Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரான இந்திய வம்சாவளிப் பெண்; யார் இந்த அனிதா ஆனந்த்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடா நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கனடா நாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் ஆவார்.

Anita Anand
 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 54 வயது பெண்மணியான அனிதா ஆனந்த், கனடாவின் ஒக்வில்லே பகுதியில் நடைபெற்ற தேர்தலில் 40 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்த நிலையில், கனடாவின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த சஜ்ஜன், ராணுவத்தில் பாலியல் தொடர்பான பிரச்னைகளைக் கையாள்வது குறித்து ஏற்பட்ட சர்ச்சையில் வேறு துறைக்கு மாற்றப்பட, அவருக்கு பதிலாக அனிதா ஆனந்த் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.

கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ரைடோ ஹாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ஜெனரல் மேரிமே சைமன், அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

2019-ம் ஆண்டில் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக நியமிக்கப்பட்ட அனிதா ஆனந்த், கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதில் சிறந்து விளங்கியதற்காக கனட அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவால் பாராட்டப்பட்டார். தற்போது முக்கியமான துறையான பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 1990-ம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றிய கேம்ப்பெல்லுக்குப் பிறகு, பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்கும் இரண்டாவது பெண் இவர்.

 

தமிழ் - பஞ்சாபி பாரம்பர்யத்தைச் சேர்ந்த ஆனந்த், குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பில் இளங்கலைப் பட்டமும் (ஹானர்ஸ்), ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நீதித்துறையில் இளங்கலைப் பட்டமும் (ஹானர்ஸ்), டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு மற்றும் டொரான்டோ பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பும் முடித்துள்ளார். வழக்கறிஞராக, ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியுள்ளார். அவர் டொரான்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகவும், சட்டக் கல்வியாளராகவும் இருந்துள்ளார். இதனையடுத்து 2019-ம் ஆண்டில், கனடாவின் `ராயல் சொசைட்டி' என்னும் தனியார் மற்றும் பொது அமைப்புகளுடன் தொடர்புடைய நிர்வாகத்தில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக `யுவான் அல்லேர்' என்ற பதக்கத்தை அவருக்கு வழங்கியது.

  • கருத்துக்கள உறவுகள்

அனிதா ஆனந்த் நோவா ஸ்கோடியாவின் கென்ட்வில்லில் பிறந்தார். அவளுடைய பெற்றோர் இருவரும் மருத்துவர்கள்; அவரது தாயார் சரோஜ் டி. ராம் (இப்போது இறந்துவிட்டார்) ஒரு மயக்க மருந்து நிபுணராக இருந்தார், மேலும் அவரது தந்தை எஸ்.வி. (ஆண்டி) ஆனந்த் ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர். இவரது தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் தாயார் பஞ்சாபைச் சேர்ந்தவர். ஆனந்துக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்: டொராண்டோவில் வேலைவாய்ப்பு வழக்கறிஞராக இருக்கும் கீதா ஆனந்த் மற்றும் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளரான சோனியா ஆனந்த்.

Anita Anand was born in Kentville, Nova Scotia. Her parents were both physicians; her mother Saroj D. Ram (now deceased) was an anesthesiologist, and her father S.V. (Andy) Anand was a general surgeon. Her father was from Tamil Nadu and her mother was from Punjab.[3] Anand has two sisters: Gita Anand, who is an employment lawyer in Toronto, and Sonia Anand, who is a medical doctor and researcher at McMaster University.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.