Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய ஆதிக்கக் கப்பல் ஆட்டம் காண்கிறதா-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


ஐரோப்பிய ஆதிக்கக் கப்பல் ஆட்டம் காண்கிறதா-பா.உதயன்

சீனாவின் பெரும் அலையோடு மோதி மூழ்கிக்கொண்டிருகிறதா இருநூறு வருட கால ஐரோப்பிய அதிகார ஏகாதிபத்தியம். முழித்து விட்டது ஆசியாவில் படுத்திருந்த சிங்கம் ஒன்று. இப்போ வேட்டை ஆட ஆரம்பித்து விட்டது . கொஞ்சம் ஆடித்தான் போய்  இருக்கிறார்கள் ஐரோப்பியரும் அமெரிக்கரும். ஆசியாவில் இருந்து புறப்பட்ட றகன் ஒன்று அனைத்து உலக வேலிகளையும் அறுத்துக் கொட்டி கொழுத்து பெருத்து இருக்கிறது பொருளாதார பெருச்சாளி ஒன்று.

நெப்போலியன் சீனாவை பார்த்து சொன்னது போலவே ஆசியாவில் சிங்கம் ஒன்று உறங்கிக்கொண்டிருக்கிறது. அது முழிக்கும் போது உலகம் தாங்காது  “என்றான் Let China Sleep, for when she wakes, she will shake the world,” அதே போல் கொழுத்த பணக்கா ரர்கள் கூடும் G7 கூட்டத் தொடரிலே சீனாவின் றகனை எப்படி அடக்கலாம் என்றும் மூழ்கிக் கொண்டிருக்கும் தங்கள் கப்பலை எப்படி மீட்காலம் என்றே எல்லா அண்ணமாருக்கும் தலை இடி. எங்கள் பக்கத்து நாடு அண்ணன் இந்தியாவுக்குக் கூட.

சீனாவின் பட்டுப் பாதை (Belt and Road) திட்டம் இப்போ எட்டுத் திக்கும் சுத்தி வளைக்குது. எங்கு பார்த்தாலும் மண்டரின் மெல்ல முளைக்குது. என்ன செய்யப் போகிறது ஐரோப்பாவும் அமெரிக்காவும் இந்தியாவும். சீனாவால் அமைதியாகவும் சமாதானமாகவும் முன்னேற முடியுமா என்ற கேள்வியும் பல அரசியல் ஆய்வாளர்களால் பேசப்படுகிறது. சீனாவின் பட்டிப் பாதை அபிவிருத்தியை அதிகாரதின் ஆதிக்கம்( Authoritarian threats) என்று தலைமை நாடுகள் விமரிசித்து இருக்கிறது. 

அதே தலை இடி இப்போ இந்தியாவுக்கும். அதன் அருகில் இருக்கும் ஆசிய நாடுகள் பல சீனாவின் வலையில் அகப்பட்டுப் போயினர். அரசியல் பொருளாதார நலன்களிலே ஆடும் ஆட்டத்தில் யார் காயை சரியாக நகர்த்துகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்பது போல் (Geo politics like a chess game the player that make a right move wins). சீன இராஜதந்திரம் ஆட்டம் காண வைத்திருக்கிறது உலகை. அதிகாரத்தில் இருந்தவர்கள் எல்லாம் இப்போ ஆடிப்போய் இருக்கிறார்கள். அருகில் உள்ள நாடு ஸ்ரீ லங்காவிலும் சீனாவின் ஆதிக்கத்தினால் ஆசியாவின் சக்கி மிக்க நாடு இந்தியா என்ற வல்லாதிக்கத்தை இழப்பதோடு இதன் பாதுகாப்புக்கும் பூகோள அரசியல் மூலோபாய நகர்வுகளுக்கு இது இந்தியாவுக்கு பெரும் தலை இடியாக மாறியுள்ளது. இந்திய வெளி விவகார இராஜதந்திர நகர்வு பெரும் பின்னடைவை சந்தித்ததோடு இனி வரும் காலம் இந்தியா எவ்வாறான உறவை ஸ்ரீ லங்காவோடு பேணப்போகின்றது என்பதே இப்போதுள்ள எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார நலன் சார்ந்தும் ஈழத்தமிழர் இனப் பிரச்சினை சார்ந்தும் இந்தியாவின் இராஜதந்திரமும் சர்வதேச தொடர்பும் சறுக்கி இருப்பது இப்போ தெரிகிறது.

அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடப்புகளுக்கான கற்கை நெறியின் பேராசிரியரும் ஆன John Mearsheimer தனது நூலிலே பெரும் அதிகார சக்திகளின் அரசியல் சோகம் என ஆதிக்க சக்திகளின் இன்றைய உலக ஒழுங்கு சார்ந்து சீனா என்ற பெரிய சக்தியினால் சமாதானமாய் மீள் எழுச்சி கொள்ள முடியுமா என்று கேட்டிருக்கிறார். Can China rise peacefully? அப்படி சீனாவால் முடியாது என்றே அவரின் வாதம் இருக்கிறது. அயல் நாடு இந்தியாவோடு பகைத்துக் கொண்டு அதன் எல்லையை தாண்டி பல இந்திய பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டும் அதே வேளை ஜப்பான் உட்பட பல நாடுகள் சீனாவின் ஆதிக்கத்தை ஒரு பய உணர்வோடே பார்க்கின்றனர்  என்கிறார்.

அதே வேளை சீனாவால்  முன்னெடுக்கப்படுகின்ற ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான பாரிய பொருளாதார அவிவிருத்தியானது சீனா இவர்களுக்கு வழங்கும் கடன் அடிப்படையிலானதும் சீனாவுக்கே சொந்தமான ஓப்பந்தங்களின் மூலமாகவே செய்யப்படு கின்றன. இந்தக் கடனை வறிய நாடுகள் திருப்பி பெரும் வட்டியோடு செலுத்துவதில் பெரும் கஸ்ரங்கள் ஏற்படலாம். இது பெரும் பிரச்சினையை சீனாவுக்கும் இந்த நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தி விடலாம் என்றும் இப்படி பல காரணங்களை குறிப்பிட்டு கூறும் இவர் அமெரிக்கா பனிப் போர் உட்பட இரண்டாம் உலக மகா யுத்தம் என்றும் பல முக்கிய போர்களை வென்றது என்றும் இதன் இராணுவ பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்றும் வாதாடுகிறார் .

இதையே Joseph nye  என்ற அமெரிக்க ஹாவ்ர்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடர்புகளுக்கான பேராசிரியரும் மென் சக்தி(Soft power) என்ற அரசியல் கேட்பாட்டை கூறியவருமான இவர் அமெரிக்காவை சீனாவால் வெற்றி கொள்ள முடியாது என்றே கூறுகிறார். இது இப்படி இருந்தபோதும் இவரது இந்த (soft power diplomacy) மென்வலு இராஜதந்திரத்தையே சீனா கையாள்கிறது. யுத்தம் செய்யாமலேயே பல நாடுகளை பாரிய அபிவிருத்தி என்ற போர்வையில் தம்வசப் படுத்தியுள்ளது.

இவை எல்லாவற்றிக்கும் மாறுபட்ட கருத்தை சிங்கப்பூரின் லீ குவான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியலுக்கான பேராசிரியரும் சிங்கப்பூருக்கான ஐ நாவின் முன்னை நாள் நிரந்தர பிரதிநிதியுமான Kishore Mahbubani தனது நூலான சீனா வென்றுவிட்டதா (Has China won) என்று தான் எழுதிய நூலில் ஆம் சீனா வென்றுவிட்டது 200 வருட ஐரோப்பி யர்களின் ஆதிக்க கப்பல் மூள்கிக்கொண்டிருக்கிறது என்றும் சீனாவால் அமைதியாகவும் சமாதானமாகவும் முன்னேற முடியும் என்றும் பல ஆதாரங்களை முன் வைத்து வாதிடுகிறார்.

எது எப்படி இருந்தாலும் சீனாவின் ஆதிக்கம் இன்று உலகம் பூராகவும் பரவி இருப்பது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிடையே ஒரு பயத்தை உண்டு பண்ணி இருப்பதை மறுக்க முடியாது. இதையே இறுதியாக கூடிய G 7 நாடுகளுக்கு இடையே பேசப்பட்ட முக்கிய விடியங்களாகவும் அதே வேளை சீனாவை எதிர்த்து இதன் பாரிய ஆதிக்க சவாலை எப்படி முறியடிக்கலாம் என்ற செயல் திட்டத்தை முன் வைத்துள்ளார்கள். சீனாவின் வலைக்குள் சிக்கிக் கொண்ட நாடுகளை எப்பிடி மீண்டும் தமது மென் வலுவை (Soft power) இராஜதந்திர மூலம் வென்றெடுக்கலாம் என்று சீனாவைப் போன்று இன்னமும் ஒரு பட்டுப் பாதை திட்டத்தை  7 நாடுகள் கூட்டத் தொடரிலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு முக்கிய சர்வதேச கற்கை நெறிக்கான அமெரிக்கா பேராசிரியர் Francis Fukuyama வரலாற்றின் முடிவு (End of history) என்ற தனது நூலிலே அமெரிக்காவுக்கும் சோவியத் யூனினியனுக்கும் இடையிலான பனிப் போரின் முடிவின் பின் வரலாறு ஒன்று முடிவுக்கு வந்ததாகவும் இந்த முடிவின் மூலம் ஐரோப்பிய அமெரிக்கா திறந்த பொருளாதார முதலாளித்துவமே இறுதியில் வென்றதாகவும் தன் நூலிலே எழுதினார். ஆனால் இன்று அந்த வரலாற்று முடிவு வேறு ஒரு திசையில் பயணித்து சீனாவின் ஆதிக்கத்தோடு தொடர்கிறது என்று பார்க்கக் கூடியதாக உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள். 

இனி வரும் காலம் கலாச்சாரங்களுக்கு இடையிலான யுத்தமாக (Clash of Civilizations ) தொடரும் என்று மிகவும் முக்கியம் வாய்ந்த நூலான கலாச்சாரங்களின் யுத்தம் என்ற தனது நூலிலே Samuel Huntington என்ற அமெரிக்க அரசியல் பேராசிரியர் எழுதியிருந்தார். அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த நிக்ஸ்சன் காலத்தில் அவருக்கான ஆலோசகர்களில்  ஒருவராகவும் இருந்திருக்கிறார். ஐரோப்பிய கலாச்சாரமும் அமெரிக்க கலாச்சாரமும் ஆசியா சீனா கலாச்சாரத்தோடு மோதும் ஒரு நிலையை ஏற்படுத்தி உள்ளது போல் தான் ஆய்வாளர்க ளால் பேசப்போடுகிறது. அமெரிக்க ஐரோப்பிய கைகளில் இருந்து ஆதிக்க அரசியல் சீனாவின் கையில் மாறிப் போகுமா சீனாவின் பெரும் சக்தி வாய்ந்த தலைமையில் புதிய உலக ஒழுங்கில் பூமி சுற்றுமா என்று இனி வரும் காலங்கள் பதில் சொல்லும்.

-பா.உதயன் ✍️


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.