Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த உலகம் நல்லவர்களால் இயங்குகிறது..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகம் நல்லவர்களால் இயங்குகிறது..
 

நீண்ட காலத்திற்கு பிறகு 
நண்பர் ஒருவரை சந்தித்தேன்.

அவர் Mumbaiல் settle ஆனவர். 
Fast Food கடை மும்பை outerல்.

கோவை அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்.

வயதாகிவிட்டது. எனவே கிராமத்திற்கு வந்து விட்டேன். கடையையும் கொடுத்து விட்டேன் என்று கூறினார்.

பேசிக் கொண்டிருந்த போது 
அவர் சொன்ன ஒரு விஷயம் 
என்னை ஆச்சரியப்பட வைத்தது.

மும்பை அவர் கடையில் 6 பேர்கள். மூன்று பேர் Sandwich makers. ஒருவர் Bearer.ஒருவர் Table Cleaner. கூட இவர் order எடுக்க, Cash வாங்க கல்லாவில். Simple Hub..

மாலை 5 மணி முதல் 9 மணி வரை 
நல்ல கூட்டம் இருக்கும்.

அந்த சமயத்தில் இவரே Customers இடமிருந்து order வாங்கி உள்ளே சொல்ல வேண்டும்.Cash வாங்க வேண்டும். 
வேகமாக செயல்பட வேண்டும்.

இப்பொழுது போல Computer வசதி 
எல்லாம் அப்போது இல்லை. எல்லாமே Physical Worksதான்.

ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகமாக ஆக இவரால் சமாளிக்க முடியவில்லை.

Order எடுத்து Sandwichmakers வசம் சொல்வதற்கு ஒரு நம்பிக்கையான staff போட்டால் உதவியாக இருக்கும் என்று நினைத்தார்.

Advertisement செய்தார்.Part time 4 hours Job என்பதால் நல்ல response இல்லை.

ஒரு application அவரை கவர்ந்தது.

Biodataவுடன், எனக்கு அந்த வேலையை கொடுங்கள். சிறப்பாக செய்வேன். என்னை நம்புங்கள் என்ற Noteம் இருந்தது.

Canditate ஐ வர சொல்லிவிட்டார். அவனை பார்த்ததும் அவருக்கு ஏமாற்றமாக போய்விட்டது.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஒரு கையும் காலும் முமுமையாக உ பயோகப்படுத்த முடியவில்லை. சாய்ந்து சாய்ந்து மெல்ல நடந்து வந்தான் 22 வயது இளைஞன். ஆனால் தீட்சண்யமான கண்களுடன் 
முகம் பளிச்சென்று இருந்தது.

என்ன வேலை என்று விளக்கமாக 
கூறிவிட்டு, உன்னால் முடியுமா சதீஷ்? 
என்று கேட்டிருக்கிறார்.

முடியும். மூன்று நாட்கள் எனக்கு நீங்கள் Training கொடுங்கள். என்னென்ன varieties என்று புரிந்து கொள்ள வேண்டும்" என்றான்.

மற்ற staff க்கு இவன் மேல் நம்பிக்கை இல்லை என்பது அவர்கள் முககுறிப்பிலேயே தெரிந்தது.

ஏனோ எனக்குள் ஒரு நம்பிக்கை.

மூன்று நாட்கள் Training எடுத்து கொண்டு, அன்று காலை முதல் in Charge எடுத்துக் கொண்டான்.

Sandwitch makers அருகிலேயே ஒரு table கேட்டான்.Tableல் orders என்று plastic பலகை
வைத்தான்.

5 மணிக்கு மேல் கூட்டம் வர ஆரம்பித்தது.

இவன் ஆர்டர் எடுக்கும் வேகமும், Sandwitch makers க்கு அனுப்பும் வேகமும் என்னை பிரமிக்க வைத்தது.

சுப்பு அண்ணே, ஒரு sandwitch cheese butter மட்டும்.

முருகண்ணே ஒரு Sandwitch Onion butter Cucumber.

நடராஜன்னே ஒரு Plain sandwitch with Jam.

Sandwitch makers திணறி விட்டார்கள். வேகமான instructiors.எல்லோருமே ஓட வேண்டியதாக இருந்தது.

Customers எல்லோரும் happy.Quickdelivery கொடுப்பதால். அன்றைய வியாபாரம் 25% கூடியது.

Order எடுக்கும் போது நான் பேப்பர் பேனாவுடன் இருப்பேன்.

சதீஷிடம் எதுவுமே இல்லை. All Memories only.very sharp brain. அசர வைத்தான்.

நாள் ஆக ஆக எல்லோருமே 
அவனை விரும்ப ஆரம்பித்து விட்டோம்.

அவன் Hubல் நுழைந்தவுடனேயே, எல்லோருமே சுறுசுறுப்பாகி விடுவார்கள்.

ஓய்வு நேரத்தில், கடையை இன்னும் எப்படி விரிவு படுத்தலாம் என்று என்னுடன் discuss செய்வான்.

பெரும்பாலும் இளைஞர் கூட்டம்தான் வருகிறது. Familyயோடு வருமாறு செய்யலாம் என்று Fresh Juices, ice Creams, Noodles, Fried rice என்று  மெனுவை விரிவுபடுத்தினான். பக்கத்தில் காலியாக இருந்த கடையையும் எங்கள் கடையோடு இணைக்க சொன்னான்.

பணம் வேண்டுமே என்று சொன்னபோது Bank ல் சிறு தொழில்களுக்கு வழங்கும் கடனன குறைந்த வட்டியில் அவன் நண்பன் மூலமாக ஏற்பாடு செய்தான்.

இரண்டு வருடத்தில் சிறு ஹோட்டலாகவே மாற்றி விட்டான். வருமானமும் பல மடங்கு.

என் மகன் போலவே,அவனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பிய போதுதான், அவனுடைய மதிப்பு புரிந்ததது. 

தன்னை போலவே ஊனமுற்ற பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூற, அவன் பெற்றோரும் சம்மதிக்க, ஒரு தரமான அனாதை ஆசிரமத்தில் ஓரளவு படித்த பெண்ணை திருமணம் செய்து வைத்தேன்.

அந்த பெண்ணும் எங்கள் ஹோட்டலில் 
Cash in Charge, purchase எல்லாம் பார்த்து கொண்டாள்.

அப்பா ஆசிரமத்தில் Cash in Charge, purchese எல்லாம் நான்தான். ஆசிரமத்தில் supply செய்பவர்களிடமிருந்தே, whole sale விலையில் எங்கள் ஹோட்டலுக்கும் வாங்கினாள். நல்ல discount கிடைத்தது.

எனக்கு எந்த வேலையுமே 
இல்லாமல் செய்து விட்டார்கள்.

எனக்கும் குழந்தைகள் இல்லை. எனவே சில வருடங்களுக்கு பிறகு  நானும் என் மனைவியும் அந்த ஹோட்டலை அவர்களுக்கே எழுதி வைத்துவிட்டோம்.

என்னிடமும் தேவையான பணம் இருந்தது. கிராமத்தில் வந்து settle ஆகி விட்டோம் என்றார்.

பிரமிப்பாக இருக்கிறது" என்றேன்.

அதை விட ஒரு பிரமிப்பு இருக்கிறது. நாங்கள் இங்கே வந்து ஒரு மாதம் ஆனவுடன், ஒரு நல்ல தொகையை என் பாங்க் கணக்கில் செலுத்தி இருந்தார்கள்.

நான் போனில் கேட்டதற்கு, வரும் லாபத்தில் 50% உங்களுக்கு வரும். மறுக்க கூடாது என்று போனை வைத்து விட்டான்.

இப்படியும் மனிதர்களா?திகைத்துவிட்டேன்.

போட்டோ கிடைக்குமா? என்று கேட்டேன்.

publicity வேண்டாமே. அவர்கள் நிம்மதியாக இருக்கட்டும் என்று மறுத்து விட்டார்.

நாம் எல்லாம் உடல் உறுப்புகள் சரியாக இருந்தாலும், மனதில் ஊனம் அதிகம். 
தான், தனது, Ego, Jealous, சினம் என்று.

அவர்கள் உடல் ஊனமாக இருந்தாலும், மனதில் எந்த ஊனமும் இல்லாத தெய்வ பிறவிகள்..

-ஊடகவியலாளர்
Thiruvengimalai Saravanan  

https://www.facebook.com/thiruvengimalai.saravanan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மறவாத மனிதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.