Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பலாந்துவையில் நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பலாந்துவையில் நடந்தது என்ன?

என்.ஜீவேந்திரன்

பாணந்துறை அம்பலாந்துவை பிரதேசத்தில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைகளின் விளைவாக முஸ்லிம், சிங்கள மக்களிடையே பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டார். உண்மையில் இப்பிரச்சினைக்கான காரணமும் அதற்கான பின்னணியும் என்ன? இப்பிரதேசவாசிகளின் கருத்துப்படி கிராமத்தில் மதுபானம் விற்கின்ற தனிநபர் ஒருவரினால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பிரச்சினை இனக்கலவரமாக மாறியதாக கூறப்படுகின்றது. இதுபற்றி அம்மக்கள் கூறும்போது....

??z-v?? ?? & A?-?-??-x?? Q??-?-??]: "பிரச்சினை நடக்குது என்று எல்லோரும் அந்த வீட்டுல நின்றோம். அவ்வாறு நிற்கும்போது எமக்கு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. யாராவது வந்தால்தான் நாய் குரைக்கும். எல்லோரும் அமைதியாக இருக்குமாறு சொன்னார்கள். அப்போது வெடிச்சத்தம் இரண்டு கேட்டது. பின்னர் சலாமின் வீட்டை உடைக்கும் சத்தமும் கேட்டது."

பாத்திமா சர்மிளா - அம்பலாந்துவை கிராமவாசி

"அப்ப இந்த பக்கம் 45, 50 பேர் வந்து அடிக்கத் தொடங்கிட்டாங்க. அப்ப நாங்க உள்ளே இருந்தோம். எங்களுக்கு பயம், உள்ளே வந்து அடிப்பாங்க என்று. நாங்க எல்லோரும் கத்தினோம்."

???-?z A?? & A?-?-??-x?? Q??-?-??]

"சமி என்பவன்தான் முக்கியமாக இவ்விடயத்தில் செயற்பட்டான். மற்றது இராணுவத்தில் இருந்து பாய்ந்து வந்த பிரியந்த. அவனிடம் ஆயுதம் இருக்கிறது. அத்தோடு, இங்கு அவனுக்கு ஒரு குழு இருக்கின்றது. அவர்களை வைத்துக்கொண்டு இரவில் துப்பாக்கி எடுத்து வந்து சுட்டுவிட்டு, கடையில் உள்ள பெண்களின் தலைக்கு துப்பாக்கி வைத்து பயமுறுத்தி கப்பம் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். பிறகு வலான, பள்ளிமுனையில் இருக்கின்ற புத்தர் சிலையை உடைக்கிறார்கள் என்று கூறி இனவாதத்தை தூண்டி ஆள் சேர்த்தார்கள். ஆள் சேர்த்து வந்துதான் இப்படி நடந்தது."

பாதிக்கப்பட்ட பிரதேசவாசிகள் கிராமத்தில் மதுபானம் விற்கின்ற தனிநபர் ஒருவரினால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பிரச்சினை இனக்கலவரமாக மாறியதாக கூறுகின்ற அதேவேளை, பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுமித் எதிரிசிங்க இது தொடர்பில் இவ்வாறு கூறுகிறார்.

_?z Gv-?-][P & ]??h ??? Av-P? & ??n?-x??

"மது விற்பனை செய்யும் சிங்கள குழுவுடன் மேலும் இரண்டு, மூன்று பேர் இங்கு வந்து எட்டு வீடுகளைத் தாக்கி கொள்ளையடித்து ரி - 56 ரக துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். அதனால் ஒருவர் இறந்துள்ளார். அதன் பிறகு, அன்றைய இரவுப் பிரச்சினை யுத்தம் போல மாறி நிலைமை மோசமாகியுள்ளது.

இக்கலவரத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டும் மறுநாள் மேலும் ஒருவர் மரணமடைந்தும் நால்வர் காயமடைந்தும் 12 வீடுகள் உடைக்கப்பட்டும் காணப்படுகின்ற இந்த சூழலானது அப்பிரதேச மக்களிடையே பெரும் நம்பிக்கையீனத்தையும் பதற்றத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படாமை, தாம் மீண்டும் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. "

பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் கருத்துகள் இவ்வாறிருக்க, இக்கிராமத்தில் வாழுகின்ற சிங்கள மக்களிடம் நாம் இப்பிரச்சினை தொடர்பில் வினவியபோது, தம்மால் நிறுவப்பட்ட புத்தர் சிலை ஒன்றின் காரணமாகவே இப்பிரச்சினை ஏற்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பில் பெயர் குறிப்பிட விரும்பாத அப்பகுதியில் வாழுகின்ற சிங்களவர்கள் சிலர் கருத்து தெரிவிக்கும்போது,

??-?u-\-??] 1 & A?-?-??-x??

"இதற்கு காரணம் அங்கு புத்தர் சிலையொன்று இருப்பதே. அது புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. முஸ்லிம் மக்கள் அங்கு மாட்டிறைச்சி கழிவுகளையும் குப்பைகளையும் போடுவார்கள். அக்கழிவுகளை நாய்கள் இழுத்து வருகின்றன. இதனால் இந்தப் பாதையில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகின்றது. அதனால்தான் அவ்விடத்தில் நாம் புத்தர் சிலையை அமைத்தோம். அதனை முஸ்லிம்கள் விரும்பவில்லை."

??-?u-\-??] 2 & A?-?-??-x??

"அவர்களுக்கு குப்பை போட இடம் இல்லாதபடியால் தானே இங்கு போடுகிறார்கள். குப்பை போடுவதைத் தடுக்கவே புத்தர் சிலையை நாம் அமைத்தோம். எனினும், முஸ்லிம்கள் இதனை மறுப்பதோடு அங்கு புத்தர் சிலை இருப்பதனால் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என அவர்கள் தெரிவிக்கின்றார்கள்."

??-?z ??? & A?-?-??-x??

"அதில் அவ்வாறு ஒன்றுமில்லை. எந்தவிதமானதொரு பிரச்சினையுமில்லை. உதாரணமாக இங்க தொட்டவத்தை பகுதியில் ஒரு சிலை வைத்திருக்கிறார்கள். அதனால் எந்தவிதமான விபரீதமுமில்லை. நாம் ஐக்கியத்தோடு வாழ்கிறோம். அதனை வைப்பதால் எங்களுக்குப் பிரச்சினையில்லை."

மேலும், பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் சுமித் எதிரிசிங்க சிலை விவகாரத்தை வைத்து சிலர் இதனை இனப்பிரச்சினையாக்க முற்படுகின்றனர் என்றும் இந்த புத்தர் சிலையுடன் தொடர்புபடுத்தி மேலும் வெளியூர் சிலருடன் இணைந்து இப்பகுதியில் குழப்பத்தை ஏ1ற்படுத்தும் நோக்கில் இப்பிரச்சினையை தோற்றுவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாம் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இனங்களுக்கிடையே சுமூகநிலையை ஏற்படுத்துவதற்காக தாம் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், தெற்கில் சிறுபான்மையாக வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் மீது அவ்வப்போது தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பது வெளிப்படையானதாகும். மாவனெல்லை, மாளிகாவத்தை, பம்பேகமை, பேருவலை, தர்கா நகர், தெரணியகலை, இரத்தினபுரி, மத்துகமை போன்ற பல பகுதிகளில் தமிழ், முஸ்லிம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை யாரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பதும் இவ்வாறான சம்பவங்கள் மேலும் நிகழாமல் தடுத்து நிறுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் பாதிக்கப்பட்ட மக்களதும் அவதானிகளதும் குற்றச்சாட்டாக இருக்கின்றது.

எனவே, இவ்வாறான சம்பவங்களுக்கு நீதி வழங்கப்படுவதன் ஊடாகவே, பேச்சளவில் மட்டுமல்லாது நடைமுறையிலும் ஜனநாயகம் உள்ளதாக கருத முடியும் என்பது உண்மையாகும். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படுவார்கள் என அரசாங்கம் கூறுகின்ற போதிலும் ஒருபோதும் அவ்வாறு நடைபெறுவதில்லை என்பதே உண்மை. முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இது தொடர்பில் அரசுக்கு எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கின்றார்கள் என்பதும் முக்கியமான கேள்வியாகும் !

-தினக்குரல்

this is how every where problem starts....its not matter who started this or how its starts.. Basically they are all racist ( sinhalease ).. so ..the only thing they need is a "small ' chance to kill and attack all the minorities...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.