Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலியான அரசியலமைப்பை தோற்கடித்தல் -விக்டர் ஐவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போலியான அரசியலமைப்பை தோற்கடித்தல் -விக்டர் ஐவன்

 

 

 
ஜனாதிபதிகோத்தாபய ரா ஜபக்சவினால்  நியமிக்கப்பட்ட விசேட குழுவொன்றின் ஊடாக புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு  அவர் மேற்கொண்ட முயற்சியானது அரசியலமைப்பு உருவாக்கத்தில் பொதுமக்களின் பங்களிப்பு தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கு முரணானது ம் மீறுவதுமாகும்.
victor-ivan-300x175.jpg
அரசியலமைப்பு என்பது பிரஜைகளின் மக்களின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் சொத்துக்கான உரிமைகளை நிர்ணயிக்கும் மிக உயர்ந்த சட்டமாகவும், அரச ஆட்சியின் கட்டமைப்பு மற்றும் செயற் பாடுகளை நிறுவும் மிகவும் புனிதமான சட்ட ஆவணமாகவும் கருதப்படலாம்.
மத்தியகால கால உலகத்தை நவீன உலகிற்கு மாற்றியதன் மூலம், இறைமையின் கருத் தீடின்  தோற்றம் மன்னரிடம்  அல்லாமல் , மக்களிடம் இருந்தது. அரச அதிகாரம் எப்போதும் மக்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்ற கோட்பாட்டின் தோற்றத்திற்கு இது உத்வேகத்தை அளித்துள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் , குடியரசின் இறைமை மக்களிடமே உள்ளது. இது பிரிக்க முடியாத சக்தி. அரசின் அதிகாரம் மட்டுமின்றி அரசியலமைப்புச் சட்டமும் மக்களுக்குச் சொந்தமான ஒன்றாகவே கருதப்படுகிறது. செம்மையான  தாராளவாத விளக்கத்தின்படி, “அரசியலமைப்பு என்பது எவ்வாறு ஆட்சி செய்யப்பட வேண்டும் என்பதில் ஆட்சியாளர்களுடன் சமூகம் செய்துகொண்ட ஒப்பந்தமாக ஒப்புக் கொள்ளப்படுகிறது”.
அரசியலமைப்பு உருவாக்கம்
constuti.jpg
அரசியலமைப்பை உருவாக்கும் நடைமுறை கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மாறி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில படித்த உயரடுக்கினரிடமும், சட்டவாக் கமென்ற  பிரதிநிதிகளிடமும் இருந்த அரசியலமைப்புச் சட்டம் இப்போது வழக்கற்றுப் போய்விட்டது என்றே சொல்லலாம். அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளும் பங்கேற்பு முறையானது 21 ஆம் நூற்றாண்டில் அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதிரியாக மாறியுள்ளது. எனவே, பங்கேற்பு அரசியலமைப்பை உருவாக்குவது குறித்து பல்வேறு நாடுகளில் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச உடன்படிக்கைகளாலும் அரசியலமைப்பு உருவாக்கத்தில் மக்கள் தீவிரமாக பங்கேற்கும் உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  உரை அதிகாரம் 12 ஜூலை 1996 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையின் 25 வது பிரிவில் “பொது விவகாரங்களில் பங்கேற்கும் மக்களின் உரிமை, “அரசியலமைப்பு உருவாக்கும் செயற் பாட்டில் பங்கேற்க மக்களுக்கு உரிமை உண்டு.இந்த உரிமை சர்வதேச சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய  ராஜபக்ச வினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவொன்றின் ஊடாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியானது அரசியலமைப்பு உருவாக்கத்தில் பொதுமக்களின் பங்கேற்பு தொடர்பான ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கு முரணானது மற்றும் மீறுவதாகும். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவது என்பது மக்களின் பிரச்சினை என்பதைவிட அரசாங்கத்துக்குரியது என்று அரசாங்கம் நம்புவதாகத் தெரிகிறது. அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத முயற்சியானது மறைமுகமான மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் போலியான செயலாகவே பார்க்க முடியும்.
இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு தேவை
இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். ஜனநாயக அர்த்தத்தில், தற்போதைய அரசியலமைப்பு மோசமானது மட்டுமல்லாமல் , தொடர்ந்து சிதைக்கப்படுவதால், சிதைந்து, அதன் சட்டபூர்வமான தன்மையையும் செயல்திறனையும் இழந்துள்ளது.
குறிப்பாக, இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க தேவையான அரசியலமைப்பு கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கும் திறன் அதற்கு இல்லை. எனவே எமக்கு புதிய அரசியலமைப்பு தேவை. ஆனால், அது தன்னிச்சையான முறையில் அல்ல, மக்களின் தீவிரமான  பங்களிப்புடன் ஜனநாயக முறையில் உருவாக்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பை உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் இலங்கையில் எமக்கு ஒரு சிறப்பான  வரலாறு இல்லை என்றே கூற வேண்டும். நாம் வருந்தவும் வெட்கப்படவும் வேண்டிய விரும்பத்தகாத வரலாறு இதுவாகும்.. கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சியின் நடைமுறை அனுபவத்திலிருந்து பார்க்கும்போது, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி நல்ல ஜனநாயக நோக்கத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது. இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு தேவைப்படுவது ஆட்சியாளரின் சர்வாதிகார அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கல்ல, மாறாக இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிப்பதற்கும் சட்டத்தின் ஆட்சியுடன் நிலையான அபிவிருத்தியை பேணுவதற்குமாகும்.
தற்போதைய நெருக்கடி
எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடியின் தன்மையை சுருக்கமாகபின்வருமாறு  கூறலாம்: முழு சமூக முறைமையும் முற்றிலும் சரிந்த நிலையில் உள்ளது. சமூக அமைப்பில் இருக்க வேண்டிய ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மொத்தமாக சிதைந்து போகும் நிலையில் உள்ளது.
இனக்குழுக்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான மோதல்கள் வன்முறைப் போராட்டங்களாக மாறி, சமூக ஒழுங்கின் கட்டமைப்பை சிதைத்துவிட்டன. நாட்டின் உழைக்கும் மக்கள் (கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள்), தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்கள் அன்றாட வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் வர்த்தகத்தை பராமரிக்க முடியாமல் மிகவும் கடினமான மற்றும் குழப்பமான நிலையில் உள்ளனர். அரசும் அதன் நிறு வனங்களின்  முறைமைகளும்  (பாராளு மன்றம், நிறைவேற்று மற்றும் நீதித்துறை) அதிகபட்ச சிதைவு, சீரழிவு மற்றும் வங்குரோத்து நிலையை நோக்கி செல்லும் நிலைமை யில் உள்ளன. 1978 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஆளுங்கட்சியின் பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமையும், அரசின் அலுவல்களை நடத்துவதற்குப் போதிய வருமானம் இல்லாத பிரச்சனைக்குக் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளதாகக் கூறலாம்.
இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடியை வெற்றிகொள்ளவதற்கு  தேவையான அரசியலமைப்பு கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை வகுக்க வேண்டியதன் அவசியத்தை, புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்கு அவசியமான பல காரணங்களுக்கிடையில் மிக முக்கியமான காரணம் எனக் கூறலாம். இந்த வரலாற்றுப் பணியை மக்களைத் தவிரமரபு  ரீதியான அரசியல்வாதிகளால் சாதிக்க முடியாது.
இந்த அளவு பெரும் அழிவுக்குள் நாட்டைஅமிழ்த்துவதற்கான முக்கிய பொறுப்பு மரபுரீதியான அரசியல்வாதிகளையே சாரும். இலங்கையின் சீரழிவும் தோல்வியும் அவர்களின் தோல்வியின் இறுதி முடிவாகக் கருதலாம். நாட்டின் தோல்விக்குக் காரணமான அரசியல்வாதிகள் குழுவிடமிருந்து இலங்கையை வெற்றிகரமான நாடாக மாற்றுவதற்கான உறுதியான அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?
சட்டத்துறையில் பாராளுமன்றம்  வெளிப்படுத்திய தோல்வியின் அளவு மிகப்பெரியது. உதாரணமாக, பிரதேச சபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதன் மூலம், உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டது. அது நாட்டிற்குச் செய்த தேவையற்ற செலவுகளின் அளவில்  மிகப்பெரியது. சட்டத் துறையில் சட்டவாக்கத்துறையினால்  வெளிப்படுத்தப்படும் தோல்வியின் அளவை இது பிரதிபலிக்கிறது.
ஒரு பங்கேற்பு அரசியலமைப்பு
மேற்குறிப்பிடப்பட் டதன்   அடிப்படையில், ஒவ்வொரு முனையிலும், இலங்கை இப்போது மிகவும் கடுமையா ன மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவது நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால போக்கை தீர்மானிக்க எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதலாம். இரகசியமாக வரையப்பட்ட ஆவணத்தைபாரா ளுமன்றத்தில் சமர்ப்பித்து, வெறுமனே கையை உயர்த்த செய்வதன் மூலம் இவ்வளவு தீவிரமான பொறுப்பை இலகுவான காரியமாகக் கருத முடியாது. இது அபத்தமான செயலாகவே கருதப்படலாம். இதுபோன்ற விட யங்கள் ஏற்கனவே உள்ள பேரழிவை அதிகரிக்க வழிவகுக்கும்.
எனவே, நாட்டின் பொது நலனுக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள போலியான அரசியலமைப்புச் சட்டத்தை தோற்கடிக்க வேண்டும். அதேநேரம், நாடு எதிர்நோக்கும் நெருக்கடியை எளிதாக்கும் பங்கேற்பு அரசியலமைப்பை வென்றெடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது போன்ற விசேட  தருணங்களில்தான் அரசு நிர்வாகம் தொடர்பான விட யங்களில் மக்கள் நேரடியாக ஈடுபடுகிறார்கள். ஏனைய  நேரங்களில் அவை பிரதிநிதித்துவ ஜனநாயக முறைக்கு இணங்கி செயற் படுகின்றன. ஒரு புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வது, ஜனநாயக நடைமுறையில் அனைத்து சமூகங்களும் நேரடியாகத் தலையிடும் வாய்ப்பாகக் கருதலாம். அந்த பணி முடிந்ததும், பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமை  நேரடி ஜனநாயகக் கூறுகளை உள்ளடக்கியதாக மீள் வடிவமைப்பு செய்யப்பட்டால், ஆட்கள்  புதிய முறைமையை செயற் பட அனுமதிக்கஇடமளித்து  வெளியேறுவார்கள்.
உத்தேச புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கூறிய செயற்பாடுகள், மக்கள் தமது இறைமையை முழுமையாகப் பிரயோகிக்கக் கிடைத்த வாய்ப்பாகக் குறிப்பிடலாம். ஒரு ஜனநாயக அரசியலமைப்பு என்பது இனி ஒரு ஜனநாயக ஆட்சி முறையை மட்டும் நிறுவும் ஒரு முறையல்ல , மாறாக மக்கள் தீவிரமாக ஈடுபடும் ஒரு ஜனநாயக செயல்முறைக்குள் உருவாக்கப்பட வேண்டிய ஒருமுறைமையாகும்
அரசியலமைப்பும்  நெருக்கடியும்
உத்தேச புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் பின்பற்றும் போலியான அணுகுமுறையைத் தோற்கடிப்பதைத் தவிர, இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க.நாட்டின் பொது நலனுக்காக, தேவையான அரசியலமைப்புக் கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துவது சாத்தியமாகும் வகையில், அதை உருவாக்குவதற்கான ஒரு பங்கேற்பு திட்டத்தை வென்றெடுப்பது  அவசியம்.
அரசியலமைப்புக்கும் நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்வது அவசியம். இரசாயன உரங்களுக்கு தன்னிச்சையான தடை, வடக்கில் யுத்தத்தின் போது கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீள வழங்காமை போன்ற செயற் பாடுகளை களை இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் மேற்கொள்ள முடியாது. காரணம், ஆட்சியாளர்களின் தேர்தல் வெற்றிகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், இரு நாடுகளின்  அரசியல் சாசனத்திலும் ஆட்சியாளர்கள் இத்தகைய தன்னிச்சையான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் போதிய கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளன.
இந்த ஆவணத்தின் நோக்கம், அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பின் தன்னிச்சையான சட்டத்தை எதிர்ப்பதும், அதை முறியடித்து புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு பங்கேற்பு கட்டமைப்பை வென்றெடுப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஆகும்.
வெகுஜன போராட்ட நிகழ்ச்சித்திட்டம்
அரசாங்கத்தின் போலியான அரசியலமைப்பு வேலைத்திட்டத்தை தோற்கடிப்பதற்கும் நாட்டுக்கான பங்கேற்பு அரசியலமைப்பை வென்றெடுப்பதற்கும் நாட்டிற்கு ஒரு பாரிய போராட்ட வேலைத்திட்டம் தேவை. அதே சமயம், இந்த இரண்டு நோக்கங்களையும் பாரியளவில் பொதுமக்களின்   பங்கேற்புடன் அடையும் நோக்கத்துடன் ஒரு பொது நலன் சார்ந்த  மனுவும்  முன்வைக்கப்பட வேண்டும்.
உத்தேச புதிய அரசியலமைப்பை உருவாக்கும் அரசாங்கத்தின் போலித் திட்டத்திற்கு எதிரான உத்தரவைப் பெறுவதையும், பங்கேற்பு அரசியலமைப்பின் சட்டத்தை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களைப் பெறுவதையும் பொதுநலன்  வழக்கு  நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும், இந்த பொது நலன்  வழக்கு அனைத்து இன, மத, பாலின, கலாசார மற்றும் ஒடுக்கப்பட்ட குழுக்கள், அனைத்து தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிற்சங்கங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகர்கள் ஆகியோரின் அபிலாஷைகளை தனித்தனியாகவும் கூட்டாகவும் பிரதிபலிக்க வேண்டும்.
அனைத்து இன, மத, பாலின மற்றும் கலாச்சார குழுக்கள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள், மீன்பிடி மற்றும் ஏனைய  பொது அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், வணிக மற்றும் வர்த்தக  நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த அடிப்படை பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் உறுதியாக கேட்டுக்கொள்கிறோம்.
பி னான்சியல் டைம்ஸ்
link-financialtimes
Defeating the spurious constitution

Thinakkural.lk

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2021 at 12:12, nunavilan said:

போலியான அரசியலமைப்பை தோற்கடித்தல் -விக்டர் ஐவன்


link-financialtimes
Defeating the spurious constitution

இணைப்புக்கு நன்றி!


18, 20 என்று வரும்போது எதிர்த்திருந்தால் அரசியற்கட்சிகள் விழிப்படையாவிடினும் மக்கள் விழிப்படைந்திருப்பர். ஆனால் கொலைக்களமாகியிருக்கும். இனியும் அப்படியே. கோத்தாவிடம் பொல்லைக்கொடுத்த மக்களுக்கு கோத்தா பொல்லால் எறிய நேரமெடுக்காது. ஏனென்றால் மகிந்தகாலத்தில் ஆர்பாட்டங்கள் கொலையில் முடிந்துள்ளன. இங்கே வட-கிழக்கில் மட்டுமல்ல முழு இலங்கைத்தீவிலும் படைகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு முகாமிருத்தலுக்குக் கொண்டுவருவதோடு, பயங்கரவாதத்தடைச் சட்டமும் நீக்கப்படுதலே தீவின் சனநாயக நகர்வுக்கான முதற்படியாக இருக்கும். அதன்வழியாக மட்டுமே இக்கட்டுரை சுட்டும் மக்களின் பங்கேற்புடனான அரசியல் வரைபு சாத்தியமாகும். இல்லையேல் ஞானசாரதேர செயலணிகள் பெருகும். இலங்கை அனைத்துலகிலிருந்து அந்நியமாகத் தோல்வியடையும். இனி இலங்கைத்தீவில் முழுமக்களையும் இணைக்காத எந்தவொரு அரசியல் திட்டமும் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதை அண்மைய வீழ்ச்சிநிலை காட்டுகிறது. வாக்கரசியலில் வென்றுவந்து ருவன்வெலிசாயாவில் நவீன துட்டகாமினியாகிய நான் என்ற யுத்தவெற்றிவாதப் பிரகடணம் செய்ததுபோல் இனிசெய்ய முடியாதென்பதும் மக்களின் பிரதிபலிப்புமட்டுமல்ல கூட்டுக் கட்சிகளின் கூவலும் காட்டிநிற்கிறது. பசிவந்திடப் பத்தும் பறக்குமா அல்லது சிங்கள இனவாதப்பசியூடாகவே தொடர்ந்தும் அணுகுவதா என்பதை சிங்கள மக்கள் சிந்தித்தால் சிறீலங்கா-தமிழீழம் என்ற இருநாடாக இல்லாவிடினும் இருதேசங்களாக, இலங்கை ஐக்கிய ஒன்றிய சமஷ்டிக் குடியராசாகச் சிங்களவரும் தமிழ்பேசும் மக்களும்  தம்மைத் தாமாளும் அரசியல் அலகாக மாற்றப்படுமாயின் உலகில் முன்னணி நாடாக இருதசாப்தங்களில் இலங்கைத்தீவு மாறும். 

பகிர்வுக்கு நன்றி நுணா. மோசமான மொழிபெயர்ப்பு என்றாலும் கூட, இதை மொழிபெயர்த்து தமிழில் பதிவிட்ட தினக்குரலுக்கும் நன்றி.

சிங்கள புத்திசீவிகளில் முக்கியமானவர் என்று போற்றப்படும் இந்த விக்டர் ஐவன் கூட, மகிந்தவின் முதலாவது ஆட்சியின் போது, இனப்படுகொலை மற்றும் இரசாயன ஆயுதங்கள் பாவித்து அடைந்த வெற்றியை போற்றி மகிந்த புகழ் பாடியவர். இனப்படுகொலையொன்றின் மூலம் ஈட்டப்படும் அமைதி என்பது ஒரு போதும் சாத்தியமாகாது என்ற விடயத்தைக் கூட உணராமல் தன் சிங்கள புத்தியை காட்டியவர். இப்ப கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்கின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.