Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிக்கி முக்கி உண்மைகளை விழுங்கி பொயை நஞ்சாக கக்கும்: பிபிஸி தமிழோசை

Featured Replies

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால்

ஹர்த்தால் காரணமாக வெறிச்சோடிய ஒரு பள்ளிக்கூடம்

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பிரதேசத்தை இலங்கை அரசாங்கம் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியிருப்பதைக் கண்டித்து இன்று இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடையடைப்பு மற்றும் பணிப் புறக்கணிப்பு ஆகியன மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதற்கான அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்திருந்தது.

வடக்கே யாழ் மாவட்டத்தில் காலையில் கடைகள் பூட்டப்பட்டிருநத போதிலும், பின்னர் படையினர் கேட்டதற்கு இணங்க சில கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் வீழ்ச்சியடைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியா மன்னார் மாவட்டங்களில் கடைகள் திறக்கப்படவில்லை. பாடசாலைகள், வங்கிகள், அரச தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள் என்பன இயங்கவில்லை. பொலிசார் வழமையான பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தார்கள். வாகனப் போக்குவரத்துக்களும் இடம்பெறவில்லை. இயல்பு வாழ்க்கை நிலைமைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிய ஓமந்தை ஊடான ஏ-9 வீதி போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டிருந்த போதிலும், பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாக அதிகாரிகள் கூறினர்.

கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலும் வழமை நிலைமை பாதிக்கப்பட்டிருந்தது. நகரில் அநேகமான கடைகள் மூடப்பட்டிருந்த போதிலும், மாவட்டத்தின் ஏனைய சில பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் கேட்டதற்கிணங்க சில கடைகள் திறக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் வழமை நிலைமை பாதிக்கப்படவில்லை என்று பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்திலும் இந்த கடையடைப்பினால் தமிழ் பகுதிகளில் வழமை நிலைமை பாதிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள சம்பூர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது மூதூர் பட்டித்திடல் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தம்மை தமது சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும் என்று கோரி இன்று போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்

ஆதாரம்:பிபிஸி தம்ழோசையாம்

ஏன் நான் இந்த தலைப்பை இட்டேன் என்று யாருக்காவது தலை இடி காஞ்சல் என்றால் ? விளக்கம் அளிக்கபடும் சீறாம சினக்காம .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய உலக சூழல் நடுநிலையுடனான செய்தி நிறுவளங்களைக் கொண்டதாக இல்லை. ஜனநாயகத்தைக் காவும் நான்கு தூண்களில் ஒன்றுதான் இந்த செய்தி நிறுவனங்கள். நினைத்தாலே பெருமூச்சுடன் சிரிப்புத்தான் மிஞ்சும்.

- பக்கச்சார்புடன் செயற்படும் செய்தி நிறுவனங்களின் உண்மை முகத்தை இயல்பாக அம்பலப்படுத்த வேண்டும். இதற்கு சம்பவம் பற்றிய வெறும் தகவல் பதிவை இட்டுவிட்டு, இச்சம்பவம் செய்தி அமைப்புகள் ஊடாக எப்படியாகப் பதியமாகின்றன என்பதை அடுத்தடுத்துப் பதிவீடு செய்யலாம்.

சில சம்பவங்கள் பற்றிய செய்தியை வெளியீடாது இருப்பதையம் குறிப்பிடலாம். இவ்வகை முயற்சியில் செய்தி நிறுவனங்களின் முகங்கள் தெளிவுறும்.

- ஈழத்தமிழரின் நிலைப்பாடு தொடர்பாக பிபிசியின் நிலையை யாழ் பல முறை சுட்டியுள்ளது.

ஆனால் சசி சாந்தேசிய நீங்கள் சொல்வதுக்கு எதிர்மாறாக நடந்து கொள்கிறது... ஏன் இப்படி எண்டு விளங்க முடிகிறது எண்டாலும் சரியான காரணம் அதுதானா என்பது புரியவில்லை

ஒரு உதரணத்தை பாருங்களேன்.... இந்த செய்தியை பற்றி தமிழ் சேவை மூச்சு கூட விடவில்லை....

Settlers 'fleeing' after woman killed

Security forces are accused of stabbing to death a Tamil woman

Human rights activists in Sri Lanka have accused security forces of stabbing a young Tamil woman to death in the volatile eastern region.

Balasuntharum Thavamani, 27, was stabbed to death by the security forces, according to a Tamil parliamentarian.

Batticaloa district parliamentarian P Ariyanetran told BBC Sandeshaya that security service personnel have stormed her home in Paduwankarai on 07 July.

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...n_stabbed.shtml

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பி.பி.சி தமிழோசையினை விட பி.பி.சி சிங்கள சேவை ஒரளவு உண்மைத்தன்மையான செய்திகளை வெளியிடுகிறது. இதனால் தான் சிங்கள சேவைக்கு எதிராக இலண்டனில் சிங்களவர்கள் சில வருடங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்தார்கள். சிங்கள சேவையினைச் சேர்ந்த பண்டாரா என்பவர் மகிந்தாவின் அம்பாந்தோட்டை அல்லது மகிந்தாவுடன் படித்தவராக இருக்க வேண்டும். இவர் புலி எதிர்ப்பாளராக இருந்தாலும், தமிழர்களுக்கு சிங்கள அரசு செய்யும் கொடுமைகளை உணர்ந்தவர். அரசாங்கத்தின் கொடுமைகளை சிங்கள சேவையில் இடைக்கிடை வழங்கி வருபவர். ஒரு முறை மகிந்தாவினை பி.பி.ஸி சிங்கள சேவையும், தமிழ்சேவையும் பேட்டி அளிக்க விரும்பின. மகிந்தா சிங்கள சேவைக்கு பண்டாரா காரணமாக பேட்டி அளிக்க மறுத்துள்ளார். தமிழ்ச் சேவையில் அன்பரசன் பேட்டி எடுக்கவுள்ளதினால் (தமிழ்சேவை சிங்களவருக்கு சாதகமாகவே உள்ளதினால் குறிப்பாக அன்பரசன் பேட்டி அளிக்க எடுக்கவுள்ளதினால்) மகிந்தா பேட்டி அளிக்க ஒத்துக் கொண்டார். மகிந்தாவுக்கே தெரியும் சிங்கள சேவையினை விட தமிழ்ச்சேவை தங்களுக்கு மிகவும் ஆதரவானது என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.