Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைரஸ்-க்கு வயது 25

Featured Replies

சிலவற்றின் ஜனன நாட்களை மகிழ்வுடன் நினைவுகூறலாம். உதாரணத்திற்கு 1882-ல் சார்லஸ் பாபேஜ் கணிணியுகத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது, 1965 -ல் முதன்முதலாய் Fernando Corbato தன் சகாக்களுக்கு ஈமெயில் அனுப்பி கொண்டாடியது இப்படியாய் பல.

சமீபத்தில் ஒரு விஐபி தனது 25-ஆவது பிறந்த நாளை கொண்டாடியிருக்கின்றார். அவர் தாம் கனம் கணிணி வைரஸ் அவர்கள். 1982-ல் பிட்ஸ்பர்க்கை சேர்ந்த Richard Skrenta என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் உருவாக்கிய Elk Cloner என்ற வைரஸ் தான் உலகின் முதல் கணிணி வைரஸாம். பெரிதாக அது ஒன்றும் சாதித்து விடவில்லை. போடப்படும் டிரைவுகளிலெல்லாம் காப்பியாகி கிண்டலான வரிகளை ஸ்கிரீனில் காட்டி எரிச்சலூட்டிப் போனது. இக்கொடுமை சிலகாலத்தில் மில்லியன்டாலர் வியாபாரமாக போகிறதென அப்போது யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்கள். பின்னர் அவாள் Worm, Trojan, Rootkit, Malware, Spyware, Phishing, Bots அப்படி இப்படியென விதவிதமான பிறவி எடுத்து களத்தை கலக்கிப்போனார். இன்றும் கலக்கிக்கொண்டிருக்கின்றார். அநேக கணிணிகாரர்களுக்கு சிம்ம சொப்பனமானார். இன்று ஓரளவு அமைதியாய் இருந்தாலும்

எங்கு எப்போது இவர் எவ்வடிவில் வருவாரென தெரியாததாதலால் மென்பொருள் சார் நிறுவனங்களெல்லாம் எதற்கும் எப்போதும் உஷாராவே இருக்கின்றனர்.

பின்னே Morris Worm, Michelangelo virus, SQL.Slammer, Code Red, Nimda, Concept , Melissa இவர்களையெல்லாம் மறந்துவிடமுடியுமா என்ன?

நானும் அறிந்தவரையில் வைரசுகளை டீன் ஏஜ் பையன்களே பெருமளவில் உருவாக்குவது போல உள்ளது. இவர்களது வயதுக்கோளாறும் இவ்வாறு செய்வதற்கான காரணமாக இருக்கலாம்..

வைரசுக்களின் பெருக்கத்தால் அவைகளுக்குள்ளேயே பிரச்சனைகள் நடந்துள்ளன.

Bagle, Netsky, Mydoom போன்ற வைரசுக்கள் நடத்திய சண்டைகள் பிரபலமானவை. இவை ஒன்றை ஒன்று அழித்து அதனுடைய இடத்தில் அமர்ந்து கொண்டன. ஒன்று மற்றொன்றை கேலி செய்யும் வார்த்தைகளும் இந்த வைரஸ் மென்பொருள்களினுள் கானப்பட்டன.

தகவலிற்கு நன்றி

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் யார் சிடி கொடுத்தாலும் வாங்கவும் மாட்டார். எந்த மென்பொருளையும் இலசவமாக இடவும் மாட்டார். ஏனென்றால் ஒரு தரம் நன்றாகவே இந்த வைரசால் அனுபவித்து விட்டாரம்.

அவரின் தத்துவம்

வைரஸ் எதிர்ப்பு இல்லாத கணனி ஓட்டுத்துணி இல்லாமல் எறும்புக்கிடங்கிற்குள் விழுந்த ஓருவனின் நிலைக்கு ஒப்பானது என்பதாகும்

நீங்கள் சொல்வது எனக்கும் பொருந்தும்...

எனது கணனியில் இருக்கும் மென்பொருட்களில் 95% ற்கும் மேற்பட்டவை லைசன்ஸ் உள்ளவை. காசுகொடுத்து வாங்கியவை.

நான் இலவசமென்பொருட்களை தறவிறக்கம் செய்வது மிகவும் குறைவு. கணனியில் வைரஸ் பிடிப்பதற்கான முக்கியகாரணம் கண்ட, கண்ட இணையத்தளங்களிற்கும் சென்று கண்டதையும் நாம் டவுண்ட்லோட் செய்வதாலாகும்.

இதை ஒரு வியாதி என்று கூட சொல்லலாம். அதாவது கண்ட, கண்ட மென்பொருட்களால் நாம் தினமும் கணனியை நிரப்பும் வியாதி. நாம் ஏற்கனவே கணனியில் இருக்கும் மென்பொருட்களை ஒழுங்காக பாவித்தாலே பல விடயங்களை செய்யமுடியும். சாதிக்கமுடியும். ஆனால், கெடுவில் தினமும் புதிது, புதிதாக இலவசமாகவும், களவாகவும் கணனியில் மென்பொருட்களை இன்ஸ்டோல் பண்ணுவதால் இறுதியில கணனிக்கு பல காய்ச்சல்கள் வருகின்றன.

கலைநேசன்,

பயனுள்ள தகவல்களை இணைக்கிறீர்கள். கணினி சார்ந்த பொது அறிவுத் தகவல்களை அறிந்து வைத்திருப்பதும் நல்லதே. நீங்கள் ஒரு ஆக்கத்தை வேறு ஒரு தளத்தில் இருந்து பெற்று இங்கு இணைத்தால், அதன் மூலத்தைக் குறிப்பிடத் தவறவேண்டாம்.

தொடர்ந்தும் எழுதுங்கள். அறிந்தவற்றை அறியத்தாருங்கள்.

  • 2 weeks later...

இப்போ ஒரு வைரஸ் பயர்பாக்ஸ் பாக்க விட மாட்டேன்னுது. அது என்ன வைரஸ்

சொல்லுங்களேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.