Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதய நாதம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ இபப்டியும் நினைக்கணுமா? உபப்டியெல்லாம் நடக்குமா? இனிமேல் பார்த்துதான் காதலிக்கணுமா? ஏழைகளை காதலிச்சால் இபப்டி தானா? ஐயோ

<<

என்னங்க வெண்ணிலா; உங்களை உயிருக்குயிரா நீங்களே உலகம் என நினைக்கின்ற ஒரு காதலன் கிடைத்தால் அவன் ஏழையோ பணக்காரனோ; காதலை இப்படித்தான் பொழிவான். நிஜமான காதல் எந்தக்கால கட்டத்திலும் சாயம் போவதில்லை! மிக மிக மிகச் சொற்பமானவர்களுக்குத்தான் அந்த சொர்க்கம் கிட்டுகின்றது வெண்ணிலா!.

  • Replies 88
  • Views 9.3k
  • Created
  • Last Reply

என்னங்க வெண்ணிலா; உங்களை உயிருக்குயிரா நீங்களே உலகம் என நினைக்கின்ற ஒரு காதலன் கிடைத்தால் அவன் ஏழையோ பணக்காரனோ; காதலை இப்படித்தான் பொழிவான். நிஜமான காதல் எந்தக்கால கட்டத்திலும் சாயம் போவதில்லை! மிக மிக மிகச் சொற்பமானவர்களுக்குத்தான் அந்த சொர்க்கம் கிட்டுகின்றது வெண்ணிலா!.

ஓ இபப்டித்தான் பொழிவானா?

அபப்டின்னா சரிங்க அக்கா :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: அப்போ நிங்கதான் நாயகியோ?<<<

அட அட அடடடா!!

இப்படி கு.வி செய்யக்கூடாதாக்கும்!! என்னங்க இது மேசையில் பெயர் பொறித்தால் அது எல்லோர் கண்ணுக்கும் தெரியும்!! நான் போய் பார்த்திருக்கக் கூடாதா? :o

சில தினங்களுக்கு வரமுடியாது :D . நீங்கள் கதையை போடுங்கோ நன் வாற அண்டைக்கு முழுவதும் வாசிக்கிறேன் :P

<<

ஓ!!! சரி!!. நீங்கள் வரும்போதே போடுகின்றேன்

தமிழ் தங்கை அக்காவின் மடல்கள் எல்லாவற்றையும் வாசித்தன் அழகா இருகிறது உங்களின் மடல்கள்..............ஆனா பொறுத்த நேரத்தில் என்றேன்றும் நேசிக்கும் என்று போட்டிட்டீங்க..........எனி எப்ப அடுத்த மடல் வரும் என்று ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருகிறோம்................ :lol:

என் பதின்மூன்று வயதில் வருவதையெல்லாம் யார் காதல் என்று

ஏற்றுக்கொள்வார்கள்? அதன் பெயர் வெறும் இனக்கவர்ச்சி???? !!! அதுதான்

நம்மவர்கள் சொல்லும் பெயர். உங்களின் 100% எந்த கலப்படமற்ற சுத்தமான

காதல் அந்த இனக்கவர்ச்சி என்ற பெயரில் அடிபட்டு போவதை எப்படிப்பொறுப்பது?

இந்த வரியில் நீங்க சொல்லி இருப்பது சரி தான் 13 வயதில் வருவதை ஏன் காதலாக ஏற்கமுடியாது குறிபிட்ட வயதில் வந்தா தான் காதல் என்றா அதன் பெயர் காதல் இல்லை அதற்கு பெயர் தான் என்னை பொறுத்தவரை கவர்சியாக இருக்கும்............ஆனால் 13 வயதில் வருவது தூய்மையான காதலாக தான் இருக்கும்.அதற்காக பிறகு என்னை கேட்கிறதில்லை நான் பேபி ஆச்சு..................அதற்காக எல்லாரும் 13 வயசில காதலிக்கிறது சரி ஆனா காதலியை வைத்து காப்பாற்றுவோமா என்றும் சிந்திக்க வேண்டும் அது 13 வயசில் வராது தான்...........ஆகவே எது சிறந்தது என்று யாரும் இந்த பேபிக்கு விளங்கபடுத்துங்கோ......... :P B)

அட அட அடடடா!!

இப்படி கு.வி செய்யக்கூடாதாக்கும்!! என்னங்க இது மேசையில் பெயர் பொறித்தால் அது எல்லோர் கண்ணுக்கும் தெரியும்!! நான் போய் பார்த்திருக்கக் கூடாதா?

<<

ஓ!!! சரி!!. நீங்கள் வரும்போதே போடுகின்றேன்

ஓகே ஓகே கூல். இனிமேல் கு வி எல்லாம் செய்யல்லை. நான் வந்துட்டேன் நீங்கள் அடுத்த பாகத்தை தொடருங்க. :P

ஓகே ஓகே கூல். இனிமேல் கு வி எல்லாம் செய்யல்லை. நான் வந்துட்டேன் நீங்கள் அடுத்த பாகத்தை தொடருங்க. :P

நிலா அக்கா வந்தா தான் அடுத்த பாகம் வருமா....... :P

நிலா அக்கா வந்தா தான் அடுத்த பாகம் வருமா....... :P

:) அக்காதான் அபப்டி சொன்னவா.

:lol: நாம தான் மடல்களை ஒவ்வொருநாளும் படிப்பம் ல. அதுதான் :P

:) அக்காதான் அபப்டி சொன்னவா.

:lol: நாம தான் மடல்களை ஒவ்வொருநாளும் படிப்பம் ல. அதுதான் :P

ஓ அப்படியா அப்ப சரி..............நிலா அக்கா கூட சேர்ந்து நானும் மடலை படிகிறேன்......... :P

ஓ அப்படியா அப்ப சரி..............நிலா அக்கா கூட சேர்ந்து நானும் மடலை படிகிறேன்......... :P

ஆனால் நான் தான் முதல்ல படிக்கணும் ஆமா.

அப்புறம் பேபி கிழிச்சிடும் மடலை :lol:

ஆனால் நான் தான் முதல்ல படிக்கணும் ஆமா.

அப்புறம் பேபி கிழிச்சிடும் மடலை :lol:

ஆமாம் பேபி கிழிக்கும் அதற்கு முன்னம் வாசித்துவிட்டு பேபிக்கு விளங்கபடுத்துங்கோ........ :P

தமிழ்தங்கை வணக்கம்!

இன்று முழுவதையும் வாசித்தேன். கதை நல்லா இருக்கு. ஆனால், இது யாரோ தமது சொந்த வாழ்க்கையில் அடைந்த துன்பங்கள் என்பதை நினைக்க கவலையாய் இருக்கின்றது. நீங்கள் கலவன் பாடசாலையில் - மிக்ஸ் ஸ்கூலில் படிச்சு இருக்கிறீங்கள் போல இருக்கு. உந்த கலவன் பாடசாலைகளில் படிச்சாலே உதுதான் பிரச்சனை. யாராவது பொண்ணு அல்லது பையன் எம்மை காதலிப்பார்கள் அல்லது நாம் யாராவது பொண்னு அல்லது பையனை காதலிக்க தொடங்கிவிடுவோம்.

"எத்தனை முறை என்னோடு பேசியிருப்பீர்கள் உங்கள் மூச்சு, ஏன் உங்களின்

நிழல் கூட என்மீது பட்டதில்லையே. நீங்கள் சொல்லியதே "உங்களை கல்யாணம்

பண்ணிக்கொள்ளவேண்டும் என்பதைத்தானே"...!..'காதலிக்கிறேன் என்று கூட

நீங்கள் சொன்னதில்லையடா, "தேவதையைக்கண்டேன்" படம் பார்த்த போது அதில்

தனுஷ் சொன்ன ஒருவிடயம் உங்களைத்தானே எனக்கு நினைவூட்டியது, "என்னோட wife

என்பான் திருமணம் பண்ணிக்கொள்ள முன்னரே, நம்பிக்கை இல்லாதவன் தான்

'காதலி' என்று சொல்வான் என்று தனுஷ் சொல்லும் போது அங்கு நான்

உங்களைத்தான் பார்த்தேன்."

இப்பிடி எழுதி இருக்கிறீங்கள். எல்லாரும் காதலிக்கும்போது மனதில் இதைதான் நினைப்பார்கள். அதாவது காதலிப்பவனை அல்லது காதலிப்பவளை கலியாணம் செய்யவேண்டும் என்று. ஆனால் என்னைப் பொறுத்தவரை இப்படி பப்பிளிக்காக மனதில் உள்ள ஒருவனை அல்லது ஒருத்தியை கலியாணம் செய்வேன் என்று கூறுவது முட்டாள்தனம். முதலில் காதலிக்கப்படுபவர் அதற்கு உடன்படவேண்டும். அவர் விரும்பாமல் நாம் மட்டும் ஒருதலைப்பட்சமாக அவரையே கலியாணம் கட்டுவேன் என்று முடிவு எடுத்தால் அல்லது ஒருதலையாக காதலித்தால் இறுதியில் அவஸ்தையே படவேண்டும். சினிமாவுக்கு இந்த வீர விளையாட்டுக்கள் ஓகே. ஆனால் நடைமுறை வாழ்விற்கு இப்படியான ஸ்டேட்மென்டுகள் பயனற்றவை.

எனது கல்லூரி நண்பன் ஒருவன் தீவிரமாக ஒரு பொண்ணை காதலித்தான். அவளும் காதலித்தாள். அவன் அப்போது பள்ளியில் ஏ.எல் செய்தான் என்பதை விட காதல் செய்தான் என்று கூற வேண்டும். இரவிரவாக இருந்து தனது காதலிக்கு எப்படி லவ் லெட்டர் எழுதுவது, என்ன கலரில் உடுப்பு போடுவது, என்னத்தை பற்றி கதைப்பது, எங்க கூட்டிக்கொண்டு போவது... இப்படி பெரிய புரஜக்ட் செய்வது மாதிரி யோசிச்சு செயல்படுவான். அவன் சுமார் இரண்டு வருட காலப்பகுதியில லவ்வை தவிர வேறு ஒன்றையும் அறியான். அவனுக்கு சோதனைக்கு படான் மார்க்ஸ்தான் வரும். ஏனென்றல் அவன் நினைவெல்லாம் அவள் காதலி, அவளோட கலியாணம் கட்டி சந்தோசமா வாழ வேண்டும் என்ற ஏக்கம்.

கடைசியில என்ன நடந்திச்சு என்றால் காதலியின் அம்மா வில்லியாக வந்திட்டா. இறுதில் அவன் காதலி தற்கொலை செய்து போட்டா. செத்த வீட்டுக்கெல்லாம் போனன். எனக்கு மண்டை எல்லாம் விறைச்சு போச்சிது. அவன் யோசிச்சு, யோசிச்சு அழுதுகொண்டு இருந்தான். காதலர்கள் இருவரும் கிறீஸ்தவர்கள். சவக்காலையில் இறுதிக் கிரியைகள் எல்லாம் நடந்து முடிந்த பின்னர் காதலியின் தாய் இவனை கட்டிப்பிடிச்சு கொஞ்சி அழுதா. ஆனா இனி என்ன செய்வது? இவனுக்கு காதலில் வெற்றி கிடைத்து இருந்தாலும் அவன் காதலியுடன் ஒன்றாக கலியாணம் கட்டி வாழ்வதற்கு கொடுத்து வைக்கவில்லை. எனக்கு இந்த சம்பவங்களை பார்க்க ஏதோ தமிழ்படம் பார்த்த மாதிரி இருந்தது. நிஜத்தில் நடந்த இந்த சம்பவங்களை நம்பமுடியவில்லை. இந்த சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தன.

ம்.. நீங்களும் பாவம் யாருண்டையோ மனதை கஸ்டப்படுத்தி இருக்கிறீங்கள் போல இருக்கு. சரி மிச்சம் தொடர்ந்து எழுதுங்கோ பிறகு என்ன நடந்தது என்பதை வாசித்து அறிவம்.

கதையில் தொடர்ந்து பகுதிகளை இணைக்கும் போது அங்கங்களை முதலாவது தலைப்பு கருத்திலும் சேர்த்து இணையுங்கோ. அப்போது வாசிப்பவர்களிற்கு இலகுவாக இருக்கும். நாங்கள் இடையில் எங்கட கருத்துக்களை எழுதுவதால் உங்கள் அங்கங்களை தேடி கண்டுபிடிப்பது கஸ்டமாக இருக்ககூடும்..

நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையினை வாசித்து என் ஆக்கத்துக்கு ஊக்கம் கொடுக்கும்

வெண்ணிலா,ஜம்மு,இவர்களோடு கலைஞனுக்கும் என்

நன்றிகள்.

கலைஞா, என்ன இது 'நான் கஷ்டப்படுத்தி இருக்கிறன் என்று

சொல்லி இருக்கீங்கள் இது உங்களூக்கே நல்லா இருக்கா :lol:

எப்படி தலைப்பை இணைப்பது என்பதுபுரியவில்லையே!

சொல்லித் தாங்கோவன்..

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல்" சொல்லிய காதல் - 5

எண்ண ஓட்டங்களோ எங்கோ சுழன்றடித்தது என் முகம் பார்காமல் எங்கோ பார்த்த

உங்கள் முகத்தை நான் முழுதாய் பார்த்தேன், மின்விசிறியின் சுழற்சியிலும்

வியர்த்துப்போனது எனக்கு, நீங்களோ எதையும் கண்டு கொள்வதாகத்தெரியவில்லை.

'உங்களைப்பார்த்துக்கொண்டே அதிபரிடம் கேட்டேன் ,," என்ன பிரச்சனை? ..."

அவரின் வேலைகளுக்குள் அவர், இரண்டாம் முறையும் நான் கேட்ட பின்னர் தான்

தலை நிமிர்ந்து எனைப்பார்த்து, "Rottery Club" எல்லாம் எப்படிப்போகுது?

எல்லாரும் ஒழுங்கா சந்தா பணம் கட்டுறாங்களா? இந்தபையனுக்கு சந்தா பணம்

கட்ட முடியாதாம் போன மாதமும் கட்டவில்லையாம் அதனால் குழுவில் இருந்து

விலகிக்கொள்ளப்போகிறாராம். என்றார் அதிபர்.

"இல்லையே இவங்க தங்கை இவருக்கும் சேர்த்து ஒழுங்கா பணம் கட்டுறாங்களே,

தவறாமல் கூட்டத்துக்கு வருபவர்களை எப்படி விலக்கிக்கொள்வது sir? அவரை

வரச்சொல்லுங்க, என்றதும் அதிபர் அதை பெரிதுபடுத்தாமல் ..சரி..போப்பா

என்றார். என் பின்னால் நீங்கள் வந்து கொண்டிருந்தீர்கள்; அதைக்கவனித்த

உங்க நண்பர் உங்களிடம் வந்து கேட்டார்,," என்னடா இது இதை அவங்க கிட்டையே

சொல்லியிருக்கலாமே" அதை சொல்ல விடாமல்மறித்து நீங்க சொன்னீங்க "..இல்லைடா

இனி என்னோட கதைக்காதவங்க கூட எல்லாம் நான் கதைக்கிறதா இல்லை" .

" என் நெஞ்சிலே முள் தைத்தது

நீயா? காதல் கொள்வதே!

தினம் சாகத்தானா?!

என் பார்வையின் மொழி

தெரியாதா? இந்தப்பாவையின்

மெளனம் அறியாயா?!

" என் நெஞ்சிலே முள் தைத்தது

நீயா? காதல் கொள்வதே!

தினம் சாகத்தானா?!(2)

என்னையறியாமலேயே என் கண்களில் கண்ணீர் எப்படி வந்தது என்று

எனக்குத்தெரியவில்லை, "உண்மையாகவா என்பது போல் உங்களைப்பார்த்துவிட்டு

சென்று விட்டேன். அதன் பிறகு உங்கள் கண்களில் படவே கூடாது என்று மிகவும்

ஒதுங்கிச்சென்றேன். ஏனெனில் பார்த்து விட்டு நீங்கள்

பார்காதமாதிரிச்சென்றால் என்னால் அதை கற்பனைபண்ணிக்கூட பார்க்க

முடியவில்லை. அது ஒரு புதன் கிழமை நேரே எங்கள் வகுப்பிற்கு உங்கள் நண்பர்

வந்து என்னை அதிபர் அழைப்பதாய் ஒரு பொய்யைச்சொன்னார்,

அழைத்தது நீங்கள் என்று எனக்குத்தெரியும், வெளியில் வந்தேன், "உங்க

நண்பர் தான் என்னோட கதைக்க விருப்பமில்லை என்றுசொல்லிவிட்டாரே பிறகு

என்ன? இப்போ எதுக்கு மீண்டும்? !!! என்ற கேள்விக்குறியுடன் நான் நிறுத்த

ஆச்சரியக்குறியோடு நீங்களும் அவரும் என்னைப்பார்த்தீர்கள்.

"ஓ,,நாங்கதான் கூப்பிட்டதா தெரியும்மா உங்களுக்கு?" என்றார் உங்கள் நண்பர்? !..

ம்ம்..என்றேன்.."சரி நீங்க கதையுங்க" என்று நாகரீகமாக விலகிச்சென்றார்.

எப்போதும் ஒரு செருமலுடன் கதைக்க தொடங்குவதே உங்கள் வழக்கமா? என்று கேட்க

நினைத்தேன் ஏனெனில் அன்றும் அப்படித்தான் கதைக்க ஆரம்பித்தீர்கள். இன்றும்

அதைப்போலவே செருமிவிட்டு " "உங்களால் இருக்க முடியும்

என்னைப்பார்க்காமல் பேசாமல், அப்படித்தானே?!..

இப்பவும் சொல்கிறேன் உங்களைத்தவிர என் வாழ்வில் எந்த பெண்ணும் வரமுடியவே

முடியாது. உங்களோட கதைக்காமல் என்னால் வேறு யார் கூடவுமே கதைக்க

முடியவில்லைத்தெரியுமா?

என்னடா நீங்க!. ? "என்னை கஷ்டப்ப்டுத்தாதீங்க என்று ஒரு வார்தை நீங்க

சொல்லுங்க. நான்.. நான் உங்க கண்ணிலேயே படாம போறன், ஆனா எதையுமே

சொல்லமாட்டீங்க நீங்க? ஏன்? !என்றீர்கள் தழுதழுத்த குரலோடு...."சொல்லிமுடிச்சிற்றீங்களா என்று

உங்களைப்பார்த்தேன்." இல்லை என்பது போல தலையாட்டிவிட்டு ...இரண்டு நாளா

உங்களைப்பார்கவே இல்லையே அதான் உங்களைப்பக்கதில் வைத்து பார்க்கவேண்டும்

போல இருந்தது.."Sorry" மா என்றீர்கள்,..

என் விழிகளுக்குள் நிறைந்த முதல் உறவே, உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பது என்னைத்தவிர உங்களுக்கே

தெரியாதுடா"...என் மனசுக்குள் சொல்லிக்கொண்டதோடு நேரே உங்கள் நண்பரிடம் வந்து சொன்னேன். " அவர்

ரொம்ப நல்லவர், நிறையப் பொறுப்பு இருக்கு அவருக்கு, அவர் எப்பவுமே நல்லா

இருக்கணும், அதுதான் எப்போதும் என் விருப்பம் என்றுசொல்லிவிட்டு

சென்றுவிட்டேன்.

இன்று உங்களைப்பார்கக் நேரிட்டால் நான் கேட்க நினைப்பதெல்லாம் ஒன்றே

ஒன்று தான் ..." நான் சிரிக்கணும் என்று விரும்பின நீங்க என்னை இப்படி

அழவைத்து விட்டீர்களே என்பதுதான்"..!...

"இது என்ன போராட்டமா? நெஞ்சோடு

காதல் வெள்ளோட்டமா?! ஆசை

வைத்தால் துன்பம் தானா?

ஆண்டாண்டு காலமா? (2)

தள்ளித் தள்ளிப்போகவும்

நெருங்குகின்றாய் -இந்த

தகரத்தை தங்கம் என்றேன்

புலம்புகின்றாய்? (2)

உன் உண்மைக் காதல்

ஏற்கும் சக்தி எனக்கு இல்லை

அன்பனே உன் உயர்வுக்கு

முன் யாரும் இல்லை (2)

ஒன்றே "காதல்" என்று

வாழும் சிறந்தவனே என்

உள்ளத்தில் என்றும் நீ

உயர்ந்தவனே!(2)

எத்தனையோ ஆண்களை என்வாழ்வில் சந்தித்திருக்கின்றேன் ஆனால் "காதல் ஒருமுறை

ஒரே ஒருமுறைதான் பூக்கும் என்ற உங்களைப்போல ஒருவரை நான் இன்னும்

சந்திக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால்,,,,

என்றென்றும் நீங்கள் நேசிக்கும்,

....................................

என் விழிகளுக்குள் நிறைந்த முதல் உறவே, உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பது என்னைத்தவிர உங்களுக்கே தெரியாதுடா"...

அப்படி போடுறா அரிவாளை. ஹீஹீ

என்ன மா காதல் வந்தால் சொல்லி இருக்கலாமே. இதுதான் பொண்ணுகளின் வீக் பொயிண்ட். ஆண்கள் நெருங்கி வரும் போது விலகிக்குவாங்க. அவங்க விலகும் போது கண்ணீர் வடிப்பாங்க.

இன்று உங்களைப்பார்கக் நேரிட்டால் நான் கேட்க நினைப்பதெல்லாம் ஒன்றே

ஒன்று தான் ..." நான் சிரிக்கணும் என்று விரும்பின நீங்க என்னை இப்படி

அழவைத்து விட்டீர்களே என்பதுதான்"..!...

நீங்க ரொம்ப மோசம் போங்க. அந்தண்னா எவ்வளவு பாவம். பார்ப்பம் எப்பதான் கதைக்கிறீங்க னு?

சரி அடுத்த மடலையாவது கெதியில் அனுப்பி விடுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா,

வெண்ணிலா,

வெண்ணிலா.

இது சற்றும் கலப்படமில்லாமல் நிகழ்ந்த நிகழ்வு; சுவைக்காக மனசில்

எழுந்த உணர்வுகளை இசையும் கலந்து கவிதை ஆக்கி இருக்கின்றேன்.

என்னை இதில் சம்பந்தப்படுத்திப்பார்க்கா?ீங்க!!

இதோ உங்களுக்காக அடுத்த பாகமும்

Edited by Thamilthangai

தமிழ் தங்கை அக்கா மறுபடி மடலை முடித்துவிட்டீங்க பொறுத்த இடத்தில...........நல்லா போய் கொண்டு இருகிறது உங்களின் மடல்......... :lol:

எத்தனையோ ஆண்களை என்வாழ்வில் சந்தித்திருக்கின்றேன் ஆனால் "காதல் ஒருமுறை

ஒரே ஒருமுறைதான் பூக்கும் என்ற உங்களைப்போல ஒருவரை நான் இன்னும்

சந்திக்கவில்லை.

என்னும் சந்திக்கவில்லையா அக்கா ;) .................காதல் ஒரு முறை தான் பூக்குமா பேபிக்கு இன்றைக்கு தான் தெரியும்........ :P

வெண்ணிலா,

வெண்ணிலா,

வெண்ணிலா.

இது சற்றும் கலப்படமில்லாமல் நிகழ்ந்த நிகழ்வு; சுவைக்காக மனசில்

எழுந்த உணர்வுகளை இசையும் கலந்து கவிதை ஆக்கி இருக்கின்றேன்.

என்னை இதில் சம்பந்தப்படுத்திப்பார்க்கா?ீங்க!!

இதோ உங்களுக்காக அடுத்த பாகமும்

:lol: சொறி அக்கா. இனிமேல் உங்களை சம்பந்தப்படுத்தல்லை. ரியலி சொறி.

ம்ம் அடுத்த மடலை அனுப்புங்க

:lol: சொறி அக்கா. இனிமேல் உங்களை சம்பந்தப்படுத்தல்லை. ரியலி சொறி.

நிலா அக்கா நிலா அக்கா இந்த கதையை வாசிக்கும் போது உங்களுக்கு பட்டாம்பூச்சி பறக்குதோ........ :P

நிலா அக்கா நிலா அக்கா இந்த கதையை வாசிக்கும் போது உங்களுக்கு பட்டாம்பூச்சி பறக்குதோ........ :P

இதோடா பட்டாம்பூச்சி பறக்குற போலவா மடல் அனுப்புறா?

அந்த நாயகன் எவ்வளவு பாவம். ஆமா நாயகன் நாயகியின் பெயர்கள் மடலில் வருதில்லை. ஏன்? ஆனால் மடல்கள் மட்டும் கரக்ட் ஆக வருது. :P

இதோடா பட்டாம்பூச்சி பறக்குற போலவா மடல் அனுப்புறா?

அந்த நாயகன் எவ்வளவு பாவம். ஆமா நாயகன் நாயகியின் பெயர்கள் மடலில் வருதில்லை. ஏன்? ஆனால் மடல்கள் மட்டும் கரக்ட் ஆக வருது. :P

ஆமாம் மடல்கள் வருது அதை வாசிகிறீங்க தானே பிறகு நாயகனின்ட பெயர் வேற போடவேண்டுமோ.............கதையை வாசிக்கும் போது பேபிக்கு மனசில பட்டாம்பூச்சி பறக்குது.............. :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் தாமதம் வெண்ணிலா..

விரைவில்..போடுகின்றேன்.தகராற

Edited by Thamilthangai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:( சொறி அக்கா. இனிமேல் உங்களை சம்பந்தப்படுத்தல்லை. ரியலி சொறி.

ம்ம் அடுத்த மடலை அனுப்புங்க

ச்ச்ச்ச்ச்சோ..ச்ச்ச்ச்ச்சோ எதுக்கு இப்ப நான் சொறியணும் :) எனக்கு கடிக்கவில்லை ...!! கூல்.......வெண்ணிலா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசையும் கதையுமாய் இணைந்து வரும் ஓர் தொடர்!.

"காதல்" சொல்லிய காதல் - 6

நேசித்தலைவிட நேசிக்கப்படுதல் சுகமானது என்று பூரணமாய் என்னை உணரவைத்தவனே,

நீங்கள் என் மீது வைத்த நேசத்தின் வாசம் தான் இன்றும் சுகமாய்

வீசிக்கொண்டிருக்கிறது எனக்குள்.

ஆனால் என் சிரிப்பை மட்டுமே யாசித்த நீங்கள் ஏன் இன்று என்னை கலங்க

வைக்கின்றீர்கள்.

நான் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டீர்களோ

அதைவிட ஒருபடி மேலாய்

நான் ஆசைப்பட்டேன். உங்களை நான் சந்திக்க நேரிடும் போது உங்கள்

குடும்பத்தோடு குதூகலமாய் இருப்பீர்கள் என்றல்லவா நான் நினைத்தேன்?!

உங்களிடம் நான் பேசியிருக்க வேண்டும் அது என் தவறுதான் பிடிக்குமோ,

இல்லையோ நான் சொன்னேன் என்பதற்காக எதையும் செய்யுமே !!

நீங்கள் என்மீது வைத்த பரிசுத்தமான காதல்.

அன்று அப்படித்தான் எல்லாம் உங்களிடம் சொல்லிவிட வேண்டும், வீணாக உங்கள்

மனதை காயப்படுத்திக்கொண்டிருக்கி

ஐயோ உண்மையிலேயே பாவமுங்க. காயத்துக்கு மருந்து கொடுக்க போன நாயகியைப் பார்த்து நண்பன் சொன்ன வசனங்களைக் கூட பொருட்படுத்தாமல் அவா சின்ன பொண்ணுடா என நாயகன் சொல்லும் போது ................... போங்க எனக்கு அழுகை வருது.

உங்க கதை நாயகி ரொம்ப வீம்பு பிடிச்சவா.

நீ நேசிப்பவனை விட

உன்னை எவன் நேசிக்கிறானோ

அவனே உத்தமன்.

எங்கோ கேட்ட வரிகள்.

ம்ம்ம் சரி எங்களை அழ வைக்கிறீங்க. நிஜக்கதை என்று வேறை சொல்லிடீங்க.

ம்ம் என்ன நினைச்சிட்டு போனாங்க அப்புறம் என்ன நடந்திச்சுதாம்?

என்ன நடந்தால் எனக்கென்ன? நான் நாயகியோட டூ................... போங்க எழுத்தாளரானந் ஈங்களும் ரொம்ப மோசம். அடிகக்டி பிரேக் போட்டு எங்களை ரென்சன் படுத்துறீங்க.

ம்ம் கவி வரிகளும் அருமை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ உண்மையிலேயே பாவமுங்க. காயத்துக்கு மருந்து கொடுக்க போன நாயகியைப் பார்த்து நண்பன் சொன்ன வசனங்களைக் கூட பொருட்படுத்தாமல் அவா சின்ன பொண்ணுடா என நாயகன் சொல்லும் போது ................... போங்க எனக்கு அழுகை வருது.

உங்க கதை நாயகி ரொம்ப வீம்பு பிடிச்சவா.

நீ நேசிப்பவனை விட

உன்னை எவன் நேசிக்கிறானோ

அவனே உத்தமன்.

எங்கோ கேட்ட வரிகள்.

ம்ம்ம் சரி எங்களை அழ வைக்கிறீங்க. நிஜக்கதை என்று வேறை சொல்லிடீங்க.

ம்ம் என்ன நினைச்சிட்டு போனாங்க அப்புறம் என்ன நடந்திச்சுதாம்?

என்ன நடந்தால் எனக்கென்ன? நான் நாயகியோட டூ................... போங்க எழுத்தாளரானந் ஈங்களும் ரொம்ப மோசம். அடிகக்டி பிரேக் போட்டு எங்களை ரென்சன் படுத்துறீங்க.

ம்ம் கவி வரிகளும் அருமை

வெண்ணிலா,

ரொம்ப்ப்பக் கவலைப்படுற மாதிரி இருக்கு; நிஜமாகவே இத்தனை ஆழமாக ஆசையோடு வாசிக்கும் உங்களுக்காகத்தான் உடனேயே பகுதி 6 ம் அவசர அவசரமாக எழுதிப்போட்டனான்.

அடுத்த பாகம் ஞாயிற்றுக்கிழமை போடுறன் சரியா? !!.

நாயகியின் இடத்திலிருந்து நீங்கள் பாருங்கள். எங்கள் ஊரை நினைத்துப்பாருங்கள். இங்கிருக்கும் சுதந்திரம் அங்கு உண்டா?! 'ஒருபெண் வேறொரு சாதிக்காரனை கல்யாணம் பண்ணினால் அவளுடைய சகோதரிகளின் நிலமை என்ன?!

நாயகி உலகமகா கொடுமைக்காரிதான்! வீட்டின் மானத்துக்காக உயர்ந்த உன்னத காதலைக் கூட தியாகம் செய்த அப்பாவிப்பெண்ணும் கூட!.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.