Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுமியின் சாபம் - Geethappriyan Karthikeyan Vasudevan

Featured Replies

May be an illustration

1876- 1878 ஆண்டுகளில் மதுரை மிக மோசமான பஞ்சத்தை சந்தித்தது, எங்கள் பாட்டி வீடு 19 கீழ் அனுமந்தராயன் கோவில் தெருவில் 137 ஆம் வயதில் இன்னும் உள்ளது, இந்த தெருவில் மாற்றம் காணாத பழைய வீடென இது மட்டுமே எஞ்சியுள்ளது,
இந்த வீட்டிற்கு ஒரு துயரமான சாபம் உண்டு ,அது ஒரு சிறுமியின் சாபம்., நவராத்திரி சமயத்தில் பட்டுப்பாவாடை அணிந்து அக்கம் பக்கம் சுற்றி விளையாடிய சிறுமி அன்று நெல் களஞ்சியத்தின் கதவு திறந்து வைத்திருப்பதைக் கண்டதும் அதன் உள்ளே உள்ள உயரமான பானைகளில் ஒன்றில் சென்று ஒளிந்து கொள்கிறாள்,பின்னர் உறங்கியும் போகிறாள்.
 
மகாபஞ்சத்தின் எதிரொலியால் மக்கள் அந்தந்த பருவங்களில் என்ன உணவு தானியங்கள் கிடைக்கிறதோ? அதை வாங்கி சேர்த்து வைக்கத் துவங்கியிருந்த காலம் அது, அதற்கேற்ப குயவர்களிடம் சொல்லி இது போல பெரிய வஞ்சிகளை செய்து வீட்டின் தென்மேற்கிலோ வடமேற்கிலோ நிரந்தரமாக பதித்து வைத்து அதில் தானியங்களை நிரப்பி பல மாதங்கள் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சமையலறையில் வைத்து தினப்படி சமையல் உபயோகத்திற்கு நெல்லை குத்தி பொங்கியிருக்கின்றனர்.
 
எங்கள் தாத்தாவின் அப்பா சோழவந்தானில் இருந்து மதுரை டவுனுக்குள் வந்து இந்த திண்ணை வைத்த காரை வீட்டை கட்டி ஐந்து சிறிய போர்ஷன்கள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார், அவரின் மகள் தான் இந்த பட்டுப்பாவாடைச் சிறுமி ,அன்று சோழவந்தானில் இருந்து குத்தகைக்காரர் மாட்டு வண்டியில் நெல் கொண்டு வந்து படியளந்திருக்கிறார் , அவர் வந்து நிரப்புவதற்கு தோதாக வாசல் பக்கம் இருந்த தானிய கிடங்கு கதவை அன்று திறந்து வைத்திருக்கிறார் தாத்தா, நெல் படியளப்பவர், உமிக்கு தப்புவதற்காக கண்கள் மட்டும் சிறிதாக தெரியும் படி காதுகளைக்கூட துண்டால் இறுக்க கட்டிக்கொண்டு நெல்லை மரக்காலில் அளந்து கொட்டி நிரப்பியிருக்கிறார், காதுகளை துண்டால் மூடியிருந்தபடியால் அவருக்கு சிறுமியின் வீறிடல் கேட்கவில்லை, காலையில் பால் குடித்து விளையாடப் போனச் சிறுமியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, ஐநூறு அடியில் உள்ள மீனாட்சி கோயில் பிரகாரம், திருப்பாவை மண்டபம், நன்மை தருவார் கோவில், ஆடிவீதி,வளையல்காரத்தெரு, ஆயிரங்கால் மண்டபம், முழுக்க சல்லடை போட்டு தேடிவிட்டனர், கிடைக்கவில்லை, யாராவது பிள்ளை பிடிப்பவர்கள் பிடித்துப் போயிருக்க வேண்டும், அல்லது வடக்கே இருந்து இராமேஸ்வரம் வந்தவர்கள் சிறுமியை கண்டெடுத்து தூக்கிப் போயிருக்க வேண்டும் என நினைத்திருந்திருக்கின்றனர்.
 
இந்த நான்கு பானைகளில் இருந்த நெல்லை வடமிருந்து இடமாக எடுத்தாண்டு வந்திருக்கிறார் தாத்தாவின் அம்மா, அந்த மூன்று பானைகள் தீர ஒன்பது மாதங்களாக , இந்த நான்காவது பானையில் இருந்து நெல்லை எடுத்தாளத் துவங்குகிறார், இந்த வஞ்சியில் இருந்து நெல் தீர மூன்று மாதங்கள் ஆகிவிடுகிறது, அடுத்த நவராத்திரியே வந்து விடுகிறது, கடும் மழையால் நெல்லில் ஈரம் பாய்ந்ததால் பத்து படி நெல் மீதம் இருப்பதை என் தாத்தா சிறுவன் அவரை உள்ளே இறக்கி அள்ளித் தரச் சொல்லியிருக்கிறார், அவர் அள்ளுகையில் நெல் உமி வாடையுடன் சேர்ந்து கெட்ட நாற்றம் கிளர்ந்து எழ,அவர் மேலே ஏறி வந்துவிடுகிறார், இவர்கள் ஏதோ பெருச்சாளி இறந்திருக்கலாம் என்று நினைத்து சுத்தம் செய்ய ஆளை வரவழத்து எஞ்சிய நெல்லை வார, அங்கே பட்டுப்பாவாடையில் சுற்றியபடி எலும்புக்கூட்டை வெளியே எடுத்திருக்கின்றனர், எங்கள் பாட்டிக்கு மயக்கமாகி விழுந்துவிட்டார்,ஆணோ பெண்ணோ புத்திர சோகம் மிகவும் கொடியது, ஏற்கனவே நடைபிணமாக இருந்தவர்கள் நொடிந்து தான் போயினர்,கன்னியா சிறுமியாக இறந்து போனதால் எந்த காரியமும் கிடையாது, என்றாலும் அந்த மூச்சு முட்டி இறந்த மரணம் இவர்களை காலத்துக்கும் நெஞ்சில் ரணமாக வேதனைப்படுத்தியிருக்கிறது.
 
எங்கள் பாட்டி இந்த அறைக்கு மேலே மச்சில் வைத்து தன் கையில் கிடத்தி இரவு தூங்க வைக்கையில் எத்தனையோ கதை சொன்னாலும், இந்த துயரக்கதையை மட்டும் சொன்னதில்லை,அவர் பார்க்காத ஒரு நாத்தனாருக்கு அவருக்கு எப்போதும் ஒரு வாஞ்சையும் பயமும் இருந்தது, வீட்டில் எந்த சுபகாரியம் நடந்தாலுமே அவர் ஒரு ஐந்து வயது சிறுமிக்கு பட்டுப்பாவாடை தைத்து அணிய வைத்து இலையில் அமர்ந்து சாப்பிடச் செய்வார், எங்கள் அத்தை பாட்டி இப்படி கன்னியா சிறுமியாக இறந்து போனதால் அவருக்கு எப்போதும் நவராத்திரிக்கு கொலு வைக்கத் தோன்றியதில்லை.
 
மதுரையில் கொலு மிகவும் விசேஷமானது, அந்நாட்களில் பதினோரு படிகள் கொலு வைத்த வீடுகள் எல்லாம் பார்த்துள்ளேன், எங்கள் ஸ்டோரில் மீனாட்சி அம்மன் கோவிலில் குருக்களாக இருந்த ஐந்து குடும்பங்கள் வசித்தனர், அவர்கள் வீட்டில் நவராத்திரி அப்படி களைகட்டும், எங்கள் வீட்டில் கொலு வைக்காதது ஏன் என எத்தனை முறை கேட்டும் அவருக்கு இந்த உண்மையைச் சொல்ல வார்த்தைகளில்லை, எங்கள் பாட்டி தாத்தாவுக்கு என் அம்மா மூன்றாம் குழந்தை, அவருக்கு ஒரு மூத்த சகோதரி , ஒரு சகோதரர் உண்டு, இம்மூவருக்கு முன் ஏழு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன, இராமேசுவரம் சென்று திலஹோமம் செய்து தான் அதன் பின் பிறந்த குழந்தைகள் பிழைத்து நின்றிருக்கின்றனர்.
பின்னாட்களில் அந்த நெல்வஞ்சியை துக்க மிகுதியால் இடித்துப்போட்டு விட்டார் என் தாத்தா , அந்த இடத்தில் முன்பு 85 ஆம் ஆண்டு வரை ஒரு லாண்டரி கடை வாடகைக்கு விடப்பட்டு இருந்தது, பின்னாளில் அக்கடையை பெரும் தொகை தந்து காலி செய்த என் சிறிய தாய்மாமா டெய்லர் கடை துவங்கினார், அது செழிக்கவில்லை,
அதனை ஒட்டி இருந்த கடைப்பரப்பில் மதுரையின் பெரிய custom order டெய்லர் கடை இயங்குகிறது, என் முதல் தாய்மாமா மற்றும் நடு தாய்மாமாவிடமிருந்து மற்றவர்கள் சம்மதம் இல்லாமல் வாங்கிய பாகங்கள் அந்த சிறுமி சாபம் கொண்ட நெல்வஞ்சி அனைத்தும் இன்று அந்த மேற்படியான் வசம் போய்விட்டது,
என் சிறிய தாய் மாமாஅருமையானகதைசொல்லி, அவர் ஆல்பாஸ் காலம் துவங்குவதற்கு முந்தைய எட்டாம் வகுப்பு,எந்த கதையை அவர் மதுரை பாஷையில் சொன்னாலும் அப்படி கேட்கலாம், அக்கம் பக்கம் கூட்டம் கேட்கிறதென்றால் அவருக்கு குஷி அதிகமாகிவிடும், இன்னும் சத்தமாக கதை சொல்வார், அடுத்த முறை பார்க்கையில் அவர் முன்பு சொன்ன அதே கதையை அதே போல துவக்கி அதே போலவே முடிப்பார், ஒரு வார்த்தை அதிகம் ஒரு வார்த்தை குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.
 
அவர் சொன்ன கதைகள் ஒவ்வொன்றாக எழுதி ஆவணப்படுத்த எண்ணமுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

ஆழத்தில் புதைந்த சிறுமி........ஆழ்ந்த சோகம் கொண்ட கதை.....!

நன்றி நிழலி .....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.