Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவிதி பாகம்-1

Featured Replies

தலை விதி பாகம்-1

விடிகாலைக் கருக்கல் கலைந்த வண்ணம் இருந்தது. கண்மணி தன் பிள்ளைகளுடன் படுத்திருந்தாள். நிலவன் அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கி வெளிச் சிந்தியது. உறக்கத்திலிருந்த கண்மணி திடுக்குற்றுக் கண்விழித்தாள். "என்னப்பா அடுப்பில் பால் பொங்கி ஊத்துதே..."

"ஓமப்பா அடுப்பிலலை பால் வைச்சனான், மறந்துபோயிட்டன்." கண்மணி அடுப்படிக்கு விரைந்து சென்றாள். அடுப்படியில் பால் வழிந்து கிடந்து. கண்மணி கண்களைக் கசக்கிய வண்ணம் "ஏனப்பா உங்களுக்கு இந்த வேலை? என்னை எழுப்பியிருக்கலாமல்லோ?" என்று கத்தியவாறு கற்கண்டை அந்த மீதிப் பாலுக்குள் கலந்து ஊற்றிக்கொண்டு வந்து கணவனிடம் கொடுத்தாள். நிலவன் பாலைக் குடித்த வண்ணம் "அதில்லையடியப்பா, உனக்கு ஏன் தொல்லை தருவான் எண்டுதான் நானே போட்டேன்."

"சரி சரி நீ போய்ப் படப்பா. நான் இந்தப் பாலைக் குடிச்சிட்டு நாலு துண்டுப் பாண் தானே... அதையும் கண்டிக்கொண்டு போறன். நீ ஆறுமணிக்கு எழும்பினால் இரவு பத்து மணி வரை ஓயாமல் கஷ்ரப்படுவாய். எனக்கும் பிள்ளைகளுக்கும் மூண்டு நேரம் சமைக்கவும், வீட்டு வேலையளும் செய்து களைப்பிலை இருப்பாய். போய்ப் படு கண்மணி." என அன்பு கலந்த குரலில் அரவணைத்துக் கூறினான்.

கண்மணி படுக்கை அறைக்குச் சென்று படுக்குமுன் பிள்ளைகளை ஒரு கணம் பார்த்தாள். பிள்ளைகளின் போர்வை விலகி ஒரு புறமாய்க் கிடந்தன. பிள்ளைகளைத் தூக்கி நேர்த்தியாக வளர்த்தி விட்டு, போர்வையையும் போர்த்திவிட்டு தானும் போர்த்திக்கொண்டு உறக்கமுற்றாள்.

நிலவன், வேலைக்குக் கிழம்ப ஆயத்தமானான். அவன் மனச்சாட்சி அவனை உறுத்தியது. "ஏனடா நீ நாட்டை விட்டு வந்தது சரியா?"

நிலவனுக்கு தொண்டை அடைக்க மாடிப்படிகளில் கால்கள் தடுமாறியது. எட்டாம் மாடியிலிருந்து முதலாம் மாடிக்கு கால்கள் வந்ததை உணரவில்லை. தாய் நாட்டை விட்டு வந்த உணர்வில் அவன் உள்ளம் குறுகியது. குழம்பிப் போய் தெளிவற்றவனாய் நடந்துகொண்டிருந்தான். அவன் கால்கள் வெண்பனி மீது விரைந்துகொண்டிருந்தன.

உறுத்தும் மனச்சாட்சிக்குப் பதிலளிக்கமுடியாமல் பஸ்வண்டிக்குள் புகுந்து இருக்கையில் அமர்ந்தான்.

பஸ் வண்டி அடுத்த தரிப்பிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. மனச்சாட்சி கேட்ட கேள்விக்குப் பின் இவன் நினைவுகளோ, தமிழீழத்தில் இவன் சந்தோஷமாக வாழ்ந்த நாட்களை தேடிக்கொண்டிருந்தது.

அடுத்த பஸ் தரிப்பில் கந்தவனத்தார் பஸ் எடுக்கிறவர் என்று நிலவனுக்கு நல்லாய் தெரியும். அவன் நினைத்தது மாதிரியே கந்தவனத்தார் பஸ்ஸிக்குள் நுழைந்தார். நிலவனைக் கண்டு கண்களால் வணக்கம் தெரிவித்து, அவனை நோக்கி வந்தார். நிலவனும் என்றும் இல்லாதவாறு ஏதோ ஆழ்ந்த யோசனையில் மனசுக்குள்ள குமறிக் கொண்டிருப்பதை கந்தவனத்தார் கண்டுபிடித்துவிட்டார் போலும்.

பாகம்-2

"என்னடா நிலவன், என்ன சங்கதி?... ஏதேனும் வீட்டில விசேஷமே? என்ன திருட்டு முழியை பிரட்டிக் கொண்டிருக்கிறாய்" என்று கூறியவாறு அவன் அருகே போய் அமர்ந்தார்.

"உங்களுக்கு நெடுக என்னோட பகிடி விடாட்டா பொழுது விடியாது போங்கோ"

"அது ஒண்டுமில்லை அண்ணே. நான் தமிழீழத்தை விட்டு வந்து நாலு வருசமாச்சு!"

"என்னடா உனக்கு உன்ர அம்மா அப்பாவின்ரை ஞாபகம் வந்திட்டுதே?"

"ஓம் அண்ணை அது ஒரு புறம். அதைவிட இண்டைக்கு காலமை என்ரை மனச்சாட்சி என்னை உறுத்திச்சு.!"

"அட... அட... என்னடா கனக்க யோசிக்கிறாய்?"

கந்தவனம் அண்ணை, நாங்கள் நாட்டை விட்டு வந்தது உங்களுக்கு சரியண்டு படுகுதோ?"

"ஓமடா நான் சரியெண்டுதான் நினைக்கிறன். அதுக்கு இப்ப என்னடா?"

" எனக்கு என்னவோ நாட்டை விட்டு வந்தது சரியாப்படேல்ல"

"நிலவன்! உந்த எங்கடை பனங்கள்ளுக் கதைய விட்டுப்போட்டு ஏதாவது இந்த நாட்டு பிராண்டிப் போத்தலைப் பத்திக் கதை."

"சும்மா போங்கோண்ணை உங்களுக்கு எந்த நேரமும் விஸ்கியும், பிராண்டியும் வொட்கா பத்தின கதைதான்."

"அண்ணை நான் இந்த வெளிநாட்டுக்கு வர முதல், என்ன சுதந்திரமாய் வயல்வெளி தோட்டம் துரவெண்டு விவசாயம் செய்து கொண்டு திரிஞ்சனான். அந்த எங்கடை கோவிற்கடவை பிள்ளையார் கோயில்ல உள்ள உள்வீதி, உள்மண்டபம், வெளிமண்டபம் எண்டு கூட்டித்துடைச்சு தொண்டு செய்துகொண்டு இருந்தனான்.

அந்த சுதந்திரமும், சுதந்திர தேசத்தில உள்ள சந்தோஷமும் இந்த நோர்வே நாட்டுக்காரன் வைச்சிருக்கிற பெற்றோலை வித்தாலும் வேண்டவுமேலாது. அது கிடைக்கவும் கிடையாது."

"இங்கை என்னடா எண்டால், இந்த நாட்டுக்காரன்ரை கந்தோரையும், மலசலகழிவுகூடத்தையும் கழுவிறதுக்கெண்டு, நானும் நீங்களும் விடிய வெள்ளாப்புக்கை, இந்த நாசமறுத்த குளிருக்க எழும்பிப் போறம்!"

"பிரச்சனைக்குப் பயந்து பணம் பொருள் தேட இங்க ஏதோ சொர்க்க பூமியெண்டு சொல்லிக்கொண்டு, ஓடி வந்தனாங்கள்."

"நீங்கள் சொல்லுறதும் சரிதான் கந்தவனமண்ணை. நாங்கள் தமிழனாய்ப் பிறந்தது, எங்கள் தலையெழுத்து அல்லது தலைவிதி எண்டு சொல்லுங்கோ. அதுக்காக தமிழனாய்ப் பிறந்தது தப்பெண்டு மட்டும் சொல்லாதையுங்கோ. வாழத்தெரியாவனுக்கு வாழ்க்கை பிடிக்காது. ஆனால் பாருங்கோ தமிழனாய்ப் பிறந்ததில சந்தோஷப்படுகிறவனும்...ஏன் இந்தத் தரணியை ஆள்கிற தமிழன் இன்றைக்கும் தமிழீழத்திலதான் இருக்கிறான்."

"தமிழன் என்று தரணிக்கு தலை நிமிர்ந்து சொல்லிக்கொண்டு தமிழீழத்தில இருக்கிறவன் உண்மையான தமிழன், வீரத்தமிழன்!...அப்ப நீ சொல்லுறதப் பார்த்தா நாங்கள் எல்லாம் என்ன..? டாய் நிலவா என்ரை வாயில வருகுது போடா...!"

"நாங்கள் எண்டைக்குச் சண்டைக்குப் பயந்து தமிழீழத்தை விட்டிட்டு, வீடு வாசல் ஆடு மாடு ஆத்தை அப்பு எல்லாரையும் மறந்து வந்தமோ அதுதான் சரியான தவறு. இனி இல்லையெண்ட பெரிய வலி. ஏன் எங்களுக்கு தலைகுனிவும் கூட. எங்கட தங்கத் தம்பிகளைப் போல நெஞ்சை நிமிர்த்தி, எதிரியின்ர குண்டுகளை நெஞ்சில வாங்கி, அந்த வேதனையிலும் எதிரியை விரட்டிக்கொண்டு அங்க தமிழீழத்தில இருந்திருந்தால் எங்களுக்கு ஏன் இந்த கண்டறியா வேலை!. எத்தினை தலை குனிவு?, கேவலமான, சோகமான, அன்னியமான, அகதியான அவலங்கள் ஒண்டும் நடந்திருக்காது." என்று தன்னுள்ளே அடக்கி வைத்தவற்றைப் பொழிந்து தள்ளினான்.

"நிலவன்! நீ சொல்லுறதும் சரி. நான் சொல்லுறதும் சரி. ஆனால் நாளைக்கு உன்ரை பெஞ்சாதி பிள்ளைகள் வந்த இடத்தில கஞ்சி குடிக்க வேணுமெண்டால் உதெல்லாம் யோசிக்கேலாது.! முதல்ல நீ பஸ்ஸை விட்டு இறங்கு. வேலை செய்யற இடம் வந்திட்டுது. கந்தோருக்குப் போவம்."

கந்தவனம் அண்ணை மீண்டும் தன்னுடைய பாணியில பகிடி விட்டுக்கொண்ட பஸ் வண்டியை விட்டு இறங்கினார். ஒரு வெள்ளைக்காற பொடிச்சி முறைச்சுப் பார்த்துது!.

நிலவனுக்கும் கொஞ்சம் முகம் மலர... இருவரும் வெறுப்புக் கலந்த சிரிப்புடன் வேலைக்குச் சென்றனர்.

முற்றும்.

வசீகரன்.

அன்புடன்

தமிழ்வானம்

Edited by Tamizhvaanam

இப்படி அப்பா போட்டு கதைக்கும் பாணியும் சுவையானது. பலர் கதைக்கும்போது கேட்டிருக்கின்றேன். பொதுவில் பெண்கள் மட்டுமே (பெண்களுடன்) அதிகளவில் அப்பா போட்டு கதைப்பார்கள்..

போனீராப்பா? ஏனப்பா? வருவீராப்பா? சரியாப்பா? எப்பிடியப்பா? எதுக்கப்பா? இப்படி....

சில ஆண்கள் இப்படி அப்பா போட்டு கதைப்பதை கேட்டு இருக்கின்றேன். பெண்களுடன் ஆண்கள் அப்பா போட்டு பேசுவது பிரச்சனை இல்லை. ஆனால், ஆண்களுடன் ஆண்கள் அப்பா போட்டு கதைதால் கேட்பதற்கு சகிக்க கூடியதாய் இருக்குமோ தெரியாது.

இதைவிட மனைவி புருசனை அப்பா என அழைக்கும் வழக்கமும் நம்மவர்களிடம் இருக்கிறது. இதேபோல் புருசன் மனைவியை அம்மா என்று அழைப்பார்.

உங்கள் கதையின் மறுபாகத்தை வாசிக்க ஆவலுடன் இருக்கின்றோம்..

நன்றி!

சில ஆண்கள் இப்படி அப்பா போட்டு கதைப்பதை கேட்டு இருக்கின்றேன். பெண்களுடன் ஆண்கள் அப்பா போட்டு பேசுவது பிரச்சனை இல்லை. ஆனால், ஆண்களுடன் ஆண்கள் அப்பா போட்டு கதைதால் கேட்பதற்கு சகிக்க கூடியதாய் இருக்குமோ தெரியாது.

ஆண்கள் என்னடாப்பா என்று சொல்கிறார்களே.. ஒரு டா சேர்த்து.. :rolleyes:

கதை தொடக்கம் நன்றாக இருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

:rolleyes:

பிள்ளையும் பிறந்திட்டு இனி யோசிச்சு என்ன பலன். எங்கள்பலபேரின் வாழ்க்கைதானே இது.

Edited by aathipan

கதை நல்லா போய் கொண்டிருக்கு பொறுத்த நேரம் பார்த்து தொடரும் என்று போட்டுவிட்டீங்கள்,மிகுதி கதையை வாசிக்க ஆவலாக இருகிறோம் கட்டாயம் இன்றைக்கு தொடருங்கோ தமிழ்வாணண் அண்ணா...... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரம்பமே நல்லா இருக்கு. தொடருங்கள்.

ஓம் நீங்கள் சொல்வது சரி. எனக்கு அப்போது நினைவுக்கு வரவில்லை. ஆண்களும் போனீயாடாப்பா? ஏனடாப்பா? வருவியாடாப்பா? சரியாடாப்பா? எப்பிடியடாப்பா? எதுக்கடாப்பா? என்னடாப்பா? என்று சொல்கின்றார்கள்.. ஒரு டா சேர்த்து! :D

கதை எழுதியவர் யாழ்ப்பாண பழகுதமிழை அருமையாக கையாண்டு இருக்கிறார்.... வளத்துதல் என்பது பல விடயங்களை ஒருமித்து சொல்லும் அற்புதமான சொல்.. இப்படியான கதைகளை வாசிக்கும் போதுதான் முன்னர் அடிக்கடி கேட்ட பாவித்த சொற்கள் நினைவில் வருகிறது...

கதையின் தலைப்பு "தலை விதி" என்பது.. எனக்கு தலைவிதியில் நம்பிக்கை கிடையாது..... எல்லாம் நாங்களாக ஏற்படுத்தி கொள்வது எண்று நம்புபவன் நான்... அதை தவிர்த்து பார்த்தால் அருமையான கதை நகர்வுக்கு குறைவிருக்காது என்பது ஆரம்பமே சொல்கிறது....

  • தொடங்கியவர்

ஆகா அருமை நண்பர்களே, கலைஞன் பொன்னியின்செல்வன, ஆதிபன், ஐமுனா, ஐனணி மற்றும் தயா உங்கள் அனைவருக்கும் நன்றிகள். நீங்கள் ஒவ்வொரு முறையும் கருத்துக்களை எழுத எழுத என்மனம் கற்கண்டாய் இனிக்கிறது.உண்மையைச் சொல்லப்போனால் இச் சிறுகதையினை எழுதிக் கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. இந்தச் சிறுகதையினை எரிமலை சஞ்சிகையில் 1995 வைகாசி-மாத இதழில் எழுதியிருந்தேன். இருந்தாலும் நான் முன்பு குறிப்பிட்டிருந்தேன் உங்களுக்கு இந்தக் கதையினை வழங்குவதாக... அதற்கு இணங்க இந்த எரிமலை சஞ்சிகையை என்னுடைய ஆவணப் பரணில் இருந்து தேடி எடுக்கவே எனக்கு ஒரு கிழமை பிடித்துவிட்டது. சரி நீங்கள் தருகிற... உங்கள் உற்சாக மாத்திரைகளோடு தொடர்கிறேன்....மீண்டும் வாருங்கள் கதைக்குள் நுழையலாம்.:D

ஐமுனா எல்லாம் சின்னத்திரை பார்த்து கொஞ்சம் பழகிவிட்ட பாதிப்பில்தான் தொட ரும் என்று போட்டேன்....:D :D

அன்புடன்தமிழ்வானம்.

Edited by Tamizhvaanam

ஆமாம் பலர் அவுஸ்ரெலியாவில் கூட பஸ்சில் சரி டிரேயினில் இவ்வாறு தான் பலர் கதைப்பார்கள்..........அதை மிகவும் அழகாக உங்கள் கதையில் கொண்டு சென்ற விதம் மிகவும் யதார்தமாக இருகிறது.........மிகவும் நல்லா இருக்கு கதை.........அடுத்த கதை எப்ப வரும்....... :D

இன்றுதான் இக்கதையை வாசித்தேன். நல்ல சம்பாசனை நடந்திருக்கு நிலவனுக்கும் கந்தவனத்தாருக்கும்.

முந்தி புலிகளின் குரல் வானொலி ல மணியண்னை ........... என்ற பாத்திரத்தோடு இன்னமும் ஒருவர் சேர்ந்து ஒலிக்கும் சம்பாசனைக் கதை போல இருந்திச்சு. பாராட்டுக்கள் வசீகரன் அண்ணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.