Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

 
மூலம்: 'விடுதலைப்புலிகள்', ஒக்டோபர்-நவம்பர் 1999, பக்கம் 14-15
மூல எழுத்தாளர்: வே.பாலகுமாரன்

தட்டச்சு: நன்னிச் சோழன், 22/02/2022

 

 

 "வணங்காமண்"

 

ஓயாத அலைகள்‌ மூன்றின்‌ இரண்டாம்‌ நாளன்றே நெடுங்கேணியும்‌, ஒதியமலைப் பகுதிகளும்‌ மீட்கப்பட்டுவிட்டன என்கிற செய்தி "இன்பத்‌ தேனாக" எல்லோர்‌ காதுகளிலும்‌ பாய்ந்தது. தாயக மண்மீட்பு வரலாற்றுக்குள்ளே “ஒரு வரலாற்று மீட்பாக” இன்று மணலாற்றின்‌ குறிப்பிடத்தக்க பகுதி மீட்கப்பட்டமை சிறப்பிடம்‌ பெறுகின்றது. தமிழீழ தாயகத்தை துண்டாட முயன்ற சிங்களத்தின்‌ வாள் இப்போது சிதைக்கப்பட்டுவிட்டது. இப்போது சிங்களவரின்‌ குடியேற்ற வல்வளைப்பு எல்லை முன்னைய நிலையான பதிவில்‌ குளம்(பதவியா) எனும்‌ எமது பாரம்பரிய மண்ணுக்கு பின்நகர்த்துவிட்டது. “முன்னைய நிலை” என்பது சிங்களக்‌ குடியேற்றங்களை செயற்கையாகத்‌ திட்டமிட்டு உருவாக்கும்‌ பணியின்‌ தந்தையான டி.எஸ்‌. சேனநாயக்கா 1945களில்‌ திருமலையில்‌ சிங்களவரைக்‌ குடியேற்ற பிள்ளையார்‌ சுழிபோட்ட காலத்தினைக்‌ குறிக்கும்‌. அன்றிலிருந்து 1980 வரை பதவியாவாக மாற்றப்பட்ட பதவில்குளமே சிங்கள வல்வளைப்பின் முன்னரங்க எல்லை. பதிவில்‌ குளத்தை அண்டிப்‌ பாய்ந்த பெரியாறு மாஓயாவாகியது. பதவியா என்பது சிங்களப்‌ பேரினவாத இன அழிப்பின்‌ வடிவமான அரசியல்‌ படைத்துறைக் குடியிருப்புச்‌ சின்னமாகவே இன்றளவும்‌ உள்ளது. அவசரவசரமாக அண்மையில்‌ ஓடித்தப்பிய படையினர் பதவியாவில்‌ தளமமைக்க முயல்வதும்‌ இதனொரு வெளிப்பாடே. 1982 ஆம்‌ ஆண்டின்‌ பின்‌ தமிழன்‌ இதயத்துள்‌ செருகப்பட்ட குத்திட்டியாக பதவியா நகர்ந்து மணலாற்றை வெலிஓயா ஆக்கிய கதை நாமறிந்த கதை. இப்போது பதவியாவிலிருத்து மதவாச்சி வரை புதிய எல்லை போட சிங்களம்‌ முயல்வது புதிய கதை.

நாமறிந்த கதைகளுக்குப்‌ பின்னே இன்னொரு கதையுமுள்ளது. சிங்களத்தை மாறி, மாறி ஆளும்‌ கட்சிகளுக்குப்‌ பின்னே என்றும்‌ மாறாத ஆட்சியாளராக சிங்களத்தின்‌ தலைவிதியை தீர்மானிக்கும்‌ சிங்கள உயர்‌ மேட்டுக்குடியின்‌ மேலாண்‌மைமிக்க குழுவின் கதையிது. இக்கதையினை முதலிருந்து அறிய 1983 யூலைக்கு முன்‌-பின்னான காலத்திற்கு நாம்‌ செல்லவேண்டும்‌. தமிழர்‌ தாயகத்தைச்‌ சிதைக்கும்‌ எண்ணமும்‌ அதன்‌ செயல்‌ வடிவங்களும்‌ 1930 களிலிருந்தே தொடங்கப்பட்டது. அதன்‌ இன்னொரு வடிவம் 1983ன் பின்னே விரிவாகியது. ஆசியாவிலே இந்த நூற்றாண்டிலே வரலாற்றுத்‌ திருப்புமுனையாகிவிட்ட நிகழ்வுகளில்‌ ஒன்றாக, அமெரிக்க "ரைம்‌ஸ்" ஏட்டில்‌ (ஆகஸ்ட்‌ 23 - 30) கணிக்கப்பட்ட 1983 சூலை திருநெல்வேலி தாக்குதலின்‌ பின்னே, தமிழர்‌ தாயகத்தை துண்டாடிச்‌ சிதைக்கும்‌ எண்ணம்‌ திரைமறைவிலே வீறுபெற்றது. மணலாற்றுப்‌ பகுதியே இதன்‌ இலக்காகியது.

முதற்கட்டமாக கென்‌ற், டொலர்‌ பண்ணைகளிலே சிறைச்சாலை அதிகாரிகள்‌ மேற்பார்வையிலே சிங்களக் கைதிகள்‌, காடையர்‌ கூட்டம்‌ குடியேற்றப்பட்டனர்‌. 1993 யூலை இன அழிப்பிலே பங்குபற்றிய குண்டரும்‌ இதனுள்‌ அடக்கம்‌.

இக்குடியேற்றங்களையும்‌, இதற்கு முன்னரே மிக நீண்டகாலமாக இருந்த கொக்கிளாய்‌, நாயாறு மீனவக்‌ குடியேற்‌றங்களையும் விரட்டியடிப்பதற்கு தமிழ்மக்கள்‌ பெரும்‌ அவாவுற்றிருந்தனர்‌. புலிகள் சிறிய கரந்தடிப்படையாகவிருந்த காலத்திலிருந்தே மணலாற்றில் வெளியார் கால்படுவதை தடுக்கவே முயன்று வந்துள்ளனர். (இது தொடர்பில்‌ சிங்களக்குடியேறிகட்‌கு விளக்கமளிக்கும்‌ துண்டுவெளியீடுகளை தொடக்கத்தில்‌ புலிகள்‌ வெளியிட்டுள்ளனர். 100க்கும்‌ மேற்பட்ட தாக்குதல்கள்‌ இதயபூமியில்‌ புலிகளால்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன), இவற்றையெல்லாம்‌ உற்றுநோக்கிய சிங்கள ஆளும்‌ வகுப்பு காமினியின்‌ காணி வளர்ச்சி, மகாவலி அமைச்சிலே 1944 நவம்பர்‌, டிசெம்பர்‌ மாதங்களிலே அடிக்கடி கூடி கமுக்க நாசகாரத் திட்டங்களை வகுத்தது. இவ்வாறான கூட்டமொன்றிலே சிங்கள அதிகாரியொருவரால்‌ கூறப்பட்ட கூற்று இன்று எவ்வளவு பொருத்தமாகின்றது என்பதைப்‌ பாருங்கள்‌. "பதவியா வீழ்வதென்பது உரோசாச்‌ செடியொன்றின்‌றின் வாடிவிட்ட கடைசி மலரின்‌ கடைசி இதழும் உதிர்வதற்குச் சமம்" (பக்கம்‌ 189. நூல்‌: இறைமையுள்ள நாடொன்றிற்காக, மலிங்க குணரட்ணவினால்‌ 1985களில்‌ எழுதப்பட்டு 1988 முதல் பதிப்பைக் கண்ட சிங்களவரின்‌ "மெயின்காம்ஃவ்" ஆகிலிட்ட இந்நூல்‌ மிக அண்மையில்‌ மீண்டும்‌ வெகு சிறப்பாக வெளியிடப்பட்டமை கவனிக்கத்தக்கது.) .

இன்றைக்கும்‌ பொருத்தமான இன்னொரு காட்சிக்கு நகர்வோம்‌. மணலாற்றிலிருந்து விரட்டப்பட்ட சிங்களக்‌ குடியேற்றவாசிகள்‌ பதவியாவில்‌ குழுமி நிற்கின்றனர். நிலைமைகளை உற்றுநோக்க கொழும்பிலிருந்து வந்தோரும்‌ அங்கு நின்றனர்‌. இவர்கள் முன் பதவியா ராஜமகா விகாரையின் தலைமை பிக்கு ரத்னசார தேரர்‌ பெரும்‌ கோபத்தோடு கொந்தளிக்கிறார்‌. "பயந்து ஓடாதீர்கள். துணிவு கொள்ளுங்கள்‌, துட்டகாமினியின்‌ மரபில்‌ வந்தவர்களல்லவா நீங்கள்‌. அன்று மகாசங்கப்‌ பிக்குகள்‌ கூட அங்கிகளைக்‌ களைந்து தமிழருக்கு எதிரான போரில்‌ துட்டகைமுனு மன்னனோடு இணையவில்லையா? புத்தம்‌, சங்கம்‌, தர்மம்‌ சார்பாக வேண்டுறேன்‌. இது எங்கள்‌ நிலம்‌. இதை எவ்வாறேனும்‌ தக்க வைக்க வேண்டும்‌. எமது  தலைவிதியே இந்நிலத்தில்‌ தானுள்ளது. நாமே எல்லைக்காவற்படை. உங்கள்‌ நிலத்திற்கு உங்களை நான்‌ கூட்டிச்செல்வேன்‌." இக்கூற்று கூறப்பட்ட நாள் 1984 டிசம்பர்‌ 07. இவ்வாறாகத்தான்‌ தமிழர்‌ தாயகத்தின்‌ இதயப்பகுதி பதவியாவுக்கு அப்பாலும்‌ இப்பாலுமாக திருமலை, முல்லை, வவுனியா மாவட்டங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வெலிஓயாவாகி - பதவியா பிரதேச செயலர்‌ பிரிவாக - கடல்‌ எல்லையில்லாத அனுராதபுர மாவட்டத்திற்கு கொக்கிளாய்‌ கடல்‌ எல்லையாக - இப்போது இருமலை மாவட்ட புவிசார்‌ குடித்தொகையை முற்றிலும்‌ சிங்களமயமாக்குவதற்காக திருமலை மாவட்டத்தோடு மீண்டும்‌  இணைக்கப்பட்ட கதை நடந்து முடிந்துள்ளது.

இது எவ்வாறு நடந்தேறியது? வேதனைமிக்க வரலாற்றின்‌ பக்கங்களை மீண்டும்‌ புரட்டுவோம்‌. சிங்களவருக்காக வாக்களிக்கப்பட்ட பூமிக்காக கோட்டைக்கேணி, தென்னமரவடி, அமரிவயல்‌, புல்மோட்டை என்பன ஏப்பம்‌ விடப்பட்டன. ஒரு நாளிலே வவுனியா, முல்லை மாவட்டங்களைச் சேர்ந்த 2100ற்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் சிங்களப் படைத்துறையால் விரட்டப்பட்ட நாள் 1984 டிசம்பர்‌ 24. அச்சுறுத்தப்பட்டும்‌, வெட்டியும்‌, சுட்டும்‌ கொன்றும்‌, எவ்வித முன்னறிவிப்பும்‌ இன்றி உடுத்த உடையோடு - உண்ட உணவை உண்ணவியாமலும்‌ உடமைகளை எடுக்க விடாமலும்‌ எம்மக்கள் விரட்டப்பட்டனர். ஒதியமலையில்‌ ஒரு இரவில்‌ 22 போ்‌ பலியெடுக்கப்பட்டனர்‌. முல்லைத்தீவு முகாமிலிருந்து ஜீப் வண்டியொன்றில்‌ சென்ற படையினர்‌ அளம்பில்‌, செம்மலை, குமுழமுனை மக்களை விரட்டினர். அன்று நடந்த அவலத்தை எம்மக்கள் சொல்லிச்சொல்லி மாய்கின்றார்கள்‌. இவ்வாறு முல்லை மாவட்டத்‌தின இரு முதன்மை கிராமசேவகர்‌ பிரிவில்‌ கொக்குத்தொடுவாயின்‌ 10 சிற்றூர்களைச் சேர்ந்த 1300 குடும்பங்கள், கொக்கிளாயின் 3 சிற்றூர்களைச் சேர்ந்த 300 குடும்பங்கள், வவுனியா வடக்கின் 05 சிற்றூர்களைச் சேர்ந்த 300 குடும்பங்கள்‌ கதியற்றதாயின. எற்கனவே திருமலை மாவட்டத்‌திலிருந்து விரட்டப்பட்டு கால்‌நடையாக வந்து குடியேறியவர்‌ போலவே இவர்களும்‌ முல்லையின்‌ பலவிடங்களிலும்‌ சிதறிப்பரவினர்‌. மூவாயிரம் சிங்களக்‌ குடும்பங்கள்‌ உடனடியாகவே எம்மக்களின்‌ வாழ்விடங்களில்‌ குடியேற்றப்பட்டனர்‌; இத்தோடு 1965களில் தமிழ்த்‌ தலைவர்கள்‌ மத்திய வகுப்பாருக்கு 25 ஏக்கர்‌ பண்ணைகள்‌ தொட்டு 1000 ஏக்கர்‌ வரையிலான பண்ணைகள்‌ அமைக்க வழங்கப்பட்ட நிலங்களும்‌ பறிமுதலாகின. 1983 யூலை அழிப்பால்‌ பாதிக்கப்பட்டு இங்கு வேலைசெய்த மலையகத்‌ தமிழ்மக்கள்‌ உள்ளிட்டவரும்‌ விரட்டப்பட்டனர்‌. இவ்வாறாக தமிழ் மக்கள்‌ அழிவிலே வெலிஒயா கட்டியெழுப்பப்பட்டது.

நிலப்பறிப்பின்‌ அடுத்த கட்டம்‌ 198 ஏப்ரல்‌ 15ம்‌ திகதிய அரசிதழ்(வர்த்தமானி) அறிவித்தலின்‌ சிறப்பு வலயச் சாற்றாணையோடு தொடங்கப்பட்டது. காணி, மகாவலி அமைச்சின்‌ கபடமிது. இதன்படி மகாவலி 11 வலயமாக்க இப்பகுதிகள்‌ கையகப்படுத்‌தப்பட்டதாக தெரிவிக்கபபட்டது. மேலோட்டமாக இதன்‌ எல்லைகளைப்‌ பார்த்தாலே தமிழீழ தாயகத்தை கற்பனை பூமியாக்க இதைவிடச்‌ சிறந்தவழி இருந்திருக்க முடியாது என்பது எவர்க்கும்‌ புலப்படும். தண்ணீரூற்றுச் சந்தி ஒரு மையப்புள்ளி, பதவியா கெப்பிட்டிகொல்லாவை வீதியின்‌ மையம்‌ இன்னொரு புள்ளி. குமுழமுனை, நாயாறு, கொக்குளாய், புல்மோட்டை என நீண்டு கோட்டைக்கேணி, அமரிவயல்‌, தென்னமரவடி, கெப்பிட்டிகொல்லாவை உள்ளடக்கும் இவ்வலயம்‌, இன்னொரு புள்ளியாக நெடுங்கேணி சந்தியைக் கொள்ளும்‌. மொத்தமாக இணைத்துக்‌ கூட்டி கணக்குப்‌ பார்த்தால்‌ 42 சிற்றூர்களைச் சேர்த்து 14 ஆயிரத்திற்கும்‌ மேற்பட்ட குடும்பங்கள்‌ (ஏற்கனவே இடம்பெயர்ந்தும்‌) மிகுதி இடம்பெயரவும்‌ நேர்ந்திருக்கும்‌. இவ்வாறு தமிழன்‌ இதயம்‌ துண்டாடப்பட்டு இதயமற்ற சிங்கனவனுக்குப்‌ பொருத்த எடுத்த முயற்சியிது. தொடர்ந்த விடுதலைப்புலிகளின்‌ விடுதலைப்போர்‌, இதைப்‌ பொருத்த முடியாமல்‌ தடுத்தமை ஜயசிக்குறுய்‌ வரை நீடித்தது. 

இவ்வாறாகத்தான்‌ மணலாறு வெலிஓயாவில் படையவேலிகள்‌, மண்‌ அணைகள்‌, காப்பரண்கள்‌, மினிமுகாங்கள்‌, பாரிய படைத்தளங்கள், காட்டுப்‌ போருக்கான பயிற்சித்தளங்கள்‌, அதிரடிப்படை அணிகளின் பயிற்றுக்களங்கள்‌ அமைக்கப்பட்டு பாரிய படைக்கோட்டைகியது. நடுவிலே பாதுகாப்பாக சிங்களவர்‌ குடியேற்றம்‌ சீராட்டப்பட்டது. இதற்காக நடையெற்ற பல்வேறு படையெடுப்புக்களும்‌ புலிகளின்‌ வீரம் சிலிர்க்கும் தடுப்புச்‌ சண்டைகளும்‌, மணலாற்றின்‌ போராளிகட்கு தாயும்‌ தந்தையுமாக இருந்த லெப். கேணல் அன்பு எனும்‌ அரிய மாவீரனின்‌ அளப்பரிய பங்களிப்பும்‌ எம்‌ மக்கள்‌ மனதிலே உயிர்‌த்தெழும் நினைவுகளாகின்றன. ஒதியமலையை முன்னரங்கமாகக்‌ கொண்டு சிலோன்‌ தியேட்டர்‌ பண்ணையை படைத்தொகுதி தளமாக்கி கஜபாபுரமாக மாற்றம்‌ பெற்ற தனிக்கல்‌ சிங்களக்‌ குடியேற்றம்‌ உயர்பாதுகாப்புப்‌ பெற்றது. தமிழீழத்தை துண்டாடும்‌ படையவேலி கொக்குத்தொடுவாயிலிருந்து முந்திரிகைக்குளம்‌ வீதியை வல்வளைத்தது. மையமாக மண்டிண்டிமலை பாரிய படைமுகாமாகியது. வரிசையாக முந்திரிகைக்குளம், சாம்பன்குளம்‌ கொக்குத்தொடுவாயின்‌ கோட்டைக்கேணி என படைத்துறை குடியேறியது. இவற்றில்‌ கணிசமான பங்‌ஙளிப்புச் செய்த படைத்துறைக் கட்டளையாளர் ஜானக பெரேராவை நினைகிற்கொள்ள மண்கிண்டிமலை 'ஜானகபுர'வாக மாற்றங்கண்டது. இக்கட்டத்தில்‌ டி.எஸ்‌. தொடக்க - ஜே.ஆர்‌ வளர்த்தெடுக்க - சந்திரிகா முடித்துவைக்க முயன்றபோது பிரபா ஓயாத அலைகள்‌ மூன்றை தொடக்க, மணலாற்று மண்‌ மாவீரன்‌ அன்பு அழைத்தது போல்‌ "வணங்கா மண்‌" ஆகிறது.

மணலாற்று மண்‌ விளைவிக்கும்‌ அற்புதங்கள்‌ வரலாற்றின்‌ மிகப்‌ பொருத்தப்பாடான ஒரு சமன்பாடாக மாறுன்றது. எவ்வாறு 1984 டிசெம்பரில்‌ ஒரு நாளில் எம்மவர்‌ விரட்டப்பட்டனரோ அவ்வாறே 1999 நவம்பரில்‌ சிங்களக்‌ குடியேறிகள்‌ மட்டுமல்ல படைத்துறையும் விரட்டப்பட்டனர்‌ - உணவில்‌ வைத்த கையை வாய்க்கு, கொண்டுபோக முடியாமல்‌ இவர்கள்‌ விரட்டப்பட்டனர்‌. சிங்களப்படையின்‌ எந்த முகாமிற்குள்ளும்‌ சென்றால்‌ உண்ணாத உணவு, எங்கும்‌ நிறைந்து கிடப்பதைக்‌ காணலாம்‌. 1984 டிசம்பரில்‌, மேஜர்‌ போரான்‌ என்பவர்‌ மணலாற்றிலிருத்து எம்‌ மக்களை விரட்டி வீரசாகசம்‌ புரிந்தார்‌; இன்று அவர்‌ 8வது படைப்பிரிவின் மேலாளர் பிரிகேடியர்‌ பாரான்‌ சூகி, காட்டிற்குள்‌ ஒளித்து ஓடிப்‌ புரிந்த சாகசத்தால்‌ வீட்டிற்கு. அனுப்பப்பட்டுள்ளார்‌.  

இன்றைய வெற்றியையும்‌ இனிவரப்போகும்‌ வெற்றியினதும்‌ காலத்தைத்‌ தீர்மானித்த தலைவனை, அன்று காத்த மண்‌ இன்று தமிழீழ மக்களை காத்து நிற்கின்றது. அந்த மண்‌ வள்ளுவன்‌ வாயால்‌ எம்‌ மக்களுக்குச்‌ சொல்கின்றது: தக்ககாலம்‌ தக்க இடத்தை அறிந்து செயற்படுங்கள்‌. எம்‌ மக்களே இந்த உலகம்‌ கூட உங்கள்‌ கைப்படும்‌. 

"ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்"

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • Replies 198
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • நன்னிச் சோழன்

    199

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

முன்னதான சிங்கள வன்வளைப்பு நடவடிக்கைகள்     இதில், வன்னியில் 1997 ஆம் ஆண்டு முதல் இந்நடவடிக்கை தொடங்கப்படும்வரை சிறீலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அதன் மூலம் தம

நன்னிச் சோழன்

இறுவட்டுகள்   இதனுள் இந்நடவடிக்கையின் வெற்றியை எடுத்தியம்பி கொலுவிருத்தும்படியாக வெளிவந்த அனைத்துப் போர்க்கால இலக்கியப்பாடல் இறுவட்டுகளும் இடம்பெற்றுள்ளன.   ஆனையிறவு:

நன்னிச் சோழன்

காலக்கோடு     01-11-1999: வரலாற்று முதன்மை வாய்ந்த கற்சிலைமடுவில் விடுதலைப் புலிகள் உச்சமட்ட மாநாடு ஒன்றை நடத்தினர். கற்சிலைமடு தனது 2ஆவது வரலாற்று நிகழ்வை அன்று சந்தித்தது. இந்த இடத

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

மூலம்: 'எரிமலை', நவம்பர்‌-டிசெம்பர்‌ 1999, பக்கம்: 8-12
மூல எழுத்தளர்: நாதன்‌
எழுத்துணரியாக்கம்
நன்னிச் சோழன்,  08|1|2022

 

 

ஓயாத அலைகள் மூன்று

 

வன்னி மண்ணில்‌ ஓயாத அலைகள்‌ வீரவரலாறு படைத்து வருகின்றது. இதனை 'நில மீட்புச்‌ சமர்‌' என அடையாளமிட்டுள்ளார்‌ தமிழீழ தேசிய தலைவர்‌ மேதகு.வே. பிரபாகரன்‌ அவர்கள்‌.

பெரும்‌ படைவலு வலிமையை உடைத்து ஊடறுத்து, சிதைத்தழித்த இச்சமரானது ஒரு படைத்துறை சாதனை மட்டுமல்ல ஒரு அரசியல்‌ - அரசதந்திர தாக்கமுள்ள நுட்பமான நகர்வாகும்‌. சிங்கள படைத்துறையை மட்டுமல்ல அரசியல்‌ அமைப்பையும்‌ அதன்‌ வெளியுறவுத்துறை கோட்பாடுகளையும்‌ நிலைகுலையவைத்துள்ள இச்சமரின்‌ கன பரிமாணத்தை தலைவர்‌ அவர்கள்‌ தன்‌ மாவீரர்‌ நாள்‌ செய்தியில்‌ கோடிட்டுக்‌ காட்டியுள்ளார்‌. இங்கே அதன்‌ படைத்துறை - அரசியல்‌ பரிமாணத்தை ஆய்வோம்.

 

 

 

 

ஓயாத அலைகள் மூன்று: தொடரும் போர்ச்சாதனை

 

“எல்லோரும்‌ மனவலு இழந்து விட்டோம்‌”

"நாங்கள்‌ வெற்றிகளைப்‌ பெற கடுமையாக உழைத்தோம்‌. (ஆனால்‌) இப்போது அனைத்தும்‌ இழக்கப்‌பட்டுவிட்டது."

- வாசிங்டன்‌ போஸ்ட்‌ செய்தியாளரிடம் மூத்த சிங்கள படைத்துறை உயரதிகாரி ஒருவர்‌ கூறியது. (06.11.99)

 

வன்னி பெருநிலப்பரப்பு சிங்கள படைத்துறையின் முதன்மை சமர்க்‌களமாகவும்‌ மூலவழிவகையின் அடித்‌தளமாகவும்‌ திகழ்ந்தது. 4 முதன்மை படைப்பிரிவுகளையும்‌ பல துணைப்‌படைகளையும்‌ குவித்து தன்‌ சமர்த்‌திட்டத்தை நடைமுறைப்படுத்திய சிங்களம்‌ நவம்பர்‌ 2-ம்‌ திகதி அதிகாலையிலிருந்து தொடரும்‌ புலிகளின்‌ பெருமெடுப்பிலான படை நகர்வுகளினால்‌ சிதைவுண்டு சிதறுண்டுள்ளது.

ஒட்டுசுட்டான்‌ பகுதியினைக்‌ கடந்த ஆண்டு கைப்பற்றிய சிங்களப்‌ படையினர்‌ இங்கு நிறுவப்பட்ட படைய வலயம்‌ ஊடாக முல்லைத்‌தீவு கோட்டத்தையே அச்சுறுத்த ஆரம்பித்தனர்‌.

கஜபாகு படையணி இங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதன்‌ பின்னே நீண்டு விரிந்து கடந்தது சிங்கள படைத்துறையின் மாவலு. ஒட்டுசுட்டானுக்கு மேற்கே கடற்‌படையினரும்‌ தெற்கே விஜயபாகு படையணி, சிங்க படையணி என்‌பனவும்‌ நிறுத்தப்பட்டிருந்தன. இவ்‌ அரண்களுக்குப்‌ பின்னே கஜபாகு படையணியின் தலைமை பணிமனையும்‌ மேற்கே 55-வது படைப்பிரிவின் சிறப்புப்படை தலைமையகமும்‌ அமைந்‌திருந்தது. 269-வது படைத்தொகுதி தலைமையகமும்‌ விஜயபாகு படையணியின்‌ தலைமையகமும்‌ இக் கோட்டத்தில்‌ அமைந்திருந்தன. இவற்‌றிற்குப்‌ பின்னே கனரகாயன்‌குளத்‌தில்‌ 56-வது படைப்பிரிவின்‌ தலைமையகமும்‌ 55-வது படைப்பிரிவின்‌ தலைமையகமும்‌ அமைக்கப்பட்டிருந்‌தன. மேலும்‌ நெடுங்கேணியூடாக படைய வலயமாக்கிக்‌ கடக்கும்‌ மணலாறும்‌ கரிப்பட்டு முறிப்பு - மாங்குளம்‌ ஊடாக நீண்டு கடந்த பல படைத்தளங்களும்‌ ஒட்டுசுட்டானை அசைக்க முடியாத இரும்புக்‌ கோட்டை என நினைக்கவைத்தது. நவம்பர்‌ 2-ம்‌ திகதி அதிகாலை இந்நிலைகளை புலிகள்‌ சிதைத்து அழித்த போது சிங்களத்‌தின்‌ படைய கோட்டைகள்‌ உடையத்‌ தொடங்கின.

ஒன்றன்பின்‌ ஒன்றாக ஓமந்தைவரை புலிகளின்‌ படையணிகள்‌ விடுவித்தன. ஏராளமான படைநிலைகள்‌ அழிந்தன, சிதைந்தன. படைமுகாம்கள்‌ வீழ்ந்தன. வன்னியின்‌ கிழக்குக் கோட்டத்தை விடுவித்த புலிகள்‌ மேற்கு நோக்கி நகர்ந்து, மடுப் பகுதியை விடுவித்தனர்‌. 09-ம்‌ திகதி இக் கோட்டத்தில்‌ புலிகள்‌ நடாத்திய பெரும்‌ 12 மணி நேரச்‌ சமரில்‌ பள்ளமடு, பெரியமடு, பள்ளம்பிட்டி, தட்சணாமருதமடு பகுதிகளிலும்‌ அமைந்திருந்த சிங்கள படைமுகாம்களும்‌ நிலைகளும்‌ அழிக்கப்பட்டன. மாந்தை பகுதி விடுதலையாகியது. இக்‌ கட்டுரை அச்சுக்குச்‌ செல்லும்‌ வரை ஓயாத அலைகள்‌ 3 படை நடவடிக்கை பெரும்‌ புயலாக வீசிக்கொண்டுள்ளது.

இவ்‌ படைத்துறை சாதனையானது புலிகளின்‌ மரபுவழிச்‌ சமர்‌ ஆற்‌றலை வெளி உலகற்கு வெளிப்படுத்‌தியதுடன்‌ பெரும்‌ படைவளங்‌களை ஈட்டிக்கொடுத்தது.

இச்‌ சமரில்‌ அகப்பட்ட சிங்களப்‌படை தன்‌ கட்டுமானத்தை இழந்தது. சிறீலங்காவின்‌ வன்னிக்கான தலைமைத்‌ கட்டளையாளராக விளங்கிய மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா தூக்கி வீசப்பட்டார்‌. 6 மூத்த கட்டளையாளர்‌களை வன்னிக்கு புதிதாக அனுப்பி உடைவடைந்து சென்ற படைகட்டுமானத்தை சிறீலங்கா காக்க முற்பட்டது. தரைப்படைத்‌ கட்டளையாளர்‌களும்‌ வவுனியாவில்‌ பல கமுக்க மாநாடுகளை நடத்தியபடியிருக்க வன்னியில்‌ புலிகள்‌ நகரங்களை தொடர்ச்சியாக மீட்டுவந்தனர்‌.

இச்‌ சமரானது சிங்களப் படையினர்‌ நடுவில் அச்சத்தையும்‌ தப்பியோடும்‌ மனநிலையையும்‌ ஏற்‌படுத்தியது. இரு படைக்காவலர் தப்பியோடிய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்‌. சிங்கள எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ ரணில்‌ விக்கிரமசிங்க சிங்களப்‌ படைகளை ஒன்றுபட்டு இருக்குமாறு கோரினர்‌. தொடர்‌ படைத்துறை இழப்புக்கள்‌ அச்சத்தை ஏற்படுத்துவதால்‌ செய்தித்‌ தணிக்கையை எதிரி அரசு நடைமுறைப்படுத்தியது.

தொடரும்‌ இப்‌ போர்‌ நடவடிக்‌கைகளும்‌ தமிழீழ விடுதலைப்‌ போரின்‌ படைத்துறை பரிணாமத்தை வெளிக்‌காட்டும்‌ பெரும்‌ சாதனைகளாக விளங்குகின்றன.

இன்று தமிழர்களின்‌ படைத்துறை மரபுவழி சமரை நுட்பமாக நடாத்தும்‌ போராற்றல்‌ கொண்டதாய்‌ உலக அரங்கில்‌ வியக்கப்படுகின்றது. சேணேவிப் படைகளும்‌ கவசவூர்திப் படைப்‌பிரிவுகளும்‌ சமரை முன்னெடுத்து பகுதிகளை விடுவித்துவருகையில்‌ மக்கள்‌ சமரின்‌ பின்னரங்கங்‌களை பாதுகாக்கின்றனர்‌. புலிகளின்‌ போர்‌ ஆற்றல்‌ ஒரு எல்லைக்கு அப்‌பால்‌ செல்லமுடியாமைக்கு ஆள்வலு ஒரு காரணமாய்‌ அமையும்‌ என உலக படைத்துறை விற்பன்னர்கள்‌ ஊகம்‌ கூறிவருகையில்‌ தமிழ்‌ மக்கள்‌ ஒன்றிணைந்து உருவாக்கிய எல்லைக்‌ காவல்படை புலிகள்‌ போர்‌ நகர்வுகளின்‌ பின்னே பெரும்‌ துணை வலிமையாக நிற்கின்றது.

இன்று போரின்‌ படைவலுச் சமநிலை தமிழர்களுக்கு சாதகமாக திரும்பியுள்ளது. அதிகரிக்கப்பட்ட ஆயுதவலு, ஆள்வலு என்பவற்‌றுடன்‌ பெரும்‌ மனள்வலுவும்‌ அனுபவமும்‌ பெற்ற புலிகள்‌ வலுவீனப்‌படுத்தப்பட்டு சிதைந்து கடக்கும்‌ எதிரியை எதிர்கொள்கின்றனர்‌.

சிங்கள அரசு தமது பன்னாட்டு பின்னணி மூலம்‌ நவீனவகை உயர்‌ தொழில்நுட்ப ஆயுதங்களை கொள்‌வனவு செய்து போரை நடாத்த முயல்வர்‌. சமர்க்களத்‌ தோல்விகளை சில கட்டளையாளர்‌கள்‌ மீது போட்டு மீள சிங்கள படைக்கட்டுமானத்திற்கு மனவலு திரட்டமுற்படுவர்‌. எனினும்‌ தமிழீழ தேசியத்‌ தலைவரின்‌ போர்‌ வியூகமானது இவ்‌ ஊகங்களையும்‌ உள்வாங்கி தீர்க்கமானதாய்‌ எழும்‌!

 

 

 

 

===============================

 

 

 

 

ஓயாத அலைகள்‌ 3: மணலாறு! மீட்கப்படும்‌ இதயபூமி

 

"வெலியோய (மணலாறு) படைத்துறை அடிப்படையில் முக்கியமானது. நாங்‌கள்‌ இங்கு இருப்பது வடக்கையும்‌ கிழக்கையும்‌ இணைய அனுமதிக்‌து. நாங்கள்‌ இங்கு இருக்கும்‌வரை பயங்கரவாதிகளால்‌ ஈழத்தை வெல்ல முடியாது. நாங்கள்‌ போனால்‌ பதவியா, கெப்பிட்டிகொலாவ என்பனவற்றிற்கு ஊறு ஏற்படும்‌. அனுராதபுரம்‌ கூட அச்சுறுத்தப்படும்‌."

--> பிரிகேடியர்‌ இரான்‌ கெலன்‌கொட, சிங்களக் கட்டளையாளர்

 

ஓயாத அலைகள்‌ மூன்று நடவடிக்கை தமிழீழத்தின்‌ இதயபூமி என புனைந்துரைக்கப்படும் மணலாற்றின்‌ ஒரு பகுதியை மீட்டுள்ளது. படைத்துறை - அரசியல்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்த ஒரு நிகழ்வாக இது வரலாற்றில்‌ பதியப்படும்‌. சிங்களத்தின்‌ முக்கியத்‌துவம்‌ வாய்ந்த ஒரு போர்‌ மூலவழிவகையை கூறிவைத்துள்ள இப் படை நடவடிக்கை தமிழீழ போராட்டத்தின்‌ வலுமிக்க ஒரு நடவடிக்கையாகும்‌.

வட - தென்‌ தமிழீழப் பகுதிகளை இணைக்கும்‌ புவியியல்‌ பாத்‌திரத்தை மணலாறு வகித்து வருகின்றது. 1990 களின்‌ ஆரம்பத்தில்‌ ஜே.ஆர்‌ அரசின்‌ அரசியல்‌ படைத்துறை திட்டமிடல்களிற்கு ஏற்ப இப் பகுதியை சிங்களம்‌ பறிக்க முற்பட்டது. அன்றைய படைத்துறை அமைச்சர்‌ லலித்‌ அத்துலத்‌ முதலி மணலாற்றை விட்டு தமிழர்களை விரட்டினர்‌. இவருக்கு துணையாக காணி வளர்ச்சி அமைச்சர்‌ காமினி திசநாயக்க, கைத்தொழில்‌ அமைச்சர்‌ சிறில்‌ மத்தியு, மாவலி வளர்ச்சி சபையின்‌ தலைவர்‌ பண்டிதரட்ண ஆகியோர்‌ செயற்பட்டனர்‌.

வடமேற்கே நெடுங்கேணி, தென்‌ மேற்கே பதவியா, வடகிழக்கே கொக்‌கிளாய்‌, தென்கிழக்கே தென்னமரவாடி ஆகியவற்றை எல்லையாகக்கொண்ட சிறப்பு பகுதியாக லலித்‌ கும்பல்‌ மணலாற்றை தனிமைப்படுத்‌தியது. இதற்கு வெலியோய என பெயர்சூட்டப்பட்டது. 1988-ல்‌ சட்ட நிறைவாக மணலாறு வெலியோயாவாக பெயர்சூட்டப்பட்டது. 42 தமிழ்ச் சிற்றூர்களைச்‌ சேர்ந்த 13,288 குடும்பங்களை 48 மணிநேரத்‌தில் விரட்டியடித்து சிங்கள சிறைக்‌ கைதிகள்‌ குடும்பம்‌ குடும்பமாக அழைத்து வரப்பட்டனர்‌. மணலாற்‌றில்‌ பண்ணைத்‌ திட்டங்களில்‌ ஈடுபட்டிருந்த 14 தமிழ்‌ நிறுவனங்கள்‌ விரட்டியடிக்கப்பட்டன. ஒதியமலைக்‌ சிற்றூரில் 29 தமிழர்களை சிங்களப்படை படுகொலை புரிந்து, 72 மில்லியன்‌ ரூபாய்களை செலவிட்டு வெலியோயாவை சிங்கள அரசு வளர்ச்சி செய்தது. இப்பகுதியை காக்க சிங்களம்‌ தன்‌ சிறப்பு படைகளை பாவித்தது. வடக்கு மீதான படை நடவடிக்கைகளும்‌ ஒரு பின்தளமாக இருப்பதற்கு மணலாறு தயார்‌ செய்யப்பட்டது. 6-ற்கு மேற்பட்ட முகாம்களும்‌ பல துணை முகாம்களும்‌ நிறுவப்பட்டன.

சிங்கள தரைப்படைக் கட்டளையாளர் மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா இங்கு நிலைகொண்டு சிங்களத்தின்‌ படைத்துறை அரசியல்‌ திட்டத்தை வழிநடத்‌தினார்‌.

தமிழீழ தேசிய தலைவர்‌ இச் சிங்‌கள திட்டங்களை தெளிவாக இனம்‌ கண்டிருந்தார்‌. மணலாற்றை 'இதயபூமி' என்றுதான்‌ தலைவர்‌ புனைந்துரைத்துவந்துள்ளார்‌. இங்கு அமைந்திருந்த படைமுகாமை புலிகள்‌ தாக்கியழித்தனர்‌. எனினும்‌ தொடர்ச்சியான வலுப்படுத்தல்‌ மூலம்‌ சிங்கள அரசு மணலாற்றை முற்றாக கபளீகரம்‌ செய்ய முற்பட்டது. இக் கோட்டத்தில்‌ 20,000 மேற்பட்ட ஆயுதம்‌ தரித்த படையினரையும்‌ ஊர்‌காவல்‌ படையினரையும்‌ சிங்களம்‌ குவித்து வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. 1997-ல்‌ ஜெயசிக்குறுய்‌ நடவடிக்கையின்‌ போது செய்தியாளர்‌களைச்‌ சந்தித்த சிங்கள மேஜர்‌ டீ.வீரசிங்க தாம்‌ ஜெயசிக்குறுய்‌ மூலம்‌ பெற்ற வெற்றியால்‌ வெலியோயவை முற்றாக காத்துவிட்டதாகவும்‌ இனிமேல்‌ வெலியோயவை ஒரு 2ம் லெப்ரினன்ட்-ஆல் காக்க முடியும்‌ எனவும்‌ கூறினார்‌.

இவ்வாறு காக்கப்பட்ட படைய வலயத்தை புலிகளின்‌ படைப்பிரிவு ஊடறுத்து தாக்கியது. நெடுங்கேணியூடாக நுழைந்து சிலோன்‌ தியேட்டர்‌ முகாம்‌ உட்பட பல முகாம்களையும்‌ படைநிலைகளையும்‌ அழித்த புலிகள்‌ மணலாற்‌றின்‌ ஒரு பகுதியை மீட்டெடுத்தனர்‌. மணலாற்றில்‌ குடியமர்த்தப்பட்ட சிங்களவர்கள்‌ பதவியா தமது சொந்த இடங்களுக்கு செல்ல தொடங்கினர்‌. படைநிலைகளை பின்னே தள்ளியவாறு புலிகள்‌ நில மீட்பு சமர்‌ ஒன்றினை புரிந்துள்ளனர்‌.

இன்று மணலாற்றின்‌ எஞ்சிய பகுதிகளைப்‌ காப்பதற்காக தென்‌ தமிழீழத்திலிருந்து வல்வளைப்புப் படையினரை இங்கு எதிரி அரசு நகர்த்தியுள்ளது. அனுராதபுரம்‌, திருமலை நகர்களில்‌ உள்ள சிங்கள படைநிலைகளை புலிகள்‌ தாக்கிவிடுவார்கள்‌ என்ற அச்சமே இதற்கு உடனடிக்‌ காரணம்‌ எனச்‌ சொல்லப்‌பட்டாலும்‌ தமிழீழ விடுதலைப்‌ போராட்டத்தின்‌ முக்கிய புவியியல்‌ - அரசியல்‌ - படைத்துறை நிலையொன்றை காப்பாற்ற எதிரி எடுக்‌கும்‌ இறுதி முயற்சி இது.

மணலாற்றில்‌ பெறப்பட்ட வெற்றியானது எமது தேசிய தலைவரின்‌ போர்‌ வியூகத்தின்‌ நுட்பத்தைக் காட்‌டுகின்றது. ஒரு முக்கிய பகுதியை மிக திட்டமிட்ட முறையில்‌ மீட்டெடுத்ததன்‌ மூலம்‌ சிங்களத்தின்‌ முழு படைத்துறை அரசியல்‌ இட்டங்களுக்‌கும்‌ தலைவர்‌ ஒரு 'செக்‌' வைத்துள்‌ளார்‌.

 

 

 

 

===============================

 

 

 

 

ஓயாத அலைகள் 3: சந்திரிகாவின்‌ சிதைந்த போர்க்கனவு!

 

அரசின்‌ படைத்துறை கொள்கை வகுப்பாளர்கள்‌ 16 ஆண்டுப் போரில்‌ படையினருக்கு ஏற்பட்ட மிக மோசமான தோல்வியுடன்‌ சிக்கல்‌பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ போது டிசம்பர்‌ 2-ல்‌ இடம்பெறவுள்ள தேர்தல்களில்‌ இப் படுதோல்வியால்‌ தனக்கு ஏற்பட்டுள்ள தாக்கம்‌ என்ன என அளவிட்டுவருகின்றார்‌.

--> 'ஏசியா வீக்‌', நவம்பர்‌ 1999

 

சந்திரிகா அரசு தமிழர்களின்‌ விடுதலைப்‌ போரை நசுக்குவதற்கு போரே சரியான தீர்வு என தன்‌ பரப்புரைகள்‌ ஊடாக உலகை நம்பவைத்தது. போர்‌ மூலம்‌ அமைதி என்ற சொன்மாலையின்(ஸ்லோகம்) மறைவில்‌ சிங்‌கள அரசு பெரும்‌ இனப்படுகொலையைப்‌ புரிந்த போதும்‌ போர்‌ மூலம்‌ புலிகளை வென்றால்‌ மட்‌டுமே அமைதி இயலும் என உலகிற்கு கூறப்பட்டது. இத் திட்டத்திற்கு ஏற்புடைய படைத்துறை உதவிகள்‌ பெறப்பட்டன. அமெரிக்க அரசு தமிழர்களின்‌ விடயத்தில்‌ சந்திரிகாவின்‌ போர்‌ - படுகொலை நடவடிக்கைகளுக்கு துணைபோனது. 

பெரும்‌ படைத்தளபாடக்‌ கொள்வனவு மேற்கொள்ளப்பட்டது. கட்டளையாளர்‌கள்‌ மேற்கத்தைய போர்‌நுட்ப கல்விகளைப்‌ பெற்றனர்‌. போரை முடிவுக்கு கொண்டு வரலாம்‌ என்ற நம்பிக்கையில்‌ பொருளாதார உதவிகள்‌ வழங்கப்பட்டன. ஆனால்‌ ஓயாத அலைகள்‌ 1-ம்‌ 2-ம்‌ இப் போரை வெல்லலாம்‌ என்ற சந்திரிகாவின்‌ பரப்புரையை ஐயத்திற்குரியதாக்கியது. ஓயாத அலைகள்‌ 3 நடவடிக்கை சந்திரிகாவின்‌ படைத்துறை வலுவை மட்டும்‌ அல்ல போரிற்காக அவர்‌ கட்டியெழுப்பிய பரப்புரைகளை தோல்விபெறச்‌ செய்‌துள்ளது.

போரின்‌ மூலம்‌ தமிழர்களின்‌ படைத்துறை - அரசியல்‌ நலன்களை நசுக்கலாம்‌ என்ற கோட்பாட்டை ஓயாத அலைகள்‌ செல்லுபடியற்றதாக்கிய அதேவேளை போரின்‌ சமநிலையில்‌ மாற்றம்‌ ஏற்பட்டு தமிழர்‌களின்‌ சார்பாக அது திரும்புவதை கவனிக்க முடிவதை உலக ஆய்‌வாளர்கள்‌ ஒப்புக்கொள்கின்றனர்‌. அமெரிக்க ஆவாட்‌ பல்கலைக்கழக பேராசிரியரும்‌ உலக அமைதி நிறுவனம்‌ எனக்‌ கூறப்படும்‌ ஒரு அமைப்‌பின்‌ தலைவருமான இறொரேர்ட்‌ நுட்‌ போ என்பவர்‌ பொஸ்டன்‌ குளோப்‌ ஏட்டின்‌ எழுதிய ஆய்வில்‌ இவ்‌ இடைவெளியை மறைமுகமாக ஒப்‌புக்கொண்டுள்ளார்‌. சிங்கள அரசின்‌ தீவிர ஆதரவாளரான அவர்‌ போரின்‌ போக்கை தடுத்து நிறுத்தி சிங்கள படையினரை வலுப்படுத்தும்‌ அதே வேளை புலிகளை வலுவீனப்படுத்த அமெரிக்கா, பிரித்தானியா என்பன உழைக்க வேண்டும்‌ எனவும்‌ போரின்‌ போக்கு மாற்றம்‌ கண்ட பின்னர்‌ நோர்வே போன்ற நாட்டின்‌ உதவியுடன்‌ நடுத்துவம் மேற்கொள்ளப்‌படவேண்டும்‌ எனவும்‌ கூறியுள்ளார்‌. சந்திரிகாவின்‌ போர்‌ வியூகம்‌ உடைவடைந்துவிட்டதால்‌ புதியதொரு வியூகம்‌ ஏற்படுத்த வேண்டும்‌ என்பதே அவரது வேண்டுதல்‌ ஆகும்‌. 

ஓயாத அலைகள்‌ நடவடிக்கை சிங்களத்தின்‌ அரசியல்‌ - அரசதந்‌திர தன்னம்பிக்கை மீதும்‌ பெருத்த அடியை கொடுத்துள்ளது. சமூகம்‌ நடுவில் அதீத கூக்குரல்‌ இடும்‌ வெளியுறவுக் கொள்கையையும்‌ தமது நாட்டுக்குள்ள இறைமையை பெரும்‌ புனித கொடை உலகம் போல்‌ பாவனைபண்ணிய கதிர்காமரின்‌ வெளியுறவுத்துறை அமைச்சு ஓயாத அலைகள்‌ ஏற்படுத்தியுள்ள தாக்கத்‌தால்‌ நிலைகுலைந்து போயுள்ளது. போர்‌ மூலம்‌ அமைதி என்ற பரப்புரையையும்‌ தலையீடு தேவையில்லை என்ற பரப்புரையையும்‌ தூக்கிப்‌பிடித்து தலையில்‌ வைத்தாடிய வெளியுறவுத்துறை அமைச்சு போர்‌ மூலம்‌ சிங்களம்‌ ஒன்றுமே சாதிக்கமுடியாது என்ற உண்மையை புலப்பட்ட நிலையில்‌ செயலிழந்து போயுள்ளது. உலகம்‌ முழுவதும் புகலிடத்‌ தமிழர்‌களை குறிவைத்து தாக்குப்‌ பயணம்‌ வெளியுறவுத்துறை அமைச்சர்‌ இன்று மாவீரர்‌ நாள்‌ 99ல்‌ உலகம்‌ முழுவதும் ஏற்பட்ட எழுச்சியைப்‌ பற்றி வாயே திறக்கவில்லை. ஓயாத அலைகள்‌ நடவடிக்கை மூலம்‌ ஒரு வெளியுறவுத்துறை தோல்‌வியை தலைவர்‌ சிங்கள அரசுக்கு கொடுத்துள்ளார்‌.

சந்திரிகாவின்‌ உள்நாட்டு அரசியல்‌ நடவடிக்கைகள்‌ படைத்துறை வெற்றியின்‌ பிடியில்‌ இருந்தது. தன்னை சிங்கள போர்‌ வெற்றியின்‌ கதாநாயகியாக சந்திரிகா கற்பனை செய்து அடுத்த தேர்தலில்‌ தன்னை சிங்கள்‌ மக்கள்‌ ஏன்‌ ஆதரிக்க வேண்டும்‌ என்பதற்கு சந்திரிகா போரைக்‌ காரணம்‌ காட்டினார்‌. இன்று நிலவரம்‌ தலைகீழாகிவிட்‌டது. ஓயாத அலைகள்‌ அவரது கணிப்பை பொய்யாக்கிவிட்டது. போரை வெல்ல அவரால்‌ முடியாது என சிங்களம்‌ புரிந்துகொண்டது.

இவ்வாறு 5 ஆண்டு காலத்து அரசியல்‌ - அரசதந்‌திர சாதனைகள்‌ அனைத்தையும்‌ ஓயாத அலைகள்‌ 3 நடவடிக்கை கேலிக்குரியதாக்கியது. பேச்சுவார்த்தை பற்றிய புதிய கருத்துக்களை ஓயாத அலைகள்‌ 3ன் எதிரொலியால்‌ வெளிவிடப்படுகின்றன. மூன்றாம்‌ தரப்பு நடுத்துவம் வேண்டாம்‌, புலிகள்‌ ஆயுதங்களை கீழே போட வேண்‌ டும்‌,வோம்‌ என கூக்குரல்‌ எழுப்பியவர்‌கள்‌ மூன்றாம்‌ தரப்பு நடுத்துவத்துவத்‌துடன்‌ வழமைநிலை தோன்றிய பின்‌னர்‌ தீர்வு பற்றிப்‌ பேசலாம்‌ என எமது தேசிய தலைவர்‌ வகுத்த நிகழ்ச்சித்‌ திட்டத்தில்‌ இயங்கவேண்‌டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டனர்‌.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

மூலம்: 'எரிமலை', ஜனவரி 2000, பக்கம்: 6- 9
மூல எழுத்தாளர்: அறியில்லை
எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 09|1|2022

 

 

ஆழப்பதிந்த பெரும்சமர்

 

பெரும் நிலமீட்புச்‌ சமராக வெடித்து பல்லாயிரம்‌ சதுரக் கிலோமீற்றர்‌ நிலத்தை சிங்களப்‌ பேரினவாத வல்வளைப்பிலிருந்து மீட்டுவரும்‌ ஓயாத அலைகள்‌ 3 நடவடிக்கை தமிழர்களின்‌ நவீன படைத்துறை வரலாற்றில்‌ புதியதொரு பரிணாமத்தை வெளிக்காட்டியுள்ளது. இக்‌ கட்டுரை நகர்வு பல்வேறு அரசியல்‌ - படைத்துறை - அரசதந்திர நகர்வுகளை தூண்டி விட்டுள்ளது.

புத்தாயிரம்‌ ஆண்டு பிறந்த வேளையில்‌ கொழும்பு படைத்துறை தலைமையகத்தில்‌ சிங்களத்‌ தரைப்படைத்‌ கட்டளையாளர் லெப். ஜெனரல் சிறீலால்‌ வீரசூரிய தன்‌ உயரதிகாரிகளைச்‌ சந்தித்தார்‌. வன்னியில்‌ ஏற்பட்ட தோல்வியால்‌ துவண்டுவிடாதீர்கள்‌ எனவும்‌ கடந்த காலத்தில்‌ சுழலாமல்‌ எதிர்காலத்திற்குள்‌ செல்லுங்கள்‌ எனவும்‌ அவர்‌ ஆலோசனை சொன்னார்‌.

வன்னியில்‌ ஏற்பட்ட தோல்வி தற்‌காலிகமானது. இத்தகைய தோல்விகளை போரில்‌ சந்திப்பது தவிர்க்க முடியாதது எனவும்‌ தானே ஆறுதல்‌ சொல்லிக்‌ கொண்ட வீரசூரிய படைவலு மூலமே தீர்வு இயலுமைப்படும் என வீரமுழக்கம்‌ செய்தார்‌. (தி ஐலண்ட் 02.01.00) 

சந்திரிகாவுக்கு நெருக்கமானவர்‌ என கொழும்பு வட்டாரங்கள்‌  கருதப்படும்‌ வீரசூரிய சிங்களத்தின்‌ தொடர்ச்சியான நிகழ்ச்சித்‌ திட்டத்தை தெளிவாக அங்கு முன்வைத்தார்‌. அவ்‌ உரையின்‌ தொடர்ச்சியாக படைத்துறையிற்கு பெரும்‌ ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கான பரப்புரைகளை தூண்டிவிட்டன. சிங்கள நாடு முழுமையும் 744 ஆட்சேர்ப்பு மையங்கள்‌ இறக்கப்பட்டன. வீடுவீடாகச்‌ சென்று ஆட்சேர்ப்புப்‌ பணியில்‌ படைத்துறை ஈடுபடும்‌ என வீரசூரிய மீண்டும்‌ அறிவித்தார்‌. போதிய சிங்களவர்கள்‌ படையில்‌ சேராவிடின்‌ கட்டாய படைத்துறை பயிற்சிக்கான முடிவைக்‌கூட அரசு மேற்கொள்ளலாம்‌ என அமைச்சர்‌ மகிந்த ராஜபக்ச ஊகம்‌ கூறினார்‌. (தி இந்து 29.01.00)

படையின்‌ ஆள்வலுவை கூட்டுவதற்கான முயற்சிகள்‌ இடம்பெறும்‌ வேளையில்‌ கொழும்பில்‌ சிறீலங்காவுக்கான ஆயுத வழங்கல் தொடர்பாக பல்வேறு அறிவிப்புக்கள்‌ வெளியாகன. இசுரேலிடம்‌ இருந்து கடற்கலங்களை கொள்வனவு செய்த அரசு அவற்றை இயக்குவதற்கான பயிற்சியினைப்‌ பெற 720 கடற்படையினரை அங்கு அனுப்பி வைத்துள்‌ளதாக அறிவிக்கப்பட்டது. மறுபுறம்‌ அமெரிக்காவுடனான சிங்களத்தின்‌ படைத்துறை உறவு அதிகரித்துவிட்டதாகவும்‌ புலிகளின்‌ சேணேவிகள் மற்றும்‌ எறிகணைகளை கண்டுபிடிக்கும்‌ கதுவீகளை 20 மில்லியன்‌ டொலர்‌கள்‌ செலவில்‌ சிறீலங்கா கொள்வனவு செய்யும்‌ எனவும்‌ அறிவிக்கப்‌பட்டது.

சமர்முனையில்‌ நிலவும்‌ ஒப்பீட்‌டளவிலான அமைதியை சிங்கள படைத்துறையிற்குக்‌ கிடைத்த வெற்றி என சிறீலங்காவின்‌ துணை படைத்துறை கட்டளையாளர் மேஜர் ஜெனரல் பலகெல கொழும்பில்‌ அறிவித்தார்‌. ஆனையிறவில்‌ தமது படைகள்‌ புலிகளை தோற்கடித்துவிட்டதாக சிங்கள அரச ஏடான இடெய்லி நியூசு அறிவித்தது. எவ்வாறு புலிகளின்‌ ஓயாத அலைகளை முறியடித்தோம்‌ என 54-ம்‌ படைப்பிரிவின்‌ முன்னைய கட்டளையாளர் கொழும்பு ஏடுகளுக்கு செய்தி வழங்கி படைத்துறை பற்றிய திகைப்பான எண்ணங்களை ஏற்படுத்த முனைந்‌தார்‌. இவ்வாறான பின்னணியில்‌, சிங்கள இயந்திரம்‌ ஓயாத அலைகளை எதிர்கொள்ளவும்‌ தமிழீழம்‌ மீதான வல்வளைப்பை தொடர்வதற்கான இறுதியான ஆயுதமாக படைத்துறையையே தொடர்ந்தும்‌ நம்பியுள்ளதை கவனிக்கலாம்‌. படைத்துறையை சுற்றி எழுப்பப்பட்டுள்ள இன அழிப்‌புக்‌ கோட்பாடுகளில்‌ சிங்கள இயந்‌திரம்‌ தொடர்ந்தும்‌ இயங்குவதை துல்லியமாக இங்கு அறியமுடிகிறது. ஆனால்‌, இதன்‌ இயலுமைத் தன்மைகள்‌ எவ்வாறு உள்ளன?

1995-ம்‌ ஆண்டு புதிய ஊக்கமகிழ்வுடனும்‌ நவீன வகை ஆயுத தளபாடங்‌களுடனும்‌ தமிழர்களின்‌ பெருநகர்‌களை தாக்கிக்‌ கைப்பற்றும்‌ சமர்த்‌திட்டத்தை நடைமுறைப்படுத்தப்‌ புறப்பட்ட சந்திரிகா அரசு இன்று யாழ்‌. குடாநாட்டினுள்‌ வலுவான சமர்வியூகங்‌களுடன்‌ உள்‌ நுழைந்துள்ள புலிகளின்‌ தொடர்நகர்வுகளை எதிர்‌கொள்கின்றது. வன்னியில்‌ ஏற்பட்ட பெரும்‌ படைக்கட்டுமான உடைப்பினால்‌ குப்புற வீழ்ந்த எதிரி இன்று யாழ்‌. குடாநாட்டிலிருந்து தப்புவதற்கான தரைவழியாக பாதை இல்லாத மூன்று பெரும்‌ படைப்பிரிவுகளின்‌ நிலைகளை காக்க வேண்டிய தேவையைக்‌ கொண்டுள்ளனர்‌.

குடாநாட்டின்‌ கேந்திர முக்கியத்‌துவம்‌ நிரம்பிய பகுதிகளில்‌ கால்‌பதித்து சிங்களத்தின்‌ வல்வளைப்பு நிலைகளை புலிகள்‌ ஊடறுத்து செல்‌வதால்‌, ஆனையிறவு - இயக்கச்சி நிலைகளை காத்தல்‌ என்ற தேவை முழுச்‌ சிங்களத்தினதும்‌ முதன்மை அச்சமாகிவிட்டது. புலிகளை அழிப்பதற்காக உலக வல்லுநர்களால் பயிற்றுவிக்கப்பட்டு வன்னிக்கு அனுப்‌பப்பட்ட 53-வது படைப்பிரிவு 54-வது படைப்பிரிவுடன்‌ இணைந்து ஆனையிறவு - இயக்கச்சி நிலைகளை பாதுகாத்தவாறு பலாலியுடனான தொடர்பை பேணும்‌ பணியை இவ்‌ 48-வது படைப்பிரிவு புரிகின்றது. இவ்விரு படைப்பிரிவுகளும்‌ சுமார்‌ 25,000 படையினராலும்‌ நவீன தகரிகள், கவசவூர்திகள்‌ என்‌பனவற்றாலும்‌ சேணேவிகளாலும்‌ வலுப்படுத்‌தப்பட்டவை.

யாழ்‌. குடா வல்வளைப்பை பாதுகாக்‌கும்‌ பணிக்காக பல உயரதிகாரிகளை அங்கு அனுப்பி வைத்துள்ள சந்‌திரிகா அரசு, குடாநாட்டில்‌ மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள வான்‌ தாக்குதல்கள்‌ மூலம்‌ யாழ்‌.குடாநாட்டில்‌ ஓயாத அலைகளின்‌ வலுவை ஒப்புக்கொண்டுள்ளது. மேலும்‌, புலிகளின்‌ நகர்வுகளை இடைநிறுத்துவதற்கான உத்தியாக மக்களை கவசங்களாக்கும்‌ முயற்சியை படைத்துறை ஆரம்பித்தது. தமது சேணேவி நிலைகளை மக்கள்‌ செறிந்து வாழும்‌ பகுதிகளில்‌ அமைப்பதன்‌ மூலம்‌ புலிகளின்‌ பகரடி தாக்குதல்களை தடுக்க முனைந்துள்ளமையை எதிர்த்து மக்கள்‌ குரலெழுப்பிசென்றார்கள்‌. வடமராட்சிப்‌ பகுதியில்‌ படைத்துறை மக்கள்‌ பயணம்‌ செய்யும்‌ ஊர்திகளைப் பாவித்து புலிகளின்‌ தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும்‌ உத்திகளை பாவிப்பது பற்றி புலிகள்‌ பகிரங்க எழுதருகையை அண்மையில்‌ விடுத்திருந்தனர்‌.

இவ்‌ ஆயத்தங்களை நோக்கியவாறு புலிகளின்‌ படைவியூகம்‌ பல்வேறு திசையூடாக பரந்தகன்று வருவதை உலக ஆய்வாளர்‌களே ஏற்றுக்கொண்டுள்ளனர்‌. அண்மையில்‌ வன்னிக்‌குச்‌ சென்று திரும்பிய கத்‌தோலிக்க பிதா தெரிவித்த கருத்துக்கள்‌ பெரும்‌ பரபரப்பை கொழும்பில்‌ ஏற்படுத்தியது. வன்னியில்‌ ஏற்‌பட்டு வரும்‌ பெரும்‌ அரசியல்‌ - படைத்துறை எழுச்சி பற்றி அவர்‌ கூறினார்‌. 2000 ஆண்டை போர்‌ ஆண்டாக சாற்றாணைப்படுத்தி பெரும்‌ போர்ப்பயிற்சிகளில்‌ தமிழர்கள்‌ ஈடுபட்டுள்ளனர்‌ என அவர்‌ கூறினார்‌. (சற்றர்டே எக்சுபிரசு 29.01.00)

போரின்‌ தீவிரத்தை சற்றுக்‌ குறைத்து அதனை தந்திரவழிவகை வழிநெறியூடாக நகர்த்தும்‌ போக்கு இப்போது நிலவுவதை அனைவரும்‌ ஒப்புக்கொள்‌கின்றனர்‌. ஆனையிறவுத்‌ தளத்தின்‌ முக்கியத்துவம்‌ குறைக்கப்பட்டு வடமராட்சி கிழக்கு ஊடான தரைப்‌பாதையும்‌ தனங்களப்பு, கேரதீவு ஊடான பாதையும்‌ புலிகளினால்‌ திறக்கப்பட்டுள்ளது. மறுபுறம்‌ ஆனையிறவுத்‌ தளத்தின்‌ தெற்கு - கிழக்கு அரண்களை கைப்பற்றியதன்‌ மூலம்‌ ஆனையிறவுத்‌ தளத்தின்‌ பெரும்‌ தளத்தை நெருங்கியவாறு அமர்ந்‌துள்ளனர்‌. இயக்கச்சிப்‌ பகுதிகளில்‌ படைநிலைகளை நெருங்கக்‌ கூடிய தொலைவில் புலிகள்‌ நிலையெடுத்துள்ளதை சிங்களம்‌ வெளியிடும்‌ சமர்ச் செய்திகள்‌ உறுதிப்படுத்துகின்றன.

இந்‌ நிலையை உற்றுநோக்கும்‌ ஆய்வாளர்கள்‌ இரு விடயங்‌களை நோக்குகின்றனர்‌.

  1. போரின்‌ பிடி அல்லது முன்னெடுப்பதற்கான வாய்ப்பு இன்று எதுவித ஐயங்களுமின்றி புலிகளிடம்‌ உள்ளது.
  2. யாழ்‌. குடாநாட்டில்‌ உள்ள சிங்கள நிலைகள்‌ புலிகளின்‌ ஒரு வலைவிரிப்புக்கு வெறுமனே எதிரொளிக்கின்றன.

தற்போது பெறப்படும்‌ அல்‌லது பெற உள்ளதாக அறிவிக்கப்படும்‌ அமெரிக்க ஆயுத உதவிகள்‌ சமர்க்களத்தில்‌ புலிகள்‌ பெற்றுள்ள படைய மேலாதிக்‌கத்தை உடைக்க உதவாது என இந்திய ஆய்வு ஒன்று கூறுகின்றது. சிங்கள ஆய்வாளரான தயான்‌ செயதிலக சிங்களத்திற்கு தேவையானது பெரும்‌ அழிவுகளை ஏற்படுத்தும்‌ ஆயுத தளபாடங்களே எனக்‌கூறுகின்றார்‌. அதற்கு ஏற்புடைய படைத்தளபாடங்கள்‌ வாங்கப்பட வேண்டும்‌ என அவர்‌ கூறுகின்றார்‌. படைத்துறையின் ஆட்சேர்ப்பு நடவடிக்கை பற்றி கருத்து வெளியிட்ட பௌத்த பீடாதிபதி வண. சோபித தேரர்‌ 'தோல்விகளுக்கு ஒவ்வொரு காரணங்‌களைக்‌ கொண்டு வருகின்றனர்‌' என விரிக்கிறார்‌. அமெரிக்க அரசு தனது ஆயுத வழங்கல் தொடர்பாக விடுத்த செய்தியில்‌ தமது அரசு அப்படியொன்றும்‌ திகைப்பான உதவிகளைப்‌ புரியவில்லை எனவும்‌ தமது பயிற்சித்‌ திட்டங்களின்‌ அடிப்படையில்‌ 20-60 அமெரிக்க படையினர் பங்கேற்கும்‌ பொது பயிற்சியிலேயே ஈடுபட்டதாக கூறுகின்றனர்‌. அவை சமரிற்கு வெளியேயான செயற்‌ பற்றிய பயிற்சியென அமெரிக்கா விரித்துள்ளது. 

இவ்வாறான படைத்துறை புறநிலையில்‌ ஓயாத அலைகளின்‌ வலிமையால்‌ வலுப்பெற்ற அரசியல்‌ இணக்‌கப்பாடு பற்றிய விடயம்‌ முன்னணிக்கு வந்துள்ளது. சந்திரிகா அரசின்‌ பெரும்‌ படையெடுப்புக்கு இரையிட உருவாக்கப்பட்ட தீர்வுப்‌பொதி தற்போது மீள தூசு தட்டப்பட்டு ஓயாத அலைகளிற்கு தடுப்பிட பயன்‌படுத்தப்படுகின்றது. வெறும்‌ அரசமைப்பு இருத்தம்‌ மூலம்‌ சிங்கள பேரினவாதத்தை இல்லாதொழிக்கலாம்‌ என்ற பொய்யை மீண்டும்‌ சந்திரிகா அரசு தூக்கிப்பிடித்துள்ளது. கடந்த காலங்களில்‌ இப்‌ பொதிக்கு எதிர்ப்பு தெரிவித்த ரணில்‌ விக்கிரமசிங்கவின்‌ மேல்‌ இனச்சிக்கல்‌ தொடர்வதற்‌கான காரணம்‌ எனப்‌ பழியைப்‌போட்ட சந்திரிகா அரசு, ரணில்‌ விக்‌கரமசிங்க பொதிக்கு ஆதரவு தரத்‌தயார்‌ என அறிவித்தமையால்‌ பொதியை சிறிது காலத்திற்கான விவாதப்‌ பொருள்‌ ஆக்கியுள்ளது. 

அரசமைப்புச்‌ சட்டத்தை மாற்றுவதன்‌ மூலம்‌ இனச்சிக்கலை தீர்க்கலாம்‌ என்பது அறிவியலற்ற செயற்பாடு. இரு தேசியங்களின்‌ ஆழமான வரலாற்று பிளவை ஆராயாது வெறுமனே ஓயாத அலைகளின்‌ வலுவினால்‌ இணக்கத்திற்கு ஒப்புக்கொள்ள முற்படும்‌ அரசும்‌ இனவாத இயந்திரமும்‌ தற்காலிக ஓய்வுக்குப்‌ பின்‌ இன அடக்குமுறையை தொடர்வர்‌. இங்கே அரசமைப்பு என்பது சிங்கள பெளத்த ஆட்சி பீடத்தின்‌ சட்டமாகும்‌. 

பெரும்‌ இன அழிப்பு இடம்பெறும்‌ புறச்சூழ்நிலைகளில்‌ புலிகள்‌ இணக்கப்பாட்டை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்‌. நோர்வே போன்ற நாடுகளின்‌ தலையீடு கூட புலிகளின்‌ இக்‌கோரிக்கையின்‌ நியாயங்களை ஏற்றுக்கொள்ளும்‌ கடந்த காலங்களில்‌ பல சிங்கள தலைமைகள்‌ இருந்த போதும்‌ பேச்சுக்களின்‌ போது தமது படைத்துறை சூழ்நிலைகளை பாதுகாத்தவாறே சிங்களம்‌ பேச முயன்‌றது. படைத்துறை விடயங்களை புலிகள்‌ இணக்க மேடையில்‌ கொண்டு வந்த வேளைகளில்‌ பேச்சுக்கள்‌ முறிந்து போயின.

இன்னிலையில்‌ புதிதாக எழுந்‌துள்ள அரசியல்‌ - அரசதந்திர சூழ்‌நிலைகளானது தமிழீழத்‌ தேசியத்‌ தலைவர்‌ மேதகு வே.பிரபாகரன்‌ அவர்கள்‌ கடந்த மாவீரர்‌ உரையில்‌ கோடிட்டுக்காட்டிய இணக்கப்பாட்‌டுக்கான தேவைகளை உள்வாங்கியதாக இருக்க வேண்டும்‌ மாறாக, சிங்களத்தின்‌ தேவைகளுக்கு ஏற்புடையதொரு பேச்சுவார்த்தைக்கு புலிகள்‌ உடன்பட வேண்டிய தேவை நிலவவில்லை.

இவ்வாறான மாற்றங்களின்‌ ஊடு ஓயாத அலைகள்‌-3 நகர்ந்து வருகின்‌றது. இதுவரை இந்‌ நடவடிக்கை இயலுமைப்படுத்திய அல்லது ஏற்படுத்திய மாற்‌றங்கள்‌ ஒருபுறமும்‌ ஏற்படுத்த உள்ள தாக்கங்களும்‌ மாற்றங்களும்‌ மறுபுறமும்‌ தமிழீழ சிங்கள தேசிய உறவுகளை வடிவமைத்து வருகின்‌றன. போரின்‌ பிடியை தமது கைகளில்‌ வைத்துள்ள புலிகளே இவ்‌ வரலாற்றின் நாயகர்கள்‌ ஆவார்‌.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

மூலம்: 'விடுதலைப்புலிகள்', தை - மாசி 2000, பக்கம் 1-2 
மூல எழுத்தாளர்: அறியில்லை
தட்டச்சு & தனித்தமிழாக்கம்: நன்னிச் சோழன், 19/02/2022

 

 

அடுத்தது என்ன? 
போர் தொடருமா இல்லை! சமாதானம் வருமா!

 

 

ஓயாத அலைகள்‌ - 3 படை நடவடிக்கை மூலம்‌ புலிகள்‌ இயக்கத்‌தின்‌ படைத்துறை ஆற்றல்‌ வெளிப்‌படுத்தப்பட்டபின்னர்‌ சிங்களத்து அரசியற்களம்‌ எவ்வாறுள்ளது! படையினரின்‌ இராணுவ இயலாமையை புரிந்துகொண்டு அமைதிவழியில்‌ இனச்சிக்கலுக்குத்‌ தீர்வுதேட சந்திரிக்கா அரசாங்கம்‌ முனையுமா! 

அல்லது

புலிகளுடன்‌ தொடர்ச்சியாகப்‌ போரிடுவது என்ற அம்மையாரின்‌ தேர்தல்‌ வாக்குறுதியின்‌ விதம் போர்‌ தொடருமா! 

மீண்டும்‌ அதிபராக அம்‌மையார்‌ பதவியேற்‌ற இரண்டு மாதங்கள்‌ கடந்துவிட்டன. அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு அவரது அரசாங்கம்‌ அறிகுறிகளைக் காட்டியுள்ளதா!

இல்லை.... ஆக்கநிறைவாக எந்தவொரு அறிகுறியும் வெளிப்‌படுத்தப்படவில்லை.

ஏற்கெனவே இயற்கை மரணம்‌ அடைந்துவிட்ட 'அமைதிப் பொதி' யை தமிழ்க்குழுக்களின்‌ முன்னிலையில்‌ வைத்து சந்திரிகா அரசாங்கம்‌ பிண நோட்டம் செய்கின்றது. தமிழினத்தின்‌ எதிரிகளும்‌ வஞ்சகர்களும் இணைந்து ஆடும்‌ இந்த அரசியல்‌ நாடகத்தை இனி இனச்சிக்கல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை என எவரும்‌ ஏற்கமாட்டார்‌.

இதேசமயம்‌, நோர்வே அரசாங்‌கத்தின்‌ முன்முயற்சியால்‌ இலங்‌கைத்தீவில்‌ அமைதி பிறக்குமாம்‌ என்ற அங்கலாய்ப்பும்‌ பரவலாக உள்ளது.

அமைதிவழியில்‌ இனச்சிக்கலுக்குத்‌ தீர்வுகாணச்‌ சந்தர்ப்பம்‌ கிடைத்தால்‌ புலிகள்‌ இயக்கம்‌ மகிழ்ச்சியுடன்‌ அதை வரவேற்கும்‌.

ஆனால்‌, இச்சிக்கலுக்குத்‌ தீர்வாக புலிகள்‌ இயக்கம்‌ முன்‌ வைத்த அரசியல்‌ நிலைப்பாடுகளை (மூன்றாந்தரப்பு நடுத்துவம் - திம்புக் கோட்பாடுகள்) சிங்‌கள அரசாங்கம்‌ முழுமையாக புறக்கணித்துவிட்டது.

இந்த நிலையில்‌ நோர்வே அரசாங்கத்தின்‌ முன்முயற்சிக்கு சிறிலங்கா அரசு ஒத்துழைக்கும்‌ என எதிர்பார்க்க முடியாது. 

எனவே சந்திரிகா அரசாங்கம்‌ அமைதிக் கதவைத்‌ திறந்து, நேர்‌மையாகவும்‌ - நியாயமாகவும்‌ பேச்சுக்களை நடாத்த முன்வரும்‌ என எதிர்பார்ப்பது மடமைத்தனம்‌.

அப்படியாயின்‌, போரைத்‌ தொடர்ந்து நடாத்தும்‌ திட மனவுறுதியுடன், சந்திரிகா அரசாங்கம்‌, திட்டங்களைத் தீட்டியுள்ளதா!

ஆம்‌... தீட்டிய திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம்‌ ஆரம்பித்து விட்டது. 

பதினையாயிரம்‌ பேரை - இரண்டு மாதத்திற்குள் - படையில் இணைக்க சிங்கள அரசாங்கம் முயல்கின்றது.

கடலிலும் வானிலும் ஆதிக்கம் செலுத்தும்‌ படைத்துறை ஆசையுடன்‌ ஆய்ததளபாடங்‌கள்‌ கொள்வனவு செய்யப்படுகின்றன. சில கப்பல்களையும்‌ - வானூர்‌திகளையும் வாங்கிவிட்டது.

தரைப்படையின்‌ சுடுவலுவை அதிகரிப்பதற்காகவும்‌ புலிப்‌படையின்‌ சுடுவலுவை தணிக்‌கும்‌ எண்ணத்துடனும்‌ புதிதாக சேணேவிகளை - தகரிகளை மற்றும்‌ நவீன படைத்துறை கதுவீ ஏந்தனங்களை சிங்களப்படைகள்‌ பெற்றுக்‌கொள்கின்றன.

படைத்துறை வகையாக ஆள்வலுவையும்‌ - ஆயுதவலுவையும் பெருக்கிக்கொள்ள முடியும். அதேவேளை, அரசியல்‌ அடிப்படையிலும் போருக்கு உரம்‌ சேர்க்கும்‌ வசையில்‌ தனது நிலைப்பாடுகளை அம்மையார்‌ அறிவித்து வருகின்‌றார்‌.

"பெளத்த யாப்பை ( அரசியல்‌ அமைப்பு அடிப்படையாக) காப்பேன்‌" என சிங்களவருக்கு அம்மையார்‌ உறுதியளித்துள்ளார்‌. தமிழ்‌ - முசுலீம்‌ மக்களின்‌ ஜனாதிபதி தான் என அம்மையார்‌ கூறிக்கொண்டாலும்‌ உண்மையில்‌ அவா்‌ சிங்களவர்களால்‌ மட்‌டும்‌ தேர்த்தெடுக்கப்பட்ட சிங்கள பெளத்த அதிபர் என்பதை அவரின்‌ செயல்கள்‌ காட்டுகின்றன. 

பெளத்த யாப்பின் முக்கிய பணி இலங்கைத்‌ தீவின்‌ அரசியலில்‌ சிங்கள - பெளத்த மேலாதிக்கத்தை பேணுவதேயாகும்‌. 

இலங்கைத் தீவானது கெளதம புத்தரால்‌  தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம்‌ என்பது சிங்கள - பெளத்தத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இந்தப்‌ புனித நிலத்தில்‌ மற்றைய மதங்களுக்கோ - மனிதர்களுக்கோ இடமில்லை. இது சிங்கள - பௌத்‌தர்களுக்குச்‌ சொந்தமான தீவு என்பதே அவர்களின்‌ அரசியல்‌ நிலைப்பாடு. பெளத்த யாப்பைப்‌ காப்பேன்‌ என்று அம்மையார்‌ உறுதி உரைத்தது வெறும்‌ மதவிவகாரம்‌ மட்டுமல்ல என்பது இங்கே புலப்படுகின்றது.

இதேசமயம்‌, வல்வளைக்கப்பட்ட தமிழர் நிலத்திலும்‌, தமிழீழ சிறிலங்கா எல்லைகளிலும்‌ தமிழ்‌ மக்‌களுக்கு எதிராக பல புதிய கெடுபிடிகளை சந்திரிக்க அரசாங்கம்‌ ஆரம்பித்துள்ளது. வன்னிக்கான உணவு - மருந்துப்‌ பொருட்களுடன்‌ மக்களின்‌ பயணப் போக்குவரத்திலும்‌ அரசாங்‌கம்‌ பல கட்டுப்பாடுகளை புதிதாக விதித்துள்ளது.

அத்துடன்‌, வவுனியாவிலிருந்து எல்லை தாண்டி சிறிலங்காவிற்கான பயணத்‌திற்கும்‌, மட்டக்‌களப்பு - அம்பாறை பகுதிகளிலிருந்து எல்லைதாண்டி கொழும்பு நகர்‌ நோக்கிச்செல்லவும்‌ சிங்கள அரசாங்கம்‌ பல கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.

இவை எல்லாம்‌ போர் அறிகுறிகளே ஆகும்‌. போர்க்கொள்கையை அரசாங்கம்‌ தொடர்ந்து கொண்டிருக்‌கின்றது என்பதையே இவை காட்டுகின்றன. அமைதிப்‌ பேச்சுவார்த்தையைப்‌ புறத்தள்ளியபடி சத்திரிகா அரசாங்கம் கடைப்பிடிக்கும்‌ இந்தப்‌ போர்முனைப்பை அனைத்துலகம் எவ்வாறு நோக்குகின்றது.

சிங்கள அரசாங்கமும்‌ - அதன்‌ நாளேடுகளும்‌ மதிப்புரைக்கும் அளவிலேயே பிரித்தானியாவின்‌ நிலைப்பாடு உள்ளது. தமிழ்மக்களுக்கு எதிரான மனிதயுரிமை மீறல்களுக்காக பொதுநலவாய அமைப்பில்‌ இருத்து சிறிலங்காவை வெளியேற்றவேண்டும்‌ என பிரித்‌தானியா கருத்துத்‌ தெரிவித்தது. தனது நாட்டிலிருந்து சிங்கள அரசாங்கத்திற்கு ஆயுதங்கள்‌ விற்கப்படுவதிலும்‌ கட்டுப்பாடுகளை விதித்து தனது மனக்குறையை பிரித்‌தானியா வெளிப்படுத்தியுள்ளது. பிரித்தானியா மட்டுமல்ல ஐரோப்‌பாக் கண்டத்தின்‌ பெரும்பாலான நாடுகளும்‌ சிங்கள அரசாங்கத்தின்‌ போர்வெறியை இனங்காணத்‌ தொடங்கிவிட்டன.

ஆனாலும்‌, அமெரிக்க ஆயுதங்‌கள்‌ சிங்களப்‌ படையினருக்கு தொடர்ந்தும்‌ கிடைத்து வருவது சிறிலங்காவின்‌ அரசியல்‌ - படைத்துறைத் தலைவர்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கலாம்‌. எனினும்‌ அந்த 'ஆயுத விற்பனையை' தமிழருடன்‌ சிறிலங்கா அரசாங்கம்‌ நடாத்தும்‌ போருக்கு அமெரிக்காவும்‌ ஆதரவளிக்கின்றது என பொருள்படுத்‌தக்‌ கூடாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதர்‌ கருத்துத்‌ தெரிவித்துள்ளார்‌.

சிறிலங்காவுக்கான ஆயுதவிற்பனையை அரசியல்‌ அடிப்படையில் நியாயப்படுத்தமுடியாத அமெரிக்காவின்‌ நெருடல்‌ நிலையையே அமெரிக்கத் தூதரின் கருத்து புலப்படுத்துகின்றது..

எது எப்படி இருப்பினும்‌, போர்‌ மூலம்‌ தமிழரின்‌ இனச்சிக்கலுக்குத் தீர்வு காண்பது என்ற அம்‌மையாரின்‌ திட்டம்‌ படுதோல்வி அடைத்து விட்டதை அனைத்துலகம் கண்டுவிட்டது. இந்த நிலையில்‌, மீண்டும்‌ அம்மையார்‌, போர்க்குரல் எழுப்பி படைத்துறை வழிமுறையில் இனச்சிக்கலை அணுக எடுத்திருக்கும் முடிவை அனைத்துலகம் அங்கீகரிக்கவில்லை. இதனால் எதிர்காலத்தில் போருக்கான நிதியைப் பெறுவதில்‌ சிங்களம்‌ பல சிக்கல்களை எதிர்கொள்ளும் என்பது திண்ணம். 

சந்திரிக்கா அரசாங்கத்தின்‌ போர்முனைப்புக்கு களநடப்பியல் கூறும்‌ மறுமொழியென்ன!

சிங்களப்படைகளுக்குச் சாதகமாக களநிலைமைகள் இல்லையென்று சிங்களப் படைய ஆய்வாளர்களே ஒப்புக்கொள்கின்றனர். ஓயாத அலைகள் - 3 படை நடவடிக்கையின் போது புலிகள்‌ நடாத்திய மூன்று கட்ட நிலமீட்புத் தாக்குதல்கள் சிங்களப் படைகளுக்குப்‌ பாரிய தோல்‌விகளைக்‌ கொடுத்துவிட்டன.

நிலம்‌ மீட்கப்பட்ட கூறுகளுடன் - வெற்றிலைக்கேணி வெற்றியுடன்‌ - நீண்ட கரையைக்‌ கொண்ட கடற்பரப்பும்‌ மீட்கப்பட்டுள்ளது. இவை தமிழர் விடுதலைப்‌போரில் ஒரு புதிய படைத்துறை நடப்பியலைப் பிறப்பித்துள்ளன. 

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

மூலம்: 'எரிமலை', எப்ரல் 2000, பக்கம்: 8-11
மூல எழுத்தாளர்: சுப்பு

எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 09|1|2022

 

 


ஆனையிறவு வீழ்ந்ததா? ! நெஞ்சுநெகிழ ஒர்‌ ஆனந்த அவஸ்தை 

 

சில மணிநேரத்திற்குள்‌, உலகத்தின்‌ எல்லா மூலைகளுக்கும்‌ அந்த இனிய செய்தி பரவியது. நெஞ்சை நிமிர்த்தி, முகம்‌ மலர்த்தி தெருவில்‌ இறங்கி, இந்த உலகத்தை உரிமையுடன்‌ பார்த்தனர்‌ தமிழர்கள்‌. உலகம்‌ தம்மை வியப்‌புடன்‌ பார்ப்பதாய்‌ உள்ளுணர்வு கொண்டனர்‌. பெருமிதம்‌ பொங்கும்‌ விழிகளால்‌ ஆனந்தக்‌ கண்ணீர்‌ சொரிந்தனர்‌. எதிர்ப்பட்ட தமிழர்‌களை கட்டியணைத்து முத்தம்‌ தந்தனர்‌. வெடி கொழுத்திக்‌ கொண்‌டாடினர்‌. தேசத்தின்‌ வீரர்கள்‌, வெற்றிகொண்டதாய்‌ மகழ்ச்சி. தேசியத்‌ தலைவரின்‌ படத்தை அச்சடித்து வீதிகளிலும்‌ வீடுகளிலும்‌ கடைகளிலும்‌ ஒட்டி நெகிழ்ந்து போயினர்‌.

இது சற்று மிகையான வெளிப்‌படுத்தல்‌ அல்ல. உண்மை இதுதான்‌. உலகத்தில்‌ இங்குமங்குமாய்‌ சிதறி வாழும்‌ தமிழர்கள்‌ மெய்சிலிர்த்துப்‌ போனது முற்றிலும்‌ உண்மை. எத்‌துணை பெரும்‌ சாதனை. உலகத்தில்‌ எங்கேனும்‌ இப்பெரும்‌ சாதனை படைக்கப்பட்டிருக்குமா? என்றே ஒவ்‌வொரு தமிழனின்‌ இதயமும்‌ வரலாற்றைப்புரட்டிப்‌ பார்த்திருக்கும்‌.

பதினையாயிரத்திற்கும்‌ மேற்பட்ட படையினரைக்‌ கொண்ட பெரும்‌ படைத்தளத்தை நாற்பத்தெட்டு மணிநேரத்திற்குள்‌, தாக்கி கைப்பற்றியிருப்பது, உலக மாசாதனையன்றி வேறென்ன.

கடந்த ஆண்டு இறுதியில்‌, வன்னி மண்ணில்‌ சிங்களப்படை பெற்ற மோசமான அவமானகரமான தோல்விகளுக்கு, ஏழு படைத்துறை அதிகாரிகளை பொறுப்பாக்கி, அவர்களுக்கு கட்டாய பணிஓய்வை சந்திரிகா அரசு வழங்கியிருக்கின்றது. வன்னித்‌ தோல்வி எப்படி ஏற்பட்டது எனக்‌ கண்டறிய, சிறீலங்கா அதிபர் சந்‌திரிகாவால்‌ அமைக்கப்பட்ட, மூன்று படைத்துறை அதிகாரிகளைக்‌ கொண்ட உசாவல் குழுவால்‌, ஏழு அதிகாரிகள்‌ தோல்வியின்‌ பொறுப்‌பாளிகளாக்கப்பட்டுள்ளனர்‌. இந்த உசாவல் முடிவின்‌ வழிவகை, அந்த ஏழு அதிகாரிகளுக்கும்‌ சந்‌திரிகாவால்‌ மார்ச்‌ இறுதியில்‌ கட்‌டாய பணி ஓய்வு வழங்கப்பட்டது. 

இப்படி ஒரு தீர்ப்பை வழங்க, அதற்காக சிலரது தலையை உருட்டி விடுவதன்‌ மூலம்‌ தன்‌ தலையைக்‌ காப்பாற்ற சந்திரிகா முயற்சித்திருப்பது தெளிவானது. இந்த வரலாற்றுத்‌ தோல்விக்கு பதில்‌ சொல்ல வேண்டியவர்‌, முப்படைக்கும்‌ பொறுப்பான சந்திரிகா என்பதன்‌ இசையை மாற்றி, பழி யார்மீது வீழ்த்தப்பட்டிருக்கின்றது. 

அடுத்து வரும்‌ மாபெரும்‌ தோல்விகளை உணராமல்‌, இத்‌துடன்‌ தோல்வியால்‌ வந்த தொல்‌லைகள்‌ தொலைந்தது என சந்திரிகா நிம்மதிப்‌ பெருமூச்சு விட்டார்‌. 

ஆனால்‌, சந்திரிகாவின்‌ நிம்மதியின்‌ ஆயுள்‌ கம்மியாவும்‌, சிலநாட்‌கள்தான்‌. ஓயாத அலைகள்‌ மூன்‌றின்‌ அடுத்தகட்டத்‌ தாக்குதல்கள்‌, குடாநாட்டுக்குள்‌ சிங்கள அரசின்‌ வல்வளைப்பு கனவின்‌ மையநிலை அருகே ஆரம்பித்துவிட்டது.

வடமராட்சி கிழக்கில்‌ அமைந்‌திருந்த சிங்களப்படையின்‌ வலு பொருந்திய வெற்றிலைக்கேணி, கட்‌டைக்காடு படைத்தளங்கள்‌, அழிக்‌கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட குடாநாட்டு மீட்புப்போர்‌, இன்று அதன்‌ முக்கியமான கட்டத்தில்‌ நிற்‌கின்றது.

பொறுமையாகவும் மெதுவாகவும்‌ ஒவ்வொரு அடிகளையும்‌ உறுதியாக வைத்தபடி, ஆனையிறவை முழுமையான முற்றுகைக்குள்‌ கொண்டுவரும்‌ நகர்வை மேற்கொண்டிருந்த விடுதலைப்‌ புலிகள்‌, இன்று, ஆனையிறவு இயக்கச்சிப்‌ பெருந்தளத்தை இரண்டு நாட்கள்‌ நடத்திய உக்கிரமான தாக்‌குதலின்‌ பின்னர்‌ முற்றுமுழுதாக கைப்பற்றிக்கொண்டனர்‌.

பத்தாயிரத்திற்கும்‌ மேற்பட்ட படையினர்‌ குவிக்கப்பட்ட பெருந்‌தொகை நவீன ஆயுதங்கள்‌, சேணேவிகள்‌, தகரிகள்‌, கவவூர்திககள்‌ என, ஒரு இறுக்கமான, வலுபொருந்திய படைத்துறை அரக்‌கன்‌ குந்தியிருப்பது போல்‌ அமைந்‌திருந்த பெரும்‌ தளமே, விடுதலைப்‌ புலிகளால்‌ வீழ்த்தப்பட்டுள்ளது. பதினெட்டாம்‌ நுற்றாண்டில்‌, ஒல்லாந்‌தர்களால்‌ ஆனையிறவில்‌ அமைக்கப்‌பட்டிருந்த இத்‌ தடைமுகாம் ஒவ்வொரு வல்வளைப்பாளர்களின்‌ காலகட்டங்களிலும்‌ பத்தாகி நூறாகி ஆயிரமாகி தற்போது பல்லாயிரமாக வலுப்பெற்ற தளமாக இருந்த நிலையிலேயே, தமிழர்‌ சேனையால்‌ அழிக்கப்பட்டிருக்கின்றது. அகற்றப்‌பட்டிருக்கின்றது.

மெதுவாக, அதேவேளை உறுதியாக, சரியாகத்‌ திட்டமிட்டு, உரிய தந்திரவழிவகைகளுடன்‌, தமது இலக்கு நோக்கி நாட்கள்‌, வாரங்கள்‌, மாதங்‌களாக நகர்ந்த விடுதலைப்‌ புலிகளின்‌ சிறப்பு அதிரடிப்படை அணிகள்‌, ஏப்பிரல்‌ இருபதாம்‌ திகதி, பெரும்‌ தளத்தை தமது முழுமையான முற்றுகைக்குள்‌ கொண்டு வந்தனர்‌. 

மதர்ப்போடு, திமிர்காட்டி நின்ற  சிங்களப்படையின்‌ ஆனையிறவுப்‌ பெரும்‌ பூதத்தை, பட்டினி போட்டு பணிய வைக்கின்ற முன்னைய தந்திரவழிவகையை கைவிட்டு, நேரடியாகவே களம்‌ இறங்கினர்‌ விடுதலைப்‌ புலிகள்‌. விடுதலைப்‌ புலிகளின்‌ ஆயுத வளமும்‌ படைவலுவும்‌, ஒரு மரபுப்‌போர்ப்‌ பாணியில்‌, படைத்துறை அதிரடித்‌ தாக்குதலை மேற்கொள்ளவும்‌, மழை போன்று சேணேவி எறிகணைத்‌ தாக்குதல்களை நடத்தவும்‌ விடுதலைப் புலிகளுக்கு கைகொடுத்தது. 

சிங்களப்‌ படையின்‌ வழங்கல்‌ பாதையை முற்றாக துண்டாடி, ஆனையிறவுக்கும் பளைக்கும் இடைப்பட்ட பெரும்‌ பகுதியை மீட்டெடுத்து வலுப்படுத்தி, இறுதிக்‌ கட்டத்‌ தற்போதைய தாக்குதலைத்‌ தொடுத்தனர்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ சிறப்பு அதிரடிப்படைகள்.

ஆனையிறவு வீழ்ச்சி, யாழ்‌ குடாநாட்டில்‌ சிங்களப்படை நிலைகொள்ள முடியாத நிலையை ஏற்‌படுத்தியுள்ளது என்பது தெட்டத்‌தெளிவானது. ஆனையிறவு வீழ்ச்‌சியுடன்‌, தெற்கு நோக்கி தமது பெட்டிகளைக்‌ கட்டவேண்டிவரும்‌ என்பது சிங்கள அரசிற்கு நன்கு தெரியும்‌.

அதனால்தான்‌ ஆனையிறவை எப்பாடுபட்டாவது காப்பாற்றியாக வேண்டும்‌ என்று, சிங்களப்‌ படைத்‌ தலைமையும்‌ அரச தலைமையும்‌ படாதபாடுபட்டன. பெருந்தொகைப்‌ படையினரைக்‌ குவித்தும்‌, நவீன ஆயுத தளபாடங்களைக்‌ கொண்டு சேர்த்தும்‌ அது கடும்‌ முயற்சிகளை மேற்கொண்டது. வெளிநாட்டு படைத்துறை வல்லுநர்களின் பயிற்சியைப்‌ பெற்றும்‌, ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தியும்‌ பார்த்தது. ஆனால்‌ யாவும்‌ விழலுக்கிறைத்த நீராயின.

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்‌ணூற்ரோராம்‌ ஆண்டும்‌, ஆனையிறவுப்‌ பெரும்‌ தளத்தை விடுதலைப்‌ புலிகள்‌ முற்றுகையிட்டிருந்தனர்‌. முப்‌பத்தியொரு நாட்களாகத்‌ தொடர்ந்த அந்த முற்றுகைச்‌ சமர்‌, இறுதியில்‌ தன்‌ இலக்கை அடையவில்லை என்ற போதும்‌, விடுதலைப்‌ போராட்டத்தை, அது இன்னுமொரு படிநிலைக்கு முன்னகர்த்தியது. இலங்கைத்‌ தீவில்‌ இரு படைத்துறைகள்‌ இருக்கின்றன என்ற உண்மையை அது உலகிற்கு சொல்லியது. கரந்தடிப்போர்‌ அணிகளாக தாக்குதல்களை நடத்திய விடுதலைப்‌ புலிகளை, ஓர்‌ மரபுப்‌படையணியாக இனங்காட்டிய சமராகவும்‌ அமைந்தது. குறைந்த வளத்‌துடன்‌, வலுப்பொருந்திய எதிரியை பல நாட்கள்‌ நேருக்குநேர்‌ சந்தித்து, ஒரு படைத்துறை சாதனையையே விடுதலைப்‌ புலிகள்‌ படைத்திருந்தனர்‌.

ஆனால்‌, இன்று நிலைமையோ வேறானது. ஒவ்வொரு சமர்க்களங்‌களிலும்‌, பட்டறிந்து போரியல்‌ கலையில்‌ மெருகேறிப்போயுள்ளது விடுதலைப்‌ புலிகளின்‌ அணிகள்‌. சமர் தந்திரவழிவகைகள்‌, படை நடத்துகைகள்‌, படை நகர்த்துகைகளை நுணுக்‌கமாகவும்‌ ஒரு நீண்ட களமுனை அனுபவங்களோடு கற்றுத்தேர்ந்த கட்டளையாளர்கள், பட்டை தீட்டிமிளிர்‌கின்ற போராளிகள்‌, இவற்றிற்கு விடுதலைப்‌ புலிகளின்‌ கைகளை வலுப்படுத்தியுள்ள சிங்‌களப்படைகளின்‌ நவீன ஆயுதங்கள்‌, சேணேவிகள் என விடுதலைப்‌ புலிகள்‌ முன்னெப்போதையும்விட வலுப்பொருந்திய நிலையில்‌ இருக்‌கின்றனர்‌. இவற்றை எல்லாம்‌ விட, எதிரியின்‌ வலு, வலுவீனங்களை துல்லியமாக எடைபோட்டு, நுண்ணியமாக, அதியற்புதமாக படை நடவடிக்கைகளைத்‌ திட்டமிட்டு, நெறிப்படுத்தும்‌ எமது தேசியத்‌ தலைவரின்‌ உலகம்‌ வியக்கின்ற போராற்றல்‌.

தொண்ணூற்ரோராம்‌ ஆண்டு, ஆனையிறவை மீட்க சிங்களப்படை, கடல்வழித்‌ தரையிறக்கத்தை மேற்‌கொண்டது. அதனை ஒத்தவகையில்‌, அதேபாதையில்‌ கடல்வழித்‌ தரையிறக்கத்தை மேற்கொண்டே தற்போது விடுதலைப்‌ புலிகள்‌ ஆனையிறவைக்‌ கைப்பற்றியுள்ளனர்‌.

ஆனையிறவு வீழ்ச்சியுடன்‌ யாழ்‌ குடாநாட்டு மீட்சியும்‌, உறுதியாகி விட்டது.

கட்டளையதிகாரியை மாற்றி, படை நடத்துகைகளை மேற்கொண்ட போதும்‌, முப்படைக் கட்டளையாளர்களை பலாலியில்‌ தங்கவைத்து படையினரைப்‌ சமரிடப் பணித்த போதும்‌ வெற்றி இயலுமைப்படவில்லை . விடுதலைப்‌ புலிகளின்‌ நகர்வை சிங்களப்‌ படையினரின்‌ எந்த முயற்சிகளாலும்‌ தடுத்து நிறுத்த முடியவில்லை.

இறுதிக்கட்டமாக, சந்திரிகாவின்‌ சிறப்புப் பணிப்பின்பேரில்‌, சிங்ககளத்தின்‌ நம்பிக்கை வெள்ளி ஜானக பெரேரா யாழ்‌ சென்ற மறுநாளே, அவர்களின்‌ மோசமான தோல்விச்‌ செய்தியைத்தான்‌ அவரால்‌ கொழும்புக்கு அனுப்ப முடிந்திருக்கின்றது. ஆயிரத்தித்‌ தொளாயிரத்து தொண்ணூற்றைந்தாம்‌ ஆண்டு, யாழ்பாணத்தைக்‌ கைப்பற்றும்‌ நடவடிக்கையில்‌ முன்நின்று வெற்றிகளைக்‌ குவித்தவர்‌ என்பதற்கு மாத்‌திரம்‌, ஜானக பெரேரா யாழ்‌ அனுப்பப்பட்டுள்ளார்‌ எனக்‌ கொள்‌ளப்பட வாய்ப்பில்லை. மாறாக, படுகொலைகளுக்கும்‌ புதைகுழிகளுக்‌கும்‌ பெயர்‌ பெற்றவர்‌ இவர்‌ என்பதே இதன்‌ முதன்மை காரணமாக் இருக்கும்‌. செம்மணிப்‌ புதைகுழிகளின்‌ நாயகன்‌ ஜானக பெரேரா தற்போது யாழ்ப்பாணம்‌ அனுப்பப்பட்டிருப்பதன்‌ நோக்கம்‌ மிகப்‌ பயங்கரமானதாகவும்‌ கொடூரமானதாகவும்‌ இருக்கும்‌ என்றே அஞ்சப்படுகின்றது.

யாழ்‌ குடாநாட்டை வல்வளைத்த போது மேற்கொண்ட கொடுமையை, யாழ்‌ குடாநாட்டை விட்டுச்‌ செல்லுகையிலும்‌ சிங்களப்படை செய்யப்‌போகின்றதா? விதைத்தால்‌ எங்‌கேனும்‌ அறுக்க வேண்டிவரும்‌.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

 கட்டுரைகள்

 

மூலம்: 'எரிமலை', மே 2000, பக்கம்: 4-6
மூல எழுத்தாளர்: ஜெயராஜ் தமிழீழம்
எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 09|1|2022

 

 

இலங்கையில் மிகக் கடினமான களமுனையில் புலிகள் பெற்ற மகத்தான வெற்றி

 

கணவாய்கள்‌, கால்வாய்கள்‌, தொடுகடல்கள்‌, துறைமுகங்கள்‌ என்பன சில நாடுகளில்‌ அல்லது பகுதிகளின்‌ நுழைவாயில்களாக இருந்துவருகின்றன. அந்நாட்டையோ அன்றிப்‌ பகுதியையோ கட்டுப்பாட்டில்‌ கொண்டுவரவிளைபவர்‌கள்‌ அன்றி குறித்த பகுதியை தமது பிடியில்‌ வைத்துக்கொள்ள விரும்புகின்றவர்கள்‌ அவற்றை தமது கட்டுப்பாட்டில்‌ வைத்துக்‌ கொள்வது தேவையாகிறது. வேறுவிதமாகக்‌ கூறுவதானால்‌ அவற்றைக்‌ கட்டுப்பாட்‌டில்‌ கொண்டுவராதவர்கள்‌ அன்றி கட்டுப்‌பாட்டில்‌ வைத்திருக்க முடியாதவர்கள்‌ அப்‌ பகுதியை வெற்றி கொள்ள முடியாதவர்‌களாகவும்‌, அன்றி அப்பகுதியைக்‌ கட்டுப்‌பாட்டில்‌ வைத்துக்கொள்ள முடியாதவர்களாகவுமே இருந்துள்ளனர்‌.

இந்திய துணைக் கண்டத்தைப்‌ பொறுத்து அதன்‌ தரைவழி நுழைவாயிலாக கைபர்‌ கணவாய்‌ இருந்தது. இக்கணவாயைக்‌ கடந்து வந்து வெளிநாட்டவர் இந்தியாவைப்‌ பல தடவை வெற்றி கொண்டுள்ளார்கள்‌. இதில்‌ கிரேக்கத்தில்‌ இருந்து வந்த மா அலெக்சாண்டரில்‌ இருந்து பின்னர்‌ ஆப்‌கான்‌, மத்திய ஆசியாப்‌ பகுதிகளில்‌ இருந்து படையெடுத்து வந்த பலரும்‌ அடங்குவர்‌. இவர்கள்‌ இயற்கை அரணான இமயத்‌தொடரில்‌ உள்ள கைபர்‌ கணவாயைத்‌ தாண்டியே வெற்றி பெற்றார்கள்‌. 

இதேசமயம்‌ கடல்‌ வழியாக நுழைந்‌தவர்கள்‌ குறிப்பாக ஐரோப்பியர்கள்‌ துறைமுகங்களைத்‌ தமது நுழைவாயில்களாகக்‌கொண்டனர்‌. அவற்றை வெற்றிகொண்டவர்கள்‌ தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்‌கொண்டனர்‌. இது இந்தியாவிற்கு மட்டுமானதொரு எடுத்துக்காட்டல்ல. உலகிற்கும்‌ பொருத்தமான எடுத்துக்காட்டே.

இதேவேளை பிரிட்டன்‌ மீது ஆதிக்கம்‌ செலுத்த முயன்ற பிரெஞ்சு பேரரசர் நெப்போலியனும்‌ சரி செருமனிய வல்லாட்சியர் கிட்லரும்‌ சரி ஆங்கிலக்‌ கால்‌வாயை தமது கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்டு வந்துவிட பெரும்‌ முயற்சி செய்தனர்‌. ஆங்‌கிலக்‌ கால்வாய்‌ தமது கட்டுப்பாட்டிற்குள்‌ சில மணிநேரம்‌ இருக்குமானால்‌ பிரிட்டன்‌ தமது வசம்‌ ஆவதை எவருமே தடுத்து நிறுத்த முடியாது என அவர்கள்‌ கருதினர்‌. இதற்காகவே பெரும்‌ கடற்படையை உருவாக்க முனைந்தார்கள்‌. ஆனால்‌ இதில்‌ இவர்கள்‌ இருவராலுமே வெற்றி பெற முடியவில்லை.

இதேசமயம்‌, 1453ஆம்‌ ஆண்டில்‌ கொன்சுராந்திநோப்பிள்‌ - அதாவது இன்‌றைய இசுதான்புல்‌ துருக்கியிடம்‌ வீழ்ச்சி கண்டபோது ஆசியாவிற்கும்‌ ஐரோப்பாவிற்கும்‌ இடையிலான தரைவழி வணிகம் முடிவுக்கு வந்தது. அதாவது ஐரோப்பாவின்‌ நுழைவாயில்‌ துருக்கியர்களால்‌ மூடப்பட்டது.

இவ்வாரான எடுத்துக்காட்டு இலங்கைக்குக் கூட இல்லாமல்‌ இல்லை. கண்டி தலைநகரை வெற்றி கொள்ளவேண்டுமெனில்‌ அதற்கு மலைநாட்டின்‌ நுழைவாயிலான கடுகண்ணாவைக்‌ கணவாயை வெற்றி கொள்ள வேண்டிய கட்டாயம்‌ இருந்‌தது. போத்துக்கேயர்‌, ஒல்லாந்தரினால்‌ அது முடியாமல்போனது. ஆகையினால்தான்‌ பதினாறாம்‌ நூற்றாண்டின்‌ நடுவில் இலங்‌கையின்‌ கரையோரங்கள்‌ ஐரோப்பியரின்‌ குடியேற்றங்களாக மாறியபோது கண்டி அரசு பத்தொன்பதாம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதிவரை (1815) சுதந்திர அரசாக விளங்கக்கூடியதாக இருந்தது. அதாவது ஆங்கிலேயர்கூட கரையோரப்‌ பகுதிகளைக்‌ கைப்பற்றி சுமார்‌ இரண்டு பத்தாண்டுகளின் பின்னரே கண்டியைக்‌ கைப்‌பற்றிக்கொள்ள முடிந்தது. அதிலும்‌ கண்டி அரசில் உருவாகியிருந்த காட்டிக்‌கொடுப்போரின்‌ துணையுடன்‌. இவ்வாறாக உலக வரலாற்றில்‌ நுழைவாயில்களாகப்‌ பல பகுதிகளும்‌ துறைமுகங்களும்‌ இருந்துள்ளன. இந்த யாழ்‌ குடாநாட்டைப்‌ பொறுத்தவரையில்‌ ஆனையிறவானது அத்தனை முக்கியத்‌துவம்‌ பெறும்‌ பகுதி எனக்‌ கூறின்‌ மிகையாகாது. அதாவது யாழ்‌ குடாநாட்டின்‌ நுழைவாயில்‌ என்று ஆனையிறவுப்‌ பகுதியைக்‌ கூறுவது தவறாகாது.

யாழ்‌ குடாநாட்டைப்‌ பொறுத்து அது குடாநாடு என்ற பூதியல்(physical) அமைப்பிற்குள்‌, வரைவிலக்கணத்திற்குள்‌ உள்ளடக்கப்படுவதாக இருப்பினும்கூட அது மாரி காலத்‌தில்‌ அதாவது ஆனையிறவுக்‌ கடல்‌ நீரேரியில்‌ நீர்‌ நிறைந்து சுண்டிக்குளம்‌ தொடுவாய்‌ உடைப்பெடுத்ததும்‌ அது ஒரு தீவு என்ற வடிவத்தைப்‌ பெற்றுவிடுகின்றது. ஒரு வகையில்‌ பார்க்கப்போனால்‌ நான்கு, ஐந்து மாதங்கள்‌ தீவாகவும்‌ ஏழு, எட்டு மாதங்கள்‌ குடாநாடு என்ற நிலையிலுமே யாழ்‌ கோட்டம் உள்ளது எனலாம்‌.

அதிலும்‌ குடாநாடு என்ற பூதியல் வரையாக இருக்கும்‌ நிலையில்கூட இத்‌தொடுநிலப்பரப்பு ஊடாக தரைவழிப்‌ பாதைக்கான ஓர்‌ பொருத்தமான தரையமைப்பையோ அன்றி பண்பாட்டு அடிப்படையிலான கூறுகளையோ அதாவது மனிதனால்‌ உருவாக்கப்பட்ட கட்டுமானங்‌களையே கொண்டதாக இருக்கவில்லை. 

அடுத்ததாக யாழ்‌ குடாநாட்டின்‌ நுழைவாயிலாக்‌ கருதக்கூடிய, ஒருவகையில்‌ போக்குவரத்து இடம்பெற்றதான கேரதீவு - சங்குப்பிட்டி வீதியானது இன்னமும்‌ கடல்வழி போக்குவரத்தின்றி நேரடித்‌ தரைவழிப்பயணம்‌ மேற்கொள்ளத்தக்கதானதொரு நிலையில்‌ இல்லை. அதாவது யாழ்‌ கடல்‌ நீரேரி ஊடான தரைவழிப்‌ பாதை முற்றுப்பெறவில்லை. 

இந்நிலையில்‌ யாழ்‌ பகுதிற்கான நுழைவாயிலாக ஆனையிறவு ஊடான தரைவழிப்பாதையே ஆண்டு முழுமையும் பயன்பாட்டில்‌ உள்ள பகுதியாக இன்றுள்‌ளது. இந்த நிலையில்‌ இப்பகுதியின்‌ முக்கியத்துவமானது மிக உயர்ந்ததாகவும்‌ யாழ்‌ குடாநாட்டின்‌ ஆதிக்கத்தை, கட்டுப்‌பாட்டை தீர்மானம் செய்வதாகவும்‌ உள்‌ளது. வேறுவிதமாகக்‌ கூறுவதானால்‌ ஆனையிறவைக்‌ கட்டுப்பாட்டில்‌ வைத்திருப்பவர்‌கள்‌ யாழ்‌ பகுதியில் செல்வாக்குப்‌ பெறுவது தவிர்க்க இயலாததாகிவிடும்‌. 

இது ஒருபுறம்‌ இருக்க ஆனையிறவுப்‌ பெரும்‌ தளப்பகுதி அமைக்கப்பட்டிருந்த பகுதியானது மிகவும்‌ பாதுகாப்‌பானதொரு பூதியல் சூழலைக்‌ கொண்டதாகும்‌. சிறப்பாகக்‌ கூறுவதானால்‌, வடபகுதியில்‌ ஆனையிறவைப்‌ போன்று பெரும்‌ தளப்‌ பகுதி ஒன்றை அமைப்பதற்கு ஏற்றதொரு பூதியல் அமைப்பு, தரைத்‌தோற்றம்‌ எங்கும்‌ உண்டா என்றால்‌ இல்லை என்றே கூறலாம்‌.

முதன்மை நிலப்பரப்பில்‌ இருந்து பெரும்‌பாலும்‌ வேறுபட்ட அலகுபோன்று இருக்‌கும்‌ யாழ்‌ குடாநாட்டுப்‌ பகுதியின்‌ வாயிலில்‌ அமைந்துள்ள ஆனையிறவுப்‌ பெரும்‌ தளத்தின்‌ முன்னரங்கப்‌ பகுதிகள்‌ முதன்மை நிலப்பரப்பில்‌ உறுதியான நிலையில்‌ அமைக்கப்பட்டிருந்தது. மிக உறுதியாக அரண்‌ செய்யப்பட்டதாக முதன்மை வீதியை மையமாகக்‌ கொண்டு அமைக்கப்பட்டிருந்த  இப்பகுதியானது ஆனையிறவுத்‌ தளத்திற்கு “தீ” தடுப்பு போன்று உருவாகியிருந்தது.

இதேவேளை ஆனையிறவுத்‌ தளமானது வங்காள விரிகுடா, யாழ்‌ கடல்‌ நீரேரி, ஆனையிறவுக்‌ கடல்‌ நீரேரி என்பனவற்‌றுடன்‌ தொடர்புபட்டதாக 77 சதுரக்‌ கிலோ மீற்றர்‌ பரப்பளவைக் கொண்டிருந்தது. இதில்‌ இத்தளத்தின்‌ கிழக்குப்‌ பகுதி வங்‌காள விரிகுடாவுடனும்‌, மேற்குப்பகுதியின்‌ மையப்பகுதி யாழ்‌ கடல்நீரேரி எனக்‌ கடற்‌பரப்புடன்‌ தொடர்புபட்டிருந்தமையால்‌ பாதுகாப்பை உறுதிசெய்தல்‌ இலகுவாகும்‌. ஒருபுறம்‌ கடற்படையின்‌ கண்காணிப்பு என்‌பதும்‌ மறுபுறம்‌ கரையில்‌ இருந்து தடங்‌கலற்ற கண்காணிப்பு என்ற நிலையில்‌ அது வாய்ப்பானதாக இருந்தது.

இதேசமயம்‌ இத்‌ தளப்‌ பகுதியின் பெரும்‌ பகுதி குறிப்பாக கிழக்குப்‌ பாகம்‌ வெட்டையான பரந்த நிலப்பரப்பாக இருந்‌தமையானது கண்காணிப்பிற்கு ஏற்றதாயினும்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ தாக்குதலணிகளைத்‌ தொலைவிலேயே தடுத்து நிறுத்தக்கூடியதாக வாய்ப்புப்‌ பெற்றிருந்தது.

அத்தோடு ஆனையிறவுப்‌ பெரும் தளம்‌ வடகிழக்கு தொண்டமானாறு கடல்‌ நீரேரியும்‌ தொட்டிருந்தமையானதுகூட படையினருக்கு நற்பயனானதொன்றாகவே இருந்தது. அதாவது யாழ்‌ குடாநாட்டின்‌ தரைத்தோற்றம்‌ பெளதீக அலகுகளாகப்‌ பிரிக்கப்படுவதற்கும்‌, ஒரு அலகில்‌ இருந்து மற்றொரு அலகிற்கான நகர்விற்கு கடல்‌ நீரேரிகளைத்‌ தாண்டவேண்டிய கட்டாயத்‌தையும்‌ உருவாக்கியிருந்தது. இந்நிலையானது படை நகர்தல்‌, வழங்கல் என்‌பனவற்றிற்கு இடையூறு செய்பவையாகவே இருந்தன.

இந்த வகையில்‌ பூதியல் அடிப்படையிலான காப்புக்‌ கொண்ட ஆனையிறவுப்‌ பகுதியில்‌ சிறீலங்கா படைத்துறை அதன்‌ முக்கியத்துவம்‌ கருதி மிக உயர்வலுக்‌கொண்ட தனது இரண்டு படைப்பிரிவுகளை நிறுத்தியிருந்தது.

சிறீலங்கா படைத்துறையைப்‌ பொறுத்து அது பல படைப்பிரிவுகளை - டிவிசன்கள்‌ கொண்டதாக இருப்பினும்‌ அதன்‌ படைப்பிரிவுகளில்‌ முக்கியமானவையாக 53ஆம்‌, 54ஆம்‌, 55ஆம்‌, 56ஆம்‌ படைப்பிரிவுகளே இருந்து வருகின்றன. மறுவளமாகக்‌ கூறுவதானால்‌ இப்படைப்பிரிவுகளே சிறீலங்கா படைத்துறையை நிலைநிறுத்துபவையாக, அதன்‌ முதுகெலும்பாக இருந்துள்ளன.

இதில்‌ ஆனையிறவின்‌ முக்கியத்துவம்‌ கருதி 54ஆம்‌, 53ஆம்‌ படைப்பிரிவுகள்‌ அங்கு   நிலைகொள்ளவைக்கப்பட்டன. இதில்‌ 54ஆவது படைப்பிரிவே ஏற்கனவே ஆனையிறவுப்‌ பெரும்‌ படைத்தளத்தில்‌ நிலை கொண்டிருந்த படைப்பிரிவாகும்‌. 53ஆவது படைப்பிரிவு ஓயாத அலைகள்‌ - 03 நடவடிக்‌கைகளைத்‌ தொடர்ந்து அனுப்பிவைக்‌கப்பட்டதாகும்‌.

இப்படைப்பிரிவு இரண்டுமே சிறீலங்காப்‌ படைப்பிரிவுகளின்‌ சிறப்பு முக்கியத்துவம்‌ வாய்ந்தவையாகும்‌. இதில்‌ 54ஆவது படைப்பிரிவு சிறீலங்காப்‌ படைப்பிரிவுகளின்‌ தெறோச்சி உட்பட்ட கனவகை சேணேவிப் படைப்பிரிவு, தகரி உள்ளடங்கிய கவசவூர்திப் படைப்‌பிரிவு என்பனவற்றை உள்ளடக்கியது. இப்‌படைப்பிரிவு 541இல்‌ இருந்து 546 வரையிலான ஆறு படைத்தொகுதிகளைக்‌ கொண்டதாகும்‌. இவற்றில்‌ 542, 545, 546 படைத்தொகுதிகளில்‌ சேணேவி மற்றும்‌ கவசப்‌ படைப்பிரிவுகள்‌ சேர்க்கப்பட்டிருந்தன.

அதிலும்‌ இச் சேணேவிப் பிரிவில்‌ சீனாவிடம்‌ கொள்வனவு செய்யப்பட்ட 152 எம்‌. எம்‌. தெறோச்சிகள், 130 எம்‌. எம்‌, 122 எம்‌. எம்‌. தெறோச்சிகள் மற்றும்‌ பாக்கிஸ்தான்‌ தயாரிப்பு 120 எம்‌. எம்‌. கணையெக்கிகள் என்பன இடம்‌ பெற்றிந்தன. இதே சமயம்‌ கவசவூர்திப் படைப்பிரிவுயில்‌ சீனத்‌ தயாரிப்பு தகரிகள் மற்றும்‌ கவசவூர்திகள் முக்கிய இடம்‌ கொண்டவையாக இருந்தன.

இந்த வகையில்‌ 54 ஆவது படைப்பிரிவு படையினர் வலிந்த தாக்குதலுக்கும்‌, வலுவெதிர்ப்பிற்கும் என ஏற்றவகையிலான கனவகை ஆயுத தளபாடங்களைக்‌ கொண்டவையாக இருந்‌தன. இதே சமயம்‌ ஓயாத அலைகள்‌ - 03 படையணிகள்‌ வடபோர்முனையைத்‌ திறந்த பின்னர்‌ ஆனையிறவுப்‌ பெரும்‌ தளப்பகுதிக்கு அனுப்பப்பட்ட 53 ஆவது படைப்பிரிவு நேரடிச்‌ சமர்களுக்கென சிறப்பாகப்‌ பயிற்றப்பட்டவையாகும்‌. இப்படைப்பிரிவு சிறீலங்கா தரைப்படையின் சிறப்புப்‌ படைப்பிரிவு எனப்‌ பெயர்‌ பெற்றது. சிறீலங்கா தரைப்படையில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள்‌ வெளிநாட்டு வல்லுநர்களால் பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர்‌. இப்‌படைப்பிரிவு 531, 532, 533 ஆகிய மூன்று படைத்தொகுதிகளையும்‌, அத்தோடு மேலும்‌ சிறப்புப்படை பிரிவு (எஸ்‌. எவ்‌) சிறப்பு படகுச் சதளம் (எஸ்‌. பி. பிரிவு) என இரண்டு சிறப்புப்‌ பிரிவுகளையும்‌ கொண்டிருந்தது.

இதில்‌ 531 ஆவது படைத்தொகுதி வான்-நடமாட்ட படை எனவும்‌, 532 ஆவது படைப்பிரிவு 'அதிரடிப்படை' பிரிவு எனவும்‌, 533 ஆவது படைத்தொகுதி மூன்று சிறப்பு சமரணிகளைக்‌ கொண்ட சிறப்பு அணியாகவும்‌ இருந்தது. இதேசமயம்‌, இப்படைப்பிரிவில்‌ இருந்த சிறப்புப்படை படைத்தொகுதி (எஸ்‌. எப்‌ பிரிகேட்) சிறப்பு சதளம் (எஸ்‌. பி. பிரிவு) என்பன சிறப்புத்தேர்ச்சி பெற்ற சமரணிகளையும்‌, அதிரடிப்படைகளையும்‌ கொண்டவையாக இருந்தன.

இவ்‌ 53 ஆவது சிறப்பு பிரிவுகளைக்‌ கொண்ட படைப்பிரிவானது வெற்றிலைக்கேணி - கட்டைக்காடு, பரந்தன்‌, உமையாள்புரம்‌ என்பன ஓயாத அலைகள்‌ - 03 படையணிகளிடம்‌ வீழ்ச்சி கண்டபின்னர்‌ ஆனையுறவுப் படைத்தளத்தில்‌ நிறுத்தப்பட்டன. அதிலும்‌ குறிப்பாக ஓயாத அலைகள்‌ 03 படையணிகளின்‌ தாக்குதல்‌ எதிர்பார்க்கப்பட்ட இயக்கச்சிப்பகுதியில்‌ இருந்து தாளையடிப்‌ பகுதி வரையான முன்னணி நிலைகளிலேயே அவை நிறுத்தப்‌பட்டன.

இவ்வாறாக ஆனையிறவுப்‌ பெரும்தளமானது உச்ச வலுவெதிர்ப்புக் கொண்டதாக கொழும்பு படைத்துறை ஆய்வாளர்களின்‌ மதிப்பீட்டின்படி உயர்‌ வலுவெதிர்ப்பு தொண்டதாகவும்‌ மிகக்கடினமான சமர்க்களமாக மாற்றப்பட்டிருந்தது. இதனைச்‌ சிறீலங்கா படைதரப்பும்‌ ஒப்புக்கொண்டே இருந்‌தது. இத்தோடு, விடுதலைப்‌ புலிகளை எதிர்கொள்ள படைத்துறை தயாராக இருப்‌பதாகவும்‌ அது அறிவிப்புச் செய்தும்‌ இருந்‌தது. இந்த நிலையில்‌ ஆனையிறவை புலிகள்‌ வெற்றி கொண்டமையானது இலங்கையின்‌ மிகக்‌ கடினமானதும்‌, முக்கியத்துவம்‌ மிக்கதுமான சமர் முனையில்‌ புலிகள்‌ வெற்றி பெற்றுள்ளனர்‌ என்பதையே வெளிக்‌காட்டி நிற்கிறது.

இதன்‌ விளைவானது யாழ்‌ குடாநாட்டிற்‌கான நுழைவாயிலை விடுதலைப்‌ புலிகளின்‌ கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்டுவர உதவியுள்‌ளது. இது அடுத்த கட்டமாக யாழ்‌ குடாநாட்டின்‌ கட்டுப்பாட்டை விடுதலைப்‌ புலிகள்‌ தமக்குள்‌ கொண்டுவருவதற்கு அடித்‌தளமாக அமையும்‌ வாய்ப்பைக்‌ கொண்டதாகும்‌. அதாவது யாழ்‌ குடாநாட்டில்‌ புலிகளின்‌ கை மேலோங்குவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்‌.

ஏனெனில்‌ அவர்கள்‌ மிகக்கடுமையான களமுனை ஒன்றை வெற்றிகொண்டதன்‌ மூலம்‌ யாழ்‌ குடாநாட்டிற்கான தரைவழிப்‌ பாதையைத்‌ திறந்துள்ளனர்‌. 'ஜயசிக்குறு' நடவடிக்கை மூலம்‌ யாழ்‌ குடாநாட்டிற்கான தரைவழிப்பாதை ஒன்றை திறக்கும்‌ அரசின்‌ முயற்சியை முற்றாகவே முறியடித்து ஓயாத அலைகள்‌ - 03 படையணிகள்‌ அதன்‌ தொடர்‌ நடவடிக்கையாக ஆனையிறவுத்‌ தளத்தைக்‌ கைப்பற்றி குடாநாட்டிற்குள்‌ தமக்கு ஓர்‌ நேர்வழிப்பாதை திறந்துள்ளனர்‌. இது புலிகளின்‌ அடுத்தகட்ட நகர்வை உற்றுநோக்கும்‌ அளவிற்கு படைய ஆய்‌வாளர்களுக்குப்‌ பெரும்‌ ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

மூலம்: 'விடுதலைப்புலிகள்', வைகாசி-ஆனி 2000, பக்கம்: 14, 2 
மூல எழுத்தாளர்: அறியில்லை
எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 31|12|2021

 

 

 

ஆனையிறவுத்தள வீழ்ச்சி சிங்களத்தின்‌ அதிர்வலைகள்‌

 

 

நாற்பதாயிரம்‌ படையினருடன் உள்ள குடாநாட்டுப்‌ படையின்‌ கண்முன்னால்‌ ஐயாயிரமோ, ஆறாயிரமோ (பத்தாயிரம்‌ என்று வைத்‌துக்‌ கொண்டாலும்‌) ஆட்களைக்‌ கொண்ட புலிப்‌படையிடம்‌ ஆனையிறவைப்‌ பறிகொடுத்தது ஏன்‌?

அதுவும்‌ புலிகளைவிட பலமடங்கு ஆயுதவலுவை, சிறிலங்கா படைத்துறை கொண்டிருந்தும்‌- முப்படைகளும்‌ அதற்கு பக்கவலுவாக இருந்தும்‌ - புலிகளின்‌ படைநகர்த்தலை தடுக்கமுடியாது போனது ஏன்‌?

தகர்த்து - நுழைந்த புலிகளை தடுத்து - முறியடிக்கும்‌ திட்டம்‌ சிங்கள படைத்துறையிடம் இருந்திருக்கவில்லையா?

ஆனையிறவுத்தளத்தைப்‌ புலிகள்‌ கைப்பற்‌றிய செய்தி கொடுத்த அதிர்ச்சி காரணமாக பேரினவாத நாளேடுகள் எழுப்பிய கேள்விகள் இவை.

வடக்கில்‌ உள்ள படைத்துறை மோசமான அழிவை எதிர்கொண்டபடியுள்ளது. சிறிலங்காவும்‌ அவ்வாறே ஊறுக்குள்ளாகியுள்ளது என 'ஐலண்ட்‌' ஆங்கில செய்தித்தாள் (24.4.2000) ஆசிரியர்‌ தலையங்கம்‌ தீட்டி சிங்களத்தின்‌ மன உணர்வை வெளிப்படுத்தியுள்ளது.

வவுனியாவில்‌ இருந்து யாழ்ப்பாணத்திற்கு படைத்துறைப்பாதை திறக்கும்‌ கனவுடன் இருந்த சிங்களதேசத்‌திற்கு அதேபாதையை புலிகள்‌ கைப்பற்றி மாபெரும்‌ படைத்துறை வெற்றியை பெற்றுக்கொண்டிருக்கும்‌ செய்தி, அவர்களுக்கு அதிர்ச்சியையும்‌ அச்சத்தையும்‌ ஊட்டிவருகின்‌றது.

ஆனையிறவுத்தளம்‌ வீழ்ந்துகொண்டிருந்த போது சிறிலங்கா அரசாங்கத்தின்‌ அதிபர் எதிர்க்கட்சித் தலைவர்‌ உட்பட முக்கிய அரசியல்‌ புள்ளிகள்‌ நாட்டில்‌ இல்லாதது பேரினவாத வலிமைகளை கோபமூட்டிவிட்டது. 

உரோம்‌ பற்றியெரியும்போது அதை அசண்டைசெய்‌தபடி நீரோ மன்னன்‌ பிடில்‌ வாசித்‌துக்‌ கொண்டிருந்தாலும்‌, நீரோ மன்னன்‌ உராமிலேயே இருந்தான்‌. ஆனால்‌, ஆனையிறவு வீழ்ந்தபோது சந்திரிகா அம்மையார்‌ நாட்டில்‌ இல்லை - நாயகம் ரத்வத்த நுவரெலியாவில்‌ குளிர்காய்ந்தபடி மௌனமாக மறைந்தருந்தார்‌ என ஐலண்ட்‌ செய்தித்தாள் அவர்‌களை காரசாரமாகச்‌ சாடி ஆசிரியர் தலையங்கம்‌ வரைந்துள்ளது.

சிங்களவீரத்திற்கு அவமானத்தைத்‌ தேடித்‌தந்த மோசமான படைத்துறைத் தோல்வியை ஒரு சிறிய பின்னடைவு என்றும் தந்திரவழிவகை பின்வாங்கல்‌ என்றும்‌ பாதுகாப்பு முன்னரங்கங்‌களை மாற்றி அமைத்தல்‌ என்றும்‌ சொற்றிறன் மூலம்‌ மழுப்ப முயன்ற சிங்கள படைத்துறை கட்டளையாளர் சிறிலால்‌ வீரசூரியாவை சிங்களத்‌ தொடர்பூடகங்கள்‌ விமர்சித்துள்ளன.

ஆயுதவலுவால்‌ புலிகள்‌ வலுவடைந்துவிட்டனர்‌. அவர்களிடம்‌ 60மிமீ, 80மிமீ, 120மிமீ கணையெக்கிகள் மற்றும்‌ பல்குழல்‌ என ஆயுதங்கள்‌ உண்டு என்ற படைத்துறைக் கட்டளையாளரின்‌ விளக்கத்திற்கு இந்த ஆயுதங்கள்‌ சிங்கள படைத்துறையிடம் இல்லையா எனக்கேள்வி எழுப்பி படைத்துறை கட்டளையாளரை சங்கடத்‌திற்குள்ளாக்கியுள்ளன.
 
இதேசமயம்‌, இது ஒரு தற்காலிகப் பின்னடைவு. புலிகளை நசுக்கும்வரை போர்தொடரும்‌ என்ற அம்மையாரின்‌ கருத்தை ஆமோதித்து அதற்கென பல ஆசிரியர்‌ தலையங்கங்களை சிங்களத்தின்‌ நாளேடுகள் எழுதி சிங்களவர்‌களை அமைதிப்படுத்த முயல்கின்றது.

ஆனையிறவுத்தளத்தைப்‌ பாதுகாக்க முப்‌படைக் கட்டளையாளர்களையும்‌ குடாநாடு சென்று சமரை நேரடியாக நெறிப்படுத்தும்படி சந்திரிகா அம்மையார்‌ பணித்திருத்தார்‌. இருபது நாட்கள் பலாலியில்‌ தரித்துநின்று படைநடாத்‌தியும்‌ அவர்களால்‌ ஆனையிறவை தக்கவைக்க முடியவில்லை.

தோல்விக்கான காரணங்களை விளக்க கொழும்பில் செய்தியாளர்களை அழைத்து படைத்துறை கட்டளையாளர் மாநாடு நடாத்தியபோது ஒரு செய்தியாளர் கேட்டார்‌, படைத்துறை கட்டளையாளராக நீர் பதவி வகித்தபோது வன்னியில்‌ படைத்துறை தோல்வியைச்‌ சந்‌தித்தது. இப்போது ஆனையிறவில்‌. எனவே பதவியைத்‌ துறந்துவிட்டு வீட்டிற்குப்‌ போகவேணும்‌ என்று தோன்றவில்‌லையா? என வினவினார்‌.

பதவி விலகலால்‌ சிக்கல்களைத் தீர்க்க முடியாது என இரட்டை பொருளில் படைத்துறைக் கட்டளையாளர் மறுமொழி கூறினார்‌. குடாநாட்டைக்‌ கைப்பற்றிய ரிவிரசவின்‌ களநாயகர்கள் என புனைந்துரைக்கப்பட்டவர்களில்‌ ஜானக பெரேராவும்‌ - சரத்‌ பொன்‌சேகராவும்‌ அடங்குவர்‌. ஆனையிறவு வீழ்ச்சியைத்‌ தடுக்க இந்த இரு கட்டளையாளர்களும்‌ பலாலிக்கு அனுப்பப்பட்டனர்‌. அந்த வெற்றிநாயகர்‌களின்‌ கண்‌முன்னால்‌ ஆனையிறவு பறிபோனது நல்லதொரு வரலாற்றுச்சுவை.

ஓயாத அலைகள்‌ மூன்றின்‌ ஆரம்‌பத்தில்‌ வன்னியில்‌ உத்தரவில்லாமல்‌ பின்வாங்‌கி ஓடியதற்காக இரண்டு மேஜர் ஜெனரல்கள், ஒரு பிரிகேடியர், ஒரு கேணல், மூன்று மேஜர்கள் கட்டாய விடுப்பில்‌ வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்‌. ஆனையிறவில்‌ உத்தரவுப்படி  பின்வாங்கியோடல்‌ நடந்தது. இரண்டு களத்திலும்‌ பின்‌வாங்கி ஓடல்‌ என்பது பொதுவான படைத்துறை கூறாக இருந்தது. அது உத்தரவுபெற்றா! பெறாமலா! என்‌பதே சிங்களப்படைகள்‌ சந்தித்துள்ள இன்றைய களநடப்பியலாகும்‌.

சந்திரிகா அரசாங்கம்‌ பதவியேற்ற பின்னர்‌ அது, ஈட்டிய படைத்துறை வெற்றி குடாநாடு கைப்பற்றப்பட்டதேயாகும்‌. அதன்பின்‌ முல்லைத்தீவு - பூநகரி- வன்னி- ஆனையிறவு - என அடுத்தடுத்து பாரிய படைத்துறை தோல்விகளை அம்மையாரின்‌ அரசாங்கம்‌ அனுபவித்து வருன்றது எனச் சிங்‌கள ஆய்வாளர்கள்‌ சுட்டுகின்றனர்‌. பெரிதாக பரப்புரைப்படுத்தப்பட்ட குடாநாட்டு வெற்றியும்‌ இப்போது புஸ்வாணமாகிவருகின்றது என அவர்‌கள்‌ அழுது புலம்புகின்றனர்‌. 

சிங்களப்படைக்கு என்ன நடந்துவிட்டது! என சிங்களதேசமே அச்சத்துடன்‌ அங்கலாய்‌க்கின்‌றது. அரசியல்‌ படைத்துறை தலைமைகள்‌ செயலிழந்துவிட்டன என ஒரு சாராரும்‌, படைத்‌தலைமையிடம்‌ சரியான போர்த்‌திட்டம்‌ இல்லை என வேறொருசாராரும்‌ தீர்ப்புக்‌ கூறுகின்றனர்‌.

ஆனால்‌, 'ஐலண்ட்‌' செய்தித்தாளில் வாராவாரம்‌ தவறாமல பேரினவாத வெறியைக்‌ கக்கிவரும்‌ நளின்‌ டி சில்வா என்ற இனவாதச்‌ சிந்தனையாளர்‌ வேறொரு தீர்ப்பை வழங்குகின்றார்‌.

ஆயுதங்களுடன்‌ மட்டும்‌ ஒரு படைத்துறை போர்‌புரிய முடியாது. அதற்கு ஒரு அரசியல் சித்தாந்‌தமும்‌ இருக்கவேண்டும்‌ (26.4.2000) என திருவாய் மலர்ந்துள்ளார்‌. பொருள்‌ பொதிந்த இந்த அரசியல்‌ வசனம்‌ இந்தப்‌ பச்சைப்‌ பேரினவாதியின்‌ சொந்த வசனம்‌ அல்ல. உலக வரலாற்றாய்வாளர்கள்‌ ஏற்றுக்கொண்ட பொதுவான வரலாற்றுத்தீர்ப்பு இது. ஏற்‌கனவே, சிங்கள - பெளத்த பேரினவாத அரசியல்‌ என்ற  சித்தாந்தத்தை சிங்களப்படைகள்‌ கொண்டுள்ளன. ஆனால்‌, சிங்களப்படைக்கு அப்படி ஒரு அரசியல்‌ சித்தாந்தம்‌ இல்லை என்றும்‌ அது மனிதநேய கருத்துக்களாலேயே பாதிக்கப்பட்டு போர்புரிய முடியாது திணறுகின்றது என்றும்‌ இந்த இனவாதச்‌ சிந்‌தனையாளர்‌ நிறுவமுயல்‌கின்றார்‌.

ஆனையிறவு வீழ்ச்சியுடன்‌ 'சிங்கள உறுமய' என்ற பேரினவாத அரசியல்‌ கட்சி முளைத்‌தெழுந்துள்ளது. சிங்களத்‌தின்‌ முதன்மை கட்சிகள் இரண்டும்‌ போரைச்‌ சரியாக நடாத்தவில்லை. சிங்களவரின்‌ உரிமைகளை நிலைநாட்டவில்லை என இந்தப்‌ புதிய கட்சி குற்றம்‌ சாட்டியுள்‌ளது. தமது கட்சி சிங்களவரின்‌ விடுதலைப்‌ போராட்‌டத்தை நடாத்தப்‌போகின்றது என தனது கொள்கைச் சாற்றாணையை கட்‌சித்தலைமை சாற்றாணைப்படுத்தியுள்ளது. ஆளும்கட்சி-எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌ சிலர்‌ இப்புதிய கட்‌சியில இடம்பெற்‌றுள்ளனர்‌. முக்கியமன சில சிங்களப்‌ பரவலறிகளும்‌ இதில்‌ இணைந்துள்ளனர். உலகப் புகழ்பெற்றுவிட்ட சிங்களக்‌ கிரிக்கெட்‌ வீரர்‌ 'அர்ச்சுணா ரணதுங்கா' இதில்‌ முக்‌கியமானவர்‌. ஆனையிறவில்‌ காயம்பட்டு கொழும்பு வைத்‌தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  வீரர்களுக்கு வரிசையில் நின்று அரத்தம்‌ வழங்‌கி இவர்‌ தனது அரசியல்‌ வாழ்வை ஆரம்பித்துளளார்‌. இப்‌புதிய கட்சியின்‌ தோற்றத்திற்கும்‌ - அதன்‌ கொள்கை நிலைப்பாட்டிற்கும்‌ சிங்கள - ஆங்கில நாளேடுகள் முக்கியத்துவம்‌ கொடுத்துப்‌ பரப்புரைப்படுத்தியுள்‌ளன.

பெளத்தபிக்குகள்‌ - அரசியல்வாதிகள்‌ - மதியுரைஞர்கள் - தொடர்பூடகவியலாளர்கள்‌ என பன்முகப்பட்ட பேரினவாதப்‌ பட்டாளத்‌தில்‌ விளையாட்டு வீரர்களும்‌ இணையத்‌தொடங்கியுள்ளனர்‌. சிங்கள - பெளத்த பேரினவாதத்தின் வளர்ச்சியை இது புலப்படுத்துகிறது. தமிழரின்‌ தேசிய இனச்சிக்கலுக்கு அமைதிவழியில்‌ தீர்வு தேடவேண்டும்‌ என்ற அனைத்துலகத்தின் நம்பிக்கையை நடைமுறையேலுமான விடயம்‌ என்று அது எப்படி நம்புகின்‌றது என்பது புதிரானதொன்றுதான்‌.

இதேவேளை வியட்னாமின்‌ தியன்‌-பியன்‌-பூவில்‌ பிரான்‌சியப்படைகள்‌ சந்தித்த படைத்துறைத் தோல்விக்கு நிகராக ஆனையிறவுத்‌ தோல்வியை தயான்‌ ஜெயதிலக என்ற அரசியல்‌ ஆய்வாளர்‌ ஒப்பிட்டுள்ளார்‌.

இயன்‌-பியன்‌-பூ தோல்வி பிரான்சியம்‌ படைக்கு பாரிய ஆள்-ஆயுததளபாட இழப்பை ஏற்படுத்தின. அத்துடன்‌ பிரான்சின்‌ படைத்துறை மானம்‌ கப்பலேற்றப்பட்டது. வியட்னாம்‌ மீதான அதன்‌ வல்வளைப்பு ஆசைக்கும்‌ அது முடிவுகட்டியது. அத்துடன்‌ வியட்னாம்‌ விடுலைப்‌ போராட்டத்திற்கு பன்னாட்டு பரவலறியத்தையும்‌ தேடிக்கொடுத்தது. ஜியாப்‌ என்ற படைத்துறை மேதையின்‌ புகழும்‌ உலக அரங்கில்‌ பேசப்‌பட தியன்‌-பியன்‌-பூ காரணமானது.

சிங்களப்படை ஆனையிறவுநிலத்தில்‌ சந்தித்த தோல்வியும்‌ இவ்வாறான அரசியல்‌ - படைத்துறை பரப்புரை விளைவுகளை உண்டுபண்ணியுள்ளன என அந்த ஆய்வாளர்‌ சொல்‌லாமல்‌ சொல்லியுள்ளார்‌. புலிகள்‌ இயக்கத்தின்‌ படைத்துறை வளர்ச்சியை உலக தொடர்பூடகங்கள்‌ ஒருதலைச்சாராக புகழ்ந்துரைக்கின்றன. தலைவர்‌ பிரபாகரனின்‌ மதிநுட்பமிக்க படைத்துறைச்‌ செயற்பாடுகளை அவை பாராட்டவும்‌- வியந்து போற்றவும்‌ செய்கின்றன.

இருபதாம் நூற்றாண்டின்‌ ஆரம்பத்‌தில்‌ - ஐரோப்பியக்‌ கண்டத்தில்‌ - வரலாற்றுத் திருப்புமுனைகளை ஏற்படுத்திய படைத்துறை கட்டளையாளர்களைப்‌ பட்டியலிட்டு, பாரிய படைக்கலவலு மற்றும்‌ ஆள்வலுவுடன்‌ அவர்கள்‌ புரிந்த  படைத்துறை சாதனைகளை, மிகுக்குறைந்த படைக்கலவலு மற்றும்‌ ஆட்தொகையை வைத்துக்கொண்டு தலைவர்‌ பிரபாகரன்‌ சாதித்து வரலாற்றுச்சாதனை புரிந்துள்ளார்‌ என படைத்துறை ஆய்வாளர்கள்‌ சுட்டிக்காட்டியுள்ளனர்‌.

ஆனையிறவுத்‌ தோல்வி குடாநாட்டுப் படையின்‌ இருப்பை ஊறுக்குள்ளாக்கிவிட்டது. அச்சமடைந்த சந்திரிகா அரசாங்கம்‌ குடாநாட்டுப்படையைப்‌ பாதுகாக்க வெளிநாட்டு உதவியை கோரும்‌ அளவுக்கு நிலைமை சென்றது.

1991 இல்‌ ஆனையிறவை படையினர்‌ பாதுகாத்தபோது படைத்துறை கட்டளையாளராக இருந்த நாயகம் வனசிங்கா இப்படிப்‌ பதறுகின்றார்‌. பன்னாட்டு அமைதிப்படையை வரவழைக்க இது தான் தருணம். பொதுநலவாய அமைப்பிடம்‌ உதவிகோரலாமே! என்றுள்ளார்‌. பேரிடரான நிலைமையைச்‌ சமாளிக்க பேரிடரான நகர்வுகள்‌ தேவை என வேற்றுப்படை உதவிக்கு அந்த முன்னாள்‌ கட்டளையாளர் தத்துவ விளக்கம்‌ கொடுத்‌துள்ளார்‌.

வியட்னாமின்‌ சைக்கோன்‌ (கோ-சி-மின்‌ நகரம்‌) நகரிலிருந்து கீ-சங்க்‌ (Khe Sanh) என்ற இடத்திலிருந்தே அமெரிக்கப்படைகள் அவசரவசரமாக வெளியேற்றப்பட்டுப்‌ பாதுகாக்கப்பட்டன. இந்த வரலாற்று ஊரை மனதில்‌ வைத்தபடி, தயான்‌ ஜெயதிலக எழுதுகின்றார்‌ - இன்னொரு கீ-சங்கை பிரபாகரன் உருவாக்‌கிவிட்டார்‌. இவ்விதமான வெற்றிகளைப்‌பெற அவர்‌ மேலும்‌ முயல்வார்‌ என்றுள்ளார்‌.

தலைவர்‌ பிரபாகரனது படைத்துறைப்‌ புலமையை இவ்விதம்‌ தயான்‌ ஜெயதிலக விதந்துரைத்தாலும்‌ தனது ஆய்வுக்கட்டுரையின்‌ முடிவாக வெளிநாட்டு படைத்துறை உதவிகளைப்‌ பெற்று புலிகள்‌ இயக்கத்தை நசுக்கவேண்டும்‌- ஆயுதப் போராட்டத்தை ஒடுக்க வேண்டும்‌ என்றே வாதிட்டுள்ளார்‌ என்பது குறிப்பிடத்‌தக்கது. 

இவரைப்‌ போன்றே, சிங்களப்படைகள்‌ தற்போது சந்தித்துவரும்‌ பாரிய படைத்துறை தோல்வியிலிருந்து அது மீண்டுவந்து - புலிகளை போரில் வெல்லவேண்டும்‌ என்றே சிங்களத்‌ தொடர்பூடகங்களும்‌ - பேரினவாத மதியுரைஞர்களும்‌ வலியுறுத்த வருகின்றனர்‌.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

மூலம்: 'விடுதலைப்புலிகள்', வைகாசி-ஆனி 2000, பக்கம்: 1, 2 
மூல எழுத்தாளர்: அறியில்லை

தட்டச்சு: நன்னிச் சோழன், 19|02|2021

 

 

குடாநாட்டை மீட்கும் வரலாற்றுச் சமர்
சிங்கள இராணுவம் திணறுகிறது
புலிப்படை சரித்திரம் படைக்கின்றது


ஆனையிறவுத்‌ தளத்தொகுதிகளை அழித்து நிலம்மீட்ட புலிகள்‌ சேனை வலிகாமம்‌ மற்றும்‌ தென்மராட்சியில் புதிய போர்முனைகளைத் திறந்து சிங்களப் படைகளை விரட்டியடித்து வீரசாதனை புரிந்து வருகிறது.

குடாநாட்டை மீட்டெடுக்கும் படைத்துறை இலக்குடன்‌ ஓயாத அலைகள்‌ - 3 என்று பெயரிலான ஒரு தொடர்‌ சமரை, தலைவர்‌ பிரபாகரன்‌ அவர்‌கள், திட்டமிட்டு நேரடியாக நெறிப்படுத்தி வருகின்றார்‌. வல்வளைக்கப்பட்டிருந்த வன்னிநிலத்தின்‌ பெரும்‌ பகுதியையும்‌ - குடாநாட்டின்‌ கணிசமான நிலத்தையும்‌  விடுவித்தவாறு புலிகள் சேனை பெருவெற்றிபெற்று முன்னேறி வருகின்றது.

இந்த படைத்துறை ஊழியிற்குள் சிக்கி சிங்களப் படைகள் நிலைகுலைந்து - கதியின்மைக்குள்ளாகி பேரழிவையும் - பெருத்த அவமானத்தையும் அனுபவித்தபடி உள்ளது. 

குடாநாட்டு வல்வளைப்பென்பது சந்திரிக்கா அரசாங்கம் செய்த மாபெரும் வரலாற்றுத்தவறு என்ற தலைவர் பிரபாகரனின் கூற்று தொலைநோக்கான உண்மையாக நடந்தேறிவருகின்றது. தமிழரின்‌ விடுதலைப்‌ போராட்டமும்‌ அனைத்துலக கவனத்தை முழுமையாக ஈர்த்துவிட்டது. தொடர்பூடகங்களின்‌ தலைப்புச்‌ செய்திகளாக குடாநாட்டுப் போர்க்‌கள நிலவரம்‌ உள்ளது. 21ம்‌ நூற்‌றாண்டின்‌ முதற்‌ தேச அரசாக (Nation State) தமிழீழம் மலர்ந்து வரும்‌ வரலாற்று நிகழ்ச்சியைக்கண்டு ஈழத்‌ தமிழினம்‌ அகக்களிப்பு அடைந்து வருகின்றது.

அழிவுகரமான படையெடுப்புகள் - சூழ்ச்சிகரமான அமைதிப் பொதிகள்‌ என்ற இருமுனைத்‌ தாக்குதல்‌ திட்டங்களுடன்‌ தமிழரின்‌ விடுதலைப்‌ போராட்டத்தை படைத்துறைவகையிலும் - அரசியல்‌வகையிலுமாக முறியடிக்க சந்திரிக்கா அரசாங்கம் வரைந்த ஏழு ஆண்டு வரலாற்றைக்கொண்ட நாசகாரத்‌ திட்‌டத்தை புலிகள்‌ இயக்கம்‌ முறியடித்து விட்டது.

வடபுலப் போர்முனையில்‌ சுழன்றடித்துவரும்‌ ஓயாத அலைகள்‌ படை நடவடிக்கை சிங்களப் பேரினவாதத்‌தின்‌ மூலவழிவகை அரசியலையும் தந்திரவழிவகை திட்டங்‌களையும்‌ செயலிழக்கச்‌ செய்து விட்டது. 

ஒரு இலட்சத்திற்கும்‌ மேற்பட்ட ஆளணியையும் - அதிநவீன படைத்துறை தளபாடங்களையும்கொண்ட முப்படைகளாலும் கவசமூட்டப்பட்ட சிங்களப் படைத்துறை இயந்திரம் இன்று, தமிழர் சேனையின்‌ போர்வலுலிற்கு, ஈடுகொடுக்க முடியாது புறமுதுகிட்டோடிக்கொண்டிருக்கிறது.

'இயலாத என்று ஒன்றுமில்லை' (Nothing Impossible) என்ற தாரக மந்‌திரத்தை செயற்படு சித்‌தாந்தமாக வரித்து புலிகளின்‌ படைத்துறைவலுவை ஒடுக்க உருவாக்கப்பட்ட சிங்கள வீரத்தின்‌ சின்னங்களான அதிரடிப்படை அணிகள்‌ குடாநாட்டுப்‌ போர்முனையில்‌ திண்டாடியபடி உள்ளன. இத்தகைய உறுதிமொழிகள் ஒரு வல்வளைப்புப்படைக்கு உகந்ததாக ஒரு போதும்‌ விளங்கமாட்டாது என்ற வரலாற்று உண்மை குடாநாட்டுப் போர்முனையில்‌ மெய்யுண்மையாகிவருவதை உலகம்‌ உற்றுநோக்கியபடி உள்ளது.

மீளமுடியாத ஒரு படைத்துறைத் தோல்விக்குள் சிங்களப்படைகள்‌ சிக்குண்டிருக்கும்‌ இந்த வேளையிலும்‌ தமிழரின் இனச்சிக்கலை படைத்துறை வழிமுறை மூலமே தீர்ப்பது என்ற நிலைப்பாட்டை சந்திரிக்கா அரசாங்கம் மாற்றியமைக்க முயலவில்லை.

அரச பொருளாதாரத்‌தின்‌ கணிசமான பகுதியை போருக்குச்‌ செலவிட்டு - இப்போது அதுவும்‌ போதாதென்று போர்க்கால நிலையை சாற்றாணைப்படுத்தி மேலும்‌ பண ஒதுக்‌கீட்டைச் செய்து - தனியாரின் சொத்துக்களையும் உள்வாங்கி சிங்களத்தின் போர் இயந்திரத்திற்காக செலவிட அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

ஒரு தேசிய நெருக்கடிக்குள் ஒரு அரசு சிக்குண்டிருக்கும்போது நெருக்கடியின்‌ பரிமாணங்களை இடித்துரைத்து - கொள்கை மாற்‌றங்களில்‌ ஈடுபடும்படி அரசாங்கத்தை வற்புறுத்தவேண்டிய சனநாயக கடமையைக்‌ கொண்டுள்ள சிங்களத்‌ தொடர்பூடகத்துறை அவ்விதம்‌ செய்யாமல்‌ நெருக்கடியை மேலும்‌ சிக்கலாக்கும்‌ வகையில்‌ போர்வெறி ௧க்கி குடாநாட்டில்‌ சிக்குண்டுள்ள சிங்களப்‌ படையினரை ஒரு மரணப்‌ பொறிக்குள்‌ தள்ள அரசாங்கத்துடன்‌ கைகோர்த்து நிற்கின்றது. அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தவல்ல இந்தப்‌ பொறுப்புணர்ச்சியற்ற வெறிச்‌செயலைக்‌ கண்டு உலகசமுதாயம்‌ அதிர்ச்சியடைந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க,

வெற்றிலைக்கேணி - கட்டைக்காடு பகுதிகளை மீட்டெடுத்த, ஓயாத அலைகள்‌ - 3 கட்டம்‌ மூன்றின் போது வலிகாமத்தில்‌ ஒரு முனையையும்‌ (கிழக்கு அரியாலை) தென்‌மராட்சியில்‌ ஒரு முனையையும் (தனங்கிளப்பு) முன்னேனேற்பாடாகத்‌ திறந்துவைக்கத்‌ திட்டம்‌ வகுத்த தலைவர்‌ அவர்கள்‌, இப்போது, திறக்கப்பட்ட அந்த முனைகளூடாக தமிழர்‌ சேனையை நகர்த்தி குறைந்த இழப்புக்களுடன்‌ குடாநாட்டுச் சமரில்‌ புலிப்படை மேலாதிக்‌கம் பெற வழிசமைத்துள்ளார்‌. 

இந்தச்‌ சண்டைகளில்‌ சிறப்பு எல்‌லைப்படை மற்றும்‌ எல்லைப்படை வீரர்களின்‌ திறமையான செயற்பாடுகள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துவருவதுடன்‌ தமிழர்‌ சேனையின்‌ வலுவை அதிகரிக்கச்‌ செய்து - இறுதி வெற்றிபற்றிய நம்‌பிக்கையையும்‌ உறுதியாக்‌கியுள்ளனர்‌.

சிங்களப்படைகளுக்கு எதிராக ஆயுதம்‌ தூக்கிப்போராட எமது மக்‌கள் எடுத்த தீர்மானமும்‌ - புலம்‌ பெயர்ந்து வாழும்‌ தமிழர்கள்‌ வழங்‌கிவரும்‌ பொருளாதாரப்‌ பங்களிப்பும்‌ வெற்றிகரமாக, நடந்துவரும்‌ நிலமீட்புச்‌ சமரில்‌ மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றன.

சிங்களப்படையுடன்‌ ஒப்பிடும்போது குறைந்த எண்ணிக்கையான போராளிகளுடன்‌, மட்டுப்படுத்தப்பட்ட ஆயுதவளத்தையும்‌ வைத்துக்‌கொண்டு சமரில்‌ வெற்றிநடைபோடும்‌ தலைவர் பிரபாகரன் தலைமைத்துவத்தை உலக படைய ஆய்வாளர்கள்‌ வியப்புடன்‌ உற்றுநோக்குகின்றனர்‌. 21ம்‌ நூற்‌றாண்டின்‌ புகழ்பூத்த படையமேதையாக, தலைவர் பிரபாகரனை, உலகம்‌ விதந்துரைக்கத்‌ தொடங்கியுள்ளது.

ஆனையிறவு வீழ்ச்சியுடன்‌ குடாநாட்டுச்‌ சமர்க்களத்‌தின்‌ படைவலுச் சமநிலை புலிகள்‌ இயக்கத்திற்குச்‌ சார்பாகத்‌ திரும்பியுள்ளது. குடாநாட்டிலிருந்தும்‌ ஒட்டுமொத்தமாக சிங்களப்‌படைகளை துடைத்‌தெறிந்து தமிழீழப்போர்க்களத்தின்‌ படைவலுச் சமநிலையையும்‌ புலிகள்‌ பக்கம்‌ இருப்பிவிட்டு தமிழர்‌ தாயகத்தை மீட்டெடுக்கும்‌ எமது அரசியல்‌ இலட்சியத்தை அடையும்‌ உறுதியுடன்‌ தமிழீழ மக்கள்‌ செயற்பட வேண்டிய தருணம்‌ இதுவாகும்‌. இது அற்புதமான ஒரு வரலாற்றுக் கட்டம்‌. இந்‌த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை ஈழத்தமிழர்களாயே நாங்கள்‌ தக்கவாறு பயன்படுத்துவோம்‌ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு புதிய வரலாற்றைப்‌ படைப்போம்‌. 

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

மூலம்: 'விடுதலைப்புலிகள்', வைகாசி-ஆனி 2000, பக்கம்: 2 
மூல எழுத்தாளர்: அறியில்லை

தட்டச்சு: நன்னிச் சோழன், 19|02|2021

 

 

நிலமீட்பு என்ற இராணுவ அம்சமும்‌ நிரந்தர அரசியல்‌ விடுதலைக்கான ஆரம்பமும்‌

 

எப்போது இயலும்? என தமிழ்மக்கள்‌ ஆதங்கப்பட்ட ஒரு படைத்துறை நிகழ்சி - அனைத்‌துத் தரப்பினரையும்‌ ஆச்சரியத்திற்குள்ளாக்கியபடி - இயலுமைப்பட்டுவிட்டது

வடபுல மக்களது வாழ்வியல்‌ அவலத்‌திற்கு முக்கிய காரணியாகவும்‌, தமிழர் சேனையின்‌ படைத்துறை வலுவளர்ச்சிக்கு வலுத்த அறைகூவலாகவும் திகழ்ந்துவந்த ஆனையிறவுப் பெருந்தளம்‌ புலி வீரர்களால்‌ அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. தலைவர்‌ பிரபாகரனது மதிநுட்பமான தாக்குதல்‌ திட்டத்துடன்‌ கூடிய துணிச்சலான - தந்‌திரவழிவகை படைநகர்த்தலுடண்‌, போராளிகளின்‌ வீரஞ்செறிந்த போர்த்திறனும்‌ ஒன்றிணைந்து இந்த படைத்துறை அற்புதத்தை நிகழ்த்திக்காட்டிவிட்டன.

ஆனையிறவு நிலப்பரப்பு வகித்துவரும்‌ பூகோளத்‌ தனித்துவத்தால்‌ எழுந்த படைத்துறை முக்‌கியத்துவம்‌ காரணமாக, ஆனையிறவுத்தளம்‌, வடபுலப் போரரங்கில் முதன்மை கேந்‌திர நிலையாக விளங்கி வருகின்றது. 

இந்தக்‌ கேந்‌திர நிலத்‌தின்‌ படைத்துறைக் கட்டுப்பாட்டை சிங்களப்படையிடமிருந்து புலிகள்‌ இயக்கம்‌ கைப்பற்றியதன்மூலம்‌ தமிழீழ விடுதலைப்‌போராட்டம்‌ பெரியதொரு அரசியல்‌ - படைத்துறை வெற்றியை தனதாக்கியுள்ளது.

ஆனையிறவு நிலமீட்பும்‌ - அங்கிருந்து புலிவீரர்‌களால்‌ கைப்பற்றியெடுக்கப்பட்ட நீண்டதூர வீச்சைக்கொண்ட சேணேவிகளும் குடாநாட்டுச்‌ சமர்க்களத்‌தின்‌ படைவலுச் சமநிலையை புலிகள்‌ இயக்கத்‌திற்குச் சார்பாகத்‌ திசைதிருப்பிவிட்டுள்ளது.

இந்தச்‌ சமநிலை மாற்றம்‌ சிங்கள - பெளத்த பேரினவாத அரசாங்கத்தை நிலைதளரச்‌ செய்துவிட்டது. 

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்ட வரலாற்றில்‌ முதற்றடவையாக - சிங்கள தேசம்‌, தொடர்‌ இடர்களை உள்ளுடனாகக்கொண்ட ஒரு மாபெரும்‌ படைத்துறை  தோல்வியை துய்த்தபடியுள்ளது. 

சிங்கள மக்கள்‌ - சிறிலங்கா அரசாங்கம்‌ - சிங்களப்‌ படைத்துறை - பேரினவாத அமைப்புக்கள்‌ - சிங்களத்‌ தொடர்பூடகங்கள்‌ என சிங்கள தேசமே இந்தத்‌ தேசியத்தோல்வியையும்‌ - இதன்‌ விளைவாக குடாநாட்டில்‌ நிலைகொண்டுள்ள படையினர் சந்திக்கப்போகும்‌ பேரழிவுமிக்க நெருக்‌கடி நிலையையும் எண்ணிப் பீதியடைந்துள்ளன.

ஆனையிறவுப்‌ பெருந்தளத்தை 'வெல்லப்பட முடியாத கோட்டை' என்றும்‌, 'வீழ்த்தப்பட முடியாத படைத்தளம்‌' என்றும்‌ தான்‌ நம்பியதுபோல - சிங்‌கள அரசாங்கம்‌ - உலகத்தையும்‌ நம்பச்செய்தது. 

இந்தப் பேரினவாத படைத்துறை நம்பிக்கையை உடைத்தெறித்த புலிகள்‌ இயக்கம்‌ போரியல்‌ வகையில் ஒரு படைத்துறை சாதனையைப்‌ படைத்ததுடன் அனைத்துலகத்தின் கவனத்தையும்‌ ஈர்த்து, தமிழ்‌ மக்களைப்‌ பூரிப்பிலும்‌ ஆழ்த்‌திவிட்டது. 

புலிகள்‌ இயக்கம்‌ வெளிப்படுத்‌திய இந்த வலுவளர்ச்சி கண்டு ஈழத்தமிழர்கள்‌ புளகாங்கிதம்‌ அடைந்துள்ளனர்.

தமிழர் சேனையைக்‌ களமிறக்கி தமிழர்தாயக நிலம்‌ முழுமையையும்‌ படிப்படியாக மீட்டெடுக்கப்‌ புலிப்படையால்‌ முடியும்‌ என்ற படைத்துறை உண்மையை ஆனையிறவு வெற்றிமூலம் புலிகள்‌ இயக்‌கம்‌ தெட்டத்தெளிவாக மெய்ப்பித்துள்ளது. 

படைவலுவைப்‌ பயன்படுத்தி - புலிகள்‌ இயக்‌கம்‌ - காலத்‌திற்குக்‌ காலம்‌ தமிழர் தாயகத்தின்‌ கணிசமான அளவு நிலத்தை - கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தாலும்‌, அது ஒரு நிரந்தரமான படைத்துறைக் கூறாக இருந்திருக்கவில்லை. கைமாறிக்‌ கைமாறி ஒரு ஊசலாட்டப்போக்கிலேயே காணப்பட்டது.

ஆனால்‌, ஓயாத அலைகள்‌ மூன்று படை நடவடிக்கை இந்த தற்காலிக படைத்துறை கூறிற்கு முடிவுகட்டிவிட்டதெனலாம்‌. 

வல்வளைக்கப்பட்ட வன்னிப் பெருநிலப்பரப்பில்‌ பெரும்‌ பகுதியையும்‌ விடுவித்து - ஆனையிறவு நிலத்தையும்‌ மீட்டெடுத்ததுடன்‌, இப்போது, நிலமீட்பு என்ற போராட்ட இலக்கு தமிழீழ விடுதலைப்‌ போராட்டதில்‌ நிரந்தரமான படைத்துறைக் கூறாக நிலைபெற்றுவிட்டது. இதன்வாயிலாக தமிழரின்‌ அரசியல்‌ இலட்சியமான தமிழீழ தனியரசு உறுதியான தளத்தில் உருவாகத்‌ தொடங்கி விட்டது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

மூலம்: 'விடுதலைப்புலிகள்', வைகாசி-ஆனி 2000, பக்கம்: 11
மூல எழுத்தாளர்: எல்லாளன்

தட்டச்சு: நன்னிச் சோழன், 19|02|2021

 

 

போரின் தலைவிதியை நிருணயிக்கின்ற 
புகழ்பெற்ற வரலாற்றுச் சமர்

 

1991 இல் புலிகள் ஆனையிறவுத்‌ தளத்தைப் புலிகள் முற்றுகையிட்டுத்‌ தாக்கியபோது வெற்றிலைக்கேணியில்‌ ஒரு கடல்வழித்‌ தரையிறக்கத்தை நடாத்திய சிங்களப்படை ஆனையிறவுத்‌ தளத்தைப்‌ பாதுகாத்தது. ஒன்பது ஆண்டுகளின் பின்‌ திகைப்பூட்டும்‌ ஒரு கடல்வழித்‌ தரையிறக்கத்தின்‌ மூலம்‌ புலிகள் நடாத்திய துணிகரமான ஒரு ஊடறுப்புத்‌ தாக்குதலின்‌ விளைவாக ஆனையிறவுத் தளம்‌ புலிகள் வசமானது.

அன்று, வெற்றிலைக்கேணியில் சிங்களப் படைகள் தரையிறங்கியபோது அதைத்‌ தடுத்து நிறுத்த இயலாத அளவுக்கு புலிகளின் படைத்துறை வலு இருந்தது. ஒன்பது ஆண்டுகளின் பின், இன்று, சிங்களப்படை நிலைகொண்டிருந்த படைய வலயத்‌திற்குள்‌ ஒரு தரையிறக்கத்தை புலிகள்‌ செய்தபோது அதை, முறியடிக்க முடியாது படைத்துறை இயலாமையுடன்‌ சிங்களப்படைகள்‌ இருந்தன. அத்துடன்‌ புலிகளின்‌ கட்டுப்பாட்டு வலயத்தினுள்‌ ஒரு தரையிறக்கத்தை செய்ய முடியாத கையறு நிலையிலும்‌ சிங்களப்படைத்துறை உள்ளது.

இந்த 9 ஆண்டுகாலத்தில்‌ புலிப்படை பெற்று விட்ட படைத்துறை வல்லமையை உணர்ந்து கொள்ள இந்த ஒப்புவமைகள் போதுமானவை.

ஆ.கா.வெ. சமர்‌ நடந்தவேளையில்‌ சமரின்‌ படைத்துறை பரிமாணத்தை ஊகித்துவிட்டு "இலங்கைத்தீவில்‌ இண்டு படைத்துறைகள் உள்ளனவா!" என பி. பி. சி. செய்தியாளர்‌ ஒருவர் ஆச்சரியப்பட்டார்‌. ஒன்பது ஆண்டுகளின் பின்‌ இந்‌ இரண்டு படைத்துறையில் ஒன்றான தமிழர்சேனை ஆ.க.வெ. சமர்‌ நடந்த பகுதிகளிலிருந்து சிங்கள படைத்துறையை விரட்டியடித்து - மண்மீட்கும்‌ வரலாற்றுச் செய்திகளை, பி.பி.சி உலகசேவை முன்னுரிமை கொடுத்து ஒலிபரப்பிக்கொண்டிருக்கிறது.

சமரின்‌ முடிவு போரின்‌ முடிவைப்‌ பெரிதும்‌ பாதிக்காது. ஆனால்‌, ஒருசில சமர்‌களின்‌ முடிவுகள்‌ போரின்‌ முடிவிற்கு கட்டியம்‌ கூறிவிடும்‌. 'ரெற்‌ வலிதாக்குதல்‌' (Tet Offensive) என்ற பெயரில்‌ 'வியட்கொங்' போராளிகள் அமெரிக்கப்படைகளுக்கு எதிராக நடாத்திய ஒரு பரந்த படைத்துறை நடவடிக்கை வியட்னாம்‌ விடுதலைப்‌ போரின்‌ முடிவுக்கு கட்டியம்‌ கூறியிருந்தது.

தலைவர்‌ பிரபாகரனின்‌ தலைமையில்‌ புலிகள்‌ நடாத்திக்கொண்டிருக்கும்‌ ஓயாத அலைகள்‌-03 சமர் நடவடிக்கை  தமிழீழ விடுதலைப்‌போரின்‌ தலைவிதியைத்‌ தீர்மானித்தபடி சுழன்றடித்துக்கொண்டிருக்கின்றது. 

சிங்களப்‌ பேரினவாதத்தினது ஆட்சியியலின்‌ அரசியல்‌-படைத்துறை முதலீட்டுத்தளமாக குடாநாடு வைக்கப்பட்டுள்ளது. சிங்களப் படைவீரர்களின் படைத்துறைக் கட்டுப்பாட்டிற்குள்‌ குடாநாடு இருக்கும்வரை சிங்கள-பௌத்தர்களின்‌ உரித்துநிலந்தான் இலங்கைத்‌தீவு என்ற பேரினவாத அரசியல்‌ நிலைப்பாட்டிற்கு பங்கம்‌ ஏற்‌படாது என அது நம்பியது. இதனால்‌, தனது சிறப்பு படைத்துறை கவனிப்பிற்குள் குடாநாட்டை வைத்திருந்தது. 

தகரிகள் - சேணேவிகள் - கவசவூர்திகள் உட்பட சிங்களத் தரைப்படையின் மொத்த மரபுப்போர்க்கலன்களில் அரைப்பங்கிற்கும் அதிகமான படைக்கலன்கள் குடாநாட்டில் குவிக்கப்பட்டுள்ளன. சிங்களப்படையின் மொத்த ஆட்தொகையில்‌, மூன்றில்‌ ஒரு பங்கு படையினர் குடாநாட்டில்‌ நிறுத்திவைக்கப்‌பட்டுள்ளன. இந்த படையினரில் அதனது 53 வது, 54வது படைப்பிரிவுகளும் அடங்கும். ஒவ்வொன்றும் சுமார் சுமார்‌ ஐயாயிரம்‌ படையினரைக்‌ கொண்ட இவ்விரு  படைப்பிரிவுகளும்‌ போர் அனுபவம்‌ கொண்ட படைவீரர்களாலும்‌ சிறப்‌புப் பயிற்கள்பெற்ற அதிரடிப்படை அணிகளாலும் நிரப்பப்பட்டுள்ளன. சமர்‌ பட்டறிவு வாய்ந்த சிங்களத்தின்‌ கட்டளையாளர்களில் பெரும்பாலானோர்‌ குடாநாட்டுப்‌ படையணிகளுக்குத்‌ தலைமை கொடுக்கின்றனர்‌. இத்தகைய சிறப்பு படைத்துறைக் குறுகலை குடாநாட்‌டில்‌ நிலைகொண்டுள்ள சிங்களப்படையணிகள்‌ கொண்டுள்ளன.

புவியியல் வகையில் குடாநாட்டின்‌ வாசலாகவும்‌ - படைத்துறை வகையில் குடாநாட்டின்‌ கொத்தளமாகவுமுள்ள படைத்துறை கேந்திர நிலப்பரப்‌பில்‌ ஆனையிறவுப்‌ படைத்தளத்‌ தொகுதிகள்‌ அமைந்துள்ளன. சுமார்‌ முப்பதினாயிரம்‌ படையினரைக்  கொண்ட குடாநாட்டுப்படையின்‌ பாதுகாப்புச்சுவராக ஆனையிறவுப்‌ படைத்‌தளத்‌ தொகுதிகள்‌ உள்ளன. இவை சிங்களப் படைகளின்‌ பிடியிலிருந்து நழுவி - புலிகளின்‌ கைகளில்‌ வீழுமாயின்‌ குடாநாட்டுப்படையின்‌ இருப்பு ஊறுக்குள்ளாகிவிடும்‌. இதனால் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்‌ ஆனையிறவுத்‌ தளத்தொகுதிகளை படைத்தலைமை பரிபேணாண்டது.

வெற்றிகேணியைக்‌ கைப்பற்றியபின்‌னர் புலிகள் ஆனையிறவைத் தாக்கத் தயாரான போது உலகின் கவனம் ஆனையிறவுக்கான சண்டையின்‌ பக்கம்‌ திரும்பியது. குடாநாட்டில்‌ நிறுத்‌திவைக்கப்பட்டிருந்த மரபுப்போர்க்கலஙன்கள் மற்றும்‌ சிறப்புப் படையணிகள்‌ ஆனையிறவுத்‌ தளம்‌ நோக்கி நகர்‌த்தப்பட்டன.

இந்த தலையில்‌ சிங்களப்படைகளினதும்‌ புலிசன்‌ இயக்கத்தினதும்‌ மரபுப்போர்‌ ஆற்றலைச் சோதித்துக்கும் பொருதுகளமாக ஆனையிறவுத் தளத்திற்கான சண்டையை படைத்துறை ஆய்வாளர்கள்‌ கருதுகின்றனர்‌.

ஆனையிறவைக்‌ கைப்பற்றி அங்கிந்து தமிழர்சேனையை நகர்த்திக் குடாநாட்டை மீட்கும்‌ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும்‌ தாக்குதல் திட்டமொன்றை வரைவதில்‌ தலைவர்‌ பிரபாக்ரன் தீவிர கவனம்‌ செலுத்‌தினார்‌. படைத்தரப்பு எதிர்பார்த்ததைப்போல ஆனையிறவை நேரடியாகத்‌ தாக்‌குவைத்‌ தவிர்த்து, அதேவேளை அதன்‌ உயிர்வாழ்வுக்கு முடிவுகட்ட மதிநுட்பமான தாக்குதல்‌ திட்டமொன்றை வரைந்துமுடித்தார்‌.

திகைப்பூட்டலையும்‌ - வேகத்தையும்‌ - துணிச்சலையும்‌ அடித்தளமாகக் கொண்ட ஒரு படைநகர்த்தல்‌ தந்திரத்தை நடைமுறைப்‌படுத்தத்‌ தீர்மானித்தார்‌. கடல்வழித் தரையிறக்கம்‌ என்பது தாக்குதற்திட்டத்தின்‌ அடியோசையாக இருந்தது. கரையிறங்கிய புலிகள் பகைவனின் படையவலயத்தை ஊடறுத்து உள்ளே அதிக தொலைவு நகர்ந்து - ஊடுருவிய நிலத்தை கட்டுப்பாட்டில்‌ வைத்திருப்பது தாக்குதல் இலக்கு. பகைவன்‌ சற்றுமே எதிர்பார்க்காத படைத்துறை கூறுகள்‌ இவை.

மரபுவழிப்பட்ட ஒரு ஊடுருவற்‌ சமருக்கு புலிகள்‌, கடல்வழி மூலம்‌ அதுவும்‌ பெருங்கடல்‌வழி மூலம்‌ பெருந்தொகையில்‌ புலிவீரர்களை படைத்துறைக் கட்டுப்பாட்டுக்‌ கரையில்‌ தரையிறக்கித்‌ தாக்குவார்கள்‌ என்று சிங்களப் படைத்‌துறை கற்பனையே பண்ணியிருக்கமாட்டாது. அதுவும்‌, வலுவான தாழையடித்‌ தளத்தை மேவிக்கடந்து - குடாரப்புவில்‌ தரையிறங்கும்‌ புலிகள் அங்கிருந்து ஊடுருவற்‌ போர்முறையில்‌ உள்நோக்கி நகர்ந்து - மீண்டும்‌ ஒரு, நீர்ப்பரப்‌பைக்‌ கடந்து, ஆனையிறவுத்‌ தளத்தொகுதிகளை அசட்டை செய்தபடி முன்னேறி, பளை நகரையும்‌ கடந்து முகமாலையில்‌ கண்டிவீதியைத்‌ துண்டாடுவார்கள்‌ எனச் சிங்களக் கட்டளையாளர்கள் கனவுகூட & கண்டிருக்கமாட்‌டார்கள்‌. ஆனால்‌, அது மெய்யாகவே நடந்து விட்டது.

குடாரப்புவில்‌ இருந்து முகமாலைவரை சுமார் 25 கிமீ நீளமான பாதைபோன்ற ஒடுங்கிய நிலப்பரப்பைக் கைப்பற்றி நிலைகொண்ட புலிகள்‌ அடுத்துவந்த ஒரு சில நாட்களில் போர்த்திறனை வெளிப்படுத்‌தி - பிடித்த நிலத்தைத் தக்கவைக்கப்‌ போராடி - வென்ற செயல்‌ சிங்களப் படைத்தரப்பை மட்டுமல்ல உலகின் படைத்துறை மதிப்புரைஞர்களையும் திகைப்பில்‌ ஆழ்த்திவிட்டது. 

ஆனையிறவுப்‌ படைத்தளம்‌ பன்னாட்டு தொடர்பூடகங்களால்‌ நன்கு அறியப்பட்ட ஒரு படைத்துறை நிலையாக நீண்ட நாட்களாக இருந்துவருகின்றது. தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போர்‌ ஆரம்பமானபோது தமிழ்‌ இளைஞர்களை வதைக்கும்‌ சித்திரவதைக்கூடமாக மனிதஉரிமை மீறலின்‌ ஒரு சின்னமாக அது உலகளாவிய வகையில் அடையாளம்‌ காணப்‌பட்டது. 1987ம்‌ ஆண்டு ஜே. ஆரின்‌ அரசாங்கம்‌ குடாநாட்டு மக்கள்மீது பொருளாதாரத்தடை விதித்த வேளையில்‌ - அதை நடைமுறைப்படுத்தும் பணியை ஏற்று - குடாநாட்டில்‌ வாழும்‌ பத்து இலட்சம்‌ மக்களின்‌ வாழ்வியல்‌ அவலத்‌திற்கு காரணமானபோது அது உலகத் தொடர்பூடகங்‌களில்‌ மேலும்‌ பரவலறியப்பட்டது. 1991ம்‌ ஆண்டு அந்தப்‌ பெருந்தளத்தை அகற்ற புலிகள்‌ ஒரு மரபுவழித்‌ தாக்குதலைத்‌ தொடுத்த வேளையில்‌ இருபகுதிப்‌ படைகளுக்கும்‌ இடையே நடந்த  ஒருமாதச் சமர்‌ ஆனையிறவை ஒரு பெரும்‌ போர்க்களமாக உலகிற்கு பறைசாற்றியது. 1995இல்‌ 'சூரியக்கதிர்' படை நடவடிக்கை மூலம்‌ வலிகாமப் பகுதி படையினரால்‌ வல்வளைக்கப்பட்டபோது, வடமராட்சி - தென்‌மராட்சி என்ற பாரிய நிலப்பரப்பு புலிகளின்‌ கட்டுப்பாட்டில்‌ இருத்தும் கூட அந்த நிலப்பரப்‌பில்‌ ஒரு மரபுப்போரை புலிகள்‌ தொடர்ந்தும்‌ நடாத்தாது வன்னிக்குப்‌ பின்வாங்கிச் செல்‌ல முதன்மை காரணியாக அமைந்திருந்தது ஆனையிறவுக்தளம்‌ ஆகும்‌. இவ்விதம்‌ புலிகள்‌ இயக்கத்தின்‌ மரபுப்போர்‌ வளர்ச்சிக்கு குறுக்கே ஆனையிறவுத்தளம்‌ உள்ளது என்ற படைய வல்லுனர்களின்‌ கணிப்பும்‌ ஆனையிறவை பரவலறியான ஒரு படைத்துறை கேந்திர மையமாக உலகளாவிய பரவலறியைக் கொடுத்தது. சிங்கள அரசும்‌ தன்பங்கிற்கு அதை 'வெல்லப்பட முடியாத கோட்டை' என்றும்‌, 'வீழ்த்தப்பட முடியாத தளம்' என்றும்‌ எடுத்தியம்பியது. இவ்விதம்‌ அரசியல்‌ - படைத்துறை - உளவியல்‌ மையமாக விளங்கிய ஆனையிறவுப்‌ படைத்தளம்‌ புலிகளின்‌ பெருந்தாக்குதலுக்கு உட்பட்டபோது உலகின்‌ முதன்மைச்‌ செய்தியாக அது உருவெடுத்தது.

ஒட்டுசுட்டான் மீதான தாக்குதலுடன் தொடங்க ஓயாத அலைகள்‌ மூன்று படை நடவடிக்கையை புலிகள்‌ ஆரம்பித்தபோது சிங்களப்படை பாரிய படைத்துறை தோல்வியை சந்தித்தது. இந்த படைத்துறைத் தோல்விகளுக்கு தனது படைக்கட்டளையாளர்களின் கோழைத்தனம்‌ தான்‌ காரணம்‌ என தப்புக்கணக்குப்‌ போட்‌டது. அதனால்‌, ஆனையிறவைப்‌ புலிகன்‌ தாக்கப்போகின்றார்கள்‌ என்ற நிலை எழுந்ததும்‌ சிங்கள வீரத்தின் சின்னங்களான 53 வது,54 வது படைப்பிரிவுகளை அங்கே நிறுத்தியது. ஆனால்‌, சிங்கள படைத்துறைவாதிகளின் நம்பிக்கை வெள்ளிகளான இந்தச்‌ சிறப்புப் படைப்பிரிவுகளை புலிகள், சிதைத்து - சின்னாபின்னமாக்கிய போது சிங்கள அரசாங்கம்‌ திகைத்தது.

ஆனையிறவுத்தள அழிப்பும் - சிங்களத்துச் சிறப்புப் படைப்பிரிவுகளின் இயலாமையும்‌ - இவை காரணமாக குடாநாட்டுப்‌ படையினரின்‌ மனதில்‌ குடிபுகுந்துவிட்ட போர்மனச்சிதைவும்‌ குடாநாட்டுப்‌ போர்‌ அரங்கில்‌ ஒரு புதிய, படைத்துறை பரிமாணத்தைத்‌ தோற்றுவித்துவிட்டன.

குடாநாட்டைத்‌ தக்கவைக்க சிங்களப்படைகளால்‌ இயலாது என்பதே அந்தப்‌ புதிய படைத்துறை பரிமாணமாகும்‌. இப்புதிய படைத்துறை பரிமாணம்‌ புலிகள்‌ இயக்கத்திற்கும்‌ - தமிழரின்‌ தேசிய விடுதலைப்‌ போராட்டத்‌திற்கும்‌ - உலகளாவியவகையில்‌ - முக்கியத்துவத்தை வழங்கிவிட்டன.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

மூலம்: 'விடுதலைப்புலிகள்', வைகாசி-ஆனி 2000, பக்கம்: 3
மூல எழுத்தாளர்: வே. பாலகுமாரன்

தட்டச்சு: நன்னிச் சோழன், 20|02|2022

 

 

விடுதலைக்கான புதிய தத்துவமொன்றின் முன்னுரை

 

மிக அண்மையில்தான் 20ம்‌ நூற்றாண்டின்‌ வரலாற்றினை இறுதித்தடவையாக புரட்டிப்பார்த்த உலகம்‌, மானுட விடுதலைக்கு வழிவகுத்த அதன்‌ இணையற்ற தலைவர்களை இனங்கண்டு இறுதிப் பாராட்டுகளையும் நிகழ்த்திவிட்டு ஓய்ந்திருந்தது. சென்ற நூற்றாண்டின் வரலாற்றினை உரிய மதிப்போடு வரலாற்றுச் சேமிப்புக் கிடங்கிலிட்டு தாழிட்டது. ஆனால் இன்னமும்‌ 20ம்‌ நூற்றாண்டின்‌ வரலாறு முடியவில்லை. இவ்வரலாறு மட்டுமல்ல மானுட விடுதலையின் முழுமையான வரலாறுமே புதிய அத்தியாயமொன்றை இணைக்கவேண்டிய நிலையிலுள்ளது என்பது இப்போது உலகத்திற்கு உறைக்கத்‌ தொடங்குகின்றது. ஆனையிறவு பெருந்தள வீழ்ச்சி என்று தொடங்கி புலிவீரன் தனது குருதியால்‌ எழுதும்‌ புதிய அத்தியாயம்‌ இது.

மானுட விடுதலையின்‌ ஒரு பகுதியாக தமிழீழ மானுடம்‌ மீட்கப்பட்டது. எவ்விதமென மிக விரைவில்‌ உலகம்‌ ஆராயத்‌தொடங்கும்‌ பொழுது, அல்லது பல்லாயிரமாண்டுகளுக்கு முன்‌ உரோமப் பேரரசில் அடிமைகளை விடுவிக்க முயன்ற ஸ்பாட்டகஸ்‌ காலம்தொட்டு மனித விடுதலைக்கான தேடலின்‌ வழி உருவான வரலாறுகளை வழிகாட்டியாகக்‌ கொண்ட எம்‌ தலைவன்‌ தனது செயல்வடிவிற்கான சிந்தனைகளை எழுத்‌திலிடும்‌ பொழுது, தோன்றப்போவது விடுதலைக்கான புதிய தத்துவம்‌. அதற்கான முன்னுரை அல்லது முகவுரை அல்லது அணிந்துரைதான்‌ இச்சிறு கட்டுரை சொல்ல முயலும், சொல்ல விரும்பும்‌ செய்தி.

இப்புதிய தத்துவத்தின ஆதாரமாக அமையும்‌ நடப்பியல் உண்மைகளை பெருத்த மனத்துயரோடும்‌ அதேவேளை பெருத்த மனமகிழ்வோடும்‌ நாம்‌ உலகத்தின்‌ முன் வைக்கின்றோம்‌. அடிமைத்தளைகளிலிருந்து தம்மை அறுத்து விடுதலையின்‌ மேன்மையினை உயரே தூக்‌கிப்பிடித்த அனைத்து நாடுகளும்‌ இச்சின்னஞ்சிறு தேசத்தின்‌ விடுதலைக்கு எத்தனை பென்னம்பெரிய தடைகளை இடுகின்றன. வழக்கத்திற்கு மாறாக இவ்வறைகூவலை தன்னந்தனியே எதிர் நின்று விடுதலைப்புலிகள்‌ விடுதலைக்கான புதிய பாதை ஒன்றைச்‌ சமைத்தமை எமக்கு மட்டுமல்ல இன்னமும்‌ விடுதலை பெறாத அனைத்து மக்களின்‌ மனமகிழ்வுக்குமுரிய செய்தியாகும். குறிப்பாக கடந்த 300 ஆண்டுகளாக எத்தனை வழிமுறைகளை கையாண்டு ஒடுக்கு முறைகளிலிருந்து உலகம்‌ விடுதலை பெற முயன்றது? அவ்வாறு விடுதலை பெற்றவை இன்று எமது விடுதலையைத்‌ தடுக்க எத்தனை உதவிகளைச்‌ சிங்களத்திற்குச் செய்கின்றன. ஆனால்‌ அவ்வவ் நாடுகளின்‌ விடுதலை வரலாறுகளின், விடுதலைப் போர்களின்‌ பட்டறிவைப் பயன்படுத்தியே அவர்களுக்குப்‌ பாடம் கற்பித்த தலைவன்‌ காட்டும்‌ விடுதலைப்‌ பாதையின்‌ வழிமுறை எத்தகையது?

18ம் நூற்றாண்டின்‌ வரலாற்றினைப்‌ பாருங்கள்‌. அன்று மானுட விடுதலைக்கு, வழிகாட்டிய அமெரிக்க சுதந்திரப்போர், பிரான்சியப் புரட்சிகள் காட்டிய பாதைகள்‌ ஒரு வழிமுறை - நிலவுடைமை சமூகத்தை மாற்றி - மக்கள் இறைமைக்கு வாய்பளித்து, தேசியவாதத்தை முன்னிறுத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதம்‌ தாங்கிப் போர்புரிந்த வரலாறுகள்‌ இவை. குடியேற்ற நாடுகளிலே ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியே முதன்‌ முறையாக விடுதலைக் காற்றை சுவாசித்த நாடு அமெரிக்கா. 1776ம் ஆண்டு சூலை 4ம் திகதி தனது விடுதலை சாற்றாணையாக மானுட விடுதலையின் மகிமையைப் சாற்றாணை செய்த அமெரிக்க, "எல்லா நோய்களுக்கும்‌ மருந்துதான்‌ விடுதலை" எனக்கூறிய தோமஸ்‌ பெயினை இன்றளவும்‌ பெருமிதத்துடன்‌ நினைவிற் கொள்கின்றது. அதே போலவே 1789 யூலை 14ம்‌ திகதி கொடுங்கோன்மையின்‌ சின்னமாகவிருந்து பஸ்ரில் கோட்டை சிறையுடைப்போடு தொடங்கிய பிரஞ்சுப் புரட்சியை இன்றளவும்‌ தலைமேல்‌ வைத்து கொண்டாடும் பிரான்‌சு. இவையிரண்டும்‌ இன்று சந்திரிகா பக்கம்‌, ஆனாலும்‌ என்ன? இவர்களே மறந்துபோன  இவர்களின்‌ தலைவர்களான நெப்போலியன், ஜோர்ஜ் வோசிங்டன் போன்றோரின்‌ போர்நுட்பங்கள்‌ எம்தலைவனால்‌ மறுக்கப்படவில்லை.

"இழப்பதற்கு அடிமை விலங்கைத்‌ தவிர வேறில்லை. பெறுவதற்கோ விடுதலைப்‌ பொன்னுலமுண்டு" எனக்‌ கூறிய மாக்சின்‌ கருத்தையொற்றி 1917 சோவியத்தில்‌, 1949 சீனாவில்‌, 1956 கியூபாவில்‌, 1975 வியட்னாமில் விடுதலை பூகம்பங்கள் வெடித்தன. இப்புரட்சிகளுக்கூடான தேசியம்‌, தன்னாட்சி, சமதருமம்‌ என்கிற சூறாவளிகளால்‌ உலகமே அதிர்ந்தது. புரட்சிகர தோற்றப்பாடுகள்‌ எங்கும்‌ எழுந்தன. உலக மானுட விடுதலைக்கு ஆதரவாக அணி அணியாக நாடுகள்‌ உதவின. எதிர்ப்போர்‌/ஆதரிப்போர்‌ என அணி பிரிந்தன. ஆயுதம்‌ உதவின. நிதியுதவின. இது ஒருவகை விடுதலைப்பாதை. ஆனால்‌ தவித்து, தனித்து போராட முற்பட்ட எம்‌ மக்களுக்கு இவர்கள்‌ அன்றும்‌ உதவவில்லை. என்றும்‌ உதவவில்லை. உண்மையிலே இன்று சிங்களத்தாலே புலிகளை அழிக்க வெளிநாட்டுதவி வேண்டும்‌ என கூக்குரலிடுவோரில்‌ முதன்மையாளரான முன்னாள்‌ பொதுவுடைமைவாதி தயான்‌ கூறுகிறார்‌, "உருசியாவின்‌, சீனாவின்‌, வியட்னாம்‌ நாடுகளின்‌ உதவியைத்‌ தன்னும்‌ பெற்று புலிகளை உடன்‌ அடக்குங்கள்‌." எப்படிப் போகின்றது கதையே பார்த்தீர்களா? சோவியத், சீன, மக்களின்‌ புரட்சிகளை வியட்னாமியரின்‌ வீரம்‌ செறிந்த வரலாற்றினை இதைவிட வேறு எவ்வகையில்‌ இழிவுபடுத்த முடியும்‌?

இத்தகையதொரு வேறுபாடான சூழலில்‌ எம்‌ தலைவர்‌ என்ன செய்தார்? பாரிய படைத்துறை வலிமையுள்ள ஏகாதிபத்தியங்களை அவை கூட்டுச்‌ சேர்ந்து படையெடுத்த நிலையிலும்‌ கூட எவ்வாறு இந்நாடுகள்‌ முறியடித்தன என்கிற வித்தையைக்‌ கற்றார்‌. மாவோ படித்த சன்சூவை, மாவோவை, கியாபை இன்னும்‌ பல வல்லுநர்களைக் கற்றார்‌. எல்லாவற்றையும்‌ தொகுத்து-பகுத்து அவற்றின்‌ விளைவாக புதியதொரு பாதையை பிறப்பித்தார்‌. இத்தகைய நிலையில் உலகம் சொல்வதைக் கவனியுங்கள்‌. பிரபாகரனுக்கு ஆனையிறவு என்பது இன்னொரு இயன்‌-பியன்‌-பூ. எமக்கொரு ஐயம்‌? உலகத்‌திற்கு உண்மையிலே உண்மை விளங்கிவிட்டதா? தமிழீழ மக்கள்‌ தமது இறையாண்மையை புலிகள்‌ மூலம்‌ ஏவல்செயவ்து தடுக்கப்பட முடியாதது என்பதை  உணர்ந்து விட்டதா? ஏனென்றால்‌ 1956ம்‌ ஆண்டு மே மாதம் தியன்‌-பியன்‌-பூ தளம்‌ வீழ்ந்தபின்‌ நடந்தேறிய விளைவுகள்‌......... தமிழீழத்‌தில்‌, சிறிலங்காவில் நடக்கும்‌ என உலகம்‌ எதிர்பார்க்கின்றதா?

இத்தளத்தின்‌ வீழ்ச்சிக்கு முன்‌ இத்தளத்தினை பார்வையிட்ட அமெரிக்க படைத்துறை மேலாளர்‌ இது அசைக்க முடியாத கோட்டை என்றதும்‌ - தனது போக்குவரத்து குண்டுவீச்சு வானூர்திகளை கொடுத்துதவியதும்‌ - பின்‌, தளம்‌ வீழ்ந்தபின்‌ மௌனம்‌ காத்ததும்‌ - இத்தள வீழ்ச்சியின்‌ விளைவாக அன்றைய பிரான்‌சிய கூட்டரசு கவிழ்ந்ததும் - 8 ஆண்டு இந்தோசீனப் போர்‌ முடிவுற்றதும்‌ - 1964 யூலை மாதமளவில்‌ பிரெஞ்சுப்‌ படையே வியட்னாமிலிருந்து, வெளியேறியதும் இன்னொரு மறுபதிப்பாகுமா? (இன்னொரு சுவையான தகவல்‌. இத்தளம்‌ வீழ்ந்தபின் அமெரிக்காவின் படைத்துறை உதவி கோரப்பட்டபோது அமெரிக்கா இழுத்தடித்ததும்‌ பிரித்தானியாவும்‌ பின்வாங்கியதும்‌ - நிதியுதவி மட்டும்‌ தர முன்வந்ததும் நாம்‌ கவனிக்கத்தக்கவையல்லவா? ) இப்பொழுது நாம்‌ சொல்றோம்‌, கியாப்பிற்கு ஒரு தியன்-பியன்‌-பூ. பிரபாகரனுக்கு _ ஒரு ஆனையிறவு. இனிவரும்‌ உலகம்‌ எதிர்கால வெற்றிகரமான இருப்புமுனைச் சமர்களை 'இது இரண்டாவது ஆனையிறவு அல்லது இது இன்னொரு ஆனையிறவு' என்று சொல்லும்‌.

இப்போது நாம்‌ இறுதியாக மூன்றாவது 3வது வழிமுறையொன்றையும்‌ நோக்கலாம்.

20ம்‌ நூற்றாண்டின்‌ இறுதிக்‌ காலகட்டத்தில்‌ இவ்வழிமுறை தோன்றியது. மிக்க அதிசயமான ஆனால்‌ அதேவேளை பேரிடரான வழிமுறை. பனிப்போரைத்‌ தொடர்ந்து நிலவும்‌ புதிய உலக ஒழுங்கமைப்பில்‌, நாடுகளிண்‌ இறைமைகள்‌ குறித்தே புதிய கோட்பாடுகள்‌ தோன்றக்‌ காரணமான ஈராக்‌, குவைத்‌, இயூகோசுலாவிய சிக்கல்கள்‌, திமோர் விடுதலை தொடர்பான வழிமுறையிது.

மனிதஉரிமை மீறல்களை வலுவான காரணமாக்‌கி இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த படையனுப்பி பாதுகாப்பு வலையங்களை உருவாக்‌கி ஐ. நாவே. தற்காலிகமாக நாட்டு நிருவாகங்களை பொறுப்பேற்று, பன்னாட்டு அமைதிப்படையிண்‌ நிழலில்‌ தங்கியிக்கும்‌ வழிமுறையிது. எத்தகைய நியாயப்பாடுகள்‌ இருந்தாலும்‌ இத் தலையீடுகளிகளில் இருக்கும்‌ இடரை ஈராக்‌ சிக்கல்‌, கொசோவோச்‌ சிக்கல்‌ எமக்கு உணர்த்துகின்றன. வலுவான விடுதலையமைப்பின்மையே இத்தகைய நிலமைகளுக்கு முதன்மை காரணம்‌. மிக வேறுபாடான இத்தகைய அனைத்துலகச் சூழலில் மிக மாறுபாடாக நடக்கும்‌ தலைவரின்‌ அரசியல்‌ மதிநுட்பம்‌ இங்கே உற்றுநோக்கத்தக்கது. இங்கே பிறப்பதுதான்‌ புத்தம்‌ புதிய விடுதலைப்பாதை.

இவ்வுண்மைகள்‌ பற்றி எதிரித்தரப்பே என்ன செல்கிறது? சிங்கள இனத்தாரின்‌ திடீர்‌ பாதுகாவலனாகிவிட்ட தயான் செயத்திலக்க எழுதுறார்‌, "இங்கே நாம்‌ உற்றுநோக்க வேண்டிய மிக முதன்மை மாற்றம்‌, அடிப்படையில்‌ தரமாற்றமொன்று நிகழ்ந்துவிட்டது என்பதே. மிக முதன்மை செய்தி என்னவென்றால்‌ வன்னி வெற்றிகளை தொடர்ந்து பிரபாகரன்‌ விடுதலைக்கான கரந்தடிப் போர்முறையான 2ம்‌ கட்டத்தை கடந்து மூன்றாவதும்‌ இறுதியுமான கட்டத்துள் நுழைந்துவிட்டார்‌ என்பதே. இப்போது வடக்கில்‌ நடப்பது தனிச்சமரொன்றல்ல. இதுவொரு பெரும்‌ தொடரான தீர்க்கமான படைத்துறை நடவடிக்கை. மாதங்களுக்கு நீடிக்கவல்லது. இறுதி வெற்றியை எட்ட பிரபாகரன் நடத்தும்‌ போரிது. ஆனையிறவு வீழ்ந்த பின்‌ படைத்துறையின் முதுகெலும்பு முறிந்துவிடும்‌. அதன்பின்‌ ஒஸ்லோவில்‌ நடக்கும்‌ பேச்சுவார்த்தை என்பது எல்லாவற்றையும்‌ கைவிட்டு வெளியேறுவது பற்றியதாகவேயிருக்கும்‌. " ( ஆனையிறவு வீழ்ச்சிக்கு முன்னர்‌ எழுதப்பட்ட இக்கட்டுரை, 16/04/00 வீக்கென்ட்டு எக்சுபிரசில் வெளிவந்தது ). சண்டே ரைம்சு தனது 2/4 தலையங்கத்தில் எழுதுகின்றது "நாங்கள்‌ இவ்வாறு சொல்வது தவறாகாது. புலிகளோடான போர் என்பது முரட்டுத்தனமான வலிமை ஒன்றோடு நடக்கும்‌ போரல்ல. அது கற்பனை, புத்தாற்றல்‌ நிரம்பிய மனமொன்றின்‌ போர். எண்ணங்களின்‌ போர்."

 

 

********

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

மூலம்: 'எரிமலை', ஜுன்‌ 2000, பக்கம்: 16-17
மூல எழுத்தாளர்: வேலவன்
எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 09|1|2022


 

 

சொந்தப் படையில் நம்பிக்கை இழந்த சிங்களம்

 

ratwatte.png

'ரத்வத்தையும் சிங்களப் படையினரும்'

 

சிறீலங்காவின்‌ படைவீரன் பெருமையுடன்‌ கூறினார்‌, “நானும்கூட அதிசிறப்பு வாய்ந்த சிறீலங்கா படைத்துறையைச் சேர்ந்தவன்‌.”

மேற்கூறப்பட்ட துணுக்கு வன்னியில்‌ சிங்களப் படையினர் கைவிட்டோடிய முகாமொன்றில்‌ கண்டெடுக்கப்பட்ட குறித்த ஒரு படைப்பிரிவால்‌ வெளியிடப்‌பட்ட வெளியீடு ஒன்றில்‌ காணப்பட்டதாகும்‌.

தற்பெருமை அடித்துக்கொள்வது என்பது சிறீலங்கா படைத்துறைக்கு மட்டுமல்ல சிங்கள இனவாதிகளுக்கே இயல்பான ஒரு குணமாகும்‌.

ஆனால்‌, இந்த “அதிசிறந்த” படைத்துறையின் இன்றைய நிலைமை என்ன? அவ்வாறு சிறீலங்கா படைத்துறையின் சிறப்புக்குறித்து இன்று பெருமைப்படுபவர்கள்‌ யார்‌?

ஆனையிறவுப்‌ பெருந்தளத்தின்‌ வீழ்ச்சியைத்‌ தொடர்ந்து தென்னிலங்கையிலுள்ள அனைத்துத் தரப்புகளும்‌ மேற்கொள்‌ளும்‌ நடவடிக்கைகள்‌ இந்தக்‌ கேள்‌வியையே எழுப்புகின்றன.

“விடுதலைப்‌ புலிகளை நசுக்க இந்‌தியா உதவவேண்டும்‌. இதற்காக உடனடியாக படைத்துறை உதவியை நாம்‌ கோரமாட்டோம்‌. இந்தியக்‌ கடற்படை மட்டுமல்ல வான்படையும்‌ எமக்கு உதவ முடியும்‌. தேவையானால்‌ தரைப்படை உதவியைக்கூட கோருவோம்‌.” இவ்வாறு அனைத்து பெளத்த பீடங்களினதும்‌ ஒன்றியமான தேசிய பெளத்த மன்றத்தின் தலைவர்‌ வண மாதலுவாவே சோபிததேரர்‌ இந்தியத்‌ தூதுவரைச்‌ சந்தித்துக்‌ கூறியிருக்கிறார்‌.

அவர்‌ இந்தியத்‌ தூதுவருடன்‌ உரையாடிவிட்டு வெளியே வந்து “செச்சினியப்‌ போராளிகளை அடக்கிய உருசியாவிடம்‌ ஏன்‌ சீனாவிடம்‌ கூட நாம்‌ உதவி கோரலாம்‌” என நாளேடுகளுக்குத் தெரிவித்‌திருக்கிறார்‌. தொடர்ந்தும்‌ இந்தியத்‌ தூதுவரைச் சந்தித்து இது குறித்துப்‌ பேசயிருப்‌பதால், இந்தியாவிடம் எவ்வாறு இவ்வகை உதவிகளைக்‌ கோருவது என ஆராய மாநாடு கூட்டியிருக்கின்றனர்‌ பெளத்த துறவிகள்‌. 

மொத்தத்தில்‌ துட்டகைமுனுக்கள்‌ மீது, முற்றாக நம்பிக்கையிழந்துவிட்ட பெளத்த மதத்துறவிகள்‌ “தமிழ்‌ மக்களை வென்று வா...! கொன்றுவா...!” என வாழ்த்தி தாம்‌ கட்டிவிட்ட பிரித் நூலிலும்கூட நம்பிக்கை இழந்துவிட்டமையையே இது காட்டுகிறது.

சிங்களப்‌ பேரினவாத அமைப்புகளின்‌ நிலைமையும்‌ இதுவேதான்‌. யாழ்‌ குடாநாட்டில்‌ சிக்கியிருக்கும்‌ படைத்துறை அங்‌கிருந்து போராடி வெளியேறும்‌ என்ற நம்பிக்கையை அவை அறவே இழந்து விட்டன. “பிரித்தானியாவின்‌ படைத்துறையில் அரைவாசி நாட்டுக்கு வெளியே பாழாக்கப்பட்டது. மறுபாதி நாட்டுக்குள்‌ வரமுடியாது தொங்கிப்போய்‌ நின்றது. பிரித்தானிய அரசு மக்களுக்கு உண்மையைக்‌ கூறியதால்‌ மக்கள்‌ படகுமூலம்‌ சிக்கியிருந்த படையினரை மீட்டுக்‌கொண்டு வந்தனர்‌” என்று இரண்டாம்‌ உலகப் போர் படிப்பினையைக்‌ கூறி “உண்‌மையைக்‌ கூறு நன்மையைப்‌ பெறுவாய்‌” என சந்திரிகா அரசாங்கத்திற்கு 'சிங்கள உறுமய' என்னும்‌ அமைப்பு ஆலோசனை கூறுகிறது. பல இனவாத அமைப்‌புக்கள்‌ அனைத்துலக படைத்துறை உதவியைக்‌ கோருமாறு கூக்குரலிடுவதும்‌ இதனையே காட்டுகிறது. 

சிறீலங்காவின்‌ எதிர்க்கட்சி யாழ்ப்‌பாணத்தில்‌ சிக்கியுள்ள படையினரைக் காக்க புத்தபெருமானை கோருவதென தீர்மானித்துள்ளது. இதற்கென தென்‌ பகுதியில் உள்ள பல விகாரைகளிலும்‌ சிறப்பு “பிரித்‌” நிகழ்விற்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருக்கின்றது.

சிறீலங்கா படைத்துறையின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் சந்தித்திருக்காத நெருக்கடியைச்‌ சந்தித்‌துள்ள இவ்வேளையில்‌ அனைத்து நடவடிக்கைகளுக்கும்‌ பொறுப்பான கட்டளையாளர் அல்லது நலம் உசாவவோ அல்லது வேண்டவோ அவர்‌ இந்தியா சென்றிருக்க முடியாது. செல்ல அனுமதிக்கப்‌பட்டிருக்கவும் மாட்டார்‌.

1995இல்‌ புலிகளை படை நடவடிக்கைமூலம்‌ ஒழித்துக்கட்டுவது என்ற தீர்மானத்துடன்‌ புதிய தந்திரவழிவகை ஒன்றை வகுக்க சந்திரிகா அரசாங்கம்‌ முடிவு செய்தபோது அனைத்து நடவடிக்கைத்‌ தலைமைக் கட்டளையாளர் ஒருவரை நியமித்தது. இதற்கு முதன்‌ முதலில்‌ நியமனம்‌ பெற்றவர்‌ மேஜர் ஜெனரல் ஏ.எம்‌.யு. செனிவிரட்ண. அவரது கருத்து யாழ்‌ குடாநாட்டுக்கு தரைவழிப்பாதையின்றி குடா நாட்டைக்‌ கைப்பற்றுவது பின்‌ விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதாகும்‌. ஆனால்‌  துணைப் பாதுகாப்பு அமைச்சர்‌ அனுருத்த ரத்வத்த உடனடியாகவே யாழ்‌ குடாநாட்டை கைப்பற்றும்‌ முடிவில்‌ இருந்தமையால்‌ ஏ.எம்‌.யு. செனிவிரட்ண பதவியைவிட்டே விலக வேண்டி ஏற்பட்டது.

அதன்‌ பின்னர்‌ அனைத்து நடவடிக்‌கைக்கும்‌ பொறுப்பான அதிகாரியாக பொறுப்பேற்றவர்‌ இறொஃகான்‌ தளுவத்த. யாழ்‌ குடாநாட்டைக்‌ கைப்பற்றுவதற்காக திட்டமிடலை மேற்கொண்டவரும்‌ அவரே. இதன்‌ பயனாக அவருக்கு தரைப்படைக் கட்டளையாளர்  பதவியும்‌ கிட்டியது.

வலிகாமம்‌ பகுதியை படைத்துறை கைப்பற்றியதும்‌ கொடி ஏற்றல்‌ நிகழ்வில் உரையாற்றும்‌ “பாக்கியம்‌” அவருக்கே கிடைத்தது. அப்போது அவர்‌ படையினரைப் பார்த்து “இந்த நாட்டு மக்கள்‌ மகிழ்ச்சிக்களிப்பில்‌ இருக்கிறார்கள்‌. அத்துடன்‌ அவர்கள்‌ 'சப்புமல்‌ குமாரயா'க்கள்‌ மீண்டும்‌ வந்து யாழ்ப்‌பாணத்தில்‌ சண்டையிட்டு கைப்பற்றி விட்டார்களோ என உங்களைப்‌ போற்றுகின்றனர்‌ எனவும்‌ கற்பனை செய்து பார்க்கிறேன்‌” என்று கூறினார்‌. இப்பொழுது அந்த “சப்புமல்‌ குமாரயா” க்களைக்‌ காப்பாற்ற உதவி கோரியே இவர்‌ இந்தியாவுக்குச்‌ சென்றிருக்க வேண்டும்‌ என நோக்கர்கள் கூறுகின்றனர்‌.

fas.png

'காயமடைந்த சிங்கள வீரர்கள்'

இவர்களுக்கு அரசியல்‌ தலைமையை வழங்க முயன்ற துணைப் பாதுகாப்பு அமைச்சர்‌ அனுருத்த ரத்வத்தகூட இவர்கள்‌ மீது நம்பிக்கை இழந்துவிட்டார்‌ போலவே தோன்றுகின்றது. அவர்‌ இவ்வாறுதான்‌ பல சபதங்களையும்‌ உறுதி மொழிகளையும்‌ அள்ளி வீசிக்‌கொண்டிருப்பதிலும்‌, அவர்‌ தனது அரசியல்‌ செல்வாக்கில்‌ ஏற்படப்போகின்ற வீழ்ச்சி குறித்து ஏற்ப்பட்ட கவலையினாலேயே ஒழிய சிறீலங்காவின்‌ படைத்துறையிலோ அல்லது தான்‌ வாங்கிக்‌ கொடுக்கும்‌ போர்த்தளபாடங்களிலோ நம்பிக்கை வைத்தல்ல.

ஆனையிறவுப்‌ படைமுகாமின்‌ வீழ்ச்‌சிக்கு அவர்‌ காரணம்‌ கூறுகையில்‌ “புலிகள்‌ இயக்கத்தினர்‌ முகாம்களை இனங்‌கண்டு எறிகணைத்‌ தாக்குதலை நடத்தியதால்‌ குறைந்த எறிகணைகள்‌ மூலம்‌ படையினருக்கு கூடிய இழப்பை ஏற்‌படுத்தக்‌ கூடியதாக இருந்தது. ஆனால்‌ படையினர்‌ நடத்திய கூடுதலான எறிகணைத்‌ தாக்குதல்கள்‌ மூலம்‌ குறைந்த இழப்புகளையே ஏற்படுத்த முடிந்தது” என்று கூறியிருக்கிறார்‌. இது படையினரின்‌ 'திறமைக்கு' அவர்‌ வழங்கிய சான்றிதழ்‌ என்றே கூறவேண்டும்‌.

இதேவேளை சிறீலங்காவின்‌ அதிபரும் முப்படைகளின்‌ கட்டளையாளருமான சந்திரிகா குமாரதுங்க வலுவீனப்பட்டுப்‌போயிருந்த படைத்துறையைப் பொறுப்‌பேற்று ஐந்து ஆண்டாக எவ்வளவோ கொட்டிப்‌ பயிற்சி வழங்கியும்‌ அதனைப்‌ வலுப்படுத்துவதில்‌ தமது அரசு தோல்வி கண்டுவிட்ட தாக வெளிப்படையாகவே ஒப்புக்‌ கொண்டுள்ளார்‌. அத்துடன்‌ அவர்‌ “புலிகள்‌ இயக்கத்தின்‌ நோக்கத்திற்காக தமது உயிரை ஈகம் செய்யப்‌ பலர்‌ இருக்கிறார்கள்‌. ஆனால்‌ நம்மவர்கள்‌ உயிரைக் காத்துக்கொள்ளவே முயற்ச்சிக்கின்றனர்‌” என நாடாளுமன்றக் குழுக்‌ கூட்டத்தில்‌ தமது ஆதங்கத்தை வெளியிட்டு இருக்கின்றார்‌.

யாழ்‌ குடாநாட்டில்‌ சிக்கியுள்ள படையினரை மீட்க இந்தியக்‌ கடற்டையினரின்‌ உதவியை சிறீலங்கா அரசாங்கம்‌ கோரியதும்‌ படைத்துறை அடிப்படையில்‌ இந்தியா தலையிடுவதில்லை எனக்‌ கூறியிருப்‌பதால்‌ இந்தியாவால்‌ எதனையும்‌ பெரிதாகச்‌ சாதித்துவிட முடியாது என சிறீலங்கா அரசு பற்றின்மையுடன் கூறியிருப்‌பதும்‌ சிறீலங்காப்‌ படையினர்‌ மீதான அரசாங்கத்தின்‌ நம்பிக்கையீனத்தை முற்றுமுழுதாக வெளிப்படுத்தியிருக்கிறது.

மொத்தத்தில்‌ சிறீலங்காவிலுள்ள போரைக் கோரும்‌ அனைத்துத்‌ தரப்புமே சிங்கள படையினர் மீது முற்று முழுதாக நம்பிக்கையிழந்துவிட்ட நிலைமையே காணப்படுகின்றது. ஆனால்‌ இவர்கள்‌ போரின் மீதான நம்பிக்‌கையை இழக்கவில்லை. எவர்காலில்‌ விழுந்தாவது போரைத் தொடர்ந்து தமிழ்‌ மக்களின்‌ விடுதலைப்‌ போராட்டத்தை அழித்துவிட வேண்டும்‌ என கங்கணம்கட்டி நிற்கின்றனர்‌. ஆனால்‌ உதவி கிட்டுவதுதான்‌ மிகக்‌ கடினமாக உள்ளது.

ஏனெனில்‌ போரின் மூலம்‌ தமிழர்‌ சிக்கலைத் தீர்த்துவிடலாம்‌ என்ற நம்பிக்கை இன்று உலகநாடுகளில்‌ அருகிவருகின்றது. இவ்வளவு காலமும்‌ அவ்வாறு நம்பி பல்வேறு வகைகளிலும்‌ உதவி வந்த ஐரோப்பிய ஒன்றியமும்‌ சரி, அமெரிக்காவும்‌ சரி வேடிக்கை பார்த்த உலக அமைப்புகளும்‌ சரி இப்போது பேச்சுவார்த்தை, அமைதி, மனிதநேயம் என அழகான சொற்களை அடுக்கி வருவது இதனையே காட்டுகிறது.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

மூலம்: 'எரிமலை', ஜுன்‌ 2000, பக்கம்: 6-8
மூல எழுத்தாளர்: அ. அன்ரனி
எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 09|1|2022


  

மனிதாபிமான நடைமுறைகளைப் புறந்தள்ளி கொடூரச் செயல்களில் இறங்கியுள்ள அரசு

 

வடபோர்‌முனையில்‌ நாளுக்கு நாள் போரின்‌ தீவிரம்‌ அதிகரிக்‌கப்பட்டுள்ளது. புலிகளினால்‌ மீட்கப்‌பட்ட பகுதியிலும்‌, படையினர்‌ வசமுள்ள அப்பாவிப்‌ பொதுமக்களை ஓம்பான(safe) இடங்களுக்கு நகர்த்துவதற்காகவும்‌, வீண்‌ உயிரிழப்புக்‌களை தவிர்ப்பதற்காகவும்‌ புலிகள்‌ 12 மணிநேர தாக்குதல்‌ இடைநிறுத்தம்‌ ஒன்றை அறிவித்தனர்‌. இவ்விடயத்தில்‌ அனைத்துலக தொண்டர்‌ நிறுவனங்களினதும்‌ உதவியையும்‌ கோரியிருந்தனர்‌. ஆயினும்‌ புலிகளால்‌ மீட்கப்பட்ட பகுதியிலிருந்து மக்களில்‌ கணிசமானதொரு தொகையினரே ஓம்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். படையினரின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ள மக்களை வெளியேற படையினர்‌ அனுமதி மறுத்ததோடல்லாமல்‌ புலிகளினது அறிவிக்கப்பட்ட தாக்குதல்‌ இடைநிறுத்தச்‌ செய்தி தமக்கு அறிவிக்கப்படவில்லையென உண்மைக்குப்‌ புறம்பானதொரு பொய்யை விட்டெறிந்துள்ளனர்‌.

தாம்‌ இந்தத்‌ தாக்குதல்‌ இடைநிறுத்தச்‌ செய்தியினை அரசுக்கு அறிவித்த போதிலும்‌ சாதகமான மறுமொழியேதும் கிடைக்கவில்லை என்றும்‌ மக்களை ஓம்பான இடங்களுக்கு அகற்றுவதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும்‌ அனைத்து தொண்டர்‌ நிறுவனங்கள்‌ கூறியுள்ளன. மீட்கப்‌பட்ட பகுதியிலிருந்து வன்னிப்‌ பகுதிக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள்‌ மீதே கொடு எறிகணைத்‌ தாக்குதல்களையும்‌ வானூர்தித் தாக்குதல்களையும்‌ தீவிரப்படுத்தி பலரது உயிரிழப்புக்களுக்கும்‌, நுற்றுக்‌கணக்கானவர்களை காயமடையவும்‌ அரச படைகள்‌ காரணமாயமைந்ததையிட்டுத்‌ தாம்‌ வேதனையுறுவதாயும்‌ அவை சுட்டிக்காட்டியுமுள்ளன.

தன்‌ நாட்டு மக்களினது உயிர்‌ விடயத்தில்‌ எதுவித அக்கறையும்‌ காட்டாது, தனது காட்டுமிராண்டித்‌தனமான போர்வெறிக்கனவுக்கு பல்‌லாயிரம்‌ அப்பாவிச்‌ சிங்கள இஞைர்‌களையும்‌, போரில்‌ தொடர்பில்லாத அப்பாவி மக்களினது உயிர்களையும்‌ அழித்தொழிக்கும்‌ மாறுபாட்டு விளையாட்டில்‌ சந்திரிகா அம்மையார்‌ இறங்கியுள்ளார்‌.

யாழ்‌ குடாவில்‌ நெருக்குதல்களுக்‌குள்ளாகியிருக்கும்‌ படையினர்‌ விடயத்தில்‌ புலிகள்‌ தாமாக முன்வந்து அப்பகுதியில்‌ சிக்கியுள்ள படையினரை அகற்றிக்‌ கொள்வதற்கென போர் தவிர்ப்பு அறிவிப்பினையும்‌, சரணடைவதற்கென ஒரு கிழமை அமையமும் கொடுக்க முன்வந்த போதிலும்‌ அரசு இவ்விடயத்தில்‌ சிறிதும்‌ அக்கறையின்றி நடந்து கொண்டது மட்டுமல்லாது புலிகளின்‌ அறிவிப்புக்களை புறந்தள்ளி கிண்டலும்‌ செய்து கொண்டது.

வட போர்முனையில்‌ அனைத்து முனைகளாலும்‌ நெருக்குதல்‌களுக்குள்ளாகி வரும்‌ அரசபடையினரது நிலை நாளுக்குநாள்‌ மோசமாகி வருவதோடு நாளை என்ன நடக்குமோ என்ற கேள்‌விக்குறியும்‌ எழுந்துள்ள இவ்‌வேளையில்கூட அரசு வேற்று நாட்டுப்படை உதவிகளைக்‌ கோருவதிலும்‌, அதி நவீனவகை ஆயுதங்‌களை கொள்வனவு செய்வதிலும்‌ தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. நவீனவகை ஆயுதங்களினால்‌ புலிகளைத்‌ தோற்கடிக்கலாம்‌ என இவர்கள்‌ எண்ணுவது மிகவும்‌ தவறானதொரு விடயமாகும்‌. ஏனெனில்‌ இந்தியப்‌ படையினரை இம்மண்ணிலே தோற்‌கடிப்பதற்கு புலிகள்‌ எந்தவகையான நவீன ஆயுதங்களையும்‌ ஏவல்செய்யவில்லை என்பதை இவர்கள்‌ மறந்து விடமுடியாது.

அரசும்‌ அரச படைகளும்‌ மனிதநேயமற்ற முறையில்‌ தமிழினத்தைக்‌ கொடுமைப்படுத்தி பன்னாட்டு போரியல்‌ சட்டதிட்டங்களை மீறும்‌ நடவடிக்‌கைகளில்‌ ஈடுபடுகின்ற வேளையிலும்‌, தமிழினப்‌ போர்‌ முனைப்படைந்த காலம்‌ தொட்டு இன்று வரையிலான காலகட்டம்‌ வரைக்கும்‌ புலிகள்‌ இவ்‌வழிமுறைகளை சரியான முறையிலேயே கடைப்பிடித்து வருகின்றார்‌கள்‌. பன்னாட்டு போரியல்‌ சட்டதிட்டங்‌களில்‌ அடங்கும்‌ வழிமுறைகளான போரில்‌ கைதாகும்‌ படையினரை மனிதநேய முறையில்‌ பராமரிப்‌பது, கைதிகளைப்‌ பரிமாறுவது, இறந்த வீரர்களது உடல்களுக்கு மரியாதை செய்வது, உறவினர்களுடனான தொடர்பை ஏற்படுத்திக்‌ கொடுப்பது போன்ற சட்ட திட்டங்களை பின்பற்றி, கடைப்பிடித்து வந்துள்ளமைக்கும்‌ சான்றுகள்‌ பல தமிழீழப்‌ போர்வரலாற்றில்‌ நடந்தேறியுள்ளன.

நீதியுடனான பேச்சுக்கள்‌ மூலமும்‌ உளத்தூய்மையுடனும்‌ ஆரம்பம்‌ முதல்‌ இன்று வரை செயற்படுத்த தவறிய பொ.ஜ.மு. அரசானது, அன்றுதொட்டு இன்றுவரை போரை முன்‌னெடுத்துச்‌ செல்வதிலேயே முனைப்‌பாக நின்றது. போரில்‌ புலிகள்‌ வலு மேலோங்கி படையினர்‌ படுதோல்வி பெறும்‌ வேளைகளில்‌ எல்லாம்‌ தமிழ்‌ மக்கள்‌ மீது இவ்‌அரசுகள்‌ பல போர்வை களில்‌ போர்ச்சுமை அழுத்தங்களைப்‌ ஏவல்செய்தன. ஆயினும்‌ இவ்வாறான கொடுஞ்செயல்கள்‌ பல வெளியுலகிற்கு எட்டாதபடி கடும்‌ இருட்டடிப்புச்‌ செய்‌யப்படுகின்றன. பன்னாட்டுச் சட்டங்‌களை மீறியதான செயற்பாடுகளில்‌ ஒன்றான நாளேட்டுச் சுதந்திரத்தைப்‌ பறிக்கும்‌ செயலை செய்தித்தணிக்கை எனும்‌ அத்தியாயத்தின்‌ மூலம்‌ மிக வும்‌ இறுக்கமான முறையில்‌ கடைப்‌பிடித்து வருவதனால்‌ மேற்படி சம்‌பவங்கள்‌ பல வெளியுலகினைச்‌ சென்றடைய வாய்ப்பில்லாமல்‌ போகின்றது. 

தமிழர்களிடமிருந்து புலிகளை பிரித்தெடுப்பதற்காகவும்‌, தமிழர்களின்‌ நீதிக்காகவும்‌ தம்மால்‌ போர்‌ முன்‌னெடுத்துச்‌ செல்லப்படுகின்றது என பன்னாட்டிற்கு போக்குக்‌ காட்டியபடி போரைத்‌ தொடரும்‌ அரசு, மறுபுறத்‌தில்‌ ஒட்டுமொத்த தமிழின அழிப்பு நடவடிக்கைகளை, கடும்‌ பொருளாதாரத்தடை, மருந்துத்தடை கடுமையான அணுகுமுறைகள்‌ மூலம்‌ தமிழினத்தை துயரத்தில்‌ வீழ்த்துவது போன்ற நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டிருக்‌கின்றது. வன்னியிலும்‌ ஏனைய தமிழ்ப்‌ பகுதிகளிலும்‌ தமிழினம்‌ கடும்‌ பட்டினி, நோய்த்தாக்கம்‌ போன்றவற்றினால்‌ தாக்குண்ட போதிலெல்லாம்‌ அவ்விடயத்தில்‌ சிறிதும்‌ கரிசனை காட்டத்தவறிய அரசு தென்னிலங்கையில்‌ ஆடம்பர நிகழ்வுகள்‌ போன்றவற்றில்‌ திளைப்பதோடு, போருக்கு அனைத்தும் எனும்‌ வழியில்‌ நடந்து கொண்டதன்‌ மூலம்‌ தன்னை ஒரு நீதியற்ற கொடிய இனத்துவேசம்‌ கொண்ட அரசாக இனம்காட்டிக்‌ கொண்டது. 

புலிகளுடனான போர் நடைபெறும்‌ நாட்களில்‌ மாத்திரமன்றி பன்னாட்டு போர் தவிர்ப்பு நாட்களாக கடைப்பிடிக்க வேண்டிய நாட்களைக்கூட சிங்களப்படைகள்‌ பொருட்படுத்தாமல் செய்து அந்நாட்களில்கூடத்‌ தமிழ்‌ மக்களைக்‌ கொடுமைப்படுத்தும்‌ நிகழ்வுகளில்‌ இறங்கியுள்ளதினையும்‌ நாங்கள்‌ அறிவோம்‌. புலிகளின்‌ தலைமை தாமாக முன்வந்து அறிவிப்புச்‌ செய்த போர் தவிர்ப்பு நாட்களைக்கூட கேலி செய்து கூடுதலாக அமைகின்ற புறக்கணித்துப் போரில்‌ தம்மவர்‌ இழப்பு போது அதனைச்‌ ஏற்றுக்கொள்ள முடியாத இவர்கள்‌ போருக்குப்‌ பயந்து மக்கள்‌ ஒதுங்கியிருக்கும்‌ கோயில்கள்‌, பாடசாலைகள்‌ வைத்தியசாலைகள்‌ போன்றவற்‌றின்‌ மீது மோசமான குண்டு த்தாக்‌குதல்களையும்‌ எறிகணை தாக்குதல்களையும்‌ தீவிரப்படுத்தி இனஅழிப்பு நடவடிக்கைகளில்‌ மனக்‌ கூச்சமின்றி செயற்படுவதாவது உண்மையில்‌ மன்‌னிக்க முடியாததும்‌ ஈவிரக்கமற்ற செயலொன்றாகவுமே கருதமுடியும்‌.

தமிழீழப்‌ போர்வரலாற்றில்‌ ஓர்‌ திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்‌கும்‌ ஓயாத அலைகள்‌ தாக்குதல்கள்‌ தொடங்கப்பட்ட நாள்‌ முதல்‌ இன்று வரை புலிகள்‌ மக்களது ஓம்பல் விடயத்தில்‌ அதிக கவனம்‌ செலுத்தி வருகின்றமை யாவரும்‌ அறிந்த ஒன்றே. தாக்குதல்கள்‌ நடைபெற்ற வேளையிலும்கூட தமிழ்‌ மக்களுக்குச்‌ செய்தி ஊடகங்கள்‌ மூலமாகவும்‌ பன்னாட்டு தொண்டர்‌ நிறுவனங்களூடாகவும்‌ அடிக்கடி ஓம்பல் இடங்களைத்‌ தேடுமாறும்‌ இடம்பெயருமாறும்‌ அறிவித்தபடி இருந்தனர்‌. ஆயினும்‌ படையினரோ தமிழ்‌ மக்களை மனிதக்‌ கேடயமாக்கி, விதிமுறைகளை மீறி நடந்த போதிலெல்லாம்‌ புலிகள்‌ பொறுமையிழக்காது மக்கள்‌ மீது கொண்ட பற்றுதல்களினால்‌ அந்த இடங்களில்‌ போர்த்‌ தவிர்ப்பு நடவடிக்கைகளில்‌ கூட ஈடுபட்டனர்‌.

புலிகளின்‌ போர்த்‌ தீவிரத்தை கண்டஞ்சியதால்‌ தம்மைப்‌ காத்துக்‌ கொள்ளக்கூட முடியாது திணறிய படை யினர்‌ போரில்‌ திசையை மாற்றுவதற்‌காக மக்கள்‌ புரவு தேடிய முறையில்‌ தாக்குதலைத்‌ தொடுத்து பல அப்பாலிப்‌ பொதுமக்களைக்‌ கொன்றும்‌ காயப்படுத்தியுமுள்ளனர்‌. அப்பழியினை விடுதலைப்‌ புலிகள்‌ மீது போட்டு பன்னாட்டுக் கண்டனங்‌களிற்கு புலிகளை உட்படுத்தும்‌ செயற்பாடுகளிலும்‌ அரசபடைகள்‌ ஈடுபட்டு வருகின்றன.

தமிழர்‌ தாயகப்‌ பகுதிகளை பிடுங்கி வல்வளைத்துக் கொள்ள பல திட்டங்கள்‌ போட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட போதிலும்‌ புலிகளின்‌ அதிதீவிர எதிர்த்தாக்குதல்களினால்‌ நடவடிக்கை சிதைக்கப்பட்டதின்‌ பின்னால்‌ ஆத்திரமுற்று அவதியுறும்‌ அரசானது இழப்புக்‌களையும்‌ தோல்விகளையும்‌ நிவர்த்தி செய்யும்பொருட்டு தமிழ் மக்கள் மீது இன்னுமதிகமாய் தாங்கமுடியாத போர்ச்சுமைகளையும், போர் அழுத்தங்களையும்‌ கடும் பொருளாதாரத்‌தடைகளையும்‌ கட்டவிழ்த்து விடுகின்றன. இப்படியான சம்பவங்களை பான்னாடுகள் அறியாமலில்லை. பலமுறை, கண்டனத்‌திற்கு உள்ளான சம்பவங்‌களும்‌ நடந்தேறியுள்ளன.

புலிகளினால்‌ விடுக்கப்‌பட்ட நல்லெண்ண அறிகுறிகளை புறந்தள்ளி போர்‌ நடைபெறும்‌ கோட்டத்தில் அகப்பட்டுள்ள தமிழ்‌மக்களினது புரவு விடயத்தில்‌ அக்கறையோ கரிசனையோ காட்டத்‌தவறிய சந்திரிகா அரசு, யாழ்‌ குடாவில்‌ சிக்கியுள்ள படையினர்‌ விடயத்தில்‌ அதீத அக்கறை காட்டுவதாக இல்லை. ஆகவே அக்கோட்டத்தில்‌ முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட படையினரது நிலை கேள்விக்குறியானதொன்‌றாகவே உள்ளது. இவ்‌ அசமந்தப்‌ போக்கினால்‌ நாளை படையினரது நிலை கவலைக்கிடமானதொன்றாகமாற வாய்ப்புண்டு. மிக மோசமானதொரு மனிதப்‌ பேரழிவு நிலைக்கு அவர்கள்‌ தள்ளப்படுவார்கள்‌ எனும்‌ அச்சம்‌ நிலவுகின்றது. இந்நிலை அரசின்‌ இனஅழிப்பு நோக்கினாலேயே ஏற்பட்டதேயன்றி வேறு எவரும்‌ பொறுப்பாளியாக இருக்கமுடியாது  என்பதே இங்கு உண்மையாகும்‌. 

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

மூலம்: 'எரிமலை', ஜுன்‌ 2000, பக்கம்: 10-12
மூல எழுத்தாளர்: ஜெயராஜ் தமிழீழம்
எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 09|1|2022

 

 


யாழ் நகரின் கிழக்கு வாயிலில் ஓயாத அலைகள் - 03 படையணிகள்

 

ஓயாத அலைகள்‌ - 03இன்‌ மூன்‌றாம்‌ கட்டம்‌ வடக்கு நோக்கித்‌ திரும்‌பியபோது யாழ்‌ குடாநாட்டுக்குள்‌ மூன்று களமுனைகள்‌ திறக்கப்பட்டன. இம்‌மூன்று முனைகளும்‌ அன்று படைய நோக்கர்களினால்‌ ஆனையிறவுப்‌ பெரும்‌ படைத்தளத்தின்‌ மீதான தாக்குதல்‌ தந்திரவழிவகையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டது. அது யாழ்‌ குடாநாட்டு மீட்பிற்கான ஒட்டுமொத்த மூலவழிவகையின்‌ ஓர்‌ உறுப்பாக அவ்வேளையில்‌ பார்க்கப்படவில்லை.

ஆனால்‌ ஆனையிறவுப்‌ பெரும்‌ படைத்தளம்‌ ஓயாத அலைகள்‌ - 03 படையணிகளினால்‌ வெற்றிகொள்ளப்‌பட்ட பின்னர்‌ கடந்த மே பத்தாம்‌ திகதி வலிகாமத்தில்‌ அரியாலை கிழக்கில்‌ இருந்தும்‌, தென்மராட்சியின்‌ கேரதீவு, அறுகுவேளிப்‌ பகுதியில்‌ இருந்தும்‌ நடவடிக்கைகள்‌ ஆரம்பிக்கப்பட்டபோதே இச்சமர் முனைகளின்‌ முக்கியத்துவம்‌ பலரையும்‌ திகைப்படைய வைத்தது.

ஏனெனில்‌ அரியாலை கிழக்கில்‌ இருந்து ஓயாத அலைகள்‌ - 03 படையணிகள்‌ மேற்கொண்ட ஒருநாள்‌ நகர்வே யாழ்நகரின்‌ கிழக்குப்புற வாயிலைப்‌ புலிகளின்‌ கைகளில்‌ வீழ்த்‌தியது. அதாவது ஓயாத அலைகள்‌ - 03 படையணிகள்‌ யாழ்‌ மாநகரசபை எல்லைக்குள்‌ சுமார்‌ இரு கிலோமீற்றர்கள்‌ வரை முன்னேறியிருந்தன.

இதேவேளை  தென்மராட்சியின்‌ கிழக்கில்‌ நாவற்குழி, கைதடிப்‌ படைத்‌தளங்களை அழித்து யாழ்‌ குடாநாட்‌டின்‌ கேந்திர முக்கியத்துவம்‌ வாய்ந்ததொரு நிலையை ஓயாத அலைகள்‌ படையணிகள்‌ கைப்பற்றுவதற்கு வாய்ப்பை உருவாக்கிக்‌ கொடுத்ததாகவும்‌ இருந்தது.

இந்தவகையில்‌ ஓயாத அலைகள்‌ - 03இன்‌ ஐந்தாம்‌ கட்ட நடவடிக்கை ஒரு வாரகாலத்தில்‌ யாழ்‌ குடாநாட்டின்‌ களமுனையில்‌ பெரும்‌ திருப்பங்களை ஏற்‌படுத்தும்‌ அளவிற்கு ஓயாத அலைகள்‌ - 03இன்‌ மூன்றாம்‌ கட்ட நகர்வு அடித்‌தளம்‌ இட்டிருந்ததெனலாம்‌. இது தமிழீழத்‌ தேசியத்‌ தலைவர்‌ மேதகு பிரபாகரனின்‌ எதிர்கால நடவடிக்கைக்‌கான மதிநுட்பத்துடன்கூடிய திட்டமிடலின்‌ வெளிப்பாடே ஆகும்‌.

ஆனால்‌ தேசியத்‌ தலைவர்‌ அவர்களின்‌ இந்நகர்வினை சிறீலங்‌காத்‌ தரப்பில்‌ எவருமே புரிந்திருந்ததாகத்‌ தெரியவில்லை. அவ்வாறு புரிந்‌திருப்பின்‌ குறைத்தது கிழக்கு அரியாலைப்‌ பகுதியில்‌ இருந்தாவது புலிகளை வெளியேற்ற படைத்தரப்பு ஒன்றிற்கு மேற்பட்ட தடவை முயற்சிகள்‌ மேற்கொண்டிருத்தல்‌ வேண்டும்‌. ஏனெனில்‌ அது ஏற்படுத்தக்கூடிய விளைவு யாழ்‌ நகரம்‌ குறித்து கேள்வி எழுப்பக்கூடியது. அவ்வாறு மேற்கொண்டிருந்தால்க்கூட வெளியேற்றி இருக்க முடியுமா என்பது வேறுவிடயம்‌.

ஓயாத அலைகள் - 03 படையணிகள்‌ 11ஆம்‌ திகதி அரியாலை, மணியந்தோட்டம்‌, கொழும்புத்துறை, கோயிலாக்கண்டி, தனங்கிளப்பு படைத்‌தளங்களையும்‌, 17ஆம்‌ திகதி நாவற்குழி, கைதடியின்‌ நிலைகளையும்‌ கைப்பற்றியபோது அது யாழ்‌ குடாநாட்டில்‌ யுத்த களநிலவரத்தில்‌ பெரும்‌ மாற்றத்தை விளைவிக்கும்‌ ஒன்றாகக்‌ கருதப்பெற்றது.

எவ்வாறெனில்‌ இந்‌ நகர்வுகள்‌ ஏ9 முதன்மை வீதியின்‌ யாழ்நகருக்கும்‌ சாவகச்சேரிக்கும்‌ இடையில்‌ சுமார்‌ ஆறு கிலோ மீற்றர்‌ நீளமான பாதையைப்‌ புலிகளின்‌ கட்டுப்பாட்டில்‌ கொண்டுவர வழிசெய்தது. இதில்‌ வலிகாமத்திற்கும்‌, தென்மராட்சிக்கும்‌ இடையிலான இரு பாதைகளும்‌ யாழ்‌ குடாநாட்டிலிருந்து வன்னிக் கோட்டத்திற்கான இரண்டாவது முதன்மைப் பாதையான நாவற்குழி கேரதீவு சந்தியும்‌ யாழ்‌ குடாநாட்டின்‌ மையப்பகுதி போன்றதொரு நிலப்பகுதியும்‌ புலிகளின்‌ கட்டுப்பாட்டினுள்‌ வந்தது. இந்நிலையானது படைத்துறை அடிப்படையில் பல்வேறு வகையில்‌ முக்கியம்‌ பெற்றதாக இருந்தது.

  1. ஆனையிறவுப்‌ பகுதி எவ்வாறு யாழ்‌ குடாநாட்டின்‌ நுழைவாயிலோ அதேபோன்று யாழ்நகரினதும்‌ வலிகாமத்தினதும்‌ நுழைவாயிற்பகுதியான அரியாலைப்‌ பகுதி புலிகளின்‌ கட்டுப்பாட்டினுள்‌ வந்தது.
  2. வலிகாமத்திற்கும்‌, தென்‌மராட்சிக்கும்‌ இடையிலான தரை வழிப்பாதைகள்‌ இரண்டு. ஒன்று கண்டிவீதி மற்றையது கோப்பாய்‌-கைதடி வீதி. இவை புலிகளின்‌ பிடிக்குள்‌ வந்தது.
  3. மறுவளமாக வலிகாமத்தின்‌ தென்‌ கிழக்குப்‌ பகுதியில்‌ தென்மராட்‌சியின்‌ மேற்குப்‌ பகுதியிலும்‌ நிலை கொண்டிருந்த ஓயாத அலைகள்‌ - 03 படையணிகள்‌ தரைவழியாக இணைவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்‌ கொடுத்தது.
  4. இவையாவற்றிக்கும்‌ மேலாக நாவற்குழி, கைதடிப்‌ பகுதிகள்‌ யாழ்‌ குடாநாட்டின்‌ மையப்பகுதி போன்றதாகும்‌. இதன்‌ காரணமாக இப்‌ பகுதியை கட்டுப்பாட்டில்‌ கொண்டு வந்தது. யாழ்‌ குடாநாட்டின்‌ பலபகுதிகளும்‌ குறிப்பாக சிறீலங்கா ஆயுதப்‌ படையினரின்‌ முதன்மை வழங்கல் வழிகள் மீதும்‌ பலாலிப்‌ படைத்‌தளம்‌ காங்கேசன்துறை துறைமுகம்‌ என்பன மீதும்‌ ஓயாத அலைகள்‌ - 03 படையணிகளின்‌ எறிகணைத்‌ தாக்குதலுக்கு இலக்காகும்‌ வாய்ப்புகளையும்‌ கொடுத்தது.

அதாவது நாவற்குழி கைதடிப்‌ பகுதியின்‌ வீழ்ச்சியானது சிறீலங்கா படையினரின் யாழ்‌ குடாநாட்டின்‌ இருப்புக்‌ குறித்து கேள்விகளை வலுவாகவே கேட்கவைக்கும்‌ ஒன்றாக மாறக்கூடியது எனலாம்‌. எடுத்துக்‌காட்டாக வலிகாமத்தில்‌ இருந்து தென்மராட்சிக்கான இரு வழங்கல் பாதைகள்‌ துண்டிக்கப்பட்ட நிலையில்‌ சிறீலங்கா படைத்துறை இனிப்‌ போரிடுவதானாலும்‌ சரி வெளியேறுவதானாலும்‌ சரி குறிப்பிட்ட ஓரிரு பாதைகளையே பயன்படுத்தவேண்டிய நிலை உருவாகியுள்ளது. அது எவ்வளவு காலத்திற்குப்‌ பேணப்படத்தக்கது என்‌பது ஒருபுறம்‌ இருக்க இது எவ்வளவு அவலமும்‌ ஊறையும் கொடுக்‌கும்‌ என்பதை படைத்துறை கிளிநொச்‌சியிலும்‌, ஆனையிறவிலும்‌ பெற்றுக்‌கொண்ட அனுபவத்தை மறந்திருக்க வாய்ப்பில்லை.

இதேசமயம்‌, யாழ்நகர்‌ மீதும்‌ புலிகளின்‌ உக்கிரமான தாக்குதல்கள்‌ எவ்வேளையிலும்‌ நிகழலாம்‌ என்றதொரு நிலையும்‌ உருவாகியுள்ளது.

அதாவது அரியாலை கிழக்கில்‌ இருந்து முன்னேறிய ஓயாத அலைகள்‌ - 03 படையணிகள்‌ யாழ்நகரின்‌ மையத்‌தில்‌ இருந்து மூன்று கிலோமீற்றர்‌ தொலைவில்‌ நிலைகொண்டிருப்பினும்‌, வன்னியுடனான தொடர்பு கடல்‌ வழியானதாகவே இருந்ததன்‌ காரணமாக சில இடையூறுகள்‌ இருக்கவே செய்‌தன. தற்போதைய நிலையில்‌ கேரதீவு சங்குப்பிட்டி பாதையூடான வன்னித்‌தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதன்‌ காரணமாக யாழ்நகர்‌ மீதான தாக்குதலுக்கான தயாரிப்பு ஓயாத அலைகள்‌ - 03 படையணிகளுக்கு இலகுவானதாகியுள்ளது.

ஆனால்‌, இவையாவற்றையும்விட தற்பொழுது பலாலிப்‌ படைத்தளமும்‌, காங்கேசன்துறைப்‌  படைத்தளமும்‌ ஓயாத அலைகள்‌ - 03 படையணிகளின்‌ தெறோச்சித் தாக்குதல்‌ வீச்சிற்கு முழுமையாக உட்பட்டுள்ளமையானது படைத்தரப்பிற்குப்‌ பெரும்‌ பாதிப்புக்‌களை விளைவிக்கும்‌ ஒன்றாக மாறியுள்ளது. ஏனெனில்‌ யாழ்‌ குடாநாட்டில்‌ நிலைகொண்டுள்ள சுமார்‌ 35,000 படையினர் இவ்வான் தளத்தினூடாகவும்‌ துறைமுகத்தின்‌ ஊடாகவும்‌ கிடைக்கப்பெறும்‌ வழங்கலை நம்பியுள்ளன. இவை இரண்டும்‌ தெறோச்சித் தாக்குதல்‌ வீச்சுக்குள்‌ உள்ளாவதினால்‌ வழங்கல் பெரும்‌ பாதிப்‌பிற்கு உள்ளாவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்‌.

இதற்கும்‌ அப்பால்‌ பலாலி வான்படைத்தளமே காயமுற்ற படையினரை தென்னிலங்கைக்குக்‌ கொண்டு செல்‌வதற்கான வழியாகவுள்ளது. இந்‌நிலையில்‌ இத்தளத்தின்‌ ஓடுபாதை பாதிக்கப்பட்டாலோ இத்தளம்‌ தாக்குதலுக்கு உள்ளானாலோ அது காயமுற்ற படையினரை வெளிக்கொண்டு செல்லப்‌ பெரிதும்‌ சிரமம்‌ அளிப்பதாகவே இருக்கும்‌. அதே சமயம்‌ இப்படைத்தளத்திலுள்ள படைய வைத்தியசாலையே காயமுற்ற படையினருக்கு உடனடி வைத்திய சேவையை வழங்கும்‌ இடமாக உள்ளது. இவ்‌வைத்தியசாலையும்‌ தனிப்‌ பகுதிக்குள் இருப்பதினால்‌ பாதிப்பிற்கு உள்ளாவது தவிர்க்க முடியாது போய்‌ விடலாம்‌.

இதேவேளை ஓயாத அலைகள்‌ - 03 படையணிகளின்‌ தற்போதைய நகர்‌வானது கண்டி முதன்மை வீதியில்‌ கிழக்குப்‌ புறமாகத்‌ திரும்பி சாவகச்‌சேரி நோக்கியதாக அமைந்துள்ளது. இந்நிலையில்‌ யாழ்நகரத்திற்கு முன்பாக தென்மராட்சிப்‌ பகுதியினை ஓயாத அலைகள்‌ - 03 படையணிகள்‌ தமது கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்டுவர முற்‌படக்கூடும்‌.

அவ்வாறானதொரு நிலை உருவாகும்‌பக்கத்தில் ஓயாத அலைகள்‌ -03 படையணிகள்‌ வலிகாமப்‌ பகுதியிலும்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தென்மராட்சிக் கோட்டம் பெரும்‌ வாய்ப்பானதாக அமையும்‌.

மறுவளமாகச்‌ சிறீலங்கா படையினர் தென்மராட்சிப்‌ பகுதியை இழப்‌பின்‌ படைத்துறையைப் பொறுத்து அது மிகவும்‌ பேரிடரானது. இதனை படை அதிகாரிகள்‌ புரிந்து கொண்‌டிருப்பினும்‌ ஆட்சியாளர்கள்‌ ஏற்றுக்‌கொள்வார்களா என்பது கேள்வியே.

இவர்கள்‌ நவீன ஆயுத தளபாடங்‌கள்‌ மூலம்‌ நிலைமையைச்‌ சீர்செய்து விடலாம்‌ என்ற அடிப்படையில் பெருமளவு ஆயுத தளபாடக்‌ கொள்வனவில்‌ ஈடுபட்டுள்ளனர்‌. இதன்‌ மூலம்‌ படையினரை குடாநாட்டில்‌ நிலைநிறுத்திவிடலாம்‌ எனக்கருதுகின்றனர்‌. அத்தோடு வெளியாரின்‌ ஆதரவுகிட்டும்‌ எனவும்‌ காட்டவிளைகின்றனர்‌.

இது எவ்வாறு இருப்பினும்‌ ஓயாத அலைகள்‌ - 03 படையணிகளின்‌ அடுத்‌தகட்ட நகர்வை அது எதிர்கொள்வது மிகவும்‌ கடினம்‌ மிக்கதொன்றாகவே இருக்கும்‌. ஆனையிறவுப்‌ பெரும்‌ படைத்தளம்‌ இழக்கப்பட்டபோது யாழ்‌ குடாநாட்டில்‌ படைத்துறையின் இருப்புக்‌ குறித்த கேள்வி எழும்பியிருந்தது. ஆனால்‌ சிங்கள வரட்டு மேன்மை அதனை ஏற்கவில்லை.

ஆனால்‌, தற்பொழுதுகூட அவர்கள்‌ சூழ்நிலையைப்‌ புரிந்து கொள்வார்‌களா? என்பது ஐயமே. ஆகையினால்‌ யாழ்‌ குடாநாட்டிலுள்ள சிறீலங்கா படைத்துறை பெரும்‌ பேரிடர் நோக்கிச்‌ சென்று கொண்டிருக்கின்றது என்று மட்டுமே தற்பொழுது கூறக்‌ கூடியதாகும்‌. 

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

மூலம்: 'விடுதலைப்புலிகள்', ஆடி 2000, பக்கம்: 1-2
மூல எழுத்தாளர்: அறியில்லை

தட்டச்சு: நன்னிச் சோழன், 21|02|2022

 

 

போரில் இயலாமை. அரசியல் தீர்வில் நாட்டமின்மை
அதளபாதாள நிலையை நோக்கி சிங்கள அரசு

 

ஓயாத அலைகள்‌ - 03 படைநடவடிக்கையை புலிகள்‌ ஆரம்பித்து சுமார்‌ 08 மாதகாலம்‌ வரையிலும்‌ சிங்களப்படைகளால்‌ ஒரு வலிந்த தாக்குதலை புலியணிகள்‌ மீது நடாத்த முடியவில்லை. வலுவெதிர்ப்பு சண்டைகளை மட்டுமே நடாத்த வேண்டிய இக்கட்டான படைத்துறை சூழலில்‌ சிங்களப்படை இருந்தது.

எட்டு மாதங்களின்‌ பின்‌ மணலாறு, நாகர்கோவில்‌, அரியாலை, நாவற்குழி என நான்குமுனைகளில்‌ - இழந்த நிலத்‌தைக்‌ கையகப்படுத்தும் ஆசையுடன் - சிங்களப் படையினர்‌ வலிந்த தாக்குதல்களை நிகழ்த்‌தியிருந்தனர்‌.

எனினும்‌, படையினரின்‌ நான்கு வலிந்த தாக்குதல்கள்‌ மீதும்‌ புலிவீரர்கள்‌ முறியடிப்புத் தாக்குதல்களை தொடுத்து படையினரை முன்னைய இடங்களுக்கு விரட்டியடித்து - அவர்‌களின் தாக்குதல்களை முறியடித்‌துள்ளனர்‌.

இவ்விதம்‌, வடபுலப்போர்முனையில்‌ நடைபெறும்‌ மரபுவழிச்‌ சண்‌டைகளில்‌ படையினர்‌ பலத்த படைத்துறைத் தோல்விகளைச்‌ சந்தித்தபடியும்‌ அதேவேளை; கிழக்குப்‌ போர்முனையில் புலிவீரர்களின் கரந்தடித் தாக்குதல்களினால்‌ சிங்களப்‌ படையினர்‌ கணிசமான அழிவுகளையும் - ஆயுத இழப்புக்களையும்‌ சந்‌தித்துவருகின்றனர்‌.

சிங்களப்படையுடன்‌ ஒப்பிடும்போது எண்ணிக்கையில்‌ குறைந்த புலிப்‌படை, எண்ணிக்கையிலும்‌ - ஆயுத வலும்‌ அதிகமான சிங்களப்‌படை நிலைகள்மீது தாக்குதல்‌ நடாத்த அவற்றை வெற்றிகொள்‌வதும்‌; வென்றுமீட்ட நிலங்களில்‌ புலிவீரர்கள்‌ நிரந்தரமாக நிலை கொள்ளும்போது அதை முறியடிக்‌க முடியாத படைத்துறை இயலாமையுடன்‌ சிங்களப்படைகள்‌ தவிப்பதுமாக இன்றைய கள நடப்பியல் உள்ளது.

ஒரு கட்டத்‌தில்‌ குடாநாட்டுப்படையைப்‌ பாதுகாக்க உலகநாடுகளின்‌ உதவியை சிங்கள அரசு இரந்து கேட்ட படைத்துறை அவமானத்தையும்‌ சிங்களதேசம்‌ துய்த்துவிட்டது. குடாநாட்டுப்‌ படையின்‌ இருப்பு அதற்கு பேரிடர் நிறைந்ததாகவே இன்றும்‌ உள்ளது.

புலிகளை ஒடுக்குவதற்காக எந்‌தப் பேய்களிடமும்‌ உதவிகோருவேன்‌ என, அன்று, ஜே. ஆர்‌. ஜெயவர்த்‌தனா கூறியிருந்தார்‌. 

புலிகளிடமிருந்து குடாநாட்டுப்‌ படையைப்‌ பாதுகாப்பதற்காக எந்‌தப்‌ பேயிடமும்‌ உதவிகோரும்‌ நிலையில்‌ சந்திரிகா அம்மையார்‌ இன்றுள்ளார்‌.

இவ்விதம்‌ தனது தேசியமேன்மையை அடகுவைத்தாவது புலிகளுடன்‌ போர்புரியவேண்டிய படைத்துறை இயலாமையுடன்‌ சிங்களப்படை உள்ளது.

புதிய ஆய்தங்களைக்‌ கொள்வனவு செய்தும்‌ ஆள் எண்ணிக்கையை மேலும திகரிக்கச் செவிக்க புதிதாக படையில் ஆட்களை இணைத்தும்‌;

ஓடிய படையினருக்கு சலுகைகளை அறிவித்து ஆசையூட்டி மீண்டும்‌ படையில்‌ இணைக்கவும்‌;

போர்ச் செலவீனத்தை மேலும்‌ மேலும்‌ அதிகரித்தும்‌;

சிதைந்துபோயுள்ள சிங்கள அரசின் போர்‌ இயந்திரத்தைப்‌ புனரமைப்புச்‌ செய்ய, அரசு முயற்சிக்கின்றது.

இந்த முயற்சியால் சிங்கள அரசு பெரும் பயனைப் பெறப்போவதில்லை என சிங்கள ஆய்வாளர்களே அரசை மிரட்டியுள்ளனர்‌.

போரில்‌ சிங்களப்படைகள்‌ சந்‌தித்துவரும்‌ மோசமான தோல்விகளின்‌ விளைவுகளை சிங்களமக்கள்‌ உணராது தடுப்பதற்கும்‌ - சிங்கள அரசாங்‌கத்தின்‌ படைத்துறை இயலாமையை மூடிமறைக்கும் இலக்குடனும்‌ நாளேட்டுத்தணிக்கையை அரசாங்கம்‌ கடைப்பிடிக்கின்றது.

போர்மூலம்‌ தமிழரின்‌ அரசியல்‌ போராட்டத்தை ஒடுக்கமுடியாது என்‌பதை களநடப்பியல் நன்கு உணர்த்‌திய பின்னர்‌, அரசியல்தீர்வு முயற்சிக்காக புலிகளுடன்‌ அமைதிப் பேச்சுவார்த்தையை நடாத்த வேண்டும் என்‌, சர்வதேச நாடுகளும்‌ - மனிதநேய நிறுவனங்களும்‌ சிங்கள அரசைக்‌ கோரிவருகின்றன.

ஆயினும்‌ அந்த பன்னாட்டு கருத்தை சிங்கள அரசு மதிப்பளிப்பதாகத் தெரியவில்லை. அதற்‌குப் பகராமாக புலிகளுடன்‌ போர்புரிய உதவுமாறு தனது நட்புநாடுளுக்கு அது கோரிக்கை விடுத்துள்‌ளது.

எனினும்‌, மேலைத்தேய நாடுகளிடமிருந்து பொருண்மிய உதவிகளைப்பெறும்‌ நடவடிக்கைகளுக்காக பேச்சுவார்த்தை என்ற தந்தரவழிவகை நிலைப்பாட்டையும் சந்திரிகா அரசு கைவிடவில்லை. அரசியல்‌ தீர்வு முயற்சியில்‌ தனது அரசாங்கம்‌ ஆர்வமாக இருக்கின்றது என உலகிற்குக்காட்டும்‌ முயற்சியிலும்‌ அரசு இறங்கியுள்ளது.

தமிழரின்‌ அரசியல் நிகராளிகளான புலிகள்‌ இயக்கத்துடன்‌ அமைதிப் பேச்சுக்களில்‌ ஈடுபடமாட்‌டேன்‌ என முன்னர்‌ அறிவித்து, ஆயுதங்களை புலிகள்‌ கைவிட்டால்‌ அவர்களையும்‌ பேச்சில்‌ இணைத்‌துக்கொள்வேன்‌ என பின்னர்‌ அறிவித்து, அரசியல் தீர்வு முயற்சியில்‌ அம்மையாருக்கு இருக்கும்‌ 'உண்‌மையான அக்கறையை' வெளிப்படையாக்கியுள்ளார்‌.

போர்விரிவாக்கத்தாலும்‌ - ஆயுதப்பெருக்கத்தாலும்‌ சிங்கள அரசின்‌ பொருண்மியவலு பெருமளவு சிதைந்துவிட்டது.

அரசபொருளாதாரம்‌  பற்றாக்குறையாகவுள்ளதால்‌ வரி அதிகரிப்புஉட்பட பல்வேறு பொருண்மியச்‌ சுமைகளை சிங்கள மக்கள் மீது சுமத்தி ஒரு சமூக - பொருளாதாரச் சிக்கலை சந்திரிகா அரசு உருவாக்கியுள்ளது.

படையை விட்டோடிய படைஞர்களால் சிங்கள சமூகம் பயப்பிடுகின்றது என பல்வேறு சிங்கள் கல்வியலாளர்கள்‌  எச்சரிக்கின்றனர்‌. இவர்களின்‌ குற்றச்செயல்‌களால்‌ சிங்கள சமூகத்தில்‌ கொலைகளும்‌ - தற்கொலைகளும்‌ பெருமளவு அதிகரித்துள்ளன.

சிங்கள அரசு சந்தித்துள்ள படைத்துறை அரசியல்‌ - பொருளாதார நெருக்கடிகளுக்கு முதன்மை காரணம்‌ புலிகளின்‌ படைத்துறை வலு வளர்ச்சிதான்‌.

இந்தப்‌ பலவளர்ச்சி இன்னும்‌ வளர்த்தெடுக்கப்படும்போது சிங்கள அரசு முழுமையாகவே இடைத்தங்கும் நிலையை அடையலாம்‌.

அதுவே தமிழரின்‌ அரசியல்‌ இலட்சியம்‌ ஈடேறும்‌ உச்சக்கட்டமாக இருக்கும்‌. 

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

மூலம்: 'எரிமலை', நவம்பர் 2000, பக்கம்: 22-24
மூல எழுத்தாளர்: ஜெயராஜ் தமிழீழம்
எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 09|1|2022

 

 

ஓராண்டு நிறைவில் ஓயாத அலைகள் - 3உம் தொடர்ந்து செல்லும் விளைவுகளும்

 

இலங்கையில்‌ படைத்துறை - அரசியல்‌ வரலாற்றில்‌ பல திருப்பங்களுக்‌கும்‌ மாற்றங்களுக்கும்‌ காரணியாக அமைந்த ஓயாத அலைகள்‌ - 3 நடவடிக்கை ஆரம்பமாகி ஓராண்டு நிறைவுற்றுவிட்டது. இருப்பினும்‌ அதன்‌ விளைவுகளே இன்றைய படைத்துறை அரசியல்‌ செயற்பாடுகளை தீர்மானிக்‌கும்‌ ஒன்றாக உள்ளது.

சுமார்‌ ஏழு மாதங்கள்‌ வரையில்‌ நீடித்த இத்தாக்குதல்‌ நடவடிக்கையானது விடுதலைப்‌ புலிகளுக்கு படைத்துறை - அரசியல்‌ அடிப்படையில் பெற்றுக்கொடுத்த அங்கீகாரம்‌, விடுதலைப்‌ புலிகள்‌ குறித்த மதிப்பீட்டில்‌ ஏற்படுத்‌தியுள்ள மாற்றம்‌ என்பன இலங்கையின்‌ எதிர்கால படைத்துறை - அரசியல்‌ வரலாற்றை உறுதிப்பாடு செய்யும்‌ வலிமையாக விடுதலைப்‌ புலிகள்‌ உள்ளனர்‌ என்பதை உறுதி செய்தது.

“விடுதலைப்‌ புலிகள்‌ இயக்கத்தின்‌ இறுதிக்காலம்‌ நெருங்கிக்‌ கொண்டிருக்கிறது”, “போரில் 90 விழுக்காட்டிற்கும்‌ அதிகமான வெற்றி பெற்றாகிவிட்டது”, “விடுதலைப்‌ புலிகளின்‌ கட்டுப்பாட்டில்‌ மிகச்சிறிய நிலப்‌ பகுதி மட்டுமே உள்ளது”, “விடுதலைப்‌ புலிகள்‌ விரைவில்‌ வலுவிழந்த சிறிய கரந்தடிக் குழு என்ற நிலைக்குத்‌ தள்ளப்பட்டு விடுவார்கள்‌” என சிறீலங்கா ஆட்சியாளர்களும்‌ படைத்துறை தலைமைப்பீடமும்‌ அறிவிப்புக்‌கள்‌ செய்து கொண்டிருக்கையில்‌, “விடுதலைப்‌ புலிகள்‌ ஓர்‌ படைத்துறை வலிமையாகவோ அன்றி அரசியல்‌ வலிமையாகவோ செயற்படும்‌ வலிமையை விரைவில்‌ இழந்துவிடக்கூடும்‌. தமிழர்தாயகம்‌ என்ற அவர்களின்‌ சித்தாந்‌தம்‌ வலுவீனமாகிப்‌போவது தவிர்க்க இயலாததாகிவிடும்‌” என சில படைத்துறை ஆய்‌வாளர்கள்‌ ஆருடங்களும்‌, எண்ணங்களும் தெரிவித்துக்‌கொண்டிருந்த நிலையில்‌ ஓயாத அலைகள்‌-03 நடவடிக்கை 1999ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ இரண்‌டாம்‌ திகதி அதிகாலை விடுதலைப்‌ புலிகளினால்‌ முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழத்‌ தேசியத்‌ தலைவர்‌ பிரபாகரன்‌ அவர்களின்‌ நெறிப்படுத்தலில்‌ தொடங்கிய இந்நடவடிக்கையின்‌ முழுயளவிலான வீச்சை ஆரம்பத்தில்‌ சிறீலங்கா படைத்துறை தரப்‌பினராலும்‌ சரி, படைய  மதிப்புரைஞர்களினாலும்‌ சரி சரியாக மதிப்பீடு செய்ய முடியவில்லை. முதல் ஓரிரு நாட்களில் இது சில முகாம்கள்‌ மீதான மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம்‌ எனக்கருதிய பலர்‌, நடவடிக்கையின்‌ வீச்சை அது திறந்த பல களமுனைகளையும்‌, பல திசையிலான நகர்வையும்‌ கண்டுகொண்ட பின்னரே உணர முடிந்தது. அதன்பின்‌ இந்நடவடிக்கையின்‌ நோக்கம்‌ குறித்து ஊகங்களை வெளியிடுவதைத்‌ தவிர்த்துக்‌ கொண்டனர்‌.

வன்னிப்‌ பெருநிலப்பரப்பின்‌ முல்லைத்‌தீவு மாவட்டத்தில்‌ ஒட்டுசுட்டானில்‌ ஆரம்பமாகி மன்னார்‌, கிளிநொச்சி, யாழ்‌. மாவட்டமென யாழ்‌. குடா நாட்டில்‌ பளைப்‌ பகுதி வரை மீட்டெடுத்ததுடன்‌ முடிவுக்கு வந்த இந்நடவடிக்கையானது சிறீலங்கா படைத்துறையிற்கு வரலாறு காணாத தோல்வியையும்‌, இழப்பையும்‌ சிறீலங்கா அரசின்‌ படைய மேலாண்மை என்ற விருப்பத்திற்கு, பெரியதொரு அடியையும்‌ கொடுத்தது.

ஓயாத அலைகள்‌ - 3இல்‌ சிறீலங்கா படைத்துறை அடிப்படையில் தெளிவானதொரு தோல்‌வியை சந்தித்ததென்பதில்‌ கேள்விக்கோ, விவாதத்திற்கோ இடமில்லை. அதாவது ஓர்‌ படைத்துறை தோல்வியை மதிப்பிடக்கூடிய பல கூறுகளிலும்‌ அது பின்னடைவைக்‌ கண்டது.

  1) ஆளணி மற்றும்‌ ஆயுத தளபாட இழப்பு

ஓயாத அலைகள்‌ - 3 இல்‌ சிறீலங்கா படைத்துறையின் ஒட்டுமொத்த இழப்பு சரியாக மதிப்பிடப்படவோ அன்றி வெளியிடப்படவோ இல்லை. எனினும்‌ ஆயிரக்கணக்கில்‌ படையினர் கொல்லப்பட்டும்‌ காயங்களுக்கு, உள்ளாகியும்‌ உள்ளனர்‌. ஆயிரக்கணக்‌கானோரை படையினரை விட்டு ஓடவும்‌ வைத்தது.

இதே சமயம்‌ கனவகை போர்த்‌ தளபாடங்‌கள்‌ உள்ளடங்கலாக பெருமளவு ஆயுத தளபாடங்கள்‌ விடுதலைப்‌ புலிகளினால்‌ அழிக்கப்பட்டும்‌, கைப்பற்றப்பட்டும்‌ இருந்‌தன. இந்த வகையில்‌ எம்‌.ஐ. 24 வகை தாக்‌குதல்‌ உலங்குவானூர்தி, டோறா விரைவுத் தாக்குதல் கலன்கள்‌ உட்பட இருபதிற்கும்‌ மேற்பட்ட சேணேவிகள் மற்றும்‌ ஆயுத தளபாடங்கள்‌ பெருமளவு வெடிபொருட்கள்‌ என்பன அழிக்கப்பட்ட அதேவேளை 155எம்‌.எம்‌ தெறோச்சிகள், 122 எம்‌.எம்‌ கணையெக்கிகள் உட்பட பெருமளவு ஆயுத தளபாடங்கள்‌ கைப்பற்றப்பட்டும்‌ இருந்தன. 

 2) பகுதி அடிப்படையிலான இழப்பு

சிறீலங்கா படைத்துறை வன்னியிலும்‌, யாழ்‌. குடாநாட்டிலும்‌ பல படை நடவடிக்கைகள்‌ மூலம்‌ வல்வளைத்த பகுதிகள்‌ ஓயாத அலைகள்‌ - 3இன்‌ மூலம்‌ மீட்‌கப்பட்டன. 2500 சதுரகிலோ மீற்றருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு மீட்கப்பட்டதோடு கேந்திர முக்கியத்துவம்‌ மிக்க முக்கிய பகுதிகளும்‌ புலிகளின்‌ கட்டுப்பாட்டில்‌ கொண்டு வரப்பட்டிருந்தன. குறிப்பாக நெடுங்கேணி, ஆனையிறவு, கேரதீவு, நாவற்‌குழி என்பனவற்றையும்‌ சுட்டிக்காட்டமுடியும்‌.

 3) சிறீலங்கா படைக் கட்டமைப்‌பைச்‌ சிதைத்தது

அதாவது ஓயாத அலைகள்‌ - 3 சிறீலங்கா படைத்துறை உயர்பீடத்தில்‌ பல மாற்றங்களுக்கு வித்திட்டது மட்டுமல்ல, பல மூத்த அதிகாரிகள்‌ கட்டாயத்தின்‌ பெயரில்‌ விடுமுறையில் அனுப்பப்படவும்‌, சில உயர்‌ அதிகாரிகள்‌ களத்தில்‌ பலியாக வேண்டியும்‌ சில மூத்த அதிகாரிகள்‌ களமுனையில்‌ இருந்து வெளியேறிச்‌ செல்லவும்‌ காரணமாகியது.

இந்தவகையில்‌ ஓயாத அலைகள்‌ - 3 சிறீலங்கா படைத்துறையின் தோல்வியைப்‌ பல்வேறு கூறுகளும் உறுதி செய்வதாக இருக்கையில்‌ ஓயாத அலைகள்‌ 3 விடுதலைப்‌ புலிகளின்‌ படைத்துறை அடிப்படையான பரிமாணத்தையும்‌ உலகிற்கு வெளிக்காட்டி நின்றது.

ஓயாத அலைகள்‌ - 3 மூலம்‌ விடுதலைப்‌ புலிகள்‌ தம்மை உலகின்‌ பார்வையில்‌ ஒரு முழுவடிவிலான மரபுவழிப்படையாக உறுதிசெய்து கொண்டிருந்தனர்‌. ஓயாத அலைகள்‌ - 3 நடவடிக்கைகளுக்கு முன்னதாகவே மரபுவழிப்படைக்குரிய பண்புகளைப்பெற்றுக்‌ கொண்டிருப்பினும்‌ ஓயாத அலைகள்‌ - 3இன்‌ பின்னரே வெளியிலுள்ள படைய ஆய்வாளர்கள்‌ இதனை விளங்கிக்கொள்ள வாய்ப்பேற்பட்டது.

அத்தோடு இவ்‌ ஓயாத அலைகள்‌ - 3 நடவடிக்கைகளின்போது விடுதலைப்‌ புலிகள்‌ இயக்கம்‌ சிறீலங்காவின்‌ முக்கியமான ஐந்து படைப்பிரிவுகளுடன்‌-டிவிசன்‌ சண்‌டையிட்டுள்ளதோடு மூன்று படைப்பிரிவுகளின்‌ தலைமை அலுவலகங்‌களையும்‌ தமது கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்‌டுவந்திருந்தனர்‌. அதாவது, வன்னிப்‌ பகுதியில்‌ இருந்த 55ஆவது 56ஆவது படைப்பிரிவுகளின்‌ தலைமையகங்களும்‌ ஆனையிறவுப்‌ பகுதியில்‌ இருந்த 54ஆவது படைப்பிரிவின்‌ தலைமையகமும்‌ புலிகளிடம்‌ வீழ்ச்சி கண்டது. இதேசமயம்‌ 53ஆவது, 52ஆவது, படைப்பிரிவு படையணிகளுடனும்‌ சண்டையிட்டு அவற்றின்‌ சில படைத்தொகுதி தலைமையகங்‌களைக்‌ கைப்பற்றிய அதேவேளை சில படைத்தொகுதிக்கு பெரும்‌ இழப்பையும்‌ கொடுத்தனர்‌. குறிப்பாக 53வது படைப்பிரிவில் சில படைத்தொகுதிகள்‌ தாளையடி, சோரன்‌பற்றுப்‌ பகுதியிலும்‌ இத்தாவில்‌ பகுதியிலும்‌ பெரும்‌ இழப்புக்களைச்‌ சந்தித்திருந்தன. இந்த வகையில்‌ போரிட்டு புலிகள்‌ மரபுவழிப்படை என்ற வடிவத்தைப்‌ பெற்றுக்‌கொண்டது மட்டுமல்ல பெரும்‌ சமர்கள்‌ மூலம்‌ சிறீலங்கா படையினரை விரட்டியடித்தும்‌ தமது திறமையும்‌, ஆற்றலையும்‌ வெளிக்காட்டி நின்றமை விடுதலைப்‌ புலிகளிடம்‌ உறுதியான படைக்கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுவிட்டதை வெளிக்காட்டியது.

இவ்வாறாக ஓயாத அலைகள்‌ - 3 படைத்துறை அடிப்படையில் கொடுத்த பெரும்‌ அழுத்‌தம்‌ சிறீலங்கா அரசு வெளிநாடுகளில்‌ இருந்து படைத்துறை உதவிகோரும்‌ நிலைவரை கொண்டுசென்றது. சிறீலங்கா அரசு வெளிப்‌பார்வையில்‌ படைத்துறை உதவி என்ற அடிப்படையில் விடுத்த கோரிக்கை ஆயுத தளபாடங்‌கள்‌ என்ற அடிப்படையிலேயே நோக்கப்பட்டதாயினும்‌ உண்மையில்‌ ஆளணி அடிப்படையிலான படைத்துறை உதவியையும்‌ அது எதிர்பார்த்தே இருந்தது. இதற்கு ஏற்பவே இந்தியாவை அது அணுகியதாயினும்‌ அது ஏலானதாகாத நிலையில்‌ ஆயுத உதவி என்ற அளவில்‌ அது நின்று கொண்டு விட்டது.

அதேசமயம்‌, சிறீலங்கா அரசோ போரிற்கென மேலும்‌ 2000 கோடி ரூபாவை ஒதுக்கி படைத்துறை செலவீட்டைச்‌ சுமார்‌ 8000 கோடி ரூபாவரையில்‌ அதிகரிக்க வேண்டியும்‌ வந்தது. அதன்‌ மூலம்‌ நவீன போர்க்கப்பல்கள்‌ பல களமுனையில்‌ அறிமுகம்‌ செய்யப்பட்டன.

இவ்வாறாக படைத்துறை அடிப்படையில் சிறீலங்கா படையினருக்கும், அரசிற்கும்‌ பெரும்‌ பின்‌னடைவு ஏற்படக்காரணமாக இருந்த ஓயாத அலைகள்‌ - 3 அரசியல்‌ அடிப்படையில் சிறீலங்கா அரசிற்கு சில தவிர்க்கமுடியாத கட்டாயங்களை ஏற்படுத்துவதாகவே மாறியிருந்தது.

  1. விடுதலைப்‌ புலிகளுக்கு எதிரான போரில் அரசு வெற்றிகொண்டு வருகின்றதென சிறீலங்காவின்‌ வெளியுறவுத்துறை அமைச்சு மேற்கொண்ட பெரும்‌ எடுப்பிலான பரப்புரை பொருளற்றதாக்கப்பட்டது.
  2. போர்நிலை கைமீறிச்‌ சென்று கொண்டிருப்பதினால்‌ இனச்சிக்கலுக்கு அரசியல்‌ அடிப்படையிலான தீர்வு குறித்து குறிப்பிட்டுக்கூறுதலை தேவையானதாக்கியது.
  3. இனச்சிக்கலுக்கு அரசியற்‌ தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு வெளிநாட்டு ஏற்பாட்‌டாளர்‌ ஒருவர்‌ தேவை என்பதையும்‌ உறுதியாக்கியது.

விடுதலைப்‌ புலிகளுடன்‌ அரசியல்‌ பேச்சுவார்த்தைகள்‌ அனைத்துலக நடுத்துவம் அல்‌லது ஏற்பாட்டாளர்கள்‌ என்ற விடயத்தில்‌ சந்திரிகா குமாரதுங்கா அரசு வெளிப்படையான நகர்வுகளை மேற்கொள்ள பெரும்‌ தயக்கம்‌ காட்டிவருகின்றது. ஏனெனில்‌, சிங்‌களப்பேரினவாதம்‌ அந்தளவிற்கு தனது எதிர்ப்பை வெளிக்காட்டுவதாய்‌ உள்ளது.

ஆனால்‌ ஆட்சியாளர்களுக்கு அனைத்துலக ஒத்தாசையாளர்‌ இன்றி இவ்விடயத்தில்‌ முன்னேற்றம்‌ எதுவும்‌ ஏற்பட்டுவிடப்போவதில்லை என்பது நன்கு தெரியும்‌. அத்‌தோடு, அவ்வாறானதொரு உதவி பெறப்‌படாது போரைத் தொடர்ந்து நடத்துவதும்‌ இலகுவானதொன்றாக  இருக்கப்போவதில்லை என்பதும்‌ அதற்குத்தெரியும்‌. ஏனெனில்‌, போரைத் தொடர்ந்து நடத்துவதாகில்‌ அதற்கும்‌ வெளிநாட்டவர்களின்‌ நிதி உதவி தேவையானதாகும்‌.

இந்‌ நிலையில்தான்‌ ஓயாத அலைகள்‌-3றைத்‌ தொடர்ந்து நோர்வேயின்‌ நடுத்துவம் சிறீலங்கா அரசினால்‌ அதிகாரநிறைவாகவும் கோரவும்பட்டது. நோர்வே அரசாங்கமும்‌ இதற்கு முன்பிருந்தே இவ்விடயத்தில்‌ தீவிர அக்கறை காட்டி வருகின்றது. ஆனால்‌ நோர்வேயின்‌ சமரச முயற்சியானது சிறீலங்காவின்‌ உள்நாட்டு அரசியல்‌ காரணிகளால்‌ ஏறுவதும்‌ இறங்குவதுமாக உள்ளது.

ஏனெனில்‌ இனச்சிக்கல் துறட்டிற்கு அனைத்துலக நடுத்தியத்துடன்‌ தீர்‌வொன்றைக்‌ காண்பதற்கு பெளத்த பேரினவாத அமைப்புக்கள்‌ தமது வலுவான எதிர்ப்‌பைக்‌ காட்டுவதே இந்‌ நிலைக்குக்‌ காரணமாகும்‌. அத்தோடு சமரச முயற்சியில்‌ ஈடுபட முனையும்‌ நோர்வேக்கு எதிராகவும்‌ அவர்கள்‌ தமது மனக்குறையை வெளிக்‌காட்டியுள்ளனர்‌.

அதிலும்‌ குறிப்பாகத்‌ தேர்தல்‌ காலங்‌களில்‌ ஆட்சியாளர்கள்‌ இனச்சிக்கலுக்கு அரசியல்‌ தீர்வு என்பது குறித்துப்‌ பேசவே அஞ்சுகின்றனர்‌. ஆயினும்‌ ஓயாத அலைகள்‌ - 3 படைத்துறை அடிப்படையில் கொடுத்த அழுத்தமானது இனச்சிக்கலுக்கு அரசியல்‌ தீர்வொன்றே இயலுமைப்படுத்த வேண்டியது என்ற தேவையை ஆட்சியாளர்‌களுக்கு வலுக்கட்டாயப்படுத்துவதாக உள்ளது.

இந்நிலையில்தான்‌ தேர்தல்‌ காலத்தில்‌ வெளிநாட்டு நடுத்துவம் குறிப்பாக நோர்‌வேயின்‌ சமரச முயற்சிகள்‌ என்பனவற்றை காட்டமாக மதிப்புரைத்த பொ.ஐ.முன்னணி தற்பொழுது மீண்டும்‌ நோர்வேயின்‌ நடவடிக்கைகளுக்கு பச்சைக்கொடி காட்டியுள்‌ளது. தேர்தல்‌ முடிந்த பின்‌ நோர்வே சென்ற. சிறீலங்காவின்‌ வெளியுறவுத்துறை அமைச்சர்‌ லக்ஸ்மன்‌ கதிர்காமர்‌ நோர்வேயின்‌ முயற்சிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார்‌. இதனைத்‌ தொடர்ந்துதான்‌ நோர்வேயின்‌ அடுத்தகட்ட நகர்வுகள்‌ தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்‌ ஓர்‌ அங்கமாக நோர்வே தூதுக்குழு வன்னி வந்ததோடு தமிழீழத்‌ தேசியத்‌ தலைவர்‌ பிரபாகரனையும்‌ சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

நோர்வேக்‌ குழுவின்‌ வன்னி வருகையும்‌ தலைவர்‌ பிரபாகரனுடனான பேச்சுவார்த்‌தையும்‌ அரசின்‌ தூண்டுதலினாலோ அன்றி அரசின்‌ தகவல்களைப்‌ பரிமாறுவதற்காகவோ மேற்கொள்ளப்படவில்லை எனச்‌ சிறீலங்கா அரச தரப்பு அறிவிப்புக்களைச்‌ செய்துள்ளது. இது உண்மையாக இருப்‌பினும்கூட இப்‌ பேச்சுவார்த்தைக்கு நோர்‌வேக்குழு வன்னிவர அனுமதித்ததின்‌ மூலம்‌ தலைவர்‌ பிரபாகரனின்‌ நிலைப்பாட்டை அறிந்து கொள்வதில்‌ அரசாங்கம்‌ சிரத்தை காட்டுகின்றது என்பதை எந்த அரசியல்‌ நோக்கர்களும்‌ புறக்கணித்துவிடமாட்டார்கள்‌.

அதாவது விடுதலைப்‌ புலிகளை படைத்துறை வகையில் ஒடுக்கும்வரை போர் தொடரும்‌ எனவும்‌ புலிகளுடன்‌ பேச்சுவார்த்தை என்பதற்கு இடமே இல்லை என்ற வகையில் அறிவிப்புக்களை வெளியிடும அரசு, நோர்‌வேக்‌ குழுவினரை விரும்பியோ அன்றி விரும்‌பாமலோ வன்னிப்‌ பகுதிக்குள்‌ செல்ல அனுமதித்தமையும்‌, இதன்‌ மூலம்‌ தேசியத்‌ தலைவர்‌ பிரபாகரனுடன்‌ சந்திப்‌பொன்றை ஏற்படுத்துவதற்குரிய சூழ்நிலை உருவாவதற்கு வாய்ப்பைக்‌ கொடுத்தமையும்‌ விருப்பத்தின்‌ பாற்பட்டது என்பதைவிட கட்டாயம் பாற்பட்டது எனக்கூறுதலே சரியானதாகும்‌.

இக் கட்டாயப்படுத்தலானது உறுதியாக ஓயாத அலைகள்‌ - 3 இனால்‌ கொடுக்கப்பட்டதே ஆகும்‌. அதாவது சந்திரிகா அரசு படைத்துறை தீர்வு குறித்தும்‌ விடுதலைப்‌ புலிகள்‌ இன்றி இனச்சிக்கலுக்கு அரசியற்‌ தீர்வு குறித்தும்‌ பேசலாம்‌. ஆனால்‌ ஓயாத அலைகள்‌ - 3 விடுதலைப்‌ புலிகளை படைத்துறை வகையில் வெற்றிகொள்ள முடியாது என்பதை மட்டுமல்ல அரசியல்‌ வகையில் விடுதலைப்‌ புலிகள்‌ இன்றி எதுவித முயற்சியும்‌ வெற்றி அளிக்கப்‌ போவதில்லை என்பதையும்‌ உறுதி செய்துள்ளது. அதாவது ஓயாத அலைகள்‌ - 3இன்‌ விளைவுகள்‌ சிறீலங்காவின்‌ படைத்துறை அரசியல்‌ போக்கைத்‌ தீர்மானிக்கும்‌ வலுவான வலிமையாக இன்று உள்ளது என்பதையே அண்மைய நிகழ்வுகள்‌ வெளிக்‌காட்டி நிற்கின்றன.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

 
மூலம்: ('விடுதலைப்புலிகள்', ஒக்டோபர்-நவம்பர் 1999, பக்கம் 18-19) & ('களத்தில்', 16.11.2000, பக்கம்: 7-8)
மூல எழுத்தாளர்: அறியில்லை 
தட்டச்சு: நன்னிச் சோழன், 29/12/2021

 

 

  ஓயாத அலைகள் -03 
 ஒரு இராணுவ ஆய்வு

 

இரண்டரை ஆண்டுப் போருக்குப்‌ பின்னர்‌ இந்தியப்‌படைகள் தமிழீழ மண்ணைவிட்டு வெளியேற்றப்‌பட்டபோது கரந்தடி இயக்கம்‌ என்ற தராதரத்திலிருந்து விடுதலைச்சேனை என்ற நிலையை புலிகள்‌ இயக்கம்‌ எட்டியது.

இந்த விடுதலைச்சேனை ஒரு மரபுவழிப்படையாக பண்புமாற்றம்‌ பெறும்‌ காலகட்டமாக 1990-91 விளங்கியது.

மாங்குளம்‌-கொக்காவில்‌ தானைவைப்புகள் தாக்கியழிக்கப்பட்டு நிலத்தை மீட்டெடுத்த படைத்துறை நிகழ்ச்சியும்‌ ஆ.க.வெ. பெரும்‌ தாக்குதலின்போது, ஆனையிறவுத்தளம்‌ மீதும்‌, அதையொட்டிய பகுதிகள்‌ மீதும்‌ நடந்த ஒருமாதச்‌ சமரும்‌ சிங்களத்திற்கு அந்த பேரிடரை உணர்த்தியது.

ஒரு மரபுப்படையாக புலிகள்‌ இயக்கம்‌ வளர்ச்சி பெறுவதற்கு யாழ்ப்பாணக் குடாநாடு அனைத்து விதத்திலும்‌ வாய்ப்பாகவுள்ளது என சிங்களத்து படைத்துறை வல்லுநர்கள் கணித்தனர்‌.

அதனால்‌ குடாநாட்டை வல்வளைத்து அந்த படைத்துறை வாய்ப்பை புலிகள்‌ இயக்கத்திற்கு மறுக்க சிங்‌களப்‌ படைத்தலைமை முடிவெடுத்தது. நாயகம் கொப்‌பேகடுவ தலைமையில்‌ குடாநாட்டை கையகப்படுத்த திட்டம்‌ வரைந்து- செயற்படுத்த முனைந்தது.

பேரினவாதத்தின்‌ படைத்துறை வெள்ளியான கொப்பேகடுவ உட்பட அன்‌றைய குடாநாட்டுப்‌ படைத்‌தலைமையை அழித்த அராலிக்குண்டு, குடாநாட்டு வல்வளைப்புத் திட்‌டத்தைப்‌ பொடிப்பொடியாக்கியது. சந்திரிகா-ரத்வத்த தலைமை சிங்கள படைத்துறை இயந்திரத்தின்‌ இயக்குனர்‌ பதவியைப்‌ பொறுப்பேற்றபோது குடாநாட்டைக்‌ கைப்பற்றும்‌ திட்டம்‌ புதுப்பிக்கப்பட்டது.

பெருந்தொகைப்‌ படையாட்களையும்‌- பெருமெடுப்பிலான அளவில்‌ படைக்கல வலுவையும்‌ ஒருங்கிணைத்துப்‌ பயன்படுத்தி குடாநாட்டையும்‌ வல்வளைத்து புலிகளை அழித்தல்‌ என்ற போர்வையில்‌ ஆயிரக்கணக்‌கில்‌ தமிழர்களையும்‌ கொன்று- தமிழ்‌ மக்களுக்கு ஒரு பாடம்‌ படிப்பித்து, தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்‌ போராட்டத்தை நசுக்க சந்திரிகா-ரத்வத்த தலைமை சதித்திட்டம்‌ வகுத்தது.

சூரியக்கதிர்‌ என்ற பெயரில்‌ அந்தப் பெருநாசம்‌ வலிகாமத்தைச்‌ சூழ்ந்தது. தலைவர்‌ பிரபாகரனின்‌ முன்னெழுதருகை(pre warning) நடவடிக்கைகளால்‌ வலிகாம மக்கள்‌ காக்கப்பட்டனர்‌. பின்னர்‌ புலிகளின்‌ சண்டை தவிர்ப்‌புத்‌ தந்திரத்தால் ரிவிரச- 1, ரிவிரச- 2 சண்டைகளில்லாத படைத்துறை நடவடிக்கைகளாகின. குடாநாடு படையினரின்‌ வல்வளைப்பிற்குள்‌ சென்றது.

படைத்தலைமை விரும்பியது போல மரபுவழிப்‌படையாக வளரும்‌ வாய்ப்பை வழங்காத வன்னிப் பெருநிலப்பரப்பு புலிகள்‌ இயக்கத்தின்‌ படைத்துறை மையமானது. வன்னியில்‌ புலிகள்‌ மரபுவழிப்படையாக வளரமுடியாது என்று சிங்களம்‌ கணித்ததற்கு நியாயமான புறக்காரணிகள்‌ உண்டு. 

  • - மரபுப்போருக்கு மருத்துவ வசதி இன்றியமையாதது. வன்னியில்‌ அது போதியளவில்‌ இல்லை என்பது ஒரு காரணம்‌.
  • - மரபுப்படைக்கு ஆள்வலு அடிப்படையானது. வன்னியின்‌ குறைந்த குடித்‌தொகை அதிக ஆட்சேர்ப்புக்கு வாய்ப்‌பளிக்காது என்பதும்‌ ஒரு காரணம்‌.
  • - கமுக்கமானதும்- வேகமானதுமான படைநகர்த்தலுக்கு வேண்டிய போதிய சாலைவசதிகள்‌ வன்னியில்‌ இல்லை என்‌பது இன்னொரு காரணம்‌.
  • - மரபுவழிப்‌ போர்முறையில்‌ மறிப்புச்‌ சண்டைகள்‌ முக்கிய இடம்பெறுகின்றன. இந்தவகைச்‌ சண்டைமுறைக்குத்‌ தகுந்த காப்பரண்‌ வசதிகள்‌ கட்டாயம் தேவை. மரபுப்போரை புலிகள்‌ இயக்‌கம்‌ நடாத்துவதற்கு காப்பரண்களுக்கு வாய்ப்பான புறநிலை வசதிகள்‌ வன்னியில்‌ இல்லை. உதிரும்‌ மண்‌வகையால்‌ உறுதியான நிலப்‌ பதுங்குகுழிகளுக்கும்‌ வாய்ப்பில்லை. இதேவேளை, களமுனைக்‌ கோட்டைகளான காப்பரண்கள்‌-பதுங்குகுழிகள்‌ கட்டத்தேவையான கட்டிடப்பொருட்கள்‌ வன்னியில்‌ இல்லை. இவையும்‌ காரணங்கள்‌.
  • - இவற்றிற்கெல்லாம்‌ முத்தாய்ப்பு வைப்பது போல வன்னியின்‌ விரிந்து பரந்த நிலப்பரப்புடன்‌, தமது முப்‌படை வலுவையும்‌ இணைத்து சமர்களைத்‌ தமக்குச்‌ சாதகமாக நடாத்தி “எஞ்சிய” புலிகளை அழிக்கும்‌ ஏது நிலைகள்‌ வன்னிக்‌ களத்திற்கு உண்டென்றும்‌ சிங்களக் கட்டளையாளர்‌கள்‌ கணித்தனர்‌.

இவை காரணமாக வன்னிப் பெருநிலப்‌பரப்பில்‌ புலிகளுடன்‌ நடக்கப்‌போகும்‌ சண்டைகள்‌ மகிழ்ச்சியான மரதனோட்டத்‌தைப்போல சிங்‌களப்‌ படையினருக்கு இருக்கும் என்று சிங்களம் கணித்தது. அஞ்சலோட்டப் படையெடுப்புப் பாணியிலான படைய மரதனோட்டத்தை சிங்களப் படைகள்‌ தொடங்கின.

வன்னியின்‌ மேற்குமுனையூடாக மன்னாரின்‌ தள்‌ளாடி நோக்கி எடிபல புறப்பட்டது. வழியெங்கும்‌ மயான அமைதி நிலவ, படையினர்‌ வியர்வை வடிய நடந்து, தள்ளாடி சென்றடைந்தபோது, சிந்திப்பதற்குப்‌ பகரமாக சிங்களப் படைத்‌தலைமை சிந்தையிழந்து செருக்கு கொண்டது.

தமது கணிப்பின்‌படியாக படைத்துறை நிகழ்ச்சிகள்‌ நடைபெறப்போகின்றன எனச்‌ சிங்களப்படைத்‌ தலைமை இறுமாந்திருந்தது. அந்தப்‌ படைத்திமிர்‌ அடுத்த படைத்துறை நடவடிக்கையின்‌ பெயர்‌ சூட்டலில்‌ பகிரங்கமாக வெளிப்பட்டது.

“வெற்றி உறுதி” என முரசு தட்டியபடி ஜயசிக்குறுய்‌ புறப்பட்டது. போர்‌ சம்பந்தப்பட்டிருந்த விடயங்கள்‌ அனைத்தும்‌ ஒன்று சேர்ந்து கைகோர்க்கும்‌ நாள்‌ என சிங்களத்தின்‌ சோதிடர்கள்‌ கணித்தெடுத்த 1997 மே 13ஆம்‌ நாளில்‌ இருதலைப்பாம்பாக இருமுனைகள்‌ ஊடாக ஜயசிக்குறுய்‌ புறப்பட்டது. சந்‌திரிகா அம்மையாரின்‌ கணவர்‌ விஜய குமாரணதுங்கா நாயகனாக நடித்த வெற்‌றிப்படத்தின்‌ பெயரும்‌ ஜயசிக்குறுய்‌ என்பதால்‌ அம்மையாருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஜயசிக்குறுயின்‌ படைத்துறை நோக்கம்‌ உடனடி ஊறு விளைவிக்க வல்‌லது. பெருநிலப்பரப்பை இரண்டாகப் பிளந்து பாதை சமைத்து குடாநாட்டுப்‌ படையையும்‌ ஒருங்கு சேர்த்துக்கொண்டு வன்‌னியை ஒட்டுமொத்தமாகத்‌ துடைத்தழிக்‌கும்‌ நாசகாரத்திட்டத்தைக்‌ கொண்டிருந்‌தது. அதனால்‌ புலிகள்‌ இயக்கம்‌ தவிர்க்க விரும்பிய மரபுவழிச்‌ சண்டை தவிர்க்க முடியாததாகியது. ஜயசிக்குறுயை செயலிழக்கச்‌ செய்விக்கத்‌ தலைவர்‌ பிரபாகரன்‌ தீர்மானித்தார்‌. 'சமர்களுக்கெல்லாம்‌ தாய்ச்‌சமர்‌' என அவர்‌ வருணிக்கும்‌ அளவுக்கு ஜயசிக்குறுய்‌ வரலாற்று முக்கியத்துவம்‌ பெற்றது. ஜயசிக்குறுய்‌ படைக்கு எதிரான மரபுச்சண்டைகள்‌ மற்றும்‌ வலிந்ததாக்குதல்களின்‌ தீவிரத்தால்‌ சிங்களப்படை பலத்த சேதத்தைச்‌ சந்தித்தது. போய்ச்‌ சேரவேண்டிய கிளிநொச்சிப்‌ படைத்தளத்தைப்‌ புலிகள்‌ கைப்பற்றினர்‌. புறப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற முடியாத களநிலைமை எழுந்ததும்‌ திரும்பிச்‌ சென்றிருக்க வேண்டிய ஜயசிக்குறுய் திரும்ப மறுத்து இடைநடுவில்‌ தரித்து படைத்துறை தவறிழைத்து.

வன்னி அரங்கில்‌ சுமார்‌ ஓராண்டு காலம்‌ நடந்த ஜயசிக்குறுய்‌ நடவடிக்கையில்‌ ‘3000 படையாட்கள்‌' பலியாகினர்‌. 7000 பேர்‌ படுகாயம்‌ பட்டனர்‌. பல கோடி ரூபா பெறுமானமுள்ள படைத்தளபாடங்களை சிங்களப்படை இழந்தது. விஜய குமாரணதுங்காவின்‌ ஜயசிக்குறுய்‌ சிக்குள்ளாக்கியிருக்கலாம்‌. சமரில்‌ புலிகள்‌ இயக்கம்‌ சிறந்தததொரு படைத்துறை அறுவடையை நிலைநாட்டி அம்மையாரின்‌ பேரினவாத ஆசைக்கு பலத்த அடி கொடுத்தது. ஒரு பொய்யை மறைக்க பத்துப்‌ பொய்களைச்‌ சொல்வதுபோல ஒரு படைத்துறை தோல்வியை மறைக்க, தோல்‌விகளை உள்ளுடனாக்கொண்ட இன்னும்சில படைத்துறை நடவடிக்கைகளை சிங்களப் படைத்தலைமை நடாத்தியது.

ஜயசிக்குறுய்‌ செயற்படமுடியாமல்‌ போனவுடன்‌ 'ரிவிபல, ரணகோச, வோட்டர்செட்‌' என வன்னிப்‌ பெருநிலப்பரப்பில்‌ படையினரின்‌ படைத்துறை அஞ்சலோட்டம்‌ தொடர்ந்தது. ஜெயசிக்குறுயைப்போல ரணகோச, வோட்டர்செட்‌ நடவடிக்கைகள்‌ படைத்தரப்‌பிற்கு பலத்த இழப்புக்களைக்‌ கொடுத்தன. தனது மரபுப்படை வலுவை ஒருங்குகுவித்து பயன்படுத்தியும்‌, புலிகள்‌ மரபுவழிச்‌ சண்டைகள்‌ மூலம்‌ தகுந்த பகரடிகளைத்‌ தொடுத்தனர்‌.

வன்னி மண்ணில்‌ புலிகள்‌ இயக்கம்‌ ஒரு மரபு வழிப்படையாக வளரமுடியாது என்ற சிங்களத்தின்‌ படைத்துறைக் கணிப்பை, ஜயசிக்குறுய்‌- ரணகோச- வோட்‌டர்செட்‌ போன்றவற்றிற்கெதிரான எதிர்ச்சமர்கள்‌, பொய்‌யாக்கின. எனினும்‌ சிங்களத்தின்‌ படைத்திமிர்‌ இந்தக்‌ களநடப்பியலை ஏற்க மறுத்தது.

மரபுப்படையாக புலிகள்‌ வளர வன்னியில்‌ இருந்த பாதகநிலைகள்‌ அனைத்தையும்‌, தலைவர்‌ பிரபாகரன்‌ அவர்கள்‌, தனது திட்டமிட்ட செயற்பாடுகளால்‌ மாற்றுயேற்பாடுகள்‌ செய்து- மாற்றியமைத்து- ஒரு தரமான மரபுப்படையாக புலிகள்‌ இயக்கத்தை வளர்த்தெடுக்க வன்னிப் பெருநிலப்பரப்பையே தயார்ப்படுத்தி படைத்துறை சாதனை புரிந்துள்ளார்‌.

இதேவேளை, அடைக்கோழியை முழுங்கிய புடையன்பாம்பு போல்‌ சிங்களப்படை நிலம்‌ விழுங்கி ஊதிப்‌பருத்தபடி உள்ளுக்குள்‌ அவதிப்பட்டதை தலைவர்‌ மிகச்சரியாகக்‌ கண்டறிந்தார்‌.

சிங்களப்படை மேலும்‌ மேலும்‌ நிலம்‌ விழுங்கும்‌ பேராசையில்‌ படைநகர்வுத்‌ திட்டங்களை வகுக்க, சிங்களம்‌ விழுங்கிய தமிழர்‌ நிலப்பரப்புக்களை மீட்டெடுக்க தேசியத்‌ தலைவரவர்கள்‌ ஓசைபடாமல்‌ திட்டங்‌கள்‌ வகுத்து- தாக்குதல்‌ தந்திரவழிவகைகளை வரைந்து போராளிகளுக்குப்‌ பயிற்‌சிகளைக் கொடுத்து தயார்ப்படுத்திக்கொண்டிருந்தார். "பயிற்சி, தந்திரம்‌, துணிவு” என்ற தலைவரின் படைத்துறை மந்திரத்தை சிரம்மேற்கொண்டு மாபெரும் தாக்குதலுக்காக புலிவீரர்கள்‌ தயாராகிக்கொண்டிருந்தனர்‌.

புலிகளின் நிரந்தரப்படைக்கு துணைவலு சேர்க்க வன்னிவாழ் மக்களுக்கு ஆயுதப்பயிற்சிகளை வழங்கும்படி தலைவர் ஆணையிட்டார். எல்லைப்படை-கிராமியப்படை என்ற பெயர்களில்‌ மக்கள்‌படையைக்‌ கட்டும்‌ பணிகள்‌ முடுக்கிவிடப்‌பட்டன.

01.11.1999 அன்று நள்ளிரவு ஒட்டுசுட்‌டான்‌ படைத்தளம்‌ மீது போராளிகளைக்‌ களமிறக்கி, ஓயாத அலைகள்‌-03 என தாக்குதலுக்குப்‌ பெயர்‌ சூட்டி வேக ஓட்‌டப்பாணியிலான ஒரு தொடர்‌ தாக்குதல்‌ திட்டத்தை தலைவர்‌ பிரபாகரன்‌ தொடக்கிவைத்தார்‌. நாளொன்றுக்கு ஒரு படைத்‌தளம்‌ என்ற வகையில் சிங்களப்படை முகாங்‌கள்‌ புலிகள்‌ வசமாகின. அந்தப்‌ பகைத்‌தளங்களின் ஆதிக்கத்துக்குள் இருந்த தமிழர் நிலங்களும்‌ விடுவிக்கப்பட்டன.

இரண்டரை ஆண்டு காலமாக 5000 படையினரைப்‌ பலிகொடுத்து, 12,000 படையினரை படுகாயத்திற்குள்ளாக்கி சிங்களப்படைகள்‌ முக்கி-முனகி-முயன்று பிடித்த நிலப்பரப்பின்‌ பெரும்‌ பகுதியை ஆறுநாள்‌ சிங்கவேட்டையில்‌ அடித்து மீட்டெடுத்த படைத்துறை அற்புதத்தை தேசியத்‌ தலைவர்‌ பிரபாகரன்‌ நிகழ்த்திக்‌ காட்டியுள்ளார்‌. ஆழம்‌ அறியாமல்‌ அகலக்கால்‌ வைத்த சிங்களம்‌ அதற்‌கான தண்டனையை பெற்றுக்கொண்டது.

முல்லைத்தீவுத்‌ தளத்தைப்‌ புலிகள்‌அடித்து மீட்க-படையினர்‌ கிளிநொச்சியை வல்வளைத்தனர்‌. கிளிநொச்சியைப்‌ புலிகள்‌ தாக்கிக்‌ கைப்பற்ற படையினர்‌ மாங்‌குளத்தைக்‌ கையகப்படுத்தினர்‌. ஒரு, நகரத்திற்குப்‌ பகரம் இன்னொரு நகரம்‌ என சிங்கள ஆய்வாளர்கள்‌ மனநிறைவுபட்ட காலம்‌ இம்முறை காலமாகிவிட்டது.

ஒலிம்பிக்‌ வேகத்துடன்‌ ஒட்டுசுட்டானுக்குள்ளிருந்து ஓயாத அலைகள்‌ புறப்‌பட்டபோது வல்வளைப்பிற்குள்‌ துவண்டு கிடந்த வன்னியின்‌ நகரங்கள்‌ வரிசையாக புலிகள்‌ வசமாகின. ஒரு நகரத்தை புலிகளிடம்‌ பறிகொடுத்துவிட்டு, மறு நகரத்‌தைக்‌ கையில்‌ வைத்திருக்க முயன்று இயலாமையால்‌ கைவிட்டோடி, அடுத்த நகரத்தையும்‌ துறந்து, சேணேவிகளை இழுத்‌துக்‌ கொண்டு வவுனியாவரை புறமுதுகிட்டோட வேண்டிய கையறுநிலையில்‌ சிங்களப்படையிருந்தது.

வல்வளைக்கப்பட்டிருந்த வன்னி நிலத்‌தின்‌ பெரும்பகுதியை மீட்டதுடன்‌, கடந்த 15 ஆண்டுகளுக்கும்‌ மேலாகப்‌ படை வல்வளைப்பிற்குள்ளும்‌- சிங்களக்‌ குடியேற்‌றத்தின்‌ கணிசமான பண்டைத்‌ தமிழ் ஊர்கள் மீட்கப்பட்டதானது போராட்டத்திற்கு புதியதொரு அரசியல்‌- படைத்துறை பரிமாணத்தைக்‌ கொடுத்துள்ளது.

வடக்கில்‌ நான்கு நூற்றாண்டு காலம்‌ வெளியாட்களின் கட்டுப்பாட்டில்‌ இருந்ததும்‌, எவராலும்‌ அசைக்க முடியாதது என சிங்‌களம்‌ நம்‌பியிருந்ததுமான ஆனையிறவுப்‌ பெருந்தளம்‌ கைப்பற்றப்பட்டது. வடமராட்சியின்‌ கிழக்குக் கோட்டத்தின் பெரும் பகுதியும், தென்மராட்சியின் தென்கிழக்கு, மற்றும்‌ தென்மராட்சியின்‌ மேற்குப்‌ பகுதியும், சாவகச்சேரியின் புறநகர்ப் பகுதியும் கைப்பற்றப்பட்டன. வலிகாமத்தின்‌ நுழைவாயிற்‌ பகுதிகளும்‌, யாழ்‌ நகர எல்லைப்‌பகுதிகளும்‌ தமிழர்‌ சேனையின்‌ வசமாகின.  ('இந்தப் பத்தியானது 'விடுதலைப்புலிகள்' இதழில், ஒக்டோபர்-நவம்பர் 1999, பக்கம் 18-19 அன்று வெளிவந்த இதே தலைப்புடைய இதே கட்டுரையில் இடம்பெறவில்லை. இக்கட்டுரையின் இரண்டாம் பதிப்பில் இப்பத்தி மட்டும் சேர்க்கப்பட்டு அப்போதைய நிலைமைக்கு ஏற்ப வெளியிடப்பட்டிருக்கிறது.)

தமிழர்‌ சேனையின்‌ மரபுவழித்தாக்குதலுக்குத்‌ தாக்குப்பிடிக்க முடியாமல்‌ 10ற்‌கும்‌ மேற்பட்ட படைத்தளங்களையும்‌- பல டசின்‌ தானைவைப்புகளையும்‌ 250 கிலோமீற்றர்‌ நீள படைத்துறை வேலியில்‌ அமைக்கப்பட்ட காவல்‌ அரண்களையும்‌ இவற்றின்‌ ஆதிக்கத்திற்குள்‌ இருந்த சுமார்‌ 2250 சதுர கிலோ மீற்றர்‌ நிலப்பரப்பையும்‌ கைவிட்டு ஓடச்‌செய்த ஓயாத அலைகள்‌- 03, தமிழரின்‌ விடுதலைப்‌ போராட்டத்தில்‌ மாபெரும்‌ படைத்துறைப ஊழியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்களத்தின்‌ முதல்தர சிறப்புப்படையணிகள்‌ உட்பட 15,000ற்கும்‌ அதிகமான ஆட்தொகையைக் கொண்ட சண்டையணிகள்‌ புலிகளின்‌ தாக்குதலுக்கு, ஈடுகொடுக்க முடியாது பின்வாங்கி ஓடிய படைத்துறை நிகழ்ச்சி சிங்களப்படைத்‌ தலைமையையும்‌ அரசியற்‌ தலைமையையும்‌ அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதை ஒரு அவமானகரமான தேசியத்‌ தோல்வியாக சிங்களத்‌ தேசியவாதிகள்‌ கருதுவர்‌ என்‌பது திண்ணம்‌. மீட்கப்பட்ட அந்தப்‌ பாரிய நிலப்பரப்பை புலிகள்‌ தங்களது கட்டுப்‌பாட்டிற்குள்‌ வைத்திருந்தபடி- மேலும்‌ படையினருடன்‌ மோதுவது அவர்களின்‌ மரபுப்போர்‌ ஆற்றலின்‌ வளர்ச்சியை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.

சோழப்பேரரசின்‌ காலத்திற்குப்‌ பிறகு சுமார்‌ ஆயிரம்‌ ஆண்டுகளுக்குப்‌ பின்னர்‌ சிங்களப் படை நிலைகொண்டிருந்த படையவட்டம் ஒன்றிலிருந்து, தமிழர்‌ சேனையால்‌ ஒட்டுமொத்தமாக, அது ஓட ஓட அடித்து விரட்டப்பட்ட வரலாற்று நிகழ்ச்‌சியாக ஓயாத அலைகள்‌ 03 பதிவாகிவிட்டது. 

போர்மூலம்‌ புலிகளை அடக்கி, தமிழரின்‌ விடுதலைப்‌ போராட்டத்தை நசுக்கலாம்‌ என்ற பேரினவாதத்தின்‌ படைத்துறை நம்பிக்கையை ஓயாத அலைகள்‌ தகர்த்‌தெறிந்துவிட்டது. அத்துடன்‌, அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள்‌ வாயிலாக தமிழர்‌ நிலத்தை கவர்ந்து சிங்கள மயப்படுத்தலாம்‌ என்ற பேரினவாத முயற்சி, மணலாற்றுக்‌ குடியேற்றங்களுக்கு நடந்துள்ள கதியால்‌, பலத்த அடிவாங்கியுள்ளது. 

இதேவேளை, ஆயுதப்போராட்டம்‌ வாயிலாக தமிழரின்‌ அரசியல்‌ இலட்சியமான தமிழீழத்‌ தனியரசை, தேசியத்‌ தலைவர்‌ பிரபாகரன்‌ தலைமையிலான புலிகள்‌ இயக்கம்‌ அமைத்து வெற்றிவாகை சூடும்‌ என்ற அரசியல்‌ நம்பிக்கையை ஓயாத அலைகள்‌ - 3 அசைக்க முடியாத அளவுக்கு, தமிழ்‌ மக்களிடம்‌ புகுத்திவிட்டது.

ஒரு போரில்‌ சில சமர்கள்‌ வரலாற்றுத்‌ திருப்புமுனைகளாக அமைந்து போரின்‌ போக்கை திசைமாற்றிவிடுவதுண்டு. தமிழரின் விடுதலை போராட்டத்தைப்‌ பொறுத்‌தவரையில்‌ ஓயாத அலைகள்‌ என்ற பெயரில்‌ நடந்து முடிந்த மூன்று பெரும்‌ தாக்‌குதல்களும்‌ அத்தகைய வரலாற்றுப்‌ பாத்‌திரத்தை வகிக்கும்‌ என்பது திண்ணம்‌. எனினும்‌, ஓயாத அலைகள்‌-03 திண்ணமான வகையில்‌, போரில்‌ திருப்புமுனையை ஏற்‌படுத்திய சமராக இருக்கப்போகின்றது.

சிங்களப்படையின்‌ தோல்வியின்‌ ஆரம்பமாக ஓயாத அலைகள்‌-03 விளங்கப்‌போகின்றது.

இரண்டாம்‌ உலகப்போரின்போது, (தனது படைத்துறை கொள்ளளவையும்‌ மீறிப்‌ பேராசையுடன்‌ சோவியத் ஒன்றியத்தை விழுங்க கிட்லரின்‌ படை புறப்‌பட்டது. ஒப்பறேசன்‌ பார்பறோசா என்ற பெயரிலான அந்தப்‌ பெரும்‌ படையெடுப்பை கறையான்‌ அரிப்பது போல சிறுகச்‌சிறுக அரித்த சோவியத்‌ படை, இறுதியில்‌ தோற்கடித்தது. ஒப்பறேசன்‌ பார்பறோசாவின்‌ தோல்வி, கிட்லரது ஜேர்மானியப்‌ படைக்கு தோல்வியின்‌ ஆரம்பமாக மாறியது. சோவியத் மண்ணை விட்டே அது, துரத்தியடிக்கப்பட்டது.

இந்திய-புலிகள்‌ போரின்போது தேசியத்‌ தலைவர்‌ பிரபாகரனை இலக்குவைத்து இந்தியப்படைகள்‌ செக்‌மேற்‌ படை நடவடிக்கையை தொடங்கின. தேசியத்‌ தலைவரின்‌ நேரடி வழிகாட்டலில்‌ நடந்த எதிர்ச்சமரில்‌ இந்தியப்படைகள்‌ தோற்‌றன. அந்தத்‌ தோல்வி இந்தியப்படைற்குக்‌ கட்டியம்‌ கூறியது. தமிழீழ மண்ணைவிட்டு, தோல்வியுடன் தம் நாடு திரும்பின இந்தியப்படைகள்.

இதேபோன்று புலிகள்‌ இயக்கத்திற்கு எதிரான வன்னிப்படையெடுப்பை ஓயாத அலைகள்‌-03 முறியடித்துவிட்டது. அது, மாத்திரமன்றி சிங்களம்‌ நெடுங்காலமாக தமிழர்‌ தாயகத்தில்‌ வல்வளைத்து நின்ற இடங்களும்‌ விடுவிக்கப்பட்டுவிட்டன. சிங்களம்‌ சந்தித்த இந்த வரலாற்று படைத்துறைத் தோல்வியை, அதற்கு தொடர்ந்த தோல்விகளாக ஏற்படுத்த வேண்டும்‌. இதற்கு தமிழர் சேனையின் வலு தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கவேண்டும்‌.

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

மூலம்: பிரெஞ்சு நாளேடான 'இலே மொந்து', 12.05.2000
மூல எழுத்தாளர்: பிரான்சிசு சியாபக்சு

தமிழாக்கம்: 'களத்தில்', 15.05.2000, பக்கம்: 5 
எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 21/02/2022

 

 

இலங்கையின் தமிழ் புலிகள் யாழ்ப்பாணத்தில் படைத்துறை அழுத்தத்தை முடுக்கிவிடுகின்றனர்

 

ஒரு வருவார ஓய்விற்குப்‌ பின்‌, மிகக்‌ கடுமையான போர்‌ இலங்கையின்‌ வட பகுதியில்‌ மூண்டுள்ளது. இப்போது, மோதல்கள்‌ யாழ்‌ நகரின்‌ புறநகர்ப்‌ பகுதிகளில்‌ இடம்பெறுகின்றன. அரசு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. நாவற்குழியின்‌ படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தின் இழப்பால் படையினரில் ஒரு பகுதியினர் துண்டிக்கப்பட்டு நிற்கின்றனர்.

கடந்த ஏப்பிரல்‌ 22இல்‌ ஆனையிறவுத்‌ தளத்தின்‌ வீழ்ச்சிக்குப் பிறகு படையினரின் முதற்‌ பாதுகாப்பு வேலியும்‌, யாழ்‌ நகருக்குத்‌ தெற்கில்‌ உள்ளதுமான கிளாலியிலும்‌ பலத்த மோதல்கள்‌ நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த செவ்வாய்க்கிழமையும்‌, அரசு யாழ்‌ நகரத்தை கடைசிப் படைவீரன்‌ இருக்குமளவும்‌ காப்பாற்றப்‌ போவதாக அறிவித்துள்ளது. இப்போதைய போர்‌ நாட்டின்‌ நிலையைக்‌ குறிக்கின்றது. படைத்துறையின் தேவைக்கேற்ப போர்‌ நடத்தப்படவில்லை. மாறாக அப்போதைக்கப்போது நாட்டில்‌ தோன்றும்‌ அரசியல்‌ தேவைக்கேற்ப போர்‌ வழிநடத்தப்‌படுகின்றது. இக்‌ காரணத்துடன்‌ ஒரு முழு மொத்த ஊழல்கள்‌, படையதிகாரிகளின்‌ ஓயாத இடமாற்றங்கள்‌, படையினரின்‌ அக்கறையின்மை போன்றவை படைத்துறையின் தோல்விகளுக்கு காரணங்கள்.

படைத்துறையில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி புலிகளின் 80வீத ஆயுதங்கள் படைத்துறையினரிடமிருந்து பறிக்கப்பட்டவையே. சிங்கள படையினரில் பலருக்கு ஏன் இந்தப் போர் என்பது புரியவில்லை. படைத்துறையிலிருந்து இதுவரை 20,000 படையினர் ஓடிவிட்டனர்.
   
ஆனால் புலிகளோ போர்புரிவதில் மிகுந்த ஆர்வத்தோடு வீரத்துடன் மோதுகின்றனர். போராளிகளோடு ஒப்பிடுகையில் படையினரின் அதிகாரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது. புலிகள் படைத்துறையிடமிருந்து பறித்தெடுத்த சேணேவிகளின் உதவியோடு தொலைவிலிருந்து கூட துல்லியமான தாக்குதல்களை படைத்துறை நிலைகள் மீது நடத்துகின்றனர்.

 

French 'Le Monde' about unceasing waves 3 Elephantpass victory - 12-5-2000.png

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

 

மூலம்: 'விடுதலைப்புலிகள்', மார்கழி-தை 2001, பக்கம்: 7
மூல எழுத்தாளர்: அ. பார்த்தீபன்
எழுத்துணரியாக்கம்: tamilnation.org 

 

 

எரிமலையின் பெருநிலம்

 

(இக்கட்டுரையில் ஓயாத அலைகள் மூன்றில் சிறப்பு எல்லைப்படையின் பெரும் பங்களிப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.)

 

".....

....எமது மக்களின் இத்தகைய எழுச்சியின் விளைவாய் ஓயாத அலை 3 என்ற பெரும் சமர் பிறப்பெடுத்தது. அதற்கான அடிப்படை வன்னி மக்களின் நேரடிக்கள பங்கேற்பாலும் மட்டக்களப்பு மக்களின் உன்னத இலட்சிய தியாகப் பற்றாலும் புலம்பெயர்ந்த தமிழர்களின் உறுதிமிக்க பற்றுறுதியாலும் அந்த பெரும் போர்க்களம் ஒரு வரலாற்றை தனதாக்கிக் கொண்டது. 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் திகதி ஈழத் தமிழனுக்கு பெருமை சேர்த்த ஒரு நாள்.

எங்கள் தேசியத்தின் பெரும் இமையம் விரல் காட்டிய திசையெல்லாம் எதிரி வீழ்த்தப்படுவதற்கான போர் முரசு ஒலிக்கத் தொடங்கியது. ஒட்டிசுட்டானில் தொடங்கி முதல் சமர்க்களம் வெற்றியுடன் தொடர்ந்த போது வில்வளைத்த வன்னி பெருநிலப்பரப்பு ஆர்ப்பரித்தது. ஒரு வரலாற்றில் காணமுடியாத போர்க்களம் குருசேத்திரம். இதை எமது மக்கள் ஒட்டிசுட்டானில் உண்மையாகவே கண்டார்கள்.

காவல் நிலைகளில் நின்ற எங்கள் எல்லைப்படை வீரர்கள் பொறுமையிழந்து அவர்கள் தடுத்து நின்ற எதிரிகளை தேடிச் சென்று களமாடி துரத்தியடிக்கும் ஆர்வம் அவர்களுக்கு எழுந்தது. கட்டளையாளர் தீபனின் கட்டளையில் மாங்குளத்தின் புதிய முனை ஒன்று திறக்கப்பட்ட போது மூன்றுமுறிப்பில் நின்ற எல்லைப்படை வீரர்களெல்லாம் தாமும் சண்டையிடப் போவதாக ஆர்ப்பரித்தனர். அதனால் அக்களத்தில் அவர்களையும் தவிர்க்க முடியாது சண்டையில் களமிறக்கினான் கட்டளையாளர் தீபன். பாதுகாப்பு நிலைகளில் எமது சுமைகளைப் பகிர்ந்து கொள்ள வந்த மக்கள் போராளிகளோடு இணைந்து வலிந்த தாக்குதல் களத்தில் முன்னேறிச் சென்றது எமது போரில் அடுத்த கட்டங்களில் ஏற்படுத்தப்போகும் ஒளிர்மையான மாற்றங்களுக்கு எதிர்வுகூறி நின்றது.

ஓயாத அலை 3இன் முதல் கட்டத்தில் எல்லைப்படை வீரர்கள் காட்டிய முரட்டும் ஆர்வமும் அடுத்த கட்டங்களில் அவர்களுக்கென முக்கிய இடத்தை பெற்றுக் கொடுத்தது. சிறப்பு எல்லைப்படைத் தாக்குதல் அணிகள் எமது போராளிகளுடன் இணைந்து முக்கிய களங்களில் சண்டையிட்டனர். நவம்பர் 18ஆம் திகதி ஓயாத அலைகள் 3ன் இரண்டாம் கட்டத்தின் போது பெரிமடுவின் ஊடாக முனையில் ராபேட்டின் தலைமையில் ஜெயந்தன் படையணியுடன் மற்றைய முனையான பவளமடுவில் லெப். கேணல் லக்ஸ்மன் தலைமையில் மாலதி படையணி மற்றும் மன்னார் தாக்குதலணிகளுடன் சிறப்பு எல்லைப்படை அணிகள் சண்டையின் முன்னணி நடவடிக்கைளின் திறக்கப்பட்டன.

வெற்றிகளைக் குவித்து தந்த அச்சமர்க்களத்தில் ஏனைய படையணிகளைப் போலவே எல்லைப்படை அணிகளும் தமக்குத் தரப்பட்ட பணிகளையெல்லாம் வெற்றிகரமாய் செய்து முடித்தன. அதுபோலவே ஓயாத அலை 3ன் 3வது கட்டத்திலும் எல்லைப்படையின் சிறப்புத் தாக்குதல் அணிக்கான முன்னணித் தாக்குதல் பணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ராபேட்டின் தலைமையில் ஜெயந்தன் அன்பரசி, படையணிகளுடன் இணைந்து அந்த சமரின் வெற்றிக்காய் எல்லாம் முனைகளிலும் அவர்கள் உழைத்தார்கள். இவ்வாறு முதிர்ச்சி நிலை நோக்கி பயணித்த வன்னி மக்களின் போர்ப்பங்களிப்பும் எழுச்சியும் மட்டக்களப்பு மக்களின் உயரிய அர்ப்பணிப்பும் தியாக சிந்தையும் ஆனையிறவு பெருந்தள வீழ்ச்சிக்கான இறுதிக்கட்ட சமர்களில் காத்திரமான கட்டத்தை அடைந்தது. தமிழர் வரலாறு உள்ளவரை வாழப் போகும் அந்த புகழ்பூத்த சமரில் எமது மக்களின் பங்கு பிரித்துப் பார்க்க முடியாத படி இரண்டறக் கலந்து இருந்தது. எமது மக்கள் படை கட்டுமானத்தில் மாணவர் படை, கிராமியப்படை, எல்லைப்படை என எல்லாமே இச்சமருக்கான பணிகளில் பங்கெடுத்திருந்தனர்.

இன்று போல் அன்றும் நவீன வசதிகளும் சர்வதேச ஆதரவும் கொண்ட சிறிலங்கா அரசே ஆனையிறவில் சமரில் காயமடைந்த தன் வீரர்களைப் பராமரிப்பது உள்ளிட்ட பின்னணி வேலைகளை செய்ய முடியாது திணறிய போது வசதிகள் ஏதுமற்ற வன்னியில் எமது விடுதலைக்கான போர் அரங்குகளின் பின்கள வேலைகள் சிரமமின்றி செய்து முடிக்கப்பட்டமை எவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கப்படக் கூடியவை. அதுவும் களத்தில் காயமடைந்த எமது போராளிகளுக்கான அனைத்துப் பணிகளுடன் அவர்களைப் பராமரித்து பாதுகாப்பதில் எத்தகைய குறையுமின்றி எமது மக்கள் ஈடுபட்டார்கள். அவர்களை சிரமமின்றி களத்திலிருந்து நகர்த்துவதற்காக பாதைகளைச் சீரமைத்து குருதி தானம் செய்து மருத்துவமனைகளுக்கு வந்து பராமரித்து அவர்களுக்கு தேவையான உணவுகள் தயாரித்து எமது மக்கள் செய்து உயரிய பணி எம் போராளிகளிடையேயும் புலம்பெயர்ந்த வாழ்வில் பணிபுரிந்து எம் இதயங்களுக்குள்ளும் ஆழமான பதிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நாட்களில் வன்னி மக்கள் முழுமையாகப் போர் பணிகளில் ஈடுபட்ட போது அவற்றை விட அந்த சமர்க்களங்களில் கடினமான களமொன்றில் எல்லைப்படையினரின் சிறப்பு அணிகள் அர்ப்பணிப்புடன் போராடிக் கொண்டிருந்தது. புலம்பெயர்ந்த மண்ணிலும் குளிரிலும் பனியிலும் குறைவின்றி உழைத்த எமது பணியாளர்களின் அர்ப்பணிப்பும் உறுதிப்பாடும் எமது விடுதலையை விரிவடையச் செய்தது. அந்த அர்ப்பணிப்பும் அந்த உயர்ந்த பற்றுறுதியும் இன்று எமக்கு தேவையான ஒன்றாகவும் இருக்கின்றது.

உலக வரலாற்றிலேயே முக்கிய இடம்பிடித்த ஆனையிரவுச் சமரில் ஊடறுப்புச் சமரில் (இத்தாவில்) சிறப்பு எல்லைப்படை வீரர்களின் பங்கு வன்னி மக்களின் பெருமையின் சிகரமாய் அமைந்தது. சமருக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரத்தில் சிறப்பு எல்லைப்படை வீரர்கள் தமது குடும்பங்களை நீண்ட எல்லையில் பிரிந்து வந்து உயர் சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டார்கள். எமது முன்னணி படையணிகளின் ஓரங்கமாகவே சிறப்பு எல்லைப்படையின் அணியும் இணைக்கப்பட்டுள்ளது. சிங்களத்தின் முன்னணிப் படையணியையே திணர வைத்து தோற்கடித்த அச்சமர்க்களத்தில சிறப்பு எல்லைப்படை வீரர்கள் களையாது சமரிட்டதுவும் அதற்காய் தமது உயிர்களை காணிக்கையாக்கியதும் வரலாற்றில் சிறப்பான கூறுகள். ஆரம்பத்தில் எல்லைப்படை வீரனாய் களம் புகுந்து அச்சமர்க்களத்தில் முழுமையான போராளிகளாய் மாறியவர்களுள் எமது போராளிகளையே வழிநடத்தும் அணித்தலைவனாய் அக்களத்திலேயே செயல்பட்ட மாவீரன் கப்டன் லொறன்சின் செயல்பாடுகள் இங்கு நினைவு கூரத்தக்கவை.

இப்படித் தான் வன்னி மக்களின் முழுமையானப் போர் பணி வளர்ச்சிக் கண்டது. ......" 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

 

 

மூலம்: 'களத்தில்', 15.05.2000, பக்கம்: 5-6
மூல எழுத்தாளர்: பற்றிமாகரன்
எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 21/02/2022

 

 

அடுத்தடுத்து வீழ்ச்சியுறும் சிறீலங்கா?
தமிழர் நிலைப்பாட்டை உலகிற்கு உணர வைக்கிறது

 

சிங்கள சிறீலங்காவின்‌ ஆனையிறவு முகாமின்‌ வீழ்ச்சி தமிழீழத்‌ தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றில்‌ புதியதோர்‌ அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்துள்ளது. எங்களைக்‌ கொல்ல எங்கள்‌ மண்ணில்‌ ஆழக்குழிகள்‌ தோண்டியவர்கள்‌ இன்று அவர்‌கள்‌ தோண்டிய குழிகளுள்‌ தாங்களே வீழ்ந்து அழியும்‌ காலமொன்று எம்‌ மண்ணெங்கும்‌ உருவாகி நிற்கும்‌ நடப்பியல் கண்டு அஞ்சுகின்றனர்‌. ஆனையிறவில்‌ அழிந்தது போதும்‌ பளையில்‌ பலியானது காணும்‌ என்று சிங்‌களப்‌ படைகளின்‌ படையதிகாரிகள்‌ பதறுகின்றனர்‌. தமிழர்களைக்‌ கொன்று அழிப்‌பதைத்‌ தனது பெருமையாக எண்ணிச்‌ செயற்பட்ட சிங்களப் படைஞன் இன்று தன்‌தலை சிதறாது தான்‌ எப்படித்‌ தப்பியோடலாம்‌ எனத்‌ தலைமயிரைப்‌ பிய்த்துக்‌ கொண்டு நிற்கும்‌ காலமொன்று இன்று உருவாகிவிட்டதை யாராலும்‌ மறுக்க முடியாது. 

எங்களின்‌ மண்ணை படைவலு கொண்டு வல்வளைக்கலாம் ஆனால்‌ அவ்வாறு செய்‌யும்‌ வல்வளைப்பாளனுக்கு எங்கள்‌ மண்ணே கல்லறையாகும் என்று எங்கள்‌ தேசத்தலைவன்‌ 1995 மாவீரர் நாள் உரையில்‌ விடுத்த எழுதருகையை சிங்கள சிறீலங்கா பொருட்படுத்தவில்லை. எங்கள்‌ தேசத்தை பாழாக்கியது. எங்கள்‌ மக்களைக்‌ கொன்று குவித்தது. தமிழ்ப்‌ பெண்களை தனது படைகளின்‌ பாலியல்‌ கொடுமைகளால்‌ வாட்டி வதைத்தது. காரணமின்றி எங்கள்‌ தமிழீழ உடன்பிறப்புக்களை கைதுசெய்து உயிரோடும்‌ உயிரின்றியும்‌ மண்ணுள்‌ புதைத்துவிட்டு காணாமல்‌ போனவர்கள்‌ பட்டியலில்‌ அவர்கள்‌ பெயர்களை எழுதி மகிழ்ந்தது. எங்கள்‌ சின்னஞ்‌ சிறுசுகளுக்கு உணவும்‌ மருந்தும்‌ கொடுக்க மறுத்து அவர்களின்‌ வீடுவாசல்களை விட்டு. அவர்களைத்‌ துரத்தி சத்தற்ற சொத்தற்ற தலைமுறையாக தமிழர்‌ தலைமுறைகளை மாற்றும்‌ அப்பட்டமான இனவழிப்பு அரசியல்‌ திட்‌டங்களை நாளாந்தம் நடைமுறைப்‌படுத்தியது. இவைகளை எல்லாம்‌ கண்டும்‌ கேட்டும்‌ எரிமலையாக எங்கள்‌ நெஞ்சங்கள்‌ கொதித்தன.

நெஞ்சினில்‌ அனல்‌ ஏந்தி இந்த நாகரீக உலகில்‌ இவ்வளவு விலங்குத்தனங்களையும்‌ செய்தும்‌ சிறிலங்காவை ஏன்‌ என்று கேட்கத்‌ திராணியற்ற பன்னாட்டு அரசாங்கங்களினதும்‌ அமைப்புக்களினதும்‌ கையாலாகத்தனங்‌களையும்‌ தன்னலப்போக்குகளையும்‌ கண்டு உலகெல்லாம்‌ வாழும்‌ புலம்பெயர்‌ தமிழ்‌ மக்கள்‌ துடித்தனர்‌.

ஆயினும்‌ எம்‌ தலைவனோ சத்தியத்தின்மீதும்‌ தமிழீழ மக்கள்மீதும்‌ அசைக்‌கமுடியா நம்பிக்கையுடன்‌ எமது தயாகத்தை நாம்‌ மீண்டும்‌ மீட்போம்‌ என்ற திடமான உறுதியுடன்‌ எமது மக்களைக்‌ கட்டியெழுப்‌பினான்‌. மக்களின்‌ பேரெழுச்சி போரெழுச்சியாகி, ஓயாத அலைகள்‌ 3 தமிழீழ மண்ணை வல்வளைத்து நிற்கும்‌ சிங்கள சிறீலங்காவின்‌ படைகளை அள்ளிச்‌ செல்லும்‌ கங்கையாக வன்னிப்பெருநிலப்பரப்பில்‌ ஊற்றெடுத்து யாழ்‌ குடாநாடெங்கும்‌ பாய்ந்து வருகிறது.

இந்த வெற்றிப்பாய்ச்சலில்‌ யாராலும்‌ அசைக்க முடியாது என்று அமெரிக்க படைத்துறை வல்லுநர்களே சான்று வழங்கிய ஆனையிறவு பெருந்தளம்‌ சித்திரை 22இல்‌ தகர்ந்து நொறுங்கியது. பளையும்‌ பிறவும்‌ வீழ்ச்சி அடைந்தமை கண்ட அனைத்துலக படைத்துறை அரசியல்‌ மதிப்புரைஞர்களும் இந்த பாரிய படை முகாம்களின்‌ வீழ்ச்சிகளூடாக சந்திரிகா அரசாங்கத்தின்‌ பரப்புரைகளின்‌ பொய்‌ முகங்களையும்‌ கண்டுகொண்டனர்‌. இதனால்‌ சந்திரிகா அரசாங்‌கத்தின்‌ பொய்யுரைகளுக்கு மதிப்பளித்து, தமிழீழ மக்களின்‌ பேரன்புக்கும்‌ பெருமதிப்‌பிற்குமுரிய எங்கள்‌ தேசத்தலைவர்‌, பிரபாகரனை வசைபாடிய செய்தித்தாள்கள் பல தங்கள்‌ கடந்த காலத்‌ தவறினை உணர்ந்‌தனர்‌. தமிழீழத்‌ தேசிய விடுதலைப்‌ போராட்‌டத்தைக்குறித்த புதிய அணுகுமுறைகள் பன்னாட்டு மக்கள்‌ தொடர்பூடகங்களில் தோன்றியுள்ளன. இந்த மகத்தான திருப்பு முனை ஆனையிறவு விடுவிப்புடன்‌ தொடங்கி யாழ்ப்பாண மண்ணை எம்‌ படைகள்‌ நெருங்க நெருங்க அழுத்தம்‌ பெற்றுவருவதைக்‌ காணக்கூடியதாக உள்ளது. பிரித்‌தானியாவின்‌ உலகப்‌ புகழ்பெற்ற நாளிதழ்களான “த கார்டியன்‌” - “த தைம்சு” போன்ற நாளிதழ்களில் இம்மாற்றத்தை நன்கு கவனிக்கக்கூடியதாக இருந்தது.

“த தைம்சு” நாளேடு விடுதலைப்‌புலிகளின்‌ வெற்றிகளை தமிழர்களின்‌ வெற்றி எனத்‌ தலையங்கமிட்டு எழுதியது. "த எக்னோமிசுட்டு” வார இதழ்‌ 1995இல்‌ சிறீலங்கா அரசாங்கம்‌ யாழ்ப்‌பாணத்தைப்‌ பிடிக்க எடுத்த முயற்சிகளை சுருக்கமாகக்‌ குறிப்பிட்டு பின்னர்‌ 22.04.00 உடன்‌ (ஆனையிறவு வீழ்ச்சியுடன்‌) அந்த முயற்சி எல்லாம்‌ வீணாயின என்பதைச்‌ சுட்டிக்காட்டி சிறிலங்காவின்‌ யாழ்‌ குடாநாட்டை பிடிக்க எடுத்த முயற்சிகளில்‌ இழக்‌கப்பட்ட ஆளணியிழப்புக்களும்‌ பொருட்‌சேதங்களும்‌ அதற்கு வீணாகியுள்ளது என்‌பதை தெளிவுபடுத்தியது.

“த கார்டியன்‌” நாளேட்டின்‌ செய்திகள்‌ தமிழ்‌ மக்களின்‌ சிக்கல் குறித்து மிகத்‌ தெளிவான பார்வை ஒன்றை பன்னாட்டு மக்கள்‌ முன்‌ முன்வைக்கும்‌ தன்மையாக வளர்ச்சி பெற்று வருவதை காணலாம்‌. எனவே அதனை சிறப்பான முறையில்‌ இங்கு எடுத்து நோக்குவது மாறிவரும்‌ உலகப்‌ பார்‌வையைப்‌ புரிந்து கொள்ள உதவும்‌.

மே 6ஆம்‌ திகதி “தமிழ்‌ கார்டியன்‌” செய்‌தியை “த கார்டியன்‌” நாளேடு விரிகுறிப்பாக வெளியிட்டமை தமிழர்களின்‌ கருத்துகளையும்‌ உலக மக்கள்‌ புரிந்து கொள்ள வழிகோலியது. அச்‌ செய்தி வருமாறு :

புலிகளின்‌ களமுனை வெற்றிகளின்‌ மகத்‌தான வெற்றியாக அனைத்துலக வகையில் கருதப்‌படுகிறது. இந்த வெற்றியானது இலங்கைத்‌ தீவின்‌ படைவலுச் சமநிலை விடுதலைப்‌புலிகளின்‌ பக்கமாக மாறியுள்ளமையை புலப்படுத்துகிறது. இந்த நிலையிலும்‌ சிறீலங்கா அரசாங்கம்‌ அமைதியான வழிகளில்‌ இந்தச் சிக்கலைத் தீர்க்க தீவிரமான அக்கறை எதையும்‌ காட்டவில்லை. ஆயினும்‌ களநிலை நடப்பியல்களின்படி முப்பதினாமிரத்துக்கும்‌ மேற்பட்ட சிறீலங்காப்‌ பாதுகாப்பு படைகளுக்கு விடுதலைப்‌ புலிகளின்‌ முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தும்‌ ஆற்றல்‌ இல்லாது உள்ளது. அப்படைகள்‌ தாம்‌ தப்பிப்பதற்கான வழிகளைத்‌ தேடுவதிலேயே அக்கறை காட்டுகின்றன.

“த கார்டியன்‌” நாளேடு, பிபிசி ஊடகவியலாளர் அலசுடேயார்‌ அவர்களின்‌ சிறீலங்காப்‌ படைகளின்‌ படைத்துறை இயலாமை குறித்த கருத்‌தையும்‌ வெளியிட்டு இருந்தது. அக்‌ கருத்து வருமாறு :

சிறீலங்கா அரசாங்கம்‌ ஒரு இலட்‌சத்துக்கு மேற்பட்ட படையினரை தமிழீழ விடுதலைப்‌ புலிகளுக்கு எதிரான சண்டையில்‌ இறக்கி ஆண்டொன்றுக்கு எண்ணூற்று ஐம்பது மில்லியன்‌ அமெரிக்க டொலர்‌ களை போர்முயற்சிகளுக்காகச்‌ செலவிட்ட போதிலும்‌ அதனால்‌ வெற்றி பெறமுடியாது இருப்பது மட்டுமல்லாது அவர்கள்‌மேல்‌ பண வகையில் அல்லது படைத்துறை வகையாகவோ மேலாதிக்கம்‌ செலுத்தவும்‌ முடியவில்லை. தமிழர்களின்‌ கேந்திர முக்கியத்‌துவம்‌ வாய்ந்த வடமாகாண நகரை தக்‌கவைப்பதற்குப்‌ பகரமாக தமிழர்களின்‌ தாக்குதல்களையே எல்லாப்‌ பக்கங்களிலும்‌ எதிர்நோக்கி வருகிறது.

“த-கார்டியன்‌” நாளேடு “த தைம்சு ஒவ்‌ இந்தியா” மே 10இல்‌ சிறிலங்காவில்‌ இந்தியத்‌ தலையீடு குறித்து வெளியிட்ட செய்தியின்‌ சுருக்கத்தைச்‌ சுட்டிக்காட்டியது. அச்சுருக்கம்‌ வருமாறு :

இந்தியப்‌ பொதுமக்கள்‌ சிறீலங்காவின்‌ நலனுக்காக தங்கள்‌ பிள்ளைகள்‌ இலங்கை மண்ணில்‌ மடிவதை அடியோடு வெறுக்கின்‌றார்கள்‌. இந்திய அரசாங்கம்‌ இராசீவ்‌ காந்தி காலத்தில்‌ தலையிட்டு 1200 படையினருக்கு மேல்‌ இழந்த கசப்பான துய்ப்புகளின்‌ அடிப்படையில்‌ எவ்வித தலையீட்டையும்‌ விரும்பாது. அத்துடன்‌ தனது எல்லைக்குள்‌ வடகிழக்கு பகுதிகளிலும்‌ காசுமீரிலும்‌ நீண்‌ட காலமாக உள்நாட்டு போர்களில் ஈடுபட்டு வந்த போதிலும்‌ தனது எல்லைக்கு வெளியே இன்னொரு நாட்டில்‌ அவ்வாறு செய்வது கடினமானது என்பதையும்‌ உணர்ந்துள்ளது. நியூ டெல்லியில்‌ இருந்து வெளிவரும்‌ “அவுட்‌ லுக்‌” நாளேடு விடுதலைப்‌ புலிகள்‌ தமது வெற்றிக்கு குறுக்காக யாரும்‌ நிற்பதை அனுமதிக்க மாட்டார்கள்‌. அவர்கள்‌ எத்தகைய வழிகளையும் கையாண்டு தங்கள் எதிரிகளை அழித்து வருவது நன்கு அறியப்பட்ட விடயம் வேண்டும்‌. எனவே இந்தியா இலங்கைச் சிக்கல்களில் கைகளை வைக்காது தள்ளி நிற்க வேண்டும் எனக்‌ குறிப்பிட்டிருந்தமையையும்‌ “த கார்டியன்‌” வெளியிட்டிருந்தது.

 

(தொடர்ச்சி அடுத்துள்ள மறுமொழிப்பெட்டியில்)

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமர்க்கள விரிப்புகள்

கட்டுரைகள்

ஆனையிறவு வெற்றி குறித்த மக்களின் கருத்துக்கள்

 

 

மூலம்: 'களத்தில்', 15.05.2000, பக்கம்: 5-6
மூல எழுத்தாளர்: பற்றிமாகரன்
எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 21/02/2022

 

 

அடுத்தடுத்து வீழ்ச்சியுறும் சிறீலங்கா?
தமிழர் நிலைப்பாட்டை உலகிற்கு உணர வைக்கிறது

 

(மேலுள்ள கட்டுரையின் தொடர்ச்சி...)

 

 

unceasing waves 3 2000 The guardian ltte.png

 

...இவ்வாறு “த கார்டியன்‌” தமிழர்‌ சிக்கல் குறித்த செய்திகளை வெளிக்‌கொணர்வதில்‌ காட்டி வந்த ஆர்வம்‌ மே 12ஆம்‌ திகதி 'புலி உறுமல்கள்‌' என்ற தலைப்பில்‌ - எவ்விதம்‌ இளம்‌ விடுதலைப்‌ புலிகள்‌ படைத்துறையை அவர்களின்‌ கால்களின்‌ கீழ்‌ கொண்டு வந்தனர்‌ என்ற துணைத் தலைப்புடன்‌ ஒரு தெளிவான கட்டுரையை வெளியிட்டது. பெண்‌ போராளி ஒருவரின்‌ ஒரு பக்க அளவான நிழற்படத்தை முன்பக்கப்‌ படமாக வெளியிட்ட கார்டியன்‌ உள்ளே தேசியத்‌ தலைவர்‌ அவர்களின்‌ படமொன்றையும்‌ வவுனியாவில்‌ உள்ள ஏதிலி தமிழ்ப்பெண்‌ ஒருவர்‌ குழந்தையுடன்‌ நிற்கும் படமொன்றையும் மெருகூட்டவென வெளியிட்டிருந்தனர்‌. 

அக்‌ கட்டுரையில்‌ இருந்து மக்கள்‌ கூறியதாக கட்டுரையாளர்‌ “இலூக்‌கு கார்டிங்‌கு” கூறியுள்ள சில முக்கிய கருத்துக்கள்‌ வருமாறு.

 

ஆனையிறவு வெற்றி குறித்த மக்களின் கருத்துக்கள் 

கிறிஸ்மஸ்‌ போல்‌ மகிழ்ச்சி தருகிறது

ஆனையிறவு வீழச்சியுற்ற நாளை நாங்‌கள்‌ கிறிஸ்மஸ்‌ கொண்டாடுவது போல கொண்டாட விரும்புகின்றோம்‌.

 

விடுதலைப்‌ புலிகளே எம்‌ உண்மையான நிகராளிகள்

ஆனையிறவு வீழ்ச்சி கண்டு நாங்கள்‌ மிக மிக மகிழ்கின்றோம்‌. விடுதலைப்‌ புலிகளே எங்களின்‌ உண்மையான நிகராளிகள். சிறீலங்கா அரசாங்கம்‌ அவர்களைப்‌ பயங்கரவாதிகள்‌ எனலாம்‌ ஆனால்‌ அவர்‌கள்‌ எங்களின்‌ சுதந்திரப்‌ போராட்ட வீரர்கள்‌. தமிழர்களுக்காகவே எங்களுக்காக அவர்கள் போராடுகின்றனர்‌. அவர்கள்‌ யாழ்ப்‌பாணத்தை மீளக்‌ கைப்பற்றுவார்கள்‌ என்‌பதில்‌ நாங்கள்‌ மிக உறுதியாக உள்‌ளோம்‌. அது எங்களின்‌ சொந்த மண்‌.

தேசியத்‌ தலைவர்‌ பிரபாகரன்‌ எங்களின்‌ சரணியன். பிரபாகரனை பொல்‌ பொட்‌ என அரசாங்கம்‌ சொல்வதை நாங்கள்‌ மறுக்கின்‌றோம்‌. அவர்‌ மிக மிக பெரிய மனிதர்‌. அவரே எங்களின்‌ சரணியன்.

    

மக்கள்‌ கூறியதாக இலூக்‌கு கார்டிங்‌கு எழுதியுள்ள மற்றைய கருத்துக்கள்‌ 

கருத்துச் சுதந்திரம் இல்லை

நாங்கள்‌ எங்கள்‌ கருத்துக்களைச்‌ சுதந்‌திரமாக தெரிவிக்க விரும்புகின்றோம்‌. ஆனால்‌ சிறீலங்காப்‌ படைகள்‌ எம்மைக்‌ கட்டுப்படுத்தும்‌ சூழலில்‌ எம்மால்‌ இதனை எப்படிச்‌ செய்யமுடியும்‌, என்று வவுனியாவில்‌ உள்ள ஏதிலி ஒருவர்‌ கூறியுள்ளார்‌.

 

விடுதலைப் புலிகளும் மக்களும்‌ ஒருவரே

தமிழ்ப்‌ பொதுமக்களுக்கும்‌ விடுதலைப்‌ புலிகளுக்கும்‌ இடையில்‌ வேறுபாடு இருப்பதாக சிறீலங்கா அரசாங்கம்‌ ஒரு பொழுதும்‌ கருதுவதில்லை என ஒரு வழக்கறிஞர் கூறினார்.

விடுதலைப்‌ புலிகள்‌ எங்களுக்காகவும்‌ எங்கள்‌ தேசத்திற்காகவுமே போராடுகின்றார்கள்‌ என்னுடைய பிள்ளை போய்‌ விடுதலைப்‌ புலியாகச்‌ சேர்ந்தாலும்‌ நான்‌ அதனை வரவேற்பேன்‌.

 

தமிழ் மக்களுக்கு வேறுபாடான சட்டங்கள்

தமிழ்‌ மக்களுக்கு மட்டும்‌ அவர்கள்‌ பெரும்பான்மையாக வாழும்‌ இடங்களில்‌ உள்ளே வருவதற்கும்‌ வெளியே போவதற்கும்‌ சிறீலங்காப் படைகளிடம்‌ பாஸ்‌ பெறவேண்டும்‌.

 

இன ஒதுக்கலே சிக்கலின் மூல காரணம்‌

தமிழர்களைச்‌ சிங்களப்‌ பெரும்பான்மையினர்‌ இரண்டாவது குடிமகளாகவே நடாத்த எடுத்த முயற்சிகளே தமிழர்களைத்‌ தேசிய விடுதலைப்‌ போராட்டமொன்றை முன்னெடுக்க வைத்தது. 1956இல்‌ சிங்களம்‌ மட்டும்‌ கொண்டு வரப்பட்டதினால்‌ பிரித்தானிய காலம்‌ முதல்‌ அரசாங்கப்‌ பதவி வகித்துவந்த தமிழர்கள்‌ வேலைகளை இழந்து பாதிப்படைந்தனர்‌. இவ்வாறு தொடங்கிய இன ஒதுக்கல்‌ தமிழர்களை தமிழீழ விடுதலைப்‌ புலிகளுடன்‌ இணைந்து போராடித்‌தான்‌ வாழவேண்டுமென்ற நிலைக்குத்‌ தள்ளியது. இந்தப்‌ போராட்டத்தில்‌ இதுவரை 55,000க்கும் மேற்பட்ட மக்கள்‌ உயிரிழந்துள்‌ளனர்‌. 5000 அளவிலான விடுதலைப்‌ புலிகள்‌ பெரும்பாலும்‌ இளவயதினர்கள்‌  1,20,000க்கும் மேற்பட்ட படையினரை எதிர்த்து தீரமுடன்‌ போராடி வருகின்றனர்‌. நாட்டின்‌ ஐந்தில்‌ ஒரு பகுதி விடுதலைப்‌ புலிகளின்‌ கையில்‌ இருக்கிறது.

 

வடக்கு கிழக்கு செயலளவில்‌ ஒன்றே

சிறீலங்கா அரசாங்கம்‌ வடக்கு கிழக்கை கொள்கையளவில்‌ தனித்தனியான மாவட்‌டங்களாகப்‌ பிரித்தாலும்‌ விடுதலைப்‌ புலிகளைப்‌ பொறுத்தவரை செயலளவில்‌ வடக்‌கும்‌ கிழக்கும்‌ ஒரு கோட்டமே. மேலும்‌ வவுனியாவை படைத்துறை முக்கியத்துவம்‌ வாய்ந்த கோட்டமாக விடுதலைப்‌ புலிகள்‌ கருதி அதற்கு முன்னுரிமை கொடுத்து தற்பொழுது மீட்காத போதிலும்‌ வவுனியா தமது கோட்டம் தாம்‌ விரும்பிய நேரத்தில்‌ விரும்பியதை செய்யக்கூடிய கோட்டமாக என்றும்‌ இருக்க வேண்டும்‌ என்பதில்‌ விடுதலைப்‌ புலிகள்‌ தெளிவாக உள்ளனர்‌.

 

சிறுவர்கள்‌ படை என்பது உண்மையல்ல

12 வயதிலேயே தமிழீழத்தில்‌ உள்ள சிறுவர்களுக்கு துவக்கை எவ்விதம்‌ பயன்‌படுத்துவதென்பது தெரியும்‌, விடுதலைப்‌புலிகள்‌ சிறுவர்களைப்‌ போரிட அனுப்‌புவதாக சிறீலங்கா அரசாங்கம்‌ கூறிவந்த போதும்‌ விடுதலைப்‌ புலிகள்‌ யாராயிருப்‌பினும்‌ 17 வயதிலேயே அவர்களை போராளிகளாக களங்களுக்கு அனுப்புவார்கள்‌. அதுவரை அவர்கள்‌ உதவிகளை மட்டுமே செய்யமுடியும்‌.

 

கைதானவரின்‌ மனைவிக்கு உணவு மானியம் இல்லை

எனது கணவரை சிறீலங்காப்‌ படைகள்‌ கைதுசெய்து கொண்டுபோய்‌ இரண்டு ஆண்டுகள். அவரை தென்னிலங்கையில்‌ உள்ள சிறையில்‌ அடைத்து வைத்துள்‌ளனர்‌. அவருக்கு சிறீலங்கா பயங்கரவாதி என முத்திரை குத்திய நாள்‌ முதல்‌ எனக்கு உணவுக்கான மானியம்‌ எதையும்‌ சிறீலங்கா தர மறுக்கிறது. என்‌ நாலு குழந்தைகளில்‌ ஒன்று இறந்துவிட்டது. அண்மையிலும் வேறு 1000 தமிழ்‌ இளைஞர்கள்‌ இவ்வாறாக கைதாக்கப்பட்டு சிறைகளில்‌ அடைக்கப்பட்டுள்ளனர்‌. 

 

 

********

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கருத்தோவியங்கள்

 

 

இப்பகுதிக்குள் பதிவிடப்பட்டுள்ள கருத்தோவியங்கள் யாவும் புலிகளின் ஓயாத அலைகள் கட்டம் - 1 இன் வெற்றி தொடர்பாக 'விடுதலைப்புலிகள்' செய்தித்தாளில் வெளிவந்தவையாகும்.

 

  • 'விடுதலைப்புலிகள்', ஐப்பசி கார்த்திகை 1999:

ஓர் மாதயிதழான இது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அலுவல்சார் ஏடு ஆகும்.

sfew.png

 

afwas.png

 

afas.png

 

 

 

 

 

 

============================

 

 

 

 

 

இப்பகுதிக்குள் பதிவிடப்பட்டுள்ள கருத்தோவியங்கள் யாவும் புலிகளின் ஆனையிறவு வெற்றியும் அதனோடான யாழ்குடா மீதான மீட்புச் சமர் தொடர்பாக தமிழீழ செய்தித்தாள்களில் வெளிவந்தவையாகும்.

 

  • 'விடுதலைப்புலிகள்', ஆடி 2000:

ஓர் மாதயிதழான இது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அலுவல்சார் ஏடு ஆகும்.

unceasing waves 3.jpg

 

 

 

 

  • 'களத்தில்', ஏப்பிரல் 2000:

30.04.2000.jpg

 

 

********

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கருத்தோவியங்கள்

 

 

இப்பகுதிக்குள் பதிவிடப்பட்டுள்ள கருத்தோவியங்கள் யாவும் புலிகளின் ஆனையிறவு வெற்றி தொடர்பாக கொழும்புச் சிங்கள செய்தித்தாள்களில் வெளிவந்தவையாகும்.

 

  • தி ஐலண்ட்:

இது சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பு சிங்கள இனவாத ஆங்கில வாரயேடு ஆகும்.

unceasing waves cartoon island paper.jpgunceasing waves 3 cartoon island paper.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கருத்தோவியங்கள்

 

 

இப்பகுதிக்குள் பதிவிடப்பட்டுள்ள கருத்தோவியங்கள் யாவும் புலிகளின் ஆனையிறவு வெற்றி தொடர்பாக கொழும்பு தமிழ் செய்தித்தாள்களில் வெளிவந்தவையாகும்.

 

  • வீரகேசரி:

கொழும்பைத் தளமாகக் கொண்ட இந்தியச் சார்பு நாளேடு.

veerakesari.png

 

.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கருத்தோவியங்கள்

 

 

இப்பகுதிக்குள் பதிவிடப்பட்டுள்ள கருத்தோவியங்கள் யாவும் புலிகளின் ஆனையிறவு வெற்றி தொடர்பாக தமிழ்நாட்டு தமிழ் செய்தித்தாள்களில் வெளிவந்தவையாகும்.

 

  • தினகரன்:

தமிழ்நாட்டை தளமாகக் கொண்டு வெளிவரும் நாளேடு.

thinakaran TN.jpg

 

Edited by நன்னிச் சோழன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.