Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மர்மங்களுடன் மரணித்த ‘ராபியா’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மர்மங்களுடன் மரணித்த ‘ராபியா’

செப்டம்பர் 30, 2021

இளங்கோ பாரதி

spacer.png

பெண்ணைப் போற்றுகின்ற பெருமை கொண்டது பாரத நாடு. பல மொழிகள், பன்மைத்துவ கலாசார பாரம்பரியங்களைக் கொண்டு விளங்கும் அந்நாட்டில், பெண்ணைச் சிதைக்கின்ற சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. 

இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட பல சந்தர்ப்பங்களைச் செய்திகள் வாயிலாக அறிந்திருக்கிறோம். இக்குற்றங்கள் தொடர்பாகவும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் தொடர்பாகவும், நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். 

சட்டங்கள் எவ்வளவுதான் இறுக்கமானவையாக இருந்தாலும், அவற்றிற்கு வழங்கப்படும் தண்டனைகள் எவ்வளவுதான் கொடூரமைானவையாக இருந்தாலும், இப்பாலியல் வன்முறைகள் இன்னும் அகன்ற பாடாக இல்லை. 

கடந்த ஓகஸ்ட் 27ந் திகதி இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் இடம்பெற்ற ஒரு சம்பவம், மனித நேயம் கொண்ட அனைவரது கண்களிலிருந்தும் கண்ணீரை வரவழைத்து விடும் கொடூரம் நிறைந்தது. 

இந்நிலைக்கு ஆளானவர் ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்  என்பதும் சட்டத்தின் காவலர்களாக விளங்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கே, பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதென்பது, சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுடெல்லி, சங்க விஹார் (Sangam Vihar) பகுதியைச் சேர்ந்தவர் ராபியா ஷைஃபி (Rabiya Saifi). 21 வயதான இவர் நான்கு மாதங்களுக்கு முன்புதான், புதுடெல்லி லஜ்பத் நகர் (Lajpat Nagar) மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் சிவில்  பாதுகாப்பு அதிகாரியாக பணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி, பணிக்கு சென்ற ரபியா வீடு திரும்பவில்லை.

சம்பவதினத்தன்று ராபியா வீட்டுக்கு வராததால், குடும்பத்தார் இரவு 10 மணி அளவில், ராபியாவின் அலுவலக நண்பர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். இதன்போது அழைப்பு பதிவு செய்யவில்லை என்பதை ஆரம்பத்தில் உறுதி செய்த அவர், ‘ஒரு வழக்கு சம்பந்தமாக, ராபியா உயரதிகாரியுடன் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். விரைவில் வீடு திரும்பிவிடுவார். அச்சம் கொள்ளத் தேவையில்லை’ என ஆறுதல் கூறியுள்ளார். 

spacer.png

Rabiya Saifi

ஆனால், அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்த இரண்டு பொலிஸார், ராபியாவின் உடலை அடையாளம் காட்டுமாறு கேட்டுள்ளனர். என்ன நடந்தது? எனத் தெரியாமல் அடையாளம் காட்டச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. 

அங்கு ராபியாவின் உடல் சிதைக்கப்பட்டிருந்தது. அவளின் வாய் வழியாகச் சென்ற கத்தி கழுத்து வழியாக வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது. அவளின் மார்பகங்கள் அறுத்து வீசப்பட்டிருக்கின்றன.  பிறப்புறுப்பு குத்திக் கீறப்பட்டுள்ளது. கழுத்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டு தொங்கும் நிலையில்; நெஞ்சில் ஆழமான துளையிட்ட ஓட்டை. உடல் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெட்டுக்கள்;  குத்தப்பட்ட காயங்கள். அவள் இறப்பதற்கு சற்று முன்பு, நான்கு பேருக்கும் அதிகமானோர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளமைக்கான தடயங்களும் காணப்படுள்ளன. 

இந்நிலையில், விசாரணைகள் தீவிரமடையவே 25 வயதுடைய நிஜாமுதீன் (Nizamuddin) என்பவர், “ராபியாவை நான் தான் கொன்றேன்” என, பொலிஸில் சரணடைந்துள்ளார். அப்போது, “ராபியாவும் நானும் காதலித்து வந்தோம். சமீபத்தில், வீட்டுக்குத் தெரியாமல், திருமணமும் செய்துகொண்டோம். காதலி தான் முக்கியம் என்று அவளைக் கரம் பிடித்தேன். என்னுடைய வீட்டாரைக்கூட மறந்து விட்டு, அவளது நலன்தான் முக்கியம் என்று அவளுடன் இருந்தேன். அரசாங்க பணியில் சேர்ந்தாள்; எங்கள் வாழ்க்கை நன்றாகவே இருந்தது.

 சில வாரங்களாக, அவளது நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிந்தது. பேச்சிலும் நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்படவே, எனது சந்தேகத்தை அவளிடம் கேட்டேன். எங்கள் இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது. அவளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரிந்தது. அதை விட்டுவிடச்சொல்லி பலமுறை சொன்னேன்; அவள் கேட்கவில்லை. அவளைக் கொலை செய்ய முடிவெடுத்தேன். ஓகஸ்ட் 26ஆம் திகதியன்று, வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த அவளை ஃபரிதாபாத்தின் சூரஜ்குண்ட் பகுதிக்கு அழைத்துச் சென்றேன். 

spacer.png

அங்கேயும் எங்களுக்குள் சண்டை வந்தது; வார்த்தை மோதல்கள் அதிகரித்தது. கோபம் அதிகரிக்கவே அவளை நான் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டேன்” என்று கூறியுள்ளார். இக்கொலை பற்றி விவரித்த போது, நிஜாமுதீன் முகம் உக்கிரமாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எனினும், நிஜாமுதீன் கூறுவதை மறுத்துள்ள அப்பெண்ணின் குடும்பத்தினர், திருமணம் செய்துகொண்டதாகக் கூறுகின்றனர். எங்கள் மகள் ஒருபோதும் அப்படிச் செய்பவள் அல்ல. இது திட்டமிட்ட கொலை. எங்கள்   மகளை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று, தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதாகவும், அதை மறைக்கவே, தங்கள் மகள் மீது நிஜாமுதீன் அபாண்டமாக குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 நிஜாமுதீனுக்கும் சபியாவுக்கும் திருமணம் ஆனதாகக் கூறும் பொலிஸார், அது சம்பந்தமான ஆவணத்தை இதுவரை வெளியிடவில்லை. ஒருவேளை திருமணம் நடந்தது உண்மை என்றால் கூட, காதலித்த பெண்ணின் மார்பை அறுக்கும் அளவுக்கா ஒருவன் துணிவான் என கேள்வி எழுப்பியுள்ளனர். 

இது இவ்வாறு இருக்க, ராபியாவின் தந்தை கூறும் விடயம் வேறு திசைக்கு அழைத்துச் செல்கின்றது.  “என் மகள் ஒருமுறை, தான் பணியாற்றும் அலுவலகத்தில், ஒரு ரகசிய அறை இருப்பதாகவும் அதில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இப்படி, அந்த அறைக்கு இலஞ்சப் பணமாக தினமும் 4 இலட்சம் வரை வரும் காட்சியை தான் கண்டதாகவும் கூறினார். இந்த நிலையில்தான், அவர் மர்மமான முறையில் இறந்துபோயுள்ளார்” எனக் கூறியுள்ளார். திருமண உறவு, ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் இரகசியப் பணவறை, காவல்துறையின் அலட்சியம் போன்றவை, இந்த வழக்கின் மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது.

spacer.png

 “எங்கள் மகளின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுள்ளன. அவளின் உடலில் அடித்துத் துன்புறுத்தியதற்கான காயங்கள் ஏராளமாக உள்ளன. அதேபோல், அவளுடைய அந்தரங்க உறுப்பும் காமுகர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காவல்துறையினர், குற்றவாளி நிஜாமுதீன் மட்டும்தான். அவர் சரணடைந்துவிட்டார் என்கின்றனர். 

இக் கொலையில் தொடர்புடைய பல குற்றவாளிகள் இன்னும் வெளியில் சுதந்திரமாக இருக்கின்றனர். எனவே, காவல்துறையினர் முறையாக விசாரணை மேற்கொண்டு உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்”  என வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில், இக் கொலை தொடர்பாக நியாயமான முறையில் விசாரித்து, கொலையின் உண்மைப் பின்னணியை வெளிக்கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் நீதிகேட்டு போராடி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 

இவற்றைத் தடுப்பதற்கு ஆரம்பக்கல்வி முதலே, பெண்கள் சமத்துவம், மரியாதை, பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும், வெட்கமில்லாமல் பொதுவெளியில் ஆதரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படவேண்டும். அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும் என்பது பகிரங்கமான உண்மை ஆகும்.

#JusticeForRabiya

 

https://chakkaram.com/2021/09/30/மர்மங்களுடன்-மரணித்த-ரா/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இதில் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

இருக்கும்போல்தான் தெரிகிறது. பணவறை ரகசியத்தை அறிந்ததும்  உயரதிகாரிகளே தமது தவறைமறைக்கப் படுகொலைசெய்யக் கொடுத்துவிடார்கள் போலவே தெரிகிறது. அத்தோடு நிற்காது சட்டத்தைகாக்க முனைபவர்களாதலால் பொய்ச்சாட்சியையும் உருவாக்கிவிட்டார்கள். வேறுமாநிலப் புலனாய்வுகளிடம் கொடுத்து விசாரிக்கும் முறையில் விசாரித்தால் உண்மை வெளிப்படலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

நிட்சயமாய் அப் பெண்ணின் உயரதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள் ...காவல் அதிகாரிகளே இப்படியான கொடுமையான வேலையை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ...அதுவும் அப் பெண்ணின் இரு மார்பகங்களையும் வெட்டி எறிந்து உள்ளனர் ...ஒரு பெண்ணாக இருந்து கொண்டு எங்களோடு மோதுகின்றாயா என கேவலங் கெட்டு  ஆண்மைத் தனத்தை காட்டியுள்ளனர் ...வாழ்க இந்தியா 
 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2021 at 17:52, கிருபன் said:

இவற்றைத் தடுப்பதற்கு ஆரம்பக்கல்வி முதலே, பெண்கள் சமத்துவம், மரியாதை, பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும், வெட்கமில்லாமல் பொதுவெளியில் ஆதரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படவேண்டும். அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும் என்பது பகிரங்கமான உண்மை ஆகும்.

இவற்றை தடுப்பது என்பதைவிட நாங்கள் இந்த செயல்களை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஆதரிக்கிறோம் என்பது பற்றி BBC தமிழில் வந்த கட்டுரையின் சில கருத்துகளையும் அதன் இணைப்பையும் இணைக்கிறேன்.. இந்த கட்டுரை வந்த ஆண்டு 2018 ஆனாலும் இன்னமும் மாற்றங்கள் வரவில்லை என்பதைவிட அதிகமாகிக்கொண்டுதான் போகிறது.. 

கட்டுரை
பாலியல் வன்முறைகளுக்கு ஒரு சமுதாயம் துணை போகிறதா? பாலியல் வன்முறை செய்தவர் மீது ஏதாவது ஒரு விதத்தில் அனுதாபம் காட்டுகிறோமா? பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர் மீதே குற்றம் சுமத்த முயல்கிறோமா?
இந்த கேள்விகளுக்கு உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்? உண்மையான பதில் ஆம் என்பதாகவே இருக்கும்.

'நேண்டோஸ் சிக்கன்' விளம்பரம்
"எங்கள் இடுப்பையோ மார்பகத்தையோ அல்லது தொடைகளையோ தொட்டால் நாங்கள் கவலைப்படமாட்டோம். நேண்டோஸின் உணவை நீங்கள் விரும்பியவாறு உங்கள் கைகளால் ருசிக்கலாம்."
'நேண்டோஸ் சிக்கன்' என்ற உணவு குறித்து வந்த விளம்பரம் இது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த விளம்பரம் இந்திய பத்திரிகைகளில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியது.

நிர்வாணமான ஒரு பெண் தனது கால்களை அகல விரித்துக் கொண்டு இருப்பது போல் வடிவமைக்கப்பட்ட ஒரு சிகரெட் ஆஷ்ட்ரே-வும், விமர்சனங்களையும் கிளப்பியது.
இது அமேசான் இந்தியாவின் வலைதளத்தில் வெளியான ஒரு விளம்பரம்.
பாலியல் வன்முறையைப் பற்றி பேசத் தொடங்கிய நான் விளம்பரங்களைப் பற்றி பேசுவது ஏன் என்ற கேள்வி எழுகிறதா?
'ரேப் கல்சர்' அதாவது 'வல்லுறவு கலாசாரம்' என்பது உலகில் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் வெவ்வேறு விதங்களில் தொடர்கிறது.

இந்த வார்த்தையை கேட்பதற்கே விபரீதமாக தோன்றுகிறதா? கலாசாரம் என்ற சொல் பொதுவாக புனிதமானதாக, நேர்மறையான விஷயமாக பார்க்கப்படுவதால் 'ரேப் கல்சர்' என்ற வார்த்தை வித்தியாசமானதாக தோன்றும். ஆனால் கலாசாரம் என்ற வார்த்தை அழகையோ அல்லது செழுமையானதையோ மட்டுமே குறிப்பதில்லை. பல்வேறு வகையிலான மரபுகள் மற்றும் பழக்கங்களையும் குறிப்பிடுவது.
சமூகத்தில் ஒரு பிரிவை அழுத்தி, நசுக்கிவிட்டு, மற்றொன்றை முன்னோக்கி நகர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சியும், அதற்கான மனோபாவமும், நடைமுறையையும் உள்ளடக்கியதே கலாசாரம். கலாசாரத்திலேயே பாலியல் வன்முறை கலாசாரமும் மறைந்துள்ளது. அதன் நுட்பமான விஷயம் பல நேரங்களில் நமது கோணங்களை மாற்றி பார்வையை குறுக்கி, விஷயத்தையே திசை திருப்பிவிடுகிறது. ஆனால் சில நேரங்களில், இந்த இழிந்த நோக்கம் நமக்கு வெளிப்படையாக தெரிந்துவிடும்.

ரேப் கல்சர் என்றால் என்ன?
*         'ரேப் கல்சர்' என்ற வார்த்தை 1975-ம் ஆண்டு அமெரிக்காவில் தயாரான ஒரு திரைப்படத்தின் பெயராக வைக்கப்பட்டது. அமெரிக்காவில் எழுபதுகளில் தொடங்கிய பெண்ணிய இயக்கம், அந்த வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியது.
*         'ரேப் கல்சர்' என்பது, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணையே, அதற்கு பொறுப்பாக்கும் நடைமுறையை குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல்.
*         'ரேப் கல்சர்' என்ற குறியீடு, பாலியல் வன்முறை செய்தவரை தண்டிப்பதற்கு பதிலாக, சிறு அளவிலான தண்டனையை கொடுத்து குற்றத்தை சிறிய தவறாக காண்பிக்க செய்யப்படும் முயற்சி.

'ரேப் கல்சர்' உள்ள நாடுகளில், பாலியல் வன்முறை நடந்ததை நிரூபிப்பது கடினம்.
இந்தியாவில் அனைவரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போராடுவதாக சொல்லிக் கொண்டாலும் அது மேலோட்டமான பார்வை. உண்மையில் இந்த விவகாரத்தில் தவறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதாகவும், பெண்களின் பாதுகாப்புக்காக போராடுவதாகவும் கூறுவது எந்த அளவு உண்மை?

இந்த கருத்துகளை முற்றிலுமே நிராகரிக்க முடியாவிட்டாலும், இதன் மறுபக்கம் சற்று கறைபடிந்ததாக இருப்பதையும் மறந்துவிடக்கூடாது. பெண்களுக்காக பச்சாதாப்ப்பட்டுக் கொண்டே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல பாதிக்கப்பட்டவர்களையே பதம் பார்க்கும் போக்கு இல்லை என்றும் மறுத்துவிடமுடியாது.
இதுபோன்ற நாமும் எதாவது ஒருவிதத்தில் பாலியல் வன்முறை செய்பவர்களுக்கு ஆதரவு கொடுத்து, 'ரேப் கல்சர்' என்ற மோசமான விஷயத்திற்கு துணை நிற்கும் தவறை செய்கிறோம்.

'ரேப் கல்சர்' என்பதை வெவ்வேறு உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
1. பாலியல் பலாத்காரத்தை இயல்பாக்குவது
- ஆண்களின் மனோபாவத்தை எப்படி மாற்றுவது? (Men will be men)
- கூடப் பிறந்தவனோட என்ன போட்டி? பொம்பளை புள்ளைன்னா கொஞ்சம் அடக்கமா இருக்கனும். எட்டு மணிக்குள் வீட்டுக்கு வந்திரு. (பெற்றோர் மகனுக்கும் மகளுக்கும் இடையில் வித்தியாசம் காட்டுவது தவறாக பார்க்கப்படுவதில்லை)
- உலகத்திலேயே உனக்கு மட்டும்தான் இப்படி நடக்குதா என்ன? இந்த மாதிரி சின்னச் சின்ன விசயங்களை எல்லாம் பெரிசுபடுத்தக்கூடாது என்று அறிவுறுத்துவது.
- பலாத்காரம் என்ற வார்த்தைகளுக்கு பதிலாக ஊடகங்களே 'சீண்டல்' மற்றும் 'பாலியல் துஷ்பிரயோகம்' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, தவறின் வீரியத்தை குறைப்பது.
- பலாத்காரம் தொடர்பான நகைச்சுவைகளும், மீம்சுகளையும் உருவாக்குவது. இந்த விஷயங்களைப் பற்றி பேசி சிரித்து, எள்ளி நகையாடுவது.
-திரைப்படங்கள், பாடல்கள், பாப் இசைகளில் பெண்களை சீண்டுவதை காதலாக சித்தரிப்பது, பெண்களின் உடலை 'பாலியல் பொருளாக' காண்பிப்பது.

2. பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்குவது
- பெண் சிறிய/கவர்ச்சியான உடை அணிந்திருந்தார்.
- இரவு நேரத்தில் வெளியே போனது ஏன்?
- மது அருந்தியிருந்தார், இளைஞர்களுடன் இருந்தார்.
- அவர் பாலியல் விருப்பம் கொண்டவர், நிறைய ஆண் நண்பர்கள் உண்டு.
-ஆண்களுடன் சிரித்து சிரித்து பேசுவார், அனைவருடனும் மிகுந்த நட்பு பாராட்டுவார்.
- இளைஞர்களுடன் இரவுநேர கேளிக்கை விடுதிக்கு சென்றாள். அவள் கண்டிப்பாக ஆண்களுக்கு 'சமிக்ஞை' கொடுத்திருப்பார்.

இது போன்ற சொல்லாடல்கள் பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்குகிறவை.

3. பாதிக்கப்பட்டவர் மீது சந்தேகம்
- இருவரும் நட்புடன் இருந்தநிலையில், அவன் எப்படி இவளை பாலியல் பலாத்காரம் செய்திருப்பான்? (அனுமதி/விருப்பம் என்பது பற்றிய புரிதல் இல்லாமல் பேசுவது)
- கணவன் எப்படி மனைவியை பலாத்காரம் செய்வான்? திருமணமாகிவிட்டால், தம்பதிகளுக்கிடையே பாலியல் உறவு என்பது இயல்பானதுதானே? மனைவியின் கடமை கணவனின் பாலியல் விருப்பங்களை பூர்த்தி செய்வதுதானே? இல்லாவிட்டால் அவன் வேறு தவறான வழிக்கு போய்விடுவான் (திருமண வல்லுறவு/பாலியல் உறவில் பெண்ணின் அனுமதி தேவை இல்லை என்று கருதுவது/கணவனின் விருப்பதை மனைவி கட்டாயம் பூர்த்தி செய்யவேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மை)
- அவலட்சணம்/வயது முதிர்ந்தவள்/பருமனாய் இருப்பவள். இவளை யார் பலாத்காரம் செய்வார்கள்? (பாலியல் பலாத்காரத்தை பெண்ணின் உருவத்துடனும், வயதுடனும் தொடர்புபடுத்தி, பாதிக்கப்பட்டவர்களை வார்த்தைகளால் மேலும் துன்புறுத்துவது)
- அவள் உடலில் காயமோ, ரத்தமோ வரவில்லை. பலாத்காரம் செய்தது உண்மை என்றால் அவள் ஏன் எதிர்க்கவில்லை?
- உடனே ஏன் புகார் செய்யவில்லை? இவ்வளவு காலம் கழித்து தற்போது பெரிதுபடுத்துவது ஏன்?
- கவன ஈர்ப்புக்காக குற்றம் சாட்டுகிறார். மற்றவர்களின் அனுதாபத்தை பெறும் முயற்சி என விமர்சிப்பது.
- ஏற்கனவே ஒருவர் மீது இவள் புகார் சொல்லியிருந்தாளே? அவளுக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்குமா?

இப்படியெல்லாம் எழுப்பப்படும் கேள்விகள் பாதிக்கப்பட்டவர் மீது சந்தேகத்தை எழுப்புகிறவை.

4. ப்ரோ கலாசாரம்
'ப்ரோ கல்சர்' என்பது ஒரு ஆண், மற்ற ஆணை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவது. பரஸ்பரம் ஒருவரை மற்றவர் காப்பாற்றும் முயற்சியில் வெகுளியாக காட்டிக் கொள்வது.
'அட, எவ்வளவு நல்ல பையன் இவன் போய் அப்படி செய்திருக்கவே மாட்டான், அவனைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்…' என்பது போன்ற ஆதரவு வார்த்தைகளை சொல்வது.
'ப்ரோ கல்சர்' என்பதற்கு சிறந்த உதாரணம் #NotAllMen என்ற ஹேஷ்டேக்.
#MeeToo என்ற ஹேஷ் டேக்கைப் பயன்படுத்தி தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேசினால், #NotAllMen என்ற ஹேஷ் டேக்கைப் பயன்படுத்தி பெண்களின் இயக்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஆண்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் எழும் மிகப்பெரிய கேள்வி என்றால், பெண்களின் புகார்களை, தங்கள் மீதான புகார்களாக ஆண்கள் ஏன் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள்? ஆண்களின் ஒரு பெரிய பிரிவு, இத்தகைய குற்றங்களில் சில நேரங்களில் ஈடுபடுவது இயல்பானது என்பதால், அவர்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு வழங்க விரும்புகிறார்கள்.
அதுமட்டுமல்ல, பொதுவாக பாலியல் பலாத்கார புகார்களில் 90% பொய்யானது என்றும், பெண்களை சீண்டுவதாக கூறப்படும் புகார்களில் 99% தவறானது என்று ஆண்கள் கூறுகின்றனர். இதுபோன்ற தரவுகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதே தெரிவதில்லை.

5.சில்மிஷ பேச்சு
"டேய், அவ சூப்பர் பிகரு, ஒரு நாளைக்காவது அவளோட இருக்கனும்…"
என்பது போன்ற எண்ணங்கள் ஆண்களின் அந்தரங்க உரையாடல்களில் இடம்பெறுவது இயல்பானதாக கருதப்படுகிறது.
மூடப்பட்ட அறைக்குள் வெளிவரும் ஆண்களின் இதுபோன்ற பாலியல் விருப்பங்கள் பேச்சாக வெளிப்படுவது தவறானது என்று பெரும்பாலும் சுட்டிக்காட்டப்படுவதில்லை. இது இளமையின் இயல்பான வேகம் என்று கருதப்படுகிறது. இது போன்ற உரையாடல்களை பெண்களிடம் வெளிப்படையாக பேசாவிட்டாலும், பெண்களுடன் இயல்பாக பேசும்போது இந்த எண்ணம் மனதில் தோன்றுவது தவறாக பார்க்கப்படுவதில்லை.

6. பெண்களின் சுயசார்பு பற்றிய அச்சம்
- பொருளாதார மற்றும் சமூகரீதியாக பெண்களின் தற்சார்பு ஆண்களுக்கு அச்சத்தைக் கொடுக்கிறது.
- பெண்களை வீட்டிற்குள்ளே இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது, வெளியுலகத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை மறுப்பது.
- 'கற்பு' என்பதை பெண்களின் தலையாய கடமை என்றும் கலாசாரம் என்றும் திணிப்பது. பாலியல் விருப்பங்கள் பெண்களுக்கு இருக்கக்கூடாது, அதை கட்டுப்படுத்த வேண்டும்; ஆனால் திருமணமானால் கணவனுக்கு பாலியல் விருப்பம் இருந்தால் அதற்கு ஈடு கொடுக்க வேண்டும் (பெண்ணுக்கு இயல்பிலேயே விருப்பம் இல்லாவிட்டாலும்கூட) என்று திணிக்க முயற்சிப்பது.
- காதலை வெளிப்படுத்துவது பெண்ணாக இருந்தால் அவளை தரக்குறைவாக நினைப்பது, பண்பற்றவள் என்று முத்திரை குத்துவது, வில்லியாக சித்தரிப்பது.
- மதம், கலாசாரம், பரம்பரை, குடும்பம் என அனைத்தையும் காப்பாற்றும் பொறுப்பு பெண்ணுடையது என்ற பெயரில் அவர்களை கட்டுப்படுத்துவது.

7. பொறுப்பில் இருப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு
- நிர்பயா கூட்டு பாலுறவு பலாத்கார வழக்கில், குற்றவாளிகளின் வழக்குரைஞர் ஏ.பி.சிங்கின் கருத்து இது: "எனது மகளோ அல்லது சகோதரியோ திருமணத்திற்கு முன் யாருடனாவது தொடர்பு வைத்து களங்கம் ஏற்படுத்துமாறு நடந்தால், அவரை எங்களுடைய பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, குடும்பத்தினர் அனைவரின் முன்னால் பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவேன்."
- நிர்பயா வழக்கில் மற்றொரு குற்றவாளியின் வழக்குரைஞர் எம்.எல் ஷர்மா சொன்னது என்ன தெரியுமா? "பெண்கள் வேறொரு நபருடன் இரவு 7:30 அல்லது 8:30 மணிக்கு மேல் வீட்டில் இருந்து கிளம்பினால், அவர்களிடையில் இருக்கும் உறவு எப்படிப்பட்டது? மன்னிக்கவும், நமது சமூகத்தில் இதை ஏற்றுக் கொள்ளமுடியாது. நமது கலாசாரம் மிகவும் சிறந்தது. அதில் பெண்களுக்கு எந்தவித இடமும் இல்லை''.
- 'ஆணும்-பெண்ணும் ஒன்றாக சுற்றுகிறார்கள். பிறகு ஏன் தேவையில்லாமல் பலாத்கார குற்றச்சட்டுக்களை பெண்கள் முன்வைக்கிறார்கள்?' என்ற பொன் மொழியை அண்மையில் உதிர்த்தார் ஹரியாணா முதலமைச்சர் மனோஹர் லால் கட்டர்.

8. பழிவாங்குவதற்காக பலாத்காரம்
பழிவாங்குவதற்காக பலாத்காரம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது. பலாத்காரத்தை அவமானமாக கருதுவது, சம்பந்தப்பட்ட குடும்பத்தை சமூகமே புறக்கணிப்பது, குற்றவாளிகளை தண்டிப்பதில் அலட்சியம், அரசியல் சமூக காரணங்களுக்காக பலாத்காரம் மற்றும் போரின் போது பழிவாங்குவதற்காக பெண்களை பலாத்காரம் செய்வது என பலாத்காரத்திற்கான காரணங்களின் பட்டியல் நீள்கிறது.
பாலியல் பலாத்கார குற்றசாட்டு சுமத்தப்பட்டவர்கள் நாட்டின் உயர் பதவிகளில் இருப்பதும், ஏன் அவர்கள் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படும் நிலையும் இருக்கிறது. மற்றொரு புறம், மதகுருக்களின் பின்னால் மக்கள் கண்மூடித்தனமான பக்தியுடன் சென்றால், அங்கும் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இவை சிலருக்கு பெரியதாகவோ, பலருக்கு சிறிதாகவோ தெரியலாம். ஏனெனில் இது தினசரி நாம் கேட்டுக் கடக்கும் சம்பவங்களாக மாறிவிட்டன.
ஆனால் உண்மையிலேயே இந்த 'பாலியல் பலாத்கார கலாசாரம்' என்பதை கட்டமைத்து, பராமரிப்பதில் நாம் அனைவருக்கும் பங்கு உள்ளது.


https://www.google.com.au/amp/s/www.bbc.com/tamil/india-46403657.amp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.