Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 


வணக்கம் நண்பர்களே …/\…

இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் மக்கள் படையின் சீருடைகள் பற்றியே...

முன்னுரைக்கு ஒன்றும் இல்லை... எனவே ஒரே பாச்சலில் கட்டுரைக்குள் போவோம், வாருங்கள்

 


1. கிராமியப்படை:

இவர்களின் சீருடை ஒருவித கபில நிறத்திலான (கிட்டத்தட்ட ஊத்தை நிறம்) சீருடை ஆகும். தலையிலும் அதே நிறத்திலான சுற்றுக்காவல் தொப்பி அணிந்திருந்தனர்.

Karadiyanaaru thenakam air.jpg

'சிறிலாங்க வான்படையால் மட்டு கரடியனாறு அரசியல்துறை செயலகம்(தேனகம்) மீது யூலை 29, 2006 நடத்தப்பட்ட கிபீர் வான் தாக்குதலில் வீரச்சாவடைந்த கிராமியப்படை வீரர் லோகிதன்'

ஆனால் பயிற்சியின் போது புலி இலச்சினை பொறித்த T-shirt தருவார்கள். 

main-qimg-8676230963b17f4edb717c482cd2bac2.png

'படிமப்புரவு: வேர்கள்'

இப்புலிச்சின்னம் பொறித்த T-shirtகளை விடுதலைப்புலி வீரர்களும் அணிவதுண்டு!

main-qimg-706a87766fdddf83e9fdddcf75342038.png

 

      • கிராமிய விசேட படையணி

மூன்று விதமான சீருடை அணிந்திருந்தனர். இவர்களின் கட்டளையாளர்கள் கரிய நிறச் சீருடையும் வீரர்கள் பச்சை மற்றும் ஒரு வித வெள்ளை நிறத்திலான சீருடையும் அணிந்திருந்தனர்.

main-qimg-3fc110254967d8e561afba6685a3be00.jpg

'திருகோணமலை கிராமிய விசேட படையணி'

 


2. ஊரகத் தொண்டர் சிறப்புப்படை (2005 - 2009)

இவர்கள் கீழ்க்கண்ட நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர்.

main-qimg-f00205ad03a229af282a786b49c862bf.png

'படிமப்புரவு: வேர்கள்'

main-qimg-91cc1ec068e0ec0a588dd86508983be7.jpg

'மூதூரில் பயிற்சி முடித்து வெளியேறிய ஊரகத் தொண்டர் சிறப்புப் படை | படிமப்புரவு:tamilnet '

main-qimg-756d4dda2fb407d75044c2fe04cc846d.jpg

'விடுதலைப்புலிகளோடு நிற்கும் இப்படையினர்'

 


3. போருதவிப்படை

இவர்கள் கீழ்க்கண்ட நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர். இவர்கள் அவ்வளவாக இச்சீருடை அணிந்து தோன்றியதில்லை.

main-qimg-ce98cc65549823fb594a44d18038171f.jpg

'படிமப்புரவு: fb'

 


4.எல்லைப்படை (1999 - 2009)

இப்படையணி தொடங்கப் பட்ட போது கறுப்பு நிற சீருடையும் (இச்சீருடை எத்தனை மாதங்கள் நீடித்தது என்று தெரியவில்லை. இத்தகவலை முதலாவது எல்லைப்படை பெண் மாவீரர் பற்றிய நிகழ்படத்தில்(Video) இருந்தே எடுத்தேன்.)

main-qimg-69156e84a2ccbcf680dcdba0b8c15325.png

அதன் பின்னர் கீழே உள்ளது போன்ற வெளுறிய பச்சை நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர்:

main-qimg-1acc8a509284f1cc0d8fe29ab285df3f.jpg

'எல்லைப்படை மாவீரர் | இடது பக்கத்தில் இருக்கும் மாவீரர் கறுப்பு நிற சீருடையும் அவரிற்குப் பக்கத்தில் இருக்கும் முதல் எல்லைப்படை பெண் மாவீரர்(2000 ஆம் ஆண்டில்) வெளுறிய பச்சை நிற சீருடையும் அவரிற்குப் பிறகு மாவீரரான ஒரு அண்ணா வெளுறிய பச்சை நிற அணிந்திருப்பதை நோக்குக'

முதற் சீருடையினில் தலையில் கறுப்பு நிற வரைகவியும்(Beret) இரண்டாவதின் போது பால்பச்சை நிறத்திலான வரைகவியும் அணிந்திருந்தனர்.

இதன் பின்னரான கால கட்டத்தில் (இதுவும் 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு), கீழே நான் காட்டியுள்ள பச்சை நிறத்திற்கு இவர்களின் சீருடை மாறிவிட்டது.

main-qimg-50181a126523ea818f59007e345b4daa.png

'முன்னால் உள்ள இருவரில் வலது பக்கத்தில் உள்ளவரை நோக்குக. அவரே எல்லைப்படை வீரனாவார்; இடது பக்கத்தில் உள்ளவர் சிறப்பு எல்லைப்படை வீரராவர் '

main-qimg-d40f4befc6f50fa3ab85cb5dd84b017d.png

'அணிநடையில் ஈடுபட்டுள்ள எல்லைப்படை பெண் போராளிகள் | 1999 ஆம் ஆண்டு 10 அ 11 மாதத்தில் '

 

ஆகக் குறைந்தது 2000 ஆம் ஆண்டு 7ம் மாதத்திலிருந்து அறியில்லாக் காலம் வரை துணைப்படை வீரர்கள் கீழக்கண்ட முற்றிலும் மாறுபட்டதான உருமறைப்புடைய ஒரு சீருடையினை அணிந்திருந்தனர். 

Border force.png

'2000 ஆம் ஆண்டின் பிற்பகுதி'

நான்காம் ஈழப்போரில் இதே உடையினை அணிந்தாலும் தலையில் வரைகவி விடுத்து இதை விடக் கொஞ்சம் கடும் பச்சை நிறத்திலான சீருடை அணிந்து தலையில் சுற்றுக்கவல்  தொப்பி அணிந்திருந்தனர்:-

249835_122276507856032_2577530_n.jpg

'நான்காம் ஈழப்போரில் எல்லைப்படை'

 


5. சிறப்பு எல்லைப்படை

 

இவர்கள் பாசிநீல நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர். :-

main-qimg-782e338d0afc0290256ccc018bf1e7e5.png

'படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள சிறப்பு எல்லைப்படையினர்'

main-qimg-37b630229bdf100f7c80efa69cfa15e8.jpg

'இடது புறத்தில் ஒரு வித பச்சை நிறத்திலான சீருடை அணிந்து நிற்போரை நோக்குக. அவர்கள்தான் சிறப்பு எல்லைப்படையினர் ஆவர் | கிளிநொச்சி - பரந்தன் ஊடுருவித் தாக்குதலில் (1998) படைத்தளத்தினுள் எடுக்கப்பட்ட நிழம்பு(Photo)' 

main-qimg-daaa5d46f472f4d505735fd44e3c3ea3.png

'இடது பக்கத்தில் இருப்பவர் தென் தமிழீழ படையணி வீரர். வலது பக்கத்தில் இருப்பவர் சிறப்பு எல்லைப்படை வீரர்'

 

main-qimg-f053047c733e9dcaa09f96ad36418f33.png

 


6. வனவள பாதுகாவலர் பிரிவு

இவர்கள் கீழ்க்கண்ட நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர்.

main-qimg-12080f8035d792a52f0420d81b117037.jpg

'படிமப்புரவு: fb'

 


 7. உள்ளகப் பாதுகாப்புப் படை

இவர்கள் ஒரு விதமான வெளுறிய பச்சை நிறச் சீருடை அணிந்திருந்தனர். தலையில் என்ன வகையான தொப்பி அணிந்தனர் என்பது அறியில்லை.

Internal Security Force Identity card.jpg

'உள்ளகப் பாதுகாப்புப் படை அடையாள அட்டை'

 


 

உசாத்துணை:

  • முற்றுமுழுதாக, எனக்குக் கிடைத்த படங்களை வைத்தே இவற்றை எழுதியுள்ளேன்.

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

  • நன்னிச் சோழன் changed the title to விடுதலைப் புலிகளின் மக்கள்படையினால் அணியப்பட்ட சீருடைகள் - ஆவணம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.