Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவில் வான்குண்டு வீச்சு: சிறுவன் உட்பட இருவர் படுகொலை- 11 பேர் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் வான்குண்டு வீச்சு: சிறுவன் உட்பட இருவர் படுகொலை- 11 பேர் படுகாயம்

முல்லைத்தீவு அளம்பிலில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபீர் ரக வானூர்திகள் இன்று நடத்திய குண்டுவீச்சில் சிறுவன் உட்பட அப்பாவி பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக்குழந்தை உட்பட அப்பாவி பொதுமக்கள் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவுக்கு தெற்காக உள்ள அளம்பில் இராமசாமித் தோட்டம் பகுதியில் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு முன்பாக உள்ள மீன்வாடிகள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கிபீர் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின.

குண்டுகள் வாடிகள் மீதும் அதன் பகுதிகள் மீதும் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன்போது அப்பகுதியில் தொழில் நிமித்தம் நின்ற பொதுமக்களும் அவர்களின் குடும்பத்தினரும் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

வான்படையின் மிலேச்சத்தனமான தாக்குதலில்

பாடசாலை மாணவனான ஆனந்தன் செல்வா (வயது 15)

சிறீபாலசுப்பிரமணியம் காந்தமலர் (வயது 51) ஆகியோர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் இருவர் உயிராபத்தான நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அ.அருள்சன் (வயது 01)

அ.அலையரசி (வயது 04)

பிரேமதாஸ் பிரேம்குமார் (வயது 16)

கிட்ணபிள்ளை சிவதர்சன் (வயது 19)

கிட்ணபிள்ளை சரத்குமார் (வயது 13)

தியாகராசா (வயது 60)

அல்பிரட் (வயது 55)

சிவராசா (வயது 39)

யோ.வேதநாயகம் (வயது 48)

ஆகியோர் படுகாயமடைந்தவர்கள் ஆவர்.

மேலும் இருவரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப்பபெறவில்லை.

கிபீர் தாக்குதலில் மீன்வாடிகள் - 02, படகு - 01 முற்றாக அழிந்துள்ளதுடன் வேளாங்கண்ணி தேவாலயம், மீன்பிடி வலைகள் மற்றும் பொதுமக்களின் குடிசைகள் ஆகியன சேதமடைந்துள்ளன.

-புதினம்

Edited by கந்தப்பு

15 வயது சிறுவன் மற்றும் 51 வயதான பெண்மணி எந்தக் காரணமும் இல்லாமல் கொல்லப்பட்டுள்ளனர், காயமடைந்த ஒருவயது மற்றும் 4 வயது குழந்தைகள் உட்டபட 11 பேர் சிகிச்சை அழிப்பதற்கு மருத்துவத்தடை இராணுவத்தால் விதிக்கப்பட்டுள்ளது. யாரும் இந்த அநியாயத்தை எதிர்த்து குரல் எழுப்பமாட்டார்களா? இந்த பயங்கரவாத நடவடிக்கை குறித்து மின்னஞ்சல்கள் அனுப்பி சர்வதேச ஊடங்களுக்கு தெரியப்படுத்தமாட்டீர்களா? பயத்தில் பரிதவிக்கும் மீதமுள்ள குழந்தைககளிலும் மனிதர்களிலும் உங்களுக்கு இரக்கம் வராதா?

முல்லைத்தீவு மூதூருக்கு சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது!

(3 ஆம் இணைப்பு) முல்லைத்தீவில் கிறிஸ்தவ தேவாலயம், மீன்வாடிகள் மீது வான் குண்டுத் தாக்குதல்: இருவர் படுகொலை- 11 பேர் படுகாயம்.

முல்லைத்தீவு அளம்பிலில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலமாகிய தேவாலயம் மற்றும் மீன்வாடிகள் மீது சிறிலங்கா வான்படையினர் இன்று நடத்திய கொடூரமான தாக்குதலில் சிறுவன் உட்பட அப்பாவி பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக்குழந்தை உட்பட அப்பாவி பொதுமக்கள் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மூன்று மாதங்களுக்குப் பின்னர் சிறிலங்காவுக்கான நோர்வேத் தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கிளிநொச்சியில் உரையாடிவிட்டுத் திரும்பிய சில மணி நேரங்களிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவுக்கு தெற்காக உள்ள அளம்பில் இராமசாமித் தோட்டம் பகுதியில் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு முன்பாக உள்ள மீன்வாடிகள் மீது இன்று புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் கிபீர் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின.

வாடிகள் மீதும் அதன் பகுதிகள் மீதும் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. அப்பகுதியில் தொழில் நிமித்தம் நின்ற பொதுமக்களும் அவர்களின் குடும்பத்தினரும் இத்தாக்குதலுக்குள்ளாகினர்.

வான்படையின் மிலேச்சத்தனமான இத்தாக்குதலில்

பாடசாலை மாணவரான ஆனந்தன் செல்வா (வயது 15)

சிறீபாலசுப்பிரமணியம் காந்தமலர் (வயது 51) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் இருவர் உயிராபத்தான நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்தோர் விவரம்:

அ.அருள்சன் (வயது 01)

அ.அலையரசி (வயது 04)

பிரேமதாஸ் பிரேம்குமார் (வயது 16)

கிட்ணபிள்ளை சிவதர்சன் (வயது 19)

கிட்ணபிள்ளை சரத்குமார் (வயது 13)

தியாகராசா (வயது 60)

அல்பிரட் (வயது 55)

சிவராசா (வயது 39)

யோ.வேதநாயகம் (வயது 48)

மேலும் இருவரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப்பபெறவில்லை.

கிபீர் தாக்குதலில்

மீன்வாடிகள் - 02,

படகு - 01

ஆகியன முற்றாக அழிந்துள்ளன.

வேளாங்கண்ணி தேவாலயம், மீன்பிடி வலைகள் மற்றும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களின் குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன.

கரைவலை இழுத்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் பிடிக்கப்பட்ட மீன்களை தெரிந்து கொண்டிருந்த வேளையில் சிங்கள வான்படை இத்தாக்குதலை நடத்தியுள்ளது.

-Puthinam-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அளம்பில் தாக்குதலுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கண்டனம் - அனைத்துலக அழுத்தத்திற்கு அழைப்பு

சிறீலங்கா வான்படை விமானங்கள் முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் நேற்று மேற்கொண்ட தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டு, மேலும் 11 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.

சிறீலங்கா வான் படையின் இந்தக் கண்மூடித்தனமான தாக்குதலை தொண்டு நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையின் முழு விபரம்..

சிறீலங்கா வான் படையினர் அளம்பில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று நடத்திய தாக்குதலில் 15 அகவையுடைய சிறுவனும், 51 அகவையுடைய பெண்ணொருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

2004ஆம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலைத் தாக்கத்தின் பின்னர், இந்தப் பகுதியில் வாழும் பொதுமக்களிற்கு தற்காலிக குடிசைகள் அமைத்துக் கொடுத்தல், கடற்றொழிலுக்கான படகுகள், வலைகளை வழங்குதல் உட்பட தமிழர் புனர்வாழ்வுக் கழகமே பல்வேறு உதவிகளைப் புரிந்து வருகின்றது.

சிறீலங்கா கடற்படையினர் இந்தப் பகுதிமீது மேற்கொண்டுவரும் பீரங்கித் தாக்குதலால் மக்களின் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நீண்ட காலமாக ஆழ்கடல் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நேற்றைய வான் தாக்குதலில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் பொதுமக்களிற்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட இரண்டு குடிசைகள் சேதமடைந்துள்ளன.

சிறீலங்காவில் மனிதாபிமானப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமடைந்து செல்வதால், பொதுமக்கள் பாதிக்கப்படாது இருக்க அனைத்துலக சமூகம் சிறீலங்கா அரசிற்கு அழுத்தம் கொழுக்க வேண்டும் என தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அழைப்பு விடுக்கின்றது.

இதேவேளை, கடந்த பல வருடங்களாக தமிழர் புனர்வாழ்வுக் கழக்கத்தினால் அமைக்கப்பட்ட குடியிருப்புக்கள், மற்றும் பல திட்டங்கள் சிறீலங்காப் படைகளின் தாக்குதல்களில் சேதமாகப்பட்ட விபரங்களும் இந்த அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன.

-பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 12-07-2007 18:12 மணி தமிழீழம் [செந்தமிழ்]

வான்வெளித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடத்தில் கடற்புலிகள் தளங்கள் இருக்கவில்லை - கனகரட்ணம்

சிறீலங்கா வான்படையினர் அளம்பில் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்தே வான்வெளித் தாக்குதலை நடத்தியுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அளம்பில் பகுதியில் வான்வெளித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பகுதியில் கடற்புலிகளின் கடற்தளமோ அல்லது விடுதலைப் புலிகளின் தளங்களோ இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக சிறீலங்காப் வான்படையினர் கரையோர மக்கள் குடியிருப்புக்களையும் மீன்வாடிகளை இலக்கு வைத்தே தாக்குதலை நடத்தியுள்ளனர் என சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தமிழின அழிப்பின் ஒவ்வொரு அங்கங்களாகவே அமைகின்றன. தொடரும் இவ்வாறான தாக்குதல்களை அரசு உடனடியாக நிறுத்தாவிடின் மக்களின் கடுமையான விசனங்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் இன்று அவ்வாறான நிலை உருவாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்.

pathivu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு வான் குண்டுத் தாக்குதல்: புனர்வாழ்வுக் கழகம் கண்டனம்

முல்லைத்தீவு அளம்பிலில் சிறிலங்கா வான்படை நடத்திய கோரக் குண்டுத் தாக்குதலுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனன் எதிர்வீரசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைத்தீவு அளம்பிலில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் 15 வயது சிறுவன் மற்றும் 51 வயது நபர் ஒருவர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோருக்காக மீள கட்டித்தரப்பட்ட 2 மீன்வாடிகள் சேதமடைந்துள்ளன.

தாக்குதல்களின்போது பொதுமக்களை இலக்கு வைக்கக்கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதலினால் அழிவடைந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கட்டுமானங்களும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் முகாம்களும்:

2006 டிசம்பர் 10: வம்மிவட்டுவான் கண்டலடி பால்ச்சேனையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அமைத்த 3 உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் மீதான தாக்குதலில் 40 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 100 பேர் படுகாயமடைந்தனர்.

2006 நவம்பர்: கதிரவெளியில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 47 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 136 பேர் படுகாயமடைந்தனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சோனோபோ சிறார் இல்லமும் சேதமடைந்து 12 பேர் படுகாயமடைந்தனர்.

2006 ஓகஸ்ட்: சிறிலங்கா வான்படையின் தாக்குதலில் ஈச்சிலம்பற்றில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரால் மீளக்கட்டமைக்கப்பட்டிருந்த படகு தளம் சேதமடைந்தது. அதன் மதிப்பு அறிய இயலவில்லை. ஈச்சிலம்பற்று தற்போது சூனியப் பிரதேசமாக உள்ளது.

2006 ஓகஸ்ட் 26: திருகோணமலை மாவட்டத்தில் பொதுமக்கள் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரால் நடத்தப்பட்ட சந்தோசம் சிறார் இல்லம் சேதமடைந்தது. வான்குண்டுத் தாக்குதலின் போது அந்த இல்லத்தில் 40 சிறார்கள் உள்ளே இருந்தனர். எறிகணைத் தாக்குதலில் கடற்கரைச் சேனை தமிழர் புனர்வாழ்வுக் கழக அலுவலகம் சேதமடைந்தது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மூதூர், ஈச்சிலம்பற்று அலுவலகம் தாக்குதலுக்குள்ளானது. உணவுக் களஞ்சியம் சேதமடைந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

-புதினம்

11070701sw2.jpg

இந்தக் குழந்தை நலம்பெற பிரார்த்தியுங்கள், இனியும் இவ்வாறு நடக்காதிருக்க இலங்கை அரசுக்கு சர்வதேச ஊடகங்களுடாக பிரச்சாராம் செய்யுங்கள்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

இச்சம்பவம் தொடர்பான இங்கிலாந்தில் உள்ள ஒரு சட்டத்துறை அதிகாரிக்கு சொன்ன போது அவர் இப்படிக் கொடுமைகள் இலங்கையில் நடக்கிறதா.. இலங்கை அரசு விமானங்களைப் பயன்படுத்தித் தாக்குகிறதா என்று கேட்டார்..! :)

நம்மாக்களும் கொடி பிடிக்கிறாங்க தான்.. ஆனால்... அது தமிழர்களுக்கு செய்தி சொல்லுறதோட நின்றிடுது என்பதை இதிலிருந்து அறியக் கூடியதா இருக்கிறது..!

எம்மவர்களின் பிரச்சார இயந்திரம் சோம்பேறித்தனமானது.. கொள்கை உறுதியற்றது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு..! :)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.