Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யா, உறுதி அளித்தது போல்.... படைக் குறைப்பில் ஈடுபடவில்லை: உக்ரைன் குற்றச்சாட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா உறுதி அளித்ததுபோல் படைக் குறைப்பில் ஈடுபடவில்லை: உக்ரைன் குற்றச்சாட்டு!

ரஷ்யா, உறுதி அளித்தது போல்.... படைக் குறைப்பில் ஈடுபடவில்லை: உக்ரைன் குற்றச்சாட்டு!

இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, ரஷ்யா உறுதி அளித்ததுபோல் படைக் குறைப்பில் ஈடுபடவில்லை என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.

துருக்கியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கையை குறைத்துக்கொள்வதாக ரஷ்யா உறுதியளித்தது.

ஆனால், எந்தப் படை குறைப்பிலும் ரஷ்யா ஈடுப்படவில்லை என்று செர்னிஹிவ் நகர மேயர் வியாசெஸ்லாவ் சாஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் வாக்குறுதியை நம்ப தயாராக இல்லை எனவும் ரஷ்யா தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்திவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பிலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தப்பித்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

அவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள், குழந்தைகள். இதுதவிர 60 லட்சம் பேர் உள்நாட்டிலேயே வாழ்விடத்திலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என ஐ.நா.வுக்கான அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தப் போரில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1274064

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

ரஷ்யா, உறுதி அளித்தது போல்.... படைக் குறைப்பில் ஈடுபடவில்லை: உக்ரைன் குற்றச்சாட்டு!

நல்ல விளையாட்டு நீங்கள் மற்றவனிட்டை ஆயுதங்கள் வாங்கி வாங்கி அடிக்க ரஷ்யன்காரன் என்ன முதுகு சொறிஞ்சு கொண்டு இருக்கோணுமே? 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

நல்ல விளையாட்டு நீங்கள் மற்றவனிட்டை ஆயுதங்கள் வாங்கி வாங்கி அடிக்க ரஷ்யன்காரன் என்ன முதுகு சொறிஞ்சு கொண்டு இருக்கோணுமே? 😁

ஆயுதம் மட்டும் இல்லை...  பல நாட்டு  இராணுவ ஆலோசகர்கள், இராணுவ வீரர்கள் என்று...   
உக்ரைனுக்கு போர்க்களத்தில் நின்று முழு ஆதரவு கொடுக்கிறார்கள்.
அது காணாது என்று... உக்ரைன் செல்லப் பிள்ளை மாதிரி, ரஷ்யா...
பின் வாங்க வேண்டும் என்று அடம் பிடிக்குது.

புட்டின்.... பிடிச்து பிடிச்சதுதான்.... ஒரு அங்குலத்தையும், உக்ரைனுக்கு திருப்பி கொடுக்கப் படாது.💪 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஆயுதம் மட்டும் இல்லை...  பல நாட்டு  இராணுவ ஆலோசகர்கள், இராணுவ வீரர்கள் என்று...   
உக்ரைனுக்கு போர்க்களத்தில் நின்று முழு ஆதரவு கொடுக்கிறார்கள்.
அது காணாது என்று... உக்ரைன் செல்லப் பிள்ளை மாதிரி, ரஷ்யா...
பின் வாங்க வேண்டும் என்று அடம் பிடிக்குது.

புட்டின்.... பிடிச்து பிடிச்சதுதான்.... ஒரு அங்குலத்தையும், உக்ரைனுக்கு திருப்பி கொடுக்கப் படாது.💪 🙂

உக்ரேன் சனாதிபதி அழாக்குறையாய் நிக்கிறார்.....அப்பன் தேவையா உனக்கு? 😂

ரஷ்யா உறுதி அளித்ததுபோல் படைக் குறைப்பில் ஈடுபடவில்லை: உக்ரைன் குற்றச்சாட்டு!

இஞ்சை பாருங்கோ நடுவாலை பிரிச்சு தள்ளியிருக்கிறாங்கள் 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

உக்ரேன் சனாதிபதி அழாக்குறையாய் நிக்கிறார்.....அப்பன் தேவையா உனக்கு? 😂

ரஷ்யா உறுதி அளித்ததுபோல் படைக் குறைப்பில் ஈடுபடவில்லை: உக்ரைன் குற்றச்சாட்டு!

இஞ்சை பாருங்கோ நடுவாலை பிரிச்சு தள்ளியிருக்கிறாங்கள் 😎

Russia-Ukraine war: what we know on day 23 of the invasion | Ukraine | The  Guardian

Russia Ukraine War Updates: Russian bombing hits theatre in Mariupol  sheltering residents - The Economic Times

இந்த அழிவிற்கு... 
நடிகனாகிய உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி தான்... பொறுப்பு.
சும்மா வாயை... வைத்திருக்க ஏலாமல், 
மற்ற நாடுகளின் ஏவல் பேய் மாதிரி செயல் பட்டு, 
நாட்டை நாசமாக்கி இருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, தமிழ் சிறி said:

உந்த நடிகனாலை உலம் முழுக்க பிரச்சனையாய் கிடக்கு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

இந்த அழிவிற்கு... 
நடிகனாகிய உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி தான்... பொறுப்பு.
சும்மா வாயை... வைத்திருக்க ஏலாமல், 
மற்ற நாடுகளின் ஏவல் பேய் மாதிரி செயல் பட்டு, 
நாட்டை நாசமாக்கி இருக்கிறார்.

தங்கள் பதவி ஆசைக்காக சும்மா கிடந்த உக்ரேனை  குழப்பிய அரைகுறைகள் இவர்கள் தான். இவர்களுக்கு பின்னணி பக்கபலமாக இருப்பது ஜேர்மனி.

Boxen | So lief das Debüt der Klitschko-Brüder im Schwergewicht vor 25  Jahren

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.