Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் பார்வை | ஆர்ஆர்ஆர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தால் ஏற்படும் ஆபத்தை நட்பு, காதல், விஸ்வாசத்துக்கு இடையே ரத்தம், ரணம், ரௌத்திரம் கொண்டு எதிர்ப்பதே 'ஆர்ஆர்ஆர்'.

வேட்டைக்காக காட்டுக்கு வரும் ஆங்கிலேய அதிகாரி மற்றும் அவரின் மனைவி அங்கிருக்கும் பழங்குடியின சிறுமியை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். அந்த இனத்தின் காப்பான் கொமரம் பீம், சிறுமியை மீட்க ஆங்கிலேயர்களை நெருங்க முயல்கிறார். அதேநேரம், ஆங்கிலேயர்களுக்கு விஸ்வாசமாக இருந்து, சொந்த மக்களையே எதிர்க்கும் கண்டிப்புமிக்க காவல் அதிகாரி ராமராஜுவுக்கு, கொமரம் பீம்மை கைது செய்யும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. பீம்மை பிடித்துக் கொடுத்தால், அவரின் பல நாள் ஆசையான சிறப்பு அதிகாரி பதவி கொடுக்கப்படும். இப்படி இருவருமே தங்கள் நோக்கங்களுக்காக நகரும்போது ஏற்படும் நட்பு, காதல், விஸ்வாசத்துக்கு இடையே ராமராஜு பீம்மை பிடித்துக் கொடுத்தாரா, அவரின் கடந்த காலம் என்ன, பீம் சிறுமியை காப்பாற்றுவாரா என பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ரத்தம், ரணம், ரௌத்திரம் மிகுந்த திரைக்கதை.

கொமரம் பீம் என்ற கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர், ராமராஜு என்ற கதாபாத்திரத்தில் ராம் சரண் நடித்துள்ளனர். இப்படிச் சொல்வதை விட, ராஜமௌலியின் பிரமாண்டத்துக்கு இருவரும் உயிர்கொடுத்துள்ளனர் எனலாம். இருவருக்குமே சமமான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்கள் என்பதால் படம் முழுக்க நடனம், ஆக்‌ஷன் என ஒவ்வொரு ஃபிரேமிலும் போட்டிபோட்டுக் கொண்டு நடித்துள்ளனர். 'நாட்டு நாட்டு' பாடலில் இருவரின் நடனமும் பக்கா தியேட்டர் செலிபிரேஷனுக்கான மெட்டீரியலாக வெளிவந்துள்ளது. எனினும், ஜூனியர் என்டிஆர் சிலசமயங்களில் ராம்சரணை ஓவர்டேக் செய்கிறார். அது அவரின் கதாபாத்திர வடிவமைப்பால் கிடைத்தது. அவரின் என்ட்ரி காட்சிகள் சிலிர்ப்பூட்டும் தருணம்.

படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் வரும் அஜய் தேவ்கன். சிறிது நேரமே வந்தாலும், முக்கியத்துவம் மிகுந்த கதாபாத்திரம் என்பதால் அதனை புரிந்துகொண்டு அஜய்யும் உழைப்பைக் கொடுத்துள்ளார். அலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா போன்ற பலர் இருந்தாலும் பெரிய ஸ்பேஸ் கொடுக்கப்படவில்லை. அதுவும் அலியா பட்டுக்கு மொத்தம் 6 சீன்களே உள்ளன. அவரின் கதாபாத்திரமும் எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. ராம்சரண் ஜோடியாக நடித்தாலும் அவர்களுக்கான கெமிஸ்ட்ரியை விட, ராம்சரண் - ஜூனியர் என்டிஆர் ’கெமிஸ்ட்ரி’ நல்ல ஒர்க் அவுட் ஆகிறது.

ஆங்கிலேய கவர்னர் ஸ்காட் துரையாக ரே ஸ்டீவன்சன். முகபாவனையிலேயே வில்லத்தனம் காண்பிக்கிறார். இதேபோல், ஜூனியர் என்டிஆர் ஜோடி ஜெனியாக ஒலிவியா மோரிஸ். இவரின் பாத்திரத்தை பார்க்கும்போது மதராசபட்டினம் எமி நியாபகத்துக்கு வந்து செல்கிறார். இவர்களுடன், அலிசன் டூடி கதை நகர்த்துவதற்கு உதவியுள்ளார்.

16482021623060.jpg

 

கதையும், கதாபாத்திரங்களும் எந்த அளவுக்கு பலம் சேர்க்கிறதோ, அதே அளவுக்கு இந்தப் படத்தில் விஷுவல் எஃபெக்ட், ஒளிப்பதிவு, ஆக்‌ஷன் காட்சிகள் பிரமாண்டம் சேர்க்கின்றன. இன்ச் பை இன்ச் செந்தில் குமாரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது என்றால், அதற்கு உயிர் கொடுக்கிறது ஶ்ரீனிவாஸ் மோகனின் விஷுவல் எஃபெக்ட்ஸ். சாலமன், நிக் பவல் என்ற இரட்டை சண்டைக்காட்சி அமைப்பாளர்கள் பிரமிக்க வைத்துள்ளனர். விஷுவல் எஃபெக்ட், ஒளிப்பதிவு, ஆக்ஷன் மூன்றும் சேர்ந்து ரசிக்க இடைவேளைக்கு முன்பு ஒரு காட்சி வரும். லாஜிக் இல்லாமல் பார்க்க வேண்டிய காட்சி அது.

மரகதமணி 'பாகுபலி'யின் இரண்டு பாகங்களிலும் பாடல்களுடன் பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார். இதில் ஏனோ 'நாட்டு நாட்டு' பாடலைத் தவிர எதுவும் மனதுக்குள் இசைக்கவில்லை. ஆனால், பின்னணி இசை 'பாகுபலி' ஃபீலில் உயிரோட்டம் கொடுத்துள்ளது. மதன் கார்க்கி பாடல்களையும், தமிழ்ப் பதிப்பு வசனங்களையும் எழுதியுள்ளார். ஒரு சில வசனங்கள் தெறிக்கவிடுகின்றன.

1920 காலகட்டத்தில் தெலுங்கு பகுதியில் ஆங்கிலேயர்களை எதிர்த்த அல்லூரி சீதாராம ராஜு, கொமாரம் பீம் என்ற இருவரின் வாழ்க்கையை மைப்படுத்தி, அதில் கற்பனைகளைப் புகுத்தி 'ஆர்ஆர்ஆர்' பிரமாண்டத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி. 'ஆர்ஆர்ஆர்' படத்தைப் பார்க்க வரும் அத்தனை பேரின் எதிர்பார்ப்பும் 'பாகுபலி'யை மையப்படுத்தியே உள்ளன. இந்த அழுத்தத்தை திறம்பட சமாளித்து, ஒரு திரைப்படத்துக்கு மையக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஆனால், திரைக்கதை?!

படத்தின் முதல் பாதி வேகம் இல்லாதது போல் இருந்தாலும், பழங்குடி மக்களை காட்டும் காட்சிகள், ஹீரோக்கள் என்ட்ரி, சிறுவனை காப்பாற்றும் காட்சி, இடைவேளை முன்பான சண்டைக் காட்சி என பார்வையாளர்களை கதையுடன் ஒன்றவைத்துச் செல்கிறது. இரண்டாம் பாதி சென்டிமென்ட் காட்சிகளால் ஒவ்வொருவரையும் சோதிக்கிறது. க்ளைமாக்ஸ் ஃபைட், பிரமாண்டம் என இருந்தாலும் ஏற்கெனவே, பார்த்த - யூகிக்கக் கூடிய சென்டிமென்ட் காட்சிகள் ஒருவித அயர்ச்சியை கொடுப்பதைத் தவிர்க்க முடியவில்லை. படத்தின் நீளம் மூன்று மணிநேரத்தை தாண்டி செல்கிறது. இந்தக் கதைக்களத்துக்கும், அதன் பிரமாண்டத்துக்கும் இந்த நேரத்தை சரி என்று வைத்துக்கொண்டாலும் மனதில் ஒட்டாத, பார்த்து பழக்கப்பட்ட காட்சிகளால் மூன்று மணிநேரம் எப்போது முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

மற்றபடி ஃபயர் vs வாட்டர் கான்செப்ட் போன்று புதுமையான விஷயங்கள், வழக்கம்போல தனது பிரமாண்டம், நடிகர்களிடம் நடிப்பை வாங்கிய விதம், கதை சொல்லாடல் ஆகியவை இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி என்பதை அழுத்தம் திருத்தமாக்கியுள்ளது.

'பாகுபலி'யும் சரி, அதற்கு முந்தையை படங்களிலும் சரி... ராஜமௌலி எமோஷன்களை சிறப்பாக கையாண்டு வித்தை காட்டியிருப்பார். 'மகதீரா' 'நான் ஈ' உள்ளிட்ட அவரின் பல படங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 'பாகுபலி'யில் எமோஷனின் உச்சத்தை தொட்டிருந்ததால் உலகம் முழுவதும் அது கொண்டாடப்பட்டது. அதேபோன்றொரு முயற்சியை மீண்டும் ஒருமுறை 'ஆர்ஆர்ஆர்'-க்காக எடுத்திருக்கிறார். ஆனால், இம்முறை அது ஓவர்டோஸ் ஆகி ராஜமௌலி வழக்கமான 'எமோஷன் டச்' மனதில் ஒட்டாமல் பிரமாண்டம் மட்டுமே ஓட்டுகிறது.

மொத்தத்தில் குறைகள் பல இருந்தாலும் பெரிய திரையில் பார்த்து ரசிக்க வேண்டிய படம்தான் 'ஆர்ஆர்ஆர்'.

முதல் பார்வை | ஆர்ஆர்ஆர் - வியத்தகு விஷுவல் ட்ரீட் ஓகே... ஆனால், உணர்வுபூர்வமாக ஒட்டாத படைப்பு! | RRR Movie Review - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர போராட்டம் பின்னணியில் ஒரு மார்வெல் ஜிம்மிக்ஸ்.. ஆர்.ஆர்.ஆர் விமர்சனம்!

 
 
 
 

 

 

Rating:
4.0/5

 

 

RRR Review | ரெண்டு பேறும் தாறு மாறு performance | Ram Charan | NTR | SS Rajamouli
 

நடிகர்கள்: ராம்சரன், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட்

 

 

இசை: மரகதமணி

 

இயக்கம்: எஸ்.எஸ். ராஜமெளலி

 

சென்னை: மீண்டும் கதை சொல்வதில் தான் ஒரு மாஸ்டர் என்பதை நிரூபித்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி. இந்திய சினிமாவை உலக அரங்கில் கொண்டு செல்லும் முயற்சியில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார் ராஜமெளலி.

 


 
 
 
 

ராம்சரண் ஒரு பக்கம் அல்லுரி சீதாராம ராஜுலுவாக மிரட்ட மறுபக்கம் கொமரம் பீமாக ஏகப்பட்ட விருதுகளை குவிக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜூனியர் என்டிஆர்.

 

பாகுபலி படத்தை மறந்து விட்டு ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்தால் நிச்சயம் இந்த படம் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். வாங்க விமர்சனத்துக்குள் செல்வோம்..

 

 

 
 
RRR கதை

RRR கதை

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பச்சைக் குத்தும் போது ரம்மியமாக பாடும் மல்லியின் குரல் பிடித்துப் போக காசுகளை தூக்கி எறிந்து விட்டு அந்த சிறுமியையே கடத்திச் செல்கின்றனர். அந்த சிறுமியை காப்பாற்ற காப்பான் ஜூனியர் என்டிஆர் செய்யும் முயற்சிகளும், அந்த குழந்தையை காப்பாற்ற வரும் காப்பானை கைது செய்ய ராம்சரணுக்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில், பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியான ராம்சரண் என்ன செய்தார் என்பதே RRR படத்தின் கதை.

 

மகாராஜா மெளலி...நீங்க வேற லெவல்...இப்படி பாராட்டி இருப்பது யார் தெரியுமா? மகாராஜா மெளலி...நீங்க வேற லெவல்...இப்படி பாராட்டி இருப்பது யார் தெரியுமா?

பிரவுன் பெக்கர்ஸ்

பிரவுன் பெக்கர்ஸ்

1920களில் அதிலபாத் எனும் மாவட்டத்தில் இந்த கதை நடக்கிறது. காட்டில் மிருகங்களுடன் ஜூனியர் என்டிஆரின் படுமாசான என்ட்ரி பெரியவர்களுக்கு சற்றே அதிருப்தியை ஏற்படுத்தினாலும், குழந்தைகள் கொண்டாடுவார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு இயக்குநர் ராஜமெளலி வைத்துள்ளார். Brown Beggars என இந்தியர்களை அடிமையாக வைத்திருக்கும் ஆங்கிலேயர்கள் சொல்லும் வார்த்தைகள் சுருக்கென குத்துகிறது.

தியேட்டருக்கு டிக்கெட் எடுத்து வரலாம்… துப்பாக்கி கொண்டு வரலாமா? நடந்தது என்ன?தியேட்டருக்கு டிக்கெட் எடுத்து வரலாம்… துப்பாக்கி கொண்டு வரலாமா? நடந்தது என்ன?

பிரிட்டிஷ் போலீஸாக ராம்சரண்

பிரிட்டிஷ் போலீஸாக ராம்சரண்

2000க்கும் அதிகமான மக்கள் ஒரு போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அப்போது ஸ்டேஷனுக்குள் ஒருத்தன் கல் எறிகிறான். அவனை கண்டுபிடித்து கைது செய் என ராம் ஆகிய ராம்சரணுக்கு உத்தரவு கொடுக்கப்படுகிறது. அந்த கூட்டத்தில் இருக்கும் அத்தனை பேரையும் இரக்கமே இல்லாமல் கொடூரமாக லத்தி சார்ஜ் செய்து அடித்து நொறுக்கி அந்த கல் எறிந்தவனை கண்டுபிடித்து கைது செய்யும் விதமாக ராம்சரணின் என்ட்ரி படுமாஸாக இருக்கிறது.

 ரஜினி ஹீரோ.. கமல் வில்லன்.. ராஜமெளலியின் அடுத்த பிளான் இது தான்!ரஜினி ஹீரோ.. கமல் வில்லன்.. ராஜமெளலியின் அடுத்த பிளான் இது தான்!

நண்பர்களாக

நண்பர்களாக

பரிசலில் சிக்கிக் கொள்ளும் ஒரு சிறுவனை காப்பாற்ற குதிரையில் வரும் ராம் மற்றும் புல்லட்டில் வரும் பீம் என இருவரும் பாலத்துக்கு அடியில் சிக்கி இருக்கும் சிறுவனை மீட்க எப்படி தொங்கியபடி அவனை மீட்கின்றனர் என்கிற காட்சி மைண்ட் பிளோயிங். அதன் பின்னர் இருவரும் நண்பர்களாக ஆகின்றனர். கடத்தப்பட்ட குழந்தையை காப்பாற்ற இஸ்லாமியராக வேடமிட்டு அந்த ஊருக்குள் பீம் நுழைந்துள்ளார். அவரை பிடிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி தான் ராம் என்பது தெரியாமலே இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகுகின்றனர்.

நாட்டுக்கூத்து

நாட்டுக்கூத்து

ஆங்கிலேயர்கள் இருக்கும் அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு நண்பன் பீமை ராம் அழைத்துச் செல்கிறான். இவனை ஏன் கூட்டிட்டு வந்த இவனுக்கு டான்ஸ் ஆடத் தெரியுமா என ஆங்கிலேயர்கள் சிலர் கிண்டலடிக்க இருவரும் இணைந்து போடும் மரண குத்து நடனம் தான் அந்த நாட்டுக்கூத்து பாடல். தியேட்டரே எழுந்து நின்று டான்ஸ் ஆடியதால் பல சீன்களை பார்க்க முடியாமலே போய் விடுகிறது.

நீரும் நெருப்புக்கும் சண்டை
 

நீரும் நெருப்புக்கும் சண்டை

ஒரு கட்டத்தில் பாம்பு ஒன்று ராம்சரணை கடித்து விட மூலிகை செடிகளை கொடுத்து ராமின் உயிரை பீம் காப்பாற்றி விடுகிறார். அதன் பிறகு தனது உண்மையான பெயரையும் தான் வந்த விஷயம் குறித்தும் நண்பன் என நினைத்து ராமிடம் சொல்ல உண்மையை தெரிந்து கொண்ட ராம் குழந்தையை காப்பாற்ற முயலும் பீமை தடுக்க என்ன செய்தார் என்பது தான் இன்டர்வெல் சீன். நெருப்புடன் ராம்சரண் வந்து சண்டை போடுவதும், தீயணைப்பு வண்டி ஹோர்ஸ் பைப் உடன் நீர் பொங்க ஜூனியர் என்டிஆர் வந்து சண்டை போடும் அந்த நீரும் நெருப்பும் காட்சி இந்திய சினிமாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு இன்டர்வெல் பிளாக்காக அமைந்துள்ளது.

பீம் கைது

பீம் கைது

ஜூனியர் என்டிஆர் மிருகங்களை அரண்மனைக்குள் விட்டு மல்லியை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளை தடுத்து ராம்சரண் பீமை கைது செய்கிறார். பீமை கைது செய்த ராம்சரணுக்கு ஆங்கிலேயர் படையில் பெரிய பொறுப்பு கிடைக்கிறது. சவுக்கடி கொடுத்து பீமின் உடலை பிய்த்து எடுக்கும் காட்சிகளில் மன்னிப்பு கேள் உயிருடன் விடுவார்கள் என ராம் சொல்ல மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்து பீம் பாடும் பாடல் சுதந்திர தாகத்தை தூண்டுகிறது.

கிளைமேக்ஸ் எப்படி

கிளைமேக்ஸ் எப்படி

ராம்சரணின் அப்பா அஜய் தேவ்கனின் பிளாஷ்பேக் காட்சிகள், சமுத்திரகனி ஆங்காங்கே ராம்சரணுக்கு சொல்லும் அட்வைஸ் காட்சிகள், ஆலியா பட்டின் சில சாகசங்கள் என நிறைந்திருக்கும் இந்த RRR திரைப்படத்தில் டிரைலரில் பார்த்தது போல கடைசியாக ராமும் பீமும் இணைந்து ஆங்கிலேயர்களை பந்தாடுகின்றனர். இந்த இருவரும் ஏன் இணைந்து போராடுகின்றனர் என்கிற ட்விஸ்ட் செம சூப்பராக அமைந்துள்ளது.

பிளஸ்

பிளஸ்

இயக்குநர் ராஜமெளலியின் இயக்கம், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் முழு அர்ப்பணிப்பான நடிப்பு இசையமைப்பாளர் மரகதமணியின் இசை, கே.கே. செந்தில் குமாரின் ஒளிப்பதிவு என காட்சிக்கு காட்சி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதம் என அனைத்துமே பிளஸ் ஆகத் தான் உள்ளது.

மைனஸ் என்ன

சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கும் மார்வெல் ஜிம்மிக்ஸ் போல படம் இருப்பது தான் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்துள்ளது. ராம்சரண், ஜூனியர் என்டிஆரை தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பெரிய முக்கியத்துவம் இல்லை. எப்படி இருந்தாலும், இத்தனை பெரிய பிரம்மாண்ட படைப்பை ரசிகர்கள் தாராளமாக தியேட்டருக்கு சென்று ஒரு முறை பார்க்கலாம்!

https://tamil.filmibeat.com/reviews/rrr-movie-review-in-tamil-ss-rajamouli-ramcharan-and-jr-ntr-s-high-octane-movie/articlecontent-pf262112-093851.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.