Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதய தெய்வம் அம்மாவின் 5 கொலைகார மகன்மார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக ஒரு கிரிமினல் வழக்குகள், விடயங்களை ஆர்வத்துடன் தொடர்வேன்.

முன்னர் 'சபிக்கப்பட்ட வைரம்' தொடரும் எழுதி இருந்தேன்.

இன்று அம்மாவும் கொலைகார பிள்ளைகளும் குறித்து பார்ப்போமா.

அம்மா, ஜெயலலிதா ஒரு அரசியல் விபத்து. தன்னை 'வைத்திருந்த' எம்ஜிஆர் இறுதி பயண ஊர்தியில் ஏறி அமர்ந்த போது, ஒருவரால் கிழே இழுத்து தள்ளப்பட்டபோது அவரது அரசியலும் ஆரம்பம் ஆனது.

கூடவே வந்து சேர்ந்தார் சசிகலா. இந்த பெண்மணியின் பேராசையே, நடிப்பின் மூல வருமானம், எம்ஜியார் ஆதரவு, தாயாரின் சொத்து என ஓரளவு வசதியாக இருந்த ஜெயலிலிதாவின் வாழ்வினை பலவகைகளில் நாசமாக்கியது.

அமைச்சர்கள் ஊழல் செய்ய ஊக்குவிற்பதும், அதில் குறிப்பிட்ட வீதம், போயஸ் கார்டனுக்கு வர வேண்டும் என்று, வரும் பணத்துக்கு கணக்கு வைப்பதும், தாமதமானால் எடுத்து திட்டுவதும் சின்னம்மாவின் முக்கிய வேலை.

சின்னம்மாவின் தான்தோன்றி தனமான வேலைகளினால், எடுத்திருக்க வேண்டிய சாதாரண, பாதுகாப்பு விடயங்களில் கூட கோட்டை விட்டு ஊழல் புகாரில் சிக்கி முதல் தடவையாக பெங்களூரு சிறை சென்றார் அம்மா. கூடவே, சின்னம்மாவும் போனார்.

இந்த காலத்தில், பன்னீர் முதலமைச்சர் ஆனார். வேண்டுமென்றே, அழுது அரட்டினாலும், அவர்களுக்கு உள்ளூர பெரும் மகிழ்ச்சி.

பன்னீர், எடப்பாடி, நத்தம் விசுவநாதன், வேலுமணி, தங்கமணி பெரும் கொள்ளை அடித்து, சொத்துக்களை சேர்த்து குவித்தார்கள். வெளிநாடுகளிலும் சொத்துக்களை வாங்கி போட்டார்கள்.

சிறைக்கு போன இருவரும் வந்தார்கள், மீண்டும் முதல்வர் ஆனார், அம்மா. 

உளவுத்துறை தகவல் கொடுத்து. அம்மா கடுப்பானார், சின்னம்மா கொதிப்பானார். 

கிளம்பி கொடநாடு போனார்கள். சம்பந்தப்பட்ட அனைவரையுமே அங்கே கூப்பிட்டார். ஒவொருவராக கூப்பிட்டு செம டோஸ் விட்டார்.  இல்லம்மா.... அப்படி இல்லம்மா என்று கதை விட்டார்கள்.

அம்மாவிடம் தப்பினாலும், சின்னம்மாவிடம் தப்ப முடியுமா? 

முன்னர் கணக்கில் கதை விட்ட 'ஓடிடர்' ராஜசேகருக்கு இருத்தி வைத்து செருப்படி கொடுத்தவர்கள் அவர்கள்.

கோவணத்துடன் (அன்டிராயர்) இருத்தி விட்டார்கள். கடைசியில், அவர்கள் வாங்கிய சொத்துக்கள் தொடர்பான பத்திரங்களை அவர்களிடம் கொடுத்து, வெளியே வந்தனர்.

தமக்கு நடந்த அவமானங்களை வெளியே சொல்லாமல், மாண் (பு)மிகு அம்மா, சின்னம்மா என்று கதை அடித்துக் கொண்டு இருந்தார்கள்.

அம்மா, இயல்பாகவே, அகங்காரம் கொண்டவர். முதன்முதலாக முதல்வராகி, பிரதமரை சந்திக்க டெல்லி சென்ற போது, வலது பக்கத்தில் சின்னம்மா இருக்கிறார். இடது பக்கம் இருக்கை வெறுமையாக உள்ளது. முதல்வர் என்ற படியால், யாரும் இருக்கவில்லை. அதே விமானத்தில் வந்த ஓர் எம்பி, சிரித்துக் கொண்டே வந்து பக்கத்தில் அமர்கிறார் - பேச....

அடுத்த கணமே, ஆங்கிலத்தில் பொறி பறக்கிறது... துண்டைக் காணம், துணியை காணம் என்று எழுந்து ஓடுகிறார். 

இந்த ஆண் அரசியல்வாதிகளை தூரத்தில் வைத்த முதல் நிகழ்வு அது.   

கணவன் படத்தில் எம்ஜிஆரும், பட்டிக்காடா பட்டணமா படத்தில் சிவாஜியும், ஜெயலலிதாவின் ஆணவத்தினை அடக்குவதாக நடித்திருப்பார்கள். அவை பெரும் வெற்றி அடைந்தன.

அப்படி ரசிகர்கள் கொண்ட ஒரு மாநிலத்தில், அம்மா, நிஜ வாழ்வில் இவர்களை தூரத்தில், சிலவேளை காலில் விழ வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தார்.

இருந்தாலும், அம்மாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, அது வேறு கதை. அம்மா மரணித்ததும், கூவத்தூர் விடுதியில் இருந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆளுக்கு 3 கோடி கேட்டார்கள். இல்லாவிடில், பன்னீர் பக்கம் போக ரெடியாக இருந்தார்கள்.

சின்னம்மா, செங்கோட்டையனை அழைத்தார். மூன்று கோடி, ஆளுக்கு கொடுக்க முடியுமா என்றார்? என்னை முதல்வர் ஆக அறிவியுங்கள், ஒரு வாரத்தில் கொடுக்கிறேன் என்றார். சட்ட மன்ற உறுப்பினர்கள் மறுக்கின்றனர்.

சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்த நெடும்சாலை துறை அமைச்சர் ஆக இருந்த எடப்பாடி, அம்மா, ஒன்னுக்கும் கவலைப்படாதீங்கோ, அடுத்த அரை மணி நேரத்தில், சட்ட மன்ற உறுப்பினர்கள் வீடுகளுக்கு பணம் போய் சேர்ந்து விடும் என்று சொல்ல, சட்ட மன்ற உறுப்பினர்கள் தமது வீடுகளுக்கு போனை போட்டு, பணம் கிடைத்ததை உறுதிப்படுத்த, அக மகிழ்ந்து போன அம்மா, சின்னம்மா, நீ தான் அய்யா முதல்வன் என்று சொல்லி, அவரும் காலில் விழ.... ஆசீர்வாதம் செய்து, சிறை சென்றார்.

இப்போது, கொடநாடு உள்ளே சிக்கி உள்ள பல கோடி கணக்கான ரூபா பெறுமதியான பத்திரங்களை எடுக்கவேண்டும். அதுவும் வருமான வரித்துறை பாயமுன்னர் எடுக்க வேண்டும்.

இதய தெய்வம் அம்மாவின் பிள்ளைகள் ஐவரும் கூடி, திட்டம் போட்டு அதில் ஒருவரான, வேலுமணியியிடம் பொறுப்பை கொடுக்க.... அவரோ தனது சொந்த அண்ணனை கூப்பிட்டு பொறுப்பினை கொடுத்து விட்டார். தமிழக ரௌடிகள் என்றால் அம்மா வீடு என்று தெரிந்து பின்னடிப்பார்கள் என்று, கேரள ரௌடிகள் கோஸ்ட்டிகளை பிடித்து திட்டம் போட்டார்கள்.

திட்டம் இட்டது போலவே, பத்திரங்கள் வெளியே வந்தாலும், சொதப்பிய காரணத்தால், 5 கொலைகளில் முடிந்தது.

கொடநாடு, ஒரு அரை முதல்வர் அலுவலகமாக இயங்கிய காரணத்தினால், அங்கே தங்கு தடையில்லாத மின்சாரம், பல தொலைபேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. cctv கேமரா, போலீஸ் செக் போஸ்ட்டுகள் பலதும் இருந்தன. 

கொள்ளை நடக்கும் நாட்களுக்கு சில நாட்கள் முன்னதாக, போலீஸ் செக் போஸ்ட்டுகள் விலக்கப்பட்டன. கொள்ளை தினத்தன்று மின்சாரமும் இல்லை, மின்சாரம் இல்லாமல் போனாலும் வேறு வகையில் இயங்கி இருக்க வேண்டிய cctv காமெராவும் வேலை செய்யவில்லை.

இந்த ஒருங்கிணைப்புகளை செய்தது யார் எனும் கேள்வி வருகிறது.

இந்த கொள்ளைக் கும்பலில், ஒருவன், வழக்கம் போலவே ஒரு கொலை கார கேடி தான்... அவனே, தண்ணியில் இருந்து திமிறிய ஓம் பகதூர் என்னும் காவலாளி சத்தம் போடுவான் என்று, வாயினை துணியை கொண்டு பொத்திய வாறு, கையினை கட்டி, அங்கிருந்த இரும்பு கிராதிகளில் கட்டி விட்டான். பொத்திய கை விரலை கடிக்க, ரத்தம் கொட்டியது. இயல்பாகவே கோவக்காரன்.... ரத்தினை கண்டதும், கோபத்தில், ஓம்பகதூர் தலையில் முஸ்டியால் ஒரு போடு ஒன்று போட... இறந்து போய் விட்டார் அவர். 

எல்லாம் முடித்து வரும் போது, கட்டினை அவிழ்க்க வரும் போதே, அவர் இறந்தது தெரிய பதறினார்கள்.

அவர்கள் தலைமை கனகராஜ். இவன் முன்னர் அம்மாவின் டிரைவர் ஆக இருந்து, அம்மாவின், சின்னம்மாவின், பிரத்தியேக பொருட்களை, மேலே அவர்களது அறைக்கு கொண்டு சென்று வைத்து விட்டு வருபவர் என்ற வகையில், வேலுமணியின் அண்ணன், அவரை தேர்ந்து எடுத்து இருந்தார்.

காவலாளி இறந்த செய்தி, வேலுமணி அண்ணர் மூலம், வேலுமணிக்கும், எடப்பாடிக்கும் போக... பதறிய அனைவருமே, கனகராஜ் போனுக்கு அழைப்பினை போட்டு என்ன நடந்தது என்று கேட்டு உள்ளனர். 

ஒரு கண நேரத்தில் அவர்கள் விட்ட இந்த தவறு, அவர்களை சிக்க வைத்து உள்ளது. இவர்களது அழைப்புக்கள் அனைத்துமே, பதிவாகி விட்டன. இதனை விசாரித்த போலீஸ் அதிகாரி, சுனில்.... விடயம் புரிந்து அமைதியாகி விட்டார். அதுக்கு பரிசாக, அவர் மத்திய அரசு பணிக்கு செல்ல, எடப்பாடி முதல்வராக அனுமதி கொடுத்தார்.

நிலைமை சிக்கலாகும் என்று, சில வாரங்களில் கனகராஜ் விபத்தொன்றில் கொல்லப்படுகிறார். அவரது அண்ணன், காரணம் வேலுமணியின் சகோதரர் என்கிறார்.

அடுத்த முக்கிய சாட்சி  சயன் கேரளாவில் காரில் போகும் போது டிப்பர் வண்டி மோதி விபத்தாகிறார். மனைவியும், மகளும் இறந்து போக, டிப்பர் டிரைவர், இறங்கி வந்து, மூவரும் இறந்து விட்டார்கள் என்று யாருக்கோ தகவல் சொல்வது தெரிந்து கொண்டே மயக்கம் அடைகிறார்.

தனது குடும்பத்தினை அழித்தவர்கள் என்று பெரும் கோபத்தில் உள்ள அவர், எடப்பாடி உள்பட்ட சகலரின் நித்திரையினை கெடுத்து உள்ளார்.

CCTV கேமரா பொறுப்பாளர், கொலையாகிறார். அவர் தூக்கில் தொங்கிய சாரம், லுங்கி அவரதுவோ அல்லது வீட்டில் இருக்கும் தகப்பன் உடையதோ அல்ல என்று தங்கை சொல்கிறார். ஆயினும் வயிறு வலி தாங்காமல் தன்னை மாய்த்துக் கொண்டார் என்று போலீசார் முடித்தார்கள்.

ஐந்தாவது கொலையாக, இரண்டாவது காவலாளி கிருஷ்ணபகதூர், எங்கே என்று இன்று வரை தெரியவில்லை. போலீசார் அவர் சொந்த நாடு, நேபாலுக்கு போய் விட்டார் என்று சொன்னாலும், அவரும் கொலை ஆகி காணாமல் ஆக்கப்பட்டிருப்பார் என்றே சொல்லப்படுகிறது.

சிவாஜி நடித்த கவரவம் படத்தில், உண்மையாகவே செய்த கொலையில் தப்பும் மேஜர் சுந்தரராஜன், பின்னர் கொலையே செய்யாத வழக்கில் சிக்கிக்கொள்வார். எடப்பாடியின் அரசியல் பிரவேசமே 1995ல் நடந்த ஒரு கொலையில் இருந்து காத்துக்கொள்ளவே என்று ஒரு தனிக் கதையே உண்டு.

உள்ளே என்ன பத்திரங்கள் இருந்தன என்று சொல்லக்கூடிய ஒருவர்.... சின்னம்மா. அவர் இன்னமும் வாய் திறக்கவில்லை. 

எடப்பாடி தனக்கு செய்த துரோகத்துக்கு பழிவாங்கும் சந்தர்ப்பத்தினை பார்த்துக் கொண்டு இருக்க கூடும். 

எதுவாக இருந்தாலும், பிள்ளைகள் இல்லாத, கணவரும் இல்லாத, தொடரும் இந்த பெண்மணியின் பேராசையே சகல நாசங்களுக்கும் காரணம்.

**

இப்போதுள்ள பெரும் தலைகள் சிக்கினால், அதிமுக சின்னம்மா வசம் வரலாம் என்று சிலர் சொன்னாலும், சின்னம்மா இனி மேடை ஏறி அரசியல் செய்ய வயதோ, சிறை சென்ற இமேஜ் ஓ ஒத்துழைக்க போவதில்லை.

அனைத்து அதிமுக mla கள் பிஜேபியினால் கபளீகரம் செய்யும் வாய்ப்பே உள்ளதால், எடப்பாடி பிஜேபியினால் கை விடப்படுவார். 

வழக்கு இறுகும். 

யாழுக்காக சுய ஆக்கம்.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் நல்லதொரு ஆக்கம்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி….  “கொடநாடு பங்களா” ஜெயலலிதா & சசிகலாவினால் வருமானத்துக்கு அதிகமாக, தவறான முறையில் வாங்கப் பட்ட சொத்து என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து ஆறு வருடங்களாகியும்… தி.மு.க. அரசு கூட அதனை அரச சொத்தாக… கையகப் படுத்தாமல் இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாதமுனி….  “கொடநாடு பங்களா” ஜெயலலிதா & சசிகலாவினால் வருமானத்துக்கு அதிகமாக, தவறான முறையில் வாங்கப் பட்ட சொத்து என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து ஆறு வருடங்களாகியும்… தி.மு.க. அரசு கூட அதனை அரச சொத்தாக… கையகப் படுத்தாமல் இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்.

1. திமுக அரசு இப்போது தானே வந்துள்ளது. கையகப்படுத்தினால், எதிர்காலத்தில், கோபாலபுரம், சிஐடி காலனி, என்று எல்லாமே போகும்.... திருடருக்கு, திருடர் பாதுகாப்பு. நீதிபதி குன்காவின் 100 கோடி அம்மா மீதான அபராதம், அம்மா இறந்ததும் தள்ளுபடியானது என்றே வாசித்தேன். 
2. பீட்டர் கிரெக் என்னும் பிரித்தானிய குடியுரிமை வைத்திருக்கும் இந்தியாவில் தங்கி உள்ள ஒருவரிடம், சாம, தான, பேத, தண்டம் பாவித்து அறா விலைக்கு வாங்கிப் போட்டவர் சசிகலா.
3. அம்மா, சின்னம்மா, சின்னம்மாவுடன் ஜெயிலில் களி தின்ற பெறாமகள் மூவருமே உரிமையாளர்கள்.
4. இதனை பகிருவதில் உள்ள பிச்சல் புடுங்கள் காரணமாக, பேசாமல் பீட்டர் கிரெக் இடம் கொடுத்து விட பேச்சுக்கள் நடக்கிறது என்று பீட்டர் கிரெக் உறுதிப்படுத்தி உள்ளார்.
5. அம்மாவை நினைக்கையில், ஆடிய, ஆட்டம் என்ன, தேடிய செல்வம் என்ன, கூடு விட்டாவி போனபின் கூடவே வந்ததென்ன என்ற பாடலே நினைவுக்கு வரும். 
6. சின்னம்மாவை நினைக்கையில், இந்தம்மா, இனிமேலாவது, அமைதியான, நேர்மையான வாழ்வு வாழுமா என்று தோன்றும். ஒரு போலித்தனமான வாழ்வுக்காக அந்தம்மா இழந்தது அதிகம். கணவருடன் வாழவே இல்லை. அவரும் போய் சேர்ந்து விட்டார். பிள்ளைகளும் இல்லை. சேர்த்த சொத்தினால் என்ன தான் பயன், சிறை சென்றதை தவிர?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

நாதமுனி….  “கொடநாடு பங்களா” ஜெயலலிதா & சசிகலாவினால் வருமானத்துக்கு அதிகமாக, தவறான முறையில் வாங்கப் பட்ட சொத்து என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து ஆறு வருடங்களாகியும்… தி.மு.க. அரசு கூட அதனை அரச சொத்தாக… கையகப் படுத்தாமல் இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்.

திமுக அரசு புரட்டினோம் கவிழ்த்தோம் எண்டு இல்லாமல் நிதானமாகவே செல்கின்றது என எண்ணத் தோன்றுகின்றது. நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துவிட்டாலும் திமுக அரசு உடனடியாக அரசுடமையாகக் கையகப்படுத்தினால் அதனை அதிமுகவினர் அரசியலாக்கி ஆதாயமடையக்கூடும். அம்மா வாழ்ந்த பங்களாவை திமுக அரசுடமையாக்கிவிட்டது என்று கிளம்பினால் அடிமட்ட அதிமுக தொண்டர்களிடம் அது அதிகம் எடுபடும். அதிமுக என்ற அரசியல் கட்சி திமுக எதிர்ப்பு ஒன்றை மட்டுமே வைத்து தனது இருப்பை இதுவரை தக்கவைத்துகொண்டுள்ளது என்பதை நாங்கள் இங்கு கருத்தில்கொள்ளவேண்டும். 

தற்போதுள்ள அரசியல் சூழலில் அதிமுக என்ற கட்சி பாஜகவிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டது. அக்கட்சியின் தலைவர்களின் மனநிலையைவிட நேர் எதிரான மனநிலையிலேயே கட்சித்தொண்டர்கள் இருப்பதாக அறியமுடிகின்றது. ஆனாலும் கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தொண்டர்கள் கட்சியை கைவிட்டிருக்கவில்லை. இந்த நிலை எதிர்காலத்தில் தொடர்ந்துகொண்டிருக்க வாய்ப்பு இல்லை. அதிமுக தொண்டர்களிடம் ஒரு வெற்றிடம் வரும்போது அதை திமுக சார்பாக மாற்றி திமுகவை பலப்படுத்தவே ஸ்டாலின் முனைவார். 

கொடநாடு விடயத்தில் அதிமுகவின் முக்கிய புள்ளிகளை குற்றவாளிகளாகக் காண்பித்து அல்லது உறுதிப்படுத்துவதன் மூலம் அம்மாவுக்கு (அல்லது அம்மாவின் ஆன்மாவுக்கு) அவர்கள் துரோகம் இழைத்துவிட்டதாக அதிமுக தொண்டர்களிடம் அவர்களைப் பிரித்துவிடலாம். அதன் பின்னர் கொடநாடு பங்களாவை ஜெயலலிதா நினைவுப் பூங்கா ஆக்கிவிட்டால் இலகுவாக ஸ்டாலின் தனது திட்டத்தை அடைந்துவிடுவார் என எண்ணத்தோன்றுகின்றது.

  • Nathamuni changed the title to இதய தெய்வம் அம்மாவின் 5 கொலைகார மகன்மார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.