Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த அரசாங்கத்தின் நடவடிக்கையைக் கண்டித்து ஒரு இலட்சம் பேர் பேரணியில் பங்கேற்பு

Featured Replies

மகிந்த அரசாங்கத்தின் நடவடிக்கையைக் கண்டித்து ஒரு இலட்சம் பேர் பேரணியில் பங்கேற்பு

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக இன்று கொழும்பில் ''மக்கள் அலை'' எனும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஜக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி மக்கள் அணியினரும் இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்துள்ளனர். பேரணில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இன்று மதியம் 1.30 மணிக்கு கொழும்பு கெம்பல் மைதானத்திலிருந்து ஆரம்பமாகியது. புறளைச் சந்தி, மருதானை வீதீ, சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சதுக்கம் ஊடாக கைப்பார்க் பூங்கா நோக்கி பேரணி நகர்ந்து சென்றடைந்தது.

பேரணியில் கொழும்பின் புறநகர்ப் பகுதியிலிருந்து வந்த ஜக்கிய தேசியக் கட்சி, சுதந்திரகட்சியின் மக்கள் அணியின் ஆதரவாளர்கள் மற்றும் அதிருப்பதியாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயிரக்ககணக்கில் இணைந்து கொண்டுனர்.

ஆளும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வாசங்கள் தாங்கிய சுலோக அட்டைகள், ரணில், மங்கள சமரவீர, சிறீபதி போன்றோரின் படங்களைத் தாங்கியவாறும் கோசங்கள் எழுப்பியவாறும் பேரணி நகர்ந்தது.

இதேநேரம் கிழக்கு மாகணத்தை சிறீலங்காப் படைகள் கைப்பற்றிதற்கு ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்துக்களைக் கண்டித்து ஆளும் அரசாங்கத்தினால் இன்று கொழும்பு கிரான்பாஸ், பிலியந்தல, தெஹிவல, ஹோமகம, களனி, யாஎல, கிரிபத்கொட, மாத்தறை, அநுராதபுரம், மகாறகம, சிலாபம் என 150 இடங்களில் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

பதிவு

கடவுளே மகிந்த அரசு கவிழ்க படகூடாது மகிந்ததான் தமிழீழத்தை அடைய செய்ய கூடிய ஒரு அரசியல்வாதி

பிசுபிசுத்தது மகிந்த அரசாங்கம் நடத்திய பேரணி.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதராவாக அரசாங்கமே ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணி எதிர்பார்த்தளவுக்கு இல்லாமல் பிசுபசுத்து போனது.

மகிந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் கொழும்பின் கிராண்ட்பாஸ், பத்தரமுல்லை, களனி, கிரிபத்கொடை, சிலாபம், மகரகம, மாத்தறை, அனுராதபுரம், பிலியந்தலை உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றன.

கொழும்பு கிராண்ட்பாசில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் ஆயிரத்திற்கும் குறைவானனோரே கலந்துகொண்டனர். பலாமரச்சந்தியில் தொடங்கிய இந்த பேரணி கெத்தாராம வீதியினூடாக சென்று மீண்டும் பலாமரச்சந்தியை வந்தடைந்தது.

"பேரணியில் ரணில் ஆட்சிக்கு வந்தால் நாடு முடிந்தது"

"அரசுக்கே நாடு சொந்தம்"

"இராணுவத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் ரணில் ஆட்சிக்கு வந்தால் நாடு அழிந்துவிடும்"

"குடும்பிமலை மோதலில் அரச தலைவர் அரச தலைவரே"

ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பேரணிக்குத் தலைமை வகித்து அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி பேசியதாவது:

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமை பாரியதொரு பிரச்சினையல்ல. மக்கள் அச்சமின்றி சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளமை மிக முக்கியமானதொரு விடயமாகும்.

மங்கள - ரணில் இணைந்து மக்களை ஏமாற்ற முயற்சித்தாலும் மக்கள் எங்கள் பக்கமே, இந்த அரசை அசைக்க யாராலும் முடியாது.

மகிந்தவை மக்களே ஆறு வருடங்களுக்கு தெரிவு செய்தனர். ஆனால் அவர் இன்னும் 12 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்வார். ரணில் மூன்று முறை தேர்தலில் தோல்வி கண்டவர். அடுத்த தேர்தலிலும் நாம் அவரை தோற்கடிப்போம் என்றார் அவர்.

-Puthinam-

அரசாங்க ஆர்ப்பாட்டத்தைப் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த "கூட்டு" கட்சிகள்.

மகிந்த அரசாங்கத்துக்கு ஆதராக இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை அரசாங்கத்தில் இணைந்துள்ள கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளன.

மகிந்த அரசாங்கம் 19 மாவட்டங்களில் ஏற்பாடு செய்த பேரணிகள் எதிலுமே அரசாங்கத்தில் இணைந்துள்ள கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகிந்த அரசாங்கத்தில் இணைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் எந்த ஒரு பிரதியும் அரசுக்கு ஆதரவான ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

அதே நேரம் ஐக்கிய தேசியக்கட்சியின் மாற்றுக்குழுவினரும் சட்டச்சிக்கலால் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்ட போதும் இறுதி நேரத்தில் ஒரு சிலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

-Puthinam-

Edited by யாழ்வினோ

அரசாங்கம் வீழ்ச்சி அடைவதை எவராலும் தடுக்க முடியாது - ஜே.வி.பி

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வீழ்ச்சி அடைவதை எவராலும் தடுக்க முடியாது என ஜே.வி.பி அறிவித்துள்ளது.

மகரகமவில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் வழங்கிய ஆணைக்கு முரணான வகையில் தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த அரசாங்கம் வீழ்ச்சி அடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் தமது கட்சி எந்த ஒரு கட்சியும் ஆட்சியமைப்பதற்கு உதவாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறவுகள்

260707col01hf4td4.jpg

படம் சிறிதாக்கப்பட்டுள்ளது - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் ஐனாதிபதிப் பதவிக்கு முடிவு காலம் வரை எவ்வித பிரச்சனையும் வரப்போவதில்லை. அதைக் கலைப்பது என்பது இப்போதைக்குச் சாத்தியமில்லாத ஒன்றே. அதற்கான பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை என்பது இலகுவில் கிடைக்காது.

ஆனால், பாளுமன்றத்தில் மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்த முடியும். ஆனால் சந்திகிக்ா போல, ரணிலுக்கு விட்டுக் கொடுத்து விட்டு, இயலாத்தன்மையுள்ளவராக மகிந்த இருக்கமாட்டார்.

இப்படியான சில சில ரணில் ஆதரவு என்பது தமிழருக்குத் தேவையான ஒன்று. இல்லாவிட்டால் மகிந்தவின் கொலைக்கலாச்சாரத்திற்கு சிங்கள மக்களிடம் இருந்து ஆதரவு கிடைப்பதாக எண்ணித் தமிழ் மக்களை என்னும் கொல்ல வெளிக்கிடுவான் இந்த மகிந்த. இப்படியான முடிவுகள், அவவனை கொஞ்சம் அடக்கி வைக்க உதவும்.

அதனால் இப்படியான தேவைகளும் அவசியம். ஆனால் அது நரிகளை அரியாசனத்தில் இருக்கவிட அமையக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்‌ஷ கம்பனியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயமாட்டோம்

[27 - July - 2007] [Font Size - A - A - A]

* எதிரணியின் பேரணியில் கோஷம்; பல்லாயிரக்கணக்கானோர் அணி திரள்வு

-எம்.ஏ.எம். நிலாம், டிட்டோகுகன் -

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதியின் சகோதரர்களுக்கும் எதிராக ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவினரும் இணைந்து நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியிலும் அதன் பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் நாட்டில் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொண்டதுடன் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்த வேண்டுமென்ற கோஷமே ஆர்ப்பாட்டப் பேரணியின் போது பிரதான கருப்பொருளாக மேலோங்கிக் காணப்பட்டது.

ராஜபக்‌ஷ சகோதர கம்பனியினரின் ஆட்சிக்கு எதிராக "நாடு அழிகிறது- தடுக்க முன்வருக" என்ற தொனிப்பொருளின் அடிப்படையிலேயே "மக்கள் அலை' எனும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியும் அதன் பின்னரான பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததைப் போல் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்ட ஆதரவாளர்களில் பெருந்தொகையானோர் நேற்றுக் காலை முதல் பேரணியின் ஆரம்ப இடமான பொரளை, கெம்பல் பார்க் மைதானத்தில் ஒன்றுகூட ஆரம்பித்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கெம்பல் பார்க் மைதானம் நிரம்பி வழிந்ததுடன் அதற்கு முன்பாகவுள்ள பேஸ்லைன் பிரதான வீதியிலும் பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர்.

பிற்பகல் ஒரு மணிக்கு பேரணி ஆரம்பமாவதென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் சற்று தாமதமாகியே பேரணி செல்ல ஆரம்பித்தது. அதற்கு முன்னதாக பேரணியின் ஆரம்ப இடத்துக்கு ஒவ்வொரு அரசியல் கட்சிகளினதும் தலைவர்கள் வரும்போது ஆதரவாளர்கள் பலத்த குரலெழுப்பி ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர்.

இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வந்து பேரணியை ஆரம்பித்து வைத்தார்.

பொரளை கெம்பல் பார்க் மைதானத்திலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி, பொரளை சந்தியை வந்தடைந்து அங்கிருந்து மருதானை வீதியூடாக டீன்ஸ் வீதிச் சந்தியூடாக திரும்பி டீன்ஸ் வீதியினூடு சென்று லிப்டன் சுற்று வட்டத்தை வந்தடைந்து அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த ஹைட்பார்க் மைதானத்தை சென்றடைந்தது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியின் முன்பாக தேசியக் கொடிகளை ஏந்திய பெண்களும் கலாசார நடனமாடும் கலைஞர்களும் மோட்டார் சைக்கிள்களில் நீல நிறக் கொடிகள் ஏந்திய இளைஞர்களும் அணிவகுத்துச் செல்ல பேரணியில் முதலாவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் பிரதான ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர எம்.பி., பிரதான இணைப்பாளர் ஸ்ரீபதி சூரியாராச்சி எம்.பி., அக்கட்சியின் முக்கிய பிரமுகரான டிரான் அலஸ் ஆகியோரும் அவர்களின் ஆதரவாளர்களும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தேசிய சபை என்ற கொடியுடன் வந்து கொண்டிருந்ததுடன் அவர்களின் பின்னராக ஐ.தே.க. வின் கொழும்பு மாவட்ட எம்.பி. யான ரவி கருணாநாயக்க அவரது ஆதரவாளர்களுடனும் மற்றும் ஐ.தே.க. எம்.பி.க்களான திஸ்ஸ அத்தநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி. ஆகியோரும் பேரணியுடன் வந்து கொண்டிருந்தனர்.

அதுமட்டுமல்லாது, ஒவ்வொரு தொகுதி அமைப்பாளரும் தங்களது தொகுதியிலுள்ள ஆதரவாளர்களுக்கு தலைமை தாங்கி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஐ.தே.க., சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவினர் மட்டுமல்லாது, மேலக மக்கள் முன்னணி ஆதரவாளர்களும் பேரணியில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணியில் ஜனாதிபதி, அவரது சகோதரர்களின் கேலிப்படங்களுடன் கூடிய பதாகைகளை தாங்கிய வாகனங்களும் கலந்து கொண்டதுடன் விலைவாசி உயர்வு, மோசடிகள் உட்பட அரசின் பல செயற்பாடுகளால் மக்கள் நசுக்கப்படுவது போல டிப்பர் ரக வாகனமொன்று வடிவமைக்கப்பட்டு அதற்கு மேல் நின்றவாறு ஜனாதிபதி போன்று வெள்ளை நிற உடையுடன் சிவப்பு நிற சால்வையை தோளில் போட்டு வேடமளித்த ஒருவர் மக்களை நோக்கி ஆனந்தமாக கையசைத்துக் கொண்டிருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.

இதேநேரம், மேலக மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் காணாமல்போனவர்கள், கடத்தப்பட்டவர்களின் படங்கள் ஒட்டப்பட்ட வெள்ளை நிற டொல்பின் வானொன்றை ஏற்றிய பாரிய டிப்பர் ரக வாகனமொன்றும் பேரணியில் கலந்து கொண்டது.

அத்துடன், ஜனாதிபதி ராஜபக்ஷ, புலிகளின் தலைவர் பிரபாகரனை கட்டியணைப்பது மற்றும் ஜனாதிபதியும் பிரபாகரனும் ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க போன்றோர் ஒன்றாக நிற்க விமல் வீரவன்ச, ரில்வின் சில்வா, ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க ஆகியோர் சிறு மழலைகளாக அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற படங்களுடன் கூடிய பதாகைகளை தாங்கிய வாகனங்களும் கலந்து கொண்டன.

பேரணியில் கலந்து கொண்ட மக்கள் முற்று முழுதாக ஜனாதிபதிக்கும் அவரது சகோதரர்களுக்கும் எதிரான கோஷங்களையே எழுப்பிக் கொண்டிருந்தனர். புலிகளுடனான இரகசிய ஒப்பந்தத்தை வெளிப்படுத்து! ராஜபக்ஷ யோசனை நாட்டுக்கு மந்த போசனை!, கம்பனியினரின் ஆட்சி நாட்டை அழிக்கும் ஆட்சி!, புலிகளுக்கு ஒத்துதவும் ஆட்சி! வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்து! மோசடி மிக்க நாட்டை கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ சகோதர கம்பனியினரின் குரூரமான ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்! என பல்வேறு கோஷங்களை எழுப்பியும் பதாகைகளையும் ஏந்தியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேநேரம், ஆட்கடத்தல்கள் நிறுத்தப்படும் வரை ஓயமாட்டோம்! ஆட்கடத்தல்கள்தானா மகிந்த சிந்தனை! போன்ற சுலோகங்களுடன் மேலக மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அத்துடன், ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் சிறுபான்மையினரை ஒடுக்குவதாகவும் யுத்தத்தின் மூலம் இலாபம் தேட முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டப் பேரணி செல்லும் பாதைகளும் பொதுக்கூட்டம் நடைபெற்ற ஹைட்பார்க் மைதான சுற்றுப்புறப் பாதைகளும் போக்குவரத்துக்கென நேற்று மூடப்பட்டிருந்ததுடன் பொலிஸாரால் மாற்று வழிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன.

பேரணியின் போது இடையே மழை குறுக்கீடு செய்தபோது மக்கள் கலைந்து செல்லாமல் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியின் போது பெருந்திரளான மக்கள் வீதியோரங்களில் இருந்து ஆர்ப்பாட்டங்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.

thinakkural

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.