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்முயற்சிகள் குறித்து கவனம் செலுத்தியிருக்கும் ஜனாதிபதிக்கும் றிசானாவின் பெற்றோரை சவுதிக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹுசைன் பைலாவுக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

றிசானாவின் விடயம் சம்பந்தமாக ஜனாதிபதியுடனும் சவுதி அரேபியத் தூதுவருடனும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறேன்.

ஓர் அப்பாவிப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவது மனிதாபிமானம் கொண்ட அனைவரதும் கடமை என்பதை நாம் உணர வேண்டும். அதற்கான முயற்சியில் எமது பங்கும் இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்த வேண்டும்.

பிரார்த்தனை வலிமை மிக்கது. எனவே, நாம் அனைவரும் றிசானாவின் விடுதலைக்காக இறைவனைப் பிரார்த்திப்போமென்றும் தெரிவித்துள்ளார்.

தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களுக்கு நன்றி கறுப்பி

தகவல்களுக்கு நன்றி கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.