Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Warnie (ஷேன் வோர்ன்) - ஜூட் பிரகாஷ்

Featured Replies

Warnie

 

image.png

நாங்கள் வாழும் காலத்தில், வாழ்ந்து, எங்களை சர்வதேச கிரிக்கெட்டை ரசித்து ருசித்து, மகிழ்ந்திருக்கும் பொழுதுகளை படைத்த, கடந்த காலத்தின் கதாநாயகர்களில் ஒருவரான Shane Warne இன் இறுதி வணக்க நிகழ்வில். ,அதுவும் மெல்பேர்ண்காரனான Warne இன் backyard ஆன MCG இல் பங்குபெறும் வாய்ப்புக் கிட்டியது. 

MCG இல் நடைபெறும் Boxing Day Test போட்டிகளில் Warnie பந்து வீசுவது உண்மைலேயே ஒரு rock concert performance மாதிரித் தான் இருக்கும்.

Great Southern Stand அடியில், 3rd Man இலோ, Deep fine leg இலோ field பண்ணும் Warnie ஐ, பியர் அடித்துக் கொண்டு கும்மாளமடிக்கும் ரசிகர்களின் கூட்டம் பம்பலாகச் சீண்டும்.

Warnie உம் சிரித்துக் கொண்டே கையசைத்து திரும்பவும் ஏதோ சொல்லும். Warnie சொல்வது, அரங்கம் நிறைந்த ரசிகர்களின் சத்தத்தால் MCG யின் காற்றுக்கு மட்டும் தான் கேட்கும்.

ரசிகர்களோடு சேட்டை விட்டுக் கொண்டிருக்கும் Warnie ஐ, Captain Mark Taylor ஓ, Steve Waugh ஓ, Ricky Ponting ஓ, பந்து வீச ஆயத்தமாகுமாறு சைகை செய்வார்கள்..

பிறகென்ன.. Warnie இடுப்பை வளைத்து, குனிந்து, நிமிர்ந்து, கையை நிமித்தி, கிமித்தி, காலை தூக்கி, கீக்கி.. warm up செய்ய, வெறுமேலுடன் பியர் குடித்துக் கொண்டிருக்கும் ஒஸி தம்பிமாரும், Warne செய்வதைப் போல தாங்களும் செய்து, அவர்களும் Warm up ஆவார்கள்..

MCG இன் Members Stand முனையில் Warnie பந்து வீச நிலையெடுக்க… warnieeeee…. warnieeeee…warnieeeee என்ற ரீங்காரம், அவர் வீசும் மெதுவான சுழற்பந்தைப் போல அரங்கை நிறைக்கத் தொடங்கும்..

Warnie உம் சும்மா டக்கென்று வந்து பக்கென்று பந்து போடாது.. mid on இல் நிற்கும் fielder ஐ கிட்ட வரச் சொல்லும், fine leg ஐ leg slip ஆக்கும், கீப்பருக்கு கத்தி ஏதோ சொல்லும்.. அங்கால Warnie ஐ எதிர்கொள்ளும் batsman, Warne பந்து வீச முதல் ஆடும் mind games இலேயே அரைவாசி out ஆகிவிடுவார்..

சனம் warnieeeee…. warnieeeee…warnieeeee என்று ஒரு அழகான rhythm இல் கத்திக் கொண்டிருக்க, நாக்கை வெளியே நீட்டி உதட்டை நக்கி விட்டு, மெல்ல இரண்டடி நடந்து, நாலஞ்சு தப்படி மெதுவாக ஓடி, வலக்கையை பிறப்பக்கமாகச் சுழற்றி, Warnie பந்தை மெதுவாக MCG காற்றில் பறக்க விட, Batsman மட்டுமல்ல MCG அரங்கமே அந்த பந்தின் பயணத்தை பார்த்துக் கொண்டிருக்கும்…

“Howz thaaat? “ என்று Warnie குழப்படிக் குழந்தையையப் போல குழற, அரங்கமே எழுந்து நின்று “Howz thaaat?” என்று Warnie இற்காக அம்பயரை மிரட்டும். Warne வெருட்டின வெருட்டலிலோ, அல்லது மெல்பேர்ண் சனத்தின் மிரட்டலிலோ, அம்பயரும் விரலைத் தூக்கி out கொடுத்து விட, Warnie வெறித்தனமாக தனது குண்டு உடம்பைத் தூக்கிக் கொண்டு MCG க்குள் ஒரு குட்டி race ஓடும். மிச்ச ஒஸ்ரேலிய அணி வீரர்கள் Warnie ஐத் துரத்திக் கொண்டு ஓடிப் போய், பிடித்து, குழம்பிப் போய் இருக்கும் Warnie இன் தலைமயிரை இன்னும் குழப்பி, கட்டி பிடித்து, முதுகில் தட்டி, பாராட்டுவார்கள்.

Wicket எடுத்து விட்டு திரும்பவும் Great Southern stand அடியில் field பண்ண மீண்டும் வரும் Warnie இற்கு பலத்த கரகோஷமும் வரவேற்பும் காத்திருக்கும். Warnie உம் தனது தொப்பியை கழற்றி, முன்னால் பிடித்துக் கொண்டு, குனிந்து ரசிகர்களின் பாராட்டை அழகாக ஏற்பார்..

இப்படி எத்தனையோ மறக்க முடியாத நினைவுகளைத் தந்த King Warnie இற்கு அவரது கோட்டையான MCG இல் State Funeral. Warnie அட்டகாசம் செய்த அந்த Great Southern Stand இனி Shane Warne Stand என்று பெயர் மாற்றமும் செய்யப்பட்டு விட்டது..

Warnie இன் அட்டகாசமான performance களை பார்த்த அதே அன்றைய Great Southern Stand இல் இருந்து கொண்டு, இன்று Shane Warne இன் State Memorial ஐ Shane Warne Stand இல் இருந்து பார்க்கவும் கொடுப்பினை ஆகிவிட்டது தான் காலம் செய்த கோலம்..

Warnie கிரிக்கெட்டையும் தாண்டி மெல்பேர்ண் நகரின் ஒரு மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவராக வலம் வந்தவர். கடும் lockdown இல் துவண்டு போய் இருந்து, மீண்டெழுந்து கொண்டிருக்கும் மெல்பேர்ண் நகரிற்கு Warnie இன் மரணம் உண்மையில் பலத்த இழப்புத்தான். 

 

Good bye Warnie.. 

You will surely be missed, Mate

 

ஜூட் பிரகாஷ்

மெல்பேர்ண்

 

 

  • நிழலி changed the title to Warnie (ஷேன் வோர்ன்) - ஜூட் பிரகாஷ்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......!

மிகவும் அழகான வர்ணனை ........பகிர்வுக்கு நன்றி நிழலி ........!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.