Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் கல்வியறிவற்ற வர்கள் என்று திருவாய்மலர்ந்த பீலா மார்சல் பொன்சேகா போன்றவர்கட்கு இது சமர்ப்பணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான கப்டன் வாசு அவர்கள் பற்றிய Para Ni Krishna Rajani அவர்களின் பதிவிற்கான Ruthira Jay அவர்களின் பின்னுட்டத்தை கீழே காணலாம்.
அனைத்துலக இராணுவ அரசியல் உதவிகளால்; புலிகள் இறுதிப்போரில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும்'; சிங்கள இராணுவம் சம்பந்தப்பட்ட மூன்று கட்ட ஈழப்போர் களிலும்; அவற்றின் பெரும்பாலான சமர்களிலும் வென்று சிங்களத்தைப் புலிகள் மண்டியிடச்செய்திருந்தனர் என்பதை மறைத்து; புலிகள் கல்வியறிவற்ற வர்கள் என்று திருவாய்மலர்ந்த பீலா மார்சல் பொன்சேகா போன்றவர்கட்கு இது சமர்ப்பணம்.
//
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே முற்று முழுதாக ஒரு கல்வியறிவு பெற்ற இராணுவமாகவே ஆரம்பம் முதல் பரிணமித்து இருந்தது. பிடல் கஸ்ரோ போல் தாடி வளர்த்தால்தான் போராட்டம் நடத்தலாம் என்று எவரெவரோ எழுதிய புத்தகங்களை ஏவறை வரும் நேரத்தில் சிலர் வாசித்துக் கொண்டிருந்த போது படைத்துறை சார்ந்து "போர்க்குரல்" என்ற முற்று முழுதான படைத்துறை சஞ்சிகையை குரல் 1, குரல் 2 என்று புலிகள் தமது போராளிகளுக்கு வெளியிட்டுப் போரியல் ரீதியில் வளர்ந்தமையே அவர்களை எவராலும் வீழ்த்த முடியாத அளவுக்கு வளர்ச்சி பெற முடிந்தது. 1985 இல் யாழ்.கோட்டையிலிருந்து கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தைக்காக புலிகளைச் சந்திக்க வந்திருந்த யாழ்.கோட்டைத் தளபதி கப்டன் கொத்தலாவல T-81 துப்பாக்கியை அதிசயமாகப் பார்த்து கிட்ட.ணாவிடம் அனுமதி பெற்று வாங்கிப் பார்த்ததும் நடந்தேறியது. அதன் பின்னர் T-81 துப்பாக்கிகளைச் சிறிலங்கா அதிகளவில் கொள்ளவனவு செய்ததுமல்லாமல் இன்றும் சிறிலங்கா கடற்படையிலும் விமானப்படையிலும் அதிகளவு பாவனையிலிருப்பது T -81 துப்பாக்கிகள். 1991 ஆகாய கடல் வெளி இராணுவ நடவடிக்கை ஒரு மாதம் வரை நீடித்த போது சிறிலங்காவில் இரண்டு இராணுவங்கள் உள்ளன என பிபிசி வர்ணித்திருந்தது. ஒரு மரபு இராணுவத்தை வைத்து நடத்துவதாயின் அதற்கு படைத்துறை மற்றும் திட்டமிடல் கல்வி, விநியோகம், மருத்துவம், முகாமைத்துவம் என அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கா விடின் சாத்தியமே அற்றது. 80 , 90 களில் சிறிலங்காப் படையதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் சென்றே அதிகாரிகள் கற்கையில் ஈடுபட்டனர். பின்னாளிலேயே கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரி பெரிதாக்கப்பட்டு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அங்கீகாரமும் பெற்றது. இவர்களை எதிர் கொண்டு நின்ற புலிகளோ படைத்துறைக் கற்கையில் மேலோங்கியிருந்தனர். உதாரணமாக ஒரு எறிகணையைச் செலுத்த சிறிலங்கா ஆட்டிலறிப்படைகள் பின்னடைவான Direction Finder ஐப் பயன்படுத்திக் கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளோ Garmin, Magellan வகை Hand Held GPS ஐப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். ஓடுகின்ற ஒரு இராணுவத்தின் முதுகில் கூட எறிகணையைத் துல்லியமாக விழுத்தக் கூடிய எறிய அறிவு (Projectile ) புலிகளுக்கு இருந்தது. பின்னர் நெதர்லாந்தில் இருந்து வந்த மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சொஹான் விஜயசேகரவின் உதவியுடனே சிறிலங்காப் படைகள் தமது புவியியல் நிலையறி அறிவு பெற்றது. இதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே விடுதலைப் புலிகள் தமிழீழ நிலப்பரப்பை Military Grids ஆக உருவாக்கிய வரைபடத்தைக் கொண்டிருந்தனர். படைத்துறை என்பது அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய பெரும் துறை. இதைப் புலிகள் சிறிலங்காப் படைகளுடன் ஒப்பிடும் போது அதைவிடக் கற்றுத் தேர்ந்திருந்தனர். இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை Indian Army என்ற நூலை எழுதிய அமெரிக்க படைத்துறை நிபுணரான Steven Kohan என்பவர் தனது நூலில் விடுதலைப் புலிகள் ஒரு கல்வி அறிவு பெற்ற இராணுவம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

90 க்ளின் ஆரம்ப காலங்களில் தூரத்தினை கணிப்பதற்கு தூர கணிப்பி பயன்படுத்தவில்லை என கேள்விப்பட்டுள்ளேன், தூரத்தை உத்தேசமாகக்கணித்து எறியத்தினடிப்படையில் பாகைகளை தீர்மானிப்பர். (இரண்டு தளவாடிகள் முதலாவது நிலையானது இரண்டாவது அசைக்கக்கூடியது இரண்ட்டாவது தளவாடி அசைவுகள்  பாகைமானியின் பாகைகள் வரையப்பட்டிருக்கும், இரண்டு தளவாடிக்குமிடையேயான தூரம் பாகைகளினடிப்படையில் தூர கணிப்பியை வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே உருவாக்கலாம்)

GPS மூலம் தூர அளவை துல்லியமாகக்கணிப்பிட்டாலும் , புவிச்சுழற்சி, காற்றின் வேகம் திசை, ஈரப்பதன் என்பவை விலகலை ஏற்படுத்தும், அந்த விலகலை கணிப்பதற்கு ஒரு கணித சமன்பாடு உள்ளது (எனக்கு தெரியாது)

எவ்வாறு கிரிக்கட்டில் வேகப்பந்து வீச்சாளரது பந்து வீச்சில் இயற்கை ஆதிக்கம் செலுத்துகிறதோ அதேபோல் இதிலும் இக்காரணிகள் ஆதிக்கம் செலுத்தும் என கேள்விப்பட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே முற்று முழுதாக ஒரு கல்வியறிவு பெற்ற இராணுவமாகவே ஆரம்பம் முதல் பரிணமித்து இருந்தது.

விசு அவர்களே! நீங்கள் தூவாணமாக, சிறுதுளியாக, சீறலாக, பெரும்துளியாக, பெருமழையாக, பேரிடியோடு கூடிய மின்னலுடன் உண்மைகளைப் பொழிந்தாலும்.... சிங்கள இனத்தில் பிறந்தும், அதில் மோட்டுச் சிங்களவன் என்னும் தடித்ததோலைப் போர்த்திக்கொண்டுள்ள. "பீலா மார்சல் பொன்சேகா" போன்றவர்களிடம், அவர்களின் உணர்வையோ! அன்றி அதனால் ஏற்படும்  சிலிர்ப்பைக்கூட நீங்கள் காணமுடியாது. 🤔 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.