Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைரத்தின் அறிவியல் வரலாறு: புதிர் நிறைந்த ரத்தினக் கல் உருவாவது எப்படி? மதிப்பு மிக்கதாகக் கருதப்படுவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைரத்தின் அறிவியல் வரலாறு: புதிர் நிறைந்த ரத்தினக் கல் உருவாவது எப்படி? மதிப்பு மிக்கதாகக் கருதப்படுவது ஏன்?

  • பிபிசி முண்டோ
  • .
16 ஜனவரி 2022
 

நீல வைரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த உலகில் வைரங்கள் பல லட்சக்கணக்கான வருடங்களாக உருவாகி வருகின்றன. அவற்றில் சில தம் பிரகாசத்தால் நம் கண்களையும் கவர்ந்து வியப்பில் ஆழ்த்துகின்றன.

இவை நிரந்தரமான அன்பின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. அவை செழிப்பு மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன.

பண்டைய காலங்களில், அவை நன்மையளிக்கக் கூடியவையாகக் கருதப்பட்டன. அவற்றின் பயன்பாடு பலம் தரும் என்று கூறப்படுகிறது. இது எதிரிகள், தீமைகள் மற்றும் கெட்ட கனவுகளிலிருந்து பாதுகாப்பதாகவும் நம்பப்படுகிறது.

இந்தியாவில் உள்ள வைரங்கள் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை இந்து கடவுள்கள்களுக்கு விருப்பமானவையாகவும் கருதப்பட்டுள்ளன.

கி.பி 868 ஐச் சேர்ந்த புத்த மதத்தின் 'வைர சூத்திரம்' இதை, உலக மாயையிலிருந்து விடுபட்டு உண்மையான மற்றும் நித்திய விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடியவையாக வர்ணிக்கின்றது.

பண்டைய கிரேக்க பாரம்பரியத்தில் வைரம் மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. கிரேக்கர்கள் அவற்றை கடவுளின் கண்ணீர் என்றும் விண்ணிலிருந்து விழுந்த நட்சத்திரங்களின் துண்டுகள் என்றும் கருதினர்.

வைரங்களைப் பற்றிய மிக அற்புதமான விஷயம் என்னவென்றால், அதன் உண்மைத்தன்மை அசாதாரணமானது. இது தொடர்பான நம்பிக்கைகளும் தனித்தன்மை வாய்ந்தவை.

வைரம் "ஃபேன்டசி" என்றழைக்கப்படுவது ஏன்?

வைரங்கள் உருவாகக் காரணமாக இருக்கும் தனிமமான கார்பன் உயிர்களின் அடிப்படையாகும். வைரங்கள் மிகக் கடினமான சூழலில் தான் வலிமை பெறுகின்றன. அவை உருவாகும் சூழலில் கடுமையான அழுத்தத்தைத் தாங்கும் திறன் கொண்டவை. ஹைட்ரஜன் மற்றும் வெப்பநிலையின் சரியான கலவை இருந்தால், அது கார்பன் டை ஆக்சைடாகவும் பறந்துவிடும்.

வைரங்கள் தனிப் பிரகாசமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். ஆனால் இது மிகவும் கடினமானது. அவை சிறந்த வெப்ப கடத்திகள். வெப்பநிலை காரணமாக அவற்றின் உருவ அளவும் மிகச் சிறியதாகிறது. இது கார மற்றும் அமில ரசாயனங்களால் இது பாதிப்படைவதில்லை. ஆழமான புற ஊதா கதிர்கள் காரணமாக, அது கண்ணாடி போல் ஆகிறது. எதிர்மறை எலக்ட்ரோநெக்டிவிட்டி கொண்ட சில அறியப்பட்ட பொருட்களில் இதுவும் ஒன்றாகும்.

 

வைரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பூமியில் மிகச் சில இடங்களில் இவை இயற்கையாக உருவாகின்றன. அவை பூமிக்கு கீழே உள்ள மேல் இரண்டு அடுக்குகளில் உருவாகின்றன அல்லது விண்கற்களின் தாக்கத்தால் உருவாகின்றன.

வைரங்கள் மிக அதிக வெடிப்புத் தன்மையுடன் தான் பூமியின் மேற்பரப்புக்கு வருகின்றன. வரலாற்றில் இது வரை உருவான மிகப்பெரிய வெடிப்பில் உருவானவை இந்த வைரங்கள். இந்த வெடிப்புகளால் உருவாக்கப்பட்ட சில எரிமலைகளின் அடித்தளம் பூமியில் மிக ஆழமாகச் சென்றுள்ளன.

அனைத்து வைரங்களும் கண்ணாடி போன்றவை அல்ல. சில வெளிர் மஞ்சள் நிறத்திலும் சில பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

சில வைரங்கள் பல வண்ணங்களிலும் உள்ளன. அவை மிக அரிதானவை. சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிற வைரங்கள் மிக அரிதானவை. ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் சற்று மஞ்சள் கலந்த பச்சை வைரங்கள் மிகவும் எளிதில் காணப்படுகின்றன.

ஆனால் வைரங்கள் உருவானவுடன், அவற்றின் படிக அமைப்பு எந்த உலோகத்தையும் பிடித்து பாதுகாப்பாக வைத்திருக்கும் திறன் கொண்டது. விஞ்ஞானிகளுக்கு, இது பூமியின் அடர்த்தியான மேற்பரப்பில் காணப்படும் கனிமம் என்றும் கருதப்படுகிறது. அதே சமயம், பூமிக்கு அடியில் பல மைல் ஆழத்தில் உள்ள நிலையையும் இது வெளிப்படுத்துகிறது. இந்த வகையில் நீல வைரம் அல்லது ப்ளூ டைமண்ட் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தூய்மைக்கு இணையில்லை

நமது உலகில் உள்ள பெரும்பாலான வைரங்கள் பூமிக்கு அடியில் 150 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகின்றன.

நீல வைரங்கள் பூமியின் கீழடுக்குக்கு நான்கு மடங்கு ஆழத்தில் உருவாகின்றன. இது 2018 இல் வெளிவந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

வைரம் போன்ற ரத்தினங்கள் மிகவும் விலை உயர்ந்தவை, எனவே அறிவியல் ஆராய்ச்சிக்காக அவற்றைப் பயன்படுத்துவது கடினம் என்று அமெரிக்காவின் ஜெம்மாலாஜிக்கல் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த புவியியலாளர் இவான் ஸ்மித் கூறுகிறார். இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வைரம்

வைரங்கள் மதிப்புமிக்கவை மட்டுமல்ல, தூய்மையானவையும் கூட. இதில் கலப்படம் ஏற்பட வாய்ப்பில்லை. வைரத்தைத் தவிர, வேறு எந்த உலோகமோ அல்லது உருவாகும் போது உண்டான வேறு கனிமமோ இதில் காணப்படுவதில்லை.

வைரத்தின் இந்தத் தன்மை விஞ்ஞானிகளுக்கு அதைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குவதற்கு உதவியாக உள்ளது.

விஞ்ஞானிகள் 46 நீல வைரங்களை பகுப்பாய்வு செய்வதில் வெற்றி பெற்றிருந்தாலும், அதில் சில விஷயங்கள் உள்ளன. அவர்கள் பூமியில் 410 முதல் 660 கிலோமீட்டர் ஆழத்தில் இது உருவாகியிருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள்.

இந்த வைரங்களில் சில மாதிரிகளில் இருந்து , அவை பூமிக்கு அடியில் 660 கிமீ ஆழத்தில் அதாவது மிகக் கீழடுக்கில் உருவாகியுள்ளன என்பது நிரூபணமாகிறது.

இதன் மூலம், இந்த வைரங்கள் டைம் காப்ஸ்யூல்களாகவும் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலம் பற்றிய அறிய முடியாத அரிய பல தகவல்களை இவை தருகின்றன.

அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகத்தின் ஜெம் மற்றும் மினரல் வடிவத்தின் கண்காணிப்பாளரும் புவியியலாளருமான ஜார்ஜ் ஹர்லோ பிபிசி ரீல் நேச்சுரலுக்கு அளித்த பேட்டியில், "பூமியின் உட்புறத்தில் நாம் ஆழமாகச் செல்ல முடியாது. அங்கு தான் வைரங்கள் உருவாகின்றன. இது விண்வெளி ஆய்வு போன்றது தான். சில வைரங்கள் பூமியின் மேற்பரப்பில் உருவாவதால் அவை குறித்து ஆய்வு செய்ய ஏதுவாகிறது" என்று கூறினார்.

ப்ளூ டைமண்ட்: விடுபட்ட புதிர்

ப்ளூ டயமண்ட் நீண்ட காலமாக வரலாற்றின் மர்ம முடிச்சாகவே உள்ளது. வைரங்கள் ஏன் இவ்வளவு அற்புதமான வண்ணங்களைக் கொண்டுள்ளன என்பது இன்னும் தெரியவில்லை.

இறுதியில் அதில் போரானின் எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு மெட்டாலாய்டு ரசாயனமாகும், இது வைரத்தின் உருவாக்கத்தில் அதில் இருக்கும் படிக லேட்டிஸை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டது.

ஆனால் இந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்ட பிறகு ஒரு புதிர் எழுந்துள்ளது.

 

நீல வைரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பூமியின் கீழ்ப் பரப்பில் வைரங்கள் உருவாகி அதன் அடுக்குகளில் போரான் இருக்கிற நிலையில், இந்த போரான் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி தான் அது.

இந்தப் புவி வேதியியல் புதிருக்கான பதில் பூமியின் ஆழம் பற்றிய துப்புகளையும் நமக்கு வழங்குகிறது.

ஸ்மித்தின் தலைமையில் பணிபுரியும் ஆராய்ச்சிக் குழுவால் இந்த தாத்பரியம் முன்வைக்கப்படுகிறது. போரான் கடலின் மேற்பரப்பில் இருந்து பூமியின் ஆழமான அடுக்குக்கு சென்றதாக அது கூறுகிறது. அதன் டெக்டோனிக் தகடுகள் ஒன்றோடொன்று உரசும்போது இந்த நிகழ்வு ஏற்பட்டது. இச்செயல்முறை சப்டக்ஷன் என்று அழைக்கப்படுகிறது

வைரமானது நீர் நிறைந்த தாதுக்களை உறிஞ்சி ஆழமான கடல் தளத்திற்கு விரிவடைகிறது. இது சமுத்திரத் தட்டின் மேலோட்டத்தையும் கூடச் சென்றடைகிறது.

பூமியின் மேற்பரப்பில் இருந்து இதுவரை பிறந்த வைரங்களில் காணப்படும் போரான் எச்சங்களைக் கண்டறிதல், நீர் நிறைந்த தாதுக்கள் முன்னர் மதிப்பிடப்பட்டதை விட பூமியின் ஆழமான அடுக்குகளில் ஆழமாகப் பயணிப்பதைக் காட்டுகிறது. அதிக ஆழத்தில் வேறுபட்ட நீர் சுழற்சியின் சாத்தியத்தை இது பரிந்துரைக்கிறது.

நீல வைரங்கள் அழகானவை மற்றும் அரிதானவை மட்டுமல்ல, அவை மிகவும் சுவாரஸ்யமானவை என்றும் அவை நம் பூமியைப் பற்றி நிறைய கற்றுக்கொடுக்கின்றன என்றும் ஹர்லோ கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/global-60016572

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

இயற்கையின் இரகசியங்களையும் நாங்கள் அளவோடு அறிந்து வாழ்வதே மேலானது.

மீறினால்...... தற்போது மூக்கையும், வாயையுமே மூடுகிறோம், அத்துடன் கண்ணையும், காதையும் சேர்த்து மூடவேண்டியும் வரலாம். 😷🕵️‍♀️ 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.